அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
எது எங்கனம் ஆயினும், இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும், அவனவன் மனநிலையை பொறுத்தே அமைவது, ஆகுமப்பா! அப்பனே, இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே, அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும்பொழுதே. அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா, இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்கும்கால், யாதொரு தொல்லையும் இல்லை. மனதை வலுவாக்குதலே, இந்த உலகில் முதல் பணியாக மனிதனுக்கு இருக்கவேண்டும். மனம் உறுதி பெற, உறுதி பெற எந்த பிரச்சினையும், பிரச்சினையாக தோன்றாது.
[ROUGH TRANSLATION] Whatever it may be, each and every experience that one undergoes in this world, is related to each person’s mental states. When you seek pleasure, understand its other side is suffering. When suffering strikes, its other side happiness will also come. What you need is a mind that does not seek either. When mind is equi-poised, there is no hassle. To strengthen his mind, should be the first task of each man. When mind keeps getting stronger and stronger, no problem will seem to be a problem.
ReplyDeleteOm Agatheesaya Namah
Delete