அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
ஒரு மனிதன், உடல் எடுத்ததற்கு, மனித முயற்சி என்று எதை வேண்டுமானாலும் செய்யலாம். இதுதான் நடக்கப்போகிறதே என்று, எந்த மனிதனையும் நாம், வாளாய் (சும்மா) இருக்கச் சொல்லவில்லை. சோம்பலாக இருக்க சொல்லவில்லை. அவன் கடுமையாக முயற்சிகள் மேற்கொள்ளவேண்டும். அந்த முயற்சியின் விளைவு எதுவானாலும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தை அவன் வளர்த்துக் கொள்ளவேண்டும். இந்த மனம்தான், ஒரு மனிதனுக்கு எக்காலமும் நன்மையைத் தரும். இல்லையென்றால், ஒன்று மாற்றி ஒன்று, அவன் விருப்பத்திற்கு மாறாக நடக்கும்பொழுது, மிகவும் விரக்தியுற்று, சோர்வுற்று, தன்னிலையை மறந்து, மேலும் சிக்கலில் தானாகச் சென்று மாட்டிக் கொள்வான். எனவே, ஒரு மனிதன், பதட்டம், குழப்பம் இல்லாமல், எதனையும் நிதானமாக, மூன்றாவது பார்வை கொண்டு, ஒவ்வொரு பிரச்சினையும் பார்க்கப் பார்க்க, அவனுக்கு அனைத்துமே தெளிவாகிவிடும். அனைத்துமே, சிக்கல் அற்றதாகிவிடும். இந்த கருத்தை மனதில் பதியவைத்தால், என்றும், எக்காலமும் நலமாகும். ஆசிகள். சுபம்!
Om sri lopamuthira sametha agathisaya namaga
ReplyDeleteAgathiyamae sathiyam, sathiyamae agathiyam
ReplyDelete[ROUGH TRANSLATION] Man, endowed with a body, is free to exert any human efforts. He should not be idle, thinking everything is pre-ordained. Nor we advocate laziness. He should undertake strong efforts. He should develop mental equanimity to accept whatever be the end-result of the efforts. Only such a mind shall benefit a man always. Otherwise, one after another, when a thing desired does not happen, he will get depression, fatigue and forget his true status; and will unwittingly get into more problems. Hence, a man, without flapping, confusion, should calmly see everything as a third-party witness. When he goes on like this, everything will become clear. Everything will become problem-free. If you impress your mind with this perspective, future will be positive. Blessings! Subham!
ReplyDelete