​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 13 December 2016

சித்தன் அருள் - 535 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவனை வணங்கிக் கொண்டே, தர்மத்தை செய்துகொண்டே வாழ்ந்தாலும், இதற்கு முன்பே எடுத்த  ஒட்டு மொத்த பாவங்களின் எதிரொலியால், சலனங்களும், சங்கடங்களும், சோதனைகளும், வேதனைகளும் ஒரு மனிதனுக்கு வரத்தான்  செய்யும். இது போன்ற தருணங்களில் எல்லாம், இத்தனை தர்மம் செய்தோமே, இத்தனை இறை வணங்கினோமே, எதற்காக இத்தனை கஷ்டங்கள் வரவேண்டும்? என்று எண்ணாமல், தொடர்ந்து வைராக்கியத்தோடு இறைவனை வணங்கி வந்தால், எந்த கஷ்டமும் இல்லாத சூழல் வரும், அல்லது, அதை உணராத மனோபாவம் வந்து விடும்.  இதை மனதிலே வைத்துக் கொண்டு எம் வழியில் வர நல்லாசிகள்.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] Even after continued prayers to the Divine and continued charity, due to effect of accumulated [past births] sins, man continues to face confusions, difficulties, trials and sufferings. At times like these, instead of feeling “Though I did much charities, many worships, why these troubles?”, continue, with vairagya, to worship to the Divine-- the circumstance will come, of freedom from difficulties, or the mental strength not to feel the [burden of] difficulties. Our blessings [to you] to follow our path, keeping this in mind.

    ReplyDelete