​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Saturday, 3 December 2016

சித்தன் அருள் - 526 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதர்கள் செய்யும் சிறு தவறுகளை எல்லாம் அறிந்தும், அறியாமலும், இறைவன் மன்னித்துவிடுகிறார். ஆனால், மனிதர்களை தாண்டி, உயர்வான பிறகும், சிறிய தவறுகள் கூட வரக்கூடாது. வந்தால், அவர்கள் எந்த விதமான சாபத்திற்கும் ஆளாகலாம். இப்படி ஒரு மனிதனுக்கு, மனிதப்பிறவி சாபமாக கிடைக்கிறது என்று வைத்துக்  கொள்வோம்.பல்லாண்டு காலம், தேவனாக வாழ்ந்த அவன், ஒரு புண்ணிய ஆத்மா தானே. அதனால், மிக உயர்ந்த செல்வ செழிப்பிலே, புகழின் உச்சியிலே, தேக ஆரோக்கியத்திலே, தோற்றப்பொலிவிலே சிறந்தவனாகத்தான் பூமியிலே இறைவன் அனுப்பி வைப்பான். ஆனால் அவ்வாறு கொடுத்த பிறகு, அவன் என்ன செய்வான்? ஊழ்வினையாலும்,மாயையால்  எல்லாம் மறந்து போய், சராசரியாக தனக்கு கிடைத்த ஐஸ்வர்யங்களை வைத்து பாவங்களை செய்யத் துவங்குகிறான். எனவே, எந்த நிலையிலும் ஒரு மனிதன் விழிப்புணர்வோடு பாவங்களை செய்யாமல் இருந்தால், மீண்டும், மீண்டும் இந்த மனிதப்பிறவி சுழற்சியில் மாட்டிக் கொண்டு அவதிப்பட நேரிடாது.

3 comments:

  1. [ROUGH TRANSLATION] Small transgressions committed by man, are forgiven by the Divine, knowingly or un-knowingly. But after reaching a stage which is higher than man, even small transgressions should be avoided. If it happens, they may be subject to any curse. Let us take an example of a person cursed to be born as human. Having lived as a deva for many years, he is a punya atma. So he is sent by the Divine to earth, endowed with wealth, fame, health and good appearance. But what does he do, after having received all this? He forgets all due to fate and maya, he starts incurring sins using the wealths given to him. Hence, in all circumstances, a man has to attentively avoid committing sins, then there will no necessity to be caught and suffer again and again in the cycle of human birth.

    ReplyDelete