​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 26 December 2016

சித்தன் அருள் - 547 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

உள்ளத்திலே உண்மையை மறைத்து வைப்பது என்பது, அக்னியை மடியிலே வைத்துக் கொள்வது போல. கடை வரையில் அவனை சுட்டுக்கொண்டுதான் இருக்கும். எனவே, பின்விளைவுகள் எதுவானாலும் பாதகமில்லை என்று ஆதியில் இருந்தே, ஒரு மனிதன் உண்மையை சொல்லப் பழகவேண்டும். இடையிலிருந்து தொடங்கினால், அதற்கு, அவன் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கும். எனவே, அறத்தில் மிகப்பெரிய அறம், உண்மை பேசுவதாகும். உண்மையால் பிரச்சினை வருவது உண்மைதான் என்றாலும், உண்மையை, உண்மையாக, நன்மையாக பேசவேண்டும். உண்மையை கூறுகிறேன் என்று, யார் மனமும் புண்படும்படி வார்த்தைகளை பேசக்கூடாது. நாகரீகம் கலந்து உண்மையை பேசும் கலையை கற்க வேண்டும். சில சமயம் மௌனம் காக்கலாமே ஒழிய, சின்ன விஷயங்களுக்காக உண்மையை மறைக்க வேண்டிய அவசியமில்லை. என்றாலும், நாங்கள், எம்முன்னே அமரும் சில மனிதர்களுக்கு மௌனம் காக்கிறோம் என்றால், உண்மையைக் கூற முடியவில்லை என்றுதான் பொருள்.  உண்மையை கூறினால், நம்பி வந்த கூட்டம் எரிச்சலடையும், பிறகு தேவையில்லாத விவாதங்கள்  வரும். அதனால் தான் சில நேரங்களில் நாங்கள் மௌனமாக இருந்து விடுகிறோம். நாங்கள் மௌனமாக இருப்பதாலேயே, அனைத்திற்கும் "சம்மதம்" என்று அர்த்தமல்ல. அதற்குத்தான் கூறுகிறோம், "ஜீவ அருள் நாடி" என்பது எல்லோருக்கும் ஏற்றதல்ல. இதை கேட்பதற்கும், புரிந்து கொள்வதற்கும் பக்குவம் தேவை. மழை பொழிவது இயற்கை என்றாலும் கூட,  மழை நீர் வேண்டுமென்றால், நல்ல தரமான பாத்திரத்தை கவிழ்த்து வைக்காமல், நிமிர்த்து வைத்து, மழை நீரை சேகரித்து வைக்க வேண்டும். அதைப்போல எம்முன்னே அமருபவருக்கு பக்குவம், தெளிவு இல்லாமல் "இது என்ன வாக்கு? இது என்ன ஜோதிடம்?" என்று விமர்சிப்பதால், பாவங்கள் சேர்வதைத்  தவிர, கர்மாக்கள் குறைவதில்லை.

8 comments:

 1. Om sri lopamuthira sametha agathisaya namaga

  ReplyDelete
 2. Sir I need help.pus formed in my father right leg by diabatic.please suggest my if any sidha madicine for remove the pus
  Please help.I am hope your reply

  ReplyDelete
  Replies
  1. Visit this page
   May be it helps to you
   https://naturalfoodworld.wordpress.com/2012/07/30/threeinone/

   Delete
  2. முதலில், ஒரு நல்ல மருத்துவரிடம் காட்டி புண்ணை சுத்தம் செய்யுங்கள். அது மிக முக்கியம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு உடலில் புண் வருவதோ, சீழ் பிடிப்பதோ கூடாது.

   சித்த மருத்துவ முறைகள் படி, நம் வாயில் ஊறுகிற எச்சில்லைத்தான் உடல் இன்சுலினாக மாற்றுகிறது. அது கிடைப்பது குறைந்தால், இன்சுலின் சுரக்காது, மருத்துவத்தை நாட வேண்டி வரும். ஆகவே உணவை மிக நிதானமாக, நிறைய உமிழ் நீரை சுரக்கவைத்து கலந்து விழுங்காகி சொல்லுங்கள். அப்படி உண்ணும்போது முடியவில்லை என்றால், சாப்பிட்டு முடித்த பின் ஒரு சிறிய புளிப்பு மிட்டாயை வாயில் போட்டு, ஒரு ஐந்து நிமிடம் உமிழ் நீரை சுரக்கவைத்து விழுங்க வேண்டும். உமிழ் நீர் நல்ல எதிர்ப்பு சக்தியையும் கொடுக்கும். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு வரும் அசதியை உடனடியாக மாற்றும். ஜீரண சக்தியை அதிகரிக்கும்.

   உடனே நலமடைய, அகத்தியப் பெருமானை வேண்டிக் கொள்கிறேன்.

   Delete
 3. This comment has been removed by the author.

  ReplyDelete
 4. [ROUGH TRANSLATION] To hide the truth within one’s mind is akin to keeping fire on one’s lap. It will keep burning till end. That’s why man should learn to speak truth, right from beginning, [on the belief] that whatever be the consquences will be faced. If he starts later on, there will be heavy price to pay. So, among dharmas, the superior dharma is speaking the truth. Though it is true that speaking truth may lead to problems, truth should be spoken in a positive manner. Should not hurt other’s feelings, in the claim that I am speaking the truth. The art of speaking truth in a civilised manner should be learnt. While occasionally silence may be maintained, it is not necessary to conceal truth in small matters.
  Even then, when we [Siddhas] maintain silence when a seeker comes to us [for our guidance], it means we [Siddhas] find it un-suitable to reveal the truth [on that occasion]. If we speak the truth [on that occasion when seeker is in front of us with some query], it might lead to irritation, needless arguments; hence, we maintain silence sometimes. But, just cause we maintain silence, it does not mean we agree [with what the seeker is wanting]. Maturity is required to listen to and understand our [arul vakku through jeeva nadi]. While rain-fall is natural, to store the rain water, you should hold the vessel properly, not upside down. Similarly, those seekers in front of us [for jeeva nadi reading], if they, lacking maturity and clarity, criticise “what is this vakku? What is this astrology?”, karmas don’t reduce, sins may increase.

  ReplyDelete
  Replies
  1. Om Agatheesaya Namah

   Thank you so much for translation of beautiful words of Mahamuni.

   Delete