​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday, 4 December 2016

சித்தன் அருள் - 527 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

கோவிலில் உழவாரப்பணி செய்யும் பொழுது, செடி, கொடிகளை அகற்றினால் பாவம் தான். என்றாலும், இறை இதை மன்னிக்கிறது. அகற்றப்பட்ட செடிகள், மீண்டும் துளிர்கின்ற தன்மையைப் பெறுவதால் (அந்த செயல் அந்தச் செடி கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை). ஒரு ஆட்டையோ, மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும் பொழுது, அது பரிபூரணமாக மரித்துவிடுகிறது. ஆனால் செடி/கொடிகளை அகற்றும் போது, அதன் அடிவேரோ, மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால், அந்த ஜீவன் அதற்கு இடம் பெயர்ந்து விடுவதால், இதனால் வரக்கூடிய தோஷம், மன்னிக்கப்படக்கூடிய தோஷமாகிவிடுகிறது. என்றாலும் கூட, இதிலும் பாவம் சேர்வதால் தான், பிறவியற்ற தன்மை வேண்டுமென்று கூறுகிறோம். ஏனென்றால், ஒரு மனிதனால், இந்த பூமியிலே, சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. வீடுகளை   பொருத்தவரை, வீட்டை சுற்றிலும் "சிறியா நங்கை'" போன்ற மூலிகைகளை வளர்த்தால், பூச்சிகள் வராது. வேறு வழி இன்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளை கொல்ல நேர்ந்தால், ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக, அந்த தோஷமானது, மன்னிக்கப்படும்.

3 comments:

  1. ஐயா வணக்கம்.
    கல்லாறு அகத்தியர் ஞான பீடத்தில் நடைபெறவுள்ள குடமுழுக்கு மற்றும் குருபூஜை விழா பற்றி ஒரு பதிவை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] While performing cleaning service inside temple premises, if plants and small trees are re-located [moved], it does constitute a sin, but Divine forgives this. The re-located plants are able to grow again [the re-location does not permanently destroy the plants]. When a man kills a goat or buffalo, it is permanently killed. But while re-locating plants, since the root or seed lives on and the jeeva re-locates, this dosha can be forgiven. As even this adds to sin, we recommend to come out of re-births. Reason being, no man can live on this earth without committing even small sin.
    In homes, if “siriya nangai” [Polygala Chinensis] herb plant is grown, insects will stay away. If one has to kill the insects at home, having no other alternative, that dosham is forgiven, if that person does charity.

    ReplyDelete