​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 15 December 2016

சித்தன் அருள் - 537 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளைக் கொண்டு, உரைப்பது என்னவென்றால், இடைவிடாத, மனம் தளராத பக்தி, மன உறுதி குறையாத பக்தி, வாழ்க்கையிலே ஏற்படும் கஷ்டங்களுக்கும், இறைக்கும், எந்தவித தொடர்பும் இல்லை என்ற அழுத்தமான எண்ணம், எது நடந்தாலும் இறை நம்பிக்கை குறையாமல் இருக்கவேண்டும். இந்த நிலையிலிருந்து, இறைவனை ஆத்மார்த்தமாக விருப்பு, வெறுப்பு இன்றி உலகியல் ஆசைகளுக்காக இல்லாமல், "இறையை காணவேண்டும்,  அவன் அருளைப் பெறவேண்டும்,  அதைத்  தவிர வேறெதுவும் நிரந்தரமல்ல" என்ற உணர்வோடு இறைவனை வணங்கத் தொடங்கினால், அது சிவ இரவு என்ன? நவ இரவு என்ன? பிரதோஷமாக இருந்தால் என்ன? கார்த்திகையாக இருந்தால் என்ன? எந்த நாளாக இருந்தால் என்ன? அன்று அனைவருக்கும் இறை காட்சி திண்ணம், உறுதி. பிறகு, ஆங்காங்கே சிறு சிறு விஷயங்கள் எதற்காக நடத்திக் காண்பிக்கப்படுகிறது? அது இன்னும் பக்குவம் அடைய வேண்டியவர்களுக்காக நடத்திக் காண்பிக்கப்படுகிறது. எனவே, எங்கு சென்று வணங்கினாலும், அவரவர்கள் விரும்பும் வண்ணம் அற்புதங்கள் உண்டு. கட்டாயம் நடக்கும். அது திருவண்ணாமலையாக இருந்தால் என்ன? கொல்லி மலையாக இருந்தால் என்ன? சதுரகிரியாக இருந்தால் என்ன? இருந்தாலும், ஆப்பூர் மாலையிலும், மருத்துவாமலையிலும், பௌர்ணமி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி அன்று சென்று, மனம் ஒன்றி பிரார்த்தனைகள் செய்தால், இறை, சாந்நித்தியத்தை வழங்கும்.

12 comments:

 1. Vanakkam Ayya ....Aapoor malai and Maruthuva malai where both places are located?

  ReplyDelete
 2. ஆப்பூர் மலை செங்கல்பட்டுக்கு அருகில் உள்ளது. மருத்துவா மலை என்பது நாகர்கோவில் - கன்யாகுமரி பாதையில் உள்ளது.

  ஆப்பூர் மலை பற்றி இந்த தொடுப்புபில் பாருங்கள்.

  http://www.dharsanam.com/2008/05/aappoor-sri-nithya-kalyana-prasanna.html

  http://travel.bhushavali.com/2013/07/appur-nithya-kalyana-perumal-temple.html

  ReplyDelete
 3. ஆப்பூர் மலை Bhattacharya Sriram number 9952110109. Approx. 450 steps to climb. Venkatesa Perumal, but dressed in sari.

  ReplyDelete
 4. ஆப்பூர் மலை is a few kms from Singaperumal Koil.

  ReplyDelete
  Replies
  1. Om Agatheesaya Namah

   Kindly guide what is the exact speciality of this temple

   Delete
  2. A question was raised to Sage Agasthiyar about feeling the presence of God at various places. He says, if one is pure and perfect enough within, he or she can realise the presence of god irrespective of place. But in Aapoor Hill and Maruththuva Hill, on Pournami, all Sivarathri days, if one can go with the deep thought that "I want to see god, get his blessings, guidance" they will surely get the darshan or can feel his presence. such is the importance of those two places.

   Delete
  3. Om Agatheesaya Namah

   Thank you so much for details.

   Delete
 5. [ROUGH TRANSLATION] We say under Divine blessings. Bhakti, un-interrupted, free from mental waverings, bhakti unaffected by mental weaknesses; deep conviction that there is no nexus between life problems and the Divine; come what may, faith in Divine should not come down. Staying put in such a status, from the depths of atma, free from desire and hatred, without wishing for fulfilment of worldly needs, “I want to see the Divine, I want His grace, nothing else is permanent”, with this feeling if you start saluting the Divine, then does it matter whether it is Siva-ratri? Nava-ratri? Pradosham day? Karthigai month? Or any other day? Divine darshan on that day is certain, assured.

  Then, why, in some places, from time to time, small things [celebrations] are enacted? It is done for the sake of those who are yet to attain the [above level of] mental maturity. Therefore, wherever you may worship, wonders will take place as per desire. It is immaterial whether the place is Tiruvannamalai, Kolli-malai or Saturagiri.
  Nontheless, by visiting and offering heart-felt prayers, on pournami, masik Sivaratri or maha-Sivaratri days, at Aapoor hill and Maruthuva hill, Divine will give sannithiyam [சாந்நித்தியத்தை].

  ReplyDelete
 6. Thank you very much Ayya and others
  Regards

  ReplyDelete
 7. Respected Agni Lingam Ayya, can you please guide me as to how to go to Maruthuvamalai. What is the name of the temple. I believe that Mahendra giri is only known as Maruthuvamalai.

  ReplyDelete
 8. Maruththuva Malai and Mahendra Giri are two different hills. Maruththuva Malai is situated in betweern Nagerkoil and Kanyakumari. Mahendra Giri is situted near Kavalkinaru. Since a wing of ISRO is situated in that hill now a days, no one is permitted by Forest Officials to go there. So don't take any risk.

  ReplyDelete