​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 11 December 2016

சித்தன் அருள் - 534 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

தமிழ் மொழியிலே, கூடுதலாக, இறை சார்ந்த இறை அருள் இருக்கிறது. சரியான உச்சரிப்போடு, தமிழைப் பேசினாலே அது சுவாசப்பயிற்சிக்கு சமம். இலக்கணத்தைப் பற்றி கூறினால், எத்தனையோ அதிசயங்கள், அற்புதங்கள் உள்ளது. இந்த உலகத்திலே பரபரப்பாக வாழும் மனிதனுக்கு தமிழாவது? மொழியாவது? சிறப்பானது? யார் இவற்றை எல்லாம் கவனிப்பது? வயிற்றுப்பாட்டிற்கே போராடிக் கொண்டிருக்கிறோம், என்றெல்லாம் அளந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படியல்ல, தமிழ் மொழியிலே, காரண காரியங்கள் இல்லாமல் எதுவுமே அமைக்கப் படவில்லை. உலகத்திலே எந்த மொழியிலும் "ழ"கரம் என்ற உச்சரிப்பு கிடையாது. மூன்று இனமாக பிரிக்கப்பட்டு ஏற்ப எழுத்துக்கள் உள்ளது. ஒலிக்குறிப்பே போதும், அது எந்த இனம் என்று கூறிவிடலாம். மரபு இலக்கணப்படி ஒவ்வொரு பாடலும் எவ்வாறு அமைக்கப்படவேண்டும்? எந்த தளை, சீர், எத்தனை அடியிலே அமைக்கப்படவேண்டும், என்றெல்லாம் உள்ளது. இதுதான் தமிழின் சிறப்பு.

[இது உண்மை. அனுபவ பூர்வமாக இதை அடியேன் உணர்ந்துள்ளேன். சிறப்பான முறையில் தமிழை பேசும் பொழுது, உள்ளுக்குள்ளே ஒரு வித சக்தி பரவுவதையும், சுவாசம் சரி செய்யப்படுவதையும், உள் கழிவுகள் தானாக விலகி, உடல் சுத்தமடைவதையும், பல மறை பார்த்திருக்கிறேன். இதை நடை முறைப் படுத்துவது மிக நல்லது. மேலும், தமிழ்  மொழியின் தெய்வம், உள்ளிருந்து நம்மை வழி நடத்துவதையும் உணர முடியும்.]

2 comments:

  1. [ROUGH TRANSLATION] In Tamizh language, there is larger Divine relationship, Divine grace. Merely speaking in Tamizh with proper pronunciation is equivalent to breathing exercise. There are many wonders in its grammar. But man gives excuses, we are very busy in worldly activities, in making our ends meet, where is [time for] the Tamizh language and its specialities? Not so. In Tamizah language, its elements are based on rationale. In the world, in no other language, the letter zha "ழ" is found. Letters are grouped into 3 families [note: vowels, consonants and special]. From its sound itself, the word can be identified as belonging to which family. As per grammar practice, it is given how cord (தளை), measure (சீர்), metre (அடி) in poetry is to be constructed. This is the speciality of Tamizh.

    ReplyDelete