​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 14 December 2016

சித்தன் அருள் - 536 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

ஞானம் அடைய வேண்டும், ஞானத்தை நோக்கி செல்ல வேண்டும் என்றாலே, தாய், தந்தை, உற்றார், உறவினர், சூழல், ஏதுவாக இருந்தாலும், கர்மத்தின்படி நடக்கிறது என்று அமைதியாக இருக்க வேண்டும். தாய் கஷ்டப்படுகிறார், தந்தை  சிரமப்படுகிறார், என்று எண்ணும்பொழுதே மீண்டும் மனிதன், மாயவலைக்குள் சிக்கிவிடுகிறான். எனவே, ஒவ்வொரு உடலும், தோற்றமும் ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு விதமாகப் படைக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும். பெற்று வந்த கர்மங்களின் படி அதன் வாழ்வின் போக்கும், சிந்தனைகளும், சந்திக்கின்ற அனுபவங்களும் அமைகின்றன. இருந்த போதிலும், துயரங்களை எல்லாம் களைந்து வாழ வேண்டும், என்ற ஆசை இல்லாத உயிரினம் இல்லை. இவற்றுக்கெல்லாம் ஒட்டுமொத்த ஒரே வழி, பிரார்த்தனை. (பித்ரு தோஷங்களும், தந்தை வழி, தாய் வழி, முன்னோர் வழி பெற்ற சாபங்களும் தொடர்வதால், இந்த நிலை). பசு மாடுகளுக்கு உணவு, ஆலயத்தில் மீன்களுக்கு உணவு, ராமேஸ்வரத்தில் தில யாகம் செய்து, குறைத்துக் கொள்ளலாம். எந்த ஒரு மனிதனுக்கும் துன்பங்கள் இருக்கிறதென்றால், முன்வினை இருக்கிறது என்று பொருள். முன்வினை குறையக்குறைய, துன்பங்கள் குறைந்துகொண்டே வரும். இந்த வினைப்பயனை பெரும்பாலும் அனுபவித்து தீர்ப்பது ஒரு வகை, தர்மத்தால் தீர்ப்பது ஒரு வகை. இறை வழிபாட்டால் தீர்ப்பது ஒரு வகை. 

1 comment:

  1. [ROUGH TRANSLATION] If you want to pursue or achieve jnana, then you must maintain calm that all is happening as per karma, irrespective of whatever may be the [situation with] your parents, relatives, circumstances. My mother is suffering, my father is in difficulty, when you think like this, you are caught again in the net of maya. Body and appearance is created differently from person to person. But, life’s path, thoughts and experiences happen in accordance with earned karmas. Even then, all creatures wish for a life free from suffering. For all these, the only method, in aggregate, is Prayers [Worship]. (This status is due to continuation of pitru dosha, sabhams inherited through father, mother, ancestors). This can be reduced by [regular] feeding of cows, fish in temple tanks, tila homa at Rameswaram. When a person suffers, it is to be inferred that it is due to past-birth karmas only. As and when past-births keep reducing, sufferings also will keep reducing. The types of methods to finish off karma effects is: experiencing substantially the suffering, or charity, or worship of the Divine.

    ReplyDelete