​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 6 December 2016

சித்தன் அருள் - 529 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

மனிதன், இந்த அண்ட சராசர பிரபஞ்சத்திலே வெறும் தூசியிலே தூசி. இந்த காற்றிலே கண்ணுக்குத் தெரியாத எத்தனையோ, பூச்சிகள், உயிரினங்கள் அலைந்து கொண்டுதான் இருக்கின்றன. மனிதன் கண்ணுக்குத் தெரியாமல் அவை வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதுபோல, இந்த அண்டசராசரங்களை எல்லாம் பார்க்கும்போது, எத்தனையோ  கிரகங்கள், உயிரினங்கள். அனைத்திற்கும் அதனதன் வழியிலே, அதனதன் போக்கில் துன்பங்கள் இருந்து கொண்டுதான் உள்ளன. எனவே, துன்பம் என்பது ஒருவனுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. மனதை தெளிவாக வைத்துக் கொண்டால், எல்லாம் "மாயை" என்பது புரிய வரும்.

3 comments:

  1. அருமை,ஒம் அகத்திசாய நமக

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION] In this vast cosmos, man is like dust of dust. In this air itself, so many insects and living creatures are moving about, invisibly. They are leading their lives, invisible to man. Likewise, in this cosmos, there are many grahas, living creatures. All of them, in their own way, in their own fashion, are subject to sufferings. Hence, suffering does not belong to you alone. When you develop clarity of mind, you can perceive that all is “maya”.

    ReplyDelete
  3. குற்றாலம் அருகே 2km தூரத்தில் காசிமேஜர்புரம் என்னும் ஊரில் முத்துகுமர சுவாமிகள் என்பவர் அகத்தியர் ஜீவநாடி படிக்கிறார் ...அட்மின் அவர்கள் இத்தகவலைத் தனிபதிவாக போடுமாறு கேட்டுகொள்கிரேன்

    ReplyDelete