​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 23 December 2016

சித்தன் அருள் - 545 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறையருளால், இயம்பிடுவோம் இத்தருணம். இறை வணங்கி, அறம் புரிய, என்றென்றும் நலமாம். இடைவிடாத பிரார்த்தனைகள், சாத்வீக எண்ணங்கள், சதாசர்வ காலம் தர்ம சிந்தனை. இகுதொப்ப வாழ்வை நடத்த, கர்மாக்கள் குறையுமப்பா. இகுதொப்ப சினம், விரக்தி, தளர்வு, பிறரை பிறரோடு ஒப்பிட்டுக் கூறுதல், ஒரு மனிதன் இல்லாதபோது அவரைப் பற்றி விமர்சனம் செய்தல், காழ்ப்பு உணர்ச்சி இன்னும் இத்யாதி, இத்யாதிகளை எல்லாம் தள்ள தள்ளத்தான், மனிதன், மாமனிதனாகிறான். இகுதொப்ப ஒரு பயணம் செய்யும்பொழுது, இறை நாமமும், பிரார்த்தனையும் செய்து கொண்டு செல்வது நலம். வீண் விவாதங்களும் பிரச்சினைக்குரிய செயல்களும், வாக்குகளும் வேண்டாம்.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] We speak, now, under Divine grace. Salutations to the Divine and doing virtuous things, is always beneficial. Continuous prayers, satvik thinking, always focus on charity [dharma]- when life is conducted on these, karmas will reduce. By continuously avoiding anger, depression, fatigue, comparing one with another, critising someone behind his back, pungent feelings etc etc, man becomes superior man. Also, while starting on a journey, good to say Divine names and prayers. Un-necessary arguments, problematic actions, speech to be avoided.

    ReplyDelete