அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு
எத்தனையோ தர்ம வழிகளை காட்டி அருளுகிறோம். எத்தனையோ, நீதி வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ சத்திய வழிகளைக் காட்டி அருளுகிறோம். எத்தனையோ இறை வழிகளைக் காட்டி அருளுகிறோம். எனவே, இறையே "காட்டானை" மீது அமர்ந்து வந்தாலும், தன்னைக் "காட்டானை, காட்டானை" என்றுதான் இறையே இருக்கிறார். அகுதொப்ப "காட்டானை" யை நீ பிடித்து, நன்றாக வழிபடு. "காட்டானை" உன் அருகில் இருக்க அதைத் தவிர வேறு "காட்டானை" எதற்கு? எனவே, "காட்டானை", "காட்டானை"யாக இருக்க, நாங்கள் மட்டும் காட்டி அருளும் தன்மைக்கு ஏன் வரவேண்டும்? இருந்தாலும், காட்டிக் காட்டி, காட்டி அருளுகிறோம். "காட்டானை" திருவடி வணங்கி, நாங்கள் காட்டி அருளுகிறோம். "காட்டானை" தன்னைக் காட்டாத, நாங்கள் காட்டி அருளுகிறோம். அந்தக் "காட்டானை" யின் திருவருளாலே, எங்களைக் காட்டி அருளுகிறோம். எங்களைக் காட்டி அருளுமாறு, அந்தக் "காட்டானை" அருள் புரிந்தால், நாங்கள், எங்களையும் காட்டி அருளுகிறோம். "காட்டானை" அருளவேண்டும் என்று தன்னைக் "காட்டானை" திருவடி வணங்கி வேண்டிக்கொள்.
Om agathisaya namaga
ReplyDeleteகாட்டானை - What is the exact meaning?
ReplyDeleteவணக்கம் திரு.குமார்.
Deleteஎனக்கும் "காட்டானை" பற்றிய தகவல் தெரியவில்லை. கூகிள் செய்ததில் சில தகவல் கீழே தருகிறேன்.
"காட்டானை" என்றால் கடவுள் தான் யார் என்பதையும் ,
தன்னுடைய சிறப்புகள் என்ன என்பதையும் ,
தன்னுடைய சக்திகள் எவை என்பதையும் ,
வெளிக் காட்டாதவன் வெளியில் காட்டிக் கொள்ளாதவன் என்று பொருள்.
அழுகணிச்சித்தர் அவர்களின் பாடலில் கூட காட்டானை என்ற சொல்லை உபயோகித்து இருக்கிறார்.
காட்டானை மேலேறிக் கடைத்தெருவே போகையிலே
நாட்டார் நமை மறித்து நகை புரியப் பார்ப்பரன்றோ
நாட்டார் நம்மை மறித்து நகை புரியப் பார்த்தாலும்
காட்டனை மேலேறி என் கண்ணம்மா
கண் குளிரப் பாரேனோ
- அழுகணிச்சித்தர்
மேலும் தகவலுக்காக,
http://www.prosperspiritually.com/%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-4/
http://kbalagangadharan.blogspot.kr/2012/02/5.html
நன்றி,
இரா.சாமிராஜன்
தங்களுடைய அர்த்தம், விளக்கம், இணைய தொடர்பு ஆகியனவற்றுக்கு மிக்க நன்றி!
Deleteதன்னை வெளிக் காட்டிக் கொள்ளாதவன் - காட்டானை
ReplyDelete[CONDENSED, ROUGH TRANSLATION] We are showing so many ways for dharma [charity], righteous conduct, truth and the Divine. Though the Divine is hidden, we keep pointing Him out to you. Under His Grace, we also show ourselves to you. Pray at the feet of the Divine for His grace.
ReplyDelete