​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 9 December 2016

சித்தன் அருள் - 532 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இன்பம் என்ற ஒன்றை, எவன் ஒருவன் உணர்கிறானோ, அவனால்தான் துன்பத்தை உணர முடியும். எவன் எதிலேயும் இன்பத்தைப் பார்க்கவில்லையோ, அவனுக்கு  எதனாலும், எவற்றாலும் துன்பம் இல்லை. அது இறை ஒருவருக்குத்தான் சாத்தியம். அதனால்தான், "இன்பமும், துன்பமும் இல்லானே, உள்ளானே" என்று கூறப்படுகிறது. மற்ற, பற்றும், பாசமும், ஆசையும் அனைத்து உயிர்களுக்கும் உண்டு. இன்பமும் உண்டு, துன்பமும் உண்டு. எதையெல்லாம் இவன், இன்பம் என்று எண்ணி, அதன் பின்னால் ஓடுகிறானோ, அவற்றால் இவனுக்கு துன்பம் வருகிறது. எதையெல்லாம் துன்பம் என்றெண்ணி பயந்து பின் வாங்குகிறானோ, அவற்றால் இன்பமும் உண்டு. இரண்டுமே வேண்டாம் என்ற நிலையை மனிதன் முடிவெடுத்துவிட்டால், நிம்மதியாக வாழ முடியும். இல்லையென்றால், ஒன்றன் பின் ஒன்றாக இவன் மாறி, மாறி ஓடிக்கொண்டே இருப்பான். மனித வாழ்க்கையில் "கடமையை செய்தோம், பிரார்த்தனை செய்தோம், பிறருக்கு நன்மையை செய்தோம்" என்று போக வேண்டும். பெரிய அளவிலே ஒன்றின் மீது பற்றும், அதி தீவிர பாசமும் வைத்தால், பிறகு அது நம்மை பாடாய்படுத்தும்.

3 comments:

  1. அற்புதம் குருவே..

    ReplyDelete
  2. [ROUGH TRANSLATION]

    Only that person who feels/seeks pleasure, can feel suffering too. To that person who perceives no pleasure in anything, to him no suffering will come from anything. That status is possible only to the Divine. Hence, it is said “"pleasure and suffering இல்லானே, உள்ளானே".

    All jivas have attachment, passion and desires. They also get pleasures and sufferings. When he chases something thinking it will bring pleasure, from that he gets suffering. When he runs away from something thinking it will bring suffering, from that he could get pleasures. That person who resolves that he wishes for neither, he can lead a peaceful life. If not, he will be running behind one or the other, again and again. In human life, “I will perform my duties, I will do my Prayers and I will render good to others” should be the motto. If one has tremendous attachment to, or extreme passion, for anything, it will bring adverse sufferings to us.

    ReplyDelete