​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 8 December 2016

சித்தன் அருள் - 531 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

 1. பூ வாட்டம், பொன் ஆட்டம் மனம் இருக்க, என்றென்றும் கொண்டாட்டம்.
 2. தேன் ஆட்டம்  சொல் இருக்க என்றென்றும் மகிழ்வாட்டம்தான்.
 3. தினை ஆட்டம் உளம் இருக்க என்றென்றும் அது உறுதி ஆட்டம்.
 4. ஆண் ஆட்டம், பெண் ஆட்டம் எல்லாம் அடங்கும் காலம், ஆட்டத்தில் விதி ஆட்டம் முன்னே மாந்தர் வாழ்வு வினை ஆட்டம் போல் இருக்கும்.
 5. மதி ஆட்டம் ஆடி மாந்தன் அவன் தனக்குத்தான் விதி ஆட்டம் போடுகிறான்.
 6. தொடர்ந்து பிறவி ஆட்டம் தொடர, அதற்கு ஒப்ப அவன் ஆடிய மதி ஆட்டம், விதி ஆட்டம் ஆடி, கதி ஆட்டம் போடுதப்பா.
 7. வாழ்வு ஆட்டம் உயர்வு ஆட்டம் ஆட, நலம் ஆட்டம் தொடரும்.
 8. தப்பாட்டம், தவறாட்டம் ஆட, தாழ்வு ஆட்டம் தொடரும்.
 9. பெண் ஆட்டம் கண்டு பெண் நாட்டம் கொண்டால், வாழ்வின் ஆட்டம் தவறு ஆட்டம் ஆகும்.
 10. புலன் ஆட்டம் வழியே மனம் ஆட, முடிவில் திண்டாட்டம் ஆகுமப்பா.
 11. ஆட்டம் ஆட, மெய் ஆட்டம் ஆட, பொய் ஆட்டம் ஆடாது வாழலாம்.
 12. விதி ஆட்டம் ஆடும், அதன் வழியாட்டம் யாவும் தொடர்ந்து சேர்க்கும் வீண் பழியாட்டம்.
 13. நரி ஆட்டம் புத்தி பேதலிக்க, அது சரி ஆட்டம் என்று அத்தருணம் மதி சொல்ல, சரி ஆட்டம் அல்ல.
 14. தப்பாட்டம் என விதி சொல்லும், என்னாட்டம் ஆடினாலும், முடிவில் அந்தம் ஆட்டம் பின்னே, முதல் ஆட்டம் தொடங்கி முடிவு ஆட்டம் வரை யாவும் கர்ம ஆட்டம் என புரியும்.
 15. தர்ம ஆட்டம் ஆடும் மைந்தனுக்கு, கர்ம வாட்டம், வாட்டாது.
 16. பேதமில்லா பிரார்த்தனை ஆட்டம் ஆடும் மைந்தனுக்கு துயர் ஆட்டம் வாட்டாது.
 17. உயர்வாட்டம் தேடும் மாந்தன் உலக ஆட்டத்தில் உயர் ஆட்டம் தேடுகிறான்.
 18. உயர் வாட்டம் என்பது மெய்ஞ்ஞான வழியிலே என்பது புரியாது, தடுமாற்றம் காண்கிறான்.
 19. உள்ளபடி உள்ளம், உயர்வாட்டம் ஆட, பொறுமை கூடத்தான் ஆட்டம் ஆட, எளிமை பின் ஆட்டம் ஆட, கருணை தானும் நல் ஆட்டம் ஆட, சாந்தம், வதனம் ஆட்டத்தில் ஆட, தெளிவு உள்ளத்தில், சதா ஆட்டம் ஆட, ஆடாத நிலையில் ஆடிய ஆட்டம் புரிபடும்.
 20. ஆடுவதும், ஆட்டுவிப்பதும் தில்லையில் ஆடும் அம்பலத்து அரசனாட்டம் என்று தெரிய வரும்.
 21. முடிவாட்டத்தில் தெரியவரும்.
 22. புத்தி முதலாட்டத்திலே தெரிந்தால் அவன் ஞானி.
 23. சதா அம்பலத்திலே ஆடும் பொன்னம்பலம் அடியான் அடியினின் அடியையும், ஆடும் அரசனின் ஆட்டத்தில் அடியையும் மறவாமல் தொழத்தான், தப்பாட்டமாய், தவறாட்டம், பாவாட்டம் ஆடாது, வாழ்வு புனிதமாகும்.
 24. நல் ஆட்டம் வாழ்வில் ஆட, நல் ஆடல் அரசன் அருளட்டும், என ஆசிகள், சுபம்.

3 comments:

 1. அகத்திய பெருமான் எனக்கென்றே சுழற்றிய சாட்டைகள்.ஆட்டம் ஆடும் முன் அகத்திய பெருமான்
  எனக்கு கிடைக்கவில்லை.கோணல் ஆட்டம் ஆடி நல் வாழ்க்கையை முடிக்குமளவுக்கு வாழ்வின் விளிம்பில்
  இருக்கும் போது கிடைத்திருக்கிறார்
  அகத்திய பெருமான்.என் வயது 27 வாழ்வு தொடங்கும் நேரம் முடியும் நேரமாக ஆகிவிடக்கூடிய நிலையில் இருக்கிறேன்.இந்த பிரச்சினையில் அகத்திய பெருமானை சரணடைந்து பல கண்டங்களை துன்பப் பட்டாவது கடந்துவிட்டேன்.இன்னும் ஒரு கண்டம் உள்ளது.வாழ்வா சாவா போராட்டம்.முடிவு அகத்திய பெருமான் கையில் கொடுத்துவிட்டேன்.என்னை நம்பிய அப்பாவி குடும்பம் நடுக்கடலில் சூறாவளியில்.என் குடும்பத்திற்காக என்னைக் காப்பாற்ற இரக்கம் உள்ள உயர்ந்த உள்ளங்கள் அகத்திய பெருமானிடம் அருள் பெற்றவர்கள் சர்வ வல்லமை படைத்த கருணைக் கடலாம் அகத்திய பெருமானிடம் என்னையும் (சித்தரைத்தேடி)என் குடும்பத்தையும் காப்பாற்றி அருள் புரிய வேண்டிக் கொள்ளுங்கள்.இனி என் வாழ்வு சித்தர்கள் காட்டிய வழியில் அமையும்.நான் தீயவன் அல்ல.கவனம் சிதறியவன்.அனைத்தும் இருந்தும் தவறவிட்டவன்.கல்லாறு குடமுழுக்கு குருபூஜையில் கலந்து கொள்பவர்களும் யாகத்தின் போது எங்களுக்காக தயவுசெய்து வேண்டி எங்களை காப்பாற்றும் புண்ணித்தில் கலந்து கொள்ளுங்கள்.

  மரண வேதனை நரகம் தனிமை புறக்கணிப்பு ஆகியவற்றை நீக்கி அபாய கண்டத்தில் இருந்து என்னைக் காப்பாற்றி அருள் புரிய வேண்டுகிறேன் அகத்திய பெருமானே.

  நற்பவி..நற்பவி..நற்பவி..
  ஓம் அகத்தீசாய நமஹ..

  ReplyDelete
 2. please post the Full image of Othiyappar available at the centre. I am blessed.

  ReplyDelete