​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday 28 December 2016

சித்தன் அருள் - 549 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு

எது எங்கனம் ஆயினும், இந்த உலகில் நிலவுகின்ற ஒவ்வொரு சம்பவமும், அவனவன் மனநிலையை பொறுத்தே அமைவது, ஆகுமப்பா! அப்பனே, இன்பம் என்ற ஒன்றை மனம் தேடும் பொழுதே, அதன் மறுபக்கம் துன்பம் என்ற ஒன்று உள்ளதை புரிந்து கொள்ள வேண்டும். துன்பம் என்ற ஒன்று வரும்பொழுதே. அதன் மறுபக்கம் இன்பம் என்ற ஒன்று வரும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும். வேண்டுமப்பா, இவை இரண்டும் வேண்டாத உள்ளம் வேண்டுமப்பா. மனம் சமநிலையில் இருக்கும்கால், யாதொரு தொல்லையும் இல்லை.  மனதை வலுவாக்குதலே, இந்த உலகில் முதல் பணியாக மனிதனுக்கு இருக்கவேண்டும். மனம் உறுதி பெற, உறுதி பெற எந்த பிரச்சினையும், பிரச்சினையாக தோன்றாது.

2 comments:

  1. [ROUGH TRANSLATION] Whatever it may be, each and every experience that one undergoes in this world, is related to each person’s mental states. When you seek pleasure, understand its other side is suffering. When suffering strikes, its other side happiness will also come. What you need is a mind that does not seek either. When mind is equi-poised, there is no hassle. To strengthen his mind, should be the first task of each man. When mind keeps getting stronger and stronger, no problem will seem to be a problem.

    ReplyDelete