அன்புடன் போகர் சித்தர் அருளிய திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை வாக்கு!!
நாள்: 02/11/2025
திருவண்ணாமலை.
இந்த வாக்கின் முக்கிய அம்சங்கள் அவசர பதிவாக சித்தன் அருள் 1989 போகர் சித்தர் ஐப்பசி நீராடல் என்ற பதிவில் பதிவிடப்பட்டுள்ளது
ஐப்பசி கார்த்திகை அமாவாசை காவிரி நதி நீராடல் திருவாசகம் 13ம் பதிகம் திருப்பூவல்லி குறித்தும் முழுமையாக அந்த பதிவில் வெளியிடப்பட்டுள்ளது)
முழு வாக்குகளும் தற்பொழுது பதிவு செய்யப்படுகின்றது.
அகிலமெல்லாம் ஆளக்கூடிய!!!! அகிலாண்டேஸ்வரியே!!!
அகிலாண்டேஸ்வரியை பணிந்து போற்றுகின்றேனே. போகனவனே,!!!
அறிந்தும் மனிதனின் நிலைமைகள் மாறுபட்டு கற்பனையிலே மிதந்து கொண்டிருக்கின்றான். இவ்வாறாக மாறுபட மனிதனின் அழுக்குகள் நீங்கிட குற்றால நாதனிடம் செல்க.
(மனிதர்களின் பாவ அழுக்குகள் நீங்குவதற்கு குற்றாலம் செல்ல வேண்டும் குற்றாலத்தில் நீராட வேண்டும் குற்றால நாதனை வணங்க வேண்டும் குற்றாலத்தில் நீரை அனைவரும் பருக வேண்டும் வீட்டிற்கும் கொண்டு வர வேண்டும்)
இதை அறிந்து இதற்கும் புண்ணிய பலன்கள், அதை எதை என்று நிரூபிக்க!!!
ஆனாலும் மனிதனிடத்தில் பாவங்கள் தான் அதிகம்.!!!
இதனை அறிவித்து எத் துன்பமாயினும் அறிந்தும் இவை தன் போக்க(குற்றாலத்தில்) நீராடி அங்கிருந்து அழகாக நீரை நிரப்பிக்கொண்டு இதை தன் அனுதினமும் அதில் அவ் நீரில் நன்முறையாக ருத்ராட்சையும், அறிந்தும் பின் தூய பின் சிறிது சந்தனத்தையும் நல்விதமாக எவை என்று புரிய எத்தனை பின் மஞ்சளையும் இட்டு நன்முறையாகவே பின் நெல்லிக்கனியும் பின் வேப்பிலையும் பின் முருங்கை இலைகளையும் கூட!!!
இன்னும் சில மூலிகைகள், மிளகு, சீரகம் இவையெல்லாம் பின் நிச்சயம் இடித்து நன்கு கசக்கி பின் இரவு வேளை தன்னில் பின் அதில் பின் நன்முறையாக இட்டு அதிகாலையில் எழுந்து பருகிட சில தரித்திரங்கள் நீங்கும்!!
(வீட்டிற்கு கொண்டு வந்த குற்றாலம் நீரை அனுதினமும் சிறிதளவு எடுத்து அதில் ருத்திராட்சம் சுத்தமான சந்தனம் மஞ்சள் வேப்பிலை நெல்லிக்காய் முருங்கை இலைகளை இதனுடன் மிளகு சீரகம் சேர்த்து அரைத்து குற்றாலம் நீரில் இரவு ஊற வைத்து அதிகாலை வெறும் வயிற்றில் குடித்து வர தரித்திரங்கள் நீங்கும் இவை நான்கு மாதங்களாவது தொடர்ந்து செய்ய வேண்டும் உடம்பில் உள்ள அழுக்குகள் நீங்கும் இறைவன் மீது பற்று ஏற்படும்)
இதேபோல் அதிமதுரம் திரிபலா திரிகடுகு இவற்றையும் குற்றாலம் நீரில் கலந்து அதிகாலையில் குடித்து வர மாற்றங்கள் ஏற்படும்)
குற்றாலம் நீரில் அதிகாலையில் சுத்தமான தேங்காய் எண்ணெய் கலந்து குடித்து வரவேண்டும்
அதாவது ஒரு கிளாஸ் குற்றாலம் நீரில் நான்கு ஐந்து சொட்டுக்கள் தேங்காய் எண்ணெய் கலந்து குடித்து வர வேண்டும்)
உடம்பினில் அழுக்குகள் புகுந்து உள்ளது. அவை நீக்கிட இவைதன் அனுதினமும் பின் குறைந்தபட்சமாவது பின் நான்கு மாதங்கள் பின் செய்து வர உடல் தெளிவு பெறும்!!!
ஈசனை, அதாவது இறைவனை நினைக்கத் தோன்றும் எது உண்மை?, எது பொய்? என்று நினைக்கத் தோன்றும் இவைதன் தொடர்ந்து செய்து வர நன்று.!!!
மனிதனிடத்தில் பல நோய்கள் வரப்போகின்றது.
இதை தன் பின், அதாவது. இந்நோயை எதிர்த்து போராட இங்கு செப்பினேனே......
அவை மட்டுமில்லாமல் இடையிடையே பின் அதிமதுரத்தையும் அறிந்தும் இவை தன் நன்விதமாக பின் திரிபலா, திருகடுகம் எனும் மூலிகையும் கூட இரவுதனிலே அழகாக பின் சொன்னேனே..... குற்றாலத்தில் பின் நீராடி அவன் நீரைப் பின் எடுத்துட்டு அதின் உள்ளே நிச்சயம் தன்னில் கூட இதையிட்டு சரி சமமாக அறிந்தும் பின் அதிகாலையிலே பின் உண்டு வர மாற்றங்கள் ஏற்படுமே!!!
ஏற்படுமே. எதை என்று அறிவித்த பின் சுத்த பின் அறிந்தும் இவை என்று பின் தென்னை தன்னில் கூட அறிந்து எவை என்று தேங்காய் தன்னில் கூட சுத்தமானதை பின் அரைத்து பின் எண்ணெயாகவே அறிந்தும் இவைதன் பின் பன்மடங்கு நல்விதமாக பின் மந்திரத்தைச் செப்பி!!! அவ் மந்திரத்தை ரகசியமாக செப்புவேன்!!.
இன்னும் அறிந்தும் இவைதன் பின் அதிகாலையிலே பின் வெறும் தன் வயிற்றில் தன்னில் கூட இதனுடன் எதை என்று இவை என்று புரிய பின் சொன்னேனே. பின் குற்றாலத்தின் நீரில் அறிந்தும் இவைதன் கூட பின், அதாவது பின் அப்படியே பின் இதை தன் நிறைந்த அதில் உள் பின் இட்டு இதையும் பின் அருந்தி வர ஆரோக்கியம் மேம்பட்டு பின் பாவ வினைகளால் எண்ணங்கள் பின் மாறுபட்டு புண்ணிய வகைகள் பின் சேர நல் எண்ணங்கள் தோன்றி புண்ணிய பாதையில் சென்று அனைத்தும் கிட்டிடுமே!!! சொன்னேனே. அறிந்து போகனவன்.
அறிந்தென்றும் இவைதன் நிச்சயம் தன்னில் கூட சில தீய சக்திகள் மனிதனை ஆட்கொண்டு அதை இயக்குகின்றது!!!
இவ்வாறு பின் இயக்க இயக்க மனதில் தெளிவும் நிச்சயம் தன்னில் கூட நிம்மதியும் கிட்டாது!!!!
இதைதன் எதிர்த்து நிற்க !! எதிர்த்து நிற்க!!! இன்னும் சில மூலிகைகள் அவசியம்!!!
இதை தன் நன்றாக பயன்படுத்தி இதை தன் எவை என்று கூர்ந்து இட்டாலும் இதற்கு சமமாக ஒன்றின் பின் இதை என்று அறிவித்து பல மூலிகைகளான நிச்சயம் தன்னில் கூட அதாவது ஹோம திரவியங்கள் எதை புரிந்து கொண்டு அவைதன் நிச்சயம் தன்னில் கூட சரியாகவே அமாவாசை தன்னில் கூட !!
அதாவது அமாவாசை முடியும் பின் நேரத்தில் அதாவது கடைசி பாகத்தில் நிச்சயம் தன்னில் கூட இவை எரியவிட்டு பின் இதனுள்ளே அறிந்தும் எதை எவை என்று அறிய நன்றாக எரிந்திட்டு இதன் தன்மையை பின் எதை என்று ஐந்து அருவிகள் (குற்றாலம் மலையில் இருக்கும் ஐந்தருவியின் நீர்)
அதாவது சொல்லப்போனால் ஐந்து அறிந்தும் இதை என்று புரிய பல வழிகளில் கூட புண்ணிய நீர்களில் எடுத்து!!!
(கங்கா காவேரி தாமிரபரணி நர்மதா கோதாவரி.. அதாவது ஐந்து புண்ணிய நதிகளின் நீர்)
பின் ஐந்தாவது நாள் இதை தன் நிச்சயம் தன்னில் கூட அவைதனில் இட்டு நன் கசக்கி கசக்கி அதனுடன் நெய்யும் இட்டு நல் கசக்கி எதை புரிந்து இவைதன் சரியாகவே எடுத்திட்டு நிச்சயம் தன்னில் கூட சில மூலிகைகளும் சேர்க்க கற்ப மூலிகை ஆகுமாம்!!!
(அமாவாசை நாளின் கடைசி கால நேரங்களில் அதாவது அமாவாசை முடிவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக 108 மூலிகைகளை ஹோம குண்டத்தில் இட்டு ஹோமம் செய்ய வேண்டும் ஹோமம் முடிந்த பிறகு... கிடைக்கும் ஹோம பஸ்பம் அதாவது சாம்பலில் நெய் அருகம்புல் வில்வம் மஞ்சள் இவற்றோடு தேங்காய் எண்ணெய் இதெல்லாம் சேர்த்து அரைத்து அதனுடன் பஞ்சபூத திருத்தலங்கள் திருநீறு பிரசாதம் மற்றும் ஆறுபடை வீடு திருநீறு பிரசாதம் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தம் முதலான 22 தீர்த்தங்களின் நீர் மற்றும் திருச்செந்தூர் கோயில் மண் மற்றும் ஆறுபடை வீடுகள் கோயில்கள் மண் இவற்றை சரியாக இதனுடன் கலந்து அதை நமது இரண்டு காதுகளில் ஓரத்தில் அதாவது தோடு கடுக்கன் அணியும் இடத்தில் காதுகளின் ஓரத்தில் மற்றும் உச்சந்தலையில் சிறிதளவு தேய்த்துக் கொண்டே வந்தால் தரித்திரங்கள் நீங்கும்)
இவைதன் நிச்சயம் இதில் கூட அருகம் புல்லையும் அறிந்தும் இவைதன் நிச்சயம் தன்னில் கூட ஈசனுக்கு சேர்க்க வேண்டிய பொருட்கள் வில்வத்தையும் சிறிதளவு மஞ்சளையும் இன்னும் எதை புரிய நிச்சயம் அறிந்தும் இவை தன் இன்னும் இன்னும் சம அளவு இன்னும் புரிந்தும் எடுத்திட்டு எவை என்று பின் நீந்த அவையெல்லாம் பசையாக்கி அனுதினமும் நிச்சயம் தன்னில் கூட இவற்றுடனே பின் அதாவது தேங்காய் தன்னில் கூட பின் சரியாக எண்ணெயும் இட்டு நல் கசக்கி. இதை தன் நிச்சயம் தன்னில் கூட பல பரிசுத்தமான இடங்களுக்குச் சென்று முக்கியமான ஸ்தலங்களான ஐந்து எதை என்று கூறிய பஞ்சலோக ஸ்தலங்களையும் (பஞ்சபூதங்கள் தலங்கள் ) தரிசித்து அங்கு வந்து அறிந்தும் இவை தன் பிரசாதங்களையும் கூட இவையும் இட்டு அறுபடை வீடுகளில் கூட எடுத்திட்டு பின் ராமேஸ்வரம் சென்று நீரையும் எடுத்திட்டு செந்தூரையும் எதை என்று கனிவாக மீண்டும் ஒருமுறை பின் அறு (படைவீடுகளின்) எவை என்று அறிய பின் மண்ணையும் எடுத்திட்டு அதில் தன் சரியாகவே பின் கலக்கிட அனுதினமும் நிச்சயம் தன்னில் பின் அறிந்தும் இவைதன் பின் அதாவது பின் வலது இடது காதுகளின் ஓரத்தில் அதாவது பின் தன்னில் பின் தலை தன்னில் கூட எவையென தேய்த்து தேய்த்து வந்தாலே சில தரித்திரங்கள் நீங்குமடா!!!
நீங்குமடா!!! இதைச் செய்ய பரிசுத்தமான ஆற்றல்கள் !!!
நிச்சயம் இதை செய்து வர தரித்திரங்கள் நீங்கி பரிசுத்தமான ஆற்றல்கள் ஏற்பட்டு இறைவன் ஆசிகளும் கிட்டு இன்னும் உயர்வீர்களாக நீங்கள்.!!!
இவைதன் மனிதனுக்கு புரியவில்லையே!!! வெற்றிகள் மனிதனிடத்தில்!!
ஆனால் முயல்வதில்லையே!!!
இதில் தன் முயற்சி செய்பவன் வெற்றியாள்!!!
முயற்சி செய்யாதவன் தோல்வியாள்.
இவை தன் நிச்சயமாமய் இன்னும் கிரகங்களை வெல்ல யாங்கள் சொல்வோம் காத்திடுவோம் உங்கள் அனைவரையுமே!!!
எதை என்று புரிய இன்னும் பின் அறிந்தும் எவை என்று சித்தர்கள் வந்து வந்து செப்பி செப்பி உயர் ஆற்றலை கொடுத்துவிட்டால் நீங்கள் அனைவருமே எதை என்று கூற இறைவன் பால் சிந்தித்து மற்றவரையும் கூட இறைவன் பாதையில் அழைத்து வருவீர்களாக!!!
அதற்குத்தான் எவை என்று கூற பின் அகத்தியன் அறிந்தும் இறைவனிடத்தில் கடைசியாக பின் அதாவது கடைசி வாய்ப்பு ஒன்று தருவீர்!!!! பின் தாயே!!! தந்தையே !!! என்று முறையிட்டு வாங்கிக்கொண்டு வந்துள்ளான் அகத்தியன்!!!
அதனாலே யாங்கள் சொல்ல வந்தோமே வாக்குகள்!!!
இவை தன் அறிந்து இன்னும் கிரகங்களை வெல்லவும் எதை என்று புரிய இடைக்காடன் வரட்டும்
இடைக்காடர் சித்தர் வருகை!!!
இவை தன் போகன் அருளாசிகளுடனே ஈசனின் அருளாசிகளுடனே சொல்ல வந்தேனே!!! இடையன்!!!
இவைதன் பின் கட்டம் கட்டமாக அறிந்தும் பன்னிரண்டு இதை தன் பின் அவ் வவ் கட்டத்தில் ஜனன ஜாதகத்தில் எவை என்று புரிந்து அவ் அவ் நேரத்தில் எத்தனை எதை என்று கிரகங்களும் இட்டு இதை தன்னில் கூட அவற்றுக்கெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் எவ் பின் எதை என்று உண்ட உணவு எதை என்று கொடுத்து எதை என்று அறிய பின் அவ் அவ் ஓரையில் நிச்சயம் எடுத்து உண்ண எடுத்து உண்ண நோய்கள் விலகி போகும் அருள்களும் கிட்டும்.
(ஒவ்வொருவருடைய பிறந்த பொழுது கிடைத்த ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரகங்களின் ஓரை படி அந்தந்த கிரகங்களுக்குரிய உணவுகளை அந்தந்த ஓரையில் உண்டு வந்தால் நோய்கள் வராது)
அதேபோல் அந்தந்த ஓரையில் அந்தந்த கிரகத்தின் தானியங்களை வைத்து தீபமாக நதியில் அந்த ஓரையில் விட வேண்டும் அப்பொழுது ஹோரைக்கு அந்தந்த கிரகத்தின் காயத்ரி மந்திரம் 108 முறை சொல்லுதல் வேண்டும்.. ஒவ்வொரு கிரகத்தின் ஓரையின் போதும் அந்தந்த கிரகத்தின் தானியங்களை தேங்காய் எண்ணெயில் சமைக்க வேண்டும் அப்படி தேங்காய் எண்ணெயில் சமைத்து உண்ண வேண்டும்)
இவைதன் நிச்சயம் தன்னில் கூட இவைதன் இவ்வாறாக அமைத்து பின் மாற்றி மாற்றி எதை என்று புரிய!!! இவ்வாறாகவே தீபங்களும் இட்டு!!
இவைதன் பின் நதியில் பின் நிச்சயம் பின் எவை என்று கரைக்க நன்று தீமைகள் விலகும்!!
இவைதன் இவ்வாறாக கட்டங்களாக இட்டு இட்டு ஒவ்வொரு எதை என்று அறிந்து கூட கிரகத்திற்கும் நிச்சயம் தன்னில் கூட 108 மந்திரத்தை செப்பி செப்பி.
காயத்ரி மந்திரம் 108 முறை
இவையென்று பின் தொடர நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொரு எதை என்று நாட்களை குறித்து இவைதன் அவ்வோரையில் சமைத்து உண்டிட பறக்கும் நோய்கள்.
இவைதன் நிச்சயம் தன்னில் கூட இவை தன் பயன்பெற தென்னை தன்னில் கூட !!!
(தேங்காய் எண்ணெய்)
இவைதன் உணர இன்னும் இதனுள்ளே ஏன் சனீஸ்வரன் எதை என்று அறிய பின் அதாவது அவனை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் வேண்டுமென எதை பின் புரிய நிச்சயம் தன்னில் கூட முன்னோர்களின் சொத்துக்களை பின் எதை என்று அறிய பின் எவை என்று அறிந்தும் கூட அவர் சொத்துக்களை நீங்கள் அனுபவித்துக் கொண்டே வந்தால் அவர் கர்மாவையும் அனுபவிக்க நேரிடும்!!!
சரியான தண்டனை பின் கொடுத்துக்கொண்டே வருவான் சனீஸ்வரன்!!!
இதைதன் யாராலும் கட்டுப்படுத்த முடியாது.!!
இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட இவை தன் சரியாகவே நெல் விதைத்து பின் அதாவது பின் ஈசன் பின் ஆலயங்களுக்கு பின் கொடுக்க புண்ணியங்கள் பெருகும்.
(முன்னோர்களுடைய நிலங்கள் விவசாய நிலங்கள் இதில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து குருநாதர் அதற்கான தீர்வை கூறியிருக்கின்றார்.
ஏற்கனவே சூரத் சத்சங்கத்தில் பாகம் 11 சித்தன் அருள் 1624 ல் முன்னோர்களுடைய நிலம் !! அதை விற்க அனுபவிக்க முடியாத பிரச்சனைகளுக்கு குருநாதர் முன்னோர்கள் சம்பாதித்து வைத்த சொத்துக்களை நீங்கள் அனுபவிக்க வேண்டும் என்றால் அவர்கள் செய்த பாவ புண்ணியத்தையும் நீங்கள் அனுபவிக்க நேரிடும் என்றும் மேலும் பரிகாரமாக திருச்சி மணச்சநல்லூர் பூமிநாதர் ஆலயத்தை பற்றியும் குருநாதர் அனைவருக்கும் ஏற்கனவே உரைத்துள்ளார்)
இந்த வாக்கில் இந்த பிரச்சனைகளுக்கு அவரவர் நிலத்தில் நெல்லை பயிர் செய்து அதை அறுவடை செய்து அரிசி அல்லது நெல்லை ஈசன் ஆலயத்திற்கு வழங்க வேண்டும். நெல்லாக வணங்கினாலும் சரி !! நிலத்தில் விளைந்த நெல்லை அரிசியாக வழங்கினாலும் சரி!! வைக்கோல் தவிடு உமியை ஈசன் ஆலயத்தில் கோசலைக்கும் வழங்கலாம் இதனால் புண்ணியங்கள் பெருகும்)
இவ் படைப்பில் இறைவன் படைப்பில் இடங்கள் அனைத்துமே இறைவனுக்கு சொந்தம் எதை என்று கூற... ஆனால் மனிதன் என்னவோ..!?!?... தனக்கு தான் சொந்தம் என்று!!!
இவ்வாறு தான் மனிதன் தெரியாமலே பின் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான் கஷ்டங்களை!!!
இதை தன் உணராதவர்!?!? வாழ்க்கையில் எங்கு சென்றாலும் விடிவெள்ளி இல்லையே!!!!.
இதனால் பின் மனதில் நிச்சயம் அறிந்தும் சக்திகளை இழந்து, இறைவன் எங்கு இருக்கின்றான்??? என்று சந்தேகம் வருகின்றது.
இவைதன் நிச்சயம் இன்னும் பல பல உரைகளில் கூட அறிந்தும், உலகமெல்லாம் நிச்சயம் தன்னில் கூட நல் வாழ்க்கைக்காக, நிச்சயம் தன்னில் கூட அனைவருக்கும் பின் செப்பி, அவரவர் நிச்சயம் தன்னில் கூட எண்ணங்களை நிறைவேற்றி, அவரவர் பின் நிச்சயம் தன்னில் கூட, பின் உடம்பை பெரிதாக்கி, எதை என்று அறிய வெற்றி கொள்வீர்களாக.!!!
இதனை தன் பரிசுத்தமாக யாங்கள் வரும் வரும் பின் வாக்கியத்தில் உரைப்போமாக,!!!
உரைப்போமாக வரும் சந்ததிகளுக்கு இது பயன்படும்.!!!
நிச்சயம் தன்னில் கூட ஒரு அழிவு காத்துக் கொண்டிருக்கின்றது.!!
இன்னும் நிச்சயம் அவ்வழிவு வந்துவிட்டால், அனைவரும் திருந்தி விடுவார்கள்.
ஆனால் அவ்வழிவை நிச்சயம் பின் நெருங்கக் கூடாது.
இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட அனைவரும், பின் நிச்சயம் தன்னில் கூட, பின் கூட்டு பிரார்த்தனையில் எதை என்று அறிய, எவை என்று அறிய, அகத்தியன் பின் இயக்கி, நிச்சயம் பின் சாந்தப்படுத்துகின்றான். இறைவனை.!!
இதை தன் சரியாகவே ஒரு ஐந்து நாட்களுக்கு முன்பே பல வழிகளில் கூட எதை என்று அறிய, பெருத்த எவை என்று அறிய, ஒரு பூகம்பம் வந்திருக்க வேண்டியது.
ஆனாலும் பின் காத்து விட்டான், எதை என்று அறிய.
இன்னும் பின் சரியாக எவை என்று கார்த்திகை திங்களில், அதாவது மதுரை தன்னில் வீற்றிருக்கும் மீனாட்சி தாயிடம், இவை போன்று செய்க. பின் நிச்சயம் தன்னில் கூட!!!
(கார்த்திகை மாதத்தில் மதுரையில் கூட்டு பிரார்த்தனை)
மீனாட்சி, பின் காத்திடுவாள்.!!!
இவை தன் உணர பொய்யாக்கவோ, மனிதனின் எதை என்று அறிய!!
எதை எதையோ பிதற்றுவது போலே!!
இவை தன் உருவாக்க இன்னும் ஞானங்கள்!!.....
ஆனாலும், எதை என்று அறிய புண்ணிய பலன்களை முதலில் கூட்ட வேண்டும்.!!!
எங்கு? இருக்கும் புண்ணிய பலன்கள் யாங்கள் அறிவோம். அங்குதான் நிச்சயம் வைத்திட்டு, பின் எங்கள் புண்ணியங்களையும் கூட உங்களுக்கு அளிப்போம்.!!!
(கூட்டு பிரார்த்தனைகள் எங்கு புண்ணியங்கள் இருக்கின்றதோ? அங்கு வைக்கச் சொல்வோம் அங்கு வைத்துவிட்டு எங்களுடைய அதாவது சித்தர்களுடைய புண்ணிய பலன்களையும் அடியவர்களுக்கு கொடுப்போம்)
அதனால் பின் முன்னேற்ற பாதையில் சென்று, நிச்சயம் பின் மற்றவர்களையும் முன்னேற்ற பாதையில் அழைத்து!!! (செல்ல முடியும்)
ஆனாலும் சிறிதாவது பின் சந்தேகம் வந்தால், அவர்களை யாங்களே நீக்கி விடுவோம்.
இவை தன் அறிய இதனால் ஒருவர் வந்தாலும் போதும்.!!
நிச்சயம் அவ்வொருவனைக் கொண்டு யாங்கள் இவ்வுலகத்தை இயக்குவோம்.
அவ் ஒருவனை வைத்து பல கோடி மக்களை அடித்திட எங்களால் முடியும்.
ஆனாலும் நிச்சயம் தன்னில் கூட அவ்வாறெல்லாம் நிச்சயம் பின் சென்று விடக்கூடாது என்பதற்கே நிச்சயம் ஒரு வாய்ப்பு எதை என்று புரிய. அகத்தியன் மன்றாடி, ஈசனாரிடமும் பின் பார்வதி தேவியிடமும் மன்றாடி கேட்டுக்கொண்டு வந்திருக்கின்றான்.
இன்னும் உங்களுக்கு என்ன மந்திரங்கள் என்றெல்லாம் யாங்கள் உரைப்போம்.!!!
எவ்வாறு கிரகங்களை கட்டுப்படுத்துவது? என்றெல்லாம் உரைப்போம்.
எவ்வாறெல்லாம் நிச்சயம் தன்னில் ஹோமம்!! ஹோமத்தையும் எதை என்று அறிய, பின் அறிந்தும் செயல்பட்டால் வெற்றிகள் கிடைக்கும் என்பதை எல்லாம் யாங்கள் சொல்ல!!!!
நிச்சயம். பின் அதற்கும் புண்ணிய பலன்களை எதை என்று அறிய எங்களிடத்திலே யாங்களை அளித்து, அதையும் நீங்கள் (உங்களை) செய்ய வைப்போம். அறிந்தும் பின் செய்தால், நிச்சயம் பின் எதை என்று எவை என்று புரிய நினைக்கின்றீர்களோ, அதுவும் நடக்கும்.!!
பின் வரும் சந்ததிகளுக்கு சிறப்பாக வாழ்க்கையும் உண்டு.
எவை என்று நன்றிட, நிச்சயம் தன்னில் அறிந்திட எங்களுக்கு பின் தெரியும்.
எங்கு? எவை என்று கூட சக்திகள் அதிகமாக விழுகின்றது என்று கூட!!
நிச்சயம் தன்னில் கூட அங்கெல்லாம் பின் அழைத்து, பின் நிச்சயம் தன்னில் கூட.!!!
""" ஐயோ, எங்களுக்கு ஒன்றும் தெரியாதே!!.......
என்று சொன்னாலும்,
நிச்சயம் தன்னில் கூட
ஐயோ, பாவம் எப்படி செல்வதே என்று தெரியவில்லை என்றாலும்!!!!........
அவர்களை அழைத்து யாங்கள் சக்திகளை உருவேற்றிக் கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட வளமாக்குவோம். குடும்பத்தையும் பின் இவ்நாட்டையும்.
இதை என்று அறிய பின் ஒன்றுமே தெரியவில்லையே.. என்று இறைவா என்று சொன்னாலும்.. யாங்கள் அழைத்து அதாவது... நிச்சயம் இதுபோன்ற மாபெரும் சித்தர்களின் வாக்கை கேட்டாலும் புண்ணியமே!!!
எதை எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. இதனால் எவை என்று அறிய பல மக்களுக்காக ஓடோடி, எதை என்று அறிய வந்து, பின் அதாவது (சிவ)புராணத்தையும் ஓதி, நிச்சயம் அதுவும் புண்ணியமே. ஒரு வகை !!
இவை தன் உணர்ந்து, எதை என்று புரிய இதனால் இப்படித்தான் புண்ணியங்களை சேர்க்க முடியும். சிறு சிறுதாக!!!!!
இவை தன் நிச்சயம் நீங்கள் பின் விரும்பியதை பின் அடைந்து விடலாம். நிச்சயம் தன்னில் கூட.!!
ஏனென்றால், பின் கலியுகம் என்பது வாழ முடியாத காலம் என்பதை எல்லாம் சித்தர்கள் பின் எடுத்துரைத்து, எடுத்துரைத்தே.!!
ஆனாலும், பின் வாய்ப்பை அளித்திருக்கின்றான் ஈசன்.
பின் அறிந்தும், இதனால் நிச்சயம் தன்னில் கூட அவ்வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, அறிந்தும்,!!!
பின் உடனடியாக ஒரு அழிவும் காத்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால், பின் ஈசனிடத்திலே வந்து முறையிட்டு விட்டீர்கள். ஈசனே பார்த்துக் கொள்வான்.
இவை தன் அனைவருமே ஒரு ஐந்து நிமிடம் எதை என்று புரிய. அதாவது, ஈசன் பின் ஆலயத்தை நோக்கி, நிச்சயம் தன்னை கூட அனைவரையுமே காப்பாற்றுங்கள் என்று மௌனத்தில் இருங்கள்.!!!
நிச்சயம் தன்னில் கூட மௌனத்திற்கு எவ்வளவு சக்திகள் இருக்கின்றது என்பதை எல்லாம் நீங்கள் நிச்சயம் போகப்போக.!!!
(தெரிந்து கொள்வீர்கள்)
அதனால் பின் கோபம் கோபம் கொள்கின்ற பொழுது மௌனத்தை காத்தால், பின் ஏற்றங்கள். !!!
அதாவது பேசும் பொழுது கூட மௌனத்தை காத்து பேசினால் யோகங்கள் கூடும்.
இன்னும் பின், அதாவது பின் உண்ணுகின்ற பொழுதும், நிச்சயம் யோசனைகளோடு, நிச்சயம் தன்னில் கூட யோகங்கள் கூடும்.!!
இதனால் நிச்சயம் மனது வலிமை பெறும். அனைத்திலும் கூட,
இதனால் பின்...
"""""நினைத்தாலே !!!!! எதை என்று அறிய அனைவருக்குமே பின் நிச்சயம் தெரியும் எதை என்று புரிய.
(""""""அண்ணாமலையை நினைத்தாலே !!!! முக்தி!!! என்ற ஒரு வாக்கு அனைவருக்கும் தெரியும்)
எங்கிருந்தாலும், நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது பின் எவை என்று அறிய, பின் ஒரு ஐந்து, பின் அல்லது அல்லது எது என்று இன்னும் பின் பத்து, பின் மைல் தன்னில் கூட சுற்றி, பின் அவ் பரிசுத்த ஆற்றல்கள் விழுந்து கொண்டே, விழுந்து கொண்டே, நிச்சயம் தன்னில் கூட மலை தன்னிலே !!!
எங்கு வேண்டினாலும், நிச்சயம் தன்னில் கூட ஈசன் இறங்கி வருவான் என்பது திண்ணமான வாக்கு. நிச்சயம் தன்னில் கூட
(அதாவது அண்ணாமலையை சுற்றி 10 கிலோமீட்டர் சுற்றளவு அதாவது பத்து மைல் சுற்றளவு பரிசுத்தமான இறை ஆற்றல்கள் விழுந்து கொண்டே இருக்கின்றது எங்கிருந்து அண்ணாமலையை நோக்கி பார்த்து அதாவது வணங்கினாலும் வேண்டிக் கொண்டாலும் ஈசனுடைய அருள் கிடைக்கும் என்பது திண்ணம்)
அறிந்தும் எவை என்று அறிய, இன்னும் அவரவருக்கு வினைகள் சூழ்ந்து நிற்க, பின் உடம்பு தன்னில் கூட அங்கங்கு அழுக்குகள் தேங்கி நிற்க, நிச்சயம் தன்னில் கூட, பின் நோய்கள் வரும்.
அவைதன் எடுக்க, அடுத்து நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், இவை தன் இன்னும் பின் அதனுள்ளே ஞானங்கள் பெற்று,...
தேரையன் (தேரையர் சித்தர்)
நிச்சயம் தன்னில் கூட வாக்குகள் செப்புகின்ற பொழுது, நிச்சயம் எங்கு, பின் எப்படி, பின் அழுக்குகள் தங்கி, பின் அதாவது ஊன் உடம்பை கெடுக்கும் என்பதை எல்லாம் அடுத்து, பின் பிரார்த்தனையில், நிச்சயம் தன்னில் கூட தேரையன் சொல்வான்.
அதுவரையில், நிச்சயம் பொறுத்தருளுக.
நிச்சயம் ஏற்றங்கள் உண்டு. யாங்கள் கொடுப்போம். யாங்கள் சொல்லியதை, நிச்சயம் தன்னில் கூட கடைபிடித்து, நிச்சயம் பின் ஏற்றம் பெறுக. பின் அதாவது, பின் திருவாசகத்தில் 13 ஆம் பின் பதிகம், பின் பாடல் அறிந்தும் எதை என்று கூட யோகங்கள்.!!!
திருப்பூவல்லி திருப்பூவல்லி.
பதிகம்.
இதை தன் அறிந்து, இவை தன் நிச்சயம் தன்னில் அறிந்தும்,!!!
பின் நவ(ஒன்பது) எவை என்று அறிய, பின் அதாவது நவதானியங்களுடனே தீபங்கள், பின் ஏற்றி, நிச்சயம் தன்னில் கூட, பின் காவேரி தன்னில் இப்பாடலை பாடிட்டு நிச்சயம் தன்னில் கூட, பின் அமாவாசை தன்னில் கூட, நீராட அகத்தியனின் ஆசிகளும் கிட்டும், இன்னும் ஞானங்களும் கிட்டும்!!!
, இன்னும் அவரவருக்கு அகத்தியன் வந்து வாக்குகள் சொல்வான். பலமாக.!!!
அடியவர்கள் அனைவரும் திருப்பூவள்ளி பதிகத்தை பாராயணம் செய்தனர் அதன் பிறகு
யாத்திரை பத்து பதிகம் பாராயணம் செய்ய உத்தரவு.
திருவாசகம் எட்டாம் திருமுறையில் உள்ள 45ஆவது பதிகம் யாத்திரை பத்து.
045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
அ௫ளியவர் : மாணிக்கவாசகர்திருமுறை : எட்டாம்-திருமுறை-திருவாசகம் நாடு :சோழநாடு காவிரி வடகரை தலம் : கோயில் (சிதம்பரம், தில்லை)
பூவார் சென்னி மன்னனெம் புயங்கப்
பெருமான் சிறியோமை
ஓவா துள்ளம் கலந்துணர்வாய் உருக்கும்
வெள்ளக் கருணையினால்
ஆவா என்னப் பட்டன்பாய் ஆட்பட்
டீர்வந் தொருப்படுமின்
போவோங் காலம் வந்ததுகாண் பொய்விட்
டுடையான் கழல்புகவே. 1 புகவே வேண்டா புலன்களில்நீர் புயங்கப்
பெருமான் பூங்கழல்கள்
மிகவே நினைமின் மிக்கவெல்லாம் வேண்டா
போக விடுமின்கள்
நகவே ஞாலத் துள்புகுந்து நாயே
அனைய நமையாண்ட
தகவே யுடையான் தனைச்சாரத் தளரா
திருப்பார் தாந்தாமே. 2 தாமே தமக்குச் சுற்றமும் தாமே
தமக்கு விதிவகையும்
யாமார் எமதார் பாசமார் என்ன
மாயம் இவைபோகக்
கோமான் பண்டைத் தொண்டரோடும் அவன்தன்
குறிப்பே குறிக்கொண்டு
போமா றமைமின் பொய்நீக்கிப் புயங்கன்
ஆள்வான் பொன்னடிக்கே. 3 அடியார் ஆனீர் எல்லீரும் அகல
விடுமின் விளையாட்டைக்
கடிசே ரடியே வந்தடைந்து கடைக்கொண்
டிருமின் திருக்குறிப்பைச்
செடிசே ருடலைச் செலநீக்கிச் சிவலோ
கத்தே நமைவைப்பான்
பொடிசேர் மேனிப் புயங்கன்தன்
பூவார் கழற்கே புகவிடுமே. 4 விடுமின் வெகுளி வேட்கைநோய் மிகவோர்
காலம் இனியில்லை
உடையான் அடிக்கீழ்ப் பெருஞ்சாத்தோடு உடன்போ
வதற்கே ஒருப் படுமின்
அடைவோம் நாம்போய்ச் சிவபுரத் துள் அணியார்
கதவ தடையாமே
புடைபட்டுருகிப் போற்றுவோம் புயங்கன்
ஆள்வான் புகழ்களையே. 5 புகழ்மின் தொழுமின் பூப்புனைமின் புயங்கன்
தாளே புந்திவைத்திட்டு
இகழ்மின் எல்லா அல்லலையும் இனியோர்
இடையூ றடையாமே
திகழுஞ் சீரார் சிவபுரத்துச் சென்று
சிவன்தாள் வணங்கிநாம்
நிகழும் அடியார் முன்சென்று நெஞ்சம்
உருகி நிற்போமே. 6 நிற்பார் நிற்கநில் லாவுலகில் நில்லோம்
இனிநாம் செல்வோமே
பொற்பால் ஒப்பாந் திருமேனிப் புயங்கன்
ஆள்வான் பொன்னடிக்கே
நிற்பீர் எல்லாந் தாழாதே நிற்கும்
பரிசே ஒருப்படுமின்
பிற்பால் நின்று பேழ்கணித்தாற் பெறுதற்
கரியன் பெருமானே. 7 பெருமான் பேரானந்தத்துப் பிரியா
திருக்கப் பெற்றீர்காள்
அருமா லுற்றுப் பின்னைநீர் அம்மா
அழுங்கி அரற்றாதே
திருமா மணிசேர் திருக்கதவம் திறந்த
போதே சிவபுரத்துத்
திருமா லறியாத் திருப்புயங்கன் திருத்தாள்
சென்று சேர்வோமே. 8 சேரக் கருதிச் சிந்தனையைத் திருந்த
வைத்துச் சிந்திமின்
போரிற் பொலியும் வேற்கண்ணாள் பங்கன்
புயங்கன் அருளமுதம்
ஆரப் பருகி ஆராத ஆர்வங்
கூர அழுந்துவீர்
போரப் புரிமின் சிவன்கழற்கே பொய்யிற்
கிடந்து புரளாதே. 9 புரள்வார் தொழுவார் புகழ்வாராய் இன்றே
வந்தா ளாகாதீர்
மருள்வீர் பின்னை மதிப்பாரார் மதியுட்
கலங்கி மயங்குவீர்
தெருள்வீராகில் இதுசெய்ம்மின் சிவலோ
கக்கோன் திருப்புயங்கன்
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ
அந்தோ அந்தோவே.
அருளார் பெறுவார் அகலிடத்தே அந்தோ
அந்தோ அந்தோவே!!
அடியவர்கள் யாத்திரை பத்து பதிகத்தை பாடி நிறைவு செய்தனர்!!!
குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு!!
அப்பனே இதை தன் ஏன்? எதற்காக? இப்பாடலை பாடச் சொன்னேன் ???
எதை என்று புரிய பின் மாணிக்கவாசகன் எதற்காக? எவை என்று அறிய எத்தனையோ நிச்சயம் தன்னில் கூட உன்னிடத்தில் வர முடியாதவர்களும் ஏங்கி தவிக்கின்றனர்!!!
ஆனாலும் பின் நிச்சயம் உன்னை நினைத்து எதை என்று கூற ஏதாவது நீயே!! நிச்சயம் மனதில் இறங்கி நிச்சயம் உந்தனைக்கே எதை என்று கூற பொருள்பட பாடச் சொல் !!!! நிச்சயம் பின் வர இயலாதவர்களும் நிச்சயம் அத்திருத்தலத்திற்கு வரும்படியே என்று!!!
நிச்சயம் அருளாசிகள் அருளாசிகள்.
சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்!
பக்தர்கள் சிலரால் சந்தர்ப்ப சூழ்நிலையால் பொருளாதார சூழ்நிலையால் சில திருத்தலங்களுக்கு செல்ல முடியாது.. இப்படி செல்ல இயலாத காரணத்தால் மனம் வருந்துகின்ற பொழுது மாணிக்கவாசகர் இயற்றிய இந்த பதிகத்தை எந்த திருத்தலத்திற்கு செல்ல நினைக்கின்றார்களோ அந்த திருத்தலத்தை மனதில் நினைத்துக் கொண்டு இந்த பதிகத்தை பாராயணம் செய்தால் அந்த திருத்தலம் சென்ற பாக்கியம் புண்ணியம் கிடைக்கும் என்று விளக்க உரை ஆற்றினார்.
குருநாதர் அகத்தியர் பெருமான் வாக்கு!!
இதை என்று அறிவித்து இப்பாடலை பாடினாலே!!! எது என்று கூற அழகாகவே நிச்சயம் தன்னில் கூட பின் எங்கிருந்தாலும் எவை என்று அறிய நிச்சயம் ஈசன் தலத்திற்கு நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது அண்ணாமலையிலே!!!!
சுவடி ஓதும் மைந்தன் விளக்கம்!
மாணிக்கவாசகர் ஈசனிடம் திருத்தலங்கள் செல்ல முடியாத பக்தர்களுக்காக இந்த பதிகத்தை பாடினால் அண்ணாமலையிலிருந்து ஈசன் கேட்டுக் கொண்டே அந்த பக்தர்களுக்கு அந்த ஆலயத்திற்கு சென்ற புண்ணியமும் அருள்வாசிகளும் வழங்குவார்..
குருநாதர் வாக்கு!
இன்னும் ஞான ரகசியங்கள் ஒளிந்துள்ளது பல சித்தர்களும் வாக்குரைக்கும் பொழுது தெரியும் அனைத்தும் தெரிந்து கொள்வீர்களாக!!!! உங்களை நீங்கள் வென்று மற்றவர்களும் பின் வெல்ல செல்வீர்களாக!!!
(மற்றவர்களையும் வெற்றிபெற செய்வீர்களாக)
நிச்சயம் யாங்கள் பின் துணையிருப்போம் கடைநாளும்!!! நிச்சயம் தன்னில் கூட!!
ஏன் எதற்கு எவ்வாறெல்லாம் நிச்சயம் உலகம் எதனை??? பின்!!.. நோக்கி செல்கின்றது??? என்பதை எல்லாம் நீங்கள் அறிந்ததே!!!
(அழிவை நோக்கி)
அதனையும் அத்தனையும் யாங்கள் மாற்ற நிச்சயம் தன்னில் கூட பின் யார்? யார்? எதனை மூலம் பின் இயக்கி நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் பின் மாற்ற வைப்போம்!!!
இன்னும் எதை என்று அறிய ஞான ரகசியங்கள் இன்னும் ஞான பாடல்கள் பாடலை பாடினால் நோய்கள் உடனடியாக குணமாகும்!! நிச்சயம் தன்னில் கூட!!
அவ் பாடலை பின் பாடினால் பின் படமெடுக்கும் பாம்பும் கூட நிச்சயம் அமைதி காக்கும்!!!
நிச்சயம் இவையெல்லாம் நிச்சயம் யாங்கள் சொல்லித் தருவோம்!!!
கவலை இல்லை!!! பக்குவப்படுத்தி பின் மேன்மையாக நிச்சயம் தன்னில் கூட இன்னும் இன்னும் சிறப்பாகவே வாக்குகள் உண்டு சித்தர்கள் நிச்சயம் தன்னில் கூட உங்களைப் பின் வழிநடத்துவார்கள்!!!
மீண்டும் சொல்கின்றேன் சித்தர்கள் பின் வழியில் வருவதற்கும் நிச்சயம் தன்னில் கூட புண்ணியம் வேண்டும்!!!
நிச்சயம் எவை என்று அறியறிய கீழானவர்களை யாங்கள் சேர்க்க மாட்டோம்!!!
நிச்சயம் இவ்வுலகத்தில் இரண்டு!!
எதை என்று கூற ஒன்று மேலானவர்கள்!!! மற்றொன்று கீழானவர்கள்!!
நிச்சயம் மேன்மையான எண்ணம் கொண்டவர்கள் மேன்மையானவர்கள்!!
மற்றவர்கள் கீழான எண்ணம் உடையவர்!!
பின் நிச்சயம் கீழானவர்கள் !!
நிச்சயம் அக் கீழானவர்கள் எங்கள் அருகில் வரவே முடியாது!!
அதனால்தான் மேன்மையான எண்ணங்கள் வையுங்கள்!! யாங்களே அழைத்து வருவோம்!!! இறைவனிடத்தில் அழைத்துச் செல்வோம்! இறைவனையும் காட்டுவோம்!!
அருளை!! ஆசிகளை பெற்றுத் தருவோம்!! நீடூடி வாழ்க!! ஆசிகள்!! ஆசிகள்!! அனைவருக்குமே!!.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

.jpeg)
.jpeg)

.jpeg)

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDelete