​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 4 November 2025

சித்தன் அருள் - 1980 - அன்புடன் அகத்தியர் - குரு சாபம்/குழந்தை பேறு தடை விலக!






வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

2/11/2025 திருவண்ணாமலையில் குருநாதர் உத்தரவின்படி சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை நிகழ்வில் இடைக்காடர் சித்தர் கூறிய 

குருவின் சாபத்தை போக்கி யோகங்களாக மாற்றும் மற்றும் குழந்தை பாக்கியம் பெறுவதற்கான ரகசியங்கள்!!

 கார்த்திகை மாத குரு பகவானின் கதிர் வீச்சினை பெறுவதற்கு கூறிய வழிபாடு பரிகார முறை. 

தற்போது அவசரப் பதிவாக வெளியிடப்படுகின்றது. முழு கூட்டுப் பிரார்த்தனை பதிவுகளும் விரைவில் வெளிவரும். 

இந்தப் பதிவில் பேய்விரட்டி மூலிகை பற்றி இடைக்காடர் கூறியது 

ஏற்கனவே நம் குருநாதர் தீய சக்திகளில் இருந்து விடுபடுவதற்கு திருவனந்தபுரம் சத்சசங்கத்தில் பேய் விரட்டியை கொண்டு தூபம் இடும் பொழுது தீய சக்திகள் விலகி ஓடும் என்று சொல்லியிருந்தார் அதை நினைவு படுத்துகின்றோம். 

இந்த காலத்து இளம் தலை முறையினர் குழந்தைகள் அனைவரும் கணினி கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட் போனில்.. மூழ்கி கிடக்கின்றார்கள்... இதில் நமக்கே தெரியாத ஒரு சர்வதேச சூழ்ச்சி நடந்து கொண்டிருக்கின்றது... ஆன்லைன் கேம்... உதாரணத்திற்கு pubg ப்ளூவேல்... மற்றும் பல மனிதர்களின் மூளையை அடிமைப்படுத்தி தவறான எண்ணங்களையும் சிந்தனைகளையும் ஊட்டும்படியான மறைமுக சதி நடந்து கொண்டிருக்கின்றது. 

அனைவருடைய மூளையிலும் இது பதிந்து கொண்டு பக்தி மற்றும் கீழ்படிதல் நல்லதை நினைத்தல் நல்லதை கேட்டல் நல்லதைச் செய்தல் போன்ற உதவி செய்தல் புண்ணியங்கள் செய்தல் இது போன்ற எந்த செயலிலும் ஈடுபடாமல்... முழுக்க முழுக்க சில வலைத்தளங்களிலும் அப்ளிகேஷனிலும் சுய அறிவை தொலைத்து ஒரு பைத்தியம் போல் நடந்து கொண்டு வருகின்றார்கள் இளம் தலைமுறையினர் மற்றும் குழந்தைகள். 

இதிலிருந்து அவர்களை மீட்டுக் கொண்டு வருவதற்கு குருநாதர் அகத்திய பெருமான் நீண்ட நெடிய வாக்குகளை கூறியிருக்கின்றார். 

அவ் வாக்குகள் அதிவிரைவில் வெளிவரும். 

அதற்கு முன்பாக பரிகாரமாக வீட்டில் அனைவரும் பேய் விரட்டி மூலிகையை பயன்படுத்தி தூப புகை காட்டினால் அந்த மூலிகையில் உள்ள சக்தியானது நமது வீட்டில் உள்ளவர்கள் சுவாசிக்கும் பொழுது தீய செல்களை எல்லாம் அழித்து புதிய செல்களை உருவாக்கி இதுபோன்ற அடிமைத்தனத்திலிருந்து நம்மை மீட்டெடுக்கும். 

அதனால் இதை அனைவரும் பயன்படுத்த சொல்லி சொல்லி இருக்கின்றார். 

பேய் விரட்டி மூலிகை சாதாரணமாக அனைத்து மலைப்பகுதிகளிலும் கிடைக்கக்கூடியது. 

குறிப்பாக திருநெல்வேலி பாபநாசம் கல்யாண தீர்த்தம் சதுரகிரி போன்ற மலைகளில் ஏராளம் தாராளமாக கிடைக்கின்றது... நாட்டு மூலிகை மருந்து கடைகளிலும் கிடைக்கும் இதை பறித்து காய வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம் அல்லது வாங்கியும் பயன்படுத்திக் கொள்ளலாம் இதை அனைவரும் செய்ய நன்று. 

இவையே விட்டுவிட்டால் இன்னும் இன்னும் அறிந்தும் எதை என்று அறிய ஆனாலும் பின் ஈசன், அதாவது ஒருங்கிணைந்து அனைவரும் மனதில் நினைத்துக் கொள்ளுங்கள்.!!

புண்ணிய செயலாக ஆகட்டும், அறிந்தும் இவை என்று!!!மானிடா!!

எதை என்று கூற அனைவரும் காப்பாற்று!!!, உலகத்தை காப்பாற்று!!! என்று பின் சிவபுராணத்தை ஓதுங்கள். 

நிச்சயம் அண்ணாமலையிலிருந்து !!

அறிந்தும்!! இதன் புண்ணியத்தை நீங்கள் செய்தால், அப்புண்ணியத்திற்காக யாங்கள், வருகை!! யாங்கள் இறங்கி பின் நிச்சயம் தன்னில் கூட மாற்றுவோம். மூளையை சலவை செய்து!!!

அறிந்தும் இவை என்று அறிய, அனைவர் இல்லத்திலும் அறிந்தும் இவை தன் நிச்சயம் தன்னில் கூட இன்னும் இவ்வாறாகவே விட்டுச் சென்றால்!!!!......

இதனால் மூலிகைகளான அறிந்தும் பின் பேய் விரட்டி மூலிகையை பயன்படுத்துங்கள். இல்லத்தில்!!

(பேய் மிரட்டி பேய் விரட்டி... இரண்டு பெயர்கள் இந்த மூலிகைக்கு இருக்கின்றது இரண்டும் ஒன்றுதான்)

நிச்சயம் அனைவரும் பின் மாறுவார்கள்.

அவை தன் நிச்சயம் பின் தீபமாகவும் அறிந்தும் இவை தன் பின் ஏற்ற எரியவிட!!! அதை தன் வரும் வாசனை நிச்சயம் முகர்ந்தால், நிச்சயம் அனைத்தும் மாறும். புதிய செல்கள்.!!!
(பேய் விரட்டி மூலிகை யை காய்ந்த இலையை சுருட்டி திரி போல் ஏற்றினாலும் சரி அல்லது அதை முடித்து சாம்பிராணி தூபத்தில் வைத்து புகையை ஏற்படுத்தி அதை சுவாசிக்க வேண்டும் !! தீய பழைய!!!!  தீய பழைய செல்கள் அழிந்து மூளையில் புதிய செல்கள் உருவாகும்...)

இதை தன் நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொன்றாக யாங்கள் மாற்றுவோம். நிச்சயம் யாங்களே தேர்ந்தெடுத்து அழைத்து!!!!

இவை தன் இப்பொழுது இன்னும் சிறப்பாக நீங்களும் குழந்தை குழந்தைகளுக்கு அறிந்தும் பின் தலைகீழாக  வேண்டும்!!. 
(சிரசாசனம் செய்ய வேண்டும்)

இவை சுவாசித்தலும் வேண்டும் !!

இன்னும் அறிவுகள் பலப்படும். 

இவை தன் விலக இன்னும் அறிந்தும், இவை தன் உணர!!!

ஆனாலும் இன்னும் மாற்றங்கள். ஒவ்வொரு பின் நட்சத்திரங்கள், இன்னும் பின் கிரகங்கள் எதை என்று அறிய சரியான நேரத்தில், நிச்சயம் தன்னில் கூட பின் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடத்தில்!!

நிச்சயம் அவ் ஒளியானது பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், பின்னரே எதை எடுக்க தெரியாமல் ஓரிடத்தில் கனிவாக படும்.

அதனால் அவரவர் பின் ராசியோ, நட்சத்திரத்திலோ, நிச்சயம் எங்கு படுகின்றது??? என்று யான் சொல்வேன். அங்கு சென்று நின்றாலே போதுமானது.

யோகங்கள், அதிர்ஷ்டங்கள் காத்துக் கொண்டிருக்கின்றது.

இவை தன் சுற்றி வர, சுற்றி வர யோகங்களே!!!

இதை தன் நிச்சயம் தன்னில் கூட!!!

ஒன்றே எவை புரிய அறிந்தும், நிச்சயம் பின் அதாவது தற்பொழுது நிலையில் எடுத்துக் கொள்வோம்.!!!

(ஒரு தீர்வை எடுத்துக் கொள்வோம்!)

 குருவானவனே!!!

(குரு கிரகத்தின் கதிர்வீச்சு)

பரிசுத்தமாக தென்திட்டையிலும்!!, அங்கிருந்து பின் ஆலங்குடியிலும் சமமாக நேர்கோட்டில் விழுகின்றான்.

சரியாகவே இதை தன் பின் வியாழன் அன்று!!(வியாழக்கிழமை) நிச்சயம் தன்னில் கூட!!

சரியாக அதிகாலையிலே!!! பின் ஐந்து ஆறு அறிந்தும், பின் இதற்கிடையே பின் இதை  தன் அங்கே பின் சரியாகவே விழுகின்ற பொழுது, பின் இதில் நீங்கள் பின் விவரமாகவே பின் அதாவது அங்கும் இங்கும் அலைந்தால், வெற்றி நிச்சயம்.!!

இவை தன் பின் ஏற்ற இதற்கும் பின் அறிந்து, இவை தன் கார்த்திகை முழுவதுமே!!!

(கார்த்திகை மாதம் முழுவதும்)

கார்த்திகை மாதத்தில் வருகின்ற வியாழக்கிழமைகளில் காலையில் அதிகாலையில் 5 மணியிலிருந்து 6 மணிக்குள் தென்குடி திட்டை மற்றும் ஆலங்குடி செல்ல வேண்டும்

ஆனால் அனைவரும் ஒரு வருடம் பின் காத்திருக்க வேண்டும்.

(இந்த வாய்ப்பை கார்த்திகை மாதம் பயன்படுத்தாவிட்டால் மீண்டும் ஒரு வருடம் அதற்காக காத்திருக்க வேண்டும்)

இதை தன் பின் ஈர்க்க அறிந்தும், இவைதன் தக்க அறிந்தும், இதன் பின் இதை தன் உணர்ந்து, உணர்ந்து, இவை தன் ருசியாகவும் அறிந்தும், இதை ஈர்க்கிற சக்தி கொண்ட கடலை.!!

கொண்டை. கடலை!!

இதற்கு மஞ்சளிலே அறிந்தும் சரியாகவே!!!

(மஞ்சள் துணியில் கொண்டைக்கடலையை சிறிய மூட்டை போல் கட்டிக்கொண்டு உடன் எடுத்துச் செல்ல வேண்டும்)

(ஆலங்குடியிலும் தென்திட்டையிலும் குரு பகவானுக்கு கொண்டை கடலையிலான மாலையை சாப்பிடலாம். 

கொண்டை கடலை பிரசாதத்தை நாம் உண்ணவும் செய்யலாம்)

இவை தன் பின் சரியாகவே இதை தன் இதன் மஞ்சளை அறிந்தும், மீனாட்சி தாயிடனே எடுத்து!!!! குங்குமத்தையும் கூட!!!!

(மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் அம்மனுக்கு சமர்ப்பணம் செய்யப்படும் மஞ்சள் குங்குமத்தை கொண்டு வெள்ளை துணியில் மஞ்சள் தடவி மஞ்சள் துணியாக்கிக் கொள்ள வேண்டும்)

நிச்சயம் தன்னில் கூட ஒரு மாதம் அறிந்தும் எதை என்று புரிய,!!!

(கார்த்திகை மாதத்தில் வரும் அனைத்து வியாழக்கிழமைகளிலும் கூட)

ஏன்? எதற்கு? எவை என்று புரிய ஆனாலும் சுற்ற நேரம் ஆகிவிடும். அதனாலே நேரங்கள் பின்!!!

இவை தன் அறிவித்து பின் கடை தன்னில் அடித்து, மீண்டும் அறிந்தும், இதை தன் பின் கவனமாக இதை அறிவித்து, இவை தன் படும்படி மீண்டும் இதை தன் பின் பலமாக இட்டு, அங்கு ஒரு அடி பின் அதன் பின் நிச்சயம் அவை தன் எவ்வாறு என்பவை எல்லாம் நிச்சயம் பின் எரிகற்கள் அறிந்தும், இதை தன் பெரிய கல் நிச்சயம் அவைகள் ஓடுகின்ற பொழுது, அதனுள்ளே பின் அண்ணாமலையிலே பின் பதிந்து நிற்கும்!!!.

அவை தன் பின் இந்திரலிங்கத்திலே.

(வியாழன் கிரகத்திலிருந்து வெளிப்படும் ஒளி  கதிர்வீச்சானது கடைசி கார்த்திகை வியாழன் அன்று தென்திட்டை ஆலங்குடி என பயணம் செய்து திரும்பவும் மீண்டும் மேலே சென்று எரி கற்களுடன் எரி நட்சத்திரத்துடன் உடனாகிய பாதையில் மண்டலத்தில் பயணம் செய்து உரசி மோதி திரும்பவும் வந்து பதிந்து நிற்கும் இடம் திருவண்ணாமலை இந்திரலிங்கத்தில்)

இதை தன் அப்படி அப்பொழுது பன்மடங்கு அங்கே பின் ஞானங்கள் பெற, பின் ஏதுவாக இருக்கும். தியானங்கள் செய்ய நன்று.

(திருவண்ணாமலை இந்திரலிங்கத்தில் அமர்ந்து தியானம் செய்தால் ஞானம் பெறலாம் அங்கு தியானம் செய்வது நன்று)


  இவை தன் அங்கு பட்டு, பின் எங்கிருந்தாலும் அறிந்தும், இதை என்று அறிய ஆனாலும், ஞான ரகசியம் இதன் வழியே அறிந்தும், அங்கிருந்து சரியாக இதை தன் புரிய, இதை தன் அனைத்து லிங்கங்களிலும் பட்டு, பட்டு பிரதிபலித்து, பிரதிபலித்து, அங்கு அமர்ந்தாலே சில விடைகள் தீரும்.

(கிரிவலப் பாதையில் அமைந்திருக்கும் அஷ்ட லிங்கங்களிலும் பிரதிபலித்து கதிர்வீச்சுகள் தேங்கி நிற்கும் அங்கு எல்லாம் அமர்ந்து தியானங்கள் செய்ய வேண்டும் இதனால் வினைகள் தீரும்)


  அந்த வினைகள் மாறும் அறிவித்து, அறிவித்து எதை என்று புரிவித்து, இவை தன் குருவால் ஏற்பட்ட சாபங்கள் தீரும்!!

(குருவின் சாபங்கள் நீங்க பெற்று யோகங்கள் கிட்டும்)

இவை அறிவித்து மீண்டும்.. அண்ணாமலை ஓடோடி வந்து அறிந்தும் இவை தன் பின் நிச்சயம் வந்து கொண்டே இருந்தாலே சிறப்புக்கள் மேம்படும்!!


(இடைக்காடர் கூறிய குரு பகவானின் சாப நிவர்த்தி பரிகாரத்தை செய்து விட்டு மீண்டும் வந்து கொண்டு சென்று கொண்டு இருந்தாலே.. சிறப்புக்கள் மேம்படும்)


. இவை தன் உணர நிச்சயம் அவ்வருள் இருந்தால், குழந்தையும் பின்கிட்டும்.
(குழந்தை பாக்கியம்)

  இவை நினைத்தாலே குருவானவனை என்று நினைத்தாலே போதும். பின் நிச்சயம் ஓடிவிடும்.

(இதையெல்லாம் நான் செய்ய வேண்டும் என்று நினைத்தாலே)


.அறிந்தும் இவை தன் யாங்களே உணர்ந்தோம். ஏன்??, எதற்கு?? ஒவ்வொருவரின் பின் நட்சத்திரம், அதாவது அருகில் இருப்பவனே, நீயே சொல். 

அருகில் இருக்கும் அடியவர்!

என் நட்சத்திரம் சதயம்.


சதய நட்சத்திரம். எதை எவை புரிந்து வைத்திருக்கின்றாய்? எதை என்று அறிய ஆனாலும், இது சதயத்தை பின் ஒரு ஒளி தீபமாக எண்ணிக்கொள். அறிந்தும்,!!


 ஆனால் அத்தீபம் பின் எங்கு ஒளி விழுகின்றதோ,?

 அங்கு சென்றால்தான் லாபம். 

இவை தன் ஒவ்வொரு ஒவ்வொரு (நட்சத்திரத்திற்கும்) 

அதாவது அசுவினி, பரணி, கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிஷம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி மற்றும் ரேவதி... இப்படி அனைத்து நட்சத்திரங்களுக்கும் ஒவ்வொரு புனித ஸ்தலங்கள் உள்ளது அங்கெல்லாம் நட்சத்திரங்களின் ஒளிதீபம் கதிர்வீச்சுக்கள் விழுந்து கொண்டே இருக்கின்றது இதை அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து கண்டுபிடித்துள்ளார்கள்)

எதை என்று புரிந்து கொள்ற அறிந்தும், ஏன்? பின் எதற்கு? என்றெல்லாம் ஒவ்வொரு இடத்திலும் பின் அதன் (ஒளிக்கதிர் வீச்சு )பின் பட்டுக்கொண்டே,!!!!

அதாவது இங்கும் அங்கும் பிரதிபலித்துக் கொண்டே, !!!

ஆனால் சரியாக செல்வதில்லை. இவன் தன் நிச்சயம், இவை தன் ஆராய்ச்சியாளருக்கு தெரியும்.

இவை தன் பின் புரிந்து கொண்டு அறிந்தும், இதை தன் நிரூபிக்க அறிந்தும், எதை தன்?? விவரிக்க!!!. நிச்சயம் தன்னில் கூட!!!

இவ்  சதயமானது (சதய நட்சத்திரத்தின் ஒளிக்கதிர் வீச்சு)

அதிக பின் மலைகளிலே படும்.!!!

(உச்சி மலைகளில் விழும்) 

2024 ம் ஆண்டு சித்தன் அருள் 1733 அன்புடன் அகத்தியர் ஹரித்வார் வாக்கில் குருநாதர் ஏற்கனவே கூறியுள்ளார் 

ஏன்? எதற்கு? மலைகள்.... எவை என்று அறிய அறிய அப்பனே காடுகள்... நிச்சயம் அப்பனே இங்கெல்லாம் சென்றால் அப்பனே அதாவது அப்பனே நிச்சயம் மேல்பரப்பு அப்பனே கீழ்பரப்பு... ஆனாலும் அப்பனே மேல் பரப்பிலிருந்து அப்பனே நிச்சயம் பின் கதிர்வீச்சுக்கள் பல பல அப்பனே பின் நிச்சயம் மேலோட்டமாகவே மலையின் மீது படும் என்பேன் அப்பனே

இவ்வாறு அப்பனே மலையின் மீது ஏறும் பொழுதும் காடுகளிலும் எவை என்று அறிய அறிய அவை நிச்சயம் பின் படும்பொழுது அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படுமப்பா!!! உயர்வுகள் ஏற்படும் அப்பா!!! எனவும் இன்னும் இந்த வாக்கில் திருப்பதி மலை 108 முறை ஏறினால் என்ன நடக்கும் என்பதை பற்றியும் குருநாதர் விரிவாக கூறியிருக்கின்றார் அனைவரும் அந்த வாக்கினை மீண்டும் ஒரு முறை படித்தால் நன்றாக புரிந்து கொள்ளலாம்)

இவன் செல்வான் மலை மீது அருள்கள் புண்ணியம் செய்ய செய்ய!!!

(புண்ணியங்கள் செய்து கொண்டே மலை மீது ஏறிக்கொண்டே இருந்தால் ஒளிக்கதிர்வீச்சுக்கள் நமக்கு கிடைக்கும்)

இவை தன் பின் (புண்ணியங்கள் )மீந்து நிற்க அறிந்தும்!!!,

இவ் சதயம் தன்னில் கூட பின் முருகனிடமே!!!!!, முருகனிடமே!!!!!

(சதய நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்வீச்சானது முருகன் குடியிருக்கும் அனைத்து மலைகளிலும் அதிகமாக பிரதிபலிக்கும். அறுபடை வீடுகளில் ஏழாம் படை வீடான மருதமலை ஒன்பதாம் படை வீடான ஓதிமலை என... இன்னும் முருகனின் மலை ஸ்தலங்கள் இருக்கின்றன கிரௌஞ்கிரி கஞ்சமலை சென்னிமலை என இல் அனைத்து மலை முருகனின் மலை தலங்களிலும் சதய நட்சத்திரத்தின் ஒளிக்கதிர்வீச்சு ஆதிக்கம் உள்ளது)

ஆனாலும் இவ் ரகசியம் அண்ணாமலையின் ரகசியம் போக போக தெரிய நிச்சயம்!!!.

(இன்னும் அண்ணாமலையின் ரகசியங்கள் தெரியவரும் போகப்போக)

பின் எதை என்று அறிய அனைவரும் பின் எவ்வாறு என்பதை எல்லாம் விட்டிட்டு அறிந்தும், எதை என்று இறைவன் எப்படி காப்பாற்றுவான்??? என்றெல்லாம் வந்து கொண்டே.!!!!

இதனால் யாங்கள் சொல்வதே இன்னும் எதை என்று அறிய இதை தன் மக்களுக்கு சேர்க்கவே, அவரவர் பிழைத்துக் கொள்ளட்டும். புண்ணியம் செய்து!!!!

நிச்சயம் தன்னில் கூட கல்வி எதை என்று புரிய, அதாவது உயர் கல்வி பெற்று பின் பெரிய (இடத்தில் ) எவை என்று அறிய அழகாக வாழ வேண்டும் என்று அனைவரும் நினைப்பார்கள்!!!.

அதுபோலத்தான் இதுவும் என்று நினைத்துக் கொள்ள நன்று.!!!

இவ்வாறு அவரவர் அறிந்தும் புரிந்தும், இவ்வாறாகவே நிச்சயம் பின் அவ் ஒளியானது பட்டால், பின் நீங்களே எதை என்று அறிய உங்களுக்குள் ஒரு சக்தி இருக்கும். அதை நிச்சயம் அறிந்தும், அதுவும் கூட வெளிச்சமாகும். அப்பொழுது உங்கள் வாழ்க்கை உங்களுக்கே தெரியும். இப்படி சென்றால் நன்று என்று.

(இடைக்காடர் சித்தர் உதாரணத்திற்கு சதய நட்சத்திரத்தைப் பற்றி கூறினார் இதேபோன்று மொத்தம் 27 நட்சத்திரங்களுக்கும் ஒளிக் கதிர்வீச்சு விழும் திருத்தலங்கள் உள்ளன.அவரவர் நட்சத்திரத்தின் திருத்தலங்களை அறிந்து கொண்டு புண்ணியங்களை செய்து கொண்டு இப்படி சென்று கொண்டே இருந்தால் ஒளிக்கதிர்வீச்சு முழுவதும் நம்மால் கிரகித்துக் கொண்டு மேன்மை பெற முடியும்)

இவை என்றும் பின் நிச்சயம் ஆயிரத்தில் ஒருவனே இதற்கும் தகுதியானவன்.

(இந்த பரிகாரத்தை செய்வதற்கும் புண்ணியங்கள் வேண்டும் ஆயிரத்தில் ஒருவரே இதை செய்வதற்கு தகுதியானவர்!!!

இதை செய்வதற்கு தயாராகி விட்டால் உங்களில் யார் வேண்டுமானாலும் அந்த ஆயிரத்தில் ஒருவராக தகுதி பெறலாம்)

இதை தன் நினைக்க, அடுத்தடுத்து அறிந்தும் வாக்கியனும் பின் சொல்வான். அப்பொழுது நீங்கும் சில தீய!!!(வினைகள்)

இதை தன் அறிவிக்க இன்னும் கிரகங்களை அறிந்தும், இவை தன் புரிய மாற்றி அமைக்க வழிகள் தாம் கையில்!!

(இப்படி சித்தர்கள் உரைக்கின்ற அறிவிக்கின்ற வழிமுறைகளை கடைப்பிடித்தால் புரிந்து கொண்டால் நம்முடைய வாழ்க்கை பாதை மாறும் விதியும் மாறும்.. நம்முடைய வாழ்க்கை நம்முடைய கைவசமாகிவிடும்) 

இடைக்காடர் கூறிய பரிகாரங்கள் அவசரப்பதிவு நிறைவு பெற்றது முழு வாக்குகள் பதிவுகளும் சிவவாக்கியரின் வாக்குகள் பதிவுகளும் விரைவில் வெளிவரும்.

ஆலங்குடி குருபகவான் கோயில் மற்றும் தென்திட்டை குரு பகவான் கோயில்.

தென் திட்டை குரு என்பது தஞ்சாவூரில் உள்ள தென்குடித்திட்டை திருத்தலத்தின் குரு பகவானைக் குறிக்கிறது. இது குரு பகவானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சிறப்பு வாய்ந்த கோயில். இங்கு குரு பகவான், இறைவனான வசிஷ்டேஸ்வரருக்கும் இறைவி மங்களாம்பிகைக்கும் நடுவில் நின்ற நிலையில் ராஜ குருவாக அருள்பாலிக்கிறார். இது வேறெந்த தலத்திலும் காண முடியாத தனிச்சிறப்பு. 
அமைவிடம்: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. தஞ்சாவூரில் இருந்து கும்பகோணம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
கோயில்: அருள்மிகு வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்.
இறைவன்: வசிஷ்டேஸ்வரர்.
இறைவி: மங்களாம்பிகை.
குரு பகவானின் சிறப்பு: இங்கு குரு பகவான், இறைவனுக்கும் இறைவிக்கும் இடையே ராஜ குருவாகக் காட்சியளிக்கிறார்.

ஆலங்குடி.

அமைவிடம் : திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம், ஆலங்குடி கிராமத்தில் நவகிரகஸ்தலங்களில் குருபகவானுக்கு பரிகாரஸ்தலமாக இத்திருத்தலம் அமைந்துள்ளது. கும்பகோணம் மன்னார்குடி பேருந்து மார்க்கத்தில் கும்பகோணத்தில் இருந்து தெற்கே 17 கிலோ மீட்டர் தொலைவிலும், நீடாமங்கலம் இரயில் நிலையத்திலிருந்து வடக்கே 7 கிலோ மீட்டர் தொலைவிலும் இத்திருத்தலம் அமைந்துள்ளது. தல வரலாறு : சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 276 தலங்களில் காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 தலங்களில் 98 வது தலமாக இத்தலம் விளங்குகிறது. இத்திருத்தலம் காவிரி நதியின் கிளை நதியான வெட்டாறு கரையிலிருந்து 3 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது.

இந்த இரண்டு ஆலயங்களுக்கும் 42 கிலோமீட்டர் தூரம் உள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. வணக்கம் அகத்தியர் அடியவர்களே கார்த்திகை மாதம் குரு பகவானின் கதிர்வீச்சுகள் வியாழன் தோறும் கார்த்திகை மாதம் முழுவதும் அதிகாலை 5 மணி முதல் 6:00 மணி வரை விழும் அந்த நேரத்தில் தென்கோனகுடி திட்டை மற்றும் ஆலங்குடி குரு பகவான் தரிசனம் செய்ய வேண்டும்

    ReplyDelete
  2. வணக்கம் ஓம் அகஸ்தியர் மாதா லோபமுத்ரா தேவி திருவடிகள் போற்றி, இந்த பதிவை வெளியிட்ட சித்தனருள் வலைத்தள குழுவினருக்கு நன்றி.

    பேய் விரட்டி மூலிகை (Anisomeles malabarica தாவரத்தின் தமிழ்ப் பெயர்கள் பேய் விரட்டி, பெருந்தும்பை, அருவாச்சடச்சி மற்றும் பேய்மிரட்டி ஆகியவை ஆகும். இது ஒரு மருத்துவ மூலிகைச் செடி, மேலும் இதை மலபார் கேட்மின்ட் என்றும் அழைப்பர்.. நன்றி : Wikipedia) இந்த மூலிகையை பயன்படுத்தி இந்த கால மற்றும் வருங்கால தலைமுறை அனைவரையும் நல் வாழ்வு வாழ வழி காட்டும் சித்தர் பெருமக்கள் திருவடிகள் போற்றி

    குருவின் சாபங்கள் நீங்க பெற்று யோகங்கள் கிட்டும் முறையை உரைத்த சித்தர் பெருமக்கள் திருவடிகள் போற்றி

    ReplyDelete