​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 3 November 2025

சித்தன் அருள் - 1977 - அன்புடன் அகத்தியர் - நரசிபுரா வாக்கு!








3/7/2025 ஆடிப்பெருக்கு ஆடி 18 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: அகத்தீஸ்வரர் திருக்கோயில் 
காவேரி கபினி ஸ்வஸ்திகா நதி திருவேணி சங்கமா. திருமகூடலு நரசிபுரா. தலக்காடு, மைசூரு.கர்நாடகா.

ஆதி சிவ சங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்!!!

அப்பனே, அம்மையே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள்!!!

ஏன், எதற்கு? என்றெல்லாம் என்று யான் சொல்கின்றேனென்றால், நிச்சயம் தன்னில் கூட ஆடி பெருக்கு!!!!
 அனைத்தும் எதை என்று புரிய பின் சில கர்மாக்களை நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், சில பாவத்தை நிச்சயம் தன்னில் கூட, அதாவது பல பின் நீர் ஓடைகள், நிச்சயம் தன்னில் கூட பின் யாங்கள் உருவாக்கி உள்ளோம்.


 ஆனாலும், மனிதன் அதை தெரிந்து கொண்டு, உணர்ந்து கொண்டு, அதை பயன்படுத்துவதே இல்லை.!!!


 இதனால், நிச்சயம் தன்னில் கூட, இவ் தன்னில் கூட பல வழிகளில் கூட, பல பல கிரகங்களில் கூட கதிர்வீச்சுக்கள் அதிகமாக இருக்கின்ற பொழுது, நிச்சயம் பின் ஆடி 18. என்றெல்லாம் நிச்சயம் ஏன், எதற்கு? இவ் நாளில் பல பின் கதிர்வீச்சுக்கள் அதிகமாக பின் நீரினில் கூட!!!, 


பின் பலத்த, பின் புண்ணிய நதிகளில் கூட, பின் அனைவரும் அறிந்ததே!!!!
(ஆடி பதினெட்டின் போது நதிகளில் நீராடுதல்)

இவ்வாறாக நீராடினால், நிச்சயம் தன்னில் கூட பாவத்தை, நிச்சயம் பின் அழித்து, புண்ணியத்தை பெருக்கிக் கொள்ளலாம்.

புண்ணிய பெருக்கையே என்றே, இந்நாள், நிச்சயம் தன்னில் கூட,

(ஆடிப்பெருக்கு என்பதன் பொருள் புண்ணிய பெருக்கு)

அதனால்தான் மூழ்கச் சொன்னோம்.(ஆடிப்பெருக்கில் புண்ணிய நதிகளில் மூழ்கி நீராடுவது)  பல வழிகளில் கூட,!!

ஆனால் மனிதன் அவையெல்லாம் பின் மறந்திட்டான். மறந்திட்டு, மறந்திட்டு, சில தீய வழிகளில் கூட சென்று கொண்டே இருக்கின்றான்.!!

எவ்வாறு,? எவ்வாறு? என்பதெல்லாம் யாங்கள் உணர்ந்தோம். கலியுகத்தில் இவ்வாறாக நடக்கும் என்பவை எல்லாம் யாங்கள் அறிந்து தான், நிச்சயம் மீண்டும் பல வழிகளில் கூட, மனிதனுக்கு பின், அதாவது அறிந்தும், புரிந்தும், எவ்வாறு என்று?? புரியவில்லை என்றாலும், நிச்சயம் தன்னில் கூட உள் புகுத்தி, எவ்வாறெல்லாம் மனிதனுக்கு நற்பண்புகள் ஏற்படுத்த வேண்டும் என்பவை எல்லாம் யாங்கள் அறிவோம்.!!

இதனால், நிச்சயம் தன்னில் கூட நல்லறிவுகளை புகுத்தி, எப்படியோ, பின் பாவத்தை தொலைத்து, நிச்சயம் தன்னில் கூட புண்ணியத்தை பெருக்க வேண்டும்.


 இதனால், இவ் மாதமானது (ஆடி மாதம்) பின் பெருக்கி, அதாவது புண்ணிய பெருக்கியே என்றெல்லாம் ஆடி மாதத்தில் சரியான வழியில் கூட, நிச்சயம் தன்னில் கூட பல பாவங்களை அழித்திடலாம்.


 நிச்சயம் இங்குள்ள பல பல பல பின் நவ ஸ்தலங்கள் இருக்கின்றது.

(1 தலைக்காவேரி 
காவேரி நதி உற்பத்தியாகும் இடம்.

2 பாகமண்டலா 
சுஜ்யோதி மற்றும் கன்னிகை ஆறுகள், காவிரியுடன் சந்திக்கும் இடம் இது. பக்தர்கள், தலகாவிரிக்குச் செல்வதற்கு முன் இந்த சங்கமத்தை புனிதமாகக் கருதி இங்கு நீராடுவர்.இங்கு சிவபெருமானுக்கு ஒரு கோவில் உள்ளது. இந்த திரிவேணி சங்கமத்திலிருந்து சற்று தொலைவில் ஸ்ரீ பகண்டேஸ்வரர் கோவில் என்று அழைக்கப்படும் மற்றொரு கோவில் உள்ளது.




3 சோமநாதபுரம் காவிரி ஆற்றங்கரை சென்ன கேசவா திருக்கோயில். 

4 ஸ்ரீரங்கப்பட்டணம் மைசூர் 

5 சாமுண்டீஸ்வரி மைசூர் 
6 ஸ்ரீ கண்டீஸ்வரா நஞ்சன்கோடு மைசூர் 

7 மல்லிகார்ஜுனா கோயில் தலக்காடு 
பாதாளேஸ்வரா  கோயில் தலக்காடு 

8 திரினேஸ்வர சுவாமி கோயில் மைசூர் கோட்டை 

9 வைத்தியநாத ஈஸ்வரர் கோயில் காவேரி புஷ்கரணி 

இன்னும் பல திருத்தலங்கள் காவேரி கபில நதி கரையோரங்களில் பலதும் அமைந்துள்ளது குருநாதர் குறிப்பிடும் ஆலயங்கள் எப்படி தாமிரபரணி நதிக்கரையில் நவதிருப்பதி நவகைலாயங்கள் அமைந்துள்ளதோ அதேபோன்று கர்நாடகத்திலும் அமைந்துள்ளது)


 அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, அதாவது பின் சரியாகவே, பின் அறிந்தும், புரிந்தும் கூட, பல கதிர்வீச்சுக்கள் அங்கங்கே, நிச்சயம் தன்னில் கூட நவகிரகங்களில் கதிர்வீச்சுக்கள் விழுகின்ற பொழுது, அவ்வாறு பின்  நிச்சயம் யானே, அதாவது சித்தர்கள் எழுப்பி (சித்தர்களால் அமைக்கப்பட்ட திருத்தலங்கள்)

 அருள் கூர்ந்து, நிச்சயம் பின் இங்கெல்லாம் நிச்சயம் வந்தாலே, நிச்சயம் சில சில வழிகளில் கூட உபாதைகள், அவ்வாறாக, நிச்சயம் பின் நீங்கி, பின் பல வழிகளில் கூட நன்மைகள் ஏற்படுவது உறுதி.!!


 இதனால்தான் பல வழிகளில் கூட எங்கு எவ் திருத்தலத்திற்கு சென்றால்?, எவ்நாளில் சென்றால்?? நிச்சயம் பின் பரிசுத்தம் ஆகும் என்பவை எல்லாம் யாங்கள் கூறிக்கொண்டே இருக்கின்றோம்.

 ஆனால் மனிதன் அதை உணர்வதே இல்லை. அறிந்தும்!!!


, இங்கு அறிந்தும், எதை என்று புரிய இன்னும் ஏனைய பல வழிகளில் கூட, பின் அரசர்கள் பல வகைகளில் கூட இங்கு வந்தனர்.(ஆட்சி புரிந்தனர்)
 நிச்சயம் தன்னில் கூட,!!!


 அவ்வாறாக, எவ்வாறு என்பதை எல்லாம் பல வகை, பல வகைகள், பல நிபந்தனைகள் இட்டிட்டபோது,!!!!

(அரசகட்டளைகள் அரச நிபந்தனைகள் ஆணைகள் இதன்படி பொதுமக்களுக்கு மரண தண்டனையாக அதாவது இந்த நதியில் தள்ளிவிட்டு நிறைவேற்றும் படியான தண்டனைகளும் இங்கு நடந்து வந்தது . இந்த இடத்தில் வந்து செயல்படுத்த முனைந்தனர் தண்டனை சிறைச்சாலைகளும் இங்கு இருந்தது)




இதை அறிந்து கணபதி நல்லோர்கள் வாழ வேண்டும் என்பதற்காக கைலாய மலையில் இருந்து ஈசனால் பார்வதி தேவியால் இங்கு அனுப்பி வைக்கப்பட்டார்)



 இச் சமுதாயத்தில் என்னவென்றே தெரியாமல், நிச்சயம் தன்னில் கூட, பின் அனைத்தும் அறிந்து, அரசர்களும் இங்கு கொண்டு வந்து, பின் இவ் நதியில் அறிந்தும், அதாவது எதை என்று புரியாமல் கூட, மக்களை  இட்டிட்டு, பின் அதாவது கொல்ல முயற்சித்தனர்.


(மூன்று ஆறுகளின் நடுவில் தீவு போல் இருக்கும் இந்த இடம்)



 ஆனாலும், இவை என்று அறிய, நிச்சயம் இவ்வாறாகவே அறிந்தும், நிச்சயம் இவ்வாறாகவே, நிச்சயம் எவ்வாறு, எதை என்று புரிய, கைலாய மலையிலிருந்து, பின் இங்கு வந்து, நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது, பின் பிள்ளையோன், நிச்சயம், அதாவது, நல்லோர்கள் இருக்கின்றார்கள். இதனால் அறிந்தும்,!!


 ஆனாலும், இவைதன் பின் இப்படியே விட்டுவிட்டால், நிச்சயம் பின், அதாவது, பின் காலங்கள் காலங்களாக வருகின்ற பொழுது, நிச்சயம் மனிதன், பின் அழிவை சந்திப்பான்.!!!

 அதாவது, மனிதன் பல பல வழிகளில் கூட, பின் செத்தும் மடிவான் என்பதற்கு இணங்க, நிச்சயம் தன்னில் கூட, இவைதன் அழகாகவே, பின் ஈசனும் பார்வதி தேவியும் கைலாய மலையிலிருந்து,  நிச்சயம் தன்னில் கூட, பிள்ளையோனை, பின் அனுப்புகின்ற பொழுது, இங்கு வந்தான். நிச்சயம் தன்னில் கூட,


 ஆனாலும், இங்கு வருகின்ற பொழுது, நிச்சயம் பல வழிகளில் கூட, அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய, பின் யாங்கள் தவத்தை செய்து கொண்டிருந்தோம்.
(சித்தர்கள் இங்கு தவம் புரிந்து வந்தார்கள்)


 ஆனாலும், நிச்சயம் பிள்ளையோன், நிச்சயம் என்னை ஒன்றாகவே (ஒற்றையாளாக,) நிச்சயம், அதாவது, பின் யான் மட்டும் தனியாக போக வேண்டுமா??? என்று,



 நிச்சயம், பின் பிள்ளையோனும், நிச்சயம், தன்னில் அறிந்தும் கூட, எவை என்று புரியாமல் கூட, அப்பனே அறிந்தும், தனதுள்ளம், பின் புரிந்தும் கூட,!!!

 நிச்சயம், தாயே!!!, பின் தந்தைக்கு நீ சொல்லும்!!!
 என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், பிள்ளையோனும் கூட!!

நிச்சயம், பின் யார்??


அதாவது, யான் ஒன்றாகத்தான் போகவேண்டுமா ???
(ஒற்றை ஆளாகத்தான் போக வேண்டுமா)

என்ற, பின் போகட்டுமா?? என்று, ஞான கணபதியும் கூட!!!!!


இதனால், நிச்சயம், அதாவது, ஈசனாரும், நிச்சயம், அங்கு அகத்தியன் இருப்பான், உந்தனுக்கு பல வழிகளில் உதவி செய்வான் என்று, நிச்சயம்!!!, 


இதனால், அழிவுகள் பலம் என்பதை எல்லாம் யான் இங்கே, நிச்சயம், இப்பொழுது பின் அறிந்தும், பின் அழகாகவே, அங்கு நடு பகுதியில் கூட, தவங்கள் பல செய்திருந்தேன்.

(நட்டாற்றீஸ்வரர் போல இந்த மூன்று நதிகள் சங்கமத்தில் நடுவில் தீவு போன்று இருக்கும் ஆலயத்தில் குருநாதர் தவம் புரிந்து வந்தார் இங்கு அழிவுகள் வரும் என்பதை முன்கூட்டியே அறிந்து கொண்டு அறிவிலிருந்து காப்பாற்றுவதற்கு குருநாதர் இந்த இடத்தில் தவம் இயற்றிக் கொண்டிருந்தார்)


 இதனால், நிச்சயம், பின், அதாவது, பின், ஞானப்பிள்ளையோன் ஓடோடி வந்து, நிச்சயம், அதாவது, என் தலை மேலே குதித்து, குதித்து!!!!, 


ஆனாலும், நிச்சயம், என் தவக்கோலத்தை,......

(கணபதி குருநாதரின் தவத்தை கலைப்பதற்கு முயற்சிகள்)


 (தவத்தை விட வில்லை) யான், நிச்சயம், தன்னில் கூட, மேல் யார்???, எதை என்று அறிய, பின், யான், இன்னும் கூட, அறிந்தும், கண்ணை திறக்கவில்லை.



 இவ்வாறாகவே, மனித குலத்தை, நிச்சயம், தன்னில், பின், அறிந்தும், புரிந்தும், இவ்வாறாகவே, பல வழிகளில் கூட, பின், இவ்வாறாக, அரசர்களையும் காக்க வேண்டும். வருகின்ற காலத்தில், மனிதனும் காக்க வேண்டும் என்பதற்கிணங்க, இதுவும், ஈசன், திருவிளையாடலே, அப்பனே!!!!, 


நன் முறைகளாகவே, நன்முறைகளாகவே, இவ்வாறாகவே, பின், தவக்கோலத்தில், ஆனாலும், நிச்சயம், புரிந்து கொண்டான்!!!
பிள்ளையோன்!!

அகத்தியன், பின், இவன்தான் என்று!!


 நிச்சயம், பின், ஞானம், பின், பிள்ளையோனும், கூட!!!!


இவ்வாறாக, நிச்சயம், பின், இவ்வாறாகவே, எப்படி?, ஏது? என்று, அறிந்தும், கூட, மீண்டும், பின், பலமாக, அறிந்தும், எவ்வாறாக, பின், நதியை பெருக்கெடுத்து, நிச்சயம், ஓடச் செய்தான், பின், பிள்ளையோன்!!!


 இருப்பினும், நிச்சயம் என்னை மூழ்கடித்துச் சென்றது.நீர் காவேரி, தன்னில் கூட,!!!


 அறிந்தும், கூட, பின், அதாவது, மூன்று கண்களோடே, நிச்சயம், தன்னில், அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய, அதாவது, ஈசனும், பின், பார்த்துக் கொண்டே இருந்தான். நிச்சயம், மீண்டும்!!!,


 ஆனாலும், பின், எப்படியாவது வருவானா?? என்று,...

(அதாவது கணபதி எப்படியாவது அகத்தியர் தவத்தில் இருந்து எழுந்து வருவாரா என்று)

 மீண்டும்,நீரை பெருக்கெடுக்க வைத்தான். 

இப்படி நீர் பெருக்கெடுத்து, பின், அறிந்தும், புரிந்தும், கூட, பின், ஞானப்பிள்ளையோன், நிச்சயம், தன்னில் கூட,



 பின் நீர், இவ்வாறாகவே, பின், அதிகமாகின்ற பொழுதும், ஒன்றும் அசையவில்லையே என்று!!, 

(கடுமையான வெள்ளத்திற்கும் அகத்தியர் அசைந்து கொடுக்கவில்லை என்று மீண்டும் கைலாயம்)

மீண்டும், சென்றிட்டான். பின், கைலாயத்திற்கு, பின், பிள்ளையோன்!!!!,


(காவிரி நதியில் நீரை அதிகமாக பெருக்கெடுக்க செய்து குருநாதர் அகத்தியர் பெருமானை உசுப்பி விட முயற்சி செய்து குருநாதர் அசைந்து கொடுக்காமல் இருக்க இதனால் மீண்டும் கைலாயத்திற்கு சென்று விட்டார் கணபதி)

அப்பனே இவ்வாறாகவே, கணபதி கைலாயம் சென்று நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பின், தந்தையே!!!, தாயே!!!
என்னை நீங்கள் அனுப்பினீர்!!!,


 ஆனாலும், அகத்தியன், பின், அறிந்தும், இவ்வாறாகவே, நிச்சயம், தவத்தை!!! ஏதோ, அவன் எதை என்று புரியாமல் செய்து கொண்டிருக்கின்றான்.


 எவ்வளவு தண்ணீர் அனுப்பியும், அகத்தியனை நிச்சயம், ஒரு அசைவு  கூட அசைக்க முடியவில்லை என்று,!!!


ஈசனார்:

 நிச்சயம், ஆனாலும், பின், யான் ஒரு உபாயம் சொல்கின்றேன்.!!!


 நிச்சயம், அவன் எதை என்று புரிய, நிச்சயம், தாய் தந்தையர், பின், அழைத்தார்கள் என்றே, நிச்சயம், பின், ஒரு வார்த்தை அகத்தியனிடம் கூறு,!!! நிச்சயம், கண் முழிப்பான் என்று!!!!,



 பின், இங்கு மீண்டும் ஓடோடி வந்தான். பின், ஞான பிள்ளையும் கூட!!!, 


இதனால், அறிந்தும், புரிந்தும், கூட, பின்,....


 அகத்தியா!!!! உன்னை தாய் தந்தையர் உன்னை அழைக்கின்றார் என்றான். நிச்சயம், தன்னில் கூட,


 அறிந்தும், பின், யான் கண்ணை விழித்தேன். எவ்வாறு என்பதையும் கூட,!!!


 ஆனாலும், புரிந்தும், கூட, எதை என்று கூட,!!!


கணபதி:

 ஆனாலும், பின், அகத்தியனே!!!!, எவ்வாறாக எல்லாம், பின், உன்னை, தந்தையும், தாயும் சரியாக பயன்படுத்தி, புரிந்து வைத்திருக்கின்றார்கள்!!


இதனால், எதை, எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாகவே, ஆனாலும், யானும் புரிந்து கொண்டேன்.


 அழிவுகள், பின், வந்து கொண்டே இருக்கின்றது. பல அரசர்களும் மாளப் போகின்றார்கள்!!(அரசர்கள் இறக்கப் போகின்றார்கள்) என்பதற்கிணங்க, இங்கு, பின், நிச்சயம், தன்னில் கூட,!!!

 ஒவ்வொரு பிடியாகவே, நிச்சயம், அதாவது, ஒவ்வொரு, பின், துகள்களாகவே இருந்து, மண்ணை சரியாகவே, பின், கையில் எடுத்து, எடுத்து, நிச்சயம், தன்னில் கூட, காக்க வேண்டும் என்றெல்லாம், அடியிலிருந்து, பன்மடங்கு, பின், அதாவது, பல கோடி, பின், நிச்சயம், பின், அடியிலிருந்து, எடுத்து, எடுத்து, நிச்சயம், என் தந்தை பெயரைச் சொல்லியும், தாயை பெயரைச் சொல்லியும் சென்று, அடிக்கிக் கொண்டு வந்திருக்கின்றாயே. நிச்சயம், நீர், பின், அறிவுள்ளீர்.!!!

(காவிரி வெள்ளத்தால் அழிவுகள் வராமல் இருக்க அடியிலிருந்து மண்ணை எடுத்து வந்து கரையை உயர்த்தி உயர்த்தி குருநாதர் மேடாக ஆக்க செய்தார்)



 இதை தன் கூட என்றெல்லாம், நிச்சயம், பின், அதாவது, ஞானப்பிள்ளையோனும் கூட, என்னிடத்தில் கூட,!!!! அறிந்தும், புரிந்தும் கூட. !!!


இதனால், நிச்சயம், பின், யானும், நிச்சயம், இன்னும் என் தவத்தில் மூழ்க வேண்டும்.!!!

 பிள்ளையோனே!!! 
உந்தனுக்கு 
 என்ன வேண்டும்??? என்று கூற, !!!அறிந்தும்!!


 ஆனாலும், இங்கு எதை என்று புரிய!! அழிவுகள் வரப்போகின்றது என்று, பின், அதாவது, தந்தையும், தாயும் கூறினார்கள்!!.


 அதனால்தான் இங்கு வந்தேன்!!. 

ஆனாலும், எப்படி ?ஏது? செய்ய என்றெல்லாம், நிச்சயம், பின், எவ்வாறாகவே, நிச்சயம், எதை என்றும் அறிந்தும் கூட....


 இதனால், பின், எவ்வாறாகவே, ஆனாலும், நல்ல அரசர்கள் இங்கு, அதாவது, இவ் நதியில் கூட, பின், அதாவது,மக்களை தள்ளிவிட்டு, பின், வேடிக்கை தான் பார்க்கப் போகின்றார்கள் என்றெல்லாம் பல பல வழிகள் கூட.


 அப்பொழுதெல்லாம் எவ்வாறாக? நடந்தது என்பவை எல்லாம் வரும் வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது தெரியுமப்பா!! நிச்சயம், தன்னில் கூட!!!


 இன்னும் திருத்தலங்கள் அருகில் அருகில் இருக்கின்றதப்பா!!, ஏன்? எதற்கு? என்று ஒவ்வொரு திருத்தலத்திற்கும் கூட அப்பனே!!! ஒவ்வொரு சிறப்பு உள்ளதப்பா!!, அறிந்தும், புரிந்தும்!!


 இதனால், நிச்சயம், அப்பனே அறிந்தும் கூட. இதனால், கணபதியும், அதாவது, சரியாகவே, பின், அகத்தியனே!!!! நீங்கள் என்னதான் செய்யப் போகின்றீர்கள்???? என்று,!!!

 நிச்சயம், பின், கணபதி கேட்க!!!

. நிச்சயம், பின், அறிந்தும் கூட. அதனால், அனைத்திற்கும் காரணம், நிச்சயம், தன்னில் கூட,  தாயால் முடியும் என்றெல்லாம்!!. நிச்சயம், தன்னில் கூட,!!

இவ் தேசத்தை தாயால் மட்டுமே, பின், காக்க முடியும் என்றெல்லாம். நிச்சயம், தன்னில் கூட !!

பிள்ளையோனும்
மீண்டும் சரி!!. அகத்தியனே!!!, நிச்சயம், கைலாய செல்வோம் நீயும் வா!!  என்றெல்லாம்.!!!
 நிச்சயம், பின், அதாவது, அகத்தியனும் கூட!!


 யான் அங்கு வரப்போவதில்லை. இன்னும், அதாவது, சில நாட்களிலே, நிச்சயம், இவ்வாறு அரசர்கள் எல்லாம் மாண்டு விடபோகின்றார்கள். எப்படி ஏது என்றெல்லாம்,!!!


பிள்ளோயோனும்
 நிச்சயம், அகத்தியனே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, நீங்கள் நினைத்தால், நிச்சயம், பின், அதிவிரைவிலே கைலாயம் சென்று மீண்டும், பின், அதாவது, திரும்ப வருவோம் என்று!!!


 பின், உடனடியாக அங்கு யானும் சென்றேன். !!

ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாகவே!!!, ஆனாலும், தக்க சமயத்தில், நிச்சயம், பின், ஐயனும், பின், அதாவது, அன்னையும் கைலாயத்தில் அமர்ந்திருக்க.!!!

 தாயே!!!, நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, பெருக்கெடுத்து, நிச்சயம், பல வழிகளில் கூட, அறிந்தும் கூட, எதை என்று கூட, பல புண்ணியங்களை, பின், அதாவது, அறிந்து கூட, ஏற்று, நிச்சயம், தன்னில் கூட, பாவத்தை ஒழிக்கக்கூடிய, பின், கங்கை நதியினை கூட, எதை என்று புரிய, பின், அங்கு வந்து, அதாவது, நீ அமைத்தால், நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும், அனைத்து பாவங்களும் ஓடும். அரசர்களும் பிழைத்துக் கொள்வார்கள். நிச்சயம், தன்னில் கூட!!!


 வரும் காலங்கள், அதாவது, பல வழிகளில் கூட, இவ்தேசம் அழியப்போகின்றது என்பதற்கிணங்க, நிச்சயம், பல மக்கள் நன்றாகவே வாழ்வார்கள். எப்பொழுதும்   செழிப்பும் நிறைந்திருக்கும்!!!


பின், நிச்சயம், தாயே, பின், நிச்சயம், நீயே வா என்று.!!!


 ஆனாலும், பின், அதற்கு ஈசன், நிச்சயம், அகத்தியனே!!!, பின், அறிந்திருக்கின்றாய். பின், அதாவது, அனைத்தும் முடிவோடு தான் நீ வந்திருப்பாய். அதாவது, முன்னே அறிந்தேன் யான். அதாவது, அறிந்தும், ஏதோ ஒரு காரணத்துக்காகத்தான் அகத்தியன் வந்திருக்கின்றான் என்பதை யான் அறிந்துவிட்டேன்.!!!


 இதனால், தாயை, பின், அழைத்துச் செல்!! என்பதற்கிணங்க, நிச்சயம், தன்னில் கூட, பின், தாயும் அறிந்தும், பின், அதாவது, பிள்ளையோனும் இங்கு வந்து சரியாகவே அறிந்தும்!!!

 ஆனாலும், யான் விடவில்லை,!!!

 தாயே!!!, பின், அதாவது, பின், யான், பின், தவத்தை மேற்கொண்டேன். நிச்சயம், தன்னில் கூட,!!

 நீங்கள் தான், பின், அதாவது, ஞானப்பிள்ளையோனை, பின், அனுப்பி, பின், அறிந்தும், புரிந்தும், எதை என்றும் தெரியாமல், நீங்கள் தான் தாய் தந்தை அழைக்கின்றார்கள் என்றெல்லாம் சொல்லிக் கொடுத்தீர்கள்.


 ஆனாலும், இவையும் நல்லதற்கே!!! யானும் கண் விழித்தேன்.!!!


 அதனால், நீங்கள் எப்பொழுதும் இங்கே, நிச்சயம், தன்னில் கூட இருங்கள். அதாவது, கங்கையாகவே, நிச்சயம், தன்னில் கூட வருவோருக்கெல்லாம், நிச்சயம், தன்னில் கூட பரிபூரணமாக அறிந்தும்.!!!


 ஆனாலும், பார்வதி தேவியும், நிச்சயம், தன்னில் கூட, அகத்தியனே!!!, நிச்சயம், அதாவது, தந்தை இல்லாமல், நிச்சயம், யான் எதை என்று புரிய. அதனால், தந்தையும்,வர வேண்டும் என்று!!!


பின், யான், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, மீண்டும் சென்றேன் கைலாயத்திற்கு. பின் தந்தையே நீங்களும், வாருங்கள் என்று!, நிச்சயம்.!!


 ஆனாலும்,   யான் அழகாகவே என் தவத்தை மேற்கொண்டிருந்தேன். ஆனாலும், பின், நீங்கள் தான் சொல்லிக் கொடுத்தீர்கள். பின், பிள்ளையோனுக்கு!!!!, நிச்சயம், தன்னில் கூட!, தாய் தந்தை அழைக்கின்றார்கள் என்று
 , பின், யான் கண்முழித்துவிட்டேன். பாசத்துக்காக!! வாருங்கள் என்று!!


 ஈசனும், இங்கு வந்து, பின், அறிந்தும், புரிந்தும் கூட, பின், இருவரும் இணையுங்கள். பின், இணைகின்ற பொழுது, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், பின், அழகாகவே, பக்கத்தில், பக்கத்தில், நிச்சயம், தன்னில் கூட, !!!


எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின், இணைந்து, ஆசீர்வாதம் கொடுங்கள். இவ்வதேசத்திற்கு என்று என்பதற்கிணங்க, நிச்சயம், கைலாய காட்சியினை பல வழிகளில் கூட, அரசர்களுக்கு, நிச்சயம், தன்னில் கூட,!!!

அன்றைய தினத்தில், நிச்சயம், பல வழிகளில் கூட, பலத்த மழை காற்று, இவையெல்லாம், பின், நிச்சயம், தன்னில் கூட, பின், செய்து, நிச்சயம், அவரவர் வழியில் கூட, அதாவது, சிறை பிடித்திருந்தார்களே, பல மனிதர்கள், நிச்சயம், பல பல அரசர்கள் என்றெல்லாம், நிச்சயம், இவைதன், அவ்வாறாகவே, நிச்சயம், தன்னில் கூட, பன்மடங்கு காற்றுகள் பல வீசி, நிச்சயம், அனைவரும் ஓடிச் சென்றனர். தப்பித்துக் கொண்டனர்.!!!

ஆனாலும், பின், அறிந்தும், பின், அகத்தியனே!!!, பின், வந்த வேலை!! முற்றிற்று!!!!
(இங்கு வந்த வேலை முடிந்து விட்டது என்று ஈசனார்)


பின் மீண்டும் கைலாயம் செல்வோம் என்றெல்லாம்,!!!



 நிச்சயம், பின், யானும் விடவில்லை, நிச்சயம், தந்தையே!!, தாயே!!, நிச்சயம், இங்கே, பின், நிச்சயம், தன்னில் கூட, பின், கங்கையை உருவாக்குங்கள், நிச்சயம், என்றெல்லாம்!!!


, அதாவது, பின் அதாவது, சர்வசாதாரணமாகவே எவை என்று அறிய, நிச்சயம், சூலத்தை, பின், அம்பாள்,!!!!!


 நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட, நிச்சயம், (திரி) சூலத்தால் ஒரு குத்து, பின், குத்தினாள்!!!!, நிச்சயம்!


அதாவது, கீழிருந்து, தண்ணீர் குபு குபு என்று வந்தது, நிச்சயம், தன்னில் கூட,!!!

 அவை தன் இக் காவேரியில், நிச்சயம், பின் கலந்தது, நிச்சயம், தன்னில் கூட,!!!


 இவ்வாறாகவே, பின், இவ்  மாதம், அது நடந்தது, நிச்சயம், தன்னில் கூட!!

(அம்பாள் திரிசூலத்தால் குத்தி கங்கை நதியை காவிரியோடு கலக்க செய்த சம்பவம் ஆடி மாதத்தில் நடந்தது)


 இதனால்தான், பின், பெருக்கி என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, இங்கிருந்தே, பின், இவை தன் உருவானது என்பேன்!
(ஆடி பெருக்கி புண்ணியம் பெருக்கி.. என்பதன் மகத்துவம் இங்கிருந்தே உருவானது)



இதனால், நிச்சயம், பின், பல மனிதர்களின் கூட, நிச்சயம், தன்னில் கூட, ஆயுள் தனை பெருக்கியும், நோய்களையும் நீக்கியும், இன்னும், பின், வந்து கொண்டே இருக்கின்றது. இந்நதியானது!!, நிச்சயம், தன்னில் கூட!!! உருவாக்கி, எதை என்று புரிய, இதிலும் கலந்து, பல வழியில் கூட,!!!



 அவை மட்டுமில்லாமல், பிரம்மா, விஷ்ணு, எதை என்று புரிய, பின், அவர்களையும் கூட, எதை என்று புரிய, பின், அதாவது, ஈசன், பின், இங்கு வந்துவிட்டான் அல்லவா!!!,


 அகத்தியன், ஏதோ,? நிச்சயம், பின், சூட்சுமாகவே தான் அறிந்திருப்பான். அவர்களும் வந்தார்கள், நிச்சயம், தன்னில் கூட, யாங்களும், நிச்சயம், தன்னில் கூட, பின், நதிகளை, பின், அறிந்தும், புரிந்து, இங்கே இருப்போம் என்றெல்லாம்.!!!



 இதனால்தான், சரி, சமமாகவே, பின், வருவோருக்கெல்லாம், ஆசிகள், நிச்சயம், தன்னில் கூட கொடுங்கள் என்பதற்கு இணங்க, பிரம்மா, விஷ்ணு, எவை என்று புரிய, பின், அறிந்து கூட, மறைமுகமாக இருந்தே, இவ்வ நதியில் கூட, செயல்பட்டுக் கொண்டே இருக்கின்றார்கள்.!!!


 இதனால், நிச்சயம், பாவம் தொலைந்து, பல புண்ணியங்களையும் கூட, பின், இவ் நதியானது, பெருக்கிக் கொண்டே, பெருக்கிக் கொண்டே, நிச்சயம், தன்னில் கூட, !!!



இன்னும், இவ் நதியானது, எவ்வாறாகவெல்லாம் பேர் பெற்றது?, எவ்வாறெல்லாம் யான் உருவாக்கினேன்??, பல தவம், நிச்சயம், தன்னில் கூட, ஞானியர்களும் கூட, பல பல, நிச்சயம், தன்னில் கூட, இராவணன்!!!, எவை என்று, இன்னும், இன்னும், எதை என்று புரிய, இராவணனும், இன்னும், பின், பல வழியில், கிருஷ்ணனும் கூட, ஏன்,? எதற்கு? இங்கு வந்தார்கள்???, எவை என்று கூட, இன்னும், ஞானிகள் எல்லாம் எங்கும், பின், இன்னும், அறிந்தும், கூட, எதை என்று புரியாமல் இருந்தாலும், அவையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைப்பேன்.!!!



 இவ் தேசத்தில் பல வழிகளில் கூட, பல புண்ணிய நதிகளில், ஓரங்களில் கூட, யான் திருத்தலத்தை, நிச்சயம், தன்னில் கூட, பின், பல பல வழிகளில் கூட, பின், ரிஷிமார்கள் உதவியோடு, நிச்சயம், எவ்வாறெல்லாம், ஈசனை இங்கு அமைத்தால், வருங்காலங்கள் செழிப்படையும் என்பதற்கிணங்கவே, நிச்சயம், எவ்வாறு இங்கு, பின், அறிந்தும், இவ்வாறு உருவாக்கினால், இவை தன் பல இடங்களுக்கு சென்று, பல வழியில் மக்களை காக்கும், பல நோய்களை போக்கும் என்பதை எல்லாம்!!!,



 இன்னும் பல வழிகளில் கூட, இவ் நதியானது பாய்ந்து கொண்டே இருக்கையில், பல மூலிகைகள், நிச்சயம், தன்னில்கூட இருக்கிறது. !!!

அவைதன் கூட, நிச்சயம், தன்னில், சம அளவு, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின், அவ்வாறாகவே, பின், அதில் கூட நீந்தி, நிச்சயம், பல, பின், தூய்மையாக, பின், சுத்தி செய்து, பல வழிகளில் கூட,!! இவ் நதியில் கூட, அறிந்தும், புரிந்தும்,!!!


 இவ்வாறாகவே, அவை மட்டுமில்லாமல். பிரம்மாவும் விதியினை மாற்ற, நிச்சயம், தன்னில் கூட, மறைமுகமாக, நதியை, நிச்சயம், தன்னில் கூட, பின், அடியோடு எழுப்பி, இதனால், பல வழிகளிலும் கூட, நிச்சயம், தன்னில் ஆனாலும், பல வழிகள், மனிதர்கள், பின், நிச்சயம், தன்னில் கூட, பின், அதாவது, விதியை, பின், மாற்ற எண்ணினார்களென்றால்தான், நிச்சயம், வர முடியும், அருள்கள் பெற முடியும்.!!!

 இதற்கும் பல புண்ணியங்கள் பெற்று, இன்னும் பல ஞான உபதேசங்கள் எல்லாம், பின், நிச்சயம், இக்கரையோரங்களில் தங்கி இருக்கின்றது. நிச்சயம், தன்னில் கூட, அப்பனே!!!,

பல வழிகளில் கூட, இங்கே பல திருத்தலங்கள் எப்படி எல்லாம்??, நிச்சயம், பின், அருள்கள் கூர்ந்து, பின், அம்மையும், நிச்சயம், பின், தந்தையும் கூட, பின், மக்களுக்கு, பின், அறிவை பலமாக்கி, நிச்சயம், பல வழிகளில் கூட, நிச்சயம், யோகத்தை, பின், கொடுத்துக் கொண்டே இருக்கின்றார்கள் என்பதை எல்லாம் வரும் வரும் காலத்தில் எடுத்துரைக்கும் பொழுது புரியுமப்பா!!, நிச்சயம், தன்னில் கூட!!, 


இதனால்தான், அப்பனே அனைத்தும் புரிந்து கொண்டு தெளிவு பெற்றால்தான் வெற்றியும் கிடைக்கும். நிச்சயம், தன்னில் கூட!!! வருத்தங்களும் போகும்!!!


 இல்லையென்றால், அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், அப்படியே வந்தோமே, அதாவது எப்படி வந்தோமோ!?!?!?!?!, அப்பனே அப்படியே சென்றாக வேண்டியது தான்.

மீண்டும், அப்பனே பின், மீண்டும், மீண்டும் பிறவி வந்து வந்து, அப்பனே, பின், என்ன லாபம்,?????


 அப்பனே ஒன்றும் இல்லாமல், அப்பனே கஷ்டத்தை மட்டும் சுமந்து கொண்டு, அப்பனே, நிச்சயம் போக வேண்டியதுதான்!!!.


 அதனால்தான், அப்பனே, நிச்சயம் நம்பி விட்டார்கள். அகத்தியனை!!! என்றெல்லாம், அப்பனே நிச்சயம், அதாவது, அகத்தியன்!!, அகத்தியன்!! என்றெல்லாம் ஓடி வந்து, அப்பனே, நிச்சயம் சேய்கள்!
 அப்பனே பின், அறிந்தும், அப்பனே என்னிடத்தில்!!!


 இதனால், அப்பனே நல்வழியை யான் காண்பிக்க வேண்டும். அப்பனே!!!


, அதனால், அப்பனே பின், அதாவது, நல்வழியை உங்களுக்கு காண்பித்து விட்டால், அவை தன் பிடித்துக் கொண்டால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட வெற்றிகள் பெறுவீர்கள். அப்பனே!!, நோய் நொடி இல்லாமல் வாழ்வீர்கள். இன்னும் பல மூலிகைகளும் இங்குதான் அடைந்து, பின், நிச்சயம், தன்னில் கூட மறைமுகமாக இருக்கின்றது.!!!


 அவையும் கூட வரும் வரும் காலத்தில், அப்பனே யான் எடுத்துரைக்கும் பொழுது தெரியுமப்பா!!


குறைகள் வேண்டாம். அப்பனே !!

இன்னும் எதை என்று புரிய. பின், இவ்வாறாகவே, நிச்சயம், தன்னில் கூட அறிந்தும் கூட!!!


ஈசனும் பார்வதி தேவியும் 

பின், அகத்தியனே!!!, பின், அதாவது, பிள்ளையோனை, பின், அனுப்பினேனே. நிச்சயம், தாய், அதாவது, தந்தை என்று அகத்தியனிடம் சொன்னாலே, நிச்சயம், கண் விழித்துக் கொள்வான் என்று!!!


. நிச்சயம், அவ்வாறு, நிச்சயம், தன்னில் விழித்துக் கொண்டாயே.!!!! அவ் பாசத்திற்கு, யாங்கள்!!!, நிச்சயம், பின், 


""" காசி தன்னில்!!!, விசாலாட்சி ஆகவும்!!

மதுரை தன்னில்!!! , பின், மீனாட்சி ஆகவும். 


பின், அதாவது,

 காஞ்சி!!!
 தன்னில், பின், அதாவது, காமாட்சி ஆகவும் இருக்கின்ற!!!. 

நிச்சயம் தன்னில் கூட 

 இவ் மூன்றும் எதை என்று யானே இங்கு யான்,!!! நிச்சயம் நிற்பேன்.

(விசாலாட்சி மீனாட்சி காமாட்சியாக முப்பெரும் தேவிகளின் சொரூபமாக இங்கு பார்வதி தேவியார் எப்படி மூன்று நதிகள் அதாவது கபிலா காவேரி ஸ்வஸ்திகா மூன்று நதிகள் பிரம்மா சிவன் விஷ்ணு போல தேவியும் விசாலாட்சி மீனாட்சி காமாட்சியாக)


 பின், உனக்காகவே!!!
(குருநாதர் அகத்தியர் பெருமானுக்காக)


பின் வருவோருக்கெல்லாம், நிச்சயம், தன்னில் அருள்கள் கொடுத்துக்கொண்டே இருப்பேன். !!

இந்நதியில் நீராடி, நிச்சயம், தன்னில் கூட, இங்கு, பின், சில திருத்தலங்களில், பின், வலம் வந்தால், அவர்கள் பாவம் தொலையும்!!!


 இன்னும் புண்ணியங்கள் பெருகும் !!!

என்னென்ன என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட அறிந்தும், புரிந்தும் என்றெல்லாம், நிச்சயம், தேவியும் கூட. அப்பனே !!!



இதனால் பல வழிகளில் ஞானங்கள். அப்பனே இன்னும், அப்பனே திருத்தலங்கள் பல பல எப்படி? ஏது.? என்று!!

 அத்திருத்தலத்துக்கு  எத்தனை முறை? அப்பனே பின் எவ் நேரங்கள் அப்பனே சரியாகவே எத்தனை மணி?  அப்பனே  நிச்சயம் தன்னில் கூட பின் தவங்கள் அதாவது தியானங்கள் செய்து கொண்டே இருந்தால் அப்பனே உங்கள் மீது பல வழிகளில் கூட பின் இறை அருள்கள் அப்பனே அதாவது கதிர்கள் (இறை கதிர்வீச்சுக்கள்)

 அப்பனே பின் விழும்!! என்பதை எல்லாம் வரும் வரும் காலத்தில் யான் எடுத்திருக்கும் பொழுது புரியுமப்பா!!!


 அப்பனே கவலைகள் வேண்டாம்!! நிச்சயம் தன்னில் கூட !!

அப்பனே விதியினை அப்பனே நீங்கள் ஜெயிக்கலாம் என்பேன் அப்பனே !!!

அவ் ஜெயிப்பதை எல்லாம் அப்பனே யான் சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்!!!

 சரியாக அதை கடைபிடித்தாலே போதுமானதப்பா!!!

 இன்னும் கூட பின் நதியோரங்களில் பல திருத்தலங்களை அப்பனே பின் யாங்களே அப்பனே பின் உருவாக்கியுள்ளோம் அப்பனே!!! அவற்றுக்கெல்லாம் என்ன சிறப்பு??? என்றெல்லாம் அப்பனே எப்படி?  ஏது ? என்று இவ் மாதத்தில் பின் தொடங்கி அப்பனே ஐப்பசி மாதம் வரை அப்பனே தொடர்ந்து சென்று கொண்டிருந்தாலே!!! சில தரித்திரங்கள் நீங்குமப்பா!!! மூழ்கி!! மூழ்கி!! என்பேன் அப்பனே !!!

இதனால் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் இவ்வாறு ஐப்பசி பின் கார்த்திகை தன்னில் அப்பனே பின் மார்கழி தன்னில் கூட அப்பனே சரியாகவே அப்பனே பின் அதாவது பின் எதை என்று கூட இவ்வாறெல்லாம் சென்று சென்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட!!


 உத்தமர் கோவில்  அப்பனே !!!
நிச்சயம் தன்னில் கூட சென்று அப்பனே!!!

(திருச்சி உத்தமர் கோவில், மும்மூர்த்திகளான சிவன், பிரம்மா, மற்றும் விஷ்ணு ஆகியோர் தம்பதி சமேதராக அருள்பாலிக்கும் ஒரே தலம். இந்த கோவில் திருச்சிக்கு அருகில் மணச்சநல்லூரில் அமைந்துள்ளது, இது "பிச்சாண்டார் கோயில்", "கதம்பனூர்", மற்றும் "திருக்கரம்பனூர்" போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகிறது. சைவ வைணவ ஒருமைப்பாட்டிற்கு எடுத்துக்காட்டாக இந்த கோவில் விளங்குகிறது.

அமைவிடம்: திருச்சி மணச்சநல்லூர், கொள்ளிடம் ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. 
வரலாற்றுப் பெயர்கள்: கதம்பனூர், திருகரம்பனூர், பிச்சாண்டார் கோயில், பிரம்மபுரி, தீபஷேத்திரம், நீபவனம், மற்றும் திருக்கரம்பந்துறை. 
கோவில் சிறப்பு: மும்மூர்த்திகளும் தம்பதி சமேதராக அருள்பாலிப்பது இந்த கோவிலின் தனிச்சிறப்பு ஆகும். 
இறைவன்: மகாவிஷ்ணு, சிவன் மற்றும் பிரம்மா ஆகிய மூவரும் இங்கு அருள்பாலிக்கின்றனர்.
உத்தமர் கோயில் திருச்சிராப்பள்ளி கோட்டை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கிலோமீட்டர்கள் தொலைவிலும், ஸ்ரீரங்கத்திலிருந்து சுமார் 4 கிலோமீட்டர்கள் தொலைவிலும் உள்ள, மும்மூர்த்திகளும் குடி கொண்ட, 108 வைணவத் திருத்தலங்களுள் சோழ நாட்டு மூன்றாவது திருத்தலம்.

ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற
திருக்கரம்பனூர் உத்தமர் கோயில்
Trichy-Salem Main Road Manachanallur, Taluk, No 1 Tollgate, Bikshandarkoil, Tiruchirappalli, Tamil Nadu 621216)







 திருப்பட்டூர்!!!!

(பிரம்மபுரீஸ்வரர் ஆலயம் திருப்பட்டூர் திருச்சி)

 என திருத்தலத்தையும் அடைந்து அப்பனே திருமூர்த்தி தலத்தையும் அடைந்தால் அப்பனே 

(திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருப்பூர் மாவட்டம்)


 சில பாவவினைகள் தீருமப்பா!!!



(மைசூருக்கு அருகே அமைந்திருக்கும் இந்த திரிவேணி சங்கத்தில் மூழ்கி நீராடி விட்டு பின்
திருச்சி உத்தமர் கோயில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் திருநீர்மலை அமணலிங்கேஸ்வரர் கோயில் மூன்றையும் வழிபாடு செய்து விட்டு வர வேண்டும் இதனால் பாவங்கள் தொலையும்)




 அப்பனே இன்னும் அப்பனே நிச்சயம் அப்பனே நதி பின் பெருக்கெடுத்து அப்பனே எவ்வாறு பின் ஓடுகின்றதோ!?!?!

 அப்பனே அவ்வாறு அப்பனே வாக்குகளும் யாங்கள் சித்தர்கள் சொல்வோம் அப்பனே!!!

 எப்படி எடுத்துச் செல்வதும் எங்களுக்கு!! யார் மூலம் ? எதனை பின் அழைத்து எதை என்று புரிய பின் புரிய வைத்து அவர்களையும் கூட அப்பனே அவர் மூலம் அப்பனே எங்களின் வாக்குகளை பரப்பச் செய்து!!! மனிதனின் நோய்களும் அப்பனே பின் கஷ்டங்களும் இல்லாமல் அப்பனே வரும் காலத்தில் அப்பனே !!!


பின் கலியுகத்தில் அப்பனே கஷ்டம் தானப்பா!!! பின் வாழ்வதே !!!


ஆனாலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அருள்கள் பலமடைந்து அப்பனே பின் பல வழிகளில் கூட உண்மைகளை அப்பனே மனிதனும் தெரிந்து கொண்டு அப்பனே வாழ்வானப்பா!!!

 மற்றொரு திருத்தலத்திலும் உரைக்கின்றேன் ஆசிகள் ஆசிகளப்பா!!!!






ஆலயம் பற்றிய விவரங்கள் 

T.நரசிபுரத்தில் உள்ள திரிவேணி சங்கமம் கர்நாடகாவின் மைசூரு அருகே காவேரி, கபினி மற்றும் புராண ஸ்படிகா சரோவரா (ஸ்படிகா) நதிகளின் புனித சங்கமம்..

திரிவேணி சங்கமம் பற்றி
மூன்று ஆறுகள்: இந்த சங்கமம் காவேரி, கபினி மற்றும் குப்த காமினி என்றும் அழைக்கப்படும் ஸ்படிக சரோவரா என்ற புராண நதியை உள்ளடக்கியது. 

இந்த நகரம் "தட்சிண காசி" (தெற்கின் காசி) என்று செல்லப்பெயர் பெற்றது. 
கும்பமேளா: தென்னிந்தியாவின் கும்பமேளா நடைபெறும் இடமாக திரிவேணி சங்கமம் உள்ளது,

: டி. நரசிபுரா, மைசூருவிலிருந்து தென்கிழக்கே சுமார் 30 கி.மீ தொலைவில் காவேரி ஆற்றின் கரையில் ஒரு கிராமப்புறத்தில் அமைந்துள்ளது. 

சங்கம இடத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய கோயிலாக அகத்தீஸ்வரர் கோயில் உள்ளது. அருகிலேயே குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில் உள்ளது.

ஒவ்வொரு மூன்று வருடங்களுக்கும் கும்பமேளா இங்கு நடைபெறுகிறது, ஆயிரக்கணக்கானோர் புனித நீரில் நீராட இங்கு கூடுகிறார்கள்.
ஆற்றின் கரையில் சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் உள்ளன,

கர்நாடகாவின் கோயில் நகரமான திருமகூடலு நரசிபுரா ( திருமகூடலு நரசிபுரா ), பொதுவாக டி. நரசிபுரா அல்லது டி.என். புரா என்று அழைக்கப்படுகிறது , [ 2 ] இது இந்திய மாநிலமான கர்நாடகாவின் மைசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரமாகும் . இந்த நகரம் மைசூர் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாகவும் , மாவட்ட தலைமையகத்திலிருந்து தென்கிழக்கே 32 கி.மீ தொலைவிலும் உள்ளது.

காவேரி நதியின் வலது கரையில் உள்ள குஞ்சா நரசிம்ம சுவாமி கோயில், விஜயநகர காலத்தைச் சேர்ந்த ஒரு பெரிய வளாகமாகும்.
சுற்றியுள்ள பகுதியில் உள்ள பிக்ஷேஸ்வரர் கோயில், மூலஸ்தானேஸ்வரர் கோயில் மற்றும் ஆனந்தேஸ்வரர் கோயில் ஆகியவையும் உள்ளன.

தி.நரசிபுரத்தின் பஞ்சலிங்கங்களில் சோமேஸ்வர லிங்கத்தில் உள்ள லிங்கங்கள், மார்க்கண்டேஸ்வர லிங்கம், கார்கேஸ்வரி கிராமத்தில் உள்ள கார்கேஸ்வர லிங்கம், அகஸ்தியேஸ்வரர் மற்றும் தி.நரசிபுராவில் உள்ள ஹனுமான் லிங்கம் ஆகியவை அடங்கும்.

கர்நாடக மாநிலம் மைசூர் அருகே உள்ள டி.நரசிபுரா/ திருமகூடலு நரசிபுரத்தில் உள்ள ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் கோயில்.

ஸ்ரீ அகஸ்தேஸ்வரர்
துணைவி: ஸ்ரீ  பூர்ணமங்கையா-காமக்ஷி 


கிழக்கு நோக்கிய இந்தக் கோயில், வடக்கே 4 நிலை ராஜகோபுரத்துடன் அமைந்துள்ளது. முன்பக்கத்தில் நந்தி, துவஜஸ்தம்பம் மற்றும் பலிபீடம் உள்ளன. உயரமான இடத்தில் ஒரு ஸ்டக்கோ நந்தியும் உள்ளது. கருவறையில் ஒரு கருவறை, அந்தராளம், அர்த்த மண்டபம் மற்றும் மகா மண்டபம் உள்ளன. கருவறையைச் சுற்றி கோஷ்ட மூர்த்திகள் இல்லை. மூலவர் விமானம் கோள வடிவத்தில் உள்ளது, கிழக்குப் பக்கத்தில் ஒரு பெரிய நாசி உள்ளது. ராஜகோபுரம் திராவிட பாணியில் கட்டப்பட்டது, மேல் அடுக்கில் லட்சுமி நரசிம்மர், சிவன், பார்வதி போன்றவர்களின் ஸ்டக்கோ படங்கள் உள்ளன. ராஜகோபுரம் உள்ளே இருந்து மரத் தூண்களால் தாங்கப்பட்டது.

கோயில் நேரங்கள்:
இந்த கோயில் காலை 07.00 மணி முதல் மதியம் 12.30 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் மாலை 7.30 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எப்படி அடைவது:
இந்தக் கோயில் மைசூரில் இருந்து கொல்லேகால் செல்லும் சாலையில், மைசூரிலிருந்து சுமார் 34 கி.மீ தொலைவிலும், பெங்களூரிலிருந்து 150 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது.

6W95+GHQ, T Narsipura Rd, Tirumakudalu Narasipura, Karnataka 571463.

https://maps.app.goo.gl/PzGNTnhYhrxtvjas8?g_st=aw

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: