​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 13 November 2024

சித்தன் அருள் - 1726 - அன்புடன் அகத்தியர் - பெங்களூரு சத்சங்க உத்தரவு!







12/11/2024.அன்று பெங்களூரு சத்சங்கத்தில்... பக்தர்களுக்கு குருநாதர் அகத்தியர் பெருமான் கொடுத்த உத்தரவு!!!

பக்தர்கள் அனைவரும் இதை கடைப்பிடித்து வர வேண்டும் என்று உத்தரவு தந்துள்ளார் குருநாதர் அகத்தியர் பெருமான். 

அப்பனே நன்றாகவே பின் அதாவது சரியாகவே அப்பனே ஒரு பட்டு துணியை அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது தூய மஞ்சளில் இட்டு பின் நனையுங்கள் நீரினாலே!!!

அறிந்தும் கூட அதை கீழே வையுங்கள்!!!!

அப்பனே/ அம்மையே!!!
 இவை அறிந்தும் கூட நிச்சயம் அதன் மேலே வெற்றிலை பாக்கும் கூட!!!!

அறிந்தும் கூட நிச்சயம் பின் உதாரணத்திற்கு பின் சூரியனுக்கான பின் எவை என்று அறிய அறிய தானியம் 
(கோதுமை) அறிந்தும் கூட அதை பரப்புங்கள்!!!

அறிந்தும் இதையென்று புரிய நிச்சயம் பின் இதன் மேலே பின் தீபம் வையுங்கள்!!!

அறிந்தும் இதை தன் சூரியனாக (தீபத்தை) நினைத்துக் கொள்ள வேண்டும்!!!

அறிந்தும் இதை என்று பயன்படுத்த நிச்சயம் பின் அறிந்தும் கூட ஜோதியை ஏற்றுங்கள். 

அப்பனே நன்றாகவே இவை என்று அறிந்தும் இதை தன் பின் உண்மையென புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் கிராம்பையும் கூட நல்விதமாகவே அறிந்தும் கூட பச்சை கற்பூரத்தையும் கூட ஏலக்காயையும் கூட நிச்சயம் பின் மாவாக்கி...(இவை மூன்றையும் பொடித்து) பின் அத் தீபத்தில் உள்ளே இட்டு பின் சூரியனுக்காக அதாவது காயத்ரி மந்திரத்தையும் கூட 108 முறை செப்புங்கள்!!!




இதே போல் பின் சந்திரனுக்கும் குருவானவனுக்கும் ராகுவானவனுக்கும் கேதுவானவனுக்கும் இப்படி ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு தீபமாக நவ தீபங்கள். ஏற்ற வேண்டும்!.


இப்படி ஒவ்வொரு நவகிரகத்திற்கும்  பட்டு துணி தீபம் வெற்றிலை பாக்கு அந்தந்த கிரகத்திற்குரிய தானியங்களை வைத்து ஏற்றி அந்தந்த கிரகங்களுக்குரிய காயத்ரி மந்திரத்தை 108 முறை செப்புதல் வேண்டும் 

இப்படியே அனுதினமும் செய்ய வேண்டும். 

இதெல்லாம் உங்கள் அனைவருக்கும் யான் வைக்கும் தேர்வு!!!

 அதனால்தான் முதலிலேயே சொன்னேன். இதை நீங்கள் அனைவரும் செய்ய வேண்டும். 

அப்பனே அம்மையே இதனை நிச்சயம் செய்து கொண்டே வாருங்கள்... தை! மாசி! மாதங்கள் வரை!!!

(இந்த மாதத்தில் இருந்து தொடங்கி அதாவது ஐப்பசி நடந்து கொண்டிருக்கின்றது கார்த்திகை மார்கழி தை மாசி மாதம் வரை ஆங்கில மாதம் மார்ச் வரை செய்து வர வேண்டும்) 

அப்பனே நிச்சயம் அப்பனே ஒவ்வொரு நாளுக்கும் இதே போல தினமும் செய்து வர வேண்டும்!!!





அறிந்தும் கூட இதனால் என்ன பலன்? என்று கேட்கக் கூடாது 

 நவகிரகத்திற்கு என ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒவ்வொரு நிறத்தில் துணிகள் இருக்கின்றது அதை பயன்படுத்தலாமா என்று குருநாதரிடம் கேட்டதற்கு 

பட்டுத்துணியை மஞ்சளில் நனைத்து பயன்படுத்துங்கள் கிரகங்கள் சம்பந்தப்பட்ட நிறத்துணியை உங்கள் விருப்பம் போல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று குருநாதர் கூறினார் 

அதேபோல் ஏற்றும் விளக்கில் இரட்டை திரியை ஒன்றாக திரித்து இணைத்து ஒரே தீபமாக ஏற்ற வேண்டும். 

இதற்கு மண் அகல் விளக்கை தான் பயன்படுத்த வேண்டும் என்று குருநாதர் கூறினார்.

எந்த நேரத்தில் விளக்கை ஏற்ற வேண்டும் என்று குருநாதரிடம் கேட்டதற்கு... சித்தர்களுக்கு நாள் ஏது? கோள் ஏது? இரவு ஏது? பகல் ஏது? எங்களுக்கு அனைத்தும் ஒன்றுதான் அன்பிற்காக நினைத்து நீங்கள் செய்யுங்கள் என்று குருநாதர் கூறினார் 

அதனால் காலை அல்லது மாலை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் விளக்கை ஏற்றி இந்த வழிபாடு செய்யலாம்.

பெண்கள் எல்லா நாளும் விளக்கு ஏற்ற முடியாத சூழ்நிலையும் இருக்கின்றது என்று கேட்டதற்கு வீட்டில் உள்ள யாராவது ஒருவரை அந்த நாட்களில் விளக்கேற்ற சொல்லுங்கள் என்று குருநாதர் கூறியிருக்கின்றார்.


தானியங்களை அனுதினமும் மாற்றி விட வேண்டுமா என்று கேட்டதற்கு 

இதுவும் உங்கள் இஷ்டமே என்று குருநாதர் கூறினார். 


ஒன்பது நவகிரகங்களுக்கும் 108 முறை காயத்ரி மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என்று சொன்னால் கிட்டத்தட்ட 972 முறை காயத்ரி மந்திர உச்சாடனம் செய்ய வேண்டுமா என்று கேட்டதற்கு 

நிச்சயம் இப்படியே செய்ய வேண்டும் என்று குருநாதர் கூறினார். 

அப்பனே அம்மையே இதனைப் பற்றி உங்களுக்கு போக போக புரியும் ஆனால் பின் அதாவது இதன் மூலம் பலன்களை எதிர்பார்க்கக் கூடாது. 

இந்த நேரத்தில் வேறு எந்த ஞாபகம் இருக்கக் கூடாது அதாவது விளக்கை ஏற்றி காயத்ரி மந்திரத்தை செப்பும் பொழுது வேறு எந்த சிந்தனையும் இருக்கக்கூடாது. 

இதெல்லாம் எதற்கு என்பதையெல்லாம் யான் வருங்காலத்தில் விவரிப்பேன்
மீண்டும் மீண்டும் பின் நிச்சயம் இதற்கான பிரதிபலனை எதிர்பார்க்கக் கூடாது. 

அப்பனே அம்மையே போகப்போக புரிந்து கொள்ளுவீர்கள் நீங்களே இதனை பற்றி.


அம்மையே அப்பன்களே  இதை யாரும் பரிகாரமாக எண்ண கூடாது. தேர்வு என்று நினைத்துக் கொள்ள வேண்டும். 


இது ஏன் எதற்கு என்பதை ஒரு சதவீதத்தை மட்டும் யான் சொல்கின்றேன்....

யான் உங்கள் இல்லத்திற்கு வருவேன்!!!!

ஏன் எதற்கு என்ற இரண்டாவது சதவீதத்தையும் யான் சொல்கின்றேன்.

நிச்சயம் பின் நீங்கள் சோம்பேறிகளா இல்லையா என்று யான் பார்ப்பேன்!!

அறிந்தும் கூட அப்பனே 100 சதவீதத்தையும் இதனைப் பற்றி சொல்லி விடுகின்றேன்.

அப்பனே நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட ஒரு ஆசிரியன் தன் மாணவரிடம் ஒன்றை செய்து வரச் சொன்னால் அதை செய்து விட்டு வந்தால் அந்த ஆசிரியன் சந்தோஷப்படுவான்.

ஏன் எதற்கு என்று மூன்றாவது சதவீதத்தையும் சொல்லி விடுகின்றேன்

நிச்சயம் கிரகங்கள் தன் சுற்று வட்டப்பாதையில் இருந்து மாறப்போகின்றது... இதனால் பல மக்களுக்கும் கூட தொல்லைகள் வரப் போகின்றது....

பின் நிச்சயம் அதாவது வளிமண்டலத்தில் பின் நேர்கோட்டில் தான் கிரகங்கள் செல்ல வேண்டும் அப்பொழுதுதான் அனைத்தும் நன்றாக நடக்கும். 

ஆனால் அதிலிருந்து கிரகங்கள் நேர்பாதையிலிருந்து பிரியப் போகின்றது..

ஆனாலும் இதனால் என்ன பயன்? என்று நீங்கள் கேட்கக் கூடாது!!

பின் உரைப்பேன் இதனைப் பற்றி!!!

அறிந்தும் கூட இது உங்களுக்காக மட்டுமல்ல... அறிந்தும் எதை என்றும் புரிந்தும் கூட சூரியனின் பின் ஈர்க்கும் சக்தி நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய... அப்பனே இத் தீபத்திற்கும் பல பல சக்திகளும் உண்டு.

 ஆனால் யாரும் இதை அறிவதே இல்லை... தீபத்தை யாரும் ஏதோ ஏற்றுகின்றோம் என்று சாதாரணமாக நினைத்து ஏற்றிக் கொண்டிருக்கின்றார்கள்.

தீபத்தை நல் முறையாக எதைப் பற்றியும் நினைக்காமல் ஏற்றுங்கள்.

இதனால் உங்களுக்கும் புண்ணியங்கள்.

இன்னும் இன்னும் நிச்சயம் அம்மையே அப்பனே நிச்சயம் பின் அதாவது இவ்வுலகத்தையே யாங்கள் காக்க வேண்டும்.

ஆனாலும் இன்னும் நிச்சயம் எங்களுக்கு வாக்குகள் இல்லையே பின் எதை என்று புரிய புரிய ஆனாலும் இப்படி எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எங்களுக்கு மட்டும் வாக்குகள் இல்லை 
அங்கு மட்டும் வாக்குகள் படிக்கின்றார்கள் என்றெல்லாம்!!......

 பின் ஏன் எதற்கு என்றால் அத்தகுதிகள் அவர்களிடத்தில் இல்லை!!... செய்யவும் மாட்டார்கள். 

அறிந்தும் கூட நிச்சயம் பின் இதை பின்பற்றுவார்கள் நிச்சயம் யானே பின்பற்ற வைக்கின்றேன் பல மக்களை. 

அம்மையே அப்பனே நிச்சயம் பின் இதனால் எவை என்று அறிய அறிய முன்னோர்கள் எல்லாம் நிச்சயம் பின் இப்படி எல்லாம் தீபத்தில் பின் எவை என்று எரிய விட்டு நன்றாக வாழ்ந்தார்கள்.

ஆனால் இன்று மின்சாரம் வந்தது!! இப்போது என்ன வாழ்ந்தார்கள்???????

மின்சார விளக்குகள் எரியும் அல்லவா அதில் கூட நிச்சயம் வேதியல் தன்மை இருக்கின்றது... அதுவும் கூட நிச்சயம் மனிதனின் யோகத்தை நிச்சயம் ஈர்த்துக் கொள்கின்றது.



ஆனால் விளக்கு தீபம் இருக்கின்றதல்லவா அது மனிதனின் யோகத்தை ஈர்த்துக் கொள்வதில்லை.

 மாறாக தீபம் சக்திகளை ஈர்த்து மனிதர்களுக்கு  யோகத்தை கொடுக்கும்.

இதனால் தான் அறிந்தும் கூட இறைவனும் தெரியாமல் இருக்கின்றான் மின்சாரமும் தெரியாமல் இருக்கின்றது. 

இதனால் தான் அப்பனே என் பக்தர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்றே உங்களை அழைத்தேன் யான்.

அம்மையே அப்பனே எதை என்று அறிய அறிய என் வாக்குகளை கேட்டாலே நிச்சயம் பின் பாவங்கள் போகும் பறந்து!....

என்று கூறினார் வாக்குகள் கூறியிருக்கின்றார் அனைவரும் கடைப்பிடித்து வர வேண்டும்


வணக்கம் அகத்தியர்  அடியவர்களே

அனுதினமும் காலையில் எழுந்து பட்டு துணியில் ..... தினமும் புதிதாக பட்டுத் துணியை பயன்படுத்த வேண்டுமா என்ற கேள்வி வரும் .


நான்கு ஐந்து பட்டு துணிகளை  மஞ்சளில் நனைத்து மாற்றி மாற்றி.... வைத்துக் கொள்ளலாம் ஆலயத்தில் இறைவன் இறைவி திருவுருவ சிலையில் துணிகளை மாற்றி மாற்றி பயன்படுத்துவது போல பட்டு துணிகளை மாற்றி மாற்றி பயன்படுத்தி கொள்ளலாம் ஒவ்வொரு முறை பயன்படுத்தபொழுதும் மஞ்சளில் நனைத்து பயன்படுத்த வேண்டும்.


ஒவ்வொரு விளக்கு இருக்கும் தனித்தனி பட்டு துணிகளை பயன்படுத்த வேண்டுமா என்று கேட்டால்...

ஒரு அரை மீட்டர் அதாவது ரவிக்கை துணியில் பாதி அளவு பட்டு துணியை இது போன்ற நான்கு ஐந்து துணிகளை வாங்கி மஞ்சளில் அனுதினமும் நனைத்து தினமும் ஒரு துணியை பெரிதாக விரித்து அதன் மேல் வெற்றிலை பாக்கு வைத்து நவதானியங்களை தனித்தனியாக வைத்து அதன் மேல் விளக்கை இரட்டை திரி கொண்டு ஏற்ற வேண்டும். 

அதாவது 9 தீபம் வெற்றிலை பாக்கு நவதானியங்கள் பரப்பி வைக்கும் அளவிற்கு துணி நீளம் அகலம் இருந்தால் நல்லது. 

அப்படி இல்லை என்றாலும் தனித்தனியாக சிறு சிறு துணிகளாக ஒன்பது பட்டுத்துணிகளாகவும் பயன்படுத்தலாம் விருப்பம் போல் செய்யலாம்.




 பட்டு துணியை வைத்து அதன் மேல் வெற்றிலை பாக்கு வைத்து அந்த வெற்றிலையிலேயே  ஒன்பது நவகிரகங்களின் வரிசைப்படி.... அதாவது சூரியன் சந்திரன் செவ்வாய் புதன் குரு சுக்கிரன் சனி ராகு கேது என நவகிரகங்களுக்கு உரிய தானியங்களை வைத்து அதன் மேல் தீபத்தை ஏற்றி 

அந்த ஒன்பது விளக்கு ஜோதியை ஒவ்வொரு கிரகங்களாக நினைத்துக் கொள்ள வேண்டும்!

அந்த தீபத்தில் ஏலக்காய் பச்சை கற்பூரம் கிராம்பு இவற்றை மிக்ஸியில் அரைத்து பொடித்து வைத்துக்கொண்டு.... உதாரணத்திற்கு மேற்கூறிய மூன்று பொருள்களையும் 100 கிராம் அல்லது அவரவர் இஷ்டத்திற்கு ஏற்ப அரைத்து வைத்துக்கொண்டு ஒரு டப்பாவில் பூஜை அறையில் வைத்துக்கொண்டு எரியும் விளக்கில் உள்ளே அதாவது எரியும் விளக்கின் எண்ணெயில் போட்டு விட வேண்டும். 

பட்டுத்துணியை மஞ்சள் குழைத்த நீரினில் நனைத்து   அதன் மேல் நவ தானியங்களை தனித்தனியாக வெற்றிலை பாக்கை வைத்து தினமும் மாற்றி விட்டு புதிதாக ஒவ்வொரு நாளும் வெற்றிலை பாக்கு அந்தந்த கிரகங்களுக்குரிய தானியங்களை புதிதாக வைத்து விளக்கை ஏற்றி அதில் மேற்கூறிய பொடித்து வைக்கப்பட்ட பொடியை இட்டு ஒவ்வொரு கிரகத்திற்குரிய நவ கிரக காயத்ரி மந்திரங்களை 108 முறை ஜெபம் செய்து வணங்கி வருதல் வேண்டும்!


தானியங்களை அனுதினமும் மாற்றுகின்றவர்கள் விருப்பம் போல செய்யலாம்

அல்லது அப்படியே நான்கு இந்த நாட்களுக்கு ஒரு முறை மாற்றிக் கொள்ளலாம் 

தானியங்களை சேகரித்து வைத்துக் கொண்டு புதிதாகவும் நவ தானியங்களை வைக்கலாம்.



தீபத்திற்கு நெய்யை அல்லது நல்லெண்ணையை பயன்படுத்தி வருகின்றார்கள். குருநாதர் கோயிலிலும் சரி வீட்டிலும் சரி இலுப்பை எண்ணையை பயன்படுத்துவது சக்தியை தரும் இலுப்பை எண்ணெய்க்கு சக்திகள் அதிகம் என்று கூறியிருக்கின்றார். 

நெய்யை பொறுத்தவரை பால் தயிர் மோர் இதிலிருந்து வெண்ணை அதன் பிறகு நெய்யாக்குவது தான் உண்மையான நெய் ஆனால் தற்போது பாலில் இருந்து நேரடியாக எடுக்கப்படும் நெய் உண்மையான நெய் அல்ல என்று கூறி இருக்கின்றார்.

(அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் முன்பெல்லாம் பசுவின் நெய்யை எதை என்று அறிய அறிய பால் பின் எதை என்று கூட மோர் என்கின்றார்களே பின் நெய் இப்படி எடுக்க வேண்டும் அப்பனே ஆனால் இன்றைய காலத்தில் மனிதர்கள் எதை எதையோ செய்து செய்கின்றார்கள் அப்பனே இதனால் ஒன்றும் பிரயோஜனம் இல்லை!!!

(இன்றைய காலகட்டத்தில் பாலில் இருந்து நேரடியாக கிரீம் எடுத்து நெய் ஆக்கி அதை விற்பனை செய்து வருகின்றார்கள் ஆனால் அது தவறான செய்முறை

பால் பாலில் இருந்து தயிர் தயிரில் இருந்து மோர் மோரில் இருந்து வெண்ணெய் வெண்ணையை காய்ச்சி முற்காலத்தில் எப்படி நெய்யை எடுப்பார்களோ அதன்படி எடுத்து அந்த நெய் பயன்படுத்தினால் தான் முழு பலன் என்று குருநாதர் கூறியிருக்கின்றார் அதுபோன்று எங்கு மோரை கடைந்து வெண்ணை எடுத்து நெய் தயாரிக்கின்றார்களோ அந்த நெய்யை அடியவர்கள் கண்டறிந்து பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்
இதனைப் பற்றி முழுமையான வாக்கு சூரத் சத்சங்கம் பாகம் 6 ல் சித்தன் அருள் - 1616 - அன்புடன் அகத்தியர் - அருள்வாக்கு வெளிவந்துள்ளது)



அதேபோல் தற்போது கற்பூரத்தில் மெழுகு அதிகம் சேர்த்து கலப்படம் மிகுந்த கற்பூரம் தான் கிடைக்கின்றது சுத்தமான உண்மையான பச்சை கற்பூரம் குறித்து குருநாதரிடம் கேட்டு குருநாதர் சூட்சுமமாக வாக்குகள் தந்து குருநாதர் தேடச் சொல்லி அதன் பிறகு மகாராஷ்டிரா மாநிலம் திரயம்பகேஸ்வரர் ஜோதிர்லிங்கம் ஆலயத்திற்கு அருகில் வசித்து வரும் ஒரு பெரியவர் சுத்தமான பச்சை கற்பூரம் அனைவருக்கும் விற்பனை செய்து வருகின்றார் என்ற விவரம் அறிந்து அதனைப் பற்றி நமது சித்தன் அருள் வலைத்தளத்தில் 

சித்தன் அருள் - 1231 - பச்சை கற்பூரம்!

தனிப்பதிவாக வந்துள்ளது 

அதர்வா ஜோஷி 
திரயம்பகேஷ்வரர். 
நாசிக். 

தொடர்பு எண் மற்றும் கூகள் பே எண். 

8975743784.

இவரிடம் அடியவர்கள் சுத்தமான பச்சை கற்பூரத்தை பெற்றுக் கொள்ளலாம் மேலும் பச்சைக் கற்பூரம் குறித்து பதிவை மீண்டும் படித்து முழு விபரங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

அப்படி உண்மையான நெய் முறைப்படி எடுப்பவர்கள் தீபத்திற்கு நெய்யை பயன்படுத்தலாம் அல்லது சுத்தமான நல்லெண்ணையை பயன்படுத்தலாம். குருநாதரிடம் பூஜைக்கு வழிபாட்டிற்கு  எந்த எண்ணெயை பயன்படுத்துவது என்று கேட்டதற்கு இலுப்பை எண்ணையை பயன்படுத்துங்கள் என்று ஏற்கனவே வாக்குகளில் கூறியிருக்கின்றார் நினைவில் கொள்ளவும்.

நெல், கோதுமை, துவரை, எள், உளுந்து, பச்சைப்பயறு, கொண்டைக் கடலை, மொச்சை பயிறு, கொள்ளு போன்ற ஒன்பது தானியங்களைத்தான் வகை நவதானியங்கள் தானியங்கள் என்பர். இவையே கிரகங்களுக்கு உரிய தானியங்கள் ஆகும். 

கோதுமை சூரிய பகவானின் தானியம் ஆகும்

நெல்: இது சந்திர பகவானின் தானியம் ஆகும்

துவரை : 'துவரை' இது செவ்வாய் பகவானின் தானியம் ஆகும்

பச்சைப்பயறு 'பச்சைப்பயறு' இது புதனின் தானியம் ஆகும்.

' கொண்டைக்கடலை இது குரு பகவானின் தானியம் ஆகும்.

மொச்சை இது சுக்கிர பகவானின் தானியம் ஆகும்.

கருப்பு எள் இது சனி பகவானுக்கு உரிய தானியம் ஆகும்.

உளுந்து : இது ராகு பகவானின் தானியம் ஆகும்.

கொள்ளு இது கேது பகவானின் நவ தானியம் ஆகும்.


சூரிய காயத்ரி :
ஓம் பாஸ்கராய வித்மஹே திவாகராய தீமஹி தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்.

108 முறை .

சந்திர காயத்ரி :
ஓம் பத்மத்வஜாய வித்மஹே ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திர ப்ரசோதயாத்.

108 முறை.

செவ்வாய் (அங்காரக) காயத்ரி :
ஓம் வீரத்வஜாய வித்மஹே விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக: ப்ரசோதயாத்.

108 முறை.

புதன் காயத்ரி :
ஓம் கஜத் வஜாய வித்மஹே சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புதப் ப்ரசோதயாத்.

108 முறை.

வியாழன். குரு காயத்ரி :
ஓம் விருஷபத்வஜாய வித்மஹே க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குருப் ப்ரசோதயாத்.

108 முறை.

வெள்ளி சுக்ர காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே தனுர் ஹஸ்தாய தீமஹி
தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்.

108 முறை.

சனி காயத்ரி :
ஓம் காகத் வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ சனிப் ப்ரசோதயாத்.

108 முறை.

ராகு காயத்ரி :
ஓம் நாகத்வஜாய வித்மஹே பத்ம ஹஸ்தாய தீமஹி
தந்நோ ராகு ப்ரசோதயாத்.

108 முறை.

கேது காயத்ரி :
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேதுப் ப்ரசோதயாத்.

108 முறை.

இவை ஒவ்வொரு நாளும் செய்து வருதல் வேண்டும். இது குருநாதர் அகத்திய பெருமான் அனைவருக்கும் யான் வைக்கும் பரீட்சை என்று சொல்லி இருக்கின்றார் அனைவரும் தேர்ச்சி பெற வேண்டும் என்றும் குருநாதர் உத்தரவாக கூறியிருக்கின்றார் அதனால் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

17 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. நமஸ்காரம்! முழு பூஜையும் தோராயமாக 3 மணி நேரம் ஆகும் என்பதால். காலையில் 3 கிரஹ பூஜையும் மதியம் 3 கிரஹ பூஜையும் மாலை 3 வேளையும் செய்யலாமா?

    ReplyDelete
  3. ஓம் அகத்தீசாய நமக ஓம் அகத்தீசாய நமக நன்றி ஐயா

    ReplyDelete
  4. இறைவா!!!!! நீயே அனைத்தும்.


    அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அனைவருக்கும் வைக்கும் தேர்வு

    https://youtu.be/wpkxtpRjmtI
    அன்புடன் பிரம்ம ரிஷி அகத்திய மாமுனிவர் அனைவருக்கும் வைக்கும் தேர்வு

    சித்தன் அருள் - 1726 - பெங்களூரு சத்சங்க உத்தரவு!

    ஓம் அன்னை ஶ்ரீ லோபாமுத்ரா உடனுறை தந்தை அகத்திய மாமுனிவர் திருவடிகளில் சமர்ப்பணம்!!!!!!!!!
    சர்வம் சிவார்ப்பணம்!!!!!

    ReplyDelete
  5. கோடான கோடி நன்றிகளை அகத்தியம்பெருமான் திருவடிகளில் சமர்பித்து பற்றி வணங்குகிறேன்...

    ReplyDelete
  6. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete
  7. Thank You.
    After Pooja, what should we do the betal leaves and the nine grains. please clarify.

    ReplyDelete
    Replies
    1. குருநாதரிடம் இதனை பற்றி என்ன செய்வது என்று கேட்டதற்கு முதலில் இதனை செய்து கொண்டு வாருங்கள்....அது உங்களுக்கே தெரிய வரும் என்று பதில் வரை தான்... பூஜைக்கு பயன்படுத்திய வெற்றிலைகளை நாம் எப்படி பூஜையில் பயன்படுத்திய பூக்களை ஆற்றில் இடுகின்றோமா அதுபோல வெற்றிலைகளை ஆற்றில் விட்டு விடலாம்.. அவ தானியங்களை சேகரித்து வைத்து வாயில்லா ஜீவராசிகள் பறவைகள் பசுக்களுக்கு கொடுத்து விடலாம் அல்லது ஆற்றில் விட்டு விடலாம் இதை செய்து கொண்டு வரும் பொழுது அவரவர்களுக்கு தெரிய வரும் என்று குருநாதர் பதில் உரைத்து இருக்கின்றார்

      Delete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. பெங்களூரு சத்சங்கத்தில் பங்கேற்பது எப்படி? நான் பெங்களூரில் தங்கியிருக்கிறேன். அதனால்தான் கேட்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. அகத்தியர் அடியவர்களுடன் ஆன்மீக தொடர்பில் இருந்தால் தகவல் கிடைக்கும். அதுவன்றி எங்கு சத்சங்கம் எப்பொழுது நடக்கும் என்று சித்தன் அருளுக்கும், அகத்தியருக்கும் தெரியாது!

      Delete
    2. உங்களுடைய தொடர்பு எண்ணை இமெயிலில் அனுப்புங்கள் சத்சங்கம் குருநாதர் உத்தரவு வரும்பொழுது முன்கூட்டியே தகவல் மற்றும் முகவரி தெரிவிக்கப்படும்

      Delete
    3. Please share your email id sir. Thank you.

      Delete
  10. ஐயா பட்டு துணி மஞ்சள் நீரில் நனைத்து
    அதன் மீது 2 வெற்றிலை பாக்கு மட்டும் நடுவில் வைத்து
    அதை சுற்றி 9 தானியம் வைத்து அதன் மீது அகல் விளக்கு ஏற்ற வேண்டுமா
    அல்லது ஒவ்வொரு தானியங்கள் adiyil வெற்றிலை பாக்கு வைத்து ஏற்ற வேண்டுமா
    முடிந்தால் மாதிரி புகைப்படம் பதிவி செய்யவும் தயவு செய்து

    ReplyDelete
  11. வாக்குகளில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது அம்மா பட்டுத்துணியை மஞ்சளில் நினைத்து வைத்து அதன் மேல் ஒன்பது செட் வெற்றிலை பாக்கு வைத்து அந்த வெற்றிலைகள் மீது அதாவது ஒரு செட்டு வெற்றிலை என்பது இரண்டு வெற்றிலைகள் ஆகும் அப்படி பார்த்தால் மொத்தம் 18 வெற்றிலைகள் பட்டுத்துணி மேல் வைத்து அதன் மீது நவதானியங்களை ஒவ்வொரு கிரகத்திற்கும் உரிய நவதானியங்களை பரப்பி அதன் மேலே விளக்கு ஏற்ற வேண்டும் வாக்கை ஒரு முறை அல்லது இரு முறை மூன்று முறை திரும்பத் திரும்ப படிக்கும் பொழுது புரியும் நன்றி வணக்கம்

    ReplyDelete
  12. விளக்கம் அளித்ததற்கு நன்றி ஐயா

    ReplyDelete