​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 31 October 2023

சித்தன் அருள் - 1490 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!






31/10/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு:- வாக்குரைத்த ஸ்தலம் திருமலை திருப்பதி 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன். 

அப்பனே நலன்கள் அப்பனே என்னுடைய பக்தர்களுக்கும் கூட அப்பனே நலன்களாகவே அப்பனே யான் சொல்லியதை அப்பனே நிச்சயம் முறையாக பயன்படுத்தி வந்தாலே போதுமானதப்பா!!!! 

கர்ம வினைகள் சேராதப்பா!!!

அப்பனே தெரியாமல் இறைவனை வணங்கினாலும் அப்பனே ஒன்றும் முடியாதப்பா!!!!

அப்பனே கர்மங்கள் அப்படியே இன்னும் இன்னும் அப்பனே சேர்ந்து கொண்டு தான் இருக்குமப்பா!!!! 

அதனால் இறைவன் எங்கே ??? சித்தர்கள் எங்கே ??? என்றெல்லாம் சந்தேகங்கள் அப்பனே!!!!!

ஆனால் அப்பனே ஒவ்வொன்றாக நிச்சயம் அப்பனே யான் சொல்லியதை!!!...............

ஆனாலும் அப்பனே அனைத்தும் ஏனோ தானோ என்று கூட அப்பனே பல மனிதர்கள் இருந்து விடுகிறார்கள் என்பேன் அப்பனே !!!!

அதனாலே அப்பனே கடைசியில் பார்த்தால் கர்மாக்களை சேர்த்துக்கொண்டு அப்பனே மீண்டும் எங்களிடத்தில் தான் வர வேண்டும்!!!

அப்பொழுது அப்பனே யாங்கள் என்ன செய்வது ????? அப்பனே !!!

எதை என்றும் அறியாமலும் கூட இதனால் அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!

அதாவது அப்பனே கன்னி திங்கள்  (புரட்டாசி மாதம்) எதை என்றும் அறிந்தும் கூட அப்பனே முன்னோர்களுக்கு கூட

(மக்கள் அனைவரும் புரட்டாதி மாதத்தில் மகாளய அமாவாசைக்கு முன்னோர்களுக்கு பித்ரு தர்ப்பணம் செய்ய வேண்டியதை குறித்து குருநாதர் கூறியது)

காக்கும்!!! எதை என்றும் அறிய அறிய அப்பனே அதாவது அப்பனே அனைவருமே துடிப்பார்கள் அப்பனே (முன்னோர்களின் ஆன்மாக்கள் ) 
 விஷ்ணுவை காண காண ஆன்மாக்கள் எல்லாம்!! 

அப்பனே இவைதன் துகள்களாக அணுக்களாக அப்பனே அணுவில் உள்ள துகள்கள் அப்பனே அவையெல்லாம் நிச்சயம் அப்பனே யான் சொல்லிவிட்டேன்!!! இவ்வாறு பரிபூரணமாகவே அவைதன் ஆன்மாக்கள் அப்பனே நல்முறையாக முன்னோர்களை எதை என்றும் இழுத்து அப்பனே அதாவது பின் நிச்சயமாய் அப்பனே சொல்லிவிட்டேன்.
நவராத்திரி எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட.

இதனால் ஆசீர்வாதங்கள் அப்பனே!!!!

இதிலிருந்து அப்பனே பின் அறிந்தும் கூட இதனால் அப்பனே சில ஆன்மாக்கள் நம்தனுக்கு அறிந்தும் அறிந்தும் கூட நன்மையே!!!.......... எவை என்று அறிய அறிய சந்தோசப்படும் அப்பனே!!!!

ஆனால் இங்கேயே இருந்து விடலாம் என்று பந்த பாசங்களில் நுழைந்து நுழைந்து....... ஆனாலும் உடம்பில்லை அப்பனே.

ஆனாலும் அப்பனே ஆன்மாக்கள் அறியாமல் கூட இதனால் வலம் வந்து வலம் வந்து இதனால் அப்பனே!!!

இதனால்தான் இப்பொழுது. """ ஐப்பசி !!! எதை என்று அறிய ஐம்புலன்களையும் கூட அடக்கி அப்பனே நிச்சயமாய் அப்பனே புண்ணிய நதிகளில் நீராட அப்பனே நிச்சயம் அதாவது ஆன்மாக்கள் அதாவது துகள்களாக இருக்கின்றதே அவையெல்லாம் அப்பனே அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!

அப்பனே இன்னும் மோட்சம் அப்பனே அறிந்தும் கூட அவ் ஆன்மாக்களுக்கு மோட்சம் கிடைத்துவிடும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் என் நதிகளான தாமிரபரணி அப்பனே காவேரி தன்னில் அப்பனே நிச்சயம் இன்னும் பல புண்ணிய நதிகள் இருக்கின்றன அப்பனே அதனால் அப்பனே ஆங்காங்கே நிச்சயம் இருப்பவர்கள் அப்பனே பின் நீராட அப்பனே உடம்பில் ஒட்டிக் கொள்ளும் எவை என்று அறிய அறிய துகள்கள் அப்பனே நிச்சயம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே!!!

அதனால்தான் அழகாக """""""காவிரி !!!!! என்ற நதியை கூட அப்பனே எப்படி எல்லாம் மனிதர்கள் பயன்பட வேண்டும் என்றெல்லாம் யான் உருவாக்கினேன் அப்பனே

ஆனால் கலியுகத்தில் அப்பனே அனைத்தும் அப்பனே பொய்யாக்கி கொண்டிருக்கின்றான் மனிதன் அப்பனே

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே அனைத்தும் செய்து வந்தால் தான் அப்பனே..... வாக்குகளும் கூட!!!!. இவ்வாறு நீங்கள் செய்து வந்தால் தான் வாக்குகளும் கூட செப்பினாலும் அப்பனே பரிபூரணமாக நடக்குமே!!!!

அப்பனே அப்படி இல்லையென்றால் அப்பனே யான் சொன்னாலும் உங்களுக்கு புரியாதப்பா!!!

அப்பனே கலியுகத்தில் தெரியாமலே இறைவனை வணங்குகின்றான் அப்பனே

என்ன பிரயோஜனம் அப்பனே ?????

இதனால் அப்பனே இவ் ஐப்பசி திங்களில் (மாதத்தில்) அப்பனே நிச்சயமாய் அப்பனே ஐம்புலன்களையும் எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே

(ஐம்புலன்கள்

கண் - ஒளி
காது- ஒலி
மூக்கு- சுவாசம்
வாய் - சுவை, மொழிதல்
மெய் - உண்மை, உடல்)

பசியோடு பின் இருத்தல்.

அதாவது அப்பனே பசியோடு இருத்தல் என்றால் அப்பனே நலமாகவே பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே ஏற்கனவே யான் சொல்லிட்டேன் அப்பனே அனைத்து துகள்களும் கூட அப்பனே உடம்பில் ஆனாலும் அப்பனே அவையெல்லாம் அடித்துச் செல்லும் என்பேன் அப்பனே.

இதனால் அப்பனே ஒவ்வொருவரும் அறிந்தும் கூட இதனால் அப்பனே முன் ஜென்மத்தில் இறந்துள்ளார்களே !!!!! அவர்களெல்லாம் ஒவ்வொரு அருமையான எதை என்றும் தெரியாமல் கூட அப்பனே பின் இறக்கும் பொழுது ஒவ்வொரு நினைப்பும் கூட.... அப்பனே பல ஆசைகளும் கூட நிறைவேறாத ஆசைகள் கூட அப்பனே!!!!

இதனால் அப்பனே அவ் ஆசைகள் எல்லாம் அப்பனே மனிதன் அப்பனே ஐம்புலன்கள் எதை என்று அறிய அறிய பின் எதனால் ஆசைகள் எல்லாம்
நிறைவேறவில்லையோ அங்கெல்லாம் நுழைந்து அப்பனே அதற்கும் கூட அப்பனே வேலை வைத்துவிடும் அப்பனே!!!!!

மீண்டும் மனிதன் கர்மத்தில் அப்பனே நுழைந்து விடுவான் அப்பனே!!! 

அப்பனே சாதாரணமில்லை மனிதனின் வாழ்க்கை!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் தான் அப்பனே பின் அதாவது நல்முறையாகவே அடக்கி எதை என்றும் அறிய அறிய அப்பனே இவ்வாறு அப்பனே நிச்சயம் பின் புண்ணிய நதிகளில் அப்பனே நீராடினால் அப்பனே நிச்சயம் அவைதன் அப்படியே அடித்துச் செல்லுமப்பா!!!!

அப்பனே மோட்சமும் கிடைக்கும் அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அப்பனே மனிதன் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றான் அப்பனே அவை இவை  அவை செய்தால் இவை நடக்கும் !!............ என்றெல்லாம் அப்பனே

ஒன்றுமே நடக்காதப்பா!!!

நிச்சயம் உண்மையை தெரிந்து கொள்ளாமல் அப்பனே எதைச் செய்தாலும் ஒன்றுமே நடக்காதப்பா!!!!

அதனால் தான் இறைவனை நோக்கி அதாவது இறைவன் மீதே சந்தேகங்கள் !!!! சித்தர்கள் மீதே சந்தேகங்கள் !!!!!

அவை செய்ய!!!  இவை செய்ய!!!! என்றெல்லாம் அப்பனே!!!!

அப்பனே உலகத்தில் வந்து விட்டீர்கள் அப்பனே தெரிந்து அப்பனே நன் முறையாகவே அப்பனே இறைவனை வணங்கினாலே போதுமானதப்பா !! மாற்றங்கள் நிகழுமப்பா!!

நிச்சயம் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே தெரியாமல் அப்பனே இறைவனை வணங்கினாலும் எதையும் கொடுக்க மாட்டானப்பா!!!!

அப்பனே தெரிந்து கொள்ளுங்கள்!!!!

அப்பனே இறைவன் அறிவை பலமாக படைத்திருக்கின்றான் அப்பனே!!!

ஆனால் எதற்?? எதற்காகவோ ?? உபயோகப்படுத்துகின்றீர்கள் அப்பனே!!! 

ஆனால் அப்பனே சிறிதளவு அப்பனே பக்திக்குள் நுழைந்து!!!!!  எதற்காக ?? பக்தி !!! ஏன் சித்தர்கள் ஏன் இறைவன் எப்படி எல்லாம் ஏன் இறைவனை வணங்குகின்றார்கள் என்றெல்லாம் நிச்சயம் அப்பனே நீங்கள் தெரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் கிட்டுமப்பா!!!

நீங்கள் நினைக்கின்றீர்களே!!!

பின் பணங்கள் வேண்டும் குழந்தைகள் அவசியம் நன்றாக இருக்க வேண்டும் தாய் தந்தையர் நன்றாக இருக்க வேண்டும் நோய்கள் வரக்கூடாது என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அப்பனே யான் சொல்லியதை கேட்டாலே போதுமானது அப்பா!!!!

மற்றவை எல்லாம் அப்பனே அவை இவை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தால் அப்பனே நிச்சயம் அப்பனே நோய்களும் வருமப்பா அப்பனே இன்னும் இன்னும் சொல்லப்போனால்  கர்மா உலகத்தில் அப்பனே அழிவுகள் தானப்பா !!!

ஆனால் சிறிது காலமே வாழ்கின்றாய் அப்பனே

அவ் சிறிது காலமாவது அப்பனே நிச்சயம் அப்பனே அனைத்தும் தெரிந்து கொண்டு வாழுங்கள் அப்பனே!!!

தெரியாமல் வாழ்ந்து அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா!!!!

கடைசியில் இறைவனே இல்லை என்று!!....... இதனால் அப்பனே நன் முறைகளாகவே இன்னும் இன்னும் அப்பனே ஏன் எதை என்றும் அறியாமல் இருந்தாலும் அறிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

இன்னும் வாக்குகள் பல கோடி காத்துக்கொண்டிருக்கின்றது அப்பனே.

அனைவருக்குமே வாக்குகள் யான் செப்புவேன்!!!!

ஆனால் முதலில் பின் நிச்சயம் தெரிந்து கொள்ள அவசியம் வேண்டுமப்பா!!!

அதனால் நிச்சயம் அப்பனே என்னென்ன செய்தீர்கள் எதற்காக தண்டனைகள் என்றெல்லாம் அப்பனே!!!

ஆனாலும் சித்தர்களை வணங்கியும் கூட அப்பனே இன்னும் ஆசிரமங்கள் இன்னும் அப்பனே எதையெதையோ செய்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே!!!

ஆனால் கஷ்டங்கள் விலகிய பாடில்லையே ஏன்????????

அப்பனே ஏன்??  எதற்காக?? கஷ்டங்கள் வருகின்றது என்பதை எல்லாம் யாரும் சிந்திப்பதில்லை என்பேன். அப்பனே!!!!

இதற்காகத்தான் அப்பனே அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பேன் அப்பனே!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

மீண்டும் மீண்டும் அப்பனே யான் சொல்லியதை கடைப்பிடித்தால் அப்பனே பின் நிச்சயம் சந்தோசமாக வாழலாம்.

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் நீங்கள் கஷ்டத்திற்குள் தான் நுழைய வேண்டும் !!!! மீண்டும் என்னிடத்தில் அப்பனே இவை அவை என்று கேட்டால்????? அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அவை பயன்படுத்துவதற்கும் எங்கள் ஆசிகள் வேண்டுமப்பா!!!!

அப்பனே நிச்சயம் அப்பனே பல பேர்கள் நன்றாகவே அப்பனே ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய மனித பிறவி என்பது அப்பனே மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும் அப்பனே!!

அவை நிறுத்த வேண்டும் அப்பனே!!!

அவை யார் ஒருவன் அப்பனே சரி முறையாக பயன்படுத்தி கொள்கின்றானோ அவன் அருகிலே இறைவன் இருந்து அனைத்தும் செய்ய வைப்பான் அப்பனே

அனைத்து முயற்சிகளும் அப்பனே எதற்காகவோ ??? எதற்காகவோ????
ஆனால் இறைவனுக்காக அப்பனே ஒரு முயற்சி எடுங்கள் அப்பனே!!!

நிச்சயம் பாதுகாத்துக் கொள்வான் அப்பனே.

இதனால் அப்பனே அனைத்தும் பொய்கள் தான் அப்பா !!!

அப்பனே நிச்சயம் ஈசன் அருகில் இருந்து ஈசனை வணங்கினாலும் அப்பனே கஷ்டம் ஏன் வருகின்றது??? அப்பனே !!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் பல அன்னதானங்கள் இன்னும் பல புண்ணியங்கள் அப்பனே எதற்காக எவை என்றும் அறிந்தும் அறிந்தும் செய்தாலும் ஏன் கஷ்டங்கள் எவை என்றும் அறியாமலே வருகின்றது???

அப்பனே ஆனால் புண்ணிய காரியங்களுக்கு அப்பனே நிச்சயம் அதிக பலமப்பா!!!!

அதைவிட அப்பனே யான் சொல்லியவற்றையெல்லாம் அப்பனே சரிமுறையாகவே கடைப்பிடித்து வந்தாலே இன்னும் புண்ணியம் அப்பா!!!!

அப்பனே நீடூழி வாழ்ந்து விடலாம் அப்பனே கஷ்டங்கள் இல்லாமல் வாழ்ந்து விடலாம்!!!!

இல்லையென்றால் அப்பனே ஆனாலும் கடைசியில் யான் இறைவனை துதித்தேன் யான் இறைவனுக்கு அப்படி செய்தேன். இப்படி செய்தேன் என்றெல்லாம் அப்பனே!!!!

ஆனால் இறைவன் கூட சிரிப்பானப்பா !!!!!

ஏன்??  எதற்காக??? பின் தெரியாமலே வந்து வணங்கி விட்டாயே என்றெல்லாம் அப்பனே எதை என்று அறிய அறிய.

அதனால் அப்பனே நிச்சயம் அப்பனே ஓர் தொழில் செய்ய வேண்டும் என்றாலும் அப்பனே அதில் அனைத்து விஷயங்களை கூட பின் நிச்சயம் தெரிந்து செய்தால் தான் உயர்வுகளும் உண்டு வெற்றிகளும் உண்டு வெற்றி மேல் வெற்றிகளும் உண்டு அப்பனே!!!!

ஆனால் தெரியாமல் செய்தால் அப்பனே ஒன்றும் செய்ய முடியாதப்பா!!!!! மீண்டும் விழ வேண்டியது தான்!!!

அதேபோலத்தான் அப்பனே பக்தி என்பது உலகத்தில் முதன்மையானது என்பேன் அப்பனே!!!!

ஆனால் பக்தி என்பது கடைசியில் அமைத்து விட்டான் மனிதன் அப்பனே.

அதனால் முதலில் எடுத்து வர வேண்டும் என்பேன் அப்பனே பக்தியை!!!

அதற்காகத்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம் அப்பனே !!

பின் பக்தியை கடைசியில் யார் எடுத்து வந்தது என்றால் அப்பனே மனிதனின் மூடநம்பிக்கையே காரணம் என்பேன் அப்பனே!!

அதனால் பக்தியில் அப்பனே இவ்வுலகத்திற்கு முதலிலே எடுத்து வந்தால் அப்பனே அனைத்தும் காப்பாற்றப்படும் அனைத்து உயிர்களும் காப்பாற்றப்படும் என்பேன் அப்பனே!!!

அதனால் மனிதர்களையே தான் திருடர்கள் என்று யான் சொல்வேன் அப்பனே!! மனிதரிடத்தில் தான் அனைத்து குணங்களும் அப்பனே இருக்கின்றது என்பேன் அப்பனே!!!

இக் குணங்களை வைத்துக்கொண்டு அப்பனே என்னென்ன செய்கின்றான்??? மனிதன்!!!

அவையெல்லாம் அடக்கி ஆளும் திறன் அப்பனே நிச்சயம் எங்களுக்கும் நிச்சயம் உண்டு!!!

அதனால்தான் அப்பனே சில மனசாட்சி இல்லாத பின் மனிதர்கள் கூட எதை எதையோ செய்து அப்பனே இறைவனையே இல்லை என்று கூட அப்பனே இன்னும் இன்னும் எதை என்று அறிய அறிய 

ஆனாலும் மறைமுகமாகவும் அப்பனே இறைவனை வணங்கிக் கொண்டு அப்பனே தெரியாத அளவிற்கும் கூட பின் காட்டிக் கொள்ளாத அதாவது அப்பனே யார் என்று அறியாமலே வலம் வந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் நல் மனிதர்கள் கூட அப்பனே!!!

அவர்கள் மூலம் நிச்சயம் வரும் காலங்களில் அப்பனே நிச்சயம் அப்பனே அதாவது இவ் நாராயணனே செய்வான் அப்பனே!!!!

ஏன்???  எதற்காக???  அப்பனே இவ் மலையில் (திருமலை திருப்பதி) இருந்து சொல்கின்றேன் என்றால் அப்பனே!!!!

சில சில விஷயங்கள் அப்பனே நிச்சயம் எங்கு செப்ப வேண்டுமோ அங்கு செப்பினால் தான் அப்பனே பாவங்கள் எதை என்றும் அறியாமலே ஏற்பாடாதப்பா யாருக்கும் !!!.....

 அப்பனே இதனால் நன்றாக இருக்க வேண்டும் அனைவருமே!!!!

ஆனால் அப்பனே இன்றைய நிலையில் அப்பனே எதை என்றும் அறியாமலே அப்பனே!!!

அனைவருமே கேட்கின்றார்கள் !!!! வாக்குகள் வேண்டும் !! வாக்குகள் வேண்டும்!!! என்று அப்பனே!!!

நீ என்ன?? செய்தாய் ???அப்பனே???

என்ன  ?? புண்ணியங்கள் செய்தாய் ???? அப்பனே !!!

புண்ணியத்திற்கு தகுந்தார் போல் தான் நிச்சயம் வாக்குகள் கிட்டும் என்பேன் அப்பனே!!!!

புண்ணியங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!

நீங்கள் புண்ணியங்கள் செய்து கொண்டே இருந்தால்  யானும் வருவேன் !!!! இறைவனை கூட அழைத்து வருவேன் அப்பனே!!!!! அருகிலே!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பவை எல்லாம் அப்பனே ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

இறைவனே தவறு செய்தாலும் அப்பனே எங்களிடத்தில் தான் வர வேண்டும் இதை ஏற்கனவே நீங்கள் உணர்ந்ததே அப்பனே !!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே ஆனால் யாங்கள் தவறுகள் செய்து விட மாட்டோம் அப்பனே!!!! 

"""""'அகத்தியனின் வாக்கு !!!!! அப்பனே வாக்கு !!!!! தான் என்பேன் அப்பனே!!!!

வாக்கை கொடுத்தால் அப்பனே நிச்சயம் அது நிச்சயம் நிறைவேற்றியே ஆகும் என்பேன் அப்பனே

ஆனாலும் அப்பனே உண்மை நிலைகளை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!

உண்மை நிலையை தெரிந்து கொண்டால் தான் அப்பனே எதை என்று விளங்கும் என்பேன் அப்பனே!!!!

ஒருவன் சொல்கின்றான் அப்பனே எதை என்று அறியாமலே பின் எதை என்று புரியாமலே அப்பனே இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய!!!..........

ஜீவநாடி என்பது தெரியாமலே அப்பனே புலம்பிக் கொண்டு இருக்கின்றான் அப்பனே எதை என்றும் அறியாமலும் கூட அப்பனே

பொய் என்பது!!!......

இன்னொருவன் அவையெல்லாம் இன்னும் காசுகளுக்காக என்பது!!!!

பின் அவையெல்லாம் இல்லை என்று சொல்வது!!!........

அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!

ஏனென்றால் பின் இதனைப் பற்றி தெரியாதவர்கள் தான் இப்படி பேசுவார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் தெரிந்தவன் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய லட்சத்தில் ஒருவன் அப்பா சொல்லிவிட்டேன் அப்பனே

அவ் லட்சத்தில் ஒருவனும் மறைந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! அறியும் அனுதினமும் அப்பனே!!! 

அதனால் இறைவனை கூட கலியுகத்தில் பொய் ஆக்குவார்கள் என்பேன் அப்பனே!!!!

இறைவனே நேரடியாக வந்தாலும் சிரிப்பார்கள் அப்பா!!!!

யான் இறைவன் என்று சொன்னாலும் நீ இறைவனா ???....... என்றெல்லாம் அப்பனே

நிச்சயம் இதுதான் அப்பா.

ஆனால் கலியுகத்தில் மனிதனாக இறைவன் நிச்சயம் வரப்போகின்றான் வந்து சென்று கொண்டு தான் இருக்கின்றான் அப்பனே!!!!

ஆனால் நீங்கள் தான் மாயையில் விழுந்து விட்டீர்கள் என்பேன். அப்பனே!!!

அதனால்  கண்ணுக்கு தெரிவதே இல்லை இறைவன் அப்பனே!!!!!

அறிந்தும் அறிந்தும் கூட இதனால் அப்பனே உண்மை நிலையை உணருங்கள் அப்பனே!!!

எம்முடைய ஆசிகள் அப்பனே உலகத்தை ஆக்கவும் எதை என்று கூட அழிக்கவும் என்னாலும் முடியுமப்பா !!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

""""பாசத்திற்குரியவன் அகத்தியன்!!!!!!

மீறி சென்றால் அப்பனே நிச்சயம் நிச்சயம் அப்பனே பின் யான் சொன்னாலும் அது சாபமாக போய்விடும் என்பேன் அப்பனே!!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே பொய்களை பரப்பி பரப்பி அப்பனே கடைசியில் அப்பனே அனைத்தும் பொய்யாக்க கூடும்!!!

இன்னும் இன்னும் எதை எதையோ வைத்துக் கொண்டு அப்பனே இன்னும் அப்பனே எதை என்று கூட சுவடிகளை வைத்துக்கொண்டு பணம் சம்பாதிக்கலாம் என்றெல்லாம் அப்பனே இன்னும் மனிதர்கள் இருக்கின்றார்களப்பா!!!

ஆனால் யாங்கள் வரவேண்டுமே !!!!!!! அப்பனே பரிகாரங்கள் கூறினாலும் அவை தன் பலிக்க வேண்டுமே !!!!!!!

அப்பனே ஏன் ?? பலிப்பதில்லை ???? அப்பனே !!!!!

தெரியாமல் எதை என்றும் அறிய அறிய அனைவருமே சுற்றிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!

மனிதன் என்றால் அப்பனே நிச்சயம் அப்பனே கஷ்டங்கள் பட்டுத்தான் வாழ வேண்டும் அப்பனே 

அப்படித்தான் அப்பனே எதை என்றும் அறிய அறிய மனிதனாக வந்துவிட்டு அனைத்தும் தெரிந்து கொள் அப்பனே!!!!

இன்னும் இன்னும் அப்பனே என்னென்ன நோய்கள் வருவதெல்லாம் யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே!!!

இன்னும் உலகம் எப்படி எல்லாம் அழியும் என்பதை எல்லாம் தெரிவித்துக் கொண்டே வருகின்றேன் அப்பனே!!!

எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே நிச்சயமாக நல் மாற்றங்கள் அப்பனே

அதனால்தான் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் ஏன் எதற்காக என்றால் அப்பனே நிச்சயம் இறைவன் நினைப்பது நிச்சயம் நடந்தேறும் அப்பனே!!!

மனிதன் நினைப்பது நிச்சயம் நடக்காது என்பேன் அப்பனே!!!!

ஏனென்றால் அப்பனே இதை அனைத்து வாக்குகளிலும் கூட தெரிவித்து விட்டேன் அப்பனே!!!!

மனிதன் போடுவது பின் தவறான கணக்கு அப்பனே இதை தெரிவித்து எதை என்று அறிய அறிய இறைவன் இடுவது அப்பனே இன்னும் சரியான கணக்கு என்பேன் அப்பனே!!!!

நீங்கள் ஒன்று நினைக்க அப்பனே நிச்சயம் எதை என்றும் அறியாமல் கூட அப்பனே நீங்கள் நினைப்பதற்கெல்லாம் இறைவன் சிரித்துக் கொண்டுதான் இருக்கின்றான் அப்பனே!!! 

கலியுகத்தில் இவந்தனுக்கெல்லாம் இவை கொடுத்தால் என்ன ஆகும் ??? என்று கூட !!!!

அப்பனே இது அழியும் காலமப்பா!!!...... அழிந்து தான் போகுமப்பா !!!!!

அழிந்து கொண்டே தான் வருகின்றதப்பா !!!!!

ஆனாலும் அப்பனே என் பக்தர்களாவது அப்பனே எதை என்று அறிய அறிய ஏன் நல்லோர்களும் வாழ வேண்டும் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே ஒன்றும் தெரியாத உயிர்கள் எல்லாம் மடிந்து கொண்டிருக்கின்றதப்பா !!!

அவையெல்லாம் யாங்கள் காப்பாற்ற வேண்டும்....

இன்னும் அப்பனே அழிவுகள் வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!

அப்பனே எதன் ?? எதன் ?? மூலம் என்று கூட ஏற்கனவே உரைத்து விட்டேன் அப்பனே !!!

ஆனாலும் நிச்சயம் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே யான் சொல்லியதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே நன்று!!!!

அப்பனே பின் யான் சொல்லியதையும் நீங்கள் பயன்படுத்த புண்ணியம் வேண்டுமப்பா!!!!!!

அப்பொழுதுதான் உங்களாலும் செய்ய முடியும் என்பேன் அப்பனே!! 

ஆனாலும் நிச்சயம் இவ்வாக்குகள் பலமாக இன்னும் இன்னும் இன்னும் கலியுகத்தில் பயன்படும் என்பேன் அப்பனே!!! 

இன்னும் நோய்கள் அழிவுகள் வரும் பொழுது மனிதனுக்கு பயம் ஏற்பட்டு விடும் என்பேன் அப்பனே!!! 

அப்பொழுது புரட்டுவான் !!!!!( வாக்குகளை தேடி பக்கங்களை புரட்டுவார்கள் புரட்டி புரட்டி தேடி பார்ப்பார்கள்) 

அகத்தியன் என்ன சொல்லி இருக்கின்றான் ??? என்று

அப்போது புரிந்து கொள்வான்!!!!!! 
ஓடோடி வருவான் அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே!!!!

அதனால் அப்பனே எப்பொழுது எங்கு எதை என்று அறிய அறிய சிறப்பிக்க வேண்டுமோ அப்பொழுதெல்லாம் எங்களுக்கு தெரியும் அப்பனே!!!

அதனால்தான் கலியுகத்தில் கூட அப்பனே யாங்கள் வந்து வந்து மனிதனை பின் தெரியாமல் கூட இருந்தாலும் தலையில் தட்டி தட்டி அதாவது துன்பத்திற்கு ஆளாக்கி நிச்சயம் நல்லதை செய்து கொண்டிருக்கின்றோம் அப்பனே!!!

அப்பனே இன்னும் சொன்னால் அப்பனே யான் நல்லவன் என்று சொல்வான் அப்பனே.....

ஆனால் அப்பனே திருடன் என்று சொல்லவில்லையே அப்பனே!!!!

ஆனால் திருடன் தான் அப்பனே!!!.... ஆனால் யான் திருடன் என்று யாராவது சொல்கின்றானா என்று கூட பார்த்தால் அப்பனே நம்பி விடாதீர்கள் நம்பி விடாதீர்கள் அப்பனே!!!

எந்தனுக்கு அனைத்தும் தெரியும் என்பான் அப்பனே அவன் தான் அப்பனே திருடனப்பா!!!

ஒன்றும் தெரியாதப்பா!!!

அப்பனே யான் நல்லவன் எந்தனுக்கு ஏன்???? வாக்குகள் வரவில்லை என்று அப்பனே

ஆனால் அவன் தான் திருடனப்பா!!!! 

எங்களுக்கு தெரியுமப்பா !!!!

யாருக்கு வாக்குகள் ??? எப்பொழுது ??? கொடுக்க வேண்டும் என்று !!!!!

அப்பனே நிச்சயம் அப்பனே நிச்சயம் திருத்தலத்திற்கு வாருங்கள் அப்பனே அங்கே சொல்கின்றேன்!!! ஒவ்வொருவருடைய விதியையும் கூட கணித்து அப்பனே வைத்திருக்கின்றேன்!!!

யார்?? எப்படி வாழ்வார்கள்?? தன் பிள்ளைகள் எப்படி போவார்கள்?? அப்பனே  நிச்சயம் தன் குடும்பங்கள் எல்லாம் எதை என்று உணர்ந்து உணர்ந்து எதை சார்ந்து இருக்கின்றது என்பதை எல்லாம் அப்பனே நிச்சயம் திருத்தலத்தில் தான் அப்பனே!!!!

இன்னும் இன்னும் அப்பனே நல்லோர்களுக்காக அப்பனே... புண்ணியங்களுக்காக அப்பனே நிச்சயம் இல்லத்திற்கே வந்து உரைப்பேன் என்பேன் அப்பனே!!!

பின் யான் மட்டும் வர மாட்டேன் அப்பனே இறைவனை கூட அழைத்து வருவேன் என்பேன் அப்பனே!!!

சொல்லிவிட்டேன் அப்பனே!!

நலன்களாக அப்பனே சொல்லிவிட்டேன்...... நீங்கள் தேடி எவை என்று அறிய அறிய அதாவது நீங்கள் தேடி அதாவது என்னை தேடி வர அவசியமில்லை என்பேன் அப்பனே.

நீங்கள் சரியாகவே இருந்தால் அப்பனே யான் தேடி வருவேன் என்பேன் அப்பனே...

இதற்குக் கூட அப்பனே ஒரு மனித முட்டாள்  அப்பனே யான் சரியாகத்தான் இருக்கின்றேன் என்று சொல்வான்!!!!

அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்று அறிய அறிய திருடன் தான் திருடன் என்று சொல்லிக்கொள்ள மாட்டானப்பா!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!!

ஒரு நல்லவன் யான் நல்லவன் என்று சொல்லிக்கொள்ள மாட்டானப்பா!!!!! 

அவை மட்டும் இல்லாமல் யான் அறிவுள்ளவன் என்று சொல்லிக் கொள்ள மாட்டான் அப்பா!!!

அப்பனே இறைவனே யாம் இறைவன் என்று சொல்லிக் கொள்ள மாட்டான் அப்பனே!!!

இறைவன் வலம் வந்து கொண்டிருக்கின்றான் அண்ணாமலையில் கூட அப்பனே!!!!

எதை என்றும் அறிந்தும் கூட சொல்கின்றேன் ஓர்நாள் அப்பனே.... நிச்சயம் அப்பனே!!!

ஆனால் இறைவன் என்று பின் பீத்திக் கொள்கின்றானா ???? என்ன !!!!!

அப்பனே மனிதன் தான் அப்பா பீத்திக் கொள்கின்றான்!!!!!!

ஏன் எதற்காக என்றால் அப்பனே புகழ் பணம் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே எதையெதையோ செய்தாலும் அப்பனே நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய கஷ்டங்கள் வருமப்பா!!!! தீராத பாடில்லை அப்பனே பாடில்லை அப்பனே!!!!!

அப்பனே யானும் உலகத்தில் சுற்றி கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

என்னையும் வணங்குகின்றார்கள் அப்பனே அவை இவை அதை என்றெல்லாம் அப்பனே 

ஆனாலும்!!! ஐயோ!!!  பாவம்!!!  ஐயோ பாவம்!!! 

என்று தலையில் அடித்து கொண்டு செல்கின்றேன் அப்பனே!!!!

ஏனென்றால் தெரியாமல் வணங்கக்கூடாது என்பேன் அப்பனே!!!!

தெரிந்து அதனால் தான் அப்பனே ஒரு கஷ்டத்தை வைத்து பின் அவனை இழுத்து வந்து இதுதான் சரி என்று உணர்த்தி வைக்கின்றேன் அப்பனே!!

அதனால் நிச்சயம் தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே 

இவ் ஐப்பசி தன்னில் அப்பனே எப்படியெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பொழுது எவை என்று புரிய புரிய அப்பனே பின்பு கார்த்திகைக்கு வருகின்றேன் அப்பனே

ஐப்பசி மாதத்தில் பக்தர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறிவிட்டார் அடுத்த கார்த்திகை மாதத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கார்த்திகை மாதத்தில் வாக்குகளில் உரைப்பேன் என்று கூறி இருக்கின்றார்)

இன்னும் இன்னும் எதனால் மாதங்கள் அப்பனே உருவாக்கினோம் ??? என்பதையெல்லாம் தெரிவிக்கின்றோம் அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

தெரியாமல் மீண்டும் மீண்டும் சொல்கிறேன் அப்பனே தெரியாமல் பின் இறைவனை வணங்குகின்றார்கள் என்பேன் அப்பனே!!!

இறைவன் அருகிலே இருந்தும் பல அபிஷேகங்கள் !!!  ஆராதனைகள் !!! அப்பனே என்ன லாபமப்பா ????

போய் கேட்டால் எந்தனுக்கு கஷ்டம் தான் கொடுத்து இருக்கின்றான் என்று!!!!

அடேய்!!!!!!  முட்டாள்!!!! 

உந்தனுக்கு நல்லதை தான் செய்து கொண்டிருக்கின்றான் ஆனால் நீ தான் உணரவில்லையே!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய கலியுகத்தில் ஒவ்வொருவரையும் கூட உருவாக்கி நிச்சயம் அப்பனே நன்மைகளாக செய்வோம் அப்பனே!!!!

நிச்சயம் இன்னும் பார்த்தால் அப்பனே பணத்திற்காக அப்பனே!!!...... பணம் வேண்டும் என்று சொல்கின்றான் தொழில் வேண்டும் என்று சொல்கின்றான் இன்னும் எதை எதையோ கேட்டுக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!!

முதலில் யான் வாழ்வதற்கு என்ன தகுதி என்பதை கூட நீங்கள் தெரிந்திருக்க வேண்டும் என்பேன் அப்பனே!!!

அவ் தகுதி நிச்சயம் இருந்தால் தான் அப்பனே வாழ்க்கையும் தித்திக்கும்!!!

மற்றவைகள் எல்லாம் மாயை..... தானாக வந்து விடும் அப்பனே!!!!! ஆனால் வந்துவிடும் மீண்டும் இறைவன் எடுத்துக் கொள்வான் மீண்டும் எதை என்று அறிய அறிய நீங்கள் கேட்கக் கூடாது.

பின் அனைத்தும் வந்ததே !!! மீண்டும் போய்விட்டதே !!! என்று !!!!

அப்பனே இறைவன் எப்பொழுது கொடுக்கவும் தெரியும் எடுக்கவும் தெரியும் அப்பனே இறைவனுடைய பொருள் அப்பனே உன்னுடைய உடம்பே இறைவனுக்கு சொந்தமானதப்பா!!!!

அவ் உடம்பை வைத்துக் கொண்டு என்னென்னவோ செய்கின்றாய் அப்பனே!!!

ஏன்????  எதற்காகப்பா???? 

சொல்கின்றேன் அப்பனே நோய்கள் வருமப்பா!!!!

இறைவன் கொடுத்த உடம்பை அப்பனே சரியாக பேணிக் காப்பது!!!...... ஆனால் அவையெல்லாம் எப்படி பேணி காப்பது என்பதை கூட ஆனால் பேணிக் காப்பதில்லையே அப்பனே!!!!

நீயே அழித்துக் கொண்டிருக்கின்றாயே!!!!

இறைவனுக்கு சொந்தமானதை நீயே எதை என்று அறிய அறிய அழித்துக் கொண்டிருக்கின்றாய். அதனால்தான் அப்பனே கடைசியில் பின் உன்னாலே பின் உடம்பும் கெட்டுப் போகின்றது அப்பனே அறிந்தும் கூட ஒன்றும் செய்யாமல் போய்விடுகின்றது அப்பனே!!

அதனால் அப்பனே அதனால்தான் இறைவன் கொடுப்பான் பணமும் கொடுப்பான் அப்பனே தொழிலும் கொடுப்பான் அப்பனே அனைத்தும் கொடுப்பான் அப்பனே

ஆனால் அப்பனே ஓர் நாள் பின் அதனாலே பிரயோஜனம் இல்லாமல் செய்து விடுவான் அப்பனே!! 

இறைவன் படைத்தவன் அவந்தனக்கு அனைத்து தகுதிகளும் இருக்கின்றது என்பேன் அப்பனே!!!

நீ வெறும் அப்பனே கூடு  அப்பா!!!!! 

அதாவது மண் பானை அப்பா!!!

பின் எதை என்று கூட தூக்கி போட்டால் உடைந்து விடுவாயப்பா!=!

அவ்வளவுதான் பிறவி என்பேன் அப்பனே!! 

இவ்வளவு சுலபமான பிறவிக்கு அப்பனே என்னென்ன ஆட்டங்கள்??? என்னென்ன பொய்கள் ??? என்னென்ன நாடகங்கள்??? அப்பனே முடியாதப்பா !!! முடியாது !!!!

அப்பனே இன்னும் இன்னும் பெருமானை பற்றிய லீலைகளை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே !!!

இன்னும் சித்தர்களை பற்றிய ரகசியங்களை எல்லாம் சொல்கின்றேன் அப்பனே நன்முறைகளாகவே!!!!

அப்பனே இறைவன் ஒருவனே !!!  நிச்சயம் கடைசியில் காட்டுவோம் அப்பனே!!!

நல் முறைகளாகவே ஆசிகளப்பா !!! ஆசிகள் !!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 30 October 2023

சித்தன் அருள் - 1489 - அந்தநாள்>>இந்த வருடம் 2023 >> கோடகநல்லூர் பூஜை அகத்தியர் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

26/10/2023 வியாழக்கிழமை அன்று அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து அகத்தியப்பெருமான் துணையுடன், அவர் உத்தரவின் பேரில் கோடகநல்லூர் நீளா பூமி சமேத பச்சைவண்ணப் பெருமாளுக்கு, செய்த அபிஷேக ஆராதனைகளுக்குப் பின், குருநாதர் உரைத்த அருள் வாக்கு!

"ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். அப்பனே! எம்முடைய ஆசீர்வாதங்கள்! அனைவருக்குமே. அப்பனே! யானும், லோபாமுத்திரையும், நிச்சயமாக வந்திருந்தோம். எதை என்று கூற. அது மட்டுமல்லாமல், அனைவரின் கூட, யாங்களும் உணவை உண்டோம் அப்பா! நலன்கள், அப்பனே, ஆசிகள். அதை அறிந்து நாராயணனும், என் பக்கத்தில் ஓடோடி வந்து,

"அகத்திய மாமுனிவரே! நீ மட்டும் எப்படி மக்களோடு ஒன்றாக (இருந்து உண்கிறாய்)! நிச்சயம், யான் நிச்சயம் அருந்த மாட்டேன், எதை என்று அறிய அறிய! நீரையும் கூட! நிச்சயம் நீ வாங்கி உட்கொண்டாயல்லவா! அதனை சிறிதளவு நீ கொடுத்தாலே போதுமானது. சரி! உன் பாக்தர்களுக்கு எதை செய்ய வேண்டும் என்று அறிய அறிய, அகத்திய மாமுனிவர், என்றும் கூற, பின் யானும் கூட, சரி! ஆசீர்வாதங்கள் கொடுங்கள் (என்றேன்).

"மாமுனிவரே! அனைத்தும் உணர்ந்த முனிவருக்கெல்லாம், மாமுனிவரே! உன்னை எப்படி சொல்ல? அனைவரின் கர்மாவை கூட, நல்லோர், தீயோர் அனைவரையும் சமமாக நிலையிருத்தி, பின் அனைவரின் கர்மாவையும், தீயவன் ஆயினும், திருத்துவோம் என்று  உனது கருணை மிகப்பெரும் கருணை, அதனால், அறிந்தும், அறிந்தும் இன்னும் ஞானங்கள்! இப்பொழுது அதன் ரகசியத்தை அறிந்து, உணர்ந்த மாமுனிவரே, நீங்களே அருளுங்கள். உங்களால், அனைத்துமே முடியும் என்று!

அதனுள்ளே, நிச்சயம், வருணபகவானும் பின், முனிவரே பின் நல் மனதோடு இருந்தால், இவ்வுலகத்திற்கு நன்மையை செய்வேன்! நிச்சயம் அதை மீறி செயல்பட்டால் தான் அனைத்துமே அழியும், என்னால், என்பதை எல்லாம். ஆனாலும், அப்பனே தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே, இவ்வுலகம் அறிந்தும் கூட பொய்யை, உண்மையாக்கும். எவை என்று புரிய புரிய, இவ்வுலகம், உண்மையை பொய்யாக்கும்! இதுதான் உலகமப்பா!

அப்பனே, அனைவரையும் பார்த்தேன் அப்பனே! சந்தோஷமாக! ஆனாலும், சில சில மனவருத்தங்கள் தானப்பா! அப்பனே! ஒருவருக்கு ஒருவர் மனதுக்குள்ளே என்ன புலம்புகிறீர்கள்/எண்ணுகிறீர்கள் என பார்த்துக் கொண்டு தான் இருந்தேன். அப்பனே! ஒன்றுமில்லையாப்பா! அப்பனே! இறைவன் மூச்சை நிறுத்தினால். போதும் அப்பா. அனைவரும் ஒன்றுதானப்பா! இதை புரிந்துகொண்டால். நன்று அப்பனே! ஒரு நரம்பை இழுத்து பிடித்தால் போதுமானதப்பா! இதை உணர்ந்து கொள்ளுங்கள் அப்பா! ஆனாலும், நிச்சயம், அனைத்தும் தெரிந்து கொண்டுதான் யான் மௌனமாக இருக்கின்றேன். அதனால், குறைகள் ஏது. அப்பனே! என்பக்தன் என்னையும் பார்த்துவிட்டான் அப்பனே! அப்பனே, இன்னும் உண்மைகளையும் கூட உணர்த்திவிட்டேன் அப்பனே. எதற்காக கஷ்டங்கள் வருகிறது என்று. அங்கிருக்கும் மனிதர்களுக்கு, தெளிவாக உணர்த்திவிட்டேன் அப்பனே. மீண்டும் புரியவில்லை என்றால். அப்பனே, இன்னும் ஒரு முறை உணர்த்தினால், தாங்கமாட்டார்களப்பா! அப்பனே! மனிதப்பிறவி என்றாலே இப்படித்தானப்பா.

அனைவருக்கும், எமது ஆசிகள். வருண பகவானும் வந்து, உண்டு அனைவரையும் ஆசிர்வதித்து, அவன் தனும் வந்து, கீழே குனிந்து "முனிவரே! நீங்கள் உட்கொள்வதை எந்தனுக்கும் தாரும் என்று, அவனுக்கும் சிறிது அளவு கொடுத்து, அனைவரையும் மகிழ்வித்து சென்றேன். 

அப்பனே! அனைவருக்கும், என்னால் பாடத்தை கற்பிக்க இயலும்! ஆனாலும், அப்பனே, உண்மை நிலை தெரியவில்லையே அப்பனே! உண்மை நிலை தெரியாமல் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் அப்பனே!  இவை அவை என்றெல்லாம். அனைத்தும் வீணாக்குமப்பா! ஆகவே, உன் நிலைமையை பாரப்பா! உன் நிலைமையை பார்த்தாலே போதுமானதப்பா. மற்றவை எல்லாம் யான் பார்த்துக் கொள்கின்றேன் அப்பா! அதனால். முந்திக்கொண்டு செல்லாதே அப்பனே! முந்திக்கொண்டு சென்றால் அப்பனே! அடியில் விழுந்து விடுவாய் அப்பனே! இன்னொருவன் உன் மேலே உட்கார்ந்துவிடுவான் அப்பனே! எழுந்திருக்க முடியாதப்பா. அதுதான் கர்மா அப்பா! 

இன்னம் இன்னும் உண்மைகளை தெரிவிக்கின்றேன் அப்பனே! உண்மைகளை தெரியாமல் வாழ்வது வீண் அப்பா! வீண். அறிந்தும், அறிந்தும், என் பக்தர்கள் உண்மை நிலையை அறிந்து கொள்வது நிச்சயம் அப்பனே. அனைவருக்கும் லோபாமுத்திரையோடு ஆசீர்வாதங்கள் அப்பனே! கோவிந்தன், நல் ஆசீர்வாதங்கள் கொடுத்து கொடுத்து, அப்பனே, ஏற்கெனவே, செப்பிவிட்டேன், மனக்குழப்பத்தை எவ்வாறெல்லாம் நீக்கினேன் என்று.

இன்னும், இன்னும், மாற்றங்கள், அதிசயங்கள், வாக்குகள் எல்லாம் காத்துக்கொண்டிருக்க, நலன்கள் அப்பா! ஆசிகள்! ஆசிகள்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 29 October 2023

சித்தன் அருள் - 1488 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 8!


(இந்த வாக்கின் முந்தைய பதிவுகளை சித்தன் அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 ,1485 பதிவுகளில் பார்க்கவும்)

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

குருநாதர்:- அப்பனே அதாவது கடனுக்காக என்று (அகத்தியனிடம் கேட்கின்றீர்கள்) அனைவருமே. கடனை அடைப்பதற்காகத்தான் பிறவியே எடுத்து வந்திருக்கின்றீர்கள். அவ்கடன் (பிறவிக்கடன்) எப்படியப்பா அடைபடும். நீ (பணமாக) கடன் வாங்கியது அடைந்துவிடும். ஆனாலும் அப்பனே, அனைவருமே ஒரு கடனை பின் அடைக்க உலகத்திற்கு வந்திருக்கின்றார்கள் அப்பனே. அவ்கடன் எப்போதுதான் அடைக்கப் போகின்றீர்கள்? அவ்கடனை அடைத்தால்தான் மோட்சம். இல்லை என்றால் இல்லையப்பா.

அடியவர்:- சரிங்கய்யா

குருநாதர்:- ஆனால் அவ்கடன் மிகப் பெரியதப்பா. வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் ஒவ்வொருவருக்கும் எப்படி அடைக்க வேண்டும் என்பதைக்கூட. அதை விட்டு விட்டு பணத்தைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்கின்றீர்கள் அப்பனே. முட்டாள் மனிதர்களே.

அடியவர்:- (மௌனம்)

குருநாதர்:- அப்பனே, அவ்கர்மா கடனை அடைத்து விட்டால் துன்பங்கள் என்பதே நெருங்காதப்பா. ஆனாலும் அதற்கு பக்குவங்கள் பட வேண்டும். பல பல வழிகளிலும் கூட துன்பங்கள் பட்டு பட்டு எழுந்திருக்க வேண்டும். அப்பொழுதுதான், அப்பனே கடன்கள் அடைக்க வேண்டும் என்றால் அப்பனே நிச்சயம் நீங்கள் இவ்வுலகத்திற்கு நீங்கள் கடனுடனே வந்திருக்கின்றீர்கள் அனைவருமே. அவ்கடனை அடைக்க வேண்டும் என்றால் அதறக்கு சரியான தீர்வு துன்பம்தானப்பா. அப்பொழுது நீங்கள், இதிலிருந்து என்ன உந்தனுக்கு பின் தெளிந்தது கூறு?

அடியவர்:- துன்பத்தை அனுபவித்து கடைனை தீர்க்கணும்.

குருநாதர்:- அப்பனே இதனால் தீபங்கள் அப்பனே ஏற்றுகின்றாயே, அப்பனே ஆனாலும் ஏற்றிவிட்டால் மட்டும் அப்பனே நண்மைகள் ஆகிவிடுமா என்ன? அப்பனே. இவை எல்லாம் (மதுரையில் உரைத்த வாக்குகள் அனைத்தும்) நீ சொல்ல வேண்டும். அப்பனே புண்ணியங்களும் செய்ய வேண்டும். இவை எல்லாம் அங்கு அங்கு செப்ப வேண்டும் மனிதர்களுக்கு அப்பொழுதுதான் புண்ணியம் மிகுந்து காணப்படும் அப்பா. இல்லை என்றால் அப்படியேதான் அப்பனே. மண்ணை கையில் எடுத்துக் கொண்டேதான் (பிரயோஜனம் ஏதும் இல்லாமல்) செல்ல வேண்டும் சொல்லிவிட்டேன்.
————————————————
(அகத்திய பிரம்ம ரிஷிகள் மிக உயர்ந்த புண்ணியம் எது என்ற வாக்கில் உரைத்த வாக்கினை இங்கு கீழே தருகின்றோம். இந்த வாக்கின் முழு பதிவு சித்தன் அருள் - 1097 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு! என்ற பதிவில் படிக்கவும். இந்த பதிவு உங்கள் பார்வைக்கு

https://siththanarul.blogspot.com/2022/03/1097.html?m=1

இந்த பதிவில் உள்ள உயர் புண்ணியம் தொடர்பான வாக்குகளை பாரப்போம்:-

அப்பனே மிக உயரந்த புண்ணியம் எதுவென்றால் அப்பனே எவையன்று கூற பின் தெரியாதவர்களுக்கு வழி காட்டுதலே அப்பனே மிகவும் பெரிய புண்ணியம் முதல் நிலை வகிக்கின்றது என்பேன் அப்பனே. பின் இதுதான் மிக்க புண்ணியம் என்பேன் அப்பனே. 

அவைதன் நல்முறைகளாக இப்படித்தான் வாழ வேண்டும் என்று ஒரு ஒழுக்கத்தை சரியாக கடைபிடித்துச் சென்று கொண்டாலே இவையன்றி கூற இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட வகுத்து மற்றவர்களுக்கு செய்தால் அப்பனே ஒன்றும் தெரியாதவர்களுக்குக்கூட அப்பனே இவையன்றி கூற இப்படிச் செய்தால் நலன்கள், இப்படிச்செய்தால் இவையன்றி இறையருள் கிட்டும் என்பதைக்கூட சொல்லிக் கொண்டே சொல்லிக்கொண்டே சென்றிருந்தால் அப்பனே அதில்தான் அப்பனே முதல் வகையான புண்ணியங்கள்.

அனைவரும் அன்னத்தையும் இவையன்றி கூற யான் எதனை என்றும் குறிப்பிட இல்லாமல் அன்னத்தையும் மற்றவர்களுக்கு எவை என்று கூறும் எதனையும் என்றும்கூற (அன்னதானம் முதலிய) புண்ணியச்செயல்கள் செய்தாலும் அப்பனே முதலில் வருவது அப்பனே எவையன்றி கூற பின் மற்றவர்களுக்கு பின் வழிதெரியாமல் இதைத்தான் இப்படித்தான் என்று காட்டுவதே முதல் வகையான புண்ணியம் என்பேன் அப்பனே. 

அப்பனே பரிசுத்தமான வாழ்க்கை இப்படித்தான் வாழ வேண்டும் என்பதைக்கூட எடுத்துரைத்தால் அப்பனே மனிதர்கள் அதை பின்பற்றினால் அப்பனே உங்களுக்கு நிலமைகள் மாறும். மாறும் என்பேன்

எனவே அடியவர்கள் அன்னதானம், தீபங்கள் ஏற்றும்போது அவர்களுக்கு நல் வழி சொல்லி அவர்களை கடைபிடிக்கச் செய்யுங்கள். ஏதும் தெரியாத மனிதர்களுக்கு குருநாதர் காட்டிய நல் வழிகளை எடுத்து கூறுங்கள். அவர்கள் அதை பின்பற்றினால் அதுவே உங்களுக்கு முதல் மிக உயர் புண்ணியத்திற்கு வழி வகுக்கும்.)
———————————————

அடியவர்:- ( அடியவருக்கு நாடி அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்கள் எடுத்து உரைத்தார் பின் வருமாறு:- ஐயா தீபம் எத்தும்போது எப்படி வாழனும், எப்படி செய்யனும் அப்படீன்னு சொல்லுங்க. அப்பதான் கஷ்டம் நீங்கும்)

குருநாதர்:- அப்பனே, இதை தொடங்கி வைத்தானே ,

(அகத்திய பிரம்ம ரிஷி தனது நாடி வாக்கில் பல முறை தனது மைந்தன் என்று அழைக்கப்பட்ட அகத்தியர் திருவடி சேர்ந்த உயர்திரு. அகத்தியர் திருமகன், அகத்தியர் அதிஷ்ட தீபக்குழு நிறுவனர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் சிவபெருமான் , முருக பெருமான் , அகத்தியர் பெருமான் இவர்களின் ஆசி பெற்ற உயர் ஆன்மா ஆவார். ஐயா அவர்கள் அகத்திய பிரம்ம ரிஷி நாடி அருளாளர் திரு. ஹனுமன் தாசன் அய்யா அவர்கள் மூலமாகவும், அகத்தியர் ஜீவநாடி தஞ்சாவூர் கணேசன் ஐயா அவர்களின் ஜீவநாடி மூலமாகவும் ஆசி பெற்று அதன் மூலமாக உள்ளுணர்வு தூண்டப் பெற்று அகத்தியர் அதிர்ஷ்ட தீபக் குழுவை அமைத்தார்கள். தஞ்சை அகத்தியர் நாடியில் திரிசூலம் மாமுனிவர்களாகிய அருள்மிகு அகத்தியர் மஹரிஷி, வசிஷ்ட மகரிஷி மற்றும் விஷ்வாமித்திர மகரிஷி ஆகியோர் ஆசி கொடுத்து மனித பிறவியை உருவாக்கி , அவர் மூலம் இந்த பூலோகத்தில் தீபங்கள் மூலம் அருள் வளம் பெற வாழ்ந்த ஒரு மாமனிதர். அகத்தியர் திருமகன் ஐயா அவர்கள் பிருங்கி மகரிஷி மற்றும் பிருகு மகரிஷி ஆன்மா தொடர்பு உடையவர் என்பதை அடியவர்கள் அறியத் தருகின்றோம். நாடி வாக்கு தொடர்கின்றது.….. )

பல பேருக்கும் நன்மை செய்தான் ஆனாலும் அப்பனே அவர்களுக்கெல்லாம் கஷ்டங்கள்தான். ஏன் வந்தது? ஆனாலும் வாழத்தெரியவில்லையப்பா. இவன்தனும் கற்றுக்கொள்ள அதாவது பின் சொல்லிக் கொடுக்கவில்லையே அப்பா. அதனால்தான் துன்பங்களாக போய்விட்டது அனைவருக்குமே. அதை நீ செய்து விடாதே வரும் காலங்களில் சொல்லிவிட்டேன் அப்பனே.

அடியவர்:- ஐயா வழி நடத்துங்க ஐயா. என்ன செய்யனும்னு. ( மற்ற அடியவர்கள் :- சொல்லனும் எப்டி வாழனும்னு. துன்பத்தை அடைஞ்சு அடைஞ்சுதான் கர்மா போகும். அப்படீன்னு தீபம் ஏற்றும் பொழுது  சொல்லணும்)

குருநாதர்:- அப்பனே பின் தீபம் ஏன் ஏற்றுகின்றீர்கள்? கூறுங்கள்.

அடியவர்:- (மறுபடி கேள்வி பதில் ஆரம்பித்ததால் அடியவர்க்கள் மகிழச்சி, சிரிப்பு) ஜோதி வழியாக இறைவனை தரிசனம் செய்ய.

குருநாதர்:- அப்பனே அப்படி இல்லையப்பா. அப்பனே இவ்தீபம் இப்படி எரிகின்றதே (பிரகாசமாக அனைவருக்கும் ஒளி கொடுத்து) அதே போலத்தான் தன் வாழக்கையும் எரிய வேண்டும் என்பதற்கே தீபங்கள் என்பேன் அப்பனே. ஆனாலும் அப்படியே எரிந்திருக்க அப்பனே அதற்கு என்ன தேவை என்று பின் அனைத்தும் தெரியும் என்பேன். அது போலத்தான் நீங்கள் அழகாக பின் ஒளிர்வதற்கு அப்பனே புண்ணியங்கள் தேவைப்படுகின்றது என்பேன் அப்பனே. அப்படி புண்ணியங்கள் இல்லை என்றால் அப்பனே தானாக தீபமும் அணைந்துவிடும். நீங்களும் அணைந்து விடுவீர்கள். அவ்வளவுதான் வாழ்க்கை அப்பனே.

அடியவர்:- (அமைதி)

குருநாதர்:- அப்பனே பின் நீ சேவைக்காகவே வந்தவன் அப்பனே. ஒவ்வொன்றாக எடுத்து கூற வேண்டும். சொல்லிவிட்டேன். அப்படி எடுத்துக் கூறவில்லை என்றால் பல பல சுவடிகள் ஓதிக்கொண்டு இருப்பவர்கள் கூட எப்படி வாழ வேண்டும் என்பதை எல்லாம் கற்றுக் கொள்ள அதாவது சொல்லித் தரவில்லை அப்பா மனிதர்களுக்கு. இதனால்தான் சுவடிகளை படிப்பவர்களுக்கு எல்லாம் கஷ்டங்கள் வந்து கடைசியில் அப்பனே பாதாள லோகத்திற்கு சென்று விடுகின்றார்கள் அப்பனே. ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா. தன்னைத்தானே அழித்து மற்றவர்களையும் அழித்துக் கொண்டிருக்கின்றான். அதனால் உண்மை நிலை அப்பனே யாங்களே மனிதனை திட்டித் தீர்க்கவில்லை என்றால் அப்பனே வரும் காலங்களில் பின் சித்தர்களே பொய். சித்தர்களே இல்லை என்று ஒரு வாரத்தையில் சொல்லிவிட்டு போயிருப்பான் அப்பா. அதனால்தான் மனிதர்களுக்கு முதலில் பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி பின் வாக்குகள் ஒவ்வொரு சித்தனாக உரைப்பான் அப்பனே. (சித்தர் பெருமான்) போகன் அறியாததா நீங்கள் அறிந்திருக்கப் போகின்றீர்கள்? அப்பனே. அப்பனே உப்பை சிறிது நீரில் இட்டு அருந்தினாலே அப்பனே போகனை நினைத்து போகனே வந்து சில நோயை குணப் படுத்துவானப்பா. அப்பனே தெள்ளத் தெளிவாக இருங்கள். தெளிவாக இல்லை என்றால் மற்றவர்கள் உன்னை சுலபமாக ஏமாற்றிவிட்டு சென்றிருப்பார்கள் அப்பனே சொல்லிவிட்டேன். இறைவன் ஒருபோதும் உன்னை ஏமாற்ற மாட்டான் சொல்லிவிட்டேன் அப்பனே. துன்பங்கள் கொடுப்பானே தவிர அப்பனே ஏமாற்றமாட்டான் அப்பனே சொல்லிவிட்டேன். சொல்லிவிட்டேன். அப்பனே ஏன் பழத்தை இறைவனுக்கு வைக்கின்றார்கள்?

அடியவர்:- நிவேத்தியம்

குருநாதர்:- அப்பனே துன்பங்கள் பட்டு பட்டு பல வகைகளிலும்கூட இன்னல்கள் பட்டு பட்டு அப்பனே கடைசியில் அப்படி பட்டால்த்தான் கடைசியில் அதுவே இறைவனிடத்தில் வருகின்றது. அதனால்
நீங்கள் சுலபமாக இறைவனிடத்தில் வந்து விடுவீர்களா என்ன? அப்பனே தெரிந்து கொள்ளுங்கள். இதற்கு பன்மடங்கு அர்த்தங்கள் உண்டு. ஒவ்வொரு வாக்கிலும் சொல்லுகின்றேன்.

அடியவர்:- புரியுதிங்கய்யா

குருநாதர்:- அப்பனே, கற்பூரம் கற்பூரம் என்று கூறுகின்றார்களே, எதற்காக அதை ஏற்றுகின்றார்கள் இறைவனுக்கு?

அடியவர்:- கற்பூரம் ஒளிவிட்டு தன்னைத்தானே எரிச்சிக்குது.

குருநாதர்:- அப்பனே இதிலிருந்தே புரியவில்லையா? அதாவது எப்படி உருகி உருகி நிற்கின்றதோ அதுபோலத்தான் பிறர்நலன் நீங்கள் காணவேண்டும் அப்பனே. அப்படி இருந்தால்தான் இறைவனுக்கு அப்பனே இதை எல்லாம் தெரிந்து கொள்ள வேண்டும். அவசியம் என்பேன் அப்பனே. தான் கெட்டுவிட்டாலும் மற்றவர்கள் நன்றாக இருக்கவேண்டும் என்று யார் ஒருவன் எண்ணுகின்றானோ அவன்தன் பக்கத்தில்  இறைவன் இருப்பான் அப்பனே. அது புறத்திலே உள்ளதப்பா. ஏன் பின் இறைவனுக்கு புஷ்பத்தை வைத்துக் கொண்டு வணங்குகின்றீர்கள்?

அடியவர்:- மலர் தனக்குன்னு ஏதும் வச்சுக்கிரது இல்ல. வாசத்த கூட பிறருக்குத்தான் கொடுக்குது.

குருநாதர்:- அப்பனே இன்று பூ. நாளை அது உதவாதப்பா. இவ்வளவுதான் வாழ்க்கையப்பா. இதுதான் மனிதனப்பா. அதாவது உதவாத உடம்பை வைத்துக்கொண்டு பின் ஏதாவது செய்யுங்கள் என்பதே இதனுடைய அர்த்தம் சொல்லிவிட்டேன். இதன் பின் அர்த்தத்தையும் இன்னும் இன்னும் சொல்கின்றேன். புரிகின்றதா அப்பனே? இன்று மனிதன் நாளை எங்கேயோ அப்பனே.

அடியவர்:- புரியுது.

குருநாதர்:- அப்பனே இறைவனுக்கு தெரிந்துதான் அனைவருமே செய்து கொண்டு இருக்கின்றார்கள். ஆனால் உங்களுக்குத்தான் தெரியவில்லை என்பேன் அப்பனே. அதை எல்லாம் கேட்காதீர்கள் அப்பனே. துன்பம் வந்துவிட்டது , எதற்காக இவ்வாறு சண்டைகள்? கடன் தொல்லைகள் என்றெல்லாம் தெரிந்து வாழுங்கள் அப்பனே. என்னை நம்பி பின் (ஏதும் வாழ்க்கையை பற்றி) தெரியாமலே வாழ்ந்தால் ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பா அகத்தியனை வணங்கிக்கூட.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 1487 - அந்தநாள்>>இந்த வருடம் - கோடகநல்லூர்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

அந்தநாள்>>இந்தவருடம் தலைப்பில், கோடகநல்லூரில் நீளா ப்தூமி சமேத பிரஹன்மாதாவ பெருமாளுக்கு அகத்தியப்பெருமான் நடத்துகிற அபிஷேக ஆராதனை நிகழ்ச்சி, அடியவர்கள் பங்களிப்புடன் மிக சிறப்பாக நடைபெற்றது. அப்பொழுது எடுத்த ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்!

அந்தநாள் இந்த வருடம் பூஜையை பற்றி விரைவில் தொகுப்பாக சமர்ப்பிக்கிறேன்.
















ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 28 October 2023

சித்தன் அருள் - 1486 - அன்புடன் அகத்தியர் - காளிகாஜி மந்திர். தெற்கு டெல்லி!







சமீபத்தில் குருநாதர் அகத்தியப் பெருமான் உரைத்த பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் காளிகாஜி மந்திர். தெற்கு டெல்லி. 

ஆதி ஈசனின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன் 

அப்பனே நலன்கள் ஆசிகள் அப்பனே பெருகிக்கொண்டே போகும் என்பேன் அப்பனே  நலன்களாகவே உண்டு உண்டு  அப்பனே எதை என்றும் கூட எதிர்பார்க்காத அளவிற்கு கூட அப்பனே கலியுகத்தில் அப்பனே தொந்தரவுகள் தானப்பா!!

அதனால் தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே வாக்குகளாக எதை என்று கூட சொல்லிக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே நலங்களாக!!!

காளிகா. எவை என்றும் அறிய அறிய தேவி எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே சக்திகள் அப்பனே பல பல!!!! 

ஏனென்றால் அப்பனே பின்

முன் யுகத்தில் எதை என்றும் அறியாமலே ஆனாலும் மக்கள் பிறந்து பிறந்து இறைவனை நாடி நாடி அப்பனே பய பக்தியோடே தொழுதனர். 

இதனால் இறைவன் அனைத்தும் செய்தான் அப்பனே !!!!

ஆனாலும் கலியுகத்தில் அப்பனே எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட அப்பனே மனிதனுக்கு பக்திகள் காட்ட தெரியவில்லையப்பா!!!!
அதனால்தான் தோல்விகளில் போய் முடிந்து விடுகின்றது என்பேன் அப்பனே!!!! 

பக்திகள் எவ்வாறு ??காட்டுவது என்பதை கூடஅப்பனே சரியான முறையில் அப்பனே நிச்சயம் காட்டினாலே போதுமானதப்பா!!!!! 

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து அப்பனே அனுதினமும் இறைவனை பிரார்த்தனை அதாவது அனைவரும் கூட கூட்டுப் பிரார்த்தனை செய்தாலே அப்பனே  நிச்சயம் அனைத்தும் வெற்றி ஆகுமப்பா!!!!! 

ஆனால் தற்போது நிலைமையில் அது இல்லையப்பா!!!

இல்லத்தில் கூட அப்பனே பல பல சண்டைகள் அப்பனே எதை என்று அறிய அறிய யான் பெரியவன் நீ பெரியவன் என்றெல்லாம் அப்பனே!!!  எந்தனுக்கு பின் அனைத்தும் தெரியும் உந்தனுக்கு என்ன தெரியும்?????????? 

ஒருவன் பின் பக்தி இன்னொருவன் பக்தி இல்லை பின் பக்தியாக உள்ளவனை கூட பின் எதை என்றும் அறிந்து பின் பக்தி இல்லாதவன் இவையெல்லாம் வீண் என்றெல்லாம் அப்பனே இல்லத்திலே சண்டைகளப்பா!!! குழப்பங்களப்பா!!! 

இவ்வாறு இருக்க இல்லத்திலே குழப்பங்கள் ஆயின் அப்பனே வெளியில் வந்தால் எவ்வாறு நல்லது நடக்கும்!!??? என்பதை கூட நீங்கள் அறிந்து கொண்டீர்களா அப்பனே

நிச்சயம் நடக்காது அப்பனே

யான் ஒவ்வொருவர் இல்லத்திலும் கூட பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!

சண்டைகள் அப்பனே!!! ஒருவன்!!!!...... இல்லை அதாவது இறைவன் இல்லை என்று சொல்லி விடுவது. மற்றொருவன் இறைபக்தி தான் ஜெயிக்கும் என்று.

ஆனாலும் அப்பனே இதை கேட்டுக்கொண்டே இருக்கும் இறைவன் அப்பனே நிச்சயம் எப்படித்தான் நன்மை செய்வான்???????என்பதை கூட அப்பனே!!!! 

அதனால் அப்பனே நிச்சயம் கலியுகத்தில் அப்பனே திருடர்கள் தான் மிச்சம் அப்பா!!!!

இதனால் எதை என்றும் அறிய ஆனாலும் அப்பனே உண்மையாக இருங்கள் நிச்சயம் எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே தெய்வமே தேடி வரும் அப்பா இதுதான் உண்மை

ஆனாலும் அப்பனே பல வழிகளிலும் கூட அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே இங்கு பல அநியாயங்கள் அக்கிரமங்கள் அப்பனே நடந்து கொண்டே இருந்தது அப்பனே!!!!!..... பல வருடங்களுக்கு முன்பே!!!

அப்பனே பல அக்கிரமங்கள் அநியாயங்கள் கற்பழிப்புக்கள் அப்பனே பின் பெண்களை இழிவாக பேசுவது இவை எல்லாம் நடந்து கொண்டிருக்கையில் அப்பனே இவை என்றும் அறிய அறிய அப்பனே பின் யார் துணை????? என்பதை எல்லாம்!!!!!

ஆனாலும் அரசும் கூட மக்களுக்கு மிகுந்த துன்பங்கள் கொடுத்ததப்பா இதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதை என்றும் அறிய அறிய பின் பெண் தெய்வத்தை அழைத்தார்கள் எதை என்றும் அறிய அறிய!!!

பின் உங்களைத்தான் நம்பிக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு விடிவெள்ளியே இல்லையா?????????????

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அதனால் உண்ணாமலும் உறங்காமலும் பின் தேவியை எதை என்றும் அறிய அறிய பல பாடல்களை காளிகா தேவியே என்பதை எல்லாம் காளிகா தேவியே என்பதை எல்லாம் இன்னும் இன்னும் எதை என்றும் அறிய அறிய பின் நீங்கள் தான் துணை!!!

இவ் அரசாங்கம் எங்களுக்கு ஏதும் செய்யவில்லை!!! பட்டினியாகக் கிடந்து எங்கள் பிள்ளைகளையும் கூட பட்டினியாகவே எதை என்றும் அறிந்து அறிந்து???

ஏன்????? இவ்வாறு தான் நடக்க வேண்டுமா???? என்று அனைவரும் கூட ஒன்றாக இணைந்து கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர் எதை என்றும் அறிய அறிய!!!!

இதனால் நிச்சயம் எதை என்றும் அறிய அறிய இவ் தேவி இங்கு தோன்றினாள்!!!!

தோன்றிட்டு எதை என்றும் அறியாத அளவிற்கும் கூட

"""யான் உங்களைக் காப்பாற்றுகின்றேன்!!!!!! என்றெல்லாம்!!!!!!

எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அனைவரும் எதை என்றும் அறிய அறிய பின் ஆனாலும் (மக்கள் மனம்) மனங்கள் ஒத்துக்கொள்ளவில்லை!!!!

ஒரு பெண்ணா !!!!!! காப்பாற்றுவாள்??????????

யார் இந்தப் பெண்??? என்றெல்லாம் சந்தேகங்கள்!!!!

ஆனாலும் தேவி மனித ரூபத்தில் வந்து விட்டாள்!!!!

நிச்சயம் வந்திட்டு!!!!!! வாருங்கள் (மக்களை பார்த்து) செல்வோம்.... தேவையென்று அறிய அறிய என்றெல்லாம் கூட்டிட்டு!!!!

ஆனாலும் பின்னே எவை என்றும் கூற ஒருவரும் கூட வரவில்லை!!!!

ஆனாலும் பின் வந்தது இத் தேவி தான் என்று பின் யாருக்குமே பின் தெரியப்படுத்த பின் எவை என்றும் அறிய அறிய மனிதனாக வந்து விட்டாலே எதை என்றும் அறிய அறிய இப்படித்தானப்பா!!! 

இக்கலியுகத்திலும் கூட இப்படி தான் நடக்குமப்பா!!!

இறைவன் அப்பனே மனித ரூபத்தில் வந்தாலும் கேலி தான் செய்வார்களப்பா!!!

அதனால்தான் இறைவன் மறைமுக பொருளாகவே இருக்கின்றான்!!!

மறைமுக பொருளை யார் ஒருவன் தேடுகின்றானோ???

அவன் உயர்ந்த ஞானி எதை என்றும் அறிய!!! உயர்ந்த இடத்தில் வகிப்பான் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் மனிதனை நம்புவது அவ்வளவு எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று மனிதன் வேண்டுமென்றால் அப்பனே பொய் வேடங்கள் போட்டுக்கொண்டு யான் ஞானி யான் மகா குரு யான் சித்தன் எவை என்று கூற யான் ரிஷி எந்தனுக்கு அனைத்தும் தெரியும்!!! உந்தனக்கு என்னென்ன ??? தேவைகள் என்று செய்து தருகின்றேன் என்றெல்லாம் பொய் கூறி அப்பனே பின் மனிதனை பின் வசியப்படுத்த முடியும்!!!

ஆனால் நிச்சயம் இறைவன் அப்படி இல்லை அப்பனே!!!!

பின் இறைவி வந்துவிட்டாள் அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அக்கிரமங்கள் அநியாயங்கள் என்பதை எல்லாம் பார்த்துட்டு எதை என்று அறிய அறிய அப்பனே அடித்து நொறுக்கினாள் அப்பனே!!! 

எதை என்று அறிய அறிய யார் யார் என்னென்ன தவறுகள் செய்தார்களோ அவர்களை எல்லாம் தன் கால்களாலே மிதித்து மிதித்து உதைத்து உதைத்து அப்பனே எதை என்றும் அறியாமல்!!!....

ஆனால் பின் எதை என்றும் அறிய அறிய இச்செய்தி அரசனுக்கும் எட்டியது!!!

ஒரு பெண்ணா !!!!!! இவ்வாறெல்லாம் செய்கின்றாள்??????? என்பதையெல்லாம்!!....

நிச்சயம் அவளை என்னிடத்தில் அழைத்து வாருங்கள் என்று ஆனாலும் எதை என்றும் அறிய அறிய மீண்டும் பின் அரச சபைக்கு பின் சென்றாள்  இவ் தேவி!!!!

எதை என்றும் அறிய அறிய பின் அரசனின் எவை என்று கூட....... 

இவள்தனுக்கு இப்பொழுதே அடிகள் யாரெல்லாம் எவை என்று அறிய அறிய இங்கு இருக்கின்றார்களோ அவர்களெல்லாம் கூடி இவளை பின் உதையுங்கள் எவை என்றும் அறிய அறிய.. என்று கூறி பின் எவை என்று கூட வாள்கள் பின் கற்கள் எவை என்று அறிய அறிய..... 

ஆனால் வந்தவர்கள் அனைவரையுமே நொறுக்கி தள்ளினாள்!!! தன் கைகளாலும் பின் எதையென்றும் அறிய அறிய சில சில வகைகளிலும் கூட பின் பக்தன் யான் ஈசன் பக்தன் என்றெல்லாம் பொய் சொல்லி கொண்டிருப்பவனையும் கூட அழித்தாள் இவள்!!!

எதை என்றும் அறிய அறிய அழித்து அழித்து பல புதுமையான மனிதர்களை உருவாக்கினாள்!!!! 

ஆனாலும் மீண்டும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்ட மனிதர்கள் ஆனாலும் எவை என்றும் அறிய அறிய பின் அங்கே ஒரு பெண் நிச்சயம் ஜெயித்துக் கொண்டிருக்கின்றாள் என்று கேட்க நிச்சயம் பின் அப்பொழுதுதான் உணர்ந்தார்கள்!!! இறைவி என்பதை கூட!!!

அனைவரும் ஓடோடி வந்தார்கள்!!!! ஓடி வந்து தாயே!!!!! எதை என்றும் அறிய அறிய என்பதை எல்லாம் பின் நிரூபித்து நிரூபித்து எவை என்றும் அறிய அறிய பின் நல் மக்களை காப்பாற்றினாள்!! 

எதை என்றும் அறிய அறிய ஏழை எளியோர்களுக்கு என்னென்ன தேவை என்பதை கூட தன் சக்தியினால் அனைத்தும் கொடுத்தாள் நல்விதமாக!!!

இங்கு அமர்ந்திட்டு மீண்டும் இங்கு அமர்ந்திட்டு எதை என்றும் அறிய அறிய உங்களுக்கு என்னென்ன தேவையோ அவையெல்லாம் யான் செய்திட்டேன் அனைத்தும் அழித்தும் விட்டேன் உங்களுக்கு எதை என்றும் அறிய அறிய உங்களுக்கு என்ன தேவை என்று கேட்க!!!

நிச்சயம் எதை என்று உணர்ந்து உணர்ந்து நீங்கள்தான் தேவை நீங்கள்தான் தேவை என்று உணர்ந்து!!!!

நிச்சயம் யான் இங்கேயே தங்கி விடுகின்றேன் என்று இங்கே தங்கிவிட்டாள் அப்பனே!!!

அதனால் அப்பனே பொய் கூறுபவர்கள் எதையெதையோ தீய சக்திகளை விடுபவர்கள் (ஏவல்) எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் பல வகைகளில் கூட எதை என்றும் அறிய அறிய மக்களை வசப்படுத்தி எதை என்று கூட பொய் புறம் கூறுபவர்களையும் கூட அப்பனே இங்கு வந்து அப்பனே நலமாகவே தியானங்கள் செய்து கொண்டு இவளை தரிசித்தாலே போதுமப்பா!!!

வினைகள் நீங்குமப்பா!!! நிச்சயம் வெற்றிகள் உண்டப்பா!!!!

அப்பனே அதனால் நிச்சயம் அதனால்தான் சித்தர்கள் எங்கெல்லாம் திருத்தலங்களை அமைத்தார்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே எதை என்று கூட இறைவனே எதை என்று கூட எங்கெல்லாம் அமர்ந்து கொண்டான் என்பதற்கிணங்க அப்பனே அங்கெல்லாம் சென்றால்தான் வெற்றியாகும் என்பேன் அப்பனே!!!!

ஆனால் ஒரே இடத்தில் அமர்ந்து கொண்டு அப்பனே பின் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்று புரியாமல் அப்பனே ஈசா!!! ஈசா!!! என்று எதை என்று கூட கத்தினாலும் வராதப்பா எதை என்று அறிய அறிய எவ்வளவு பக்திகள்!!!

ஆனாலும் அப்பனே பின் ஒன்றைச் சொல்கின்றேன் அப்பனே!!! 

ஏற்கனவே பல சித்தர்களும் இதை செப்பி விட்டார்கள் அப்பனே !!!!
பணம் என்றால் ஓடி ஓடி உழைக்கின்றீர்கள் அப்பனே பல பல தேசங்களுக்கு சென்றும் அப்பனே பணத்தை ஈட்டுகின்றீர்கள் அப்பனே!!!

திருமணத்திற்காகவும் அப்பனே ஓடி ஓடி பல செலவுகள் செய்கின்றீர்கள் அப்பனே!!!

அதாவது எதை என்றும் அறிய அறிய பல வழிகளிலும் கூட காத்துக் கொண்டுதான் இருக்கின்றீர்கள் அப்பனே

பார்த்துக்கொள்ளுங்கள் அப்பனே !!!

ஆனால் இறைவனுக்காக ஓடோடி உழைக்கத் தெரியவில்லையே!!!

இறைவனுக்காக காத்துக் கொள்ள முடியவில்லையே 

அப்பனே இறைவன் உடனடியாக செய்து விட வேண்டும் என்பதையெல்லாம் மனிதனின் நினைப்பு!!!!

மெது மெதுவாகத்தான் செய்வான் அப்பனே இறைவன் ஆராய்ந்து ஆராய்ந்து அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அப்பனே உணவு கூடத்திற்கு சென்றாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே நீ வரிசையில் நின்றாலும் அப்பனே ஆனால் எதன் எதற்கோ !!!??? வரிசையில் நிற்கின்றாய் அப்பனே!!!

இறைவனை பார்க்க உன்னால் முடியவில்லையா?????  அப்பனே?!!!!! 

அப்பொழுது பார் உன் பக்தி எங்கு உள்ளது என்பதை கூட அப்பனே!!!!

அதனால் நிச்சயம் பக்திகள் பெருக வேண்டும் அப்பனே கலியுகத்தில் அப்பனே!!!

பெருகினால் தான் அப்பனே நன்மைகள் ஏற்படுமே தவிர நிச்சயம் பெருகாவிடில் அப்பனே தீயவைகள் தான் ஏற்படும் என்பதை உறுதியாக சொல்லிவிடுகின்றேன் அப்பனே!!!

இதனால்தான் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே சில சில விசேஷ ஸ்தலங்களும் உள்ளது என்பேன் அப்பனே!!! 

இறைவனே தன் திருத்தலத்தைக் கூட அமைத்துக் கொண்டான் அப்பனே அங்கேயே தங்கிவிட்டான் என்பேன்!!!அப்பனே!!! 

இப்பொழுதும் கூட அவ் சக்திகள் ஏராளம் ஏராளம் என்பேன் அப்பனே!!! 

அதனால் சக்தி உள்ள திருத்தலங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே... முன்பெல்லாம் அப்பனே தானாகவே உருவெடுத்தது என்பேன் அப்பனே.

அதனால் அங்கெல்லாம் சென்று அப்பனே உயர்வுகள் பெறலாம் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய.

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே!!!

இவையெல்லாம் சொல்லிவிட்டார்கள் அப்பனே.... 

யார் ஒருவன் மற்றவர்களுக்காக உதவுகின்றானோ அப்பனே யார் மூலம் மற்றவர்களுக்குப் பின் உயர்வுகள் எதை என்றும் அறிய கிட்டுகின்றதோ!!.... அவனைத்தான் தேர்ந்தெடுத்து அப்பனே இறைவன் வழியையும் நடத்துவான் அப்பனே அனைத்தும் கொடுப்பான் என்பேன் அப்பனே!!!

பின் ஒன்றும் பிரயோஜனம் இல்லை என்றால் அப்பனே அவனை விட்டுவிட்டு சென்று கொண்டே இருப்பான் அப்பனே!!! பக்திகள் காண்பித்தாலும் அப்பனே ஒன்றும் பிரயோஜனம் இல்லையப்பா!!

இவன் ஒரு பிரயோஜனம் இல்லாமல் இவந்தனுக்கு கொடுத்தாலும் இவந்தன் சுகங்களுக்காக தான் பயன்படுத்துவான் என்று!!!

அதனால் அப்பனே மற்றவர்களுக்காக சேவை செய்யுங்கள் அப்பனே!!!

மற்றவர்களுக்காக எப்பொழுது சேவை செய்கின்றீர்களோ அப்பொழுது இறைவன் கொடுப்பான் கொடுப்பான் அப்பனே!!!

அதையும் எதை என்று அறிய அறிய கொடுப்பான் அப்பனே அதை சரியாக பயன்படுத்தாவிடில் அப்பனே மீண்டும் பிடுங்கிக் கொள்வான் அப்பனே!!!!

இறைவனின் வேலை அப்பனே மிகப்பெரியதப்பா!!!!

எதை என்றும் அறிய அறிய அப்பனே நேற்றைய பொழுதிலும் கூட சொன்னேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய சந்திரனும் சூரியனும் கூட பார்த்துக் கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே எவன் ?? எவன்?? என்னென்ன தவறுகள் செய்கின்றான் என்பதை கூட உணர்ந்து உணர்ந்து அப்பனே ஈர்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே வெளிச்சத்தில் அப்பனே சூரியன் அப்பனே!!! அதனால்தான் தண்டனைகள் உண்டு அப்பனே!!!

எவை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்து விஷயங்களையும் கூட சேகரித்துக் கொண்டே தான் இருக்கின்றான் சூரியன் அப்பனே!!!!

தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே!!!

யார் எதை என்றும் அறிய அறிய தவறுகள் செய்தாலும் நிச்சயம் தண்டனைகள் உண்டு அப்பனே!!!!

ஆனால் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்களும் கேட்கலாம் தவறுகள் செய்பவர்கள் பின் நன்றாகத்தானே இருக்கின்றார்கள் என்றும் கூறலாம் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே பழமொழிகள் உண்டு அப்பனே பின் ஆறாவது அறிவை பயன்படுத்துங்கள் பயன்படுத்துங்கள் என்றெல்லாம் கூறிக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!  எவை எவை என்று அறிய அறிய அதை பயன்படுத்த தெரியவில்லையே அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அதை பயன்படுத்திக் கொள்ளுங்கள் அப்பனே இறைவன் உங்கள் அருகிலே இருப்பான் என்பேன் அப்பனே.

எதை என்றும் அறிய அறிய அப்பனே இதனால் உண்மைகள் என்னென்ன எதை என்று அறிய அறிய தெரிந்து தெரிந்து உலகத்திற்கு அப்பனே உங்களால் இயன்ற அளவு உதவிகள் செய்யுங்கள் அப்பனே 

யாங்கள் உதவுகின்றோம் அப்பனே நல்முறையாகவே!!

அப்படி செய்யாவிடில் அப்பனே தன் குடும்பம் எதை என்று அறிய அறிய தன் சொந்தம் பந்தங்கள் என்று இருந்தால் அப்பனே நிச்சயம் இறைவன் ஒன்றும் செய்ய மாட்டானப்பா!!! 

அதனால்தான் அப்பனே இதைச் சொல்லிவிட்டேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய தீங்குகள் செய்பவர்களும் நன்றாக தான் இருக்கின்றார்கள் என்று மனிதன் நினைக்கலாம்!!!

ஆனால் அப்பனே ஒரு பழமொழியும் உண்டு அப்பனே அது அனைவருக்கும் தெரிந்தே!!! மீண்டும் ஞாபகத்தில் படுத்துகின்றேன் அப்பனே

பின் அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் என்பதையெல்லாம் அப்பனே..... எதற்காக என்பேன் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே புரிந்து கொள்ளுங்கள் அப்பனே

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே இன்னும் இன்னும் பல பல பழமொழிகளும் உண்டு பழமொழிகளும் உண்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய

அதனால் அப்பனே தெய்வம் அப்பனே பார்த்து பார்த்து தான் ஈயும் என்பேன் அப்பனே புண்ணியமானாலும் சரி பாவமானாலும் சரி  அப்பனே பார்த்து பார்த்து தான் ஈயும் என்பேன் அப்பனே.

ஆனால் எதை என்றும் அறிய அறிய தண்டனைகள்!!!!

மனிதன் ஆனால் அப்படி இல்லை என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய யோசிக்காமலே தண்டனை கொடுத்து விடுவான் அப்பனே இதுதான் மனிதனுக்கும் இறைவனுக்கும் எவை என்றும் அறிய அறிய அப்பனே

இறைவனை மனதில் எப்படி வைக்க வேண்டுமோ அப்படி வைத்தாலே போதுமானது என்பேன் அப்பனே 

இவ் தேவியின் சக்திகள் மிக மிக அதிகம் அப்பா அதனால் எதை என்றும் அறிய அறிய அப்பனே வரும் காலங்களில் அதாவது கலியுகத்தில் துன்பங்கள் நிறைந்துள்ளதாகவே இருக்கும் என்பேன் அப்பனே நோய் நொடிகள் அதிகமாகவே இருக்கும் என்பேன் அப்பனே!!!

இன்னும் இன்னும் என்னென்ன தான் நடக்கப் போகின்றது இன்னும் புதுமையாகத்தான் நடக்கப் போகின்றது என்பேன் அப்பனே இதனை சரியாக பயன்படுத்திக் கொள்வான் என்பேன் மனிதன் அப்பனே!!

மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்றான் அப்பனே அதனால்தான் சித்தர்கள் யாங்கள் எதை என்றும் அறிய அறிய அப்பனே அதனால் வேண்டாமப்பா!!!

உண்மையைப் பேசுங்கள் அப்பனே எதை என்றும் அறிய அறிய தெள்ளத் தெளிவாகவே அப்பனே இன்னும் இன்னும் இன்னும் இத்தேவியின் ஆசிகள் அனைவருக்கும் கிடைக்கட்டும் அப்பனே!!!

எதையென்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே இதனால்.  தன் குடும்பத்தை பார்க்கின்றீர்கள் அப்பனே சுகத்திற்காகவும் ஓடுகின்றீர்கள் அப்பனே இன்னும் எதையெதையோ தேடுகின்றீர்கள் அப்பனே!!!

இறைவனை தேடுங்கள் அப்பனே இறைவனை தேடிட்டு தேடிட்டு அப்பனே இறைவனை தேடி சென்றால் கடைசியில் உன் மனதிலே பின் உட்கார்ந்து விடுவான் அப்பனே

பின்பு யோசிப்பார் இறைவனை அப்பனே எங்கும் தேடினேன் கிடைக்கவில்லையே பின்பு இறைவன் மனதிலே இருக்கின்றான் என்று.

இதுதான் அப்பனே உண்மை அப்பா!!!!

மற்றவை எல்லாம் வீணப்பா வீண்!!!!!

எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே தேடினாலும் எவை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே எதை என்றும் அறிய அறிய அதனால் உண்மை நிலைகளை தெரிந்து கொள்வதற்காக பல ஆலயங்களுக்குச் செல்லுங்கள் அப்பனே!!

நல்விதமாக தேடி தேடி அலையுங்கள் அப்பனே

அலைந்தால்தான் கர்மமும் நீங்குமே தவிர அப்பனே பின் எவை என்று கூட அப்பனே அப்படி தேடி அலையவில்லை என்றால் அப்பனே.... அப்படியே தேங்கி நிற்கும் என்பேன் அப்பனே!!!

பின்பு கடைசியில் அனைத்திற்கும் சேர்த்து அனுபவிக்க வேண்டியது தான்!!!......... சொல்லிவிட்டேன் அப்பனே!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய எங்கும் மனிதர்கள் எதை என்று அறிய அறிய எதை எதையோ தேடி தேடி செல்கின்றார்கள் அப்பனே!!

ஆனாலும் உள்ளத்தில் அமர்வது இறைவன் அப்பனே அப்படி உட்கார வையுங்கள் அப்பனே!!! 

மனதை சுத்தப்படுத்துங்கள் முதலில் அப்பனே!!!

மனதே!! சுத்தமில்லையப்பா!!!!

அப்பனே கோபங்கள் தாபங்கள் இவையெல்லாம் இருந்தால் அப்பனே இல்லத்தில் இறைவன் எப்படியப்பா ???? வருவானப்பா ????????

நீங்களே சொல்லுங்கள் அப்பனே!!!!!

யான் பக்தர்களை பார்த்து கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!! ஒவ்வொரு விஷயத்திலும் கூட அப்பனே!!!

எதை என்று அறிய அறிய அதாவது எதை என்று அறிய அறிய இல்லத்திற்கு செல்லும்பொழுது இறைவனே இல்லை என்று ஒருவன்!! இறைவனை வணங்கினால் என்ன தான் நடக்கும் என்று மற்றொருவன்!!!! அவை மட்டுமில்லாமல் பின் எதை என்று கூற மாமிசத்தை உட்கொள்ளுங்கள் என்று!!!

மாமிசத்தை உட்கொண்டால் தான் உடல் வலிமை பெறும் என்று இன்னொருவன்!!...

இதனால் இல்லத்தில் எதை என்று அறிய அறிய ஒருவருக்கொருவர் அப்பனே சண்டைகளப்பா!!! சண்டைகள்!!! 

அப்பொழுது பணம் வேண்டும் என்கின்றானே இதற்கு லட்சுமியே மூலாதாரம்!!!!!

ஆனால் எப்படியப்பா ?????? லட்சுமிதேவி இல்லத்தில் தங்குவாள் ????   அப்பனே 

கோபங்கள் பொறாமைகள் அப்பனே எதை என்றும் அறிய அறிய சுத்தமின்மை இவையெல்லாம் ஒரு இல்லத்தில் இருந்தால் லக்ஷ்மி தேவி நிச்சயம் தங்க மாட்டாள் அப்பனே!!!

சொல்லிவிட்டேன் அப்பனே

வேலை வேலை எதை என்று அறிய அறிய அப்பனே அதனால் நிச்சயம் அப்பனே இல்லத்தை சுத்தமாகவும் எதை என்று அறிய அறிய அப்பனே 

இல்லம் என்பது உன் மனம் அது நிச்சயம் சுத்தமாகி விட்டால் அப்பனே இல்லத்தில் உள்ள அனைவரும் சுத்தமாகி விடுவீர்கள் அப்பனே!!!

பின்பு யோசிக்கலாம் மற்றவர்களைப் பற்றி அப்பனே 

நீயே சரியில்லை உன் இல்லத்தில் இருப்பவர்களே சரியில்லை அப்பனே!!!... பின்பு மற்றவர்களைப் பற்றி யோசிக்கின்றாயே!!!...... அப்பனே அதுதான் கர்மா அப்பா

முதலில் உன்னை நீ யோசி!!!

எதை என்றும் அறிய அறிய நீ எப்படி இருக்கின்றாய் என்பதை கூட அப்பனே அப்படி யோசித்து தான் மற்றவர்களைப் பற்றி நீ பேச வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுது தான் வெற்றியும் பெறும் அப்பனே பின் அனைத்தும் நன்றாக நடக்கும் அப்பனே!!

அப்படி இல்லையென்றால் அப்பனே உன்னையே தாழ்த்திக் கொள்வாய் அப்பனே இதுதான் உண்மை அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து அப்பனே!!! 

அனைவருக்கும் எம்முடைய ஆசிகள் ஆசிகள் இத் தேவியின் அருளாசிகள் இன்னும் பெருகட்டும் அப்பனே சில கர்மங்கள் நீங்கி சில தரித்திரங்களும் நீங்கட்டும் என்பேன் அப்பனே எவை என்றும் அறிய அறிய அப்பனே!!!

சில சில தீய சக்திகளும் கூட இவ் அம்மையிடம் எதை என்று அறிய அறிய ஒன்றும் நெருங்க முடியாது என்பேன் அப்பனே!!!

எதை என்றும் அறிய அறிய அதனால் அப்பனே சில தீய சக்திகள் இருந்தாலும் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே இங்கு வந்து நல்விதமாகவே தியானங்கள் செய்திட்டு செய்திட்டு சென்று கொண்டு இருந்தாலே நிச்சயம் கடை நாள் வரையிலும் ஒன்றும் அணுகாதப்பா!!!!

அப்படி இத் தேவி பல மனிதர்களைக் கூட அப்பனே இன்றும் கூட உயர்த்தி கொண்டே தான் இருக்கின்றாள் அப்பனே 

நலன்கள் !!! ஆசிகள்!!! ஆசிகள்!!!!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே இங்கு அகத்தூய்மை எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றி நம் குருநாதர் ஒவ்வொரு வாக்கிலும் கூறிக் கொண்டே வருகின்றார் கோபம் காமம் பொறாமை போட்டிகள் இவற்றையெல்லாம் விலக்கி விட வேண்டும்.

மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய வேண்டும் மற்றவர்களை நம்மை போல எண்ண வேண்டும் தான தர்மங்கள் அனைத்து ஜீவராசிகளுக்கும் செய்ய வேண்டும் என்றும் புறத்தில் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் கூறி இருக்கின்றார்.

இல்லத் தூய்மை இதனைப் பற்றி குருநாதர் பொதிகை மலையிலும் இன்னும் சில வாக்குகளிலும் தெரிவித்து இருக்கின்றார் அதை அடியவர்களுக்கு மீண்டும் ஞாபகப்படுத்துகின்றோம்.

காலை மாலை என இருவேளையும் வீட்டை சுத்தம் செய்து இலுப்பை எண்ணெய் கொண்டு விளக்கேற்ற வேண்டும் இலுப்பை எண்ணைக்கு சக்திகள் அதிகம் என்று கூறியிருக்கின்றார் நம் குருநாதர்.

பச்சைக் கற்பூரம் மஞ்சள் தூள் பசு கோமியம் புண்ணிய நதிகளின் நீர் இவற்றையெல்லாம் ஒன்றாக சேர்த்து வீடு பூஜையை அறையை தெளித்து துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.

எந்த ஒரு அசைவ உணவு பதார்த்தமும் வீட்டில் யாரும் உண்ணவும் கூடாது வீட்டில் உபயோகப்படுத்தவும் கூடாது.

பூஜையில் விளக்கில் ஏலக்காய் கிராம்பு பச்சைக் கற்பூரம் மஞ்சள் தூள், நெல்லிக்காய் பொடி வில்வ பொடி ஜாதிக்காய் பொடி அல்லது ஏதாவது ஒரு மூலிகை பொடி போன்ற ஒரு துளி எலுமிச்சை சாறு சர்க்கரை இவற்றை சேர்க்க வேண்டும்.

கருங்காலிக் கட்டையை வீட்டில் ஏதாவது ஒரு வடிவத்தில் வீட்டில் வைக்கலாம்.

என வீட்டில் செய்யும் பொழுது எதிர்மறை சக்திகள் விலகிச் செல்லும் இறை ஆற்றல் பெருகும் அப்பா என்று கூறி இருக்கின்றார் இதனை அடியவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கலாம்.

ஆலயம் பற்றிய தகவல்கள்.

ஸ்ரீ கல்காஜி மந்திர், கல்காஜி கோயில் என்றும் அழைக்கப்படுகிறது,  தேவி காளி கோவில்  கோயில் (மந்திர்) இந்தியாவின் டெல்லியின் தெற்குப் பகுதியில் கல்காஜியில் அமைந்துள்ளது 

நேரு பிளேஸ் வணிகத்திற்கு எதிரே அமைந்துள்ளதுமையம்.

கல்காஜி மந்திரில் (டெல்லி மெட்ரோ) பொதுப் போக்குவரத்து மூலம் இந்த கோயிலை அணுகலாம் மற்றும் நேரு பிளேஸ் பேருந்து நிலையம் மற்றும் ஓக்லா ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ளது.

ஸ்ரீ கல்காஜி மந்திர் பிரபந்தக் சுதர் கமிட்டி (ரெஜி.)
ஸ்ரீ கல்காஜி மந்திர், கல்காஜி, புது தில்லி

SKMPSC - ஹெல்ப்லைன் : +91 9205084060

கல்கா ஜி கோயில் தினசரி அட்டவணை

ஸ்ரீ கல்கா ஜி கோவில் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

காலை அட்டவணை - (முகூர்த்தம்  படி நேரத்தை சிறிது மாற்றலாம்)

கணேஷ் வந்தனா காலை 5 மணிக்கு தொடங்குகிறது. சிருங்கார் நேரம் காலை 5:30 மணி முதல் 6:30 மணி வரை. (கோயில் மூடப்படும்.)

காலை ஆரத்தி 6:30 முதல் 7:00 வரை.

மதியம் 12 மணிக்கு போக். (கோயில் காலை 11:45 முதல் மதியம் 12:15 வரை மூடப்பட்டிருக்கும்.)

மாலை 3:00 மணி முதல் 4:00 மணி வரை கோவில் சுத்தம் செய்வதற்காக மூடப்பட்டிருக்கும்.

மாலை நேர அட்டவணை - (முகூர்த்தத்தின் படி நேரத்தை சிறிது மாற்றலாம்)

இரவு 7:00 மணிக்கு கணேஷ் வந்தனா நிகழ்ச்சி.

சிருங்கார் நேரம் 7:30 PM முதல் 8:30 PM வரை. (கோயில் மூடப்பட்டும்.)

மாலை ஆரத்தி இரவு 8:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை செய்யப்படுகிறது.

சஜ்ஜா இரவு 11:30 மணிக்கு வழங்கப்படுகிறது> கோவில் இரவு 11:30 மணி முதல் அதிகாலை 4:00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 24 October 2023

சித்தன் அருள் - 1485 - அன்புடன் அகத்தியர் - பொதுவாக்கு - மதுரை! 04.09.2023 பகுதி 7!


இந்த பதிவின் முந்தைய பதிவுகளை சித்தன்்அருள்- 1444, 1474, 1475, 1477, 1480, 1481 தொகுப்புகளில் பார்க்க.)

ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்.

அடியவர்:- நன்றி குருவே.

குருநாதர்:- அப்பனே, எதற்க்காக நன்றி சொன்னாய்?

அடியவர்:- (எங்களுக்கு) அறிவு இல்லை.

குருநாதர்:-  அப்பனே ஒர் முறை சொல்லிவிட்டேன் (நீ கூறியதை). மற்றொரு முறை ஏதாவது ஒன்றை உரை.

அடியவர்:- எனக்கு என்னங்க தெரியும். (குருநாதா) உங்களுக்குத்தான் தெரியும்.

குருநாதர்:- அப்பனே, யான் சொல்லியதை நீ செய்யவில்லை அப்பா. அதனால்தான் பல அடிகளை வைத்து அப்பனே ஆனாலும் சில சில வகைகளிலும் கூட பக்குவங்கள் ஏற்ப்படுத்தி ஒரு மனிதனாக வாழ வைக்கப்போகின்றேன். நீ கேட்கலாம்  (இதுவரை) இப்போது நான் மனிதனாக வாழவில்லையா என்று. நிச்சயம் வாழவில்லையப்பா. இனிமேல்தான் நீ மனிதனாக வாழப்போகின்றாய் அப்பனே. போதுமா? ( குருநாதரின் கருனை மழை இங்கு இந்த அடியவருக்கு பொழிந்தது என்பதை அனைவரும் உணர்ந்தனர்.)

அடியவர்:- நன்றிங்க ஐயா. (அடியவர் குருநாதரின் அன்பு வாக்கை கேட்ட உடன் உடைந்து அழ ஆரம்பித்தார்)

குருநாதர்:- அப்பனே அதனால் உன் பக்கத்தில் இருக்கின்றானே இவன்தனும் சில சில தவறுகள், அதாவது சில கர்மத்தை சேகரித்துக் கொண்டான் அப்பனே. இதனால்தான் அப்பனே இதுவரையில் கூட சில வாக்குகள் யான் செப்ப வில்லை என்பேன் அப்பனே. இனிமேலும் அதை எப்படி அகற்றிட வேண்டும் என்பதைக்கூட சிறிது சிறிதாக அகற்றிக்கொண்டிருந்தேன் அப்பனே. இனிமேலும் உன் வாழ்க்கை பற்றிய ரகசியங்கள் யான் சொல்லுகின்றேன். பொறுத்திருக.

(அனைத்து அகத்தியர் அடியவர்களுக்கும் ஓர் வேண்டுகோள்.  ஒரு மிக முக்கிய நிகழ்வை இந்த அடியவர் மூலம் உணரந்திட வேண்டியது அவசியம். எனக்கு ஏன் நாடி வாக்கு பல முயற்சி செய்தும் கிடைக்கவில்லை என நல் உள்ளங்கள் பல ஏங்கும் நேரங்கள் பல உண்டு. அதே நேரத்தில் அந்த நல் உள்ளங்கள் கர்மத்தினால் திசை திருப்பப்பட்டு வழி தவறிய ஆடு போல் ஜோதிடம்/இதர சுவடிகளிடம் சென்று பணம் கொடுத்து பரிகாரம் என்ற கர்ம வழிக்கு செல்பவர்களும் உண்டு. ஆனால் இதன் பின்னால் உள்ள சூட்சுமத்தை உணர இந்த வாக்கு ஒரு உதாரணம். நாடி வரும் வரை பொறுமை காத்தலே சிறந்த சீடனுக்கு/பக்தனுக்கு அழகு. வேறு கர்மம் பிடித்த வழிகளில் சென்று கர்மத்தை சேர்ப்பதை தவிர்க்கவும். கர்மா இருக்கும் நேரங்களில் அகத்திய பிரம்ம ரிஷி நாடி வாசிக்கும் அகத்தியர் மைந்தன், அருளாளர் திரு.ஜானகிராமன் அவர்களை தொடர்பு கொள்ள அவர்கள் கர்மா விடாது என்பதை அறியவும்.  பொறுத்தார் பூமி…..)

அடியவர்:- (உடைந்து அழுதுகொண்டே இருக்கின்றார்கள்…)

குருநாதர்:- இதுபோலத்தான் அப்பனே ஒவ்வொருவருக்கும் ஒரு கர்மா வினை. அதனுள்ளே எந்தனுக்கு அதைத்தா, இதைத்தா என்றெல்லாம் பின் கேட்டால் யான் எப்படியப்பா தருவது? தெரிந்து கொள்ளுங்கள் அப்பனே. இவ் அகத்தியன் அப்பனே எப்பொழுது யாருக்கு (நாடி வாக்குகள்) தர வேண்டும் என்று எண்ணி அப்பனே நிச்சயம் கொடுப்பான் அப்பா. நிச்சயம் கைவிடமாட்டேன் அப்பா. ஆனால் திருத்துவதற்கே அனைத்தும் கூட. அதை தெரிந்து கொள்ள வேண்டும் அப்பனே. அப்பனே (வேறு எங்கு) சென்றாலும் உன் கர்மா விடாதப்பா. அப்பனே சொல்லி விட்டேன். இப்பொழுது பின் இருவரை (ஒற்றைக்காலில்) நிக்கச்சொன்னேன் அப்பனே. கால்களை ஆட்டி ஆட்டி இதனால்தான் நீ எங்கு எதை செய்தாலும் கர்மா உங்களை ஆட்டும். ஆட்டிப்படைக்கும்.  சொல்லிவிட்டேன் அப்பனே. ஆனால் சமமாக நிற்கவேண்டும் தைரியமாக. பின் அவ் கர்மத்தை நீக்கினால்தான் அப்பனே அனைத்தும் வெற்றியாகும். அதனால்தான் முதலில் கர்மாத்தை (நீக்க வேண்டும்). அதனால் சில துன்பங்கள் அதனால்தான் ஏற்படுத்துகின்றேன் என்பேன் அப்பனே. கவலைகள் இல்லை. அப்பனே யார் யார்க்கு எதை கொடுக்க வேண்டுமோ அதை நிச்சயம் யான் கொடுப்பேன். உங்கள் பல தலங்களைக்கூட யானே வடிவமைத்தேன் என்பேன் அப்பனே. அங்கெல்லாம் யான் நிச்சயம் வரும் காலங்களில் அப்பனே யான் எதை எங்கு எவை என்று அனைத்தும் எடுத்துரைக்கப் போகின்றேன். உலகம் அப்பனே பின் பக்திமயமாகட்டும். அதனால்தான் யாங்கள் வந்தோமப்பா. அப்பனே இப்படியே சென்று கொண்டு இருந்தால் பக்தி என்ற சொல்லுக்கு பொய் என்று ஆக விடும் என்று அப்பனே அதனால்தான் மனிதன் பல குற்றங்களை செய்து செய்து கடைசியில் பாரத்தால் அப்பனே திருடன் கூட ஒரு ருத்திராட்சத்தை அணிந்து, பின் காவி உடை அணிந்து உட்கார்ந்து கொண்டிருக்கின்றான் அப்பனே. யான் பக்தன், எந்தனுக்கு அனைத்தும் தெரியும் பின் வாயில் வந்தவை எல்லாம் சொல்வது அப்பனே. பின் வாயில் வருவதை எல்லாம் சொல்லி பின் பணங்கள் பறிப்பது. அப்பனே இவை இருந்தால் அப்பனே இக்கலியுகத்தில் இப்படித்தானப்பா நடக்கும். அதனால்தான் நாங்கள் சித்தர்கள் விட வில்லை அப்பா. பக்தி எப்படி காண்பிப்பது எப்படி என்று வரும் காலங்களில் யாங்கள் அங்கங்கு தெரிந்து தெரிந்து காண்பிப்போம் என்பேன். அதனால் அப்பனே முதலில் அகத்தியனுக்கு எங்கு திருத்தலம் கட்ட வேண்டும் அப்பனே? சொல்லுங்கள்.

அடியவர்:- மனதில், உள்ளத்தில்

குருநாதர்:-  அப்பனே, அதை தெரிந்து கொண்டாலே போதுமப்பா. உன் ஆசைகளை யானே நிறைவேற்றி விடுவேன் அப்பனே. எந்தனுக்கு ஒன்றுமே தேவை இல்லையப்பா. இதைத்தான் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே. மனிதனாக வாழுங்கள் போதுமானது என்பேன் அப்பனே. அன்புக்கு அதற்கே யான் கட்டுப்பட்டவன். அப்பனே என்னை வைத்துக் கொண்டே அப்பனே யான் சொல்கின்றேன் அப்பனே. அதாவது பின் என்னையும் லோபாமுத்ராவையும் அமைத்து விட்டார்கள் அழகாக. ஆனால் பக்கத்திலேயே அமர்ந்து விட்டான் (ஆலயம் கட்டியவர்). பின் ஆனால் பொய்களப்பா பொய்கள். வாயக்குள் வருவதெல்லாம் சொல்லிக் கொண்டே இருக்கின்றான் ஒருவன் அப்பனே. என்னதான் அவன் தனக்கு யான் செய்வது அப்பனே. ஆனால் கடைசியில் பார்த்தால் அகத்தியனுக்குத்தான் தொண்டு செய்தேன். ஒன்றுமே செய்யவில்லை என்று சொன்னால் எப்படியப்பா (யான்) பொறுப்பு? இதை நீ சொல்ல வேண்டும் அப்பனே. நீ அலைந்தவன். அப்பனே அதனால் நீ தான் சொல்ல வேண்டும். அப்பனே அதனால் நிச்சயம் எந்தனுக்குக்கூட சேவைகள் செய்யாதீர்கள் சொல்லிவிட்டேன். இயலாதவர்களுக்கு சேவை செய்யுங்கள் போதுமானது அப்பனே. யான் உங்களுக்காக சேவை செய்கின்றேன். அவ்வளவுதான் அப்பனே. (இதுவரை ஒற்றைக்காலில் கைகளை மேலே தூக்கி நின்ற அடியவர்களை) அப்பனே, நின்று கொண்டிருக்கின்றீர்களே நீங்கள். சேவை என்பது என்ன?

அடியவர்:- தன்னலமில்லாமல் பிறருக்கு உதவி என்று செய்யாமல் நமக்கு நாமே சேவை செய்வது.

குருநாதர்:- அப்பனே எதை என்று கூற சேவை என்பது உன் பக்கத்தில் இருப்பவன் சொல்லட்டும்.

அடியவர்:- பிறருக்கு தொண்டு செய்வது.

குருநாதர்:- அப்பனே, எதற்காக தொண்டு செய்கின்றாய்?

அடியவர்:- தேவையான உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவு கொடுக்கிறது.

குருநாதர்:- அப்பனே, பிறருக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்கின்றாய். உந்தனுக்கும் சேவை செய்து கொண்டு இருக்கின்றாய். அவ்வளவுதான். பிறருக்கு யார் ஒருவன் சேவை செய்கின்றானோ அவன் தன் தனக்கே சேவை செய்கின்றான். தன் கர்மத்தை போக்கிக் கொள்கின்றான் என்பதே அர்த்தம் இதன் பொருள். அப்பனே கர்மத்தை நீக்க வேண்டும் என்றால் அப்பனே நல்படியாக நல் எண்ணங்கள் முதலில் வளர வேண்டும் அப்பனே. அனுதினமும் ஏதாவது உயிருக்காவது என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை என்றால் கூட ஒருவனுக்காவது இவ்திருத்தலத்திறக்குச் செல் நலமாகும். எதாவது பின் நல்லதை பின் சொல்லிக் கொண்டிருந்தாலே (நல் சேவை/புண்ணியங்கள்) ஆனாலும் அப்பனே பின் உண்மைகள் தெரியாமல் , பொய்கள் பரப்பிக்கொண்டிருந்தாலே அதுவும் கர்மாதானப்பா. இன்றைய நிலையில் அதுபோலத்தான் நடந்து கொண்டிருக்கின்றது என்பேன் அப்பனே. அதனால் அப்பனே நீங்கள் ஒன்றும் இறைவன்கள் இல்லை. உங்களால் ஒன்றும் செய்ய முடியாதப்பா. இதுபோலத்தான் மனிதன் செய்து கொண்டு இருக்கின்றான் அப்பனே. பின் அதை , இவை, யான் இறைவனுக்கே சேவை செய்பவன். இறைவனுக்கு அப்பரிகாரங்கள் செய்தால் நல்லவை நடக்கும். இவை எல்லாம் ஒரு வெற்று வேட்டுகளப்பா. பொய்களப்பா. இதனையும் கூட வரும் காலங்களில் நிருபிக்கப்போகின்றேன். அனைத்தும் தான் தன் வாழ்வதற்கே செய்து கொண்டிருக்கின்றான் மனிதன் அவ்வளவுதானப்பா. ஆனால் கர்மா சேர்கின்றது என்பது தெரியாமல் போய் விட்டதப்பா. பாவமப்பா மனிதனப்பா.

அடியவர்:-  ( மொனம் )

குருநாதர்:-  அப்பனே அதனால் உண்மை நிலை உணருங்கள். ஒருவொருவரும் எதை என்றும் அறிய அறிய யாருக்குமே உண்மைநிலை தெரியவில்லை அப்பா. அதனால்தான் உண்மை நிலை தெரிவித்திருக்கின்றேன் இன்று.

அடியவர்:- ( மொனம் )

குருநாதர்:- அதனால் உண்மையை உணருங்கள் அப்பனே. உண்மையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே. இறைவன் நிச்சயம் நிச்சயம் உன்பால் நிச்சயம் பின் வந்து உதவிடுவான் இதனால் அப்பனே  நல்முறைகளாக இன்னும் இன்னும் எதிர்பார்த்து எவை என்றும் புரியாமல் அப்பனே எதற்காக வந்தாய் இங்கு நீ?

அடியவர்:- குருநாதரை பார்த்து தரிசனம் செய்ய.

குருநாதர்:- அப்பனே, நீ சொல்லிவிட்டாய் உன்பக்கத்தில் உள்ளவனை சொல்லச்சொல்.

அடியவர்:- குருநாதர் ஆசிர்வாதம் வாங்க

குருநாதர்:- அப்பனே, என்னுடைய எப்பொழுதுமே இருக்குமப்பா உந்தனுக்கு.

அடியவர்:- கடன் ( இந்த அடியவர் கேட்ட விதம் பொதுவாக அனைவர் கேட்கும் கேள்வியாக பொருந்தும். உடனே கருணைக்கடல் அகத்தியப்  பெருமான் அளித்த அற்ப்புத பதில் கடனில் உள்ள உலகோர் அனைவருக்கும் பொருந்தும். )

குருநாதர்:- அப்பனே , தெரியாமலே கேட்க்கின்றேன். அனைவரையும் பார்த்தே கேட்கின்றேன். அதாவது என்னை கேட்டுத்தான் வாங்கினாயப்பா நீ? ( இங்கு நீ என்பது கடனில் உள்ள அனைவரையும் குறிக்கும் என்று உணர்க)

அடியவர்:- ( மொனம் )

குருநாதர்:- அப்பனே உன் சந்தோசத்திற்க்காகவே வாங்கி மீண்டும் சோம்பேறித்தனமாக கட்ட முடியாமல் மீண்டும் என்னிடத்தில் கேட்டால், யான் என்ன செய்ய வேண்டும் அப்பனே?

அடியவர்:-நீங்கதான் வழி சொல்லனும்.

குருநாதர்:- இதுதானப்பா, கர்மா செய்யும்போது யாருமே கேட்பதில்லை என்பேன் அப்பனே மனிதன். அப்பனே ஒரு முறையாவது யான் இப்படி செய்கின்றேன் என்று கேட்டானா? இல்லையப்பா. அதனால்தான், கர்மா சேகரித்துக் கொண்டு   அப்பனே அவை பலங்கள் ஆகும் பொழுதுதான் இறைவனையே நோக்கிப்படை எடுத்துக் கொண்டிருக்கின்றான் மனிதன். அதனால் முன்னே உணர வேண்டும். இவை பின் செய்யலாமா? வேண்டாமா? என்று அப்பனே ஏன் எதற்காக என்றெல்லாம் அப்பனே. அதனால் அப்பனே இதைக்கூட யான் பார்த்துக்கொள்கின்றேன். பொறுத்திருக!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!