​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 31 January 2026

சித்தன் அருள் - 2091 - அன்புடன் அகத்தியர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6

நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 

=================================
# அன்புடன் போகர் சித்தர்  வாக்கு 
=================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 6


போகர் சித்தர் :- நிச்சயம் ஒரு நாள் மனித எவை என்று இவ்வாறு வாழ்ந்து பாருங்கள். தெரியும் எது என்று அறிய. நிச்சயம் அதாவது பின் திருமணம் இல்லாமல், வேலை இல்லாமல் எது என்று புரிய. இவ்வாறு வாழ்ந்து பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு வாழ்க்கை பற்றி தெளிவு வரும். 


================================
# “போதுமடா சாமி” - அப்பொழுதுதான் ஞானம் வளரும்.
================================

போகர் சித்தர் :- இதே போலத்தான் இறைவன், நிச்சயம் மனிதனை சோதித்து, சோதித்து, மனிதன் அதாவது போதுமடா சாமி என்று சொல்கின்றானே. அப்பொழுதுதான் ஞானம் வளரும். அப்பொழுதுதான் அனைத்தும் இறைவன் கொடுப்பான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும். இதனால் இவர்கள் அனைவருமே இறைவனின் குழந்தைகள். இவர்கள் எது செய்தாலும், இறைவன் பார்த்துக் கொள்வான். சரியோ, தவறோ. 

போகர் சித்தர் :-  செய்வது நமது கடமை. நிச்சயம் அறிந்து கூட, அது பார்த்துக் கொள்வது இறைவனுடைய கடமை. 

போகர் சித்தர் :-  ஏன் குறை? மற்றொருவர் ஏன் குறை கூறுகின்றான் என்றால், நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய, எவை என்று அறிய. பின் சொல்லுங்கள், நீங்களே பார்ப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மற்றவங்க ஏன் குறை கூறுறாங்கன்னா, ஏன் சொல்லுங்க பார்ப்போம்னு கேட்கிறார். 

அடியவர் :- சொல்லுங்க, அவங்களை கேக்குறாங்க. யாராவது தெரிஞ்சவங்க சொல்லுங்க. ஏன் பிறரை நாம குறை கூறுகிறோம்? 

அடியவர் 1 : - ( ………….) 

போகர் சித்தர் :-  அப்பா, இதைத்தன் பின் விட்டுவிடு. புதுமையாக சொல். 

அடியவர் 1 : - ( குறை கூறுவதே மனிதனின் வேலை ) 

போகர் சித்தர் :-  எவை என்று புரிய. அப்பா, சரிதான். அப்பா, இதுவே வேலை. மனிதனுக்கு இவ்வாறும் எடுத்துக்கொள்ளலாம். 

=====================================
# குறை கூறுபவன் கடைசியில் , அவ் குறையாகவே ஆகிவிடுகிறான் 
=====================================

போகர் சித்தர் :-  ஏனென்றால் குறை, குறை என்று கூறிக்கொண்டு, அவன் கடைசியில் குறை உள்ளவனாகவே ஆகிவிடுகின்றான். அப்பா, 

போகர் சித்தர் :-  அப்பா, மனிதனுடைய பிழைப்பு இப்பொழுது சொல்கின்றேன், மற்றவர்களை குறை கூறுவது. மற்றவர்களை எதை என்று அறிய, அடித்தளமாக பேசுவது. மற்றவர்களை தீயாக பேசுவது. நிச்சயம், மற்றவர்கள், மற்றவர்களுக்காகவே அனைத்தும். நிச்சயம், தன்னில் கூட தான் நிலைப்பற்றி எப்பொழுது சிந்திப்பது. நிச்சயம், தன்னில் கூட தான் நிலை பற்றி முதலில் சிந்தியுங்கள். தன்னைத்தானே வென்றுங்கள். அடுத்தவரை பார்ப்போம் பின்பு. 

அடியவர் :- நம்ம முக்காவாசி நேரம் இல்ல. ஏன்னா, முழு நேரமே இதான் பொழப்பா பண்ணிட்டு இருக்கிறோம். நீங்க சொன்ன மாதிரி எல்லாம், அடுத்தவனை பத்தி குறை பேசி, குறை பேசி, உன்னை பத்தி நீங்க யோசிக்கிறதே இல்லை. நீங்க கீழ போயிட்டே இருக்கிற. அதை நீங்க யோசிக்க மாட்டேன்றாங்க. சொல்றாங்க, உன்னை முதல் யோசிங்க. உயர்த்துங்கன்றாங்க. 

போகர் சித்தர் :-  ஆனாலும், அப்பா, நிச்சயம், தன்னில் கூட எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சிலருக்கு. அப்பனே, நிச்சயம், பின் இறைவன் எது என்று புரிய. அப்பனே, எவை என்று அறிய. நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, இக்குறை எது என்று புரிய. அப்பனே, பின் நிறையாக மாறிவிடுகின்றது. 

அடியவர் :- அது சொல்லுவாங்க. சிலருக்கு வந்து இந்த குறை வந்து நிறைய மாறிடுதுன்றாங்க. நிறையாக மாறிடுது. அதாவது, நம்ம பேசுறதுனால, அதுதான் சொல்றேன். நம்ம இந்த மாதிரி பேசுறோம்ல. அடுத்தவங்களை தவறா பேச பேச, இது அவங்களுக்கு நிறைய மாறிடுது. ஏன்னா, நம்மகிட்ட இருக்கிற புண்ணியங்கள், அவர்கிட்ட போயிருது இல்ல. அது அவங்களுக்கு நிறைய மாறிடுது. அவங்ககிட்ட இருக்கிற பாவம், நமக்கு வந்துருது. அதான் சொல்றாங்க. 

==============================
# யாரும் யாரையும் குறை சொல்லக்கூடாது. 
==============================

போகர் சித்தர் :-  இவைத்தன் இதனால், அப்பா, யாரை குறை சொல்லக்கூடாது சொல்லிவிட்டேன். யாரை குறை சொல்லக்கூடாது. 

அடியவர் :- யாரும் யாரையும் குறை சொல்லக்கூடாது. 

போகர் சித்தர் :-  நிச்சயம், தன்னில் கூட. அப்பா, அறிந்தும் கூட, எவை என்று புரிய. அப்பனே, இவ்வாறு பின் வாழ்கின்றார்களே. இவர்களைப் பற்றி, 

அடியவர் :- இவங்க வாழ்க்கையை பத்தி, தயவு செஞ்சு யாரும் குறை கூறாதீங்க. எல்லாருக்கும் எடுத்துச் சொல்லுங்க. கர்மாதான். இப்ப யாரோ குறை கூறுனீங்கன்னா, அவங்களுக்கு நான் யாரை பத்தி அதிகமா குறை கூறுகிறேன்னா, இது மாதிரி ஒன்னும் இல்லாதவங்க, ஒன்னும் இல்லாத யாரும் இல்ல. அவர் சொன்னாரு, ஐயா, யாரும் இல்ல. அதனால, இது மாதிரி ஞானிகள் வாழ்றது ஒன்னு ரொம்ப கஷ்டமான வாழ்க்கை. இதெல்லாம் வாழ்றது அல்லன்னு சொல்றாரு. இறைவன் எல்லாருக்கும் ஒரு பரீட்சை வச்சிருக்கிறார். இறைவன் ஒரு பரீட்சை வச்சிருக்கிறார். எல்லா பேருக்கும் நமக்கு புரியாது. அது என்னன்றது, தயவு செஞ்சு அதை கமெண்ட் பண்ணக்கூடாது. 

==================================
# வாழ்க்கை வட்டத்தின் ரகசியங்கள் 
==================================

போகர் சித்தர் :-  அப்பப்பா, எது என்று புரிய. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட அறிந்தும் ஏன், எதற்கு. அப்பனே, அனைத்தும் அப்பனே பின் ஒரு வட்டமாகவே நடந்து கொண்டிருக்கின்றது. 

அவ்வட்டத்தில் என்ன, ஏது என்றெல்லாம். அப்பனே, இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட இன்றளவும் ஏன் இவர்களை பின் எவை என்று புரிய. அப்பனே, இவர்களிடத்திலும் கூட புண்ணியம் அப்பனே, இறைவன் பின் அதாவது வைத்துள்ளான். அப்பா, நிச்சயம், தன்னில் கூட. பின் இவர்கள் புண்ணியத்தை கூட, அப்பனே, சிலருக்கு பின் கொடுக்கின்ற பொழுது, அவர்கள் நன்றாக வாழ்ந்து விடுவார்கள் என்பேன் அப்பனே. 

இதனால், அப்பனே, இறைவன் இவர்களை பார்த்துக் கொள்வான் என்பேன் அப்பனே. இதனால் பாவம் புண்ணியம் எங்கு சரி பார்க்கப்படுகிறது என்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் நல்லுள்ளம் கொண்டோன். அப்பனே, பின் கஷ்டத்திலே இருக்கின்றான் அப்பனே. அப்பொழுது அவன் பாவப்பட்டவனா? அப்பனே, நிச்சயம், தன்னில் சொல்லுங்கள் அப்பனே. 

அதனால், நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, எவை என்று புரிய. இங்கு அனைத்தும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட ஒரு வட்டமாகவே செயல்படுகின்றது. 

யாரும் உணர்வதே இல்லை. அதனை, அதை தெளிவுபடுத்தித்தான், அப்பனே, இப்பொழுது வந்திருக்கின்றோம். 

அதை தன் தெளிவுபடுத்தி விட்டால், உங்களை நீங்களே வெல்வீர்கள் என்பேன் அப்பனே.

உங்களை நீங்கள் வெல்வீர்கள் என்றால், நிச்சயம், தன்னில் கூட இறைவனும் காணலாம். இறைவனைக் கண்டிற்று, உங்களைப் பின் வென்றிற்று, முக்திக்கு அடையலாம். இல்லையென்றால், கஷ்டங்களை பட்டு, பட்டு, பட்டு, பட்டு, பட்டு, பட்டு.


போகர் சித்தர் :-  ஆனாலும் ஏன் சிலருக்கு கஷ்டங்கள்? ஏன் எது என்று புரிய? இவ்வ மனித பின் குலத்தில் ஏன் இவ்வுலகம் என்பதை எல்லாம், நிச்சயம், பின் இப்பொழுது நடக்கும் அனைத்தும் கூட 

போகர் சித்தர் :-  இதைத்தன், நிச்சயம், தன்னில் கூட இவர்களை பாலூட்டி, பின் சீராட்டி, நிச்சயம், தன்னில் அறிந்தும் கூட, பின் குறையேதும் இல்லை என்ற பாடலை பாடி, நிச்சயம், இதைப் பின் தானமாக கொடுத்து விடுங்கள். தர்மமாக போகட்டும். 

(குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா என்ற பாடலை பாட வேண்டும் என்று உரைத்தார்கள் )

சுவடி ஓதும் மைந்தன்:-   அடியார்கள் எல்லாம் சேர்ந்து இங்கு வந்துள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு, எல்லாரும், அடியார்கள் சேர்ந்து ஒரு லட்சம் (கொடுத்திருக்கின்றார்கள்)

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கைதட்டல்கள் )

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :-  (உரையின் முக்கிய கருத்துக்களைக் கீழே உள்ளவாறு சுருக்கமாகக் காணலாம்:) 

இறைவனும் எதிர்பாராத அருளும்
எதிர்பார்ப்பு: நாம் ஒரு காரியம் நடக்குமா என்று எதிர்பார்த்துக்கொண்டே இருப்பதை விட, இறைவன் எப்போது எதைக் கொடுப்பார் என்று தெரியாது என்பதால் பொறுமையுடன் காத்திருக்க வேண்டும்.
இறைவனின் ஆற்றல்: 60 வயதுள்ளவரை 20 வயது இளைஞனாக மாற்றும் ஆற்றல் இறைவனுக்கும் சித்தர்களுக்கும் (போகர் போன்றோர்) உண்டு. இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை இறைபற்று உள்ளவர்களுக்கு அவசியம்.

எண்ணங்களே வாழ்வின் கூலி
நல்ல எண்ணங்கள்: நாம் செய்யும் வேலைக்கு எப்படி ஊதியம் கிடைக்கிறதோ, அதேபோல நம்முடைய நல்ல எண்ணங்களுக்கு கூலியாக இறைவன் 'புண்ணியத்தை' வழங்குகிறான். * பாவ புண்ணியம்: நம்மிடம் புண்ணியம் இருந்தால் எதையும் சாதிக்கலாம். நம் எண்ணங்கள் சரியாக இல்லாவிட்டால் இறைவன் தண்டனையாகப் பாவத்தைக் கொடுக்கிறான். எனவே, எதையும் இறைவனிடம் விட்டுவிட்டு தூய்மையான பக்தியுடன் இருக்க வேண்டும்.

கூட்டுப் பிரார்த்தனை மற்றும் சேவை
சுயநலம் தவிர்த்தல்: மனிதன் தன் சுயநலத்திற்காகவே வாழ்கிறான். அதை மாற்றி, பிறருக்காக வேண்டிக்கொள்ளும் 'கூட்டுப் பிரார்த்தனை' மிகப்பெரிய பலனைத் தரும்.
இல்லாதோருக்கு உதவுதல்: தன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்குக் கொடுக்காதபோது, இறைவன் நோய்கள் மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ அதை எடுத்துவிடுவார். இருப்பவர்கள் இல்லாதவர்களைத் தூக்கி விட வேண்டும் என்பதே அகத்தியர் போன்ற சித்தர்களின் வாக்கு.
கர்ணனின் உதாரணம்: தர்மம் செய்த கர்ணனின் உயிரைக் கூட இறைவனால் எளிதில் எடுக்க முடியவில்லை; அவனுடைய தர்மத்தையே தானமாகக் கேட்க வேண்டியிருந்தது. அந்தளவிற்குப் புண்ணியம் வலிமையானது.

வாழ்வின் எதார்த்தம்
பிறர் நலன் பேணுதல்: நம்மைப் பற்றி நாம் சிந்திக்காமல், மற்றவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்துச் சேவை செய்தால், நம் தேவைகளை இறைவன் தானாகவே கவனித்துக் கொள்வார்.
ஆறுதல்: உறவுகளைப் பிரிந்து, கஷ்டப்படும் எளிய மக்களுக்கும் குழந்தைகளுக்கும் நாம் செய்யும் சிறு உதவியும், அவர்களுக்குக் காட்டும் அன்பும் நமக்குப் பெரிய புண்ணியத்தைச் சேர்க்கும்.
சுருக்கமாக: நல்ல எண்ணங்களை வளர்த்துக்கொண்டு, பிறருக்கு உதவி செய்து புண்ணியத்தைச் சேர்த்துக்கொண்டால், இறைவன் நமக்காகக் காத்திருப்பார்.
பாடகர் :- (குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா என்ற பாடலை பாட ஆரம்பித்தார்)

 https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=7h25m24s

பாடகர் :- (பாடி முடித்த பின்னர்) 


போகர் சித்தர் :- அப்பா, அறிந்தும் மீண்டும்: "ஏழு மலையான் இறங்கட்டும்"—மீண்டும் பாடலைப் பாடு, இறங்கட்டும். அனைவருக்கும் இதைவிட நிச்சயம் பின் என்னென்ன தேவை என்று கொடுக்கட்டும், பார்க்கட்டும் பாடு. 

பாடகர் :- (குறை ஒன்றும் இல்லை, மறை மூர்த்தி கண்ணா என்ற பாடலை பாட ஆரம்பித்தார்)

பாடகர் :- (பாடி முடித்த பின்னர்) 

போகர் சித்தர் :-  இதைத் தன் மக்களை எவை என்று அறிய நிச்சயம் பின் பாடு, அறிந்தும் பின், அதாவது பின், பின். நமச்சிவாய வாழ்க எனும் பாடல். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா சிவபுராணம் பாட சொல்றார் ஐயா.

ஒரு சிவனடியார் சிவபுராணம் பாடினார் :-
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=7h34m22s

==================================
# இறைவன் உங்கள் தாய் , தந்தை. 
# நீங்கள் செய்யும் அனைத்தும் இறைவனை சென்று அடையும்.
==================================

போகர் சித்தர் :-  இதைத்தான் எவ்வாறு நிச்சயம் தன்னில் கூட பாவம் புண்ணியம் எங்கு நிர்ணயிக்கப்படுகின்றது. அதாவது, பின் ஒருவன் வேலை செய்யப் போகின்றான்.  ஆனாலும் நிச்சயம் அவ்வேலைக்கான கூலி அன்றே தருவதில்லை. நிச்சயம் சேர்த்து வைத்து, சேர்த்து வைத்து, எப்பொழுது கொடுக்க வேண்டுமோ அப்பொழுது ஒரு முதலாளி கொடுப்பான். 

சுவடி ஓதும் மைந்தன்:-   இறைவன் கையில் இருக்குதுங்க ஐயா. இதுதான் உண்மை. இப்பதான் தெரிய வைக்கிறார். போகப்பெருமான் சொல்றாரு, பாவம் உங்க கையில் இல்ல, புண்ணியம் இல்ல. 

போகர் சித்தர் :-  அப்படி நீங்கள் யோசித்தீர்களா? 

சுவடி ஓதும் மைந்தன்:-  யாராவது யோசிச்சீங்களா? அப்பா அம்மா செய்வது பிள்ளைகளுக்கு என்று எல்லாருக்கும் தெரியும். அது எல்லாம் சொல்றாங்க இல்ல. அப்ப உங்களை , யார் இங்க படைச்சு அனுப்பினார்? இறைவன். அப்ப நீங்க பண்றது எல்லாம் எங்க போய் சேரும்?

அடியவர் :-  இறைவன் கிட்ட  தான் போய் சேரும்.

சுவடி ஓதும் மைந்தன்:-  அங்க போய் சேரும். அப்ப அவர் எங்க வந்து எப்ப கொடுக்கிறார்னு நமக்கு தெரியாதுமா? அப்ப என்ன பண்ணனும்? வெயிட்டிங் லிஸ்ட். வெயிட்டிங்ல தான் நிக்கணும். கியூல தான் நிக்கணும். அப்ப எப்ப அவர் எடுத்துக் கொடுப்பாரோ அதுக்காக நம்ம வெயிட் பண்ணனுங்க ஐயா. 

==================================
# தீயவை நடக்கிறது என்றால் நிச்சயம் அதுவும் இறைவனுக்கே சொந்தமானது
==================================
# நல்லது  நடப்பது என்றால்  நிச்சயம் அதுவும் இறைவனுக்கே சொந்தமானது
==================================

போகர் சித்தர் :-  அறிந்தும் எதை என்று அறிய அறிய தீயவை நடக்கிறது என்றால் நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய. ஆனாலும் அதுவும் இறைவனுக்கே சொந்தமானது. நல்லது பின் நடப்பது நிச்சயம் அதுவும் இறைவனுக்கு நிச்சயம் பின் எவை என்று புரிய. இதனால் பின் உங்களுக்கு என்னதான் சொந்தம்? 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஒரு நல்லது நடந்தா யாருக்கு சொந்தம்?

அடியவர் :-   இறைவனுக்கு.

சுவடி ஓதும் மைந்தன்:-   இறைவனுக்கு சொந்தம். கெட்டது நடந்தாலும் இறைவன் தான் வந்து தீர்மானிக்கிறார். அப்ப நீங்க யார்? நீங்க யார்? 

===========================================
# நமக்கு இறைவன் கொடுப்பார் என்ற நினைப்பு எப்போதும் இருந்தால், 
நிச்சயம் பிழைத்துக் கொள்ளலாம். 
===========================================

போகர் சித்தர் :-  பின் அவ்வாறு குழந்தைகளுக்கு இறைவன் கொடுக்காமலா போய்விடுவான் சொல்லு தாயே? 

அடியவர் :-  கண்டிப்பா கொடுப்பார். 

போகர் சித்தர் :-  நிச்சயம். ஆனால் இவ்வு நம்பிக்கை இருந்தால் போதும். நிச்சயம் பிழைத்துக் கொள்வாய். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த நம்பிக்கை ஒன்னு இருந்துச்சுன்னா போதும். நீங்க பொழைச்சுக்கலாம். 

போகர் சித்தர் :-  ஆனால் நிச்சயம் அவசர அவசரமாக அதை வேண்டும், இதை வேண்டும் என்றெல்லாம் நிச்சயம் எவ்வாறு கொடுப்பான் இறைவன்? நிச்சயம் கொடுக்கப் போவதில்லை. நீங்கள் இவ்வாறு கேட்டுக்கொண்டே இருந்தால், கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். 


=================================
# ஒவ்வொருவருக்கும் குறைகள் ஏன் வருகின்றது?
=================================
# ஒவ்வொருவருக்கும் நோய் ஏன் வருகின்றது?
=================================

போகர் சித்தர் :- எதை என்று அறிய அறிய அனைவருக்கும் குற்றங்கள் ஏன் வருகின்றது? ஒவ்வொருவருக்கும் நோய் ஏன் வருகின்றது? என்று சிந்தித்துப் பாருங்கள் தெரியும். 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாருக்கும் ஏன் கஷ்டங்கள் வருது? ஏன் துன்பம் வருது? எல்லாத்தையும் சிந்தித்து கொஞ்சம் பார்த்தீங்களா? சிந்திச்சு பார்த்தா உண்மை புரியும்.

போகர் சித்தர் :-  இதனால்தான் அன்றைய கல்வி நிலைகள் அனைத்தும் பின் உண்மை நிலையை தெரிந்து கொள்ள. ஆனாலும் இன்றைய கல்வி நிலை மாறிவிட்டது. 

சுவடி ஓதும் மைந்தன்:-  அன்றைய கல்வி  நிலைகள் எல்லாம் என்ன ஆச்சு? இறைவனைப் பற்றியே போதிச்சது. 

அடியவர் :-  குருகுலம். 

போகர் சித்தர் :- அப்பா ஒன்றை சொல்கின்றேன், இறைவன் இல்லை என்று சொல்கின்றவன் இருந்தால் மட்டும்தானே இறைவன் இல்லை என்று சொல்கின்றான். 

அடியவர் :-  ஆமா. 

போகர் சித்தர் :- இதை கூட மனிதனுக்கு யார் எப்படி அப்பா உரைப்பது? 

சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப இறைவன் இருந்தா தானே, இறைவன் ஒருத்தர் இருந்தா தானே அடுத்து என்ன சொல்லுவான்? 

அடியவர் :- இல்லைன்னு சொல்ல முடியும்.

சுவடி ஓதும் மைந்தன்:-  இல்லைன்னு சொல்ல முடியும். அப்ப இது கூட உங்களுக்கு தெரியலையாப்பான்றாரு. ஐயா புரியுதுங்களேயா? இது நம்ம சூட்சுமமா புரிஞ்சுக்கணும். எவன்கிட்ட இறைவன் இல்லை, இருக்குன்றானோ, அவன் முட்டாள் அவ்வளவுதான். இதான் சொல்றாரு. ஏன்னா அதுவும் பாருங்க எப்படி சொன்னார் அவர் வந்து. அருமையான விளக்கம் தான். அது கூட வந்து. அப்ப இறைவன் இல்லை என்று சொன்னான். அப்ப இருந்தா தானே இல்லைன்னு சொல்றான். இதை கூட மனுஷனுக்கு வந்து யோசிக்க தெரியலையேப்பா. சின்ன விஷயம். சின்ன விஷயம். 

போகர் சித்தர் :- இதனால் உங்களுக்கு கொடுத்து என்ன பயன்? 

சுவடி ஓதும் மைந்தன்:-  இதை கூட வந்து மனுஷனுக்கு, இந்த சின்ன விஷயமே தெரியல. சின்ன விஷயங்களே தெரியலன்னா, இதை கொடுத்தா உங்களுக்கு என்ன? நீங்க எப்படி யூஸ் பண்ணிக்க போறீங்க? பயன்படுத்த போறீங்க. 

போகர் சித்தர் :- நிச்சயம் எதை என்றது அறிய இறைவன் இருக்கின்றான் என்று நிச்சயம் பின் எதை என்று புரிய யார் சொல்வான்? 

சுவடி ஓதும் மைந்தன்:-  இறைவன் இருக்கின்றான் என்று யார் சொல்வான்? ஐயா. ஐயா. 

அடியவர் 3 :- பகுத்தறிவு. 

போகர் சித்தர் :- அப்பா இதை பின் அதாவது இதை சொல்பவர்களே. 

சுவடி ஓதும் மைந்தன்:-   இது எல்லாரும் சொல்றவர்கள் தான். இது ரைட் தான். எல்லாருமே இதை சொல்லுவாங்க. புதுமையா விஷயம் ஏற்படுன்றார். புதுமையா சொல்ல சொல்றார்.

அடியவர் 3 :- இறைவனே வந்து ஒரு உபதேசம்

போகர் சித்தர் :- தாயே. அப்பா இவையெல்லாம் பழமையானவை. புதுமையைச் சொல். 

சுவடி ஓதும் மைந்தன்:-  எல்லாமே பழமையானவை. இதெல்லாம் வந்து எல்லாம் சொல்லி வச்சிட்டு போயிட்டாங்க. புதுமையா சொல்லுங்கன்றார். 

=================================
# ஒவ்வொருவருக்கும் குறைகள் , நோய்கள் ஏன் வருகின்றது?
# கஷ்டத்தை கொடுத்தால் மட்டுமே இறைவன் இருக்கின்றான் என்று சொல்கின்றான் மனிதன்.
================================

போகர் சித்தர் :- அப்பா அப்பா ஒன்றை சொல்கின்றேன். பின் நிச்சயம் இறைவன் கஷ்டத்தை கொடுத்தால் மட்டுமே இறைவன் இருக்கின்றான் என்று சொல்கின்றான் மனிதன். அப்பொழுது கஷ்டத்தை இறைவன் கொடுக்காமலா போயிடுவான் ஒருவர் ஒருவருக்கும். 

சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப யாருக்கு கஷ்டத்தை கொடுத்தாதான் நம்ம புரிஞ்சுக்கிறோம் இறைவன் இருக்கிறார்.

பாடகர் :-  அதாவது இறைவன் இருக்கான்னு நீங்க உணரணும்னா கஷ்டத்தை கொடுத்தாதான் இறைவன் இருக்கான்னு உணர்வீங்க. சோ இறைவன் இருக்கான்றது ப்ரூவ்டு ஃபேக்ட். கஷ்டம்ன்றதும் ப்ரூவ்டு. அதுதான் இப்ப நம்ம அன்றாடம் அனுபவிக்கிறோம். அந்த கஷ்டம் இல்லைன்னா இறைவன் இல்லை. அப்படித்தானே வந்து அவர் இது பண்றாரு. கன்குலூட் பண்றாரு. சோ கஷ்டம் இருக்கும் இறைவனும் இருப்பார். அப்படித்தான் போகுது. 


சுவடி ஓதும் மைந்தன்:- கஷ்டங்கள் மூலமா பக்குவத்தை கொடுத்து இறைவனுக்கு உணர வைக்கிறாங்க. 

=======================================
# உங்களுக்கு வரும் அனைத்து கஷ்டங்களும் கரணம் இறைவன்.  உங்களை உங்கள் வாயால் இறைவன் இருக்கின்றான் என்று  சொல்வதற்கு இறைவனே அனைவருக்கும் கஷ்டங்கள் கொடுக்கின்றார்.
========================================

போகர் சித்தர் :- நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது இறைவனை உணர வைக்க இறைவனே நிச்சயம் தன்னில் கூட, இதனால் அனைவருக்கும் கஷ்டங்கள் உண்டு. ஏனென்றால் இறைவன் இருக்கின்றான் என்று வாயால் சொல்வதற்கு அப்பா நிச்சயம். 

சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப எல்லாருக்கும் கஷ்டம் உண்டு. அப்பதான் என்ன பண்ணுவாங்களாம்? வாயால சொல்றதுக்கு இறைவன் உண்டுன்னு வாயில சொல்லுவாராம். இல்லைன்னா என்ன பண்ணுவாங்கயா?


அடியவர் :- சொல்ல மாட்டாங்க.

போகர் சித்தர் :- அப்பப்பா பல விஷயங்கள் அறிந்தும் புரிந்தும் கூட. இதனால் இதையெல்லாம் நீங்கள் தெரிந்து கொள்ளவில்லை என்றால் மற்றொருவன் சுலபமாக உங்களை ஏமாற்றி அவன் பாவக்கணக்கையும் எதை என்று புரிய யான் சொல்வது? 

அடியவர் :-   நம்ம தலையில போட்டுருவாங்க. 

போகர் சித்தர் :- அப்பா உன் தலையில் என்ன இருக்கின்றதே என்று தெரியவில்லை. அலைகின்றாய். 

=====================================
# ஒருவனுக்கு ஏன் யோகம்? ஏன் மற்றவனுக்கு யோகம் இல்லாமை?
=====================================

போகர் சித்தர் :- எவை என்று புரிய அப்பப்பா ஒருவனுக்கு ஏன் யோகம்? ஏன் மற்றவனுக்கு யோகம் இல்லாமை? ஏன் ஒருவன் இறைவனை காண்கின்றான்? மற்றொருவன் இறை காண்பதில்லை? ஏன்? ஏன்? எதற்கெல்லாம் கேள்விகளுக்கு ஏற்ப அகத்தியன் நிச்சயம் வருகின்றான். 

=============================================
# அன்பு குருநாதர் அகத்திய மாமுனிவர் - ஈரேழு பதினான்கு உலகங்களின் மிக சிறந்த உயர் விஞ்ஞானி.
============================================== 

போகர் சித்தர் :- அப்பா அறிந்தும் கூட பின் அகத்தியன் குரு. அகத்தியன் நிச்சயம் தன்னில் கூட மிக விஞ்ஞானி என்பேன். இப்பொழுது புரியும். எவ்விஞ்ஞானிக்கும் இவ்வுலகத்தில் இவ் ரகசியம் தெரிவதில்லை. பின் விஞ்ஞானி உரைக்கப் போகின்றான். இப்பொழுது. 

சுவடி ஓதும் மைந்தன்:- பெரிய விஞ்ஞானின்றாங்க. 

அடியவர்:-  குருநாதர் அகத்தியர் என்பவர் யாரு? பெரிய விஞ்ஞானி. மிகப்பெரிய விஞ்ஞானி. சாதாரண விஞ்ஞானி இல்ல. இந்த உலகத்தில் எந்த விஞ்ஞானிக்கும் தெரியாத விஷயம் ஒரு விஞ்ஞானி உரைக்கப் போறாரான்னு பார்ப்போம். கொஞ்ச நேரத்துல 

=====================================
# கலியுகம் அழியும் நிலைக்கு செல்கின்றது. சித்தர்களுக்கு வேலைகள் தான் அதிகம்.
===================================== 

போகர் சித்தர் :- எதை எவை என்று புரிய? நிச்சயம் ஆனாலும் பின் நல்லதாக இவ்வுலகத்தில் நடந்து கொண்டிருந்தால் சித்தரை, யாங்கள், எங்களுக்கு வேலையே இல்லை. ஆனால் கலியுகம் அழியும் நிலைக்கு செல்கின்றது. எங்களுக்கு வேலைகள் தான் அதிகம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த உலகத்தில் நல்லதே நடந்து போச்சுன்னா என்ன பண்ணுவாங்களாம்? சித்தர்களுக்கு வேலையே இல்லை. வேலை இல்ல. எங்களுக்கெல்லாம் வேலையே இல்லப்பா. நான் எங்கேயோ போய் அமர்ந்து எங்கேயோ சாப்பாடு ஏதோ அங்க போயினே இருக்கிறோம். ஆனால் கலியுகம் அப்படி இல்ல. கஷ்டங்கள் வரப்போறது. அதனால என்ன பண்றோம்? எங்களுக்கு வேலை அதிகம். 

போகர் சித்தர் :- அப்பா மற்றொன்றும் நீங்கள் அனைவரும் பின் உண்மையை தெரிந்து கொண்டால் எங்களுக்கு ஏதப்பா வேலை? 

சுவடி ஓதும் மைந்தன்:-  இன்னொன்னு சொல்றாரு. எல்லா உண்மையும் நீங்க தெரிஞ்சுக்கினா நீங்க உங்க பாட்டி வாழப்போறீங்க. எங்களுக்கு என்ன வேலை இருக்குது? 

போகர் சித்தர் :- அப்பா இறைவனுக்கே வேலை இல்லைப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்:-   ஏன்? இறைவனுக்கே வேலை இல்லைன்றாங்க. வேலை இல்லைன்றார். 

==========================================
# குழந்தை வளர வளர ஏன் ஒரு தாயின் அன்பு அது மாறுபடுகின்றது? போகப்போக 
==========================================

போகர் சித்தர் :-  நிச்சயம் தன்னில் கூட இதனால்தான் அப்பப்பா அறிந்தும் இறைவன் அழகாக படைக்கின்றான். அப்பா நிச்சயம் தன்னில் கூட எதை என்று கூற ஒரு தாயவள் நிச்சயம் தன்னில் கூட தன் பிள்ளையை பின் முதலிலே எப்படி இருந்தாலும் பாசத்தை காண்பிக்கின்றான் அல்லவா? நிச்சயம் ஏன் அது மாறுபடுகின்றது? போகப்போக 


சுவடி ஓதும் மைந்தன்:-   குழந்தை பிறக்கும் பொழுது எல்லா தாயும் , பாசமாதான் இருகாங்க. ஆனா போகப்போக ஏன் மாறுது? 

அடியவர் 4:- (குழந்தை வளர்ந்து  வரப்போறதுல.. )

போகர் சித்தர் :- அப்பா இவையெல்லாம் பழமையானவை. அப்பா 

சுவடி ஓதும் மைந்தன்:-  இதெல்லாம் வந்து எல்லாரும் சொல்லிட்டாங்க. வளர்ந்து வரப்போறதுலன்னு சொல்லிட்டு

போகர் சித்தர் :- இதற்கும் எவை என்று புரிய? அப்பப்பா அறிந்தும் புரிந்தும் எவையெல்லாம் யான் சொல்கின்றேன். வருவரும் காலத்தில் அப்பா அனைத்தும் பின் ஒன்றாக அறிந்தும் கூட பின் இப்பொழுது சொல்லிவிட்டாலும். ஆனாலும் எதை என்று புரிய, அப்பனே புரிந்து கொள்ளுங்கள். இன்னும் இன்னும் எதை என்று அறிய? அதனால் பல புண்ணியங்கள் மனிதனுக்கு இதனால்தான் புண்ணியங்கள் இறைவனிடத்தில் இருப்பதால் இதனால்தான் உங்களுக்கு யாங்கள் புண்ணியத்தை சிறிது சிறிதாக அடித்து நிச்சயம் உங்களுக்கும் பின் விடிவெள்ளியை கொடுத்து நீங்கள் அடுத்தவருக்கு கொடுக்கலாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப புண்ணியம் யார் கையில் இருக்குதாம்? அங்க அங்க இருக்கு. பேங்க்ல இருக்கு. புண்ணியம் பாவம் எல்லாம். ஸ்டாக்ல இருக்குது. அது வந்து அப்ப அது எப்படி எடுத்துட்டு வர்றது? அக்கவுண்ட்ல இருக்குது. அதெல்லாம் நாங்க கொஞ்சம் கொடுக்கிறோம். அதன் மூலம் நீங்க நல்லா இருந்து நீங்க அடுத்தவருக்கு உதவி செய்யுங்க. 

===========================================
# சாதுக்களை , ஞானியர்களை போற்றுங்கள், வணங்குங்கள். 
===========================================

போகர் சித்தர் :- இதனால் நிச்சயம் அதாவது மிகவும் பின் அதாவது எதை என்று புரிந்த எவை என்று அறிய,  இதனால் இங்கு அமர்ந்திருக்கின்றார்களே இவர்களும் ஒன்றுமில்லாதவர்களா? ஆனாலும் நிச்சயம் இவர்களைப் பார்த்து பாவப்பட்ட ஜென்மங்கள் என்று சொல்லிவிடுவார்கள் மனிதர்கள். இதுதான் மனிதன் முட்டாள் எண்ணங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:-  மனிதன் முட்டாள் என்னன்னு இவங்க எல்லாம் ஒன்னும் இல்ல. இவங்க எல்லாம் பாவப்பட்ட ஜென்மங்கள். இதுதான்டா மனுஷனோட முட்டாள் எண்ணம் அப்படின்னு சொல்லிடுவாங்களாம். வந்து 

போகர் சித்தர் :- எதை என்று அறிய பின் உழைத்து வாழுங்கள் என்று. இன்னொருவன் நிச்சயம் பின் யான் உழைத்து சம்பாதிக்கின்றேன். இவருக்கு கொடுக்க வேண்டுமா என்று என்று. அடடா

சுவடி ஓதும் மைந்தன்:-   ஒருத்தன் என்ன  சொல்லுவாராம் ? நான் உழைச்சு சம்பாதிக்கிறேன். இவங்களுக்கு கொடுக்கணுமா? 

========================================
# திருவண்ணாமலையில் வாழும்  சாதுக்களுக்கு , ஞானியர்களுக்கு, சந்நியாசிகளுக்கு  - அதாவது ஈசனாரின் செல்ல குழந்தைகளுக்கு நீங்கள் அள்ளி  கொடுத்தால் என்ன ஆகும் என்ற மாபெரும் சித்தர்கள் ரகசியம். 
======================================== 

போகர் சித்தர் :- எதை என்று புரிய? ஆனாலும் இவர்களுக்கு கொடுத்தால் என்னவென்று யாங்கள் உணர்ந்திருக்கின்றோம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஆனால் இவங்களுக்கு கொடுத்தா என்ன ஆகும் என்று எங்களுக்கு தான் தெரியும். 

======================================
# திருவண்ணாமலையில் உங்களின் சில சில வினைகளை எடுத்துக் கொள்ளும் சாதுக்கள். அதே நேரத்தில் இவ் சாதுக்களை திட்டுபவர்களுக்கு , பலத்த வினைகள் வந்து சேரும். அடுத்த முறை திருவண்ணாமலை சென்றால் , போற்றுங்கள் ஞானியர்களை. அவர்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் செய்யுங்கள். அவர்களிடம் ஆசி வாங்குங்கள்.
======================================

போகர் சித்தர் :- அப்பா அறிந்தும் புரிந்தும் கூட நிச்சயம் தன்னில் கூட இப்படியும் எண்ணிக்கொள்ளலாம். பாவத்தை புண்ணியத்தை நிச்சயம் ஓரம் கட்டுங்கள். பின் ஆனாலும் சில சில வினைகள் பின் இவர்களைத்தான் எடுத்துக் கொள்வார்கள். நீங்கள் கொடுப்பதை 

சுவடி ஓதும் மைந்தன்:-  அப்ப என்ன பண்ணுவாங்க? நம்மகிட்ட இருக்கக்கூடிய சில வினைகளை சில வினைகள் சில மனமாற்றங்கள் என்ன பண்ணுவாங்க? அவங்க எடுத்துப்பாங்க. இவங்க எடுத்துப்பாங்கன்றார் வந்து.

போகர் சித்தர் :- எதை என்று அறிய ஆனாலும் பின் இவையும் கூட அனைத்தும் விட்டொழித்தவனுக்கே சொந்தம். இவை தன் ஏற்றுக்கொள்ளும் நிலைமை பக்குவங்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:- இந்த பக்குவம் யாருக்கு வரும்னா எல்லாம் இழந்துக்கிறாங்க பாருங்க. வீடு சொத்து மனைவி சுகம் எல்லாம் விட்டொழிச்சு வந்திருக்காங்க பாருங்க. அவங்கள்தான் இதெல்லாம் சாத்தியமாகும். அவங்களால் மட்டும்தான் இது பேலன்ஸ் பண்ண முடியும். எடுத்துட்டு போய் இவங்களுக்கு இது பண்ணிட்டு புரியுதுங்களேயா? அவங்களால் மட்டும்தான் இது இது பண்ண முடியும். 

========================================
# கூட்டுப் பிரார்த்தனைக்கு ,  சித்தர்கள் திரு அண்ணாமலையை தேர்ந்தெடுத்து நடத்த  காரணங்கள் , மாபெரும் ரகசியங்கள்.
=========================================

போகர் சித்தர் :- இதனால்தானே பின் சித்தர்கள் அண்ணாமலையை தேர்ந்தெடுத்து நடத்துகின்றோம். 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன்:- அதனால்தான் அடிக்கடி ஏன் வந்து அண்ணாமலையை நாங்க தேர்ந்தெடுக்கிறோம்னா இதனால்தான் அண்ணாமலையை தேர்ந்தெடுக்கிறது. இதனால்தான்… 

போகர் சித்தர் :- அறிந்தும் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால் ஈசனுக்கு சொந்தக்காரர்கள் இவர்கள். இவர்கள் என்ன தவறு செய்தாலும் நிச்சயம் ஈசனைத்தான் நிச்சயம் தண்டிக்க வேண்டுமே தவிர, நாம் இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன்:- அப்ப இவர்கள் எல்லாம் யார் சொந்தக்காரங்கயா? 

அடியவர் :- ஈசனுக்கு சொந்தக்காரர்கள். 

சுவடி ஓதும் மைந்தன்:-  சொந்தக்காரங்கப்பா. இவர்கள் எல்லாம் நம்ம கேட்க தகுதி இல்லை. 

அடியவர் :-  தகுதி இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன்:-  என்னென்ன பண்ணிக்கிட்டோம்? ஈசனோட குழந்தை அவர் பார்த்துக்க போறாரு. உன் வேலையை நீ பாரு. 

===============================
# சந்நியாசிகள் மூலம் கர்மா சுழற்சி நடக்கும் - திருவண்ணாமலை ரகசியங்கள் 
==============================

போகர் சித்தர் :- ஆனாலும் அப்பனே இன்னொருவன் சொல்வான். அப்பா இவர்கள் திருடர்கள். இவை எதை என்று அறிய மது அருந்துகின்றார்கள். இன்னும் என்னென்னவோ கதை கட்டுவார்கள். அப்பா நிச்சயம் தன்னில் கூட ஆனால் பின் எதை என்று புரிய? ஆனால் சொல்பவனுக்குத்தான் கருமா. 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஐயா புரியுதுங்களா? அப்ப என்ன பண்ணுவாங்களாம்? ஈசனோட குழந்தை ஈசன் பாதுகாக்கிறார். அவர் கொடுக்க போறார். இவருக்கு தண்டனையோ ஏதோ நல்லதோ கெட்டதோ அவர் செய்யப்போறார். அதை நாம் சொன்னோம்னா என்ன ஆகுமா? நமக்கு கர்மா வந்துரும். நமக்கு கர்மா வந்துரும். 

=======================================
# ஈசன் அருள் இல்லாமல் அண்ணாமலைக்கு வர முடியாது. 
=======================================

போகர் சித்தர் :- எதை என்று புரிய ஈசன் அருள் இல்லாமல் இங்கு காலடி எடுத்து எடுக்க வைத்து முடியுமா என்ன? 

அடியவர் :- முடியவே முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன்:- ஈசன் அருள் இல்லாமல் அண்ணாமலைக்கு வர முடியாது. 

====================================
# கும்பலில் கோவிந்தா என்ற பழமொழி ரகசியங்கள் 
====================================

போகர் சித்தர் :- ஆனாலும் கார்த்திகை தீபத்தென்று உங்களை அனைவரும் வெளியே விட்டு விடுவார்கள். நிச்சயம் தன்னில் கூட உங்களிடத்தில் தான் இறைவன் சந்தோஷமாக விளையாடுவான். ஆனால் மக்களோ உள்ளே சென்று பின் கோவிந்தா கோவிந்தா என்றெல்லாம் பின் நிச்சயம் 

சுவடி ஓதும் மைந்தன்:- அதான் ஒரு வாக்கு சொன்னாங்க இல்ல? நீங்க இறைவனை தேடி உள்ள போறீங்க. இறைவன் உங்களை அப்ப திருவண்ணாமலையில் வந்து கார்த்திகை தீபம் ஏற்படுது இல்ல? அப்ப யார் கூட இருப்பாங்களாம்? உங்க கூட தான் இருப்பாங்களாம். ஜாலியா ஈசன் அது தெரியாம உள்ள போயிட்டு கோவிந்தா கோவிந்தா. 

போகர் சித்தர் :- அப்பா இதை ஏன் சொன்னேன் என்றால் பின் கும்பலில் கோவிந்தா என்று நிச்சயம் பழமொழியும் உண்டு. 

சுவடி ஓதும் மைந்தன்:- ஆமா, இது ஏன் சொன்னேன்னா கும்பல்ல கோவிந்தா, கும்பல்ல கோவிந்து போடுறாங்க இல்ல? அது இது அதனோட அர்த்தம்பா. அப்ப இருங்கயா, 

போகர் சித்தர் :- இதை என் தெரிவிக்க அப்பா நிச்சயம் தன்னில் கூட நீ கேட்டாயே எவை என்று புரிய அப்பா அறிந்தும் கூட அறிந்தும் எதை என்று கூற, பின் அதாவது கிளம்பலாமா என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் கூறு.

அடியவர் :-  மேடம், நீங்க கிளம்பலாமான்னு என்னன்னு கேக்குறாரு. அதுக்கு அர்த்தம் என்ன? குருநாதர் கேக்குறாரு, பதில் சொல்லுங்க. 

போகர் சித்தர் :- எதை எவை என்று புரிய தாயே, அனைவரிடத்தில் பேசிச் செல். அனைவருக்கும் பின் அருளாசிகள் உன்னால் நடக்கட்டும். 

அடியவர் :- அம்மா பேசுங்க.

மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும்  அம்மை அடியவர் :-  (ரங்கம்மாள் காது கேளாதோர் மற்றும் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளியின் சார்பாகப் பேசிய ஆசிரியை, தங்களை இந்த ஆன்மீகச் சேவை நிகழ்ச்சிக்கு அழைத்தமைக்கு நெகிழ்வுடன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். சிவபுராணம் போன்ற பாடல்களைக் கேட்கும் திறன் தன் மாணவர்களுக்கு இல்லாவிட்டாலும், அங்குள்ள சூழலையும் உணர்ச்சிகளையும் அவர்கள் கண்களால் கண்டு மகிழ்ந்ததைக் கண்டு நெகிழ்வதாகக் குறிப்பிட்டார். குறிப்பாக, 'கருணை சேவை' என்ற தாரக மந்திரத்தோடு செயல்படும் தங்கள் நிறுவனத்திற்கு, எதிர்பாராத வகையில் வழங்கப்பட்ட இந்த நிதியுதவி மாணவர்களின் படிப்பு மற்றும் உணவுச் செலவுகளுக்குப் பெரும் உதவியாக இருக்கும் எனக் கூறினார். மாணவர்களை மேடையில் அமரவைத்துச் சிறப்பு பிரார்த்தனை செய்ததையும், காட்டிய அன்பான உபசரிப்பையும் கண்டு நெகிழ்ந்த அவர், இந்த அங்கீகாரம் தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் ஊக்கத்தையும் அளிப்பதாகக் கூறி நன்றிகளைப் பகிர்ந்து கொண்டார்.)

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த  கைதட்டல் )

மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும்  அம்மை அடியவர் :- எங்க பசங்களுக்கு வந்ததுல இருந்து ஸ்நாக்ஸ் கொடுத்துக்கிட்டே இருந்தாங்க. ஹாப்பியா இருந்தது. பசங்க வந்து இந்த மாதிரி எல்லாம் கேட்க முடியனால இந்த மாதிரி பார்க்கிறாங்க. இது என்னன்னா எங்க பசங்களுக்கு எல்லாருக்கும் கிடைக்கலன்னு சொல்லிட்டு நான் ஃபீல் பண்றேன். எங்க எங்க பசங்க எல்லாருக்கும் நீங்க பிளஸ் பண்ணுங்க. அவங்க வாழ்க்கையில நல்லா முன்னேறனும் அப்படின்னு சொல்லிட்டு உங்களோட ஹெல்ப் எங்களுக்கு தேவைப்படும். கண்டிப்பா எங்க நம்பர் எல்லாம் நாங்க கொடுக்கிறோம். சோ உங்களால முடிஞ்ச ஹெல்ப்பை எங்க பசங்களுக்காக நீங்க பண்ணுங்க. வித் ஹெல்ப் பண்றதுக்கு மணி மூலியமா சொல்லல. உங்களுடைய ஒரு சின்ன பிளஸ்சிங் கூட எங்க பசங்களுக்கு ஒரு பெரிய ஹெல்ப்பாதான் இருக்கும். சோ வந்து ரொம்ப தேங்க்ஸ் எல்லாருக்குமே. எங்க மாணவர்கள் உங்களுக்கு ஒரு சின்ன தேங்க்ஸ் சொல்லுவாங்க.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (பலத்த  கைதட்டல் )

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சாராம்சம் பின்வருமாறு :- (இறைவன் ஒருவரது வெளித்தோற்றத்தையோ அல்லது அவர் செய்யும் வழிபாடுகளையோ மட்டும் பார்ப்பதில்லை, மாறாக உயர்ந்த உள்ளம் கொண்டவர்களிடமே குடிகொள்கிறார். நாம் பிறருக்குக் கொடுப்பதன் மூலமே இறைவனிடமிருந்து எதையும் பெற முடியும்; எனவே, நம்மிடம் உள்ள செல்வத்தை பதுக்கி வைக்காமல், தேவையுள்ளவர்களுக்குச் சேவை செய்யவும், புண்ணியத்தைச் சேகரிக்கவும் பயன்படுத்த வேண்டும். உடல் அழியக்கூடியது, செல்வம் கைமாறக்கூடியது என்பதை உணர்ந்து, போட்டி பொறாமைகளைத் துறந்து வாழ வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயலும் இறைவனால் பதியப்படுகிறது (Memory); அதனால் நல்வழியில் நடந்து புண்ணியம் சேர்த்தால் மட்டுமே முதுமையிலும் நோய்க்காலத்திலும் அது நம்மைக் காக்கும். சித்தர்களின் வழிகாட்டுதலின்படி, தூய்மையான எண்ணங்களுடன் பிறருக்குச் சேவை செய்து வாழ்வதே இறைவனை அடைவதற்கும், நம் வாழ்வை மேம்படுத்துவதற்கும் உகந்த வழியாகும்.)


சிவபுராணம் ஓதுதல் :- 
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h09m10s
( மதிய வேளை உணவு எடுக்க அழைப்பு )


தேரையர் சித்தர் யந்திரம், மரக்கன்றுகள்  அனைவருக்கும் வழங்கும் அறிவிப்பு:- 
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h18m31s


சிவபுராணம் மற்றும் பல பதிகங்கள்  ஓதுதல்:- 
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h19m15s

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அநுபூதி  ஓதுதல்:- 
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=8h39m45s

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2090 - அன்புடன் அகத்தியர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5

நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை :-  https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h27m15s

=================================
# அன்புடன் போகர் சித்தர்  வாக்கு 
=================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 5

===================================
# மாற்றுத்திறனாளி மாணவர்கள் வருகை 
===================================

========================================
# ரங்கமாள் மெமோரியல் ஹியரிங் இம்பயர்ட் ஸ்கூல்
========================================

அடியவர் :- ( "சுவடி ஓதும் ஐயா, மாற்றுத்திறனாளி (செவித்திறன் சவால் கொண்ட) மாணவர்கள் பள்ளியில் இருந்து வருகை தந்திருக்கிறார்கள்." )

சுவடி ஓதும் மைந்தன் :- (சரிங்க அய்யா. அவர்களை உட்கார வையுங்கள்.)

======================================
# குறை இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை. 
======================================

போகர் சித்தர் :-   இவைத்தன் இன்னும் இன்னும்  எது என்று புரிய, அறிய. ஆனாலும் இவ்வுலகத்தில் நிச்சயம் தன்னில் கூட அனைவரும் குறை உள்ளவர்களே, நிச்சயம் தன்னில் கூட. ஏனென்றால் குறை இல்லாத மனிதன் இவ்வுலகத்தில் இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருமே குறை உள்ளவர் தான் இறைவன் படைச்சிருக்காரு. குறை இல்லாதவர்கள் யாருமில்லை. 

போகர் சித்தர் :-  ஏன், எதற்கு? குறை பின் இருந்தால் மட்டுமே இறைவனையும் காணலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :- குறை இருந்தா மட்டும் தான் இறைவனை காண முடியும்.  தேடி வருவாங்க. இல்லையென்னா….

போகர் சித்தர் :-  அப்பா, அக்குறை இல்லை என்றால் நிச்சயம் தன்னில் கூட மனிதன் தான் தான், இறைவன் என்று அகங்காரம் வந்துவிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அந்த குறை எல்லாருக்கும் ஒரு ஒரு குறை இருக்குது. அந்த குறை இல்லை என்றால் மனிதன் என்ன ஆகுவான்?

அடியவர்:-  அகங்காரம் வந்துரும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அகங்காரம் வந்துவிடும். 

போகர் சித்தர் :-  ஆனாலும் இதற்கு நிச்சயம் அகத்தியன் எடுத்துரைக்கப் போகின்றான் சற்று நேரத்திலே. நிச்சயம் அப்பொழுது உங்களுக்கு புரியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதைப் பற்றி ஏன் மனுஷன் பிறக்கிறாங்க, ஏன் மனுஷன் இறக்கிறாங்க, எதற்காகன்னு சொல்லிட்டு அகத்தியர் சற்று நேரத்தில் இதைப் பற்றி 

அடியவர்:-  பெரிய உண்மையை சொல்லுவார். 

==========================================
# எவனிடத்தில் திறமை இருக்கின்றதோ, அவனுக்குத்தான் இறைவன் ஆட்சியை கொடுப்பான். 
==========================================

போகர் சித்தர் :-  அப்பப்பா, அறிந்தும் ஆட்சிகள் பல பல, மன்னர்கள் பல பல. அப்பா, ஆட்சியைப் பற்றி சொல்கின்றேன். எவனிடத்தில் திறமை இருக்கின்றதோ, அவனுக்குத்தான் இறைவன் ஆட்சியை கொடுப்பான். 

போகர் சித்தர் :-  அப்பா, திறமை இல்லாதவன் கொடுத்துவிட்டால் அனைத்தும் அழித்து விடுவிச் சென்று விடுவான். அப்பா, அதனால்தான் பக்குவங்கள் வேண்டும் என்று அப்பனே. 

போகர் சித்தர் :-  எவனிடத்தில் பக்குவங்கள் இருக்கின்றதோ, அவன் நல்லவனாயினாலும் சரி, தீயவனாயினாலும் சரி, இறைவன் பார்த்துக்கொள்வான். அப்பா, விட்டுவிடுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (கை தட்டல்கள்)

சுவடி ஓதும் மைந்தன் :- யார் யார் அந்த பக்குவம்? ஆட்சி, மன்னர்கள். நான் பார்த்துட்டேன்ப்பா. போகர் சொல்றாரு, யாரிடத்தில் பக்குவம் உள்ளதோ, அவர்களுக்குத்தான் ஆட்சி கொடுப்பேன். நல்லவனா, இது கெட்டவனா, நாங்க பார்க்க மாட்டோம். நான் நல்லவனா, திருத்திருவோம். எங்களுக்கு அந்த அனுக்கிரகம் இருக்குது. நாங்க. 

========================================
# இவ்வுலகத்தில் யார் நல்லவன், யார் கெட்டவன், இறைவன் அனைவருக்குமே இருக்கின்றார்.
========================================

போகர் சித்தர் :-  ஆனாலும் அறிந்தும் இவ்வுலகத்தில் யார் நல்லவன்?  யார் கெட்டவன்? இறைவன் அனைவருக்குமே இருக்கின்றானடா மனித முட்டாள்களே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  இந்த உலகத்தில் யார் நல்லவன், யார் கெட்டவன் சொல்லாதீங்க. நம்ப சொல்லக்கூடாது. எல்லாருக்கும் இறைவன் இருக்கின்றான். 

போகர் சித்தர் :-  கெட்டவனை பின் இறைவன் தானே படைத்தான். அப்பொழுது இறைவன் கெட்டவனா?

அடியவர்:-  சிவாய நம.

சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டவன் சொல்றாங்களே, நீங்க அப்ப கெட்டவனும்  இறைவன் தான் படைச்சான். அப்ப இறைவன் கெட்டவனா? 

போகர் சித்தர் :-  முடிவெடுங்கள். இன்னும் நிச்சயம் தன்னில் கூட, இன்னும் கூட மூடநம்பிக்கையில் ஒளிந்திருந்தால், இவ்வுலகத்தில் மனிதன் வாழவே முடியாது. 

சுவடி ஓதும் மைந்தன் :-   இன்னும் யோசிக்கணும். 

===================================
# இறைவன் நல்லவனா, கெட்டவனா? நீங்கள் சொல்லுங்கள்.
===================================

போகர் சித்தர் :-  அப்பொழுது நல்லவனையும் நிச்சயம் இறைவன் படைக்கின்றான். அப்பொழுது இறைவன் நல்லவனா, கெட்டவனா? இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள். பின் இறைவன் கெட்டவன் என்றால், கெட்டவனைத்தான் படைக்கப் போகின்றான். நல்லவன் என்றால், நல்லவனைத்தான். பின் நிச்சயம் தன்னில் கூட இறைவனிடத்தில் அனைத்தும் சமமானவர்களே. 

போகர் சித்தர் :-  அவரவர் சூழ்நிலைக்கு ஏற்ற இங்கு கெட்டவன் நல்லவன் ஆகின்றான். நல்லவன் கெட்டவன் ஆகின்றான். ஆனால் இவையெல்லாம் இறைவனுடைய பொறுப்பு. 

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- (கை தட்டல்கள்)

சுவடி ஓதும் மைந்தன் :-  இங்க யார் நல்லவன்?

அடியவர்:-   சூழ்நிலை தான் தீர்மானிக்குது.

சுவடி ஓதும் மைந்தன் :-  யார் கெட்டவன்?

அடியவர்:-  அது சூழ்நிலை.

சுவடி ஓதும் மைந்தன் :-  அது சூழ்நிலை தான் தீர்மானிக்கிறது. அதனால யார் பார்த்துப்பாரு?

அடியவர்:-   இறைவன் பார்த்துப்பார்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் பார்த்துப்பார்.

அடியவர்:-   நமக்கு தகுதி இல்லைன்றாங்க.

===============================================
# அவரவர் வேலையை அவரவர் பார்ப்பதே இல்லை. 
===============================================
# தன் வேலையை இழக்கின்றாயே மனிதா. எவ்வளவு பெரிய மூடநம்பிக்கை இது.
================================================

போகர் சித்தர் :-  நிச்சயம் மனிதா, உன் வேலை என்ன? நிச்சயம் அதை பார்க்கவில்லையே. மற்றொரு வேலையை பார்த்துக் கொண்டு, பார்த்துக் கொண்டு தன் வேலையை இழக்கின்றாயே மனிதா. எவ்வளவு மூடநம்பிக்கை இது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்தவன் வேலை பார்த்து, அவன் செய்வானா, அவன் செய்வான்னு சொல்லிட்டு, அடுத்த வேலையை பார்த்துட்டு, உன் வேலையை நீங்க மறந்துறியே. ஏன் புரியுதுங்களா?

அடியவர்:-  கருத்தை சொல்றேன்.

சுவடி ஓதும் மைந்தன் :-   உன் வேலையை நீங்க மறந்துறியே. 

=========================================
# அடுத்தவன் திருடுகின்றான். யானும் திருடுவோம்.
=========================================
# அடுத்தவன் பொய் பேசுகின்றான். யானும் பேசுவோம்.
=========================================
# இப்படியே இருந்தால் எப்படி இறைவன் காண்பது?
=========================================

போகர் சித்தர் :-  நிச்சயம் அடுத்தவன், அடுத்தவன் திருடுகின்றான். யானும் திருடுவோம். அப்பா, அடுத்தவன், அடுத்தவன் பொய் பேசுகின்றான். யானும் பேசுவோம். இப்படியே இருந்தால் எப்படி இறைவன் காண்பது? நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கேளடா, மனிதா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்தவன் பொய் சொல்றான். நம்ம பொய் சொல்லுவோம்.

அடியவர்:-  சொல்லுவோம். திருடுறான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்தவன் திருடுறான். நாமும் திருடுவோம். இப்படி இருந்தா இறைவனை எப்படி பார்க்க முடியும்? இறைவனை எப்படி பார்க்க முடியும்? 

========================================
# ஞானி - அனைத்தும் இறைவன் செயலே என்று தான் இருப்பான்.
========================================

போகர் சித்தர் :-  நிச்சயம் எதை என்று அறிய ஒருவன் ஞானியாக இருக்க, எதை என்று அறிய, அறிய பலம், நிச்சயம் தன்னில் கூட பக்குவம் அடைந்து இருந்திருந்தால், நிச்சயம் அனைத்தும் இறைவன் செயலே என்று தான் இருப்பான்.

அடியவர்:-   சிவாய நம .

சுவடி ஓதும் மைந்தன் :- யார் ஒருத்தர் பக்குவங்கள் பெற்றிருக்காங்களோ, அவங்க எப்படி இருப்பாங்க?

அடியவர்:-   அமைதி ஆயிருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  அமைதி ஆயிடுவாங்க. எல்லாத்துக்கும் காரணம் இறைவன் செயல். இறைவனுடைய செயல்தான். 

====================================
# இறைவன் - “பிச்சைக்காரர்கள் என்று சொன்னதில்லை”. ஆனால் மனிதன்……
====================================

போகர் சித்தர் :-  நிச்சயம் எதை என்று அறிய இவ்வுலகத்தில் பிச்சைக்காரர்கள் என்கிறார்கள் மனிதர்கள். நிச்சயம் இறைவன் அப்படி சொன்னதில்லையே, மனிதா.

அடியவர்:-   கரெக்ட்.

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் மனுஷன் என்ன பண்ணிக்கிறான்? பார்த்தா, இவன் பிச்சைக்காரன் என்று சொல்கின்றன். ஆனா இறைவன் சொல்கின்றாரா? சொன்னதில்லையே.

அடியவர்:-   சொன்னதில்லை.

=====================================
# இறைவன் வரிசையில் அனைவரும் சமமானவர்கள்.
=====================================

போகர் சித்தர் :-  எதை என்று அறிய இறைவன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட, இறைவன் வரிசையில் அனைவரும் சமமானவர்கள். எதை என்று புரிய இங்கு நல்லவன் யார், கெட்டவன் யார்? நிச்சயம் பின் முடிவு நீங்கள் எடுக்காதீர்கள். படைத்தது இறைவன். பின் அவனுக்கே சொந்தம் அனைத்தும். அவனுக்கு தெரியும் நடத்த. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப இங்க நல்லவன் யார்?

அடியவர்:-   கெட்டவன் யார்?

சுவடி ஓதும் மைந்தன் :-  கெட்டவன் யார் என்று தீர்மானிக்கிறதுக்கு நம்ப கையில இல்லை.

அடியவர்:-  நல்லவன், கெட்டவன் நீங்க சொல்ற.

போகர் சித்தர் :-  நிச்சயம் திருடினால் ஒரு நாள் சிக்கிக் கொள்வான். நல்லவன் ஆகிவிட போகின்றான். நிச்சயம் இவ்வளவுதான் வாழ்க்கை. எதற்காகத்தானா இங்கு?

அடியவர்:- (புடிபட்டுருவான்? திருடுறவன் ஒரு நாள் பிடிபடுவான். அவ்வளவுதான். போலீஸ் நாலு அடி அடிப்பார்கள்.)

============================================
# தன் வேலையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ, அவன் மனிதன் இல்லை. அவனே  மாமனிதன். 
=============================================

போகர் சித்தர் :- அப்பப்பா, அறிந்தும் தன் வேலையை யார் ஒருவன் சரியாக செய்கின்றானோ, அவனே மனிதன் இல்லை. மாமனிதன். ஆனால் மாமனிதன் இவ்வுலகத்தில் இல்லையப்பா. தன் வேலை பார்ப்பதில்லை. 

====================================
# எச்சரிக்கை. அதி கவனம் தேவை - மற்றவர்களை பற்றி, அவர்கள் இல்லாத போது, மற்றவர்களை  பற்றி பேசினால் - அவர்கள் கர்மா உங்களை வந்து அடையும். உங்கள் புண்ணியங்கள் அவர்களுக்கு சென்றுவிடும். கிசுகிசு பேசுவதை , புறம்  பேசுவதை முற்றிலும் தவிர்க்கவும். நீங்கள் குறை கூறிய மற்றவர்கள் இன்னும் உயர்ந்து கொண்டே இருப்பார்கள் உங்கள் புண்ணியத்தால்….. 
====================================

போகர் சித்தர் :-  மற்றவர்கள் வேலையை பார்த்துக் கொண்டிருக்கின்றார்களே. நிச்சயம் பின் அவரவர் கர்மா இப்படி பேசுகின்றார்களே. இவரைப் போய் சாரும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப உன் வேலை நீங்க சரியா பயன்படுத்தலைன்னா, நீங்க அடுத்தவனை பத்தி பேசி நின்னேன்னா, அவன் அப்படி, இவன் இப்படி சொல்லிட்டு, அவன் அந்த கர்மா உனக்கு வந்து சேர்ந்து, உன் புண்ணியம் அவன் போய் சேரு. அவன் இன்னும் உயர்ந்ததா இருப்பான்.

அடியவர்:-   யாரையும் குறை கூறாதீர்கள்.

சுவடி ஓதும் மைந்தன் :-  குறை கூறாதீர்கள்.

அடியவர்:-  யாரிடமும் குறை இல்லை. 

===================================
# அண்ணாமலையரிடம் கேளுங்கள் 
===================================

போகர் சித்தர் :-  அப்பா, நீங்கள் அறிவாளியாக இருந்தால், இக்கெட்டவனை ஏன் படைத்தாய் என்று இதோ அண்ணாமலையிலே இருக்கின்றானே, அவனைத்தான் நீங்கள் கேட்க வேண்டுமே தவிர, நிச்சயம் எவை என்று புரிய 

சுவடி ஓதும் மைந்தன் :- ஒருத்தன் கெட்டவன் இருக்கிறான்னா யார்கிட்ட நீங்க கேட்கணும்?

அடியவர்:-   இறைவன்ட்ட தான் கேட்கணும்.

சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனுக்கு போய் கேளுப்பா. போயிட்டு ஏன்டா கெட்டவனை படைச்சான்னு சொல்லிட்டு 

======================================
# அடுத்து அகத்திய மாமுனிவர் ஒரு மாபெரும் ரகசியம் உரைக்க உள்ளார்கள் 
======================================

போகர் சித்தர் :-  இதைத்தன் இன்னும் உணர பாவம் என்ன, புண்ணியம் என்ன, இதனைத்தன் நிச்சயம் அகத்தியன் அடுத்து எடுத்துரைப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :- பாவம் எங்க? புண்ணியம் என்ன? 

அடியவர்:-  :  குருநாதர் சொல்லுவார். 

போகர் சித்தர் :-  உண்மையிலேயே பாவம் இருக்கின்றதா?  புண்ணியம் இருக்கின்றதா?  

சுவடி ஓதும் மைந்தன் :- உண்மையிலேயே பாவம் இருக்குதா, புண்ணியம் இருக்குதா, 

அடியவர்:-  சூட்சமத்தை சொல்லுங்க. 

===========================================
# போகன் யான் சொல்கின்றேன் - இப்புவிதனில் பிறந்தால், பாவம், புண்ணியம் இல்லை. இறைவனுக்கே சொந்தம்.
===========================================

போகர் சித்தர் :-  ஒன்றை சொல்கின்றேன், இப்புவிதனில் பிறந்தால், நிச்சயம் பாவம், புண்ணியம் இல்லை. இறைவனுக்கே சொந்தம். இறைவன் உங்களுக்கு அதை கொடுத்தால்தான், நிச்சயம் நீங்கள் வாழ்வீர்களாக. நிச்சயம் உங்களிடத்தில் பாவம் இல்லை. புண்ணியம் இல்லை. யான் சொல்கின்றேன், போகன்.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

அடியவர்:-   நிச்சயமா? அப்பா. எவ்வளவு பெரிய உண்மை. எல்லாம் இறைவன் பார்த்து கொடுக்கிறது. பாவமோ, புண்ணியமோ, நம்ம கையில இல்ல. நம்ம கையில இல்ல. ஒன்னும் இல்ல.

======================================
# இறைவனின் சிறு துகள்  ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கின்றது.
======================================

போகர் சித்தர் :-  எதை என்று புரிய இன்னும் புரிந்து கொள்ளுங்கள். இவ்வுலகம் நிச்சயம் தலைகீழாக போய்க்கொண்டிருக்கின்றது. நிச்சயம் அனைவரும், அதாவது சொல்லிவிட்டேன், எதை என்று அறிய அனைவரும் எதை என்று புரிய இறைவனின் சிறு துகள்,  மனிதனிடத்தில், ஒவ்வொரு மனிதனிடத்திலும் இருக்கின்றது. அதை எப்பொழுது உணர்வீர்களாக? மற்றவர்களைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் பொழுது, தன்னைப் பற்றி சிந்திக்காதவனுக்கு இறைவன் என்ன கொடுத்தாலும் பிரயோஜனம் இல்லை.

அடியவர்:-  நீயும் இறைவன்ட்ட ஒரு பகுதி தான்ப்பா. இறைவனின் ஒரு சிறு துகள்  உங்க கிட்ட இருக்கு. நீங்க அதை உணரல. அடுத்தவனை பத்தியே பேசிட்டு இருக்கிற. நீங்க எப்ப நீங்க உன்னை இறைவனை உணர போறன்றாங்க.

போகர் சித்தர் :-  அண்ணாமலையிலே யான் பார்த்தேன், எத்தனை பொய்க்காரர்கள், எத்தனை வேடதாரிகள், எத்தனை திருடர்கள், எத்தனை, எத்தனை, எத்தனை, எத்தனை, எதை என்று புரிய. ஆனாலும் யாங்கள் சகித்து அவர்கள் திருத்தி அனைவருக்கும் கொடுத்துக் கொண்டே இருக்கின்றோம். ஏனென்றால் அனைவரும் இறைவன் குழந்தைகளாக ஆகிவிட்டீர்கள். 

போகர் சித்தர் :- அதுமட்டுமில்லாமல் ஒரு தாய் தன் குழந்தை நிச்சயம் பின் எவை என்று கூறி எவ்வளவு தவறு செய்தாலும் பின் சிரிக்கின்றாள் அல்லவா? நிச்சயம் சிரித்து சிரிக்கின்றாள். அதுபோலே அண்ணாமலையோன்.

அடியவர்:-  அப்பா!!! சிவாய நம !!!! அதாவது அண்ணாமலையில எவ்வளவு திருடர்கள் இருக்காங்க. பொய் சொல்றவங்க, கபடதாரிகள், வேடதாரிகள் நிறைய பேர் இருக்கிறாங்க. பட் எல்லா பேரும் எங்களுக்கு தெரியும். தெரிஞ்சு நான் உங்களை திருத்தி வந்து எல்லாத்தையும் கொடுத்துட்டு இருக்கிறோம். இது இறைவனுடைய வேலைப்பா. இறைவன் பார்த்துப்பாரு. நீங்க உங்க வேலையை பாருங்க.

போகர் சித்தர் :-  மனிதன் சொல்வான், இவன் திருடன், இவனை ஒதுக்கு. இவன் குடிகாரன், இவனை ஒதுக்கு. இவன் தன் பொய் சொல்வோன், இவனை ஒதுக்கு. ஆனால் யாங்கள் அப்படி இல்லை. எங்களுக்கு அனைவருமே ஒன்றுதான்.

அடியவர்:-  சித்தர்களுக்கு அனைவரும் சமம்.

சுவடி ஓதும் மைந்தன் :- சமம். சித்தர்களுக்கு அனைவரும் சமம்.

அடியவர்:- மனிதன் என்ன சொல்லுவாராம்? இவன் திருடன், இவன் கொள்ளை அடிப்பவன், இவன் வந்து வேஸ்ட், பொறாமை பேசுறவன், பொறாமை பேசுறவன் சொல்லுவாங்களாம்.

சுவடி ஓதும் மைந்தன் :-  கோவப்படுறவன். 

போகர் சித்தர் :-  ஏனென்றால் மனிதனுக்கு அறிவில்லை. அவன் அறிவில்லாதவன். இப்படித்தான் பேசிக் கொண்டிருப்பான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்னா மனிதனுக்கு என்ன இல்ல?

அடியவர்:- முட்டாள் ஆரம்பிச்சிருக்கான். முட்டாள் தானே சொன்னாரு. மனிதன் முட்டாள் பேசுவான்.

சுவடி ஓதும் மைந்தன் :-  முட்டாள். அப்ப இதுதான் பேசிட்டு இருப்பான். ஆனால் நாங்கள் வந்து அது மாதிரி பார்க்கிறது இல்லை. திருடனா இருந்தாலும் அவனை மாத்தணும். குடிகாரன் இருந்தாலும் அவனை மாத்தணும். எல்லாரும் 

===================================
# வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே.
===================================

போகர் சித்தர் :-  நிச்சயம் ஒரு நாள் எங்கு பின் எதை என்று அறிய எவன் அனுப்புகின்றானோ, அவனிடத்தில் வரவேண்டும் அல்லவா? அதனால் அவனே திருத்துவான்.

அடியவர்:-  ஆமா, எல்லாரும் இறைவன்ட்ட இருந்து வந்தோம். திருப்பி அங்க போய்தான் ஆகணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  போய்தான் ஆகணும். 

அடியவர்:-   வைகுந்தம் புகுவது மண்ணவர் விதி. இன்னைக்கு இல்ல, என்னைக்கோ ஒரு நாள் போய்தான்  ஆகணும். அப்ப இறைவன் பார்த்துப்பான், திருத்துவான். 

=====================================
# ஏன் சாதுக்கள் , சன்னியாசிகள் (துறவிகள்)- இறைவனை திட்டவில்லை 
=====================================

போகர் சித்தர் :-  எத்தனை, எத்தனை பிரச்சனைகள் இவர்களுக்கு? கடன் பிரச்சனைகள், இல்லத்தவள் பிரச்சனைகள். இன்னும் எதை என்று அறிய, அறிய எவை என்று புரிய, புரிய ஏன், எதற்கு? ஆனால் இவர்கள் ஈசனை திட்டலாமே. ஏன் திட்டவில்லை மக்களே? 

சுவடி ஓதும் மைந்தன் :-  (மேடையில் இருக்கும் சன்னியாசிகள் ) இவங்க எவ்வளவு பிரச்சனையிலிருந்து இவங்க வராங்க? இப்படி எல்லாம் இருக்காங்க. கடவுளை போய் வந்து திட்டுறது ஏன்? திட்டலப்பா? ஏன் திட்டல? திட்டறது தானே கடவுளை? 

போகர் சித்தர் :-  அப்பா, நல்லவன் யார், கெட்டவன் யார்? அனைவரையும் இறைவன் தான் படைத்தான். நிச்சயம் தன்னில் கூட திட்ட வேண்டும் என்றால் இறைவனைத்தான் திட்டித் தீர்க்க வேண்டும். அப்பா, நிச்சயம் இதுதான் அறிவின் பண்பு.

அடியவர்:-  இதான் அறிவுன்றாங்க. இதுதான் அறிவு. அறிவோட உச்சம் அதுதான். யாரை திட்டணும்? இறைவன்ட்ட தான் கேட்கணும். நீங்க இறைவனை பழி கேளு. இறைவன் தானே படைச்சாரு. மனுஷனை குறை சொல்லி நிக்கிற வந்து 

போகர் சித்தர் :-  எதை என்று புரிய? இதனால் பின் முடிவெடுப்பதும் அவனே தீர்மானிப்பதும், அவனே வெற்றியை கொடுப்பதும், அவனே தோல்வியை கொடுப்பதும், அவனே அனைத்தும் கொடுப்பவனாக அவன் இருப்பதால் மனிதனுக்கு இங்கு என்ன வேலை? வெறும் பொம்மையே. பொம்மையை பின் உயர்ந்தவன் ஆக்குவதும், பின் தாழ்ந்தவன் ஆக்குவதும், நிச்சயம் பின் நல்லவன் ஆக்குவதும், கெட்டவன் ஆக்குவதும், பின் நோயாளி ஆக்குவதும், பின் நோயிலிருந்து விடுபட்டு ஆக்குபவனும் இறைவன் ஒன்றே. அவ் இறைவன் யார்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏப்பா, எல்லாத்துக்குமே அவர்தான். 

அடியவர் :- எல்லாமே இறைவன். 

======================================
# அடுத்து அகத்திய மாமுனிவர் ஒரு மாபெரும் ரகசியம் உரைக்க உள்ளார்கள் 
======================================

போகர் சித்தர் :-  இதை சற்று நேரத்திலே தெரிவித்து தான் போகின்றான் என் குரு அகத்தியன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை இறைவன் யாரு? சற்று நேரத்துல இறைவன் யாருன்னு சொல்லப்போறாங்க. பெரிய சூட்சுமம். 

============================================
# முட்டாள் யார் என்றால் இறைவன் பற்றி தெரியாமலே இறைவன் இல்லை என்கிறானே,  அவனே பெரிய முட்டாள். 
============================================

போகர் சித்தர் :-  அப்பா, முட்டாள் யார் என்றால் இறைவன் பற்றி தெரியாமலே இறைவன் இல்லை என்கிறானே, அவனே பெரிய முட்டாள். 

================================================
# இறைவன் யார் என்று தெரியாமலே பின் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னானே, அவன் அதைவிட முட்டாள். 
=================================================

போகர் சித்தர் :-  அவை மட்டுமில்லாமல் இறைவன் யார் என்று தெரியாமலே பின் இறைவன் இருக்கின்றான் என்று சொன்னானே? அவன் அதைவிட முட்டாள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  (போச்சு. அடுத்து போட்டாங்க. (1) இறைவன் இல்லைன்னு சொல்றவன் முட்டாளாம். (2) இறைவனை பற்றி தெரியாமலே, இறைவன் இருக்கிறான் என்று ஒருத்தன் சொல்றான் பாருங்க, அவன் அதைவிட பெரிய முட்டாளாம்.) 

போகர் சித்தர் :-  எதை என்று அறிய, எதை புரிந்து கொண்டு, எதை தெரிந்து கொண்டு இறைவன் இருக்கின்றான், இறைவன் இல்லாதவன் என்று நீங்கள் முடிவெடுத்து எவ்வாறு நியாயம்? அப்பா, நியாயம். 

சுவடி ஓதும் மைந்தன் :- உங்களுக்கு ஒண்ணுமே தெரியல. தெரியாமல் எப்படி இறைவன் இருக்கிறான், இல்லைன்னு சொல்றீங்க? சொல்லுங்க? 

போகர் சித்தர் :-  எது என்று அறிய ஒருவன் பணக்காரன் என்கிறார்கள், ஒருவன் ஏழை என்கிறார்கள். இவர்கள் எல்லாம் நிச்சயம் பின் எது என்று அறிய இறைவன் தானே படைத்தான். ஆனால் மற்றொருவன் இவை பாவம், புண்ணியமே என்கின்றார்கள். ஆனால் எப்படி, அப்பா? பாவம், புண்ணியம் எது என்று அறிய இறைவனிடத்தில் தேங்கி நிற்கின்றது. அப்பா, பின் எப்படி, அப்பா? 

அடியவர் :- ஒருத்தன் பணக்காரன்றோ, ஒருத்தன் ஏழைன்றோ? இதை வச்சு பாவம், புண்ணியம்ன்றோம்? இது எல்லாம் இறைவன்ட்ட தேங்கி இருக்குன்றாங்க. 

===================================
# பொய் :- பணக்காரராக இருந்துவிட்டால் அவன் புண்ணியவான்.
===================================

போகர் சித்தர் :-  எவை என்று அறிய பணக்காரராக இருந்துவிட்டால் அவன் புண்ணியவான் என்று சொல்லிவிடுவார்கள். இதுவும் பொய்யே. 

========================================
# மேடையில் அமர்ந்திருந்த துறவிகள்  பாவக்காரர்களா ?
========================================

போகர் சித்தர் :-  இவன் பின் சிலர் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால் நிச்சயம் இவன் பாவக்காரன் என்று இதோ . இவையெல்லாம் எவர்கள் எல்லாம் கஷ்டப்பட்டு இருக்கின்றார்களே? இவர்கள் பாவக்காரர்களா என்னப்பா? சொல்லுங்கள், பார்ப்போம். 

அடியவர் :- இது ஒரு தவறான ஒரு எண்ணம் நமக்குள்ள இருக்கு. பணம் இருக்கிறவன் ரொம்ப புண்ணியமா நினைச்சுட்டு இருக்கிறோம். இல்ல, சொல்றாங்க இல்லை. அதேபோல கஷ்டப்படுறவங்க பாவம்னு நினைச்சுட்டு இருக்கிறோம். இல்லை, அதுவும் இல்லைன்றாங்க. 

போகர் சித்தர் :- பாவம், புண்ணியம் யாரிடத்தில் இருக்கின்றது? யாராவது சொல்லுங்கள், பார்ப்போம். நேரத்தை கொடுக்கின்றேன். யாங்கள் அதாவது நிறைய பின் மனிதர்கள் சொல்வார்கள். சித்தர்கள் மனிதருக்கு இறங்குவார்களா என்று? நிச்சயம் இறங்கித்தான் ஆகவேண்டும். ஏனென்றால் இறங்கி விடாமல் நிச்சயம் மனிதன், நிச்சயம் மனிதனே பின் தின்னி விடுவான். அப்படிப்பட்ட மனிதன் நிச்சயம் இறைபலத்தை அறிந்து கொள்ள முடியுமா? என்ன, 

சுவடி ஓதும் மைந்தன் :-  நிச்சயமா அறிஞ்சுக்க முடியாது. அப்ப மனுஷனை, மனுஷனே சாப்பிடுற மனுஷன்ப்பா. 

போகர் சித்தர் :- எது என்று அறிய இதனால் அழுக்குகளை நீக்கவே நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உருவெடுத்து இன்னும் பின் யாங்கள் வரவில்லை என்றால் எங்களை வைத்து நிச்சயம் பின் எதை செய்து பின் நடக்கவில்லை என்றால் சித்தர்களே இல்லை என்று சித்தன் பொய் என்றே சொல்லிவிடுவார்கள். அப்பா, அப்பப்பா. 

======================================
# அனைத்தும் ஆதி ஈசனின் கட்டளைப்படியே இங்கு நடந்துகொண்டு உள்ளது.
======================================

போகர் சித்தர் :- அதனால் பின் எவ்வெவ் நேரத்தில் நிச்சயம் எவ் அவதாரத்தில் யாங்கள் வரவேண்டும் என்பவை எல்லாம் முன் உரைக்கப்பட்டதே. ஈசன் கட்டளைப்படியே தான் யாங்கள் வந்திருக்கின்றோம். 

===================================
# ஏன் விலங்கு பிறப்பு? ஏன் பணக்காரனாக? ஏன் ஏழையாக? 
==================================

போகர் சித்தர் :-  பின் ஏன் உங்களிடத்தில் எது என்று அறிய நிறை குறைகள் என்ன? நிறைக்குறைகள் எது என்று? எதை பயன்படுத்துவது? எதன் பயன்படுத்தாது? ஏன் மனிதப் பிறப்பு? நிச்சயம் ஏன் விலங்கு பிறப்பு? ஏன் ஒருவன் பின் பணக்காரனாக? ஏன் ஒருவன் ஏழையாக? நிச்சயம் அனைத்திற்கும் விடை உண்டு. 

அடியவர் :- நிறைய ஏற்றத்தாழ்வு நம்ம பார்க்கிறோம்ல. சமூகத்தில் எவ்வளவு ஏற்றத்தாழ்வுகள் கேள்வி ஓடிட்டு இருக்குல்ல. எல்லாத்தையும் நான் சொல்றோம்ன்றாங்க. எல்லாம் ஏற்றத்தாழ்வு. எல்லாத்தையும் 

போகர் சித்தர் :-  ஒன்றை ஞானியவன் ராமலிங்க அடிகளோன். அவன் ஒன்றுமில்லாதது தான் சென்றான். அவன் பாவப்பட்டவனா? 

அடியவர் :- அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  வள்ளலார் பற்றி சொல்றாரு. ஆமா, ஒன்றுமில்லாதது போனாருப்பா. அவன் பாவப்பட்டவனா? 

போகர் சித்தர் :-  எதை என்று புரிய இன்னும் இயேசு எவை என்று புரிய  ஒன்றுமே தவறு செய்யவில்லை. நிச்சயம் எப்படி இறந்தான்? அவன் எவை என்று அறிய பாவப்பட்டவனா? 

அடியவர் :- சிலுவையில் கல்லால் அடிச்சு கொன்னாங்க. அவரை அவர் பாவப்பட்டவரா? 

========================================
# பாவம், புண்ணியம் எங்கு அமைக்கப்படுகின்றது? 
# பாவம், புண்ணியம் எங்கு தீர்மானிக்கப்படுகின்றது?
========================================

போகர் சித்தர் :- எது என்று அறிய நிச்சயம் பாவம், புண்ணியம் எங்கு அமைக்கப்படுகின்றது? எங்கு தீர்மானிக்கப்படுகின்றது? என்றது எவருக்குமே தெரியவில்லை. இதுதான் ரகசியம். இவ் ரகசியத்தை உணர்ந்தால்தான் இறைவனையும் உணர்ந்து கொள்ள முடியும். இவ் ரகசியத்தை உணர்ந்து கொள்ள முடியவில்லை என்றால் இறைவனையும் உணர்ந்து கொள்ள முடியாது. கஷ்டங்கள் பட்டு பட்டு சாக வேண்டியதுதான் மனிதர்களே. 

அடியவர் :- அடிப்படையில் இதை புரிஞ்சுக்கணும். அந்த பாவம், புண்ணியம் சூட்சமத்தை புரிஞ்சுக்கணும். நம்ம நினைச்சுட்டு இருக்கிறோம். தப்பு, நீங்க நினைச்சுட்டு இருக்கிறது எல்லாம் தப்புன்னு அப்படியே மாத்திட்டாங்க. எல்லாம் 

போகர் சித்தர் :-  நிச்சயம் பாவம், புண்ணியம் மனிதனிடத்தில் இருக்கின்றதா என்றால் இல்லையப்பா? இல்லை, 

அடியவர் :- இல்லை. 

போகர் சித்தர் :-  யார் படைத்தவனோ, அவனிடத்தில் தான் இருக்கின்றது. நீங்கள் பின் என்ன செயல்கள் செய்கின்றீர்களோ, அதற்கு தகுந்தார் போல் சிறிது சிறிது கொடுப்பான். இதைப்பற்றி இன்னும் விவரிக்கின்றேன். பொறுத்திருங்கள். பின் அனைத்தும் சொல்லிவிட்டால் புரியாமல் போய்விடும் உங்களுக்கு. 

அடியவர் :- நிறைய விஷயத்தை சொன்னா மூமென்ட்ல திணிக்க முடியாது. எல்லாமே கொஞ்சம் கொஞ்சமா சொல்றோம்னு இருக்காங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே யாருக்குள்ள இருக்குதாம்? 

அடியவர் :- இறைவன்ட்ட இருக்கு. இறைவன் கிட்ட இருக்குது. பாவம், புண்ணியம் இதோ அவர் சொன்னாரு. பாரு, யாருக்குள்ள இருக்குது? எல்லாம் கிட்ட இறைவன் கிட்ட தான் பாவம், புண்ணியம் இருக்குது. இருக்குது. அப்ப அவர் என்னென்ன பண்றாரு? வந்து நம்மளுடைய செயல்களுக்கு ஏற்றார் போல கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கிறார். கொடுக்கிறார். 

போகர் சித்தர் :-  இதைத்தன் எவை என்று புரிய? இதனால் அப்பா, எத்தனையோ அப்பனே  நிச்சயம் தன்னில் கூட பின் இருக்கின்றார்கள். அப்பனே  பின் இயலாதவர்கள் அவர்கள் எல்லாம் பாவப்பட்டவர்களா என்றால் நிச்சயம் இல்லை. 

அடியவர் :-  இல்லை, இயலாதவர்கள் பாவப்பட்டவர்கள் இல்லை. இல்லை, 

==========================================
# மாற்றுத்திறனாளிகள் பாவப்பட்டவர்களா? நிச்சயம் இல்லை. 
==========================================

போகர் சித்தர் :-  எது என்று அறிய அறிய இப்பொழுதெல்லாம் மாற்றுத் திறனாளிகள் இருக்கின்றார்களே. அவர்கள் பாவப்பட்டவர்களா? நிச்சயம் இல்லை. 

அடியவர் :-  இல்லை, 

சுவடி ஓதும் மைந்தன் :-  யாருமே பாவப்பட்டவர் இல்லைன்றாரு. அப்ப யார் 

அடியவர் :- புதுசா சொல்லப்போறாங்க? 

போகர் சித்தர் :-  எதை எவை என்று புரிய? ஞானிகள் என்ன? எது என்று எதுவும் இல்லாமல் நிச்சயம் வாழ்ந்தார்களே. அவர்கள் பாவப்பட்டவர்களா? 

அடியவர் :- எவ்வளவு ஞானிகள்! நம்ம ஞானிகள் யாருமே பணக்காரங்களை எந்த ஞானியும் நம்ம பார்க்கவே இல்லையே. எல்லாருமே ஏழைகள். ஒன்னும் இல்லாமல் தான் வந்து இறைவன்ட்ட அடைஞ்சாங்க. அப்ப அவங்க எல்லாம் பாவப்பட்டவங்களா? எப்படி கேக்குறாங்க பாருங்க. 

===============================
# சுவடி மூலம் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு வரங்கள்.
===============================

போகர் சித்தர் :-  இதைத்தன்னே நிச்சயம் தன்னில் கூட குழந்தைகள் அழையுங்கள். நிச்சயம் தன்னில் கூட என்ன வேண்டும் என்று கேளுங்கள். குழந்தைகள், 

அடியவர் :-  அப்பா, குழந்தைகளா? ஆமா, ஆமா, உட்காரட்டும், உட்காரட்டும், உட்காரட்டும். நிக்க முடியுமா? 

அடியவர் :- ( கருணையுடன் ) உங்களுக்கு என்ன வேணும்? 

போகர் சித்தர் :-  இவர்களுக்கு நல்லவர்கள் யார் என்றும் தெரியாது. கெட்டவர்கள் யார் என்றும் தெரியாது. 

அடியவர் :- இவர்களுக்கு யாரு என்ன, நல்லவங்க யாருன்னு தெரியாது. கெட்டவங்க யாருன்னு தெரியாது. 

போகர் சித்தர் :-  எதை புரிய, நிச்சயம் இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணமே போதும். 

அடியவர் :-  ஒரே எண்ணம் உங்களுக்கு, இறைவன் நம்மளை காப்பாத்துவாங்கன்றதை தவிர வேற எதுவும் உங்களுக்கு தெரியாது. நல்லதும் தெரியாது, கெட்டதும் தெரியாதுன்றாங்க. 

போகர் சித்தர் :-  எதை என்று அறிய அறிய இதைப்போல் ஆனாலும் மனிதன் வளர, வளர நிச்சயம் என்னென்னவோ எண்ணங்கள். 

அடியவர் :-  ஆனா மனுஷன் வளர, வளர என்னென்னமோ எண்ணங்களை வந்து மனசுக்குள்ள புகுத்திட்டு இருக்கிறான். குழந்தைகளுக்கு 

================================
# மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு நாடி வரங்கள் ஆரம்பம் 
================================

போகர் சித்தர் :-  என்ன வேண்டும் என்று கேளுங்கள். 

அடியவர் :- என்ன வேணும்னு கேளுப்பா? என்ன தேவை உங்களுக்கு? என்ன வேணும்பா? என்ன தேவை? என்ன தேவை? கடவுளை பார்த்தீங்கன்னா என்ன கேட்பீங்க? என்ன வேணும்னா என்ன? 

மாற்றுத்திறனாளி குழந்தை :- படிப்பு, படிப்பு, படிப்பு, படிப்பு. ( படிப்பு வேண்டும் ) 

போகர் சித்தர் :-  எதை என்று அறிய சாதாரணமாய் வருபவை இவை. 

அடியவர் :- இதெல்லாம் சாதாரணமா கொடுப்பாங்கப்பா. ஏதாவது கேளுன்றார். வேற ஏதாவது கேளு. பெரிதினும் பெரிது கேள். 

========================================
# கடவுளை பார்க்க வேண்டும்  
========================================

மாற்றுத்திறனாளி குழந்தை :-  கடவுள் பார்ப்பாங்க. அப்பா, அம்மா, கடவுளை பார்க்கணும்? 

அடியவர் :-  கடவுளை பார்க்கணுமாம்.

போகர் சித்தர் :- எவை என்று அறிய நிச்சயம் இவர்களுக்குப் போல் நிச்சயம் தன்னில் கூட கடவுளை நிச்சயம் பார்ப்பார்கள். கட உள்  எவை என்று உள் நிச்சயம் தன்னில் கூட மனம் இருந்தால் கடவுள் உள்ளே. 

சுவடி ஓதும் மைந்தன் :- கடவுள் ஏதாவது கேளுங்க. கடவுள் ஒரு நிச்சயம் இறைவனை நீங்க பார்ப்பீங்க. அப்படிங்கிறார். கடவுள் அப்படிங்கிறாங்க. 

=========================================
# உங்களை பின் வளர்ப்பவர்களே இறைவன்
=========================================

போகர் சித்தர் :-  எதை என்று புரிய உங்களைப் பின் வளர்ப்பவர்களே இறைவன் என்று நீங்கள் பின் ஏற்றுக்கொள்ளலாம். 

அடியவர் :- சிவாய நம , நம்ம பெரிய சூட்சமம் உங்களை வளர்க்கிறாங்க இல்ல? இவங்களே உங்களுக்கு இறைவன். இறைவன் நமக்குள்ள தான்ப்பா இருக்காங்க. உங்க, அவங்க, உங்க இறைவன் எடுத்துக்கோங்க. ஆசிரியர்கள் தான் கடவுள். ஐயா, 

அடியவர் :- அடுத்து அதுக்கு என்ன தேவையா? வேற என்ன தேவை சொல்லுங்க. என்ன வேணும்னு சொல்லுங்க. தேவை என்ன வேணும் கேளுப்பா. இறைவன்ட்ட கேளு. இறைவன் வாய்ப்பு கொடுக்குறாங்க. கேளுங்க, 

மாற்றுத்திறனாளி குழந்தை காப்பாளர்  :-  அவங்ககிட்ட என்ன கேட்கணும்? 

மாற்றுத்திறனாளி குழந்தை :-  ( பேசமுடியாமல்  - எதுவுமே தேவையில்லை. ) 

மாற்றுத்திறனாளி குழந்தை காப்பாளர்  :-  தேவையில்லை. எதுவுமே தேவையில்லை. அவருக்கு எதுவுமே தேவையில்லையாம். 

போகர் சித்தர் :-  அப்பா, இறைத்தன். அப்பா, நிச்சயம் யாராவது இதுபோல் கேட்பார்களா? என்ன அப்பா, இப்பொழுது சிந்தியுங்கள். அப்பா,

கூட்டுப்  பிரார்த்தனை அடியவர்கள் :- ( கை தட்டல்கள் )

போகர் சித்தர் :-   நிச்சயம் இதுதான் மனிதனுடைய எண்ணங்கள். அப்பா, இதுதான் நிச்சயம். தன்னில் கூட இதைத்தான் இறைவன் எதிர்பார்க்கின்றான். ஆனால் 

மாற்றுத்திறனாளி குழந்தைகள்  காப்பாளர்  :-  இவர்கள் எல்லாம் தேர்வு எழுதி இருக்காங்க. சார், அவங்களுக்கு தேர்வு எழுதுறதுக்கு நல்ல ஒரு அருள் கொடுக்கணுமா? அதுக்கு 

போகர் சித்தர் :- எதை என்று புரிய, நிச்சயம் எதை என்று புரிய, பின் அருளும் வரும். பின் இவர்கள் எதை என்று புரிய அருளும் வரும். 

அடியவர் :- கொடுத்தாச்சு. அடுத்து கேளுங்க. எல்லா பேரும் கேளுங்க. உங்களுக்கு என்ன வேணும்னு கேளுங்க. 

அடியவர் :-  ஏதாவது கடவுள் கிட்ட கேளுங்க. எப்படி சொல்லு? சொல்லு, நான் சொல்றேன். எப்படி 

=======================================
# கம்ப்யூட்டர் வேலை உன்னை தேடி வரும்
=======================================

மாற்றுத்திறனாளி குழந்தைகள்  காப்பாளர்  :-  கம்ப்யூட்டர் வேலை போகணுமா? சார், அதுக்கு கடவுள் வந்து ஹெல்ப் பண்ணனுமா? கம்ப்யூட்டர் வேலை வேணுமா? கடவுள் ஹெல்ப் பண்ணனுமா? 

போகர் சித்தர் :-  இதைத்தன் அறிய உன்னை தேடி வரும். உன்னை தேடி வருமப்பா. 

அடியவர் :- அது தானா வரும்? நீங்க பார்த்தீங்கன்னா, அருள் கொடுத்துட்டாங்க. அடுத்து நான் பேசுறேன். நீங்க பேசு. சொல்லு, 

மாற்றுத்திறனாளி குழந்தைகள்  காப்பாளர்  :-  எல்லாம் பத்தாம் வகுப்புல எக்ஸாம்ல பாஸ் ஆகணுமாங்க. சார், 

அடியவர் :- எல்லா பேரும் டென்த் எக்ஸாம் பாஸ் ஆகணும். 

போகர் சித்தர் :-  எவை என்று புரிய? இதை இறைவன் பார்த்துக் கொள்வான். கவலையை விட்டுவிடு. 

அடியவர் :- கடவுள் உன்னை இறைவன் சரி பண்ணுவாருப்பா. அடுத்து சொல்லுவாங்களா? டீச்சர் சொல்லணுமா? இவங்க சொல்லுவாங்களா? டீச்சர் சொல்லுங்க. என்ன வேணும் கேளுங்க. 

====================================
# பிறர் நலம் வேண்டிய , உயர் உள்ளம் 
====================================

மாற்றுத்திறனாளி குழந்தை  :-  எங்க மேடம் இருக்காங்க. சார், அவங்களோட ஹெல்ப் ஹெல்த் வந்து நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, பிரேயர் பண்ணிக்கோங்க. 

அடியவர்:- அருமை, அருமை. 

போகர் சித்தர் :-  இவைத்தன் பின் அதாவது மற்றவருக்காக வேண்டுகின்றாளே …. எத்தனை பேர்? இவைத்தன் பின் நிச்சயம் தன்னில் கூட எவையெல்லாம்? நிச்சயம் தன்னில் கூட வயது. நிச்சயம் எவ்வளவோ ஆனாலும், நிச்சயம் பின் நீங்கள் எல்லாம் நிச்சயம் எதை எதை வேண்டிக்கொள்ள ஆனாலும், இதன் தன்மை வயது குறைவே. இதிலிருந்து பாடம் கற்க வேண்டும். 

அடியவர் :-  கற்றுக்கொள்ளனும். அதான் பிறர் நல்லா இருக்கேன்னு நினைக்கிறாங்க. அப்பா, அப்பா, உங்களுக்கு கொடுத்தாங்க. அப்பா, உங்களுக்குள்ளே. 

மாற்றுத்திறனாளி குழந்தைகள்  காப்பாளர்  :-  அப்பா, அம்மாவுக்கு உடம்பு எல்லாம் நல்லா இருக்கணும்னு வேண்டிக்கிறாங்க. 

போகர் சித்தர் :-  எதைத்தன் அறிய? நிச்சயம் பின் இறைவன் பார்த்துக் கொள்வான். நலமாக. 

=====================================
# அகத்திய மாமுனிவரின் வாக்குகள் அனைவரும் படிக்க, பள்ளிகளில்  பாட திடமாக வேண்டும். 
=====================================

மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும்  அம்மை அடியவர் :- அகத்தியர் ஐயாவுடைய அருள்வாக்கு எல்லா குழந்தைகளும், அதாவது ஆறாவதிலிருந்து எல்லா குழந்தைகளும் எப்படி தமிழ், இங்கிலீஷ், மேக்ஸின் படிக்கிறாங்களோ, அதே மாதிரி இது ஒரு சப்ஜெக்ட்டாவே எல்லா குழந்தைகளும் படிக்கிற மாதிரி ஒரு சப்ஜெக்ட்டா ஒரு வரணும். இது வந்து அரசு அரசாங்கமே. இது வந்து நான் 

போகர் சித்தர் :-  எதை என்று புரிய தாயே, நிச்சயம் அகத்தியன் அனைத்தும் தற்பொழுது, அதாவது சிறிது நேரத்திலே தூவக்குவான். அப்பொழுது புரியும். நிச்சயம் அனைத்தும் அப்பொழுது கேட்டுக்கொள். அகத்தியனிடம். 

சுவடி ஓதும் மைந்தன்  :- பொறுங்கம்மா. 

அடியவர் :- கொஞ்ச நேரம் வந்து அகத்தியர் சொல்லுவாரு. 

மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும்  அம்மை அடியவர் :- ஏன்னா எல்லா குழந்தைகளுக்கும் இந்த அகத்தியருடைய அருள்வாக்கு ஒவ்வொரு விஷயமும் எல்லாம் வருங்காலத்தில் குழந்தைகளுக்கு போய் சேரணும். 

=========================================
# மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய உத்தரவு 
==========================================

போகர் சித்தர் :-  இதைத்தன் பின் எவை என்று இவர்களைக் காக்க, நிச்சயம் அவர்களிடத்தில் நிச்சயம் ஏதாவது கொடுத்து அனுப்புங்கள். 

கூட்டுப்பிரார்த்தனை அடியவர்கள்  :- (  மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய பல அடியவர்கள் கருணையுடன்  முன் வந்தனர் ) 

போகர் சித்தர் :-  இவைத்தன் ஏன் இப்படி? 

போகர் சித்தர் :- எதை என்று புரிய? அனைத்தும் இப்பிறப்பு எதற்கு என்றெல்லாம் பின் அகத்தியன் நிச்சயம் எடுத்துரைப்பான் இன்றே. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  கண்டிப்பா  ஏன் இது மாதிரி எல்லாம் பிறக்குறாங்க? ஏன் இது பண்றாங்கன்னு சொல்லிட்டு அகத்தியர் கொஞ்ச நேரத்துல சொல்லப்போறாங்க. 

அடியவர் :- நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய, நமச்சிவாய. 


========================================
# ரங்கமாள் மெமோரியல் ஹியரிங் இம்பயர்ட் ஸ்கூல்
========================================

அடியவர் :- அவங்க ஹோம் பேர் என்னம்மா? 

மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும்  அம்மை அடியவர் :- ரங்கமாள் மெமோரியல் ஹியரிங் இம்பயர்ட் ஸ்கூல், சம்பந்தனூர். (திருவண்ணாமலை) எஸ்.கே.பி இன்ஜினியரிங் காலேஜ் பேக் சைடுல இருக்குங்க சார். ஸ்கூல் இங்க வந்து 150 காது கேளாத மாணவர்கள் இருக்காங்க. 100 மாணவர்கள் மூளை வளர்ச்சி குன்றிய மாணவர்கள் இருக்காங்கங்க சார். மொத்தம் 250 மாணவர்கள் இருக்காங்க. 

அடியவர் :- 250 மாணவர்கள் இருக்காங்க. 250 மாணவர்கள் இருக்கிறாங்க. உங்களால இயன்றதை மனசு வந்து செய்யுங்க. இவங்க எல்லாம் சரியாகனும். இறைவன் அருளால மனதார பிரார்த்திச்சுட்டு, காணிக்கையை கொடுத்துட்டு போங்க. இவங்களுக்காக அப்படியே இது நடக்கிற வரைக்கும் ஓம் நமச்சிவாய எல்லாரும் சொல்லுங்க. 

===============================
# கூட்டுப்பிரார்த்தனை குழு அடியவர்களுக்கு பாராட்டுக்கள் - சிறப்பான சேவை செய்தனர். 
=================================

மாற்றுத்திறனாளி குழந்தைகள் காக்கும்  அம்மை அடியவர் :-  தேங்க்யூ சார். தேங்க்யூ பார் யுவர் கிரேட் ஹெல்ப் சார். நாங்க இந்த மாதிரி ஒரு நிகழ்ச்சியை நாங்க பார்த்ததுல. இப்பதான் எங்க பசங்களையும் கூட்டிட்டு வந்தோம். எங்களுக்கு நல்ல வெல்கமிங் எல்லாமே இருந்தது. ஃபுட் எல்லாமே நல்லா அரேஞ்ச் பண்ணிருந்தாங்க. பசங்களை உட்கார வைக்கிறதுல இருந்து எங்களை இன்வைட் பண்ணதுல இருந்து எல்லாமே ஹாப்பியா இருந்ததுங்க சார். தேங்க்யூ சார். 

===========================================
# மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி அளித்தவர்களுக்கு அண்ணாமலையார் புண்ணியங்களை திருப்பி கொடுப்பார்கள் 
===========================================

போகர் சித்தர் :- இதை என்று அறிய ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட நீங்கள் பின் கொடுத்ததெல்லாம் உங்களுக்கே திருப்பிக் கொடுப்பான் அண்ணாமலையான்.

சுவடி ஓதும் மைந்தன்  :-  நீங்க வந்து என்ன ஏதோ நம்ம கொடுத்துட்டோம்னு நினைக்காதீங்க. திரும்பவும் கொடுப்பார் இறைவன். 

போகர் சித்தர் :- நிச்சயம் பணமாக அல்ல, புண்ணியத்தை. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  என்ன கொடுப்பாராம். பணத்தை கொடுக்க மாட்டாரு, புண்ணியத்தை கொடுப்பார். அம்மா, ஏதாவது சொல்றோமா? 

==============================================
# புண்ணியங்கள் வழங்கி விட்டால் பணம் எளிதாக வந்துவிடும்.
==============================================

போகர் சித்தர் :- இதை எவை என்று புரிய, இப்புண்ணியத்தை நிச்சயம் வழங்கி, எது என்று புரிய, வழங்கி விட்டால் பணம் எளிதாக வந்துவிடும். பணம் கேட்டால், புண்ணியம் பின் எது என்று கொடுக்கவில்லை என்றால் என்ன லாபம்? 

அடியவர் :- என்ன தெரியும்? என்ன கொடுக்கணும்? எங்களுக்குத்தான் தெரியும். புண்ணியத்தை கொடுத்தா எளிதா பணம் வந்துரும்ப்பா. அதான் புண்ணியத்தை நாங்க கொடுக்கிறோம்ன்றாங்க. 

==============================================
# மற்றவர்கள்  குறை தீர்ப்பதே, பின் உங்கள்  குறை தீர்ப்பதற்கு சமம். 
==============================================

போகர் சித்தர் :- அவரவருக்கு ஒரு ஒரு குறை ஆனாலும், இக்குறை பின் நிச்சயம் மற்றவர்களை குறை தீர்ப்பதே பின் உங்களுக்கும் குறை தீர்ப்பதற்கு சமம். 

அடியவர் :-  மற்றவர் குறையிலே தீர்க்கணும். நீங்க தீர்த்தீங்கன்னா, உங்களோட குறை நீங்களே தீர்த்துக்கிட்டேன். தீர்த்துக்கிட்ட மாதிரி, தீர்த்துக்கிட்ட மாதிரி. இறைவன் புரியுங்களா? இறைவன் தீர்த்துருவார். அவ்வளவுதான். வேற ஒன்னும் இல்ல. இறைவன் தீர்த்துருவார். அவ்வளவுதான். 

போகர் சித்தர் :- இதனால் எவை என்று புரிய, எவரும் குறைவான்கள் இல்லை. இங்கு 

சுவடி ஓதும் மைந்தன்  :-  அப்ப யாரும் குறை இல்லை. குறை இல்லை. குறை ஒன்றுமில்லை. 

போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் எவை என்று அறிய. இதனால்தான் சித்தர்களைப் பற்றி இன்னும் எவை என்று அறிய மக்களுக்கு அறிந்தும். இதனால் பின் நல்லவன் யார், தீயவன் யார், எவரை அமைப்பது, எவரை பின் சாதிக்க வைப்பது, எவரை எது என்று கூட எவ்விடத்தில் எடுக்கலாம், எவ்விடத்தில் பிறக்க வைக்கலாம் என்பதை எல்லாம் நிச்சயம் பின் அகத்தியன் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். வருவார் அப்பா, வருவார். 

============================
# முதலில் தன்னைப் பற்றி நினைக்க வேண்டும். தன்னைத் தானே உணர வேண்டும். 
============================

போகர் சித்தர் :- இதனால் மனிதன் நினைப்பது எது என்று அறிய, முதலில் தன்னைப் பற்றி நினைக்க வேண்டும். தன்னைத் தானே உணர வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன்  :-  முதலில் மனிதன் யாரை நினைக்கணும்? 

அடியவர் :- உன்னை பத்தி நினை. அடுத்தவங்களை பத்தி பேசாதப்பா. 

சுவடி ஓதும் மைந்தன்  :- அடுத்தவங்களை பத்தி பேசாத. 

அடியவர் :- உன்னை நீங்க உணருங்க. 

சுவடி ஓதும் மைந்தன்  :-  உன்னை நீங்க உணரு. அடுத்தவனை பத்தி பேசினாலும் இங்க பிரயோஜனம் இல்லை. இல்லை. நம்ம யார்? நம்ம எதுக்காக வந்தோம்? நம்ம எதுக்கு இப்படி? எதுக்கு இந்த லைஃப் இருக்குதுன்னு சொல்லிட்டு நினைக்கணும். 

போகர் சித்தர் :- எதை என்று புரிய, இப்படி நிச்சயம் நினைப்பவர்களுக்கு மட்டுமே இறைவன் இன்னும் அறிவை கொடுத்து பிழைத்துக் கொள்ளடா என்று நிச்சயம் பின் அறிந்தும் கூட அனைத்தும் தந்துவிடுவான். 

அடியவர் :- யாரெல்லாம் இந்த மாதிரி நினைக்கிறாங்களோ, மேம்பட்ட எண்ணங்கள், இதெல்லாம் மேம்பட்ட எண்ணங்கள். ஆமா, இதை யாருக்கு நினைக்கிறாங்களோ, அப்ப இறைவன் வந்து அவங்களுக்கு இன்னும் கொடுத்து மேல மேல உயர்த்துவாங்க. 

போகர் சித்தர் :- நிச்சயம் அறிந்தும், அனைவரும் இறைவன் பிள்ளையாக இருப்பதால், நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக நீங்கள் அனைவரும் பின் இவன் நல்லவன், இவன் கெட்டவன் என்று தீர்மானிக்கலாம்? 

அடியவர் :- எல்லாருமே இறைவன் பிள்ளைகள் தான். அப்புறம் நீங்க யாருப்பா? எதுக்கு டிசைட் பண்றீங்க? நீங்க முடிவெடுக்கிறீங்கன்ற நிலைமை கெட்டவன்னு. 

போகர் சித்தர் :- பின் அதாவது ஒரு தாய் தன் பிள்ளைக்கு பால் கொடுப்பது போலே, இறைவன் நிச்சயம் தன் பிள்ளைகளுக்கு வாழ காற்றைத் தருகின்றான் அல்லவா? அப்பொழுது பாருங்கள், எண்ணிக்கொள்ளுங்கள். நீங்கள் 

======================================
# காற்றில் விஷ வாயுவை கலக்க, வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றது 
======================================

போகர் சித்தர் :- எதை என்று அறிய அறிய, இங்கு பிழைப்பதற்கு நிச்சயம் காற்று அவசியமாகின்றது. நிச்சயம் பின் இவ்வாறு மனிதன் திருந்தவில்லை என்றால், காற்றினுள் நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய. பின் மனிதன் நிச்சயம் அதில் கூட விஷ வாயுவை கலந்து, பின் அதாவது மக்கள் மக்கள் தொகை அதிகரித்து விடுகின்றது. இன்னும் பணிகளுக்கான வேலைகள் நடந்து, நிச்சயம் தன்னில் கூட. இதனால் மனிதனே அதைத் தன் பின் அக்காற்றினில் சில தீய மாசுக்கள் விட்டு, பின் நிச்சயம் ஏற்பாடுகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. மனிதன் மனிதனையே அழிப்பதற்காக, அதனால் உண்மை தெரிந்து கொள்ளுங்கள். 

போகர் சித்தர் :- எதை என்று புரிய, அனைத்தும் இங்கு கொடுப்பதே இறைவன். எதை என்று புரிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு பின் எச் சக்திகள் இருக்கின்றது. இங்கு 

==========================================
# திருவண்ணாமலை கிழக்கு கோபுர ரகசியங்கள் - ஏன் ஞானிகளை சித்தர்கள் கூட்டுப் பிரார்தனைக்கு அழைத்து வந்தார்கள்.
==========================================

போகர் சித்தர் :- இவை தன் புரிய, நிச்சயம் தன்னில் கூட எவர் எவருக்கு என்ன தேவை என்றெல்லாம். அதனால்தான் நிச்சயம் பின் அண்ணாமலையிலே, நிச்சயம் பல பரிசுத்த ஆன்மாக்கள் இன்னும் வலம் வந்து கொண்டே இருக்கின்றது. அவை மட்டுமில்லாமல், இவர் போன்ற பின் சாதுக்கள் நிச்சயம் தன்னில் கூட இறந்தும் போயிட்டனர். அவ் ஆன்மாக்கள் எல்லாம் பின் இறைவனிடத்தில் வேண்டி, யாங்கள்தான் ஒன்றுமில்லாமல் போனோம். நிச்சயம் பின் வருகின்ற ஆன்மாவுக்கு, பின் ஏதாவது கொடு கொடு என்று, பின் அனுதினமும், பின் கிழக்கு கோபுரத்தில் நின்று, அவ் ஆன்மாக்கள் இறைவனை வேண்டிக்கொண்டே இருக்கின்றது. அதனால்தான் யாங்கள் வந்து உண்மை தெரிவித்து, இவர்களை அழைத்து வந்தோம் இங்கு.


சுவடி ஓதும் மைந்தன் , அடியவர் :- சிவாயநம, இவங்க மாதிரி நிறைய சாதுக்கள், நிறைய சாதுக்கள் தெரியாம போய்க்கிறாங்க, இறந்துடுறாங்க. வந்து அவங்க ஆன்மாக்களும் கிழக்கு கோபுர வாசல்ல இறைவன்ட்ட முறையிட்டு கொண்டிருக்குதாம். அப்பா, யாங்கதான் தெரியாம என்ன இது பண்ணிட்டாங்க? இவங்களுக்கு ஏதாவது பண்ணு, நீங்க வந்து இறைவன்ட்ட முறையிட்டு இருக்காங்களாம். இறைவன் கையில முறையிட்டு நிக்குதாம். 

=====================================
# திருவண்ணாமலையில் - சாதுக்கள் தீய கர்மாக்களை எடுத்து செல்லும் கோடீஸ்வரர்கள். இவ் கோடீஸ்வரர்கள் தன்னிடம் உள்ள புண்ணியங்களை சாதுக்களுக்கு கொடுத்து , கீழே சென்று கொண்டிருக்கின்றனர்.
=====================================

போகர் சித்தர் :- ஏதோ மனிதன் சொல்லிப் போடுவான், இவர்களுக்கு எவை என்று அறிய. ஏதோ இவர்களுக்கு கவலை இங்கு அமர்ந்து விட்டார்கள் என்று இன்னொருவன் சொல்வான், இவன் திருடன் என்று இன்னொரு சொல்வான், இவனுக்கு அனைத்தும் கிடைக்கின்றது என்று. இதோ இன்னொரு சொல்வான், புகை பிடிப்பான் என்று. அடடா, முட்டாள்களே, மனித முட்டாள்களே, நிச்சயம் தன்னில் கூட இவர்களுக்கு என்ன வலி இருக்கின்றது, யாங்கள் உணர்வோம். 

அடியவர் :- அப்ப சாதுக்களை நீங்க தவறாக  சொல்லாதீங்கப்பா, இதுல ஒருத்தர் வந்து தண்ணி அடிக்கிறேன்றாரு, ஒருத்தர் சிகரெட் பிடிப்பேன்றாரு, ஒருத்தர் அதுன்றாரு, இதுன்றாரு. இதெல்லாம் நீங்க, இது உங்க வேலை கிடையாதுன்றாரு, சொல்றாரு. சாதுக்களை யாரும்  சொல்லாதீங்க. ஆனால் இவருடைய வழி என்னன்னு எங்களுக்கு தெரியும். சித்தர்களுக்கு. சொல்றாரு, சித்தர்களுக்கு தெரியும், உங்களுடைய வழி என்ன என்பது சித்தர்களுக்கு தெரியும். 

போகர் சித்தர் :- இதனால்தான் நிச்சயம் தன்னில் கூட மனிதன் யோசிப்பது தவறானவை. நிச்சயம் ஞானிகள் யோசிப்பது சரியானது. 

போகர் சித்தர் :- நிச்சயம் இன்னும் இன்னும் மனிதர்கள், நிச்சயம் அனுதினமும், பின் அதாவது கோடி கோடியாக  வைத்திருப்பார்கள். ஆனால் இவர்களைப் பார்த்து, நிச்சயம் தன்னில் கூட கேடு கெட்டவர்கள் என்று உரைப்பதும், நிச்சயம் காரி துப்புவதும், கிரிவலத்தில் யான் பார்த்திருக்கின்றேனடா. 

அடியவர் :- சாமி, பெரிய இவங்க பத்தி சொல்றாங்க. பெரிய கோடீஸ்வரங்க, பணம் இருக்கிறவங்க, இவங்கள பார்த்து கேடு கெட்டவங்கன்னு காரி துப்புறாங்களாம். என்னடா, இவங்க எல்லாம் வந்துட்டாங்க, இப்படி வந்துட்டாங்கன்னா, இவங்க எல்லாம் சொல்லிட்டு, கோடீஸ்வரங்க, கோடீஸ்வரங்க. 

======================================
# அதி கவனம் - எச்சரிக்கை - சாதுக்களை யாரும் பழிக்காதீர்கள். 
# உங்கள் புண்ணியங்கள் அவர்களுக்கு போய்விடும். 
# அவர்கள் பாவங்கள் உங்களிடம் வந்துவிடும்.
======================================

போகர் சித்தர் :- இதை ஏன், எதற்காக? நிச்சயம் இவையும் இறைவனை எவை என்று இவ்வாறு, நிச்சயம் தன்னில் கூட இயக்கி சில சில பாவ வினைகள் இவரிடத்தில் இருக்கும் அல்லவா? இதைத்தன் பின் அவனிடத்தில், பின் அவனிடத்தில் போய் சேர்ந்து, அவன் கீழ் நோக்கி வருகின்றான். இவர்கள் மேல் நோக்கி போகின்றார்கள். அவ்வளவுதான். நல்லோரை எப்பொழுதும் பழிக்கக்கூடாது. பின் அதாவது இவ்வாறு, பின் வேதனைப்பட்டவர்களும் கூட எப்பொழுதும் பழிக்கக்கூடாது சொல்லிவிட்டேன். 

அடியவர் :- பெரிய லெசன் சொல்லி இருக்காங்க. நல்லோர்களை யாரும் பழிக்காதீங்க. சாதுக்களை, நல்லோர்களை பழிக்காதீங்க. பழிச்சீங்க அப்படின்னா, உங்களிடம் இருக்கக்கூடிய புண்ணிய பலன் அவர்களுக்கு சென்று, அவர்களிடம் இருக்கக்கூடிய தீய கர்மா உங்களுக்கு வந்துரும். தயவுசெய்து பழிக்காதீர்கள். யாரையும் நல்லோர்களை பழிக்காதீர்கள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2089 - அன்புடன் அகத்தியர் - 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4

நாள் : 26/01/2026 (ஞாயிற்றுக்கிழமை) 
நேரம் : காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 
இடம் : ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம் , வேங்கிக்கால் , திருவண்ணாமலை 
நேரலை :-  https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h44m07s

=================================
# அன்புடன் போகர் சித்தர்  வாக்கு 
=================================

அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு. - பகுதி 4


போகர் சித்தர் :-  நிச்சயம் உண்மையை உணர ஒரு நாள் நன்று. நிச்சயம் எதை என்று புரிய. அதாவது பின் இரு குழந்தைகளையும் பற்றியும் பாடு. அறிந்தும் கூட, பின் பின் கணபதியும் வரட்டும் சொல்கின்றேன். 

( கணபதி பாடல் பாட சொன்னார்கள்) 

பாடகர் :-   (அழகாக விநாயகப் பெருமானை  அழைக்க பாடல் பாட ஆரம்பித்தார்.) 
( விநாயகனே வினை தீர்ப்பவனே… )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h44m07s

(இவ் பாடல் படும்போது பல சாதுக்கள் , சிவனடியார்கள் வருகை தந்தார்கள்)

பாடகர் :-   ( பாடி முடித்த பின்னர் ) 

போகர் சித்தர் :- இவை தன் இயக்க பின், அதாவது உறங்கிக் கொண்டிருக்கும் ஈசனையும் பார்வதியும் கைலாயத்திலிருந்து பின் தட்டி எழுப்பினானே. பின் இவை தன் பின் பாடலை ( பாடு)

பாடகர் :-    (கயிலை நாயகனை  அழைக்க “சொற்றுணை வேதியன்” பதிகம் பாட ஆரம்பித்தார். இவ் அருமையான பாடலின் நேரலை) 
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h48m00s

பாடகர் :-   ( பாடி முடித்த பின்னர் ) 

பாடகர் :-    (கயிலை நாயகனை  அழைக்க “வேற்றாகி விண்ணாகி” பதிகம் பாட ஆரம்பித்தார். இவ் அருமையான பாடலின் நேரலை) 
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=4h52m33s

பாடகர் :-   ( பாடி முடித்த பின்னர் ) 

=========================================
# ஞானியின் அருள்கள் பெற்றுத் தரும் சித்தர்கள் - ரகசியங்கள் 
# அவசியம் கூட்டுப் பிரார்த்தனைக்கு அனைவரும் வருக.
=========================================

போகர் சித்தர் :- இதைத்தான் உருவாக்க பல வழியிலும் கூட ஞானியின் அருள்கள் இப்படித்தான் பெற்றுத் தர முடியுமே நிச்சயம் தன்னில் கூட. 

இவ்வாறாக ஒருவருக்கொருவர் நிச்சயம் தன்னில் கூட வாக்குகள் பின் கூர்ந்து, பின் நிச்சயம் கொடுத்தாலும், நிச்சயம் தன்னில் கூட அவர் வாழ்க்கை எப்பொழுதும் எது என்று அறிய அறிய சிறிது காலமே பின்பு கஷ்டங்கள் பின் நேரிடும். 

இதனால், நிச்சயம் தன்னில் கூட யாங்கள் சொல்வதைக் கேட்டால், நிச்சயம் ஞானிகள் எல்லாம் மறைமுகமாக அழைத்து வந்து உங்களுக்கு ஆசிகள் கொடுப்போம், கவலைகளை நீக்குவோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அவர் என்ன சொல்கிறார் தெரியுமா? ஒருவருக்கு ,  ஒரு வாக்கு கூறினால், அந்த வாக்கு அவருக்காகவே மட்டுமே செயல்படும். அவர் மனம் சுத்தமாக இருந்தால், அந்த வாக்கின் பலனாலும் அவர் நலமாக இருப்பார். ஆனால் மனம் சுத்தம் இல்லை என்றால், காலப்போக்கில் கஷ்டங்கள் வரலாம் அதனால் நாங்கள் சொல்வது என்னவென்றால்— நீங்கள் எங்கள் பேச்சை கேட்டால், நாங்கள் ஞானிகள் அனைவரும் மறைமுகமாக உங்களை ஒன்றிணைத்து, உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்குவோம் )

================================
# திருவண்ணாமலை ஆலயம் உருவாக காரணமாக இருந்த காசியின் இருந்து , திருவண்ணாமலை வந்த “குப்தன்” என்ற ஞானியும் இவ்வாக்கு படிக்கும் நேரத்தில் அங்கு  உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்.
=================================

போகர் சித்தர் :-  எது என்று புரிய அப்பனே “குப்தனும்” உண்டு கொண்டிருக்கின்றான். இப்பொழுது 

சுவடி ஓதும் மைந்தன் :- (ஆதி ஈசன் அருளால் திருவண்ணாமலை ஆலயம் உருவாக காரணமாக இருந்த காசியின் இருந்து , திருவண்ணாமலை வந்த “குப்தன்” என்ற ஞானியும் இவ்வாக்கு படிக்கும் நேரத்தில் , உணவு அருந்தி கொண்டு இருக்கிறார்  என்று போகர் சித்தர் உரைக்கின்றார்கள். அது யார் என்று நமக்கு  தெரியாது. காசியில் எல்லாருக்கும் நல்லா இருக்க வேண்டும் என்று நினைச்சாரு பாருங்க , அவரும் ஏதோ ஒரு ரூபத்தில் வந்து,  இப்ப மத்திய உணவு சாப்பிட்டுட்டு இருக்காங்க.) 

போகர் சித்தர் :-  இவைத்தன் பின் உங்களுக்காக, பின் நிச்சயம் தன்னில் கூட அங்கே அனைவரையும் பின் உண்ட பிறகு வரச் சொல்லுங்கள். சிவபுராணத்தை நீங்கள் சொல்லித் தாருங்கள். பின் எவை என்று கூட அவர்களையும் பாடச் சொல்லுங்கள். 

=====================================
# அங்கு வந்த ஞானிகளில் ஒருவர் மாந்தீரிகங்களை அடியோடு நீக்கும் வல்லமை பெற்றவர். அவரும் அப்போது, இவ் வாக்கு படிக்கும் நேரத்தில்  மேடையில் அமர்ந்திருந்தார். ஆனால் அது யார் என்று அடியவர்களுக்கு தெரியாது. 
======================================

போகர் சித்தர் :-  நிச்சயம் தன்னில் கூட அதில் தன் ஒருவன் இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் எவை என்று புரிய. நிச்சயம் உங்களுக்காகவும் பாடி, நிச்சயம் சில கவலைகளையும் கூட சில சில பின் மாந்திரீகங்களோட அடியோடு ஒதுங்கிவிடும். மேலே உள்ளவனும் கூட ஒரு ஞானி இவன் அமர்ந்திருக்கின்றான். நிச்சயம் அதை யான் தெரியப்படுத்த மாட்டேன். இப்பொழுது 

சுவடி ஓதும் மைந்தன் :-  மேலேயும் இந்த கூட்டத்துல ஒரு ஞானி இருக்கிறார். அதை நானு சொல்ல மாட்டேன்.  அதே மாதிரி கீழ குப்தர் சாப்பிட்டுட்டு இருக்காரு, அவர் வரவும் உங்களுக்கு சில வினைகள் என்னென்ன இருக்குதோ, நான் மாத்தி தரேன். 

================================
# மனம் தூய்மையாக இருந்தால் மட்டுமே  ஞானிகள் . இறைவனை உணர இயலும்.
=================================

போகர் சித்தர் :-  இவைத்தன் அப்பப்பா , பின் அதாவது ஞானிகள் யார் என்பதை எல்லாம் நீங்கள் நிச்சயம் உணரப்போவதில்லை. ஏனென்றால் மனம் அழுக்குகள் தங்கி இருக்க, நிச்சயம் தன்னில் கூட இறைவனை நேரில் கண்டாலும், நிச்சயம் நீங்கள் உணரப்போவதில்லை. இதுதான் உண்மை. 

சுவடி ஓதும் மைந்தன் :-   (இறைவன் நேரில் வந்தாலும், அவரை நீங்கள் உணர முடியாது. ஏன் உணர முடியாது என்றால், மனத்தில் உள்ள அழுக்குகள் மிக அதிகம். எண்ணங்கள் தூய்மையற்றவை; மனம் சுத்தமில்லாதது. அப்படியிருக்க, இறைவன் பக்கத்தில் நின்றாலும், ‘யார் வந்திருக்கிறார்?’ என்று கேட்கும் நிலை ஏற்படும். அதனால் இறைவனை உணர்வது யாரால்? மனம் சுத்தமாக இருக்கும் ஒருவரால்தான். மனம் தூய்மையாக இருக்க வேண்டும்; எதையும் எதிர்பார்க்கக்கூடாது.)

========================================
# கூட்டுப்பிரார்தனைக்கு வந்தவர்களுக்கு 
# சித்தர்கள் யாங்கள் வட்டியும் முதலுமாக புண்ணியத்தை கொடுப்போம்.
====================================

போகர் சித்தர் :-  அப்பப்பா அறிந்தும் இதைத்தன் நிச்சயம் வரவழைத்தோம். நிச்சயம் தன்னில் கூட பின் வந்ததற்கு, நிச்சயம் யாங்கள் வட்டியும் முதலுமாக கொடுப்போம். கவலைகள் வேண்டாம். 

போகர் சித்தர் :-  இங்கே எதை வட்டியும் முதலுமாக கொடுப்போம் என்றால், சொல்லுங்கள். யான் காத்திருக்கின்றேன். 
சுவடி ஓதும் மைந்தன் :- (அவர் மீண்டும் நிறுத்திவிட்டார். நான் எதையும் வட்டி – முதலுடன் கொடுப்பேன் என்று சொன்னவுடன், அதற்கான செலவு குறித்த கேள்வி எழுந்தது.  அதைப் பற்றி நீங்கள் சொல்லுங்கள் என்று அவர் கூறினார். ‘நான் காத்திருக்கிறேன்’ என்று போகர் தெரிவித்தார். )
அடியவர்கள் :- ( சிந்தனை , அமைதி ……………..) 

போகர் சித்தர் :- இவைத்தன் அறிந்தும் புரிந்தும் கூட, அப்பப்பா புண்ணியத்தை கொடுத்துவிட்டால், நிச்சயம் தன்னில் கூட பின் அப்புண்ணியத்தின் மூலம் இறைவனையும் காணலாம். உங்களை நீங்களும் வெல்லலாம். 

அடியவர் :- புண்ணியம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  (வட்டியும் முதலும் சொன்னது புண்ணியம். புண்ணியத்தை கொஞ்சம் கொடுத்துட்டா, நீங்களும் பொழைச்சுக்கலாம். இறைவனையும் இதன் மூலம் காணலாம்.)

போகர் சித்தர் :-  இறைவன் நாமத்தையும் நிச்சயம் பரிபூரணமாக. 

சுவடி ஓதும் மைந்தன் :- (இறைவன் நாமத்தையும் நீங்கள் பரிபூரணமாக உரைக்கலாம்.)

போகர் சித்தர் :-  இதைத்தான் இப்படித்தான் உருவாக்கி, உருவாக்கி இன்னும் பல திருத்தலங்கள் நிச்சயம் அழிந்து போய்க்கொண்டிருக்கும் நிலையில், நிச்சயம் அவையெல்லாம் உயிர் பெற்று, உயிரோடு தான் இருக்கின்றது. அங்கு ஞானிகள் அமர்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். ஆனால் நிச்சயம் அங்கெல்லாம் உங்களால் செல்ல முடியவில்லையே. வருங்காலத்தில் சென்று ஆசிகள் பெற்று, நிச்சயம் நீடோடி வாழ்க. அழைத்துச் செல்கின்றோம்  யாங்கள். 

=====================================
# மாந்திரீகத்தை அகற்றும் ரகசிய திருத்தலங்கள். 
====================================

போகர் சித்தர் :-  அப்பனே அறிந்தும் புரிந்தும், ஏனென்றால் இவ்வுலகம் எதை என்று கூற மனிதன் மனிதனுக்கு மாந்திரீகத்தை கற்றுக் கொடுத்துவிட்டான். அதை அகற்றவே சில திருத்தலங்கள் இருக்கின்றது. அழிந்து போய்க்கொண்டிருக்கின்றது. ஆனால் இதைத்தன் இவர்களால் செல்ல முடியவில்லையே. இவை மாந்திரீகங்கள் இருந்து இவனிடத்தில். 
சுவடி ஓதும் மைந்தன் :- (சில கோயில்கள் மாந்திரீகத்திற்காகவே சிவன் ஆலயங்கள் உள்ளன  அந்த புனித இடங்களுக்கு நீங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாந்திரீக நம்பிக்கைகளில் சிக்கிக் கொண்டதாலேயே அந்தத் தலங்கள் அழிந்து வரும் நிலை உருவாகியுள்ளது. அங்கிருந்து ‘வாருங்கள், வாருங்கள்’ என்று அழைத்தாலும், நீங்கள் செல்ல முடியாமல் நிற்கிறீர்கள்.)
போகர் சித்தர் :-  நிச்சயம் இவையெல்லாம் மக்களுக்கு தெளிவுபடுத்தி, நிச்சயம் அங்கும் சென்று அறிந்து கூட உங்கள் பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம். 

====================================
# இறைவனின் குழந்தைகள் - புத்தர்,இயேசு,நபிகள்.
# இவ் தேசத்தை காக்க வந்தார்கள்.
====================================

போகர் சித்தர் :-  அப்பா, இதைத்தன் பின் அதாவது இறைவன் எது என்று கூற, இறைவனின் குழந்தைகள் இவ் தேசத்தை காக்க வந்தார்கள். நிச்சயம் அவர்களைப் பற்றி புத்தன் ஆனாலும் சரி, இயேசு ஆனாலும் சரி, நிச்சயம் தன்னில் எவையும் நபிகளும் நிச்சயம் சிறிது சிறிது எடுத்து ஓதுக. அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றாரு தெரியுங்களா? இறைவனோட குழந்தைகள் உலகத்தை காக்க வந்தார்கள். யாரு? புத்தன் ஆனாலும் சரி, இயேசுநாதர் ஆனாலும் சரி, நபிகள் நாயகம் ஆனாலும் சரி. 

போகர் சித்தர் :-  இவைத்தன் இவர்கள் எல்லாம் பொய்யர்கள் என்று பின் அவ் நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது வணங்குவர்களை கொன்றுவிட்டார் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனா இவர்கள் எல்லாம் பொய் என்று சொல்லிட்டு, வணங்குறவர்களே கொன்று விட்டாங்க. வணங்குறவர்களே கொன்றுவிட்டார்கள். 

போகர் சித்தர் :-  ஆனால் மனிதன் இப்பொழுது பின் அதாவது இதுதான் பெரியது, இதுதான் பெரியது என்று முட்டாள் மனிதன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அவையெல்லாம் வருங்காலத்தில் பின் நிச்சயம் ஒழியுமடா. 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப மதத்தின் பெயர்ல இங்க வந்து மனுஷன் நடிச்சுட்டு இருக்கிறான். ஆனால் உண்மையான வந்தவங்க  எல்லாம் என்ன பண்ணிட்டாங்க? கொன்னுட்டாங்க. 

================================
# (பைபிள்) விவிலியத்தை எடு. சிறிது படி.
================================

போகர் சித்தர் :-  அதனால் இத்தேசத்திற்கு பல உரைகள் எடுத்துரைத்தனர். அவர்களைப் பற்றியும் கூட நிச்சயம் அப்பா விவிலியத்தை எடு. சிறிது படி. அப்பா, அறிந்தும் எது என்று கூற பைத்தியக்காரன் என்று அகத்தியன் புகழ்கின்றானே. அவனைத்தான் சொன்னேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- ( பைபிள் எடுங்க, ஐயா. உலக நன்மைக்காக வந்தவர்களை அவர்களையே வணங்குவதாகச் சொன்னவர்கள் கொன்றுவிட்டார்கள்; இது பொய்யான பக்தியின் விளைவு. எல்லா மதங்களும் ஒன்றே. புத்தர், இயேசு, நபிகள் இவர்கள் இறைவனின் பிள்ளைகள். நியாயம் மனதில் இருக்க வேண்டும்.) 

========================================
உலகில் முதன் முறையாக சிவபுராண பாராயணத்தில் , அன்பு சித்தர் ஏசுநாதர் அவர்கள் அருளிய  திரு விவிலியம் ( பைபிள் ) படிக்கப்பட்டது. அதற்கு விளக்கமும் சுவடி ஓதும் மைந்தன் அளித்தார்கள்.
========================================

=======================
# திரு விவிலியம் ( பைபிள் )  சங்கீதம் 1:1-3 TAOVBSI
https://www.bible.com/bible/339/PSA.1.1-3
======================

பாடகர் :- “துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிகளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும், கர்த்தருடைய வேதத்தில் பிரியமாய் இருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாய் இருக்கிற மனுஷன் பாக்கியவான்.” 

சுவடி ஓதும் மைந்தன் :- ( அருமையான விளக்கம் அளித்தார்கள். அவ் விளக்கத்தை பின்வரும் நேரலை பதிவில் கேளுங்கள்.)
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h10m24s

போகர் சித்தர் :-  இதைத்தான் இப்படித்தான் அங்கும் இங்கும் சென்று மாந்திரீகத்தில் இவர்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றார்கள். நிச்சயம் முதலில் இவை எடுத்து வந்து தா, நிச்சயம் அது ஓடட்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அதனால, உங்களுக்கெல்லாம் துன்மார்க்கர்கள் பேச்சு கேட்டு கேட்டு, நீங்க என்ன ஆயிடுச்சாம்? ஏதோ ஒன்னு, உங்களை மாந்தீரீகம்  வந்து தெரியாம கஷ்டத்துல எல்லாமே அடித்துவிட்டது. அதனால இந்த கோயிலோட விபூதி பிரசாதம் எடுத்துட்டு வந்து முதல்ல கொடுப்பா, மாந்தீரீகம் அது இவர்களை விட்டு ஓடட்டும்.) 

போகர் சித்தர் :- இவைத்தன் அடுத்து நபிகளுக்கும் பின் வாய்ப்பு அளிப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நபிகள் நாயகத்துக்கும் ஒரு வாய்ப்பு கொடுப்போம். குர்ஆன் அடுத்து. குர்ஆன் தமிழ்ல எடுங்க. 

போகர் சித்தர் :- இவைத்தன் அப்பா இறைவனுடைய குழந்தைகள் இவ்வுலகத்திற்கு மக்களுக்கு பின் ஞானத்தை வழங்கி, நிச்சயம் தூய பின் சிந்தனையை வளர்த்து, நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்தும் அதாவது தீய சக்தியில் அழிக்கத்தான் இறைவன் அனுப்பினான். அப்பா ஆனாலும் மனிதன் சத்தியத்தை தர்மத்தை கடைபிடிக்கவே இல்லை, கொன்றுவிட்டார்கள். பாவம். ஆனாலும் மீண்டும் இவர்கள் எல்லாம் பின் நிச்சயம் தன்னில் கூட மறைமுகமாக மக்களை இன்னும் அடிப்பார்கள் அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( இன்னும் இவங்க எல்லாம் இறந்தாலும்  கூட என்ன பண்றாங்க? மறைமுகமாக மக்களை இன்னும் அடிப்பார்கள். அதனாலதான் எல்லா சமய மொழி புத்தகங்களையும் கூட்டு பிரார்த்தனை இங்க வைக்க சொன்னார்.)

சுவடி ஓதும் மைந்தன் :-  (ஏதோ ஒரு பாகத்தை  எடுத்து  படிங்க, ஜஸ்ட் படிங்க.)

============================================
உலகில் முதன் முறையாக சிவபுராண பாராயணத்தில் , மகிமை புகழ் ஞானி நபிகள் நாயகம் அவர்கள் அருளிய திரு  குரான் படிக்கப்பட்டது. 
திருக்குர்ஆனின் 16-வது அத்தியாயம் 16:79-80
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h17m15s
============================================


பாடகர் :- ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன. உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களில் இருந்து உங்களுக்கு கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும் ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மரியாட்டு உரோமங்கள், வெள்ளாட்டின் உரோமங்கள், ஒட்டகத்தின் உரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும் குறிப்பிட்ட காலம் வரை வசதிகளையும் ஏற்படுத்தினான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இறைவன் வந்து நமக்கு எல்லாத்தையும் உருவாக்கி கொடுத்ததை பத்தி சொல்றாங்க. உங்கள் வீட்டில் நிம்மதியை உண்டாக்கினான். கால்நடைகள் தோல்களில் இருந்து கூட உங்களுக்கு இது உடைகளை கொடுத்தார்னு சொல்ல வராரு. அவர் செம்மரியாட்டு ரோமங்கள், வெள்ளாட்டின் ரோமங்கள், ஒட்டகத்தின் ரோமங்கள், விலங்குகள்ட்ட இருந்து ரோமங்கள் எடுத்துக் கொடுத்து மனுஷனுக்கு பயன்படுத்துற வகையில பண்ணிருக்காருன்னு சொல்றாங்க. விலங்குகள்ட்ட இருந்து ரோமத்தை உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். இறைவன் வந்து உங்க வீட்ல நிம்மதியை கொடுத்தான். நிம்மதிக்கு என்ன வழின்றதெல்லாம் போக உங்களுக்கு இதை படிக்கிறோம். 

சுவடி ஓதும் மைந்தன் :- (திருக்குர்ஆனின் விளக்கங்கள் அளித்து முடித்த பின்னர்….) 

===============================
# மகான்கள் சொன்னது நன்மைகள். ஆனால் பின்பற்றுவது தீமைகளையே….
===============================

போகர் சித்தர் :-  எவை இதைத்தன் இதைத்தன் உருவாக்க நபிகள் நாயகம் நிச்சயம் தன்னில் கூட, அனைத்து உயிர்களும் நிச்சயம் தன்னில் எதை என்று புரிய நிச்சயம் உங்களுக்கு நன்மை செய்யத்தான் காத்துக் கொண்டிருக்கின்றது. அதற்கு நன்மை செய்யுங்கள், அதன் மூலம் இறைவனை காணலாம் என்று ஆனால் அதற்கு நன்மையா செய்கின்றார்கள் மனிதர்கள்? 

சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொன்னார் தெரியுங்களா?

அடியவர் :-  இறைவன் பிற உயிரை படைச்சதே மனிதனுக்கு நன்மை செய்யறதுதான்ப்பா. ஆனா அந்த உயிரை நீங்க என்ன செய்றீங்க?

சுவடி ஓதும் மைந்தன் :- கொல்றீங்க.

அடியவர் :-  கொல்றீங்கன்றாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :-  நாயகம் வந்து கொல்றீங்கன்றாங்க. 

===================================
# ஏன் கலியுகத்தில் பலத்த அழிவுகள் ?
===================================

போகர் சித்தர் :-  இதைத்தன் பின் இவ் ஞானிகள் இறைவனுடைய இறைவனுடைய குழந்தைகள் பின் சொல்வதே நிச்சயம் யாரும் ஏற்கவில்லை. பின் அதாவது இன்னும் அதனால்தான் கலியுகத்தில் மிக்க மிக்க அழிவுகளாக வந்து கொண்டிருக்கின்றது. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப ஏன் அழிவுன்னா இறைவனுடைய குழந்தைகள் சொன்னதை யாருமே கேட்கல. அப்ப என்ன ஆகுது?

அடியவர் :-  அதனால அழிவுகள் மிகுந்து கொண்டே இருக்கும்.

சுவடி ஓதும் மைந்தன் :- அழிவுகள் அதிகமாகத்தான் வரும்.

==========================================
# கலியுகத்தில்  நோய்களும் நிச்சயம் இன்னும் பலப்படுத்தி ஓடும். 
=========================================

போகர் சித்தர் :-  நோய்களும் நிச்சயம் தன்னில் கூட இன்னும் பலப்படுத்தி ஓடும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முதல்ல என்ன வருமா? நோய்கள் வருமா? நோய்கள் மூலமா நோய்கள் தான் வருமா? முதல்ல என்ன வரும்? நோய்கள் இறைவன் கோபப்பட்டா?

=================================================
#   இறைவன் பணம் எடுத்து விட்டால் நிச்சயம் பின் பைத்தியம் ஆகிவிடுவார்கள். 
=================================================

போகர் சித்தர் :-  அடுத்து நிச்சயம் தன்னில் கூட பணம் எடுத்து விட்டால் நிச்சயம் தன்னில் கூட பின் பைத்தியம் ஆகிவிடுவார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து என்ன? பணத்தை எடுத்துருவாரு. ஃபர்ஸ்ட் நோயை கொடுப்பாரு.

அடியவர் :- பணத்தையும் புடுங்கிருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்து என்ன பண்ணுவாரு? பணத்தை எடுத்துருவாரு.

சுவடி ஓதும் மைந்தன் :-  பைத்தியம் முடிச்சிருவோம்.

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன ஆகும்? பணம் இல்லைன்னா பைத்தியம். 

=================================================
#   இறைவன் நினைத்தால் தான் இனி அனைவருக்கும் வேலை கிட்டும்.
=================================================

போகர் சித்தர் :-  அப்பப்பா வேலையும் எடுப்பானப்பா. இறைவன் பார்த்துக்கொள்வோம். நீங்கள் பெரியவனா? இறைவன் பெரியவனா? 

சுவடி ஓதும் மைந்தன் :-அடுத்து என்ன பண்ணாரு?

அடியவர் :- வேலையும் புடுங்கிருவாங்க.

சுவடி ஓதும் மைந்தன் :- யாருக்கும் வேலை அவ்வளவு சீக்கிரமா கிடைக்காதுங்க ஐயா. வேலையும் கிடைக்காது. எடுத்துருவாரு. 

=================================================
#   இறைவன் வழி , தர்மத்தின் வழியில் - இனி அனைவரும் வந்தே ஆகவேண்டும். 
=================================================

போகர் சித்தர் :-  நிச்சயம் தன்னில் கூட அப்பொழுது பார்ப்போம். நிச்சயம் நீங்கள் எப்படி தர்மத்தில் வழியில் பின் நிச்சயம் பின் எவை என்று கூற பின் வராமலாய் இருப்பீர்கள். என்னென்ன எடுத்தால் தர்மத்திற்கு வருவீர்கள் என்று இறைவன் தீர்மானித்துள்ளானப்பா. இறைவன் தீர்மானித்துள்ளானப்பா. முட்டாள்களே. 

அடியவர் :-  (வேலை இல்லாமல் மக்கள் படப்போகும் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் ) அப்பா 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணிக்கிறாரு?

அடியவர் :-  கொடுமை ( வேலை இல்லாமல் மக்கள் படப்போகும் துன்பத்தை நினைத்து வருத்தத்துடன் )

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எப்படி இந்த தர்மம் யாரும் கடைபிடிக்கல? இறைவன் குழந்தைகள் எல்லாம் வந்து சொன்னாங்க யாரையெல்லாம் மிதிச்சிட்டீங்க போட்டு. ஆனால் உங்களிடத்தில் என்னென்ன எடுத்தா நீங்க வருவீங்கன்னு தெரியும். நீங்க வலிவுக்கு வருவீங்கன்னு சொல்லிட்டு என்ன பண்ணுவாங்க? 

அடியவர் :- நோய். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஃபர்ஸ்ட் நோய். பணம். பணம் கடன். வேலை. அடுத்து வேலை. வேலை இதெல்லாம் எடுத்துட்டா என்ன ஆகும்? 

அடியவர் :-  பைத்தியம் ஆயிடும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க? இறைவன் கிட்ட ஓடி ஓடி வரணும். அப்பா நான் தர்மத்தை கடைபிடிக்கிறேன்ப்பா. நான் தர்மத்தை கடைபிடிக்கிறேன். நீ ஓடி வரணும்ப்பா. இறைவன் இந்த பைத்தியம் எல்லாம் இந்த பைத்தியம் இந்த பைத்தியம் இது இல்ல. 

======================================
# அன்பு குருநாதர் - ஏன் இந்த பாடகரை மட்டும் கூட்டு பிரார்த்தனை மேடையில் பாட வைக்கிறார்கள்? என்ற பிறவி ரகசியம்….
====================================== 

போகர் சித்தர் :-  இதைத்தன் அப்பா அறிந்தும் இவைத்தன் வாயால் பைத்தியம் பைத்தியம் என்று அகத்தியன் சொல்கின்றான். அதற்கும் ஒரு காரணம் பின் முன் பிறப்பில் அதாவது பல ஆன்மாவிற்கு பல பிறப்புகள் ஒரு பிறப்பில் தெரு தெருவாக பாடி பாடி காசுகள் ஈற்று அதன் மூலம் வருவாய். நிச்சயம் பின் மற்றவர்களுக்கும் சேவை செய்தான். அதனால்தான் நிச்சயம் பின் அகத்தியன் கூட பாட வைக்கின்றான். 

அடியவர்கள் :- ( பாடகரின் முற்பிறவி ரகசியம் கேட்டு - கை தட்டல்கள் ) 

போகர் சித்தர் :-  இதைத்தன் பின் ஆனால் மற்றவர்களோ ஏன் இவன் பாட வைக்கின்றான்? அகத்தியன் ஏன் இவனை பாட வைக்கின்றான்? அகத்தியன் என்று கேளினும் கெண்டனும் செய்வார்கள். அப்பா இதுதான் மனிதனுடைய தன்மை என்பேன். இதனால்தான் அவனுக்கு ஒன்றுமே நடப்பதில்லை. அவனுக்கு கொடுத்தாலும் பின் என்ன லாபம்?

அடியவர் :- இறைவன் ஏதாவது செய்றாருன்னா காரணம் இருக்கும். குருநாதர் செய்றாருன்னா காரணம் இருக்குது. அது அந்த பூர்வ ஜென்மத்தை சொல்றாங்க. ஐயாவோட அந்த பூர்வ ஜென்மத்தை சொல்றாங்க. ஒரு பிறவியில வந்து இவங்க வந்து தெருத்தெருவா பாடி அது வந்து பிறருக்கு நன்மை செஞ்சாங்க. அதன் மூலம் கிடைக்கக்கூடிய பணத்தை அதை சொல்றாங்க.

போகர் சித்தர் :- இதனால் இன்னும் கூட மக்கள் வருவார்கள். இதைத்தான் கேட்பார்கள். சொல்கின்றேன் எனக்கு பணம் வேண்டும் முதலில்.

அடியவர் :- ஆமாங்க ஐயா ( அப்படித்தானே கேட்பார்கள் ).

போகர் சித்தர் :-  பின்பு வேலை வேண்டும். நிச்சயம் திருமணம் வேண்டும் என்று ஆனாலும் ஒன்றும் எதை என்று புரிய ஏனென்றால் தர்மத்தை காக்க. நிச்சயம், இவையெல்லாம் கொடுக்காமல் இருந்தால் தான். 

==============================================
(மேடையில் உள்ள சிவனடியார்கள் உணவுக்கு அழைத்து சென்றனர். திரு கைலாய வாத்தியங்கள் முழங்க  உணவு அருந்திய சிவனடியார்களை மேடைக்கு அழைத்து வந்தார்கள். பல சிவனடியார்களை மேடைக்கு முன்பு முதல் வரிசையில் அமர வைத்தனர் அடியவர்கள்.)
==============================================

=============================================
# இறை பலங்கள் அதிகரித்தால் மட்டுமே குடும்பத்தில் நிம்மதி உண்டாகும் 
=============================================

போகர் சித்தர் :-  நிச்சயம், தன்னில் கூட குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்படும் முதலில். 

போகர் சித்தர் :- நிச்சயம், தன்னில் கூட பின் மனிதனுக்கு அப்பொழுதுதான் உண்மை தெரியும். ஆனால் சில மனிதர்கள் இதை நான் சரி செய்கின்றேன், பணத்தை என்னிடத்தில் கொடுங்கள் என்று அழகாக ஏமாற்றுவான். 

===========================================
# சித்தர்கள் புண்ணியத்தை வழங்குவது , இறைவனை வணங்குவதற்காக. 
===========================================

போகர் சித்தர் :- நிச்சயம், தன்னில் கூட கலியுகத்தில் வாழ முடியாத காலம். அதனால்தான் நிச்சயம், பின் அனைவரையும் அழைத்து, நிச்சயம், பின் உண்மையை பின் தெரிய வைத்து, புண்ணியத்தை யாங்கள் வழங்கி எதை  என்று கூற, இறைவனை வணங்குவதற்காக. 

சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில் இறைவனை யாரும் வணங்க மாட்டாங்க. அதனால எங்க கையில் இருக்கிற புண்ணியம் கொஞ்சம் உங்களுக்கு கொடுக்கிறோம். அந்த புண்ணியத்தால நீங்க நல்லா இறைவனை போய் வணங்குங்க. 

==========================================
# இறைவனை நம்புபவனே தர்மத்தை கடைபிடிப்பதில்லையே.
==========================================

போகர் சித்தர் :- இதைத்தன் நிச்சயம், தர்மத்தை நிச்சயம், தன்னில் கூட பல இறைத்தூதர்கள் வந்து தர்மத்தை படி, தர்மத்தைப் பற்றி எடுத்துரைத்தார்கள். ஆனாலும் இறைவனை நம்புபவனே தர்மத்தை கடைபிடிப்பதில்லையே.

அடியவர் :- இறைவனை வணங்குறேன், வணங்குறேன்னு சொல்றவனே தர்மத்தை கடைபிடிக்கிறது இல்லைன்றாங்க. சுயநலமா இருக்கிறேன்றாங்க.

==========================================
# எத்தனை மந்திரங்கள், எத்தனை எத்தனை புண்ணிய நதிகள் நீராடினாலும், தர்மத்தை ஒன்றை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றால் அனைத்தும் வீண்.
==========================================

போகர் சித்தர் :- நிச்சயம், இதனால்தான் எது என்று புரிய எத்தனை மந்திரங்கள், எத்தனை எத்தனை புண்ணிய நதிகள் நீராடினாலும், தர்மத்தை ஒன்றை நீங்கள் கடைபிடிக்கவில்லை என்றால் அனைத்தும் வீண். ஆனால் இவை யார் சொல்வார்கள்அப்பா? யார் சொல்வார்கள்? தாயே, தந்தையே என்று உங்களை யான் பின் அழைக்கின்றேன்.

போகர் சித்தர் :-  ஆனாலும் இதில் கூட எது என்று புரிய நிச்சயம், பின் புண்ணியங்கள் இல்லை.

போகர் சித்தர் :-   இதைத்தன் அப்பா, இன்னும் ஞானங்கள், இன்னும் நிச்சயம் கற்றுக் கொடுப்பேன். பொறுத்தருளுக.

=========================
(மதிய உணவு அழைப்பு)
=========================

போகர் சித்தர் :- ஆசிகளோடு இதைத்தன் உருவாக்க இவர்களை நிச்சயம் தன்னில் கூட சித்தர்கள் எதை என்று புரிய இவர்களை மகிழ்ச்சி ஆக்க இவர் தன் நிச்சயம் பாடலை பாடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :- இவர்களை மகிழ்விப்பதற்காகவே அவர் இப்போது அந்தப் பாடலைக் கேட்டார். ஐயா, இங்கே நிறைய சாதுக்களும் சந்நியாசிகளும் வந்திருக்கிறார்கள். இவர்களைச் சந்தோஷப்படுத்துவதற்காக அவர் ஒரு பாடலைப் பாடச் சொல்லியிருக்கிறார்; அவர்களும் பாடுவார்கள். இவர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இவர்களுடைய ஆசி நமக்குக் கிடைத்தால் நாமும் மகிழ்ச்சி அடைவோம். அதனால், நன்றாகக் கைதட்டி அவர்களை உற்சாகப்படுத்துங்கள் ஐயா."

(மேடையில் உள்ள சாதுக்களை சந்தோஷப்படுத்த பாடல் பாடினார்கள் அடியவர்கள்)

பாடகர் :- (“தீன கருணாகரனே நடராஜா நீலகண்டனே” என்ற பாடல் பாடினார்கள் ) 
 Start - https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h54m36s

==========================================
# முதல் முறையாக தனது வாழ்க்கையில் இந்த பாடலை பாடிய நம் பாடகர். 
==========================================

பாடகர் :-  என்னோட வாழ்க்கையில இந்த பாட்டை இப்பதான் சார் ஃபர்ஸ்ட் டைம் பாடுறேன். அது எப்படி வந்ததுன்னு தெரியாது. இங்க ஒரு அடியார் கேட்டதுனாலதான் இந்த பாட்டை பாடினேன்.

போகர் சித்தர் :-  இதைத்தன் அழகாக முருகன் நடனமிட, அதாவது தன் தன்மகன் நடனமிட, அனைவருக்கும் ஆசிகள் தர, இவர்களுக்கு என்னென்ன வேண்டும் என்று பின் தன் குழந்தை முருகன் முடிவெடுப்பான். அழகாக பாடலை பாடினாயே, மீண்டும் அதை பாடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதே பாட்டு முருகனோட பாட்டை பாடுங்க. இவர்களுக்கு என்னென்ன தேவையோ, இவங்களும் பூர்த்தி ஆகட்டும், பாடணும்ன்றார்.

கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :- முருகப்பெருமானை அழைக்க பாடல் ( மருதமலை மாமணியே முருகையா… )
 Start - https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=5h58m20s

========================================
# பாடகர்கள் - இயலாதவர்களை மகிழ்விக்க புண்ணியம். ஆனால் பலரும் கர்மத்தில்…….. 
========================================

போகர் சித்தர் :- அப்பனே, அம்மையே, இவர்கள் மகிழ்விக்க ஆளில்லை. இதனால் பல சித்தர்களும், ஆனால் இன்றைய காலகட்டத்தில் காசுக்காக நிச்சயம் தன்னில் கூட, பின் அவர்கள் மத்தியில் நிச்சயம் தன்னில் கூட தலைகுனிந்து பாடுபவர்கள் நிச்சயம், பின் போராட்டத்திற்கு, அதாவது கஷ்டங்களை சந்தித்து கடைசியில் அனைத்தும் வீண் என்று. 

==================================
# ஏன் நமது கூட்டுப் பிரார்த்தனை  பாடகரை சித்தர்கள் கைவிடவில்லை? 
==================================

போகர் சித்தர் :-  ஆனாலும் (பாடகர்) இவனையும்  பின் யாங்கள் விட்டொழிந்தால் இவனும் நிச்சயம் தன்னில் கூட, அதாவது காசுகளுக்காக பாடி கர்மத்தை சேர்த்துக்கொண்டு கடைசியில் பல நோய்கள். இதனால் தான் நிச்சயம், பின் இல்லாதவர்களை கூட மகிழ்விக்க வேண்டும் என்று நிச்சயம் பின்  சித்தர்கள் முடிவெடுத்து. இதனால் மாற்றுவோம். இதனால் இவர்களையும் இன்னும் கூட மகிழ்ச்சி படுத்த, இதே பாடலை பாடிட்டு அனைவரையும் நிச்சயம் தன்னில் கூட பின் கை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நல்லா கைதட்டி இதே பாடலை திருப்பி உங்களை மகிழ்விக்க சொல்றாரு.

கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( பலத்த கைதட்டல்கள் ) 

அடியவர் :- (நமது பாடகர் பாடும் போது ) எல்லாரும் நல்லா கைதட்டணும்.

சுவடி ஓதும் மைந்தன் :-  "எல்லாரும் என்ன செய்கிறார்கள் தெரியுமா? பெரிய பெரிய பணக்காரர்களை மகிழ்விப்பதற்காக மட்டும் பாடுகிறார்கள், கைதட்டுகிறார்கள். ஆனால் அதில் புண்ணியம் இல்லை. அப்படிச் செய்வதால் கடைசியில் நோய்களும் துன்பங்களுமே வந்து சேரும். ஆனால், ஒன்றுமில்லாத ஏழைகளை யார் மகிழ்விப்பது? இறைவனைப் பொறுத்தவரை, அவருக்கும் (பாடகர்) இவரைப் பெரிய கோடீஸ்வரன் ஆக்கத் தெரியும். ஆனால் அப்படி ஆகியிருந்தால், இவரும் மற்றவர்களைப் போலப் பணக்காரர்களுக்கு மட்டும் கைதட்டிவிட்டு, ஏழைகளை மறந்திருப்பார். அதன் மூலம் நோய்களையும் பாவத்தையுமே சம்பாதித்திருப்பார். அதனால்தான், 'ஒன்றுமில்லாத எளியவர்களோடு நாம் நிற்கிறோம்' என்கிறார். எனவே, இவரை (எளியவர்களை) மகிழ்வியுங்கள். அனைவரும் பாட்டுப் பாடி இவர்களைச் சந்தோஷப்படுத்துங்கள்."

கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :-  நன்றி குருநாதா 

கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :-   முருகப்பெருமானை அழைக்க பாடல் ( மருதமலை மாமணியே முருகையா… அருமையான குரலில் பாடினார்கள். அவசியம் பின் வரும் பதிவில் கேளுங்கள்).
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h05m41s

கூட்டுப் பிரார்த்தனை பாடகர் :-  ( அருமையான குரலில் பாடி முடித்த பின்னர் )

==================================
# பக்தி என்பதும் சாதாரணமில்லை -பல துன்பங்கள் நிறைந்து “போதுமடா சாமி” என்று நிலைக்கு வரவேண்டும்.
==================================

==================================
# இறைவனின் அன்பு குழந்தைகள் - சாதுக்கள், ஈசனார் அடியவர்கள், சன்னியாசிகள்  அனைவரும் நினைத்து கூட பார்க்க இயலாத துன்பங்களை அனுபவிக்கின்றனர். 
==================================

போகர் சித்தர் :- இதைத்தானே (மேடையில் உள்ள சாதுக்கள், ஈசனார் அடியவர்கள்) இவர்கள் எதைப் போன்று, இவர்களால் நிச்சயம் படும் பாடு, இவர்கள் என்னென்ன எதை என்று அறிய எவ்வளவு கஷ்டங்கள் பட்டு இந்நிலைமைக்கு வந்தார்கள் என்பவையெல்லாம் யாங்கள் அறிவோம். இதனால் நிச்சயம் சாதாரணமில்லை இறைவன். பக்தி என்பதும் சாதாரணமில்லை. ஒவ்வொரு வாழ்க்கையிலும், அதாவது இவரது பின் ஒவ்வொரு வாழ்க்கையிலும், பல துன்பங்கள் நிறைந்து போதுமடா சாமி என்று. இதனால் அனைவரும் எழுந்து நின்று இவர்களுக்கு மரியாதை செய்யும்படி முருகனே வந்து ஆடட்டும். மீண்டும் இப்பாடலை துவங்குங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மேடையில் உள்ள சிவனடியார்கள் மற்றும் ஐயாமார்களே, அனைவரும் மேடையிலேயே அமருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- (அய்யா சாதுக்கள் இந்த நிலைக்கு வருவது சாதாரண விஷயம் அல்ல. வாழ்க்கையில் எவ்வளவோ அடிபட்டு, மனவேதனைகளை அனுபவித்த பிறகே இந்தத் துறவு நிலைக்கு வந்திருக்கிறார்கள். 'வாழ்க்கையே போதும்' என்கிற விரக்தியில் இறைவனை நாடி வந்தவர்கள் இவர்கள். இவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மீண்டும் ஒருமுறை நன்றாகப் பாடுங்கள். இந்தப் பாடலைக் கேட்டு முருகப்பெருமானே வந்து ஆடட்டும்.(

சுவடி ஓதும் மைந்தன் :-  (இவர்கள் இறைவனின் குழந்தைகள் போன்றவர்கள். இவர்கள் எதை ஆசைப்படுகிறார்களோ, அவர்களுக்கு என்னென்ன தேவையோ, அவற்றை இறைவன் தன் பிள்ளைகளுக்கு வழங்குவது போல வழங்கட்டும். தங்கள் கஷ்டங்களை எல்லாம் விட்டுவிட்டு இங்கே வந்திருக்கும் இவர்களுக்காக நாம் வேண்டிக்கொண்டால், நம் வாழ்க்கை பிரகாசம் அடையும்; ஈசன் நமக்குத் தேவையான அனைத்தையும் கொடுப்பார். எனவே, அனைவரும் எழுந்து நின்று கைதட்டி இவர்களை வணங்குங்கள். முருகப் பெருமானை நினைத்து மீண்டும் ஒரு பாடலைப் பாடுங்கள்.)

=================================
# கூட்டுப் பிரார்த்தனை மண்டபமே எழுந்து நின்றது - சந்நியாசிகளை வணங்கி.
=================================

==================================
# “The Standing Ovation” - “மண்டபமே எழுந்து நின்று கைதட்டி மரியாதை செய்தல்"
================================

முருகப்பெருமானை அழைக்க பாடல் ( மருதமலை மாமணியே முருகையா… )
https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h13m10s

ஒரு அடியவரின் உரை :-  https://www.youtube.com/watch?v=VMvOc30o9iY&t=6h18m37s

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 26.1.2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்குகள் தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபிசாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!