​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 17 November 2025

சித்தன் அருள் - 2005 - திருவனந்தபுரம் வாக்கு!


சித்தன் அருள் - 1982ன் தொடர்ச்சியாக!

பெண் அடியவர்: மகன் படிக்கிறான் ஆனால் மேலே முன்னேற முடியவில்லை.

குருநாதர் : நிச்சயம் தன்னில் கூட,தாயே எவை என்று அறிய,முதலில் மூன்று மணிக்கு பின்  எழ சொல் ! (பிரம்ம முகூர்த்தத்தில்).அம்மையே நிச்சயம் தன்னில் கூட யாரொருவர் மூன்று மணிக்கு எழுந்து பின் சரியாக ஓதுகின்றானே,அவனுக்கு அனைத்தும் தெளிவாகும்,அனைத்து விஷயங்களும் பின் எவை என்று கூற வெற்றியாகும்.அப்பனே அப்பொழுது நீங்களே சிந்தித்து கொள்ளுங்கள்.

ஆண் அடியவர் : மகன் படிக்க உட்காரும் பொழுது கவனம் கிடைப்பதில்லை

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட நண்பர்களுடன் சுற்றுவது ?

ஆண் அடியவர் : அவன் அதிகம் சுற்றுவதில்லை.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட யோசித்துப்பார்

சுவடி ஓதும் மைந்தன் : குருநாதர் உங்களை நன்றாக யோசித்து பார்க்க சொல்லுகிறார்.

ஆண் அடியவர் : எதோ தவறு செய்திருக்கிறேன், நான் தான் யோசித்து பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது. 8 மணி நேரம் நன்றாக தூங்குகிறேன் ஆனால் உடல் சோர்வாக இருக்கிறது.

குருநாதர்: அப்பனே முதலில் இரண்டு வேலை குளி.(தினமும் இரண்டு வெளியே குளிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்). அப்பனே நிச்சயம் தன்னில் கூட தீபம் ஏற்றி அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் வழிபட்டு கொண்டே அம்பாளை.அப்பனே நிச்சயம் டீத்தண்ணில் கூட சில தீய பழக்கங்களும் உன்னை பற்றிக்கொள்ளும்,அதனால் தான் சொல்கிறேன் அப்பனே இப்பொழுதே.அப்பனே நிச்சயம் தன்னில் கூட தன மனதை ஒருநிலை படுத்தினால் அப்பனே பின் நிச்சயம் அப்பனே அனைத்தும் வெற்றியாகும்.அப்பனே நிச்சயம் எவை என்று அறிய அதாவது தாய் தந்தை செல்லமாக விடுவதே அப்பனே இதற்கு காரணங்கள்.

நண்பர் அடியவர்: ஒரே மகனா? அதனால் தான் செல்லம் கொடுத்து வளர்த்து விட்டாய் என்று சொல்லுகிறார்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் சொல்லிக் கொடு அப்பனே, இவ்வாறுதான் அதிகாலையில் எழ  வேண்டும், இவ்வாறு தான் அப்பனே சில விஷயங்கள் அப்பனே சொல்லி தர வேண்டும் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா நீங்கள் தான் பிள்ளைகளுக்கு நல்ல விஷயங்களை சொல்லித் தர வேண்டும்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட இறைவனுக்கு சேவை செய்கின்றாய் அப்பனே,தன மகனுக்கு சேவை செய் முதலில்.

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா நீங்கள் இறைவனுக்கு சரியான நேரத்தில் பூஜை செய்வது போல்,உங்கள் பிள்ளைக்கும் சரியான நேரத்தில் இவ்வாறு தான் படிக்கச் வேண்டும், இந்த நேரத்தில் தான் படிக்கச் வேண்டும் என்று,இந்த உணவுகளை தான் சாப்பிட வேண்டும் என்று சொல்லி கொடுங்கள் ஐயா.

அடியவர்: அய்யா அவனிடம் பேசினாலே ஒரு நடுக்கம் மாதிரி அவனுக்கு ஏற்படுகிறது.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய அப்பனே, இதனால் அப்பனே தெரிந்து கொள்.அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அறிய அப்பனே பெற்றோர் மனதை துன்பப்படுத்தினால் அப்பனே எதோ ரூபத்தில் பிள்ளைகள் பாதிக்கப்படுவார்கள் அப்பனே,சொல்லிவிட்டேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:இது எல்லாருக்கும் பொருந்தும்.பெற்றோர்கள் மனதை எப்போதும் துன்பப்படுத்த கூடாது.அப்படி சரியாக இருந்தால் தான் அவர்களின் பிள்ளைகளுக்கு அவர்கள் விரும்பியது போல் நல்ல ஒழுக்கம்,படிப்பறிவு,முன்னேற்றம் அனைத்தும் கிட்டும்.அப்படி அல்லாமல் பெற்றோர்கள் மனம் நோகும்படி நாம் நடந்து கொண்டால் நமது பிள்ளைகளை அது பாதிக்கும்.அனைவரும் பெற்றோர்களை மதித்து அவர்கள் மனம் நோகாமல் நடந்து கொள்ள வேண்டும், அவர்கள் பேச்சை நாம் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்.இது உங்களுக்கு மட்டும் அல்ல,இது அணைத்து மக்களுக்கும் பொருந்தும்.

அடியவர்: நான் CA பரிட்சைக்கு படித்து கொண்டிருக்கிறேன்,4 முறை எழுதி விட்டேன், ஒவ்வொரு முறையும் தோல்வி அடைகிறேன்.என்ன செய்வது ?

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே,தாய் தந்தை சொல்வதை கேள் அப்பனே.அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவர்கள் காலில் விழுந்து ஆசீர்வதித்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைத்து விஷயங்களை தொடங்கு.அப்பனே நிச்சயம் தன்னில் கூட இவ்வளவு அறிவுகள் இருந்தால்,பின் அவ்வறிவு நிச்சயம் தன்னில் கூட அதாவது.

சுவடி ஓதும் மைந்தன்:ஐயா இந்த அறிவு வந்துவிட்டாலே CA படிப்பது என்பது கஷ்டமில்லை.எல்லாமே சுலபம் தான்.எந்த அறிவு ? அடிப்படை அறிவு.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட முதலில் எவை என்று அறிய அப்பனே பின் தெரிந்து கொள்ள வேண்டுமோ,அவை தெரிந்து கொண்டாலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட அவை சுலபமாக சரஸ்வதி தேவி கொடுத்து விடுவாள் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:அதனால் தான் அப்பனே உங்களை கூத்தனூர் செல்ல சொல்கிறார்.அது போக முதலில் அன்னையையும் தந்தையையும் வணங்க வேண்டும்.அவர்கள் சொல்வதை கேட்க வேண்டும்.இவை வந்துவிட்டாலே மற்றவை எல்லாம் சுலபம் தான் ,படிப்பு தானாக வந்து விடும்,சரஸ்வதி அன்னையின் அருள் கிடைத்து விடும். CA படிப்பவர் அனைவரையும் கூத்தனூர் செல்ல வேண்டும்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே எதுவும் தெரியாமல் நிச்சயம் தன்னில் கூட அதாவது ஒன்றாம் வகுப்பில் உள்ள பாடத்தை கற்றுக் கொள்ளாமல், இரண்டாம் வகுப்பில் உள்ள பாடத்தை கற்றுக் கொள்ளாமல்,அப்பனே நிச்சயம் தன்னில் கூட பன்னிரெண்டாம் வகுப்பில் உள்ள பாடத்தை படித்தால் எப்படி அப்பா?அப்பனே நிச்சயம் தன்னில் கூட இப்பொழுது கல்வி என்பது சாதாரணமானது என்பேன் அப்பனே.ஆனாலும் வாழ்க்கை கல்வி ஒருவரும் கூட கற்றுக்கொள்வதில்லை என்பேன் அப்பனே.வாழ்க்கை கல்வி கற்று கொண்டால் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அனைத்தும் முதலிடத்தில் வரும் என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்: கல்வி என்பது சுலபம்,ஆனால் வாழ்க்கை பாடத்தை முதலில்  கற்றுக் கொள்ள வேண்டும்.வாழ்க்கை படத்தை யார் முதலில் கற்று கொள்கிறார்களோ?அவர்கள் உயர்படிப்பு, உயர் பதவிக்கான படிப்பு அனைத்தும் சுலபம்.

குருநாதர்: அப்பனே முதலில் வருவது பின் தாய் தந்தையின் பேச்சை கேட்பது.எதை என்று புரிய பின் வாழ்வில் நிச்சயம் தன்னில் கூட குருவை பணிய வேண்டும்,அடுத்து இறைவன் .இவையெல்லாம் செப்பி விட்டார்கள்,ஆனால் மீண்டும் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள.அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட இதனால் எவை என்று அறிய அறிய தாய் தந்தையரை மதிப்பவனை நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் சாதிக்கலாம்.

சுவடி ஓதும் மைந்தன் : யார் ஒருவர் நிச்சயம் தாய் தந்தை குரு அடுத்து இறைவன் , இவர்களை மதித்து நடக்கின்றார்களோ அவர்கள் இந்த உலகத்தில் அனைத்தும் சாதிக்கலாம்.

அடியவர்:இரண்டு வருடம் முன்னாள் வயிறு புறப்பட்டது,எது சாப்பிட்டாலும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டது ..

குருநாதர்: அப்பனே நிச்சயம் அதிகமாக செயற்கை உணவுகளை எடுத்துக் கொள்.

அங்கிருந்த அனைத்து அடியவர்களுக்கு சற்று ஆச்சரியம் மற்றும் அதிர்ச்சி .

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா குருநாதர் நகைச்சுவை செய்கிறார்.

அங்கிருந்த அனைவரும் பலத்த சிரிப்பலை.

அடியவர்:இப்பொழுது இரண்டு மாதங்களாக குறைத்து கொண்டுவிட்டேன்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட இதனால் அப்பனே ,பின் இவை எல்லாம் நிச்சயம் வருபவை அப்பா அனைவருக்குமே இப்பொழுது வரும் அப்பா,ஏனென்றால் அனைத்துமே கலப்படமே, நிச்சயம் தன்னில் கூட இதனால் இயற்கை உணவுகளை சமைத்து உட்கொள்.

அடியவர்:வேலை விஷயமாக செல்வதானால் ...

குருநாதர்: அப்பனே நிச்சயம் இனிமேல் மாற்றி விடு அனைத்தும்,கீரை வகைகளை உட்கொள்.அப்பனே நிச்சயம் தன்னில் கூட பல வகையான கீரைகள் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எடுத்துரைத்து விட்டேன்.அப்பனே பின் நிச்சயம் உன் மீதே உனக்கு நம்பிக்கை இல்லாத போது,அப்பனே பின் யான் என்ன சொல்லுவது ?

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா உங்களுக்கே உங்கள் மீது நம்பிக்கை இல்லை என்றால்,யார் என்ன சொல்லுவது ? நீங்கள் நான் நீங்கள் சொல்லியவற்றை சாப்பிடுகிறேன் என்று நம்பிக்கையாக கூறுங்கள், எனக்கு எல்லாம் சரியாகும் என்று நம்புங்கள்.

குருநாதர்: அப்பனே ஒன்றை சொல்கிறேன் தன மீது நம்பிக்கை இல்லாதவன் தான் அனைத்தையும் கேட்டு கொண்டிருப்பான் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்:என்னால் சாதிக்க முடியும் , என்னால் அனைத்தும் முடியும் என்று நம்புங்கள்.

குருநாதர்: அப்பனே இறைவன் அனைத்தும் கொடுத்திருக்கிறான் அப்பனே,மனதிடத்தை வளர்த்துக்கொள்.அப்பனே இவை வளர்த்துக் கொண்டாலே அனைத்தும் முடியும் அப்பா உன்னால்.அப்பனே சோம்பேறிக்கு தான் அப்பனே எவ்வாறு இவ்வாறு படிப்பது? எப்படி எது என்றெல்லாம் வந்து கொண்டே இருக்கும் அப்பனே,

சுவடி ஓதும் மைந்தன்:ஐயா இந்த வயசில்  குருநாதர் வாக்கு சொல்கிறார் என்றால் உங்களுக்கு இறைவன் அருள் இருக்கிறது,நீங்கள் தான் அது நடக்குமா ?இது நடக்குமா ? என்று குழப்பிக் கொள்கிறீர்கள்.நம்பிகையாக இருங்கள். கூத்தனூர் சென்று வழிபட்டு வாருங்கள்.

அடியவர்: இப்போது இருக்கின்ற அபிராமி வள்ளி கோவிலில் சுவாமி பிரதிஷ்டை (வேட்டை கருமன் , அய்யப்பன் கோவில்) அங்கே பிரச்சனை ஆகி இடமாற்றம் ஆகி வந்து , அதனால் என்னுடைய பெயருக்கு சற்று களங்கம் ஏற்பட்டது, இதில் அரசியல் இடைஞ்சலும் உள்ளது.

குருநாதர்: அப்பனே அம்பாள் நிச்சயம் எங்கு சென்று விட்டாள் ?

பக்தர்கள் அவர்களுக்குள் விவாதம்: தேவி எங்கு சென்று விட்டாள்?அவள் உன்னோடு தானே இருக்கிறாள்? அவள் உன்னை விட்டு சென்று விடவில்லையே ?

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்ன செய்கின்றாய் கூறு அப்பனே? உன் வாயில் இருந்தே வரட்டும்.

அடியவர்:கோவிலில் பூசாரியாக இருக்கிறேன்.

குருநாதர்: அப்பனே இது எவ்வளவு பெரிய தர்மம் என்றால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அதன் மீது உந்தனுக்கு நம்பிக்கை இல்லையா?

அடியவர்:நம்பிக்கை இருக்கிறது,ஆனால் அந்த சந்தர்ப்பத்தில்...

சுவடி ஓதும் மைந்தன்:அந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் செய்த தர்மம், பூஜை செய்வது என்பது என்னது? தர்மம் !அந்த தர்மம் உங்களை பாதுகாக்காதா ? என்று ஒரே கேள்வியை கேட்டுவிட்டார்.அப்பொழுது நீங்கள் என்ன சொல்ல வேண்டும் ?

அடியவர்: காக்கும் !

சுவடி ஓதும் மைந்தன்: அவ்வளவு தான் ஐயா !

குருநாதர்: அப்பனே சக்தி மிகுந்தவர்கள் ,எதை என்று புரிய அப்பனே

சுவடி ஓதும் மைந்தன்: பூஜை செய்கிறவர்கள் எல்லாம் சக்தி மிகுந்தவர்கள் தான் அப்பனே.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே,தேடி அலையாதீர்கள் என்பேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா யாரிடமும் எதுவும் கேட்காதீர்கள்,பிரசன்னம் மற்றும் அனைத்தும்.உங்களிடமே அனைத்து சக்தியை வைத்து கொண்டு மற்றவர்களிடம் கேட்டால்,அவர்களுக்கு கோபம் வந்து விடும். துன்பத்தில் இருக்கும் பொழுது,உங்கள் மனது இதை போன்று யோசிக்கும்.ஆனால் எதுவுமே கேட்க வேண்டாம்,அவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.அடுத்து உங்களுக்கு குருநாதர் சொல்வார் ,இவையெல்லாம் எதற்காக நடந்தது என்றெல்லாம்.

அடியவர்: ஐயா எனக்கு இது தான் முதல் தடவை.கோவிலில் இருந்து வந்து உடை மாற்றி விட்டு வரும் பொழுது,என்னை கூப்பிட்டார்கள்.எனக்கும் மனதுக்குள் செல்ல வேண்டும் என்று தோன்றியது,அப்படியே மனைவியுடன் வந்துவிட்டேன்,அதனால் மற்ற அடியவர்களை போல் என்னால் பூக்கள் எதுவும் கொண்டு வர முடியவில்லை, எனக்கு தெரியவில்லை.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட என்னுடைய பரிசுத்தமான ஆசிகள் அப்பனே.நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே சொல்லிவிட்டேன் அப்பனே,அம்பாள் நவராத்திரி அன்று கூட அப்பனே நிச்சயம் ஓர் நாள் அப்பனே நிச்சயம் வருவாள் அப்பா,எதை என்று புரிய அப்பனே.அடுத்து வாக்கில் சொல்கிறேன் அப்பனே,எதையும் கேட்டு விடாதே நீ!
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் சொல்லிவிட்டேன் அப்பனே.

அடியவர்: அம்மாவை (தனது தாயார்) பற்றிய வேண்டுகோள்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் இதை யான் பார்த்து கொள்கிறேன் அப்பனே.அப்பனே பின் அனைவருக்கும் என்னுடைய ஆசிகள் அப்பனே,மீண்டும் எதை என்று அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அனைத்து விஷயங்களும் பின் யான் சொல்லி தருவேன் அப்பனே,இப்போது ஆசிகள்! ஆசிகள்!

ஓர் அடியவர்: தனது தம்பியை பற்றி வேண்டும் பொழுது..

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே நலமாக இப்பொழுது பொறுத்திருக்க சொல் அப்பனே.

அடியவர் அவர்களுக்குள் பேச்சு : அந்த பையனுக்கு அவனுடைய மணிப்பூரக சக்கரம் அடிபட்டிருக்கிறது,யாரோ நீ ஒன்றுக்கும் பிரயோஜனமில்லை என்று சபித்து விட்டிருக்கிறார்,அதை சரி செய்வதற்கு நான் உதவி செய்யட்டுமா என்று கேட்கிறார் (திருவனந்தபுரத்தில் இருக்கும் யோகா மாஸ்டர் அடியவர்) ?

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட யான் சொன்ன இடங்களுக்கெல்லாம் சென்று வர சொல். (கூத்தனூர் , மூன்று தேவிகளும் ஆசி புரிவார்கள்).
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவரையும் பொறுத்திருக்க சொல் அப்பனே,நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய அப்பனே,பின் தினங்கள் ஆகட்டும்.அப்பனே ஏனென்றால் தேவிக்கு சிறப்பாக செய்ய வேண்டுமே!

அடியவர்: நெருங்கிய உறவினர் ஒருவர் சமீபத்தில் காலமானதால்....

குருநாதர்: அப்பனே பின் நிச்சயம் இதைப்பற்றி இப்பொழுது தேவை இல்லை. அப்பனே நிச்சயம் மனதார எதை என்று புரிய அப்பனே நிச்சயம் தேவியை எதை என்று அறிய..

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா இப்பொழுது அது பற்றி எல்லாம் வேண்டாம்,மனதார தேவியை பிரார்த்தனை செய்யுங்கள்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட மனம் போலே.அப்பனே நிச்சயம் தன்னில் கூட சில விஷயங்கள் பொருத்தகத்தான் வேண்டும்,அப்பனே நாள் விதமாக அறிந்தும்,அப்பனே எதை என்று பிரிய அப்பனே,இன்னும் அப்பனே சில சில வழிகள் எதை என்று புரிய அப்பனே இல்லத்தில் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட இவ் நவராத்திரி தன்னில் நிச்சயம் தன்னில் கூட அப்பனே ஓர் நாள் தேர்ந்தெடுத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே 108 சுமங்கலி பெண்களுக்கு நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் அப்பனே உடுத்த எதை என்று புரிய ,பின் அதில் தன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் தாலி கயிற்றையும் பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் சில நிச்சயம் தன்னில் அறிந்தும் பின் இனிப்பு பின் தானம் படைத்திட நிச்சயம் தன்னில் கூட பின்பு அப்பனே சேவை செய்யுங்கள் ,யானே செப்புவேன்.

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா உங்கள் குடும்பத்தில் 108 ரவிக்கை துணி எடுத்து ,மஞ்சள் குங்குமம் வைத்து ,இனிப்பு வைத்து தானம் கொடுக்க சொல்கிறார்கள்.உங்கள் வீட்டில் யாராவது ஒருவர்.

அடியவர் : (வாங்கும் பொழுது கருப்பு நிறம் ,ஒரு நூல் கூட இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் )

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று புரிய,அறிந்தும் புரிந்தும் சில சில வகையில் எதை என்று புரிய,ஏன் எவை இதை செய்ய சொன்னேன் என்றால்,நீங்களே புரிந்து கொள்வீர்கள். அப்பனே இதை செய்திட்டு நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அறிகின்றேன் அப்பனே,பின் எதை எது என்றெல்லாம் அப்பனே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே,சில விஷயங்கள்  நல்விதமாகவே    முடியும் அப்பா.அப்பனே பின் முன்னோர்களுடைய ஆசிகள் உடனே பின் இவை எதை என்று புரிய பின் நடக்கும் அப்பா.அப்பனே ஆசிகள் அப்பா ,பின் நிச்சயம் தன்னில் கூட நல்விதமாகவே இன்னும் பின் விளக்கத்தோடு அப்பனே பின் எடுத்துரைக்கிறேன் அப்பனே,இதை செய் அப்பனே.அப்பனே பின் நிச்சயம் யான் சொல்லிவிட்டேன்.

அடியவர்: மதுரையில் சத்சங்கம் நடக்கிறதே,அதை நடத்தக் கூடியவர்கள் எந்த எந்த விதத்தில் விரதம் இருக்க வேண்டும் என்று எனக்கு ஓரளவு தெரிந்ததை சொல்லிவிட்டேன்,இருந்தாலும் ஒரு முறை எல்லாவற்றையும் சொல்லிவிட்டால் நல்லதாக இருக்கும்.

குருநாதர்: அப்பனே நல்லவிதமாக எதை என்று புரிய அப்பனே,இதை பற்றி அவர்களுக்கு தெரிவித்தேன் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா ,இதை பற்றி ஒருவர் கேட்டார் ஐயா.அவர்களுக்கு தெரிவித்தார்.அனைவரையும் சமமாக நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.ஒரு 10 பேர் இருந்தால் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று சொன்னார்.

குருநாதர்: அப்பனே நிச்சயம் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அப்பனே, யான் இதை செய்கின்றேன் என்று முன்னுக்கு வந்து அப்பனே நிச்சயம்,அதாவது அப்பனே எதை என்று அறிய , அப்பனே பிறருக்காக தான் இதை செய்ய சொன்னேன் என்பேன் அப்பனே.இதனால் அப்பனே பிறர் நலன் வேண்டி நிச்சயம் தன்னில் கூட அப்பனே அதை மனதில் நினைத்து கொள்ள வேண்டும், நிச்சயம் தன்னில் அறிந்தும் புரிந்தும்,பிறருக்காக நிச்சயம் உழைத்தால் நமக்காக இறைவன் இறங்கி வருவான் என்று அப்பனே,இவை தன் எப்பொழுதும் உள்ளத்தில் இருக்க வேண்டும்.அது மட்டுமில்லாமல் பின் சரியாகவே பின் அனுதினமும் பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே பிள்ளையோனுக்கு அப்பனே பின் அதாவது சரியாகவே அப்பனே பின் அப்பனே பின் நீராடி பின் நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய புஷ்பம் வைத்து 9 முறை அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அதுமட்டுமில்லாமல் நல்விதமாகவே பின் அறிந்தும் கூட அப்பனே எதாவது பின் மூலிகைகள் எடுத்து அப்பனே பின் நல்விதமாகவே அப்பனே பின் பிள்ளையோனுக்கு வைத்து அப்பனே பின் அறிந்தும் அப்பனே பின் சில விஷயங்கள் கூட சில மந்திரங்களாக செப்பி அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் , பல அறிவுகளை தா என்றெல்லாம் அப்பனே பின் அனுதினமும் கணபதியை வேண்டி கொண்டே வேண்டிக்கொண்டே அப்பனே.இவை மட்டும் இல்லாமல் பின் அனுதினமும் அப்பனே காகத்திற்கும் அன்னமிட்டு அப்பனே நல்விதமாக அப்பனே அதாவது பின் வாயில்லா பின் ஜீவராசிகளுக்கும் உணவிட்டு கொண்டே வரவேண்டும் என்பேன் அப்பனே.அவை மட்டும் இல்லாமல் பின் காலையிலும் அப்பனே,மலை வேலையிலும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட காப்பு பாடல்களான பி,பல வகையிலான காப்பு பாடல்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே,இவை எல்லாம் படித்து வர வேண்டும்.தான் தான் எண்ணத்துக்கு ஏற்றவாறு என்பேன் அப்பனே,நிச்சயம் தன்னில் கூட,இவ்வாறு பாடிட்டு வந்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட பிறருக்காக பின் உழைக்கின்றோம் இறைவா, பின் நீங்கள் தான் எங்களை காப்பாற்ற வேண்டும் என்று அனுதினமும் ,அவை மட்டுமில்லாமல் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே,சரி முறையாகவே அப்பனே நிச்சயம் அறிவு தரும் உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்,அதாவது நிச்சயம் தன்னில் கூட எது என்று அப்பனே,பின் அவரவருக்கு புரியும் என்பேன் அப்பனே நல்விதமாகவே.இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் ஏனென்றால் அப்பனே இன்னும் இனிப்பு இன்னும் எதை என்று புரிய இன்னும் காரம் இன்னும் புளிப்பு பின் இவையெல்லாம் சேர்த்து விட்டால் பின் இன்னும் பேசுவார்கள் அப்பனே, பின் நிச்சயம் தான்தான் எண்ணத்திற்கு பேசிவிடுவார்கள் அப்பனே,அவை யான் சொன்னது அப்படி இப்படி என்றெல்லாம்.அப்பனே இதனால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட நிச்சயம் சரியாக  இவையெல்லாம்  சரியாக எதுவும் எடுத்து அப்பனே எவை என்று கூற எடுத்து வந்தாலே அப்பனே போதுமானது அப்பா,அப்பனே நிச்சயம் அனைவரும் அமைதி ஆகிவிடுவார்கள் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இவ்வாறாகவே அப்பனே .அப்பனே இது மட்டும் இல்லாமல் நீர் சத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட ,அதிகமான உணவுகளை மேற்கொள்ள வேண்டும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அனுதினமும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இறைவனை பின் பலவகையான பின் நிச்சயம் அறிந்தும் புரிந்தும் பின் அதிகாலையிலே,மாலை வேலைகளிலும் கூட அப்பனே, அவை மட்டும் இல்லாமல்,அப்பனே இறைவன் நாமத்தை பின் கூறிவிட்டு அப்பனே பின் இயலாதவர்க்கு எல்லாம் அப்பனே பின் வாயில்லா அல்லது எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட அப்பனே கோமாதாவிற்கு உணவளித்து பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே எவ்வாறு அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் மணிகண்டனுக்கு பின் நிச்சயம் கடைபிடிக்கின்றோமோ,அவ்வாறு விரதத்தை கடைபிடித்து அனைத்தும் செய்தால்,அனைத்தும் வெற்றியாகும் என்பேன் அப்பனே.தெரிவிக்கின்றேன் அப்பனே இன்னும் ஒரு ஒரு முறைகளையும் அப்பனே,பின் நிச்சயம் தன்னில் கூட அப்பனே,கவலைகள் வேண்டாம் அப்பனே,இவ்வாறு செய்தால் அப்பனே நிச்சயம் எவருக்கும் எக்குறைகளும் வராதப்பா.அதுமட்டுமில்லாமல் அப்பனே பின் அங்கும் இங்கும் கர்மாக்கள் ஓடிக்கொண்டே ஓடிக்கொண்டே அப்பனே,இதனால் பின் நல்விதமாகவே அப்பனே அறிந்தும் கூட அப்பனே இதை தான் அனைவருக்கும் அப்பனே நல்விதமாகவே அப்பனே பின் அதாவது மண் தீபம் ,அதாவது மண் விளக்கு அப்பனே நிச்சயம் தன்னில் கூட,அவை தனும் கூட பின் பரிசுத்தமான வழிகளில் கூட அனைவருக்கும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எதை என்று அப்பனே சில வழிகளில் கூட அப்பனே அதாவது பல புண்ணிய நதிகளில் கூட அப்பனே,ஏதாவது ஒரு நதியில் நீரை எடுத்து அப்பனே ,எடுத்து கொண்டு அவ் மண் விளக்கு தன்னில் நிச்சயம் தன்னில் கூட நீரை ஊற்றி அப்பனே அவர் அவர் ஏற்ற நிச்சயம் தன்னில் கூட அப்பனே முதலில் அப்பனே. அவ் நீரை அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்படியே பின் அதாவது சிறிதளவு அப்பனே பின் நிச்சயம் அதாவது அருந்திட வேண்டும்,அவ்வாறு  அப்பனே அதில் கூட அருந்திட கிராம்பு நிச்சயம் தன்னில் கூட,அப்பனே நிச்சயம் அறிந்தும் புரிந்தும் கூட அப்பனே பச்சை கற்பூரம் இவை இட்டு நிச்சயம் ஒவ்வொருவரும் கூட அருந்திட வேண்டும்.இவ்வாறாகவே பின் தன்னில் கூட அறிந்தும் புரிந்தும் அதை தன் நிச்சயம் தன்னில் கூட புண்ணிய நதிகளின் ஓரத்தில் தீபம் ஏற்றிட அவை தன்  நிச்சயம் தன்னில் கூட ஏதாவது ஒரு தாளில் வைத்து அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்படியே நதியில் விட வேண்டும்.இவை தன் அப்பனே பின் நிச்சயம் அந்த தீபம் எப்படி என்று ,என்ன ஏன் என்றெல்லாம் புரியும்.இவ்வாறாகவே அப்பனே அவை மட்டும் இல்லாமல் ஒரு மண் விளக்கு தன்னில் கூட அப்பனே நல்லவிதமாக பரிசுத்தமான விபூதி வைத்து அதில் ருத்ராக்ஷம் வைத்து அப்பனே நிச்சயம் பின்,இவை யார் பின் செய்கின்றார்களோ,அவர்களுக்கு கொடுத்து வந்தாலே அப்பனே இறைவன் அருள் பரிபூரணமாக கிடைக்கும் , அப்பனே சில வினைகள் தீரும் அப்பா அப்பனே நிச்சயம் தன்னில் கூட.

அடியவர் : புண்ணிய நதிகள் ?

சுவடி ஓதும் மைந்தன்: ஐயா காவேரி போன்ற புண்ணிய நதிகள்.

அடியவர்: மதுரைக்கு போவதே சிரமமாக இருக்கிறது,இதில் எப்படி அங்கு செல்வது ?

குருநாதர்: அப்பனே நிச்சயம் தன்னில் கூட பின் பல வகையான பின் நிச்சயம் தன்னில் கூட யாங்களே வழிநடத்துவோம் உன்னை,பின் கவலைகள் இல்லை.அப்பனே கவலைகள் வேண்டாம் என்பேன் அப்பனே,பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட,எவ்வாறு செய்ய வேண்டும் என்று அப்பனே,செப்பிவிட்டேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட.
அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே இப்பொழுது எவை என்று புரிய அப்பனே நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் அனைவருமே அப்பனே நவராத்திரி அன்றைய நேரத்தில் பின் பரிசுத்தமான தேவியை நினைத்து கொண்டு அல்லது பின் பரிசுத்தமான பின் கோமாதாக்களுக்கு பின் பல வகையில் உணவுகள் கொடுத்தும் வந்தாலே அப்பனே நிச்சயம் தன்னில் கூட தேவி நல்லருளால் மாற்றங்கள் உண்டு.அப்பனே யானும் அடுத்தடுத்து வாக்கில் தெளிவாக செப்ப முடியும் என்பேன் அப்பனே .
அப்பனே நிச்சயம் தன்னில் கூட பரிசுத்தமான எவை என்று புரிய அப்பனே பின் ஆசீர்வாதங்கள் என்பேன் அப்பனே.நிச்சயம் தன்னில் கூட அப்பனே பின் எதை என்று புரிய அப்பனே சரியான பின் வழியில் எதை என்று புரிய அப்பனே,அவை மட்டும் இல்லாமல் அப்பனே புரிந்து கொண்டு அப்பனே நாள் நேரங்கள் தான் இப்பொழுது.அப்பனே நிச்சயம் ஏதாவது நிச்சயம் வேண்டும் என்றால் அப்பனே பின் செந்தூரானையும் அப்பனே நிச்சயம் தன்னில் கூட பழனி ஆண்டவனை பின் அங்கும் இங்கும் சென்று கொண்டே இரு அப்பனே இது தான் வேலை.
அப்பனே நாள் விதமாக என்னுடைய ஆசிகள் அப்பனே அனைவருக்குமே !!

அடியவர் : மிக நன்றி அகத்திய பெருமானே !!

குருநாதர்: அப்பனே அறிந்தும் புரிந்தும் இன்னும் அப்பனே  பல விஷயங்கள் இருக்கின்றது என்பேன் அப்பனே,அனைத்தும் நீ புரிந்து கொண்டால் அப்பனே நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் அப்பனே மனிதன்  இயங்குகின்றான் அப்பனே,எவ்வாறெல்லாம் பின் எதை என்று புரிய அப்பனே பின் இன்னும் புரிதல் அப்பனே பல இருக்கின்றது என்பேன் அப்பனே,அப்படி அப்படியே அவன் நிச்சயம் தன்னில் கூட,எதை தடுக்கின்றது,எதை நிச்சயம் தன்னில் கூட அப்பனே,பின் இவை தடுப்பது எவை என்று நீக்கி விட்டு பின்பு வெற்றி அடையலாம் என்பதை எல்லாம் அப்பனே புதுமையான விஷயங்கள் எல்லாம் வருங்காலத்தில் நிச்சயம் கற்று கொடுத்து அப்பனே இயக்கி விடுவேன் அப்பனே ,கவலைகள் வேண்டாம் !

ஓம் லோபாமுத்திரா சமேத அகஸ்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

ஓம் நற்பவி ! நற்பவி ! நற்பவி !

(இவ்வாக்கு தொடர் நிறைவு பெற்றது!)

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. நற்பவியா??? புதுசா இருக்கே!

    ReplyDelete