​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 15 November 2025

சித்தன் அருள் - 2000 - திரு.ஹனுமந்ததாசனின் கஞ்சமலை வாக்கு - 10 !


ஆக நான் எதை செய்ய வேண்டும் ? நீ எதை நினைக்கிறாயோ ? என்னிடம் சொல், நான் உன்னோடு துணைக்கு வருகிறேன் என்கிறான் !

ஒரு பெரும் சித்தர், அற்புதமான சித்தர்,  நானே பன்மடங்கு உயர்ந்த நிலையில் வைத்து வணங்கக்கூடிய, தகுதி வாய்ந்த சித்தன், அவனே என்னை கைகோர்த்து சொல்லுகிறான், இங்குள்ள மனிதருக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று !

இவர்களுக்கு மட்டுமல்ல, ஏற்கனவே அகத்தியன் ஒரு முறை வாக்குரைத்தேன், உங்களுக்கு எல்லாம் ஞாபகம் இருக்கிறதோ இல்லையோ ? புண்ணியங்கள் எப்படியடா போய் சேரும் ? அப்படி ஒரு கேள்வி வந்தது. இவன் மட்டும் கோவிலுக்கு வந்து அர்ச்சனை செய்து, சித்த தரிசனம் பெற்றுவிட்டால் இவனுக்கு தானே புண்ணியம் ? இவனுடைய வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இங்கு வர முடியாமல் போகலாம், நெருங்க முடியாமல் போகலாம், நடக்க முடியாமல் போகலாம், பார்க்க முடியாமல் போகலாம். ஆக அவர்களுக்கெல்லாம் புண்ணியம் கிடையாதா ? என்று கேட்டான் ஒருவன். அப்பொழுது அகத்தியன் விதிமகளிடம் கேட்டு சொன்னேன், உனக்கு கிடைக்கின்ற புண்ணியம் 1 / 3, 33.1/3 சதவீதம் விழுக்காடு, கைப்பிடித்த மனைவியாக இருந்தால் அவர்களுக்கு போய் சேரும், அவர் பிரார்த்தனை செய்தாலும், செய்யாவிட்டாலும், இங்கு வராவிட்டாலும், அவளுக்கும் இந்த பிரார்த்தனை இயல்பாக போய் சேரும். அதேபோலத்தான் நீங்கள் செய்கின்ற அத்தனை புண்ணியங்களும், உங்களுக்கு மட்டும் அல்ல, முழுமையாக உங்களுக்கு மட்டும் என்று எண்ணிக் கொள்ளாதே ? உன் மனைவிக்கும் போய் சேரும், உன் பெற்றோருக்கும் போய் சேரும், உன் குழந்தைகளுக்கு போய் சேரும்.இப்பொழுது இந்த காலாங்கிநாதன் சொல்லுகிறான், என் பங்குக்கு தருகிறேன் என்று சொல்லிவிட்டானே, அந்த புண்ணியம் என்னை விட வலிமையான புண்ணியமடா. நானாவது உலகளாவில் விளக்கி, அங்கங்கு  சஞ்சாரம் செய்து மக்களின் குறைகளை கேட்டு அவ்வப்போது எனது கடமையை செய்து கொண்டு வருகிறேன். எனக்கொரு ஓய்வு தேவை என்று சொல்லவில்லை, உற்சாகம் தேவை. என் உற்சாகத்துக்காக காலாங்கிநாதனே, தான் பெற்ற ஒரு பெரும் புண்ணியத்தை எல்லாம், எனக்கே குடுத்து நீ யாருக்கு வேண்டுமோ வழங்கு என்று சொல்லியிருக்கிறான். எனக்கு அது பெரும் பலமாயிற்று.

அகத்தியனுக்கே பலம் கொடுத்தவன் காலாங்கிநாதன் என்பதால், அவன் உத்தரவின் பேரில் சொல்லுகிறேன், காலாங்கிநாதன் செய்த புண்ணியமும் கூட, இங்குள்ள அனைவருக்கும் வந்து சேரும் என்று சொன்னேன், வராத இப்போது பலர் நினைக்கிறார்கள், எனக்கு மட்டும் புண்ணியம் கிடைத்து என்ன புண்ணியம் ? வீட்டில் உள்ள என் மனைவிக்கு எப்படியடா கிடைக்கும் ? அழைத்து வரவில்லை என்ற ஏக்கம் இருக்கிறதா, இல்லையா? மனதுக்குள் போராடிக் கொண்டிருக்கிறார்கள் இல்லையா ?என் குழந்தைக்கு கிடைக்க வேண்டுமா என்று எண்ணி துடிக்கிறாயா இல்லையா ? இன்னும் பாசத்தில் தானே விழுந்து கொண்டிருக்கிறார் பலர், இங்கு இருக்கத்தானே செய்கிறார்கள்? அவருக்கும் சொல்லுவேன், நீ அமைதியாக இரு, உனக்கு கிடைத்த புண்ணியத்தில், 1/3 விழுக்காடு இயல்பாகவே அமைதியாகவே, அவர் வங்கி கணக்கில் எப்படி போய் சேருகிறதோ, அதுபோல அவருக்கு போய் சேர்ந்து விடும். அவருக்கு புண்ணியம் கிடைக்கவில்லை என்று வருத்தப்பட்டு, எனக்கு கிடைத்த புண்ணியத்தை, சந்தோஷத்தை தொலைத்து விட கூடாது. எனக்கும் புண்ணியம் கிடைத்திருக்கிறது, எனது குடும்பத்துக்கும் புண்ணியம் கிடைத்திருக்கிறது, என்று எண்ணிக் கொண்டே செல்லலாம். இதை காலாங்கிநாதன் இன்றைக்கு வழங்கியிருக்கிறான், அது ஒரு பக்கம்.

மருத்துவரீதியிலே இன்னும் எத்தனையோ நோய்கள் வரப்போகிறது, இன்றைய தினம் இந்த முருகன் சன்னதியில் வைத்து கொண்டு, அகத்தியன் சொல்லுகிறேன், இன்னும் இந்த உலகத்திலே எத்தனையோ காய்ச்சல் என்று சொல்லுகிறார்களே ? அதை விட மோசமான காய்ச்சல் வரப்போகிறது. இன்னும் உலகம் வந்து நோய்களால் திண்டாட போகிறது. விதவிதமான புரிந்து கொள்ள முடியாத வியாதிகள் எல்லாம் தோன்ற போகிறது. அதில் ஒன்று வடகிழக்கு மாகாணத்திலே, ஏற்கனவே தோன்றிவிட்டது. இதுபோல அது குட்டிபோட்டு குட்டிபோட்டு, இன்னும் ஏறத்தாழ 3137 வியாதிகள், கண்ணுக்குள் புரிய முடியாத வியாதிகள் எல்லாம் வரப்போகிறது.அத்தனை வியாதிகளும் பறந்து வந்து சிலரை எப்படியோ மனிதர்களை தாக்கி அழிக்கலாம். மனிதர்களே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு புதுப்புது வியாதிகள் வந்து தோன்றலாம். விஞ்ஞான உலகத்துக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கப்போகிறது. அந்த வியாதிகளுக்கு எல்லாம் என்னடா மருந்து என்றால் ? பிரார்த்தனை தான் மருந்தா ? என்று கேட்காதே, பிரார்த்தனையும் ஒரு மருந்து, மூலிகையும் ஒரு மருந்து. அந்த மூலிகை இலை இந்த கஞ்ச மலையிலே, வடகிழக்கு திசையிலே, பூமிக்கு அடியிலே, ஏற்கனவே தோன்றிவிட்டது.அது இன்னும் 14 ஆண்டுகளுக்கு பிறகு, இல்லை அதற்கு முன்னாலே கூட சொல்லமுடியாது, பூமியில் இருந்து விருட்டென்று வெளியில் கிளம்பும். அந்த மூலிகை வித்யாசமாக இருக்கும்.அந்த மூலிகையின் வாசனைகள் ஆச்சர்யமாக இருக்கும். அதை மூலிகையை புரிந்து கொண்டவர்கள், அந்த மருத்துவத்துறையை சேர்ந்தவர்கள், அந்த மூலிகையை பற்றி அறிந்து கொண்டு, அதை தக்கவாறு பயன்படுத்திக் கொண்டால், எதிர்வரும் 3000 மேல் வரக்கூடிய புதுப்புது வியாதிகளை குணப்படுத்தும் சக்தி, சர்வ வல்லமை படைத்த இந்த மூலிகைக்கு மட்டுமே உண்டு. உலகத்திலே தமிழ்நாட்டுக்கு மட்டுமே உண்டு. தமிழ்நாட்டிலே இந்த கஞ்ச மலைக்கு மட்டுமே உண்டு. அப்போ பொதிகை மலை என்னாயிற்று என்று கேட்காதே ? கொல்லிமலை என்னாயிற்று, அங்கு மூலிகை இல்லையா என்று கேட்காதே ? சதுரகிரியிலே மூலிகையே இல்லையா என்று கேட்காதே ? இது ஆரம்பம் ஆகும். இது காலத்தின் கட்டாயம் என்று சொல்லி, இதனுடைய விளைவுகள் மற்ற மலைகளில் தோன்றும். முதலில் தோன்றுகிற இடம் இந்த அற்புதமான இந்த இடத்தில தான். ஆக எந்த எந்த நோய்கள் வரப்போகிறதோ, அதற்கு ஏற்கனவே மூலிகைகள் இறைவன் படைத்துவிட்டான். அதைப்போல நோய்களையும் படைத்தது கொண்டிருக்கிறான். நோய்களின் பேரே  வித்யாசமாக இருக்கும். நன்றா இருப்பான், திடீரென்று கைகால்கள் இழுத்து விடும். நன்றாக பேசுவான், செயலிழந்து போவான். ஒரு கண் இருக்கும், ஒரு கண் இருக்காது. அரக்கன் போல அந்தக்காலத்தில் கொம்பு முளைக்கலாம்.தலைமுடி இல்லாமல் போகலாம்.மூன்றடுக்கு மேல் வளர முடியாமல் போகலாம். ஒரு கை இருக்கும், ஆனால் ஒரு கால் இருக்காது, ஆனால் வாழ்வான். பேச்சு இருக்கும் ஆனால் செயல்படமுடியாது. கண்ணீருக்கும் ஆனால் பார்க்க முடியாது, ஆக இப்படியும் எத்தனையோ வியாதிகள் வரப்போகிறது. இதெல்லாம் கூடவே அவர்கள் செய்த பாவத்தின் அடையாளம்.அந்த மாதிரி பாவங்கள் எதுவுமே உங்களை அண்ட கூடது என்பதற்காகவும், உங்களது குடும்பம் நல்லதொரு எதிர்காலம் தழைக்க வேண்டும் என்பதற்காகவும், அகத்தியன் உள்பட, காலாங்கிநாதன் உள்பட இங்கு வந்து, உங்களையெல்லாம் அழைத்து, உங்களுக்கு அந்த புண்ணியத்தை இப்பொழுதே நாங்கள் தருகிறோம். இங்குள்ள அதைப்பெருக்கும் அந்த மாதிரி வியாதிகள், அந்த மாதிரி வம்சங்கள் பிறக்காது. அது வராது தடுக்கின்ற புண்ணியத்தையும், காலாங்கிநாதர் உள்பட நானும் நல்லதொரு நாளில் இந்த நேரத்தில், உங்களுக்கெல்லாம் புண்ணியமாக நான் வழங்குகிறேன். இதை கூட தாரைவார்த்து கொடுக்கிறேன் என்று சொன்னால், தாரைவார்த்து வெறுமனே சொன்னால் எப்படி ? தண்ணீர் தெளித்து கொடுக்க வேண்டாமா ? என்று கேட்பாய் நீ. ஏனென்றால் நீ சட்ட திட்டம் படித்தவன். முறைப்படி எதுவும் செய் என்று கேட்டாலும் கேட்பாய். உனக்கு உரிமை இருக்கிறது, நானும் செய்ய வேண்டிய கடமை இருக்கிறது. ஆக தாரைவார்த்து கொடுத்தேன் என்று எப்பொழுது அகத்தியன் சொல்லிவிட்டேனோ ? காலாங்கிநாதர் எப்பொழுது சொல்லிவிட்டாரோ ? உங்களுக்கு அந்த மாதிரி, வியாதிகள் தொந்தரவு, ஆரோக்கியம் பலம் குறைவாக இருக்கின்ற நிலை ஒருபொழுதும் ஏற்படாது. அதற்கு வாக்குறுதி, அகத்தியன், காலாங்கிநாதன் சார்பில் இங்கு வழங்குகிறேன். ஆக இங்குள்ள அத்தனை பேரும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். மனா அமைதியோடு இருக்க வேண்டும். சந்தோஷத்தோடு இருக்க வேண்டும்.

குழந்தைகள் செல்வச் செழிப்போடு, நல்ல படியாக இருக்க வேண்டும்.

மன நிம்மதி இருக்க வேண்டும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

2 comments:

  1. ஓம் அகத்தீசாய நமக 🙏

    ReplyDelete
  2. Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha

    ReplyDelete