​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 15 November 2025

சித்தன் அருள் - 1999 - அன்புடன் அகத்தியர் - ஊத்துமலை பாலசுப்பிரமணிய சுவாமி அகத்தியர் ஸ்ரீ சக்கர பீடம் கோயில்!









20/7/2025 அன்று காகபுஜண்டர் சித்தர் உரைத்த பொது வாக்கு

வாக்குரைத்த ஸ்தலம்: ஊத்துமலை பாலசுப்பிரமணிய சுவாமி அகத்தியர் ஸ்ரீ சக்கர பீடம் கோயில். சீலநாயக்கன்பட்டி பைபாஸ் சேலம். 

நமச்சிவாயனை!!!! பணிந்து புசண்டன் செப்புகின்றேன்!!. வாக்குகளை!!


 அப்பப்பா!!!! அறிந்தும் நிச்சயம் தன்னில் கூட எப்பொழுது?? எக்காலம்?? நிச்சயம் மனவருத்தங்கள் தீரும்?? என்பவை எல்லாம் முடியாத காலம் கலியுகத்தில்!!!


 இவ்வாறாக அதாவது நன்மைகளாகவே சித்தர்கள் பின் அறிந்து பின் செய்து கொண்டே இருந்தாலும்!!!......


 ஆனாலும் மனிதன் திருந்திய பாடு இல்லை. 


ஏன்? எதற்கு? என்னவென்று இறைவன் வகுத்த பாதை எவ்வாறு என்பவை எல்லாம் பின் உணர்ந்து கொள்ள இக்கலியுகத்தில் ஆளில்லை. 


ஏதோ!? அறிந்தும் பின் இதன் பின்னே பின் புரிந்தும் பின் அறியாதவாறே நிச்சயம் எவ்வாறாக இறைவனை எப்பொழுது அறியப்போகின்றான்???. 


ஆனால் பின் அறிய முடியவில்லை.

 எங்கெங்கு தேடி அலைந்து எக்காலம் உணர்ந்தும் புரிந்தும் இதனையும் அறிந்தும் அறிந்தும் இதை உணராவிடிலும் அறிந்தும் அறிந்தும் உண்மைதனை விளக்க,!!! உண்மைதனை விளக்க ஆள்! 
ஆள் எங்கு? எதைத் தேடி?.... இறைவனை தேடிக்கொண்டு இருக்கையில்!!!


 ஆனாலும் உண்மை நிலை எங்கு இருக்கின்றது??? பின் கலியுகத்தில் என்பதை எல்லாம் நிச்சயம் இல்லை!!


இதனால் தான் அறிந்தும் அகத்தியன் மிகப்பெரியவன்!!!.


 அறிந்தும் பல உயிரினங்களையும் கூட நிச்சயம் அனைத்தும் தன் பிள்ளைகள் என்று எண்ணி வாழ்ந்தவன்.


 இதனால் பின் அறிந்தும் பின் மலைகளிலே சிறப்பு வாழ்ந்தவையாக அனைத்தும் பின் அறிந்தும் அனைத்து ஜீவராசிகளும் நிச்சயம் அறிந்தும் இறைவனுடைய குழந்தைகள் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து நிச்சயம் பின் அனைத்து மலைகளையும் ஏறி ஏறி தரிசித்து பல பல வழிகளின் கூட ஈசனையும் கூட பின் தரிசித்து நன்மைகளை!!!!.........



 ஆனாலும் எங்கே சென்றாலும்? நிச்சயம் அவ்  மலையின் மீது ஏறி நிச்சயம் அங்கே பின் ஈசனை வரவழைப்பான் அகத்தியன்.


 நிச்சயம் பின் எங்கெங்கு ?பல மலைகளை பல மலைகளிலும் கூட அறிந்தும் நிச்சயம் அதாவது பின் எப்பொழுது? ஈசன் வருகின்றானோ!?!.... அதுநாள் வரையில் நிச்சயம் தவங்கள் இயற்றி பின் அறிந்தும் பல தவங்களை இயற்றி நன்மைகளாகவே அங்கே அங்கே ஈசனை நிச்சயம் தன்னில் கூட மனதார எண்ணி!!!!!!


ஈசனை வரவழைத்து இங்கே ஜீவராசிகள் தங்கி இருக்கின்றது. இதனால்  இவைகளுக்கு பல வகைகளும் கூட நன்மை செய்!!

 எப்பொழுது எதை கொடுத்தாலும் பின் ஜீவராசிகளை என்றெல்லாம் நிச்சயம் அங்கங்கு நிச்சயம் இங்கே இரு!!! என்றெல்லாம் ஈசனையும் கூட.!!!
( மலைகளின் மீது ஈசனுடைய பிரதிஷ்டை)


 இதனால்தான் எவ் மலைகளிலும் நிச்சயம் அறிந்தும் அழகாகவே ஈசன் மறைபொருளாகவே காணப்படுகின்றான்.


 முருகன் இருந்தாலும்!!!!! பின் அனைத்தும் பின் இருந்தாலும் பின் ஈசன் மறைமுகப் பொருளாகவே காணப்படுகின்றான்.
(ஊத்து மலையில் முருகன் கோவில் தேவி கோயில் காலபைரவர் கோயில் உள்ளது)

 அதை உணர்ந்தவர் பின் எவரும் இல்லை.


 ஆனாலும் அறிந்தும் கலியுகத்தில் நிச்சயம் (ஈசன்) இவன் நடமாட்டம் இன்னும் ஒவ்வொரு மலையிலும் கூட சங்கு!!!! சங்கின் பின் அதாவது பின் சத்தம் அறிந்தும் நிச்சயம் வந்து கொண்டே தான் இருக்கின்றது.


 ஆனாலும் பின் அதாவது பின் அனைத்தும் பின் ஒளி விளக்காக அனைத்திற்கும் பின் ஆசீர்வாதங்கள் கொடுக்க நிச்சயம் அனைத்து மலைகளிலும் கூட!!! அமாவாசை பௌர்ணமி இரவுதனில் கூட ஒரு சங்கு ஒரு நிச்சயம் பின் ஒலிக்கும் அனைத்து உயிர்களுக்கும் சொந்தம் என்று.

( ஈசனுடைய சங்கு சத்தம்)

 இதனால் பின் அவ் ஒலியை பின் அனைத்து ஜீவராசிகளும் கேட்டால் நிச்சயம் தன்னிலே இன்னும் பின் ஆரோக்கியமும் அனைத்தும் கிடைக்கும்!! என்பது இப்பொழுதும் கூட பின் செப்புகின்றேன். இங்கு!!!
 அறிந்தும் இவைதன் எப்பொழுது? ஏது? அறிந்தும்!!!!


 இதனால் பின் இதன் அதாவது அருகிலே பல ஊர்கள் இருந்தது.( ஊத்து மலையை சுற்றி)


 நிச்சயம் அவ்வூரில் நிச்சயம் ஒரு பெரிய தலைவன் பின் ஆண்டு வந்தான். அனைத்து கிராமங்களுக்கும் இவன்தான் தலைவன். இவன் என்ன சொல்கின்றானோ? அதைத்தான் கேட்க வேண்டும். நிச்சயம்!!


 ஆனாலும் இங்கு பல பல உண்மைகளை தெரிந்தவர்கள் எவர்? என்பதை எல்லாம்!!!


 ஆனாலும் இதில் ஒரு குடும்பம் மட்டும் இறைவனடி அதாவது இறைவன் மேல் பற்று வைத்து பற்று வைத்து இறைவனே கதி என்று !!

(மனிதர்கள்)யார்? எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை என்றெல்லாம்!!

 ஆனாலும் அவ் கிராமத்திற்கு சொந்தக்காரன் ஆனாலும் இதைப் பொறுத்து நிச்சயம் யாரும் பின் இறைவனை வணங்கக்கூடாது என்னைத்தான் வணங்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.



 ஆனாலும் அனைவரும் நிச்சயம் என்ன? செய்வது ஏது செய்வது? என்று புரியாமல் திணறி திணறி நிச்சயம் தன்னில் கூட.!!



 இதனால் பின் அவ்வாறு வணங்காதவர்களை நிச்சயம் பின் அதாவது இவ் மலையில் ஏற்றி நிச்சயம் பின் தள்ளிவிடுங்கள் என்றெல்லாம்!!!


 பின் இதை தன் உணர்ந்தவர்கள் நிச்சயம் ஆனாலும் சில பேர்கள் பின் பயந்து !!!!!நிச்சயம் மனிதனை அதாவது அவனை வணங்கினார்கள்.

 இப்படித்தான் கலியுகத்திலும் கூட!!! அதாவது கலியுகத்தில் பின் இவை பின் போகப்போக இப்படித்தான் அதாவது மனிதன் இறைவன் இல்லை என்பான்!! நிச்சயம் அனைவரும் பின் இவ்வாறுத்தான் கேட்பார்கள்.

ஏனென்றால் நல்லதை சொல்ல இங்கு ஆட்கள் இல்லை. 

ஏனென்றால் நிச்சயம் உண்மைதனை கூட. இதனால் பின் இறைவன் என்ன? செய்யப் போகின்றான்?, எதைச் செய்யப் போகின்றான்?.

 மனிதன் அதாவது இப்படித்தான் எங்கள் அருகிலே வாருங்கள், நான் அனைத்தும் செய்து தருகின்றேன். அங்கு பின் நிச்சயம் அவை உள்ளது, இவை உள்ளது என்றெல்லாம் நிச்சயம் பொய்களாக போய்க்கொண்டே இருக்கும்.


ஆனால் இதனையும் கூட அதாவது ஆசை வார்த்தைகளை கூறி மனிதனை மனிதன் ஏமாற்றுவான். 


ஆனால் நிச்சயம் இவ்வாறாக பக்திக்குள்ளாகவே நிச்சயம் பின் அறிந்தும்  உண்மைதனை கூட பின் ஆழ்ந்து தீர்ந்து உண்மைதனை பின் உள்ளே சென்றால் நிச்சயம் தெரியும் பக்தி என்னவென்று!!!!


 அப்பொழுது தெரியும் உண்மை பொருள் யார்? என்று. நிச்சயம் மனிதனா????

 மனிதன் பொய் சொல்கின்றானா???, உண்மை சொல்கின்றானா??? சொல்கின்றானா என்று!!


 நிச்சயம் ஆனால் நிச்சயம் இறைவன் அதாவது கலியுகத்தில் நிச்சயம் வழிகள் பல பல வழிகளில் காண்பிக்கத்தான் இருக்கின்றான்.


 ஆனால் மனிதனோ!? அதை நிச்சயம் கண்டுகொள்வதே இல்லை. தன் மனம் போன போக்கிலே பின் போய் நிச்சயம் பின் பல தோல்விகளை சந்தித்து மீண்டும் இறைவனிடத்தில்.


 இதனால் இறைவனும் சோதனைகள் தான் கொடுப்பான். சற்று பொறு!!!,

 பின் யான் உந்தனக்கு என்னென்ன?? வழிகளை காண்பித்தேன்.!!

 ஆனாலும் நீ சற்றும் அதை அறியாமல் அங்கங்கும் சென்றாய். இதனால் நிச்சயம் அறிந்தும் கஷ்டங்களை படு !!!என்றெல்லாம் இறைவனே மீண்டும் கட்டளையிட்டு!! நிச்சயம் பின் பொறுத்திருந்தால்தான் அனைத்திற்கும் தீர்வு என்று. 


இதனால் பின் அவ்வூரில் பல வழியிலும் கூட பல கிராமங்கள் நிச்சயம் ஒருவனுக்கே சொந்தம்.

 இதனால் என்றெல்லாம் நிச்சயம் அனைவரும் பின் அவன் என்ன சொல்கின்றானோ அதைத்தான் கேட்க வேண்டும் என்று.


 நிச்சயம் இவ்வாறாகவே மாறுபட்டு மாறுபட்டு அறிந்தும்  அறிந்தும் இதைத் தன் கூட நிச்சயம் எவ்வாறு என்பதெல்லாம் தெரியாமல் மனிதன் தவித்தான். (ஊரார் கள்)


 நிச்சயம் அதாவது இறைவன் ஆனாலும் ஒரு குடும்பம் மட்டும் பலமாக இறைவனை வணங்கிக் கொண்டிருந்தது.


 ஆனாலும் நிச்சயம் இது அவன் காதில் எட்டியது. 

பின் அங்கு சென்று பின் அதாவது அறிந்தும் அக் குடும்பத்தின் இல்லத்தை எல்லாம் இடித்தான்.

 பின் அறிந்தும் இங்கு உள்ளவர்களை எல்லாம் நிச்சயம் பின் அடித்து இவர்களை நிச்சயம் பின் அதாவது மரத்தின் மீது பின் அறிந்தும் பின் ஏறச் செய்து கட்டி வையுங்கள். பின் உணவில்லாமல் இங்கே சாகட்டும் என்றெல்லாம் நிச்சயம் தன்னில் கூட!! அவ்வாறாகவே!!


 ஆனாலும் அதாவது அறிந்தும் இவ்வாறாக என்றெல்லாம் நிச்சயம் அவ்வாறாகவே பின் செய்தார்கள். 

அவர்கள் குடும்பத்தில் பல வழியிலும் கூட பின் அதாவது தாய் தந்தையர் இன்னும் குழந்தைகள் என்று பலபேர் கூட்டுக் குடும்பமாக பல வழியிலும் கூட!! ஆனாலும் இறைவனை சேவித்து சேவித்து!!


 ஆனாலும் நிச்சயம் பின் அதாவது கீழிருந்து சொன்னார்கள், இறைவனை சேவித்தீர்களே!!! 

ஆனாலும் அனைவரும் என்னை எங்களை  நம்பினார்கள்.

 ஆனாலும் நீங்கள் மட்டும் இறைவனை நம்பினீர்கள்.


 இறைவன்உங்களுக்கு  என்ன செய்தான்? பார்ப்போம் என்றெல்லாம் !!


ஆனால் எங்களை நம்பியவர்கள் நிச்சயம் எவ்வளவு சந்தோஷமாக இருக்கின்றார்கள் பாருங்கள் என்று.

 மீண்டும் அதாவது ஒரு கடைசி வாய்ப்பை தருகின்றேன். நிச்சயம் தன்னில் கூட!!!!


 அதாவது நீங்கள் பின் அதாவது நீங்கள்தான் இறைவன் என்று சொல்லிவிட்டால், யான் உங்களை உங்களை அழகாக கீழே இறக்கி உங்களுக்கு தேவையானதை கொடுப்பேன். நிச்சயம் என்றெல்லாம்!!


 ஆனால் கீழே இருப்பவர்கள் எல்லாம் சொல்லிவிடுங்கள், சொல்லிவிடுங்கள் என்று. பின் சத்தம் பல வகையில் கூட!!


 ஆனாலும் நிச்சயம் அவ்வாறு மேலே உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் பார்த்தனர். இவ்வாறாக நிச்சயம் தன்னில் கூட பின் வேண்டாம், வேண்டாம் என்று அவர்களுக்குள்ளே, அவர்கள் குடும்பத்திற்குள்ளே!!!


 இவ்வளவு நாட்கள் இறைவனை வணங்கிவிட்டோம். இறைவன் என்ன செய்தாலும் பரவாயில்லை என்று.


 நிச்சயம் இவ்வாறாக அதிலிருந்து ஒரு பெரியவன் சொன்னான், நீங்கள் யார் எதைச் சொன்னாலும் இங்கு இறைவன் தான் மிகப்பெரியவன்.

 இதனால் நீங்கள் எல்லாம் சாதாரண மனிதர்கள் தான் என்னையும் சேர்த்துத்தான்.


 ஆனால் இறைவன் என்னவோ!!! ( இறைவனுடைய சித்தம் என்னவோ)   அதை அத்தண்டனையை பின் ஏற்றுக் கொள்கின்றோம் என்று.


கீழே இருந்து நிச்சயம் கல்லை எறிந்தான். பின் இப்படியுமா,???? இவ்வளவு அடிபட்டும் உனக்கு புத்திகள் வரவில்லையா என்று!!!

கல் கண்ணில் பாய்ந்தது. கண்ணில் பின் பிதுங்கி, பின் இரத்தம் நிச்சயம்!!

 ஆனாலும், பின் ஆனாலும் மேலே உள்ளவர்கள் அழுது புலம்பி, இறைவா,!!! இப்படி எல்லாம் நிச்சயம் இவ்வாறாக எல்லாம் மனிதன் இருக்கின்றானே என்றெல்லாம் அறிந்தும்!!


 இதனால் எதைச் செய்வது? என்பதை உணராமல், உணராமல் இருந்தும் இவ்வாறாக மனிதன் இக்கலியுகத்தில் இவ்வாறாகத்தான் இருக்கப் போகின்றான்.


 அதாவது இறைவன், இறைவனை நிச்சயம் ஒரு பின் உண்மை பொருள் அற்றவையாக, அதாவது பணப்பொருளாகவே வைத்து அழகு பார்ப்பான். இறைவனை !!


ஆனாலும் அதை எப்பொழுது அழிப்பான் என்பவை எல்லாம் நிச்சயம்,
(மனிதர்களின் இறைவனை வைத்து செய்யும் பணத்தாசையை)




 அதாவது பணப்பொருளாக பின் பார்ப்பவர்களுக்கெல்லாம் பின் நிச்சயம் பின் இறைவன், அதாவது அள்ளிக் கொடுத்து, அள்ளிக் கொடுத்து ஆனாலும் கடைசியில் அதை எங்கு சேர்க்க வேண்டுமோ?, அழகாக அங்கு சேர்க்க வைப்பான்.

 இதுதான் கலியுகத்தில் நடக்க போகின்றது.




போகின்றது அறியாமலும், புரியாமலும்!! என்னவென்று, ஏதுவென்று தெரியாமல் மனிதன் அலைந்து கொண்டிருக்கையில், இறைவன் யார்? என்பது உணர்ந்து கொள்ளவில்லையே!!


இதனால் இன்னும் வருத்தங்கள் தான்.

அதனால்தான் அகத்தியன் எங்கும் நிறைந்திருக்கும் பின் பரம்பொருளாக இறைவனை நோக்கி, நோக்கி!!!........

 மனிதனுக்கெல்லாம் இப்படி இருந்தால் இப்படி கடைபிடித்து வாழ்ந்து கொள்ளுங்கள், வாழ்ந்து கொள்ளுங்கள் என்றெல்லாம்.


 ஆனாலும் இக்கலியுகத்தில் தவறுகள் அதிகமாகிக் கொண்டே போய்க்கொண்டு, அதிகமாக, அதிகமாக போய்க்கொண்டே இருக்கின்றது.


 இதனால் இயற்கையும் விளைவுகளும் கூட அதிகமாக போய்க்கொண்டே இருக்கும்.


 மனிதன், அதாவது இறைவன் அழகாகத்தான் மனிதனை பிறக்க வைக்கின்றான்.

 ஆனால் மனிதனோ!? நிச்சயம் எவ்வாறெல்லாம் மனதை படைத்து, அதில் தன் அழுக்குகள் ஏற்றிக்கொண்டு, தவறான வழிகளில் செல்வதோடு, நிச்சயம் அழிந்து,!!....


 அதனோடு பின் இயற்கையும் கூட இன்னும் மிகப்பெரிய சக்தியை வெளிப்படுத்தும்.


 இறைவனும் அவ்வாறே இயற்கைக்கு, அதாவது இயற்கை தான் இறைவன் என்றெல்லாம் நிச்சயம் பழைய வழிகளில் கூட நீங்கள் கண்டு உணர்ந்திருக்கலாம்.


 இதனால் பின் எப்பொழுது இயற்கையை அழகாக காத்துக்கொண்டு, நிச்சயம் இயற்கை பார்த்துக் கொண்டே இருக்கின்றது. 


நிச்சயம் பின் தவறு செய்தாலும், மரங்களும், செடிகளும், சூரியனும், சந்திரனும் அனைத்தும் பின் பார்த்துக் கொண்டிருக்கையில், நிச்சயம் தப்ப முடியாது! என்று எப்பொழுது? மனிதன் எண்ணுகின்றானோ,? கலியுகத்தில் அப்பொழுதுதான் தீர்வு நல்லபடியாக வாழ முடியும். 


ஆனாலும் நிச்சயம் மனிதன் தவறு செய்து கொண்டே தான் இருக்கின்றான். இறைவன் என்ன பார்க்கத்தான் போகின்றானா?இறைவன் நிச்சயம் மறைபொருளாக!!! (இறைவன் கண்ணுக்கு தெரியாமல்) என்றெல்லாம் நிச்சயம்!

 ஆனாலும், இதனால்தான் பின் அனைத்திற்கும் நிச்சயம் பின் உணரும் தன்மையை கொடுத்து, நிச்சயம் தன்னில் கூட பின் சூரியனாலும், பின் சந்திரனாலும், நிச்சயம் பின் அனைத்தும், நிச்சயம் பின் யூகித்து, யூகித்து, பின் நிச்சயம் பூமித்தாய், பின் தாங்கிக் கொண்டிருக்கின்றாள்.


 நிச்சயம் இவ்வாறாகவே அதிகரித்தால், நிச்சயம் பின் ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு தவறுக்கும் என்ன தண்டனை? என்பவை எல்லாம் நிச்சயம் தன்னில் அகத்தியன் பின் வருகின்ற பொழுது, எடுத்துரைக்கும் பொழுது தெரியும்.


 அறிந்தும் இவ்வாறாக மீண்டும் எதனை நோக்கி புறப்பட,? எதனை நோக்கி புறப்பட, ?






 அறிந்தும் இவைதன் நிச்சயம் பின் அவ்வாறாக குடும்பம், நிச்சயம் இறைவா,!! இறைவா!!, நிச்சயம் எங்கு இருக்கின்றாய்??, நிச்சயம் என்னில் எவை புரிய, புரிய என்று.


 ஆனாலும் இதை தன் நிச்சயம் இவ்வாறாகவே உணர்ந்து, ஆனாலும் அறிந்தும் இதை தன் இவ்வாறாக பக்தி என்பது பின் அனைவருக்கும் தெரியும். 


பக்தியில் சிறந்து காலங்கள் காலங்களாக அறிந்தும் இவ் குடும்பம் பின் அப்படியே பக்தியை நோக்கி!!!

, ஆனால் இறைவனை பின் இறைவனை மறந்தபாடு இல்லை. இவ்வாறாகவே!!!


 நிச்சயம் மீண்டும் கீழே இருந்த அனைவருமே இறைவன் இல்லை என்று சொல்லுங்கள். நிச்சயம் அவ்வாறாக, அதாவது இறைவன் இல்லை!! என்று ஒரு !வார்த்தை சொல்லிவிடுங்கள். நீங்கள் பிழைத்துக் கொள்வீர்கள். அறிந்தும்!! இதனால் கீழே வாருங்கள் என்றெல்லாம்!!


 நிச்சயம் மீண்டும் மீண்டும் பின், அதாவது அவ் மனிதனும் கூட, அதாவது அறிந்தும் இவைதன் நிச்சயம் பின், அதாவது யான் தான் நிச்சயம் அனைத்திற்கும் காரணம். அதாவது என்னை, அதாவது மீண்டும் என்னை இறைவன் என்று கூறிவிடுங்கள் என்றெல்லாம் நிச்சயம்!!!

, அதாவது பின் மீண்டும் மேலிருந்து இன்னும் ஒருவன், அதாவது நீ சாதாரண மனிதன்!!, உன்னை எப்படி??? இறைவன் என்று யான் பின் கூறுவது? நிச்சயம் யான் கூப்பிட மாட்டேன் என்றெல்லாம் நிச்சயம்!!!


 அதோடு அறிந்தும் இதனால் நிச்சயம் இவ்வாறாகவே சரி. இவர்களுக்கு நிச்சயம் அறிந்தும், அதாவது அனைத்தும் அனைவரும் கலைந்து போங்கள். நிச்சயம் இவர்களுக்கு இங்கேயே நிச்சயம் பல பல வழிகளில் கூட பின், அதாவது நிச்சயம் ஒரே அடியில் பின் சாகாமல், நிச்சயம் பின் ஒரு மாதம் வரை, நிச்சயம் பின் எவ்வாறெல்லாம், நிச்சயம் பின் எவ்வாறெல்லாம், நிச்சயம் தன்னில் கூட பின் எவ்வாறெல்லாம் இவர்களை எல்லாம் சாகடிக்க முடியுமோ, அவ்வாறெல்லாம் எதை என்று புரிய அனைவரும் பின் ஊரார்கள், பின் அதாவது அறிந்தும், பின் அதாவது நிச்சயம் தன்னில் பறைசாற்றுங்கள். பின் எவ்வாறு எல்லாம் ஒவ்வொரு  ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று, நிச்சயம் பின் ஒவ்வொருவரும் இவ்வாறாக செய்திட வேண்டும் என்றெல்லாம் நிச்சயம்!!!.....

.
 பின் ஒருவன் பின் கத்தியால் குத்தி!!!, இன்னொருவன் இன்னும் பின், அதாவது ஊசியினால் குத்தி இன்னும் இன்னும் பல வகைகளில் கூட, நிச்சயம் இவ்வாறாகவே என்று மீண்டும் அனைவருக்கும் சொல்லிக் கொடுத்து, இவ்வாறாக ஒரு மாதம் இவர்களை சித்திரவதை செய்யுங்கள் என்றெல்லாம்.



 அப்பப்பா!!!! மனிதன் இதனால்தான் அப்பனே கலியுகத்தில் மனசாட்சி இல்லாமல் வாழ்வான்ப்பா!!

 நிச்சயம் அப்பனே பின் உண்மைநிலை இல்லாமல் வாழ்வானப்பா!!!

இறைவனை வணங்கியும் அப்பனே மனசாட்சிகள் இல்லாமல், அப்பனே பின் வாழ்ந்து, அப்பனே தானும் கெட்டு, அப்பனே தன் குடும்பத்தில் உள்ளோரும் கெட்டு, அப்பனே அழித்து, அப்பனே எதை என்று புரியாமலே, எவை என்று அறியாமலே வாழ்வானப்பா!!


 இதனால் கலியுகம் என்பது அப்பனே பின் சாதாரணம் இல்லை.

இங்கு அப்பனே தீயவர்களுக்கு மட்டுமே இடம், நல்லோர்களுக்கு இடமில்லையப்பா!!


 அறிந்தும் எதை எவற்றை புரிந்தும் நின்று பார்த்தால் உண்மை புரியும்.


 அறிந்தும் இதை என்று நிச்சயம் இவ்வாறாகவே அப்பப்பா!!!! பல வழியிலும் கூட!!! இதனால்தான் நிச்சயம் யானும்!!!!!!!(காகபுஜண்டர் )வந்து மக்களை, அதாவது பல வகையிலும் திருத்த நிச்சயம் பின் ஆனாலும் பின் திருந்திய பாடு இல்லை.!!!


 நிச்சயம் எவ் வடிவமும் எதற்கு பின் எடுத்து எடுத்து பார்த்தாலும், நிச்சயம் தன்னில் கூட பின் அறிந்தும் பின் மனிதனுக்கு புத்திகள் இல்லையே.!!!


 இதனால்தான் நிச்சயம் பின் முறையிட்டுக் கொண்டே இருக்கின்றேன். அதாவது நிச்சயம் மனிதனின் எண்ணங்கள் கீழ்த்தரமாக போய்க்கொண்டே இருக்கின்றது.


 இதனால் நல்வழிப்படுத்த பல யுகங்கள் பின் தாண்டி தாண்டி, நிச்சயம் சொன்னேனே!!! புரியவில்லையே.!!


 இதனால் அகத்தியனும் கீழ இறங்கி, நிச்சயம் மனிதனுக்கு அன்போடு புரிந்து புரிந்து கொள்ளும் வகையில், நிச்சயம் திருடனாயினும்!!! பின் நல்லவன் ஆயினும், நிச்சயம் பின் புரிய வைத்து, நிச்சயம் வழிகாட்டிக் கொண்டிருக்கின்றான்!!


. ஆனாலும் நிச்சயம் இதைக் கூட, நிச்சயம் கால சம்பந்தங்கள் இவ்வாறாக இருந்தால் வெற்றி கொள்ளலாம்.!!

 இல்லையென்றால், நிச்சயம் நோய்களோடு வாழ்ந்து, கஷ்டங்களோடு வாழ்ந்து, நிச்சயம் இறப்பு தான் பரிசு! என்பதை எல்லாம் நிச்சயம் யான் அறிவேன்.


 நிச்சயம் பின் ஈசனாக இருந்தாலும், தவறு தவறுதான் என்று நிச்சயம் சித்தர்கள் யாங்கள் உரைப்போம்.


 இப்பொழுது பின், அதாவது மனிதன் நீங்கள் எண்ணிக்கொள்ளுங்கள். நிச்சயம் தன்னில் கூட எவ்வாறெல்லாம் இருக்க போகின்றீர்கள்?? நிச்சயம்!


 இவ்வாறாகவே இதனால் பின் பார்த்து பார்த்து கவனமாகத்தான் நடக்க வேண்டும்.

 நிச்சயம் அவ்வாறாக நடக்கவில்லை என்றால், நிச்சயம் பின் ஒவ்வொரு செயலுக்கும் பின் நிச்சயம் பின் அனுபவித்து, அனுபவித்து, அனுபவித்து.


 ஆனாலும் நிச்சயம் இவ்வாறெல்லாம் பின் மனிதன் கட்டளையிட்டான். இவ்வாறாகவே நிச்சயம் கலியுகத்தில் இவ்வாறுத்தான் நடக்கப்போகின்றது என்பதை எல்லாம் யாங்கள் அறிவோம்.


 நிச்சயம் பின், அதாவது மனிதன் இவ்வாறு தான் யான் பெரியவன்!, யான் பெரியவன்! என்றெல்லாம்!!

 ஆனாலும் நிச்சயம் யாங்கள் விட்டு பின் போவதில்லை!!!!!!

. பின் பெரியவர்கள் இருக்கின்றார்கள். நிச்சயம் அவ்வாறாகவே சித்தர்கள் பின் யாங்கள் இருக்கின்றோம்.


 இவ்வாறாகவே நிச்சயம் மனிதன் இக்கலியுகத்தில் நிச்சயம் யான் பெரியவன். அதைப் பின் சாதிப்பேன் என்றெல்லாம் நிச்சயம் அனைத்தும் மனிதன் கலியுகத்தில் ஆட்சி செய்ய!!... நிச்சயம் யாங்கள் விட போவதில்லை. அறிந்தும் !!


இதனால் எங்கெங்கு அடி பலமாக விழ வேண்டுமோ, அங்கெல்லாம் நிச்சயம் விழ வைத்து. நிச்சயம் இறைவன் உண்மை.!! இதனால் நிச்சயம் இறைவனைத்தான் என்றெல்லாம் நிச்சயம் இறைவனிடத்தில் போகச் செய்வோம்.


 சரியாக நீதிபதி இறைவனே!!!

, நிச்சயம் மனிதன் இல்லை. இங்கு!!


 பின் அனைத்தும் பொய்களாக்கி, காசுகளாக்கி, காசுகளாக!!.....


 எவை பாதுகாக்க வேண்டுமோ?, அவை பாதுகாப்பதில்லை. நிச்சயம் இவ்வாறாகவே!!


 இதனால் நிச்சயம் அழகாகவே நிச்சயம் கைலாயத்திற்கு பின், கைலாயத்திற்கு பின், அதாவது அறிந்தும் அனைத்தும் உணர்ந்து கொண்டு, உணர்ந்து கொண்டே அகத்தியனும் கூட நிச்சயம் ஈசனை பார்க்கச் செல்வோம் என்றெல்லாம் கைலாயத்திற்கு!!! அழகாகவே நிச்சயம் பின், அதாவது அறிந்தும்!!

 இவ்வாறு பின் இவ்வாறாக அறிந்தும் கூட, அதாவது பின் கைலயாம் அகத்தியன் சென்று ஈசனாரே பார்த்தாயா???? அறிந்தும் கூட!!!

 ஒரு குடும்பத்தை, அதாவது உன்னையே நினைத்துக் கொண்டிருக்கையில், நிச்சயம் அறிந்தும் எவை என்று அறியவே மனிதன் இப்படி எல்லாம் செய்கின்றான் என்று.


 ஆனாலும் பின் ஈசனாரும் நிச்சயம் அகத்தியனே!!!!!!!!, உன்னாலே அங்கு பின் அனைத்தும் காக்க முடியுமே!!!!. ஏன்? என்னிடத்தில் வந்தாய்?? என்று!!

அகத்தியர்:

 நிச்சயம் கலியுகத்தின் ஆரம்பம் இப்படித்தான் இன்னும் போகப்போக, நிச்சயம் எப்படி இருக்கப் போகின்றதோ என்று நீங்கள் தான் அறிவீர்கள். அனைத்தும்!!!


ஈசனார்:

 அகத்தியனே, பின் அதாவது அனைத்தும் நீ அறிவீர்களாக!!!


அகத்தியர்:

 இருந்தாலும் தந்தை, அதாவது தந்தை சொல்ல, நிச்சயம் அனைத்தும் கேட்டுக்கொள்ளத்தான் ஆகவேண்டும் என்று அகத்தியன் கூட!!!


 இவ்வாறாக நிச்சயம் வாருங்கள். அங்கு செல்வோம், நிச்சயம் பார்ப்போம் என்னதான் நடக்க வேண்டும் என்பது. 


ஆனாலும் பார்வதி தேவியும் நிச்சயம் அறிந்தும், பின் அதாவது செல்லுங்கள், செல்லுங்கள், கருணை படைத்தவரே!! செல்லுங்கள், செல்லுங்கள்.என்று அகத்தியனிடம்!!!


 அங்கு என்னதான் நடக்கிறது என்றெல்லாம் யான் இங்கிருந்தே பார்த்துக் கொண்டே இருக்கின்றேன் என்று பார்வதி தேவியும்!!!



 இதனால் கைலாயத்திலிருந்து!!
 அறிந்தும்,
ஆனாலும் நிச்சயம் எவை என்று புரிய  நிச்சயம் ஆனாலும் பின் அதோடு நிச்சயம் நில்லாமல் நில்லாமல் அகத்தியனும் அங்கிருந்து நிச்சயம் ஒரு கல்லை எடுத்தான். நிச்சயம் அப்படியே, அதாவது பின் அப்படியே கமண்டத்தில் நிச்சயம் தன்னில் கூட பின் இட்டு அறிந்தும்,!!!
(கைலாயத்திலிருந்து ஒரு கல்லை எடுத்து தன் கமண்டலத்தில் இட்டுக் கொண்டார்)



 ஆனாலும் பார்வதி தேவியோ!!!, பார்வதி தேவியோ,!! அகத்தியனை பார்த்து!!!

 அகத்தியரே, நீர் சிறந்தவர், சிறந்தவர். நிச்சயம் ஏன்? இங்கு கல்லை எடுக்கின்றீர் என்பதை எல்லாம் நிச்சயம் யான் அறிவேன்.


குழந்தையே!!!!, இதேபோல் அனைவரையும் குழந்தையாக பார்ப்பவனே,!!!!!! கருணை படைத்தவனே!!!!, அகத்தியனே!!!!!!

அகத்தியர்:

 நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் நிச்சயம் ஆனாலும் நீங்கள் இருக்கும் இடத்தில்தான் கைலாயம் என்று அகத்தியனும் இதை தன் எடுத்து யான் அங்கே இடுவேன். நிச்சயம் அறிந்தும்,
கைலாய மலை கல்லை எடுத்து இங்கே வீசி எறிய)

 அதனால் பின் கைலாயத்தில் தவறுகள் நடக்கின்றதா?? நிச்சயம் பின் நடக்கப்போவதில்லை.!!


 இதனால் இங்கே இட்டுவிட்டால், நிச்சயம் நீங்கள் இங்கே இருப்பது போல்தான் என்று!!!.

(அதாவது கைலாய மலை போல ஊத்துமலையிலும் தவறு நடக்காமல்)

 பின் அதாவது வந்து இங்கேயே, பின் அகத்தியன் ஒரு கல்லை இட்டான்.


அக் கல் பின் இப்பொழுதும் கூட, பின் நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக கல்லும் மறைபொருளாக இருந்து, நிச்சயம் பின் பின் இங்கிருந்து, இங்கிருந்து, அதாவது இங்கு இருப்பவர்களை அனைவரையும் ஆட்டிக் கொண்டுதான் இருக்கின்றது.



 தவறு செய்தவர்களை அடியோடு பின் அழித்து, நிச்சயம் பின் நீதியாக இருப்பவர்களை மட்டும், நிச்சயம் இவ் சுற்று வட்டாரத்தில் உள்ள அனைத்தும், அதாவது இங்கிருந்தும் வடம், பின் வடக்கு, தெற்கு, நிச்சயம் மேற்கு, கிழக்கு, இவற்றை எல்லாம் சரி சமமாக, நிச்சயம் பின், அதாவது  150, பின் மைல் பின் தொலைவில், நிச்சயம் அறிந்தும், இவைதன் பின் அனைவருக்குமே இக்கல், நிச்சயம் சமமாக, சமர்ப்பணமாக அனைத்தும் வழங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.!!!


 நிச்சயம் இவ்மலையின் சிறப்பு,!!!



 அதனால் நிச்சயம் இங்கு வந்து வந்து சென்று கொண்டே இருந்தால், நிச்சயம் அவ் அறிவையும் கூட, நிச்சயம் அனைத்தும் பின் ஈந்து, அக்கல்லும், நிச்சயம் தன்னில் கூட, பின் கைலாயத்தில் இருந்து வந்ததினால், நிச்சயம் அதற்கும் பல சக்திகள் இருக்கின்றது.


இங்கு வந்து சென்று கொண்டே இருந்தாலே, நிச்சயம் பல மாற்றங்கள் உண்டு. 


அவை மட்டுமில்லாமல், நிச்சயம் அக்கல்லில் இருந்து, பின் அனைத்து இடங்களுக்கும் கூட, பின் தண்ணீர், பின் பாய்ந்து கொண்டே தான் இருக்கின்றது.!!


 நிச்சயம் அங்கங்கு, பின் நிச்சயம் பாய்ந்து கொண்டிருக்கும். பின் நிச்சயம் நீரை எடுத்து, நிச்சயம் இல்லத்தில் வைத்தால், நிச்சயம் ஈசனுடைய அருள் பரிபூரணமாக,!!!!!...

 அதாவது கைலாயத்தை, கைலாயத்தை,!!!!

(கைலாயத்தை ஒத்தது இவ் ஊத்து மலை)

 நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், எதை என்று புரிய, நிச்சயம் எவ்வாறு பின் தொல்லைகள் பின் நீங்குகின்றதோ!???, அதேபோலத்தான் தொல்லைகள் நீங்கும்.


 ஆனாலும், நிச்சயம் அவ்வாறாகவே வந்தனர். அதாவது, நிச்சயம், அதாவது, இங்கிருந்து ஈசனும், பின், அகத்தியனே, இங்கு வந்துவிட்டோம்.


 இதனால், நீரே செல்வீர், எப்படி? என்று, ஆனாலும், அறிந்தும், ஆனாலும், எப்படி, அதாவது, பின், இப்படியாக நீ செல்லக்கூடாது என்று,


 நிச்சயம், சிறுவன் வடிவில் செல்!!!! என்று என்று உத்தரவிட்டார் ஈசனாரும். 



பின், அப்படியே, அறிந்தும், அகத்தியன் சிறுவனாக, அங்கு சென்று நிச்சயம், அதாவது, அறிந்தும், அனைவரையும் கட்டிவிட்டீர்களே. யானும் இக் குடும்பத்தில் இருக்கின்றேன். என்னையும் கட்டிப் போடுங்கள் என்று அகத்தியனும், சிறு குழந்தையாக,



 ஆனாலும், பின், மீண்டும், அனைவரும் ஒன்று சேர்ந்தனர். ஒன்று சேர்ந்து, ஆனாலும், இக்குழந்தையை இதுவரை யான் பார்த்ததில்லை. யான் பார்த்ததில்லை என்று ஊரார் அனைவரும் கூட!! அறிந்தும்,


 இதனால், நிச்சயம், தன்னில் கூட, ஆனாலும், ஆனாலும், எவை என்று, ஆனாலும், மேலே இருந்தவர்கள், நிச்சயம், பின், இக்குழந்தை யார்??? என்பதை கூட,


 ஆனாலும், பின், நம்தனுக்கு, பின் நம்மை, சொந்தம் கொண்டாடுகின்றது என்று, 


ஆனாலும், அனைவரும் வந்தனர். பின், இவர்தான் என் தாய் தந்தை, என்னை விட்டுவிட்டீர்களே, என்னையும் மேலே அடையுங்கள் என்று,


 ஆனாலும், நிச்சயம், இவைதன், இக் குழந்தை உங்கள் குழந்தையா??? என்றெல்லாம் கேட்டதற்கு,!!!

 அவர்களும், இறைவா, இறைவா!! என்று, நிச்சயம், பின், சத்தம் போட்டனர்.
அதாவது, அவர்கள் மேலிருந்து,!!!


மீண்டும் அதாவது, இக்குழந்தையை, யாங்கள் கொல்லப் போகின்றோம், நிச்சயம், தன்னில்,!!

 ஆனாலும், அறிந்தும், நீங்கள், இப்பொழுது, நிச்சயம், அதாவது, இறைவன், நீங்கள் தான் என்று சொல்லிவிடுங்கள் என்றெல்லாம், நிச்சயம், கூட்டங்கள்!!,
கிராமத் தலைவனின் ஆட்கள்)
 அறிந்தும், கூட்டம், அவ் மனிதனின்,


இவர்களும் அதாவது இக் குடும்பம் ஆனாலும், நிச்சயம், யான் சொல்லப் போவதில்லை என்றெல்லாம்,!!!


 நிச்சயம், ஆனாலும், அச்சிறுவனே,!!!!!!

இவர்களை பார்த்து அவர்கள் சொல்லப் போவதில்லை, என்னை கொன்று விடுங்கள் என்று,


 ஆனாலும், அவ் மனிதனோ, பின், எவ்வளவு வீரம்,??? இச்சிறுவனுக்கு!!!!



 நிச்சயம், அறிந்தும், அதாவது, மேலிருந்து பார்ப்போரை பார்த்து உங்களுக்கு பந்த பாசங்கள் இல்லையா???


, இச்சிறுவனை, அறிந்தும், இவந்தனை கொல்லப் போகின்றோம், பின், என்றெல்லாம்,


 நிச்சயம், அறிந்தும், அறிந்தும், இதனால், பின், மீண்டும், அச்சிறுவன், அதாவது, அவர்களை நோக்கி, இவர்கள்தான், இறைவன் என்று சொல்லிவிடுங்கள் என்று,!!!!

அதாவது, பின், சிறுவன் தான், அகத்தியன் என்றெல்லாம், நிச்சயம், பின், உணர்ந்து, யாம் செப்பிவிட்டேன்,


அக் குடும்பம் ஆனாலும், யாங்கள் சொல்லப் போவதில்லை, ஏன்?, பின், மனிதன், இக்கலியுகத்தில், தரித்திரக்காரன்!!என்று மேலிருந்தே,!!


 அவன், நிச்சயம், சொல்லிக்கொண்டே இருக்கின்றான்,



 மனிதனை, ஏன்?, யாங்கள், பின், இறைவன் என்று சொல்ல வேண்டும்???????????, நிச்சயம், தன்னில்  அதாவது, சொல்ல மாட்டோம், 


நிச்சயம், இறைவன் தான் பெரியவன்!!! என்றெல்லாம், நிச்சயம், பின், அவர்களும் கூட,!!!! நிச்சயம், அழகாகவே!!!


 நிச்சயம், இறைவனுக்கும் கருணை உண்டு, நிச்சயம், எவ்வளவுதான்??? கஷ்டங்கள் கொடுப்பான், நிச்சயம், எதற்காக??, இச்சிறுவனை, நிச்சயம், இறைவனே காப்பாற்றுவான் என்று,!!


 ஆனாலும், பின், அகத்தியனும், மனம் மகிழ்ந்தான்,!! பார்ப்போம் என்று!!,


 அதாவது, எங்களை அறிந்தும், அதாவது, அறிந்தும், புரிந்தும், அதாவது, என்னை கொன்று விடுங்கள், அதாவது, மீண்டும், அக்குழந்தை, என்னை கொன்று விடுங்கள், நிச்சயம், ஆனாலும், அவர்கள் சொல்லப் போவதில்லை!!! என்றெல்லாம்


, நிச்சயம், ஆனாலும், சரி, பின். ( , கிராம தலைவன்)
மனிதன், அதாவது, பின், இக்குழந்தையை கொன்று விடுவோம் என்றெல்லாம், நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட,



 இதனால், நிச்சயம், எவை என்று அறிய, ஆனாலும், பின், அதாவது, அனைவரும் சேர்ந்து, இவ்வாறாக, எவ்வாறாகவே, நிச்சயம், தன்னில் கூட, இறக்கி, எதை என்று புரிய, மீண்டும், பின், அதாவது, மீண்டும், விளையாடுவோம், இக்குழந்தையை வைத்து என்றெல்லாம்,


 மீண்டும், பின், மேலே, அக்குழந்தையை கூட, பின், அதாவது, அறிந்தும், பின், பெரிய, பின், மரத்தடியில் கட்டி, இவர்களையும் கூட, அறிந்தும், 


அதாவது, நிச்சயம், இவ்மரத்தையே வெட்டிவிடுங்கள், நிச்சயம், அறிந்தும், அதாவது, பின், காகத்திற்கும், அதாவது, இச் சிறிவனின் உடல் காகத்திற்கும், இன்னும் பல உயிரினங்களுக்கும் கூட, நிச்சயம், பின், உணவாகட்டும் என்று,!!!


 இவ்வாறாகவே, மரத்தை, பின், தொட்டவன், நிச்சயம், பின், அப்பாலே நின்றான், !!...பல வழியிலும் கூட, பின், யாரும், அவ் மரத்தை, பின், வெட்ட முடியவில்லை, நிச்சயம்!!


, இதனால், அவன், அதாவது, மரத்தின் அடியில், நாகங்களும் கூட, பல பல,!!!


 இதனால், நிச்சயம், அவ்வாறாகவே, பின், திரிந்து, பிரிந்து, நிச்சயம்!!!(மரத்தை சுற்றி நாகங்கள்)


, இவ்வாறாக, இம்மலையிலும் கூட, பல நாக வகைகளிலும் கூட, நிச்சயம் உண்டு!!!,



 அறிந்தும், இதனால், பின், மேலிருந்து, ஆனாலும், இதை தன் அறிய, நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறாக என்றெல்லாம், நிச்சயம், ஆனாலும், அனைவரும், நிச்சயம், அப்படியே, பின், ஏற்படுத்த, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், இவ்வாறாகவே, அக்குழந்தையும் கூட, ஏன், எதற்கு என்றெல்லாம், நிச்சயம், பின், அதாவது, வெட்டிவிடுங்கள், வெட்டிவிடுங்கள் என்று, பின், சொல்ல,  ஒவ்வொருவரும் கூட செல்ல, நிச்சயம், பின், அவ் மரத்தை, பின், வெட்ட முடியவில்லையே என்று,



 ஆனாலும், நிச்சயம், உணர்ந்தான் தலைவன்,!!!

 இவ் மரத்தை, பின், வெட்ட முடியவில்லை, இதனால், அங்கிருந்து, பின், , அங்கிருந்து, இச்சிறுவனை கீழே இறக்குங்கள் என்றெல்லாம், 


பின், மீண்டும், கீழே இறக்க, நிச்சயம், அறிந்தும், அதாவது, நிச்சயம், அவர்களையும் முதலில், அதாவது, குடும்பம் இறைவன் இருக்கின்றதே, இறைவன் இருக்கின்றதே என்றெல்லாம், பின், நிச்சயம், தன்னில் சொல்ல, பின், அதாவது, பின், மீண்டும் ஒரு வாய்ப்பை தருகின்றேன், !!!


பின், நீங்கள், அதாவது, கீழே, அறிந்தும், பின், நிச்சயம் சொல்லுங்கள், இச்சிறு குழந்தையை விட்டு விடுகின்றோம்,


 ஆனால், இல்லையென்றால், மீண்டும், பின், சித்திரவதை செய்து, உங்களை சாகடிப்போம், மீண்டும், ஒவ்வொரு மரத்தடியில், மரத்தடியில் ஏற்றி, நிச்சயம், உங்களை கட்டி இட்டு, நிச்சயம், பின், அங்கங்கும், பின், சித்திரவதை செய்துதான், நிச்சயம், நீங்கள் இறக்க நேரிடும்,


 நிச்சயம், அதாவது, அப்பனே அறிந்தும், எதை என்று அறிய, ஆனாலும், அச் சிறுவனும், மீண்டும், நிச்சயம், நீங்கள் சொல்லுங்களேன், , பின், இறைவன் இல்லை என்றுதான் என்று, 



ஆனாலும், அவர்களுக்கும், அக்குழந்தையை பார்த்து, நிச்சயம், தன்னில் அறிந்தும், நிச்சயம், அனைவருக்குமே, பின், நீர் கண்ணீர் பெருகெடுத்து ஓடியது!!, நிச்சயம், தன்னில் கூட!!, 


இக்குழந்தையை, அதாவது, இறைவா!!!!!!, நிச்சயம், நீ இல்லை என்று யான் சொல்வதற்கு இல்லை, ஆனாலும், இக் குழந்தையை, பின், காப்பாற்றவே, நிச்சயம், யாங்கள் சொல்கின்றோம் என்று!!

, இறைவன்!!!...... என்று ஒரு வார்த்தை, அனைவருமே, பின், சொல்ல, நிச்சயம், அப்பொழுதே!!!!!.....


(அதாவது இறைவன் இல்லை என்ற வார்த்தையை முழுமையாக சொல்வதற்கு முன்பே)

, பின், அறிந்தும், நிச்சயம், அகத்தியன் தன் சுயரூபத்தை காட்டினான்!!!!!!!!, நிச்சயம், தன்னில் கூட,


 ஆனாலும், பின், அனைவரும் ஒன்றிணைந்து, நிச்சயம்,!!!! அகத்தியனை கட்டிப்பிடிக்க,
(குடும்பத்தினர்)

 நிச்சயம், இவர்கள் எல்லாம், நிச்சயம், என்ன செய்ய???, நிச்சயம், அறிந்தும் புரிந்தும் கூட, என்றெல்லாம்,


 இவர்களை எல்லாம் என்ன செய்யப் போகின்றீர்கள்?? என்றெல்லாம்,


அகத்தியன் நிச்சயம், நீங்கள் சொன்னால், இவர்களை அனைவரையும் கூட, பின், தூக்கிட்டு வீசி எறிந்திடுவேன் என்றெல்லாம்!!


நிச்சயம், அக் குடும்பம் அகத்தியனை பார்த்து பின், இவர்களை விட்டுவிடுங்கள், எவ்வாறெல்லாம், இவர்கள் இவ்வாறாக எல்லாம், பின், நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட, செய்தார்களே, அவர்களுக்கு தண்டனை, நிச்சயம், பின், உண்டு என்றெல்லாம்,



(கிராம தலைவன் மற்றும் சார்ந்தோர்)
நிச்சயம், அவர்களும் இக்காலத்தில் பிறந்து, பல வழிகளில் கூட, பின், தண்டனைகளை அனுபவித்து, நிச்சயம், இறைவனுக்கெல்லாம், பின், சேவைகள் செய்து கொண்டே, செய்து கொண்டே, கர்மத்தை, பின், கழித்துக் கொண்டே, கழித்துக் கொண்டே,!!!


 இதனால், பின், இதனால்தான் பெருங்கருணை, அகத்தியன்!!!
கருணை!!!!!


, நிச்சயம், தவறு செய்தவர்களையும் விட்டுவிட்டு, நிச்சயம், தன்னில் கூட,!!


 பின், ஆனாலும், நிச்சயம், பின், அதிக தவறு செய்தால், நிச்சயம், அறிந்தும், புரிந்தும், எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின், நிச்சயம், எவை என்று, தானே, தண்டனைக்கு, நிச்சயம், பின், ஒரு நாள், பின், புலப்படுவான் என்று,


 இதனால்தான், பாவம், அதனால், நிச்சயம், பின், சரி, சமமாகவே!!!!



, சிலர், நிச்சயம், இவ்வாறாகவே, இறைவனே, நிச்சயம், தன்னில் கூட, இவ்வாறாக இருக்கக்கூடாது என்று, நிச்சயம், இவ் மனிதன், நிச்சயம், அறிந்தும், புரிந்தும் கூட, பின், அதாவது, பல வழியிலும் கூட, மாற்றத்தை ஏற்படுத்த, நிச்சயம், மழையினாலும், பின், பாதிப்புகள் ஏற்பட்டு, பலர் மாய்ந்தனர், நிச்சயம்,


(அவர்களுக்கு அகத்தியர் தண்டனை தரவில்லை இறைவன் தண்டனையை வழங்கினார் மழையை வரவழைத்து)


 அவர்கள் அவ்வாறாகவே, மாண்டிட, மீண்டும் கர்மத்தை, இப்பிறப்பில், அனுபவித்து, அனுபவித்து, கொண்டேதான்,!!!


 இதனால்தான், நிச்சயம், அகத்தியன் பார்த்துக் கொண்டே இருப்பான், நிச்சயம், பாவம் செய்கின்றானா?, பின், செய்யட்டும்!!!,

 நிச்சயம், புண்ணியம் செய்கின்றானா, செய்யட்டும்,!!!!


 ஆனாலும், பாவம் ஒரு நாள், நிச்சயம், அடிக்கும், !!!


புண்ணியம் ஒரு நாள் அடிக்கும்!! என்பதை எல்லாம், நிச்சயம்!!


, அவ்வாறாகவே, அதனால்தான், இக்கலியுகத்தில், பாவங்கள் அதிகமாக, அதிகமாக, போய்க்கொண்டிருக்கின்ற பொழுது, அகத்தியன் பரிபூரணமாக இறங்கி, புண்ணியத்தில், பின், நாட்டம் செலுத்துங்கள்,!!! நாட்டங்கள் செலுத்துங்கள் என்றெல்லாம்,
 பின், மனிதனை, பின், மண்டியிட்டு, மண்டியிட்டு, நிச்சயம், பின்,!!!....

 அதாவது, பின், சாகாதீர்கள், கஷ்டத்தில் நுழையாதீர்கள், நிச்சயம், உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள் என்றெல்லாம்,!!! மக்களை எப்படி எப்படியோ, நிச்சயம்!!

மக்களை, பின், எவ்வாறாக மாற்ற வேண்டும்? என்பதெல்லாம் போராடிக் கொண்டே இருக்கின்றான்,

 ஆனால், நிச்சயம், பின், மக்களே, நிச்சயம், பின், திருந்தவில்லை என்றால், நிச்சயம், அறிந்தும் கூட, பின், அதாவது, மண்டியிட்டு விடுவதில் கூட,!!!!!


(ஒரு அளவு வரைக்கும் தான் அகத்தியர் கருணை)


 நிச்சயம், பின், அதாவது, இறைவனிடத்தில் மண்டியிட்டாலும், நிச்சயம், ஒன்றும் நடக்கப்போவது இல்லை என்று தீர்மானம், பின், அகத்தியன், பின், எடுத்துவிட்டால்!?!?!............


, நிச்சயம், நீங்கள், பின், அனைத்தும் எங்கு சென்றாலும்?!....., எத் தெய்வத்தை வணங்கினாலும்?!....., பிரயோஜனம் இல்லை,!!!


 இதனால், அகத்தியன் கருணை படைத்தவனாக, அனைவருக்கும் உதவி செய்து கொண்டிருக்கையில், நிச்சயம், பின், கர்மத்திலிருந்து எளிதாக, பின், நிச்சயம், மீண்டு வரலாம்!!!,

 அவ்வாறு மீண்டு வரவில்லை என்றால், நிச்சயம், தன்னில் கூட, பின், யாராலும் உங்களை காக்க முடியாது,!!

 நிச்சயம், பின், எதை என்று கூட, அதாவது, எதை என்று கூட, அக்குடும்பங்களும் கூட, நிச்சயம், தன்னில் கூட, இங்கே, பின், ஜீவ சமாதியாகவே இருந்து வருவோருக்கெல்லாம் ஆசிகள் கொடுத்து, நன்றாக சில கர்மாக்களையும், பின், நீக்கி, அனைவருக்கும் நல்லதாக செய்து கொண்டே இருக்கின்றது,!!


 இதனால், பல வழியிலும் கூட, பின், இது, இவ்மலை அகத்தியனுக்கு சொந்தமானது,!!!


 இதனால், பல வழியிலும் கூட, உண்மையான உள்ளவர்களுக்கு மட்டும், நிச்சயம், அனைத்தும், அகத்தியன், ஈவான்,!!!


 ஆசிகள்!!, ஆசிகள்!!, மற்றொரு தலத்திலும் வாக்கில் செப்பிக்கின்றேன், ஆசிகள்.




ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

ஊத்துமலை அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில்
ஊத்துமலை முருகன் கோயில் சேலம் மாவட்டத்தில் சீலநாயக்கன்பட்டி, ஊத்துமலையில் அமைந்துள்ளது. இத்தலம் சுமார் 1000 – 2000 வருடங்கள் பழமை வாய்ந்தது.
திறக்கும் நேரம்:    

காலை 6 மணி முதல் 11 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

முகவரி:  

அருள்மிகு பால சுப்பிரமணியர் திருக்கோயில், சீலநாயக்கன்பட்டியில், ஊத்துமலை- சேலம் மாவட்டம்

இருப்பிடம் :
சேலத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் சீலநாயக்கன்பட்டி பைபாஸ் அருகே அமைந்துள்ளது ஊத்துமலை முருகன் கோயில்.

அமைதியான சூழலில், பசுமையான மரங்கள் சாமரம் வீச, சித்தர் பெருமான்களின் சுவாசம் நிறைந்த ஊத்துமலையின் சிறப்பு அம்சமாகத் திகழ்கிறது, அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்ட ஸ்ரீசக்கரம்.முனிவர்களில் மாமுனிவரான அகத்தியரால், ஊத்துமலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் ஸ்ரீசக்கரம், ஸ்ரீசக்கர தேவியாக இருந்து அருள்பாலிக்கிறது.ஸ்ரீசக்கரம் உள்ள பாறையை அடுத்துள்ள குகையில் அகத்தியர் மற்றும் போகர் முதலான சித்தர்கள் அமர்ந்து தவம் செய்தனர். இங்கு அவர்களால் உருவாக்கப்பட்ட மூலிகை ஊற்றுநீர், இன்று வற்றாத மூலிகை நீராக மக்களின் நோய்களைத் தீர்த்துக் கொண்டுள்ளது. மேலும் சப்தசாகரம் என்றழைக்கப்படும் ஏழுவிதமான மூலிகைகள் கலந்த சுனைகள், தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்பு போன்ற பலவிதமான நோய்களைப் போக்கும் ஆற்றலுடையதாக திகழ்கிறது.ஆலய தல விருட்சங்களாக நாவல் மரமும், அரசமரமும், மருதமரமும் உள்ளன.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: