​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 13 November 2025

சித்தன் அருள் - 1995 - அன்புடன் அகத்தியர் - திருவண்ணாமலை வாக்கு - 2






அன்புடன் அகத்திய  மாமுனிவர் உரைத்த வாக்கு 

02.11.2025 - திருவண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 2

================================================
# அன்புடன் அகத்திய  மாமுனிவர் வாக்கு - பகுதி 2
================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- அப்பனே, அம்மையே, அழகாக உரைத்தேனே. அறிந்தும் இவை தன் புரிய நிச்சயம் தன்னில் கூட மேலோர்கள் பலர் இறைவனை உணர்ந்தனர். 

அம்மையே, அப்பனே, அறிந்தும் கூட இதைத்தன் உருவாக்கிய மனிதனால் பீடை அறிந்தும், இதைத்தன் தத்துவம் அறிந்தும் கூட, அவை தன் பின் காலங்களாக எவை என்று அறிய, இறைவன் நிச்சயம் அமைதி காத்தாலும், அவை வெடிக்க அறிந்தும் கூட, தயாராக இருக்கின்றது. 

இதனால் பல வகையிலும் கூட, அவை தன் நிச்சயம் தன்னில் கூட, அதில் இருக்கும் கசிவு நிச்சயம் மேகத்தை கூட பலத்த மழை அறிந்தும் எவை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இறைவன் அமைதி காக்கிறார், நேரடியாக கஷ்டங்களை தரவில்லை. ஆனால் மனிதன் உருவாக்கிய செயல்கள் அல்லது சூழ்நிலைகள், பெரும் சோதனைகளை ஏற்படுத்துகின்றன. அதனால், இறைவனின் அமைதி இருந்தாலும், மனிதனின் செயல்கள் தான் கஷ்டங்களை உருவாக்குகின்றன.)  

===========================
# அணு உலை - ஆபத்து 
===========================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இதைத்தன் உணர எவ்வாறு என்பதை எல்லாம் அறிந்தும், பல பல வழிகளில் கூட, இதன் தத்துவம் பின் அறிவில் வழியாகவே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( இறைவன் சில நேரங்களில் கஷ்டங்களை ஏற்படுத்தினாலும், அதற்கான தீர்வையும் தருவார். ஆனால் மனிதன் அறிவியலால் உருவாக்கிய ஒரு பெரிய அணு உலை, வெடிக்க தயாராக உள்ளது. அதில் ஏற்படும் கசிவு, மேகங்களை தாக்கும் போது தீவிர மழை, புயல் போன்ற இயற்கை மாற்றங்களை ஏற்படுத்தும். )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எப்படி மனிதன் தயாரித்தானோ, அது எவை என்று அறிய புரியாமல், பின் திறந்து, பின் அவை அவனுக்கு தெரியும், வெடிக்கப் போகின்றது என்று. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( மனிதன் உருவாக்கிய ஒரு அணு உலை வெடிக்கப்போகிறது என்பது அவனுக்கே தெரியும். அந்த செயல் மீண்டும் திரும்ப முடியாது; ஒருமுறை தொடங்கினால் அதை நிறுத்த முடியாது. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இதைத்தன் இன்னும் எவ்வாறாகவே மனிதனை விட்டுவிட்டால், மனிதன் நிச்சயம் அறிந்தும் கலியுகத்தில் அனைத்தும் செய்வான். அதனால்தான் மனிதனின் இன்னும் கஷ்டங்கள் யாங்களே கொடுப்போம். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( மனிதனை விட்டுவிட்டால், அவன் மேலும் அழிவை ஏற்படுத்தக் கூடிய புதிய விஷயங்களை கண்டுபிடிப்பான். அதனால், அவனை விட்டுவிட முடியாது. இனிமேல் இறைவனே நேரடியாக கஷ்டங்களை ஏற்படுத்துவார், ஏனெனில் மனிதனின் செயல்கள் இறைவனின் கட்டுப்பாட்டை மீறுகின்றன. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- அறிந்தும் எதற்காக நீங்களே இப்படி சொல்லிவிட்டால் என்று, அப்பனே, நீங்களும் கேட்கலாம். 

==========================================================
# இனி வரும் காலங்களில் வேலை நிச்சயம் இயந்திரங்களால்
==========================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- அறிந்தும், அதாவது இன்னும் புது புதுமையான எதை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட, பின் பணம் வேண்டும் அனைவருக்கும், ஆனாலும் வேலைக்கு செல்ல வேண்டும். அவ்வேலை நிச்சயம் இயந்திரங்களாலே. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (அடுத்ததாக மனிதன் உருவாக்கப்போகும் விஷயம் — பணம் இல்லாமல் வேலை செய்ய வைக்கும் சூழ்நிலை. வேலைக்கே போக முடியாத நிலை உருவாகும், ஏனெனில் எல்லாவற்றையும் இயந்திரங்கள் (மிஷின்கள்) செய்யத் தொடங்கும். அப்பொழுது மனிதன் என்ன செய்வான் என்பது கேள்வியாகிறது. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- அறிந்தும் இன்னும் ஒரு மேலை நாடுகள் தன் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், நிச்சயம் தன்னில் கூட என்று எண்ணிக் கொண்டிருக்கின்றான். இதைத்தன் அனைத்தும் எவை என்று அறியக் கூடி. 


அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இதனால் தூவி விட போகின்றான். பின் அறிவிரவிலே அனைவருக்கும் அவை தன் பாதிப்பு இறக்கப் போகின்றான். பல கோடி. 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- (மனிதன் உருவாக்கிய ஒரு விஷயம், ஒரு சக்தி வாய்ந்த பொருள் - தூவி விடப்படலாம். அதன் தாக்கம் உலகம் முழுவதும் பல கோடி மக்களை பாதிக்கும். இது மனிதனால் திட்டமிட்டு தயாரிக்கப்பட்டது, ஆனால் அதன் விளைவுகள் கட்டுப்பாட்டை மீறி பெரும் அழிவை ஏற்படுத்தும். )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இதைத்தன் உணர அனைத்தும் ஏனென்றால் மனிதனிடத்தில் விட்டுவிட்டால், இப்படித்தான். 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இன்னும் எவை என்று அறிய, அதை நிச்சயம் எரிய, பின் நிச்சயம் பின் தத்துவங்களாக பேசிக்கொண்டே இருக்கின்றார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம்  :- ( மனிதன் தத்துவங்கள், சமவிகிதங்கள் (equations) மூலம் ஒரு விஷயத்தை உருவாக்கியுள்ளார். அது எப்படி தாக்கும், எப்படி தாக்காது என்பதையும் கணக்கிட்டு திட்டமிட்டுள்ளார். ஆனால், அந்த திட்டம் மனிதனை பாதிக்காமல் இருக்குமா என்பது கேள்விக்குறி. இதைச் சிந்திக்கச் சொல்லுகிறார் — “ஐயா, புரியுதுங்களா? ) 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இதை அறிவித்து, இதை தடுத்தாலே, அறிந்தும் வெடிக்க இன்னும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும், அதற்குள்ளே நிச்சயம் தன்னில் கூட ஆனாலும், ஏற்கனவே எதை என்று அறிய, காற்றின் வேகம் அதிக ஆனாலும், நிச்சயம் கடந்துவிட்டோம். ஒன்றை 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆல்ரெடி. இதுக்கு முன்னாடி. ஒரு அழிவை கடந்து, ஒரு அழிவை சந்திச்சிருக்கணும். ஆல்ரெடி ஒரு அழிவை சந்திச்சிருக்கணும். தப்பிச்சுட்டோம் என்கின்றார். 

==============================================================
#உங்களுக்குள் வெளிப்படும் கோடிக்கணக்கான சிறு சிறு துகள்கள்
===============================================================
================================
# வாய்ப்பாடு நமச்சிவாயமே. 
================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- எதை அறிவித்து, அப்பா, அம்மா, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, பின் உங்களிடம் கூட அறிந்தும், எதை என்று அறிய ஆனாலும், இப்படியும் எடுத்துக்கொள்ளலாம். அறிவிலும் இறைவனும் ஒன்றென்று ஆனாலும், உங்களுக்குள் வெளிப்படும் கோடிக்கணக்கான சிறு சிறு துகள்கள், நிச்சயம் தன்னில் எதை என்று அறிய, இவ்வாறாக எதை என்று அறிய, இதற்கு பின் வாய்ப்பாடு நமச்சிவாயமே. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம்  :-  ( மனிதன் அறிவியலால் உருவாக்கிய சக்தி வாய்ந்த அணு உலைகள், வெடிக்க தயாராக உள்ளன. அவை வெடிக்கப்போகும் என்பதை மனிதன் அறிந்திருந்தாலும், அதை தடுக்க முடியாத நிலையில் இருக்கிறான். இந்த அணு உலைகளில் ஏற்பட்ட கசிவு, இயற்கை சீற்றங்களை (மழை, புயல், மின்னல்) தூண்டக்கூடியதாக உள்ளது.
இதே நேரத்தில், “”நமச்சிவாய மந்திரம்”” உடலில் உள்ள அணுத்துகள்களை அதிரவைக்கும் அளவுக்கு சக்தி வாய்ந்தது என கூறப்படுகிறது.
மேலும், சில மேலை நாடுகள் உலக மக்களை கட்டுப்படுத்த புதிய அழிவுகளை உருவாக்கி வைத்திருக்கின்றன. அவற்றின் தாக்கம் கோடி கோடியான மக்களை அழிக்கக்கூடியது. சில அழிவுகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்பட்டாலும், அடுத்த கட்டம் இன்னும் வரப்போகிறது. )
========================================================
# இறை பக்தியை அழிக்க - ஒரு வாய்ப்பாடு தயாரிப்பில் 
========================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதை அறிவித்து, பக்தி எவ்வாறு எங்கு உள்ளதோ, அங்கு நிச்சயம் பிழைத்துக் கொள்வார்கள். நிச்சயம் வசியமாகும் அனைத்தும் என்று அவ்வக்தியை கீழ் நோக்கி பார்க்க, மேலோர் நிச்சயம் அதற்கும் வாய்ப்பாடை தயாரித்து, பின் ஏவி விடப் போகின்றார்கள். 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம்  :-  (அகத்தியர் கூறுகிறார், உலகத்தில் ஒரு ஆன்மீக பூமி உள்ளது. அந்த பூமியில் பக்தி அதிகமாக இருந்தால், அந்த பக்தியுள்ளவர்கள் பாதுகாப்பாக இருப்பார்கள். பக்தி உள்ளவர்கள் நிச்சயம் பிழைத்துக் கொள்வார்கள். பக்தியில் உள்ளவர்களுக்கு நிச்சயம் வசியமாகும் அனைத்தும்.  ஆனால், சில மேலை நாடுகள் அந்த பக்தியை அழிக்க முயற்சி செய்கின்றன. அவர்கள் பக்தி அதிகம் உள்ள இடங்களை குறிவைத்து, அதனை அழிக்க ஒரு ஃபார்முலாவை உருவாக்கியுள்ளனர். நம் நாடுகளில் பக்தி மிகுந்து காணப்படுவதால், அவை இலக்காகின்றன. இதனால், பக்தியை பாதுகாக்கும் முயற்சி அவசியமாகிறது. இல்லையென்றால், உலகம் சீக்கிரம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கப் போகிறது) 
====================================================================
# இறைவனே வணங்க விடாது - கம்ப்யூட்டர் உயர் தொழில்நுட்பங்கள்
===================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  அறிந்தும் எதனாலே நிச்சயம் தன்னில் கூட, பின் (கம்ப்யூட்டர்) கணினி தன்னில் அறிந்தும் எதை எதையோ பரப்பி, நிச்சயம் தன்னில் கூட இறைவனே வணங்கக்கூடாது என்று செய்து கொண்டிருக்கின்றான். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்  உரையின் சுருக்கம்  :- ( கம்ப்யூட்டர் மற்றும் அதனுடன் தொடர்புடைய (AI போன்ற)  உயர் தொழில்நுட்பங்கள் மனிதனின் அறிவை அதன் உள்ளே புகுத்துகிறான்.  இதனால், தொழில்நுட்பத்தில் ஈடுபட்டவர்கள் மனதளவில் மாற்றமடைந்து, இறைவனை நம்பும் பக்தியை இழக்கக்கூடும். இறைவன் இருக்கிறார் என்ற நம்பிக்கையை மறந்து விடும் நிலை உருவாகிறது. இது ஒரு ஆழமான ஆன்மீக எச்சரிக்கையாகவும், அறிவியல் வளர்ச்சியின் தாக்கத்தை சுட்டி காட்டுவதாகவும் உள்ளது )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- எது என்று அறிய, ஆனால் அது அழிவு என்று அவனுக்கு தெரியாது. காசுகள் வருகின்றதே என்றுதான். இதுதான் படிப்பா, நாகரீகமா? என்ன. 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம்  :- (நாம் அறியாமலே கம்ப்யூட்டர் மற்றும் அதனுடன் தொடர்புடைய படிப்புகளை தேர்வு செய்கிறோம். குருநாதர் கேள்வியை எழுப்புகிறார் - பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், அந்த கல்வி நம்மை அழிவின் பாதைக்கு அழைத்துச் செல்கிறது. இது உண்மையான கல்வியா? நாகரீகமா?  )

============================================================
#  கம்ப்யூட்டர் வேலை - வாழ்க்கை ஒருவருக்கும் சரியில்லை. 
============================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- முக்கால் பங்கு இப்படியே அழிந்துவிட்டது. (கம்ப்யூட்டர்) கணினியில்  பின் உட்கார்ந்து , உட்கார்ந்து  வாழ்க்கை ஒருவருக்கும் சரியில்லை. 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம்  :- ( 90% கணினி முன் தொடர்ந்து உட்காரும் வாழ்க்கை ஒருவருக்கும் சரியில்லை,  நன்மை தரவில்லை. சாஃப்ட்வேரில் பணம் இருந்தாலும், மனநிலை, உடல் நலம், வாழ்க்கை—all பாதிக்கப்பட்டுள்ளன. எல்லாம் பிரச்சனைகளாக மாறி, பலர் சோர்ந்து அழிந்து போயிருக்கிறார்கள். இறுதியில், குருநாதரிடம் நம்பிக்கையே ஒரே ஆதாரம். )

=================================================================
#  கம்ப்யூட்டர் வேலை - “அவர்கள்  இறைவனிடம் வரமாட்டார்கள்”  
================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  அவனை வரச் சொல் பார்ப்போம். எது என்றது? இறைவனை நாடி முடியாது. அவன் வரமாட்டான்.

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- (  கம்ப்யூட்டரை அதிகமாக பயன்படுத்தும் போது, மனிதன் தனது அறிவை மெஷினுக்கே அடமானமாக கொடுத்து, இறைவனிடம் இருந்து விலகி விடுகிறான். மேலை நாடுகள், இந்திய தேசம் ஆன்மீகத்தில் உயர்ந்து விடும் என்பதை உணர்ந்து, அறிவை இயந்திரத்தில் செலுத்தும் வழியாக, இறைவனை நம்ப முடியாத சூழ்நிலையை உருவாக்கி விட்டன. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இன்னும் பின் பிள்ளைகளே, அறிந்தும் எது என்று அறிய, மீண்டும் பணத்தை எடுத்து வருவான். நிச்சயம் மனதை சாய்க்க, பணம் தான் மூலாதாரம். நிச்சயம் ஏமாற்றுவான். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( இன்றைய சூழலில், மக்கள் பக்திக்கு வராமல், கம்ப்யூட்டர் மூலம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சூதாட்டங்களை பயன்படுத்துகிறார்கள். ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் ஐடி வேலை மாதிரி தோற்றம் கொடுத்து, இறைவனை மறக்கச் செய்கின்றன. இது உள்ளும் புறமும் தீவிரமாக பரவி வருகிறது. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் பார்த்துக்கொண்டு, இதனால் நிச்சயம் தன்னில் கூட, பின் இவைதன் மாற்ற வேண்டும். நிச்சயம் இவ்வுலகத்தில். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( கம்ப்யூட்டர் உலகம் வந்ததால், மனித அறிவு மங்கிவிட்டது. இளைஞர்கள் இறைவனை வணங்க மறுக்கின்றனர். இது அழிவை நோக்கி செல்லும் பாதை. குருநாதர் அகத்தியர் கூறியது போல, பெற்றோர் எதை செய்கிறார்களோ, அதையே பிள்ளைகள் பின்பற்றுவார்கள். நல்லதை கற்றுக் கொடுத்தால் நல்ல வாழ்வு, இல்லையெனில் தீய பாதை. இதை மாற்ற வேண்டும். ) 

===============================================================
#  நமது முதல் அதிர்ஷ்டமான  “பக்தியை” மற்ற மாபெரும் “சதி” 
===============================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  அறிந்தும் இதனால் நிச்சயம் அவன்தன் இவ்வாறாக பக்தி மயத்தை மாற்ற வேண்டும் என்று மேலோன் வழி. இதனால் எதை என்று அறிய தலைகீழாகும் பக்தி. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( நம் நாடு ஒரு ஆன்மீகமாக உயர்ந்த நாடாக மாறிவிட்டால், வெளிநாட்டு சக்திகள் அதை தடுக்க முடியாது என்பதால், அவர்கள் திட்டமிட்டு பக்தி, செழிப்பு, இயற்கை வாழ்வை அழிக்க முயன்றனர். அகத்தியர் சித்தர்கள் இதை முன்பே எச்சரித்துள்ளனர். 500–600 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் ஆனந்தமான வாழ்க்கையை பார்த்து பொறாமைப்பட்டு, பிரிவினை, ஆட்சி, மற்றும் தொழில்நுட்பங்களை கொண்டு வந்து இந்தியர்களை அடிமைப்படுத்தினர். இன்று கூட அந்த மயக்கம் கம்ப்யூட்டர் மூலம் தொடர்கிறது. இதை மாற்றவில்லை என்றால், நாமும் நம் பிள்ளைகளும் அழிவை நோக்கிச் செல்ல நேரிடும்.) 

==============================================
#            திருமணம் ?               பிள்ளை வரங்கள் ?
==============================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  அறிந்தும் இதனால் பின் அனைவருமே எங்களுக்கு திருமணம் வேண்டும் என்று நிச்சயம் பின் நடக்காது. பிள்ளை வரங்கள் நிச்சயம் அதிலிருந்து கெடும், அதிலிருந்து வரும். நிச்சயம். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- (  திருமண வாழ்க்கை தேவையா என்ற கேள்விக்கு, அதற்கான முடிவுகள் ஏற்கனவே கம்ப்யூட்டர் உலகத்தில் நிர்ணயிக்கப்பட்டு விட்டது. தொழில்நுட்பம் மூலம் அனைத்தும் ஸ்டோரேஜ் செய்யப்பட்டு, இயற்கையான திருமணங்கள் குறைந்து, குழந்தைகளின் பிறப்பும் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இது எதிர்கால சந்ததிக்கு ஆபத்து. )

========================================================
#               (AI) மனித வாழ்க்கையை பைத்தியமாக….
========================================================

=======================================================
#    (AI) - பிள்ளைகள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள்.
=======================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-   அறிந்தும் இவைத்தன் நிச்சயம் பைத்தியமாக பேசுதல் நிச்சயம். பின் யார் சொல்லாமை, பின் நிச்சயம் கேட்கவும் மாட்டார்கள். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( அடுத்த கட்டமாக, ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI) மனித வாழ்க்கையை முழுமையாக மாற்றப்போகிறது என்று எச்சரிக்கையாக கூறப்படுகிறது. தெரிந்தவர்களுக்கு இது தெளிவாக புரியும்; தெரியாதவர்கள் இதைப் படித்து உணர வேண்டும். அடுத்த 20 ஆண்டுகளில், AI மனிதர்களின் இயற்கை வாழ்க்கை முறையை மாற்றி, குழந்தை பிறப்பும் பாதிக்கப்படும் என்ற ஆழமான கவலை வெளிப்படுகிறது. ) 

=======================================================
#    (AI) - அபாய எச்சரிக்கை - 1 அல்லது 2 வருடங்களில் …….. 
=======================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-   அறிந்தும் 20 வருடத்திற்கு இவன் போய்விட்டான். அப்பா, இன்னும் ஒரு வருடமோ, ஈர் வருடமோ? 

சுவடி ஓதும் மைந்தன் :- நீ 20 வருஷத்துக்கு எல்லாம் போகாதப்பா. இவன் 20 வருஷம் எடுத்துட்டு போயிட்டாரு. இன்னும் ஒரு வருஷம், ரெண்டு வருஷம் தான் இருக்குது. முடிஞ்சு போச்சு, முடிஞ்சு போச்சு.

======================================================================
#    (AI) - வேலை , பணம் , உணவு , சந்தோஷம்  இல்லாத சூழல் இனி வரும்  
======================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-   எதை என்று அறிய மீண்டும் இறைவனை நீங்கள் கேட்கப் போகின்றீர்கள். வேலை இல்லையே, அறிந்தும் பணம் இல்லையே. பின் சந்தோஷத்தை கேட்கப் போகின்றீர்கள். தேவையா இது? 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-   எதை என்று அறிய, அறிய உணவுக்காக. இதனால் இவன் நாட்டையே நிச்சயம் தன்னில் கூட அழித்துவிடும். பின் எதை என்று அறிய, அறிய என்ற இளைஞர் கூட்டம் அப்படி காணப்படுகின்றது. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( இளைஞர்கள் வழியாக நாட்டை அழிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மனிதன் இறைவனை விட்டு, ஆட்சியை கைப்பற்றி, தேசத்தையும் மக்களையும் தவறான பாதையில் நடத்துகிறான். இதை மாற்ற, மக்கள் இறைவனை உணர வேண்டும் என்பதற்காக கூட்டு பிரார்த்தனை முக்கியமாக வலியுறுத்தப்படுகிறது. இது ஒரு ஆன்மீக எழுச்சி — மக்கள்  “நாங்க விடமாட்டோம், மக்களை மாற்றுவோம்” என்ற உறுதியுடன் மக்கள் இறைவனிடம் திரும்ப வேண்டும். ) 
=============================================================
# (AI) - இதில் யாரை நீங்கள் குறை சொல்லப் போகின்றீர்கள்?
============================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-   இதில் எவை என்று அறிய, யாரு யாரை நீங்கள் குறை சொல்லப் போகின்றீர்கள்? நீங்களே சொல்லுங்கள், 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- (  இது ஒரு ஆழமான சமூக மற்றும் ஆன்மீக விமர்சனம். இதில் யாரையும் தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை. காரணம், மூலக் காரணம் கம்ப்யூட்டர் மையமயமாக்கம்.
அதாவது, தொழில்நுட்பத்தின் மூலம் வாழ்க்கை முறைகள், கல்வி, திருமணம், குழந்தை பிறப்பு—all திட்டமிட்டு மாற்றப்பட்டுள்ளன.
இது ஒரு பெரிய திட்டம்:-
பணம், சம்பளம், வெளிநாட்டு ஆசை மூலம் இளைஞர்களை வழிமாற்றுவது
கம்ப்யூட்டர் சார்ந்த படிப்புகள் மூலம் எதிர்கால சந்ததியை இயற்கையிலிருந்து விலக்குவது
மற்ற தொழில்கள் அழிந்து, பணம் மட்டுமே முக்கியமாய் மாறுவது
இதில் யாரும் குற்றவாளி இல்லை; அமைப்பே திட்டமிட்டது. ஆனால், இதை உணர்ந்து மாற்றம் கொண்டு வர வேண்டியது நம்முடைய பொறுப்பு. ஆனால் சித்தர்கள் விடமாட்டார்கள். இறை பலன் நாம் பெற, கூட்டுப் பிரார்த்தனை மிகவும் அதி மிக அவசியம்.  )

=================================================================
#     கணினி  பாதிப்பு - பரிகாரம் சொன்னாலும் என்ன பிரயோஜனம்? 
=================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-   இதை அறிவித்து, இவ்வாறாக விட்டுவிட்டு, பரிகாரம் சொன்னாலும் என்ன பிரயோஜனம்? 

சுவடி ஓதும் மைந்தன் : இதெல்லாம் உங்களுக்கு சொல்லாம, பரிகாரம் செஞ்சாலும் பிரயோஜனம் இருக்காது. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எதை என்று அறிய, விளையாட்டாக இறைவனை வணங்குவான். வருங்காலத்தில். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( இறைவனை வணங்கும் ஆன்மீக பயணம், இப்போது பொழுதுபோக்காக மாறிவிட்டது. மக்கள் கோயிலுக்கு பிக்னிக் போகும் போல், டைம் பாஸ் செய்யும் போல் செல்கிறார்கள். வீட்டில் யாரோ சொன்னதால் மட்டும் கோயிலுக்கு போய் வருவது போல ஆன்மீகம் ஆழமின்றி, மேலோட்டமாக நடந்து வருகிறது. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதைத்தன் எவராலும் கட்டுப்படுத்த முடியாது. இதனால் இதற்கு தகுந்த நிச்சயம் எதை என்று அறிய, பின் அழிவே, அழிவே ஒன்று. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( மனிதன் திருந்த வேண்டிய கட்டத்தில் இல்லை என்றால், இறைவன் அழிவுகள் மூலம் பயத்தை உருவாக்கி மாற்றத்தை ஏற்படுத்துவார். காரணம், இறைவன் மீது உள்ள பயம் இழந்துவிட்டது. அந்த பயம் திரும்ப வேண்டும். பயம் இல்லாமல் ஆன்மீக விழிப்புணர்வு வராது. அதனால், அழிவுகள் ஒரு எச்சரிக்கையாக, மாற்றத்துக்கான தூண்டியாக வரப்போகின்றன. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதனாலே அறிந்தும், பின் எவை என்று அறிய, நிச்சயம் உச்சகட்டத்தில் இறைவனும் கூட அறிந்தும், இதனால்தான் பின் மனதை குளிர்விக்க, நிச்சயம் தன்னில் கூட கூட்டு பிரார்த்தனை என்றெல்லாம். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( இறைவன் மனிதர்களின் செயல்களைப் பார்த்து, உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்பதால், இனி விட்டுவிடக்கூடாது என சித்தர்கள் முடிவெடுத்துள்ளார். இதை மாற்ற, சித்தர்கள் இறைவனிடம் மன்றாடி, மிகப்பெரிய வரம் பெற்று, கூட்டு பிரார்த்தனை என்ற நிகழ்ச்சியின் மூலம் மனிதர்களை மாற்ற முயற்சி செய்கிறார்கள். இது ஒரு ஆன்மீக எழுச்சி, மனிதனின் மனதையும் செயலையும் திருத்தும் முயற்சி. )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- இவைதன் பின் இப்பொழுதும் எல்லை கடந்து தான் சென்று கொண்டே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன்   :-  இப்பவும் எல்லை கடந்து தான் போயிட்டு இருக்கு. கண்ட்ரோல்ல இல்ல, உலக அழிவுகள் வந்து நோக்கி தான் போயிட்டு இருக்கு. பட் இருந்தாலும், ஒரு சிறு முயற்சியை நாங்க ஆரம்பிச்சிருக்கோம் என்றாங்க. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  கற்றவனுக்கு பின் செல்வம் எதை என்று அறிய, சென்று செல்ற இடமெல்லாம் நிச்சயம் சிறப்பு என்ற பழமொழியும் போய்விட்டது. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- கற்றவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, அப்படின்னு ஒரு பழமொழி இருக்கு. அந்த பழமொழி இப்ப எல்லாம் செல்லாதுப்பா, அப்படின்றாங்க. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  போய்விட்டு பாவம் என்று வந்துவிட்டது. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- (பாவம் செய்தவனுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்று வந்துவிட்டது)


=======================================================================
#     கல்விக்கரசி சரஸ்வதி தேவி - யாருக்கும் இனிமேல் கல்வி வழங்காது.
=======================================================================


அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதனால் நிச்சயம் தன்னில் கூட கல்விக்கரசி எதை என்று அறிய, சரஸ்வதி தேவியே  யாருக்கும் இனிமேல் கல்வி வழங்காது. சரியாக முறையில். 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( கல்விக்கரசி , கல்வியின் தெய்வம் சரஸ்வதி தேவி என்றாலும், இனிமேல் தேவையான அறிவு வழங்க மாட்டார்கள்.. அதிகமான அறிவு மனிதனை அபாயகரமான , தனக்கு தானே அழிவை ஏற்படுத்தும்  சிந்தனைக்கு தூண்டுவதால், அதை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கல்வி, கலை, அறிவு எல்லாம்  இனி வரும் களங்களில் குறைக்கப்படும். இதன் விளைவாக, மனிதன் சுய சிந்தனையின்றி “5 அறிவு ஜீவராசிகள்  மாதிரி” வாழும் நிலைக்கு தள்ளப்படுவான் என்பதே இந்த உரையின் எச்சரிக்கை )

=========================================================================
#    செல்வத்துக்கு அதிபதி  லட்சுமி தேவி  -  வேலை வாய்ப்பை குறைபார்கள்.
=========================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  செல்வத்துக்கு அதிபதி எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் புரியுமா? அப்பா, 

சுவடி ஓதும் மைந்தன் :- செல்வத்துக்கு அதிபதி யாருன்னு தெரியுமா? லட்சுமி தேவி. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எதை என்று அறிய, பின் வேலையும் குறைவு எதை என்று அறிய. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( வேலை குறைந்தால், பணம் வராது. பணம் இல்லாமல் வாழ்க்கை சிக்கலாகும். செல்வத்தின் அதிபதி லட்சுமி தேவி என்றாலும், அவளது அருளும் குறையும். காரணம், நிச்சயமான புரிதல் இல்லாமல், மனிதன் தன்னுடைய செயல்களால் செல்வத்தை இழக்கிறான். வேலை குறைவதும், செல்வம் குறைவதற்கான அறிகுறி. ) 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எவை என்று அறிய, அனைத்தும் எதை என்று. அதனால் மனிதனிடத்தில் கொடுத்தால், இப்படித்தான் பயன்படுத்திக் கொள்வானா என்ன?. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- (  மனிதனிடம் ஆட்சி கொடுத்தால், அதை தவறாக பயன்படுத்தி அழிவை நோக்கி செல்கிறான். “வாழ்வீங்க” என்று இறைவன் நம்பி கொடுத்த அதிகாரம், மனிதன் அழிவுக்கான வழியை உருவாக்கும் வகையில் பயன்படுத்துகிறான். இதுவே இந்த உரையின் கேள்வி.) 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  அப்பனே, அம்மையே, பின் நிச்சயம் தன்னில் கூட யாரிடம் குறை இல்லை. இளைஞர்களிடத்திலே குறை, 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( இன்றைய இளைஞர்கள் தவறான பாதையை தேர்ந்தெடுத்து செல்கிறார்கள். அவர்களை தனிப்பட்ட முறையில் குறை சொல்ல முடியாது, ஆனால் இளைஞர் கூட்டம் முற்றிலும் தவறான வழியில் சென்று கொண்டிருக்கிறது. கல்வி, வாழ்க்கை, மற்றும் தேர்வுகள்—all தவறான நோக்கத்தில் நகர்கின்றன. இது ஒரு சமூக எச்சரிக்கை: இளைஞர்களை நேர்மையான வழியில் திருப்ப வேண்டிய அவசியம். ) 
அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எதை என்று அறிய, சரியாக புரிந்து கொண்டான். நிச்சயம் இதற்குப் பின் ஒரு நாடு கெடுவதற்கு எதை என்று புரியும். ஆனாலும், அனைத்தும் சொந்தம் தான் எங்களுக்கு. ஆனாலும், நிச்சயம் பின் நுழைத்து விட்டான். ஒன்றும் செய்ய முடியாமல் போய்க்கொண்டிருக்கின்றது. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( நம் நாடு ஒரு ஆன்மீக நாடாக இருந்தாலும், இப்போது அதன் இளைஞர் சக்தி, கணினி மூலம் , AI மூலம்  தவறான பாதையில் செலுத்தப்பட்டு விட்டதாக உரைக்கின்றார்கள்.  நாட்டின் வளர்ச்சி, குறிப்பாக ஜிடிபி வளர்ச்சி, இளைஞர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக வைத்து பேசப்படுகிறது. ஆனால் அந்த இளைஞர்களின் மூளையை “காலி” செய்து , அதாவது அவர்கள் சிந்தனையை / மூளையை  கணினி மூலம் அடிமைப்படுத்தி தவறாக கையாளப்பட்டு ,  அவர்கள் தனது மூளையை பயன்படுத்தாமல், சுய சிந்தனையின்றி, பெற்றோர் பேச்சைக் கேட்காமல், தங்களுக்குப் பிடித்ததை மட்டும் செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இது திட்டமிட்ட ஒரு செயலாகவும், உலக அளவின் ஆன்மீக வளர்ச்சியைத் தடுக்க உருவாக்கப்பட்ட ஒரு சூழ்ச்சியாகும்.  இது ஒரு சமூக மற்றும் ஆன்மீக எச்சரிக்கை: இளைஞர்களின் எண்ணிக்கை அதிகம் இருந்தாலும், அவர்கள் சிந்தனையற்ற நிலையில் இருந்தால், அது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக மாறும். )
===================================================================
# தர்மத்தில் நன்கு வாழ - வாய்ப்பாடுகள் மூலம்  நீங்களும் வெல்க 
===================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  நிச்சயம் தன்னில் கூட இதற்கு வாய்ப்பாடுகளை உங்களுக்கு சொல்லிக் கொடுப்போம். வருங்காலத்தில் நீங்களும் வெல்க. ஏனென்றால், இவ் வாய்ப்பாடுகள் எல்லாம் நிச்சயம் நாங்கள் சுவடிகள் எழுதி எழுதி அழகாக. ஆனால் மேலோர் திருடிவிட்டு அறிந்தும் காசுக்காக ஒரு நாணயத்திற்காகவே. 
சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( இன்றைய அழிவுகளிலிருந்து மனிதனை காக்க, சிலர் தீர்வுகள் மற்றும்  அழிவை தடுக்கும் மந்திரங்களும்,  நன்மை அளிக்கும் வாய்ப்பாடுகளும் இருக்கின்றன. சித்தர்கள், இறைவனிடம் மன்றாடி, வாய்ப்பாடுகளும் மனிதனை காக்கும் வழிகளை முன்கூட்டியே சுவடிகள் மூலம் அழகாக எழுதி வைத்துள்ளனர். ஆனால் சில மனிதர்கள், பணத்திற்காகவும் அதிகாரத்திற்காகவும், இந்த சுவடி உண்மைகளை திருடி, மறைத்து விட்டனர். இது ஒரு ஆன்மீக எச்சரிக்கை: தப்பிக்க வேண்டுமானால், உண்மையான வாய்ப்பாடுகளை அறிந்து, சித்தர்களின் வழியைப் பின்பற்ற வேண்டும். )

==============================================
#       இளைஞர்கள் சொல்லித்தான் குற்றம் 
==============================================
(ஜென் Z என்பது 1997 முதல் 2012 வரை பிறந்த மக்களைக் குறிக்கும் மக்கள் தொகை குழுவாகும். 2025ஆம் ஆண்டில், அவர்கள் வயது 13 முதல் 28 வரை இருக்கும். )
====================================================================
# உங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் பின் வரும் வாக்கை புரிய வையுங்கள் 
====================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதனால் எவை என்று அறிய யாரைச் சொல்லியும் குற்றமில்லை. தான் தான் இல்லத்தில் பின் இருக்கின்றாரே இளைஞர்கள், சொல்லித்தான் குற்றம் 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதனால் நிச்சயம் பின் இப்பொழுது அரசியல் சார்ந்தோரும் நிச்சயம் அவ்வாறு நிச்சயம் கையில் எடுப்பது ஆயுதமே. வெட்டப் போகின்றான். பார்த்துக் கொண்டுதான் இருக்கப் போகின்றீர்கள்  இளைஞர்களை. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :- அறிந்தும் இதனால் இளைஞனை பின் கட்டுப்படுத்த முடியவில்லை. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  நிச்சயம் தன்னில் கூட என்றெல்லாம் நிச்சயம் பார்ப்போம் என்று அவனும் அமைதி காத்து, இவர்களுக்கு இவருக்குள்ளே, வெட்டிக் கொள்ள தான் போகின்றார்கள்  வருங்காலத்தில்.

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதைத்தன் அறிவித்து எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட தான் தான் வேலையை பார்ப்போம் என்று. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( அரசியல் சூழ்நிலையில் உண்மையை பேச முடியாத நிலை உருவாகியுள்ளது. “சென்சி” என்ற புதிய வெளிநாட்டு வார்த்தை, ஒரு பெரிய பிரச்சனையை உருவாக்கும் என எச்சரிக்கையாக கூறப்படுகிறது. உண்மையை சொன்னால் பதவி போகும், தாக்குதல் கூட ஏற்படும். இளைஞர்கள் புரட்சிக்கான கூட்டமாக “சென்சி” (Gen Z ) என்ற இயக்கம் எங்கும் பரவக்கூடும். )

====================================================================
# உங்கள் பிள்ளைகளுக்கு அவசியம் பின் வரும் வாக்கை புரிய வையுங்கள் 
====================================================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  நிச்சயம் தன்னில் கூட இதை முதலில் எடுத்துறையுங்கள். உங்கள் பிள்ளைகளிடமே நிச்சயம். பின் நிச்சயம் இவை தன் சொல்லிக் கொடுக்காவிடில் அழிவுகள் தான். இப்பொழுது யான் மந்திரம் உரைக்கலாம். நிச்சயம் அவை இப்பொழுது வேண்டாம். இதை நீங்கள் பின் தெரியப்படுத்துங்கள். அனைவருக்குமே 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- ( 
குருநாதர் அகத்திய பெருமான், இன்றைய உலகத்தில் குழந்தைகளின் எதிர்காலம் எப்படி அழியப்போகிறது என்பதை எச்சரிக்கையாக விளக்கியுள்ளார். கம்ப்யூட்டர், செயற்கை நுண்ணறிவு (AI), மற்றும் “சென்சி” போன்ற தத்துவங்கள், சில ஆபத்தான பிரின்சிபல்களை இளைஞர்களுக்குள் கொண்டு வரக்கூடும். இது அழிவை உருவாக்கும், இளைஞர்கள் ஒருவருக்கொருவர் தாக்கும் நிலையை உருவாக்கும் அபாயம் உள்ளது.
👉 அதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு இந்த உண்மைகளை தெளிவாக எடுத்துச் சொல்லி, ஆன்மீக விழிப்புணர்வுடன் வளர்க்க வேண்டும். பின்னர், அகத்தியர் வழிகாட்டும் மந்திரங்கள் மற்றும் வாய்ப்பாடுகள் மூலம் பாதுகாப்பு பெற முடியும்.
🔔 முக்கிய எச்சரிக்கை: - இளைஞர்களின் மனதிலும், சமூகத்திலும் ஆழமான மாற்றம் ஏற்படுத்த வேண்டுமெனில், ஆன்மீக வழிகாட்டல், விழிப்புணர்வு, மற்றும் சித்தர்களின் வழி அவசியம் ) 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எதை என்று அறிய எல்லையும் மீறிவிட்டது. ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று அறிய 

=========================================
#  நீங்களும் காரணமாகின்றீர்கள்
========================================

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  ஏன், எதற்கு பின் எவை என்று அறிய. ஆனாலும், ஓடிக்கொண்டே, ஓடிக்கொண்டே பிரச்சனைகளுக்கும் எவை என்று பணத்திற்காகவும் எவை என்று அறிய நீங்களும் காரணமாகின்றீர்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆனால். நீங்களும் ஒரு காரணம் தான் சொல்றாங்க. நம்மளும் ஒரு காரணம் தான் சொல்றாங்க. பிரச்சனை எது என்று. 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதனால், நிச்சயம் தன்னில் எவை என்று அறிய. இங்கு மூலாதாரனும் இறைவன், மேலோர் எவை என்று அறிய. சரியாக புரிந்து கொண்டு, பின் இவற்றை ஒழித்தால் மட்டுமே தான் ஆள முடியும் என்று. பின் தேசத்தை, பூமியே. 

சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- (  இந்த மகா பிரதேசத்தில் உள்ள பெரிய சக்தி — இறைவனுடைய சக்தி. அதை அழித்து விட்டால், உலகத்தின் கட்டுப்பாடு யாருடைய கையில் இருக்கும் என்பது கேள்விக்குறியாகிறது. ஒரு அசுர சக்தி, பூமியை எப்படி கட்டுப்படுத்தலாம் என யோசித்து, அதற்கான திட்டங்களை அமைத்துக் கொண்டிருக்கிறது. இது ஒரு எச்சரிக்கை:- இறைவனின் சக்தியை மனிதன் இழந்தால், மனிதன் அல்லாத சக்திகள் உலகத்தை ஆட்சி செய்யும் அபாயம் உள்ளது. விழிப்புணர்வும் பாதுகாப்பும் அவசியம். )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  அப்பனே, எதை என்று அறிய? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய? அப்பனே, எதை என்று கணினி வைத்துக் கொண்டு, அப்பனே, எதை என்று புரியாமலும் எவை என்று அறியாலும், அப்பனே, அதற்கு அப்பன் நிச்சயம் அதில் கூட பரப்பி விட்டான். அப்பனே, சிறு சிறு மூலியில் கூட என்பேன். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதன் அதன் கட்டுப்பாட்டில் தான். பின், நிச்சயம் இளைஞர்கள் இன்றைய காலகட்டத்தில். அப்பனே, எதைச் சொன்னாலும் கேட்க மாட்டானப்பா. அதற்கும், அப்பனே, பரிகாரம் சொல்கின்றேன். வரும் வாக்கியத்தில். 


சுவடி ஓதும் மைந்தன், அடியவர்   உரையின் சுருக்கம்  :- (  அப்பா, அப்ப கம்ப்யூட்டர்ல ஒரு மூலப்பொருள். மூலப்பொருள் செலுத்திட்டு இருக்காங்க. வந்து கம்ப்யூட்டர் மட்டும் இல்ல, மொபைல்ல, மொபைல்ல எல்லாமே மூலப்பொருள் செலுத்திட்டு இருக்காங்க. அப்ப, அதை அப்படியே பார்க்கும் பொழுது. பாக்குறீங்களா? இப்ப குழந்தைங்க யாராவது கண்ணை விட்டு எடுக்குதுங்களா? மொபைல்ல பார்த்துக்கிட்டே இருக்குதுங்க. அடிமை ஆயிடுச்சுங்க. அதான் சொல்றாங்க, ஐயா. அதெல்லாம் வந்து அடுத்து நான் உனக்கு சொல்றேன். பிழைத்துக்கொள்ளுங்கள் என்று உரைக்கின்றார் குருநாதர். )

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  இதை நிச்சயம் தன்னில் கூட இன்னும் யாங்கள் எடுத்துச் செல்வோம். விடப்போவதில்லை.

வந்தால் வாருங்கள். நிச்சயம் தன்னில் கூட அனுபவித்தால், அனுபவிங்கள். நிச்சயம் தன்னில் கூட.

நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று கூற. பின் ஈசனின் பின் உலகம் இது. நிச்சயம் யாங்கள் விடப்போவதில்லை. நிச்சயம் தன்னில் கூட ஈசனை நோக்கி, நிச்சயம் பாடுங்கள். 

அன்புடன் அகத்திய  மாமுனிவர் :-  எவை என்று அறிய, இதற்காகத்தான் புரிந்து கொள்ள அறிந்தும், நீங்கள் நிச்சயம் தன்னில் கூட எதையுமே செய்ய வேண்டாம். இறைவனை கூட வணங்க வேண்டாம். புண்ணியத்தை சேர்த்துக் கொள்ளுங்கள். நால்வருக்கு நன்மை செய்யுங்கள். இறைவன் தானாக ஓடோடி வருவான். 

(அன்புடன் அகத்திய  மாமுனிவர்  மாமுனிவர் உரைத்த - 02.11.2025 அன்று நடந்த திருவண்ணாமலை கூட்டுப் பிரார்த்தனை வாக்கு பகுதி 2  நிறைவு) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: