​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 7 November 2025

சித்தன் அருள் - 1984 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை இடைக்காடர் சித்தர் வாக்கு.- பகுதி 2


அன்புடன் அகத்தியர்  அருளால், அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு - பகுதி 231.08.2025 - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 2

இடைக்காடர் சித்தர் :- இதனால் ஏன் எதற்கு அனைத்துக்கும் காரணம் பின்  இறைவன் அப்பா.

இறைவனை எங்கிருக்கிறான்?  அப்பனே, ஈசன் யார் என்பதை கூட நிச்சயம் உங்களுக்கு தெரியாது அப்பா. நிச்சயம் வாக்கியத்தில் பல சித்தர்கள் வரட்டும். ஈசன் யார் என்பதை, எங்கு இருக்கின்றான் என்பதை தெளிவு படுத்துவோம்.

இடைக்காடர் சித்தர் :- அதன் மேலே, இறைவன் எதை எவை என்று புரியும் அளவிற்கு அனைவருக்கும் ஒரு சக்தி அறிந்தும் கூட, அவ் சக்தியானது நிச்சயம். பின், அதாவது மனிதனிடத்தில் உயிர், அதாவது பின் காந்தமாகவே.  

அவ் காந்தகம் இன்னும் மேலே உள்ளது. அப்பா, அவ் காந்தகம் தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது என்பதை எல்லாம் யார் அறிவார் இங்கு ? 

===========================================================
சித்தன் அருள் 1940
இவ் காந்தகம் குறித்து அறிய பின்வரும் பதிவை கேட்கவும். 
https://www.youtube.com/watch?v=BcKYvN5S2JI
===========================================================

அறிவாரா? இல்லை.  இதனால் நிச்சயம் வரும் காலத்தில் கிரகங்கள் வேலை செய்யப் போவதில்லை. ஏனென்றால் , அனைவரும் கிரகங்கள் சொல்கின்றேன்.

முக்கூட்டுக்கள், நற் கூட்டுக்கள், அதாவது மூன்று கிரகங்களும், நான்கு கிரகங்களும் ஒன்று நின்றால், அவர்கள் பேசிக் கொள்வார்கள். எப்படி எல்லாம் பின் மனிதனை அழிக்கலாம்? எங்கெல்லாம் கையை வைக்கலாம் என்று.

அதனால், அப்பப்பா, வருங்காலத்தில் மூன்று நான்கு கிரகங்கள் இணைந்தால் , அப்பனே, நிச்சயம் அதை நினைத்து மானிடா திருந்திக் கொள் இப்பொழுதே.  

ஏனென்றால், நிச்சயம், அதாவது சாதாரணமாக இல்லை. நிச்சயம் வலம் வந்து கொண்டே இருக்கின்றது. மனிதனுக்கு ஒவ்வொரு கட்டமும் கூட.

அதாவது கட்டம் என்று இங்கு என்ன சொன்னேன்? பின், நிச்சயம் சனி தேவன் கூட, ராகுதேவன் கூட, நிச்சயம் பின் கேது தேவன் கூட. இவர்கள் தான் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கின்றார்கள் இக்கலியுகத்தில்.

இவர்கள் என்ன முட்டாள்களா என்ன, உங்களுக்கு நல்லது செய்வதற்கு ? அறிந்தும் புரிந்தும், ஏனென்றால், நீங்கள் நல்லது செய்யவில்லை. 

உங்கள் விதியிலே யான் கூறுவேன் அறிந்தும் புரிந்தும்.  எங்களால் கூற முடியும். நீங்கள் என்னென்ன தவறுகள் செய்து வந்து கொண்டு இருக்கின்றீர்கள் என்பவை  எல்லாம் யாங்கள் அறிவோம். அதனால், நிச்சயம் தவறு செய்பவருக்கும் ஒரு வாய்ப்பு அளிக்கப்படும் நிச்சயம் எங்களிடத்தில். 

அதனால்தான், நிச்சயம் மனிதன் எது எவை என்று புரிய. இதனால்தான், கலியுகத்தில் வாழத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றான் மனிதன்.

இன்னும் விதவிதமாக பொய் சொல்வான். அவை செய்தால் இல்லத்தை கட்டிக் கொள்ளலாம் என்று. ஆனால் அப்பா, பணம் எங்கிருந்து அப்பா வரும்?  நிச்சயம் தன்னில் கூட? 

அதாவது, இதை செய்தால் பணம் தானாக வரும் என்று. ஆனால், இப்படியே நிச்சயம் சொல்வார்கள். ஆனால், அவன் என்ன செய்வான் தெரியுமா? 

திருடுவான் அப்பா திருடுவான்.  ஏனென்றால், நிச்சயம் எதிர்பார்ப்பான். பணம் வரும் என்று  சொன்னார்களே.  நிச்சயம், அதாவது வேறு விதத்தில் அப்பனே.  அதாவது அன்பதனைக்கூட நுழைந்து பார்க்கும் பொழுது

அறிந்தும்  அறியாமலும், இவை உண்மையும்  கூட, நம்புவதும் கூட, நம்பாததும் கூட, எதை எதையடா இழந்தாய்?  இதை தவிர்த்து வருவதெல்லாம் எண்ணிக்கொள்ளடா. 

==================================================
 #        இறைவன் அளித்த இந்த உடம்பு  =  பணம்           #
==================================================

எண்ணிக்கொள்ளடா, இதை முடிந்த அளவிற்கு பயன்படுத்திக் கொள்ளடா. நின்னருளாலே , எதை எவை என்று புரிய? 

எதை நின்றின்று , நிச்சயம் நேரங்கள் பார்த்தால், விழுவதுண்டா கீழே ? எதை எப்பதிலுக்கு பாடல்களாகவே பாடி உள்ளது என்பதை நின்றின்று பார்த்தாலே இல்லையடா? 

உள் உணர்ந்து, ஊன்று  கவனித்தாலே, எதை கவனித்தாயடா? 
எதை நீ எதை நின்று , உன் மனதை என்ன நினைத்தாயடா? 
என்ன நினைத்து, எதனை ஊர்ந்து சென்று, எங்கே சுமந்தாயடா? 

பின் போட்டு உடைந்தாயடா? 

எதை எவை என்று புரிய? 
இறைவனை பின் சொந்த பின்  பணத்தை போட்டு உடைத்தாயடா? அப்பொழுது எப்படிடா பின் பணங்கள் வரும்?. 

இங்கு யான் பணம் என்பது உங்கள் உடம்பை சொன்னேன். 

மானிடனே , மீண்டும் சொல்கின்றேன்.  இங்கு பணம் என்பது உன் உடம்பை சொன்னேன். பின், நிச்சயம் ஏன் எதற்கு இவ் உடம்பை சொன்னேன் என்றால், அழகாக பணத்தை பின் உடம்பாகவே பாவித்துக் கொள்ளுங்கள். 

அதாவது, இவ்  உடம்பை சரியாக பேணிக் காக்க வேண்டும். அவ்வாறு பேணி காத்தால் மட்டுமே, நிச்சயம், அதாவது மாய பொருளான பணம் வரும் அப்பா. 

வந்துவிடும். ஆனால், உடம்பை சரியாக பேணி காக்க வில்லை என்றால், நிச்சயம் மாய பணம் வராது. அப்பா.

ஏனென்றால் உண்மை பணத்தை (உங்கள் உடம்பை) நீங்கள் சரியாக கடைபிடிக்கவில்லை. அப்பொழுது மாய பணம் எப்படி அப்பா வரும்??.

அப்பப்பா, அறிந்தும்  உங்களை யான் குற்றம் சொல்லவில்லை. ஆனாலும், புரிந்து கொண்டு வாருங்கள் அப்பா.  நிச்சயம் தெளிவடையுங்கள் அப்பா. 

==========================================================
#       ஈசனாரும் , பார்வதி தேவியும் கூட்டுப்பிரார்தனைக்கு        #
#               வந்திருந்த அனைவரையும் ஆசிர்வதித்தனர்                    #
==========================================================

““““ அப்பா, நிச்சயம் தன்னில்  கூட இவ்வாறாகவே , நிச்சயம் அனைவருமே, அதாவது ஈசனும் பார்வதியும் எப்பொழுதே ஆசிர்வதித்து விட்டார்கள்.”””””

ஆனாலும், ஆசிர்வாதத்தோடு தான் நீங்கள், அதாவது புண்ணியங்கள் செய்ததினால் தான் மட்டுமே,  யங்களும் வந்து வாக்குகள் உரைக்க முடியும். 

புண்ணியங்கள் இல்லை என்றால், நிச்சயம். பின் ஆனாலும், எதை என்று  புரியாமல் கூட இயக்கினாலும், ஒன்றும் நடக்கப்போவதில்லை. பின், அங்கு சொன்னார்கள், அதை சொன்னார்கள், இவை சொன்னார்கள், ஒன்றும் நடக்கவில்லையே என்று கடைசியில் பொய் என்று கூறிவிடுகிறார்கள். 


““““  உண்மை பொருளை நம்புங்கள். ”””””

““““  உண்மை பொருள் யார்? இறைவன். ”””””

அவ் , இறைவன் யார்?  யாராவது தெரியுமா? சொல்லுங்கள், பார்ப்போம். ஒருவராவது? 


அடியவர்கள் : - (இறைவன் யார் என்பதை மனிதர்கள் சொல்ல முடியாது. யாருக்கும் இறைவன் பற்றி முழுமையாகத் தெரியாது. இறைவன் அறிவுக்குப் புறம்பானவர்)

இடைக்காடர் சித்தர் :- இறைவன் யார்? எதை புரிய?  உன் உள்ளத்தை  உங்களால் பார்க்க முடியுமா? 

அடியவர்கள் : - ( பார்க்க முடியாது)

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம் அறிந்தும்  புரிந்தும் . இதனால், இறைவன் யார் என்றே  தெரியவில்லை. ஆனாலும், அறிந்தும்  அழைத்துக் கொண்டிருக்கின்றானே  நிச்சயம் வாய் கிழிய. 

அடியவர்கள் : -  (இறைவன் யார் என்பதைத் தெரியாமலே, அவரைப் பற்றி பேசுவது. இறைவனைப் பற்றி அறியாமல், அவர் குறித்து பேசுவது.)

இடைக்காடர் சித்தர் :- இவ்வாறாக தெரிந்து, தெரிந்து, இறைவனை நிச்சயம் அறிந்து புரிந்தும், பின், நிச்சயம் பின் புரிந்து கொண்டு, இதனால் இறைவன் யார் என்று நிச்சயம் மறைபொருளாகவே இருக்கின்றது. அவ் மறைபொருளை எப்படி நீங்கள் காண்பீர்கள்? சித்தம், அதாவது புரிந்து கொள்வீர்கள். அவ்  மறைபொருளை நிச்சயமாய் நீங்கள் கண்டிட்டால், உங்களுக்கு துன்பமே இல்லை. அவ் மறைபொருளை நிச்சயம், அதாவது காணாமல், நிச்சயம் அறிந்து புரிந்து, என்ன இறைவனை அழைத்தாலும், துன்பம் தானப்பா துன்பம்.

இடைக்காடர் சித்தர் :-  அறிந்தும் , இதனால், இறைவனை கண்டவர் எவரும் இல்லையடா? இல்லையடா மனிதா, இறைவனை கண்டு விட்டால், துன்பம் எங்கு வரப்போகின்றது  சொல்லுங்கள், யாராவது?. 

அப்பொழுது, நிச்சயம் நீங்கள் அனைவருமே துன்பத்தில் தான்  இருக்கின்றீர்கள். இறைவனை எங்கு கண்டு உணர்ந்தீர்கள்?. 

சொல்லலாமே, அறிந்தும் புரிந்தும், இறைவன் நிச்சயம், அதாவது நீங்கள் சிறு வயதில், நிச்சயம் கண்ணாமூச்சி விளையாடுவீர்களே. பின், ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.  (கண்ணாமூச்சி விளையாட்டு)

இடைக்காடர் சித்தர் :-  மானிடனே , அறிந்தும் புரிந்தும், இறைவனை தெரியாதவன் தான் , நிச்சயம் இறைவன் அங்கிருக்கின்றான் . அங்கு போய் சேருங்கள், இங்கு போய் சேருங்கள் என்று.

இறைவனை பின் கண்டுவிட்டால், நிச்சயம் அவன் தனக்கு பேச்சுக்ளே  வளராதப்பா. நிச்சயம் பின் பேச்சையே போய்விடும் என்பேன்.

இதனால், நீங்கள் மனிதனின் என்பதே பொய். அதாவது, உண்மை பொருளை (இறைவனை) எப்பொழுது, நீங்கள் காண்பீர்கள்? 

==================================================
 #        காண கிடைக்காத பொருள் - இறைவன்                #
==================================================

“““““ நிச்சயம் காண கிடைக்காத பொருளப்பா இறைவன். ””””

நிச்சயம் இவ்  பொய்யானவன்,  நிச்சயம், இறைவனை தேடி அலைந்தாலும் , கிட்ட போவதில்லை. 

ஆனாலும், நீங்கள் மெய்யானவர்களாக  எப்பொழுது ஆகின்றீர்களோ, அப்பொழுது மெய்யானவன் தெரிவான். 

ஆனால், போலியானவர்களே அனைவரும்.

மீண்டும் சொல்கின்றேன் மானிடா!! அறிந்தும் புரிந்தும், இறைவன் உங்கள் இடத்தில் நீங்கள் வாழுங்கள் என்று கொடுத்தது தவரடா.  நிச்சயம் அதாவது அதை பயன்படுத்திக் கொண்டு என்னென்ன செய்து கொண்டிருக்கின்றீர்கள்  ?????? 

நீங்கள் திருந்தாமல் இறைவனை நிச்சயம் பார்க்க முடியாது. 

இதனால், நிச்சயம் ஏன் தவறுகள் நடக்கின்றது என்றால், அதற்கு காரணம் இறைவனா என்றால், நிச்சயம் இல்லை. 

நீங்கள் இதேபோல்தான் , ஆரம்ப கால கட்டத்திலே அனைவரும் ஒன்றாக இணைந்து, (கூட்டுப் பிரார்த்தனை செய்து) நிச்சயம் இறைவா, இறைவா வரவேண்டும். 

இறைவா, இறைவா வரவேண்டும் என்று. 
இறைவன் வந்தான். 
கேட்டீர்கள். எங்கள் வாழ்க்கை எங்களுக்கே கொடுத்துவிடுங்கள் என்று. அழகாக பாசத்தோடு கொடுத்தான்.  

அதற்கு நீங்கள் நிச்சயம் எப்படி பாசத்தை காட்ட வேண்டும்? 
நம்பிக்கை துரோகம் செய்கின்றீர்களே இறைவனுக்கு எப்படி? 
எப்படி மானிடா ?

நிச்சயம் இதனால் இறைவன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான். 

நிச்சயம் அறிந்தும், புரிந்தும், இதனால் மனிதன் பெரிய பெரிய தவறாக செய்து கொண்டே இருக்கின்ற பொழுது, ஆனாலும் இறைவனும் பார்ப்பான். ஆனாலும், நிச்சயம் பின் அதாவது இறைவனை வணங்குகின்றீர்களே, நிச்சயம் போராட்டம் அறிந்தும். 

இவை யாரும் புரிந்து, புரியாமல் கூட சரியாகவே, நிச்சயம் மனசாட்சியோடு வாழ்ந்தாலே, கிரகங்கள் மனசாட்சியோடு வேலை செய்யும். 

அதனால்தான், நிச்சயம் உங்களை அழைத்து, ஏனென்றால் பின் கூட்டு வழிபாடு என்பது கூட, முதலிலே, கலியுகத்திலே, தொடங்கும் பொழுதே, அனைவரும் ஒன்று இணைந்து தான் கேட்டீர்கள். 

இறைவா, எங்களுக்கு வாழ்க்கை தா என்று. 

ஆனாலும் தந்துவிட்டான். ஆனால், இப்பொழுது யார் தவறு செய்வது என்றால், மனிதன். அதனால்தான், அதாவது உங்களிடத்தில் தான் அனைத்தும் இருக்கின்றது. உங்களை நீங்கள் திருத்திக் கொண்டால், இவ்வுலகத்தில் தவறுகளே நடக்காது. 

அதனால், நீங்களும் மற்றவர்களுக்கு பின் எடுத்து கூறினால், அவர்களும் திருந்துவார்கள். இங்கு யாருக்குமே வேலை இருக்காது. 

மானிடனே அறிந்தும் புரிந்தும், அனைத்து திறமைகளும் உன்னிடத்தில் இருக்கின்றது. ஆனால், நிச்சயம் அத் திறமைகள் எல்லாம். ஒதுக்கிவிட்டு, நிச்சயம் திருடன் திருடத்தான் பார்க்கின்றான். அதாவது, எப்படி நியாயம்? 

சுவடி ஓதும் மைந்தன் :- (உங்களிடம் அனைத்து திறமைகளும் இருக்கின்றன. ஆனால் அவற்றை பயன்படுத்தாமல் வைக்காமல், சரியான முறையில் பயன்படுத்த வேண்டும்)

இடைக்காடர் சித்தர் :-  
நிச்சயம் பொறாமை என்பது ஒரு திருடன். 
போட்டி என்பது ஒரு திருடன். 
மற்றவர்கள் தரம் தாழ்த்தி பேசுவது ஒரு திருடன். 

சுவடி ஓதும் மைந்தன் உரையின் சுருக்கம் :- ( பொறாமை, போட்டி, மற்றும் பிறரை தரம் தாழ்த்தி பேசுவது—all இவை உள் அமைதி மற்றும் ஒற்றுமையை திருடும் திருடர்கள் )

இடைக்காடர் சித்தர் :-  அவன் ஒன்றுமில்லாதவன். என்னிடத்தில் தான் இறைவன் இருக்கின்றான் என்று. இவன் மகா திருடன். 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :- ( “இறைவன் என்னிடம் தான் இருக்கிறார்” என்று கூறுபவர் உண்மையில் மகா திருடன்.)

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், அப்பா, இறைவன் தன்னிடத்தில் இருந்து கொண்டால் போதுமடா. நீயும் நானும் ஒன்றாக இருக்கின்றோம். அதனால், சரியாகவே போய்விடும் என்று தனியாக அழைத்துச் சென்று விடுவான் இறைவனை. 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :- ( ஒரு உண்மையான ஆன்மீகப் பெருமகன் இறைவனை உணர்ந்த போது, பேராசையால் நிரம்பிய மனித வாழ்க்கையை விலக்கி, இந்த மனித வாழ்வே வேண்டாம் என்று, இறைவனுடன் ஒன்றாக இருக்க விரும்புவர்).

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், ஆனால் அப்படி இல்லை. இங்கு பிழைப்பதற்கு மனிதன், நிச்சயம் என்ன தேவை என்று சரியாக உணர்ந்திருக்கின்றான். காசுகள் என்று.

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :- (மனுஷன் இங்கு வாழ்வதற்காக வந்தான். ஆனால், பணம் தான் முக்கியம் என்று எண்ணி, வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தை மறந்து விட்டான்)

இடைக்காடர் சித்தர் :- இறை இருந்தாலும் புரோஜனம் இல்லை என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :- ( மனுஷன் பணத்துக்காகவே இந்த உலகில் வந்ததாக எண்ணி, இறைவனையே மறுக்கும் நிலைக்கு சென்று விடுகிறான்.) 

==================================================
 #      முதல் வகை  அதிர்ஷ்டம் - பக்தி அதிர்ஷ்டம்          #
==================================================

இடைக்காடர் சித்தர் :-  நிச்சயம், அப்பப்பா, அறிந்தும் புரிந்தும், இதுதான் அப்பனே முதலில் அதிர்ஷ்டம் வேண்டும்?. என்ன அதிர்ஷ்டம் வேண்டும் என்று சொல்லுங்கள்?

““““  முதலில் பக்தி அதிர்ஷ்டம் வேண்டும். ”””””” 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம் :- (அதிர்ஷ்டம் வேண்டும் என்று எல்லோரும் விரும்புகிறார்கள். ஆனால் உண்மையான அதிர்ஷ்டம் என்பது பக்தியில் தொடங்க வேண்டும் — அதுவே முதன்மையான அதிர்ஷ்டம்)

இடைக்காடர் சித்தர் :-  அப்பப்பா, அவ் பக்தி அதிர்ஷ்டம் வந்துவிட்டால், அப்பா , அனைத்து அதிர்ஷ்டங்களும் வந்துவிடும். 

ஆனால், அனைத்து அதிர்ஷ்டங்களும் கூட பண அதிர்ஷ்டம், நிச்சயம் இன்னும் தங்க அதிர்ஷ்டங்கள் எல்லாம் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கின்றீர்கள். ஆனால், அவையெல்லாம் பிரயோஜனம் இல்லை. பின் ஒன்றுக்கு சமமாகுமா என்ன?

பக்தி என்ற அதிர்ஷ்டம் வந்துவிட்டால், அவையெல்லாம் தானாக வந்துவிடும். ஆனால், பக்தி என்ற அதிர்ஷ்டமே நீங்கள் வரவில்லையே. இன்னும். 

சுவடி ஓதும் மைந்தன்  உரையின் சுருக்கம்  :- ( எல்லோருக்கும் தேவை என்ன தெரியுமா? பக்தி என்ற அதிர்ஷ்டம் தான். அந்த பக்தி அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கிடைக்காது என்பதுதான் சொல்லப்படுகிறது. ஆனால் அந்த அதிர்ஷ்டம் உங்களுக்கு வந்துவிட்டது என்றால்? பக்தி என்ற அதிர்ஷ்டம் உங்களை தேடி வந்து விட்டது என்றால்? அதன் பின் மாய அதிர்ஷ்டம், பண அதிர்ஷ்டம், தங்க அதிர்ஷ்டம்—எல்லா விதமான அதிர்ஷ்டங்களும் வர ஆரம்பிக்கும்.அதற்குப் பிறகு என்ன நடக்கும் தெரியுமா? அந்த எல்லா அதிர்ஷ்டங்களும் உங்களைச் சுற்றி வந்து சேரும் )


இடைக்காடர் சித்தர் :-  ஆனாலும். இறைவன் கொடுத்த. நிச்சயம் அறிவை உபயோகிப்பதே இல்லை. மனிதன் இதனால், நிச்சயம் மற்ற அதிர்ஷ்டங்களை தேடுகின்றான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ( அப்ப, முதல்ல என்ன தேவை? பக்தி அதிர்ஷ்டம் தேவை. அது தேடல, மனிதன்.  மற்ற அதிர்ஷ்டத்தை தேடணும். )

இடைக்காடர் சித்தர் :- நிச்சயம், மற்ற அதிர்ஷ்டத்தை தேடுகின்ற பொழுது, நிச்சயம் இறைவன் கொடுப்பான். ஆனால், எடுத்து விடுவானே !! என்ன லாபம்? 

இடைக்காடர் சித்தர் :- ஆனால், பக்தி என்ற அதிர்ஷ்டம் வந்துவிட்டால், பின் அவ் மாயைகளால் . நிச்சயம், நீங்கள் மயங்க மாட்டீர்கள். 

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: