​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 7 November 2025

சித்தன் அருள் - 1983 - அன்புடன் அகத்தியர் - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை இடைக்காடர் சித்தர் வாக்கு.- பகுதி 1


அன்புடன் அகத்தியர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு - பகுதி 1

31.08.2025 - திருஅண்ணாமலை - சிவபுராணம் கூட்டுப் பிரார்த்தனை வாக்கு.- பகுதி 1

புவனமதை அழகாக இயக்கக் கூடிய புவனேஸ்வரித் தாயே போற்றி!!! 
புவனேஸ்வரனே போற்றி!!!
பணிந்தே பின் சொல்கின்றேன் இடையனே.

அனைவருக்குமே ஒவ்வொரு பிரச்சினைகள் எவ்வாறு எழுகின்றது என்று தெரியவில்லையே!!!

தெரியவில்லையே மனிதனுக்கு. எப்படி வாழ்வோம், மீள்வோம் எப்படி என்பதையெல்லாம். 

எப்படி இங்கு வாழ்வது என்பதையெல்லாம் வருங்காலத்தில் கேள்விக்குறியாகவே உள்ளது. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் இன்னும் என்னென்ன நோய்கள்,  என்னென்ன வருத்தங்கள் என்பவையெல்லாம் பின் மனிதனுக்கு தெரிந்து (100) கொண்டே, தெரிந்து கொண்டே. இவ்வாறெல்லாம் தெரிந்து கொண்டு, இதனை எங்கு நீக்குவது என்று தெரியவில்லையே மனிதனே!!!

அறிந்தும் இதனால் எங்கெங்கோ ஓடி ஒளிந்து, மீண்டும் இல்லத்திற்கு வந்தால் மீண்டும் துன்பமே!!!

துன்பமே இதனால் எங்கு ஏது அறிவது? இறைவனிடத்திற்கு சென்றோமே!!! துன்பமே வந்து, எங்கு செல்வது? ஏது செல்வது? (என்று) அறியாமல் , கடைசியில் எதை எதையோ நோக்கி நோக்கி புறப்பட்டு. 

மீண்டும் எதை எதையோ இழந்து, இழந்து. நிச்சயம் இவ்வாறெல்லாம் பின் எங்கு? ஏது? எதனை? தேவை என்ற நிச்சயம் இவ்வாறெல்லாம் நிச்சயம் எங்கு சொல்வேன் மனிதனுக்கு? 

நிச்சயம் அறிந்தும் இவ் அண்ணாமலையிலே நோக்கி நோக்கி இன்னும் பல கோடி மக்கள் வருவார்கள் கஷ்டத்திற்காக. ஆனாலும் கஷ்டமும் தீராது. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைப்பு. ஆனால் வருபவருக்கெல்லாம் பின் புண்ணியங்கள் இருக்கின்றதா என்றால் சிறிதளவே புண்ணியம். அதாவது எள் அளவே புண்ணியம். அவ் எள் அளவு வைத்துக் கொண்டு பிழைக்கத் தான் முடியும். என்ன செய்ய முடியும்? அறிந்தும் புரிந்தும் கஷ்டங்கள் நீக்க முடியுமா என்ன? 

இன்னும் எள் அளவை நிச்சயம் பின் இன்னும் பன் மடங்காக மாற்ற சித்தர்கள் யாங்கள் துணை புரிவோம் உங்களுக்கு.  இவ்வாறாக பின் பிழைத்துக் கொள்ளுங்கள்.

மனிதர்களே,  உங்களை காக்க ஆள் இல்லையே!!!

ஆள் இல்லையே!!! சித்தர்கள் இதை எவை என்று நினைத்தவாறு,  எதை புரியாமலும், எதை அறியாமலும் இதைத்தன் நிச்சயம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு அனாதையே!!!

இதனால் சொந்த பந்தங்கள்  எங்கிருந்து வந்ததடா? எங்கிருந்து  ஏது எதை என்று சுகங்கள் எங்கிருந்து வந்ததடா? பின் ஒன்றும் புரியவில்லையடா!!!

மனிதா அறிந்தும் வாழ முடியவில்லையே!!! வாழ முடியவில்லையே!!!

ஏன் எதற்கு? எத்தனை குணங்கள்? எத்தனை பணங்கள்? எத்தனை எதை என்று எவை புரிய நிச்சயம் பின் கடைசியில் பார்த்தால், 

அப்படி வாழ்ந்தேனே!!! 
இப்படி இருந்தேனே!!! 
என்னென்ன (செய்தேன்)!!! எதற்கு லாபம்?  என்றெல்லாம் நிச்சயம் (மனிதனின் புலம்பல்கள்). 

அதனால் முதலிலே கலியுகத்திலே நிச்சயம் உணர்ந்திடுங்கள். நிச்சயம் சித்தன் பாதை அறிந்தும் புரிந்தும் யாங்கள் உங்களுக்கு உதவி வர, நிச்சயம் முன்வந்து முன்வந்து. 

“”””””””இதனால் தான் எத்தனை எத்தனை கோடி பிறவிகள் பின் பிறந்தாலும்,  மனிதனால் மோட்சத்திற்குப் போக முடியவில்லையே!!!!”””””””””””

மனிதன் மோட்சத்திற்கு போக முடியவில்லையே!!! ஏன் என்று அறிந்தானா மனிதன்? நிச்சயம் இல்லையே!!!

எங்கு சென்று, அங்கு சென்று  பின் பாவத்தை சம்பாதித்தானே தவிர,  புண்ணியத்தைச் சம்பாதிக்கவில்லை!!!!

ஏன்? எதற்கு? அதாவது அங்கங்கு அலைந்து பின் திரிந்து எங்கு பார்த்தால் இறைவன் எங்கு இருக்கின்றான் என்றால், நிச்சயம் தன்னுள்ளே இருக்கின்றான் என்பதை எல்லாம் ஞானிகள் அழகாக எடுத்துரைத்தார்கள். அதனையும் நம்பவில்லை. 

சரியாக தர்மத்தைக் கடைப்பிடி என்று நிச்சயம் சொன்னார்களே!!! அதையும் நம்ப முடியவில்லை, அதாவது மனிதனால். 

அவை போனால் போகட்டும். 
நிச்சயம் அனைத்து உயிர்களும் பின் தன்போல் நினையுங்கள் என்று. நிச்சயம் அதையும்  ஏற்கவில்லை. 

மானிடனே!!! இறைவன் எப்பொழுது உயிரைப் பறிப்பான் என்றே தெரியவில்லை. ஆனால் அதற்குள்ளே எத்தனை ஆட்டங்கள்?? 
எத்தனை எத்தனை குழப்பங்கள்??
எத்தனை எத்தனை பொய் பேசுதல்??
எத்தனை எத்தனை ஏமாற்றுதல்??
எத்தனை எத்தனை திருடுதல்கள்?? 
எத்தனை எத்தனை சோகங்கள்???

ஆனாலும் இவையெல்லாம் நிச்சயம் சிறிது காலத்திற்கே. சிறிது காலத்திற்கே அனைத்தும் பின் தேங்கி அதாவது பின் நிச்சயம் ஓர் சக்தி , உங்களைப் பார்த்துக் கொண்டே பார்த்துக் கொண்டே, ரசித்துக் கொண்டே ரசித்துக் கொண்டு, பின் போகட்டும் என்று. 

ஓர் நாள் நிற்பான் அதாவது தன் எல்லைக்குள்ளே. அதாவது ஈசன் எல்லைக்குள்ளே நிற்கும் பொழுது நிச்சயம் பின் கயிறோடு எமன் வந்து எடுப்பானே உயிரை!!!!

நிச்சயம் பாவப்பட்ட மனிதனே!!! 

மனிதனே!!!  அதற்குள்ளே உண்மை தெளிந்து, தெளித்து வைத்து, இறைவனை பாதையை பின் பிடித்துக்கொள்ளுங்கள். 

யான் , அதாவது மானிடன் சொல்வான், யான் இறைவன் பாதையை பிடித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் . யான் திருத்தலங்கள் திருத்தலங்களாக  அலைந்து கொண்டேதான் இருக்கின்றேன். யான் புண்ணியங்கள் செய்து கொண்டே இருக்கின்றேன். அனைத்தும் செய்து கொண்டிருக்கின்றேன் என்று. அனாலும் பிரயோஜனம் இல்லையே. 

ஏன் எதற்கு , உன்னால் சாவைத் தடுத்திட  முடியுமா என்ன ??
முடியாதப்பா முடியாது.

இதனால்தான் தெரிந்து உங்களுக்கு தேவையானதெல்லாம் யாங்கள் கொடுக்க தயார். ஆனால் நிச்சயம், பின் சித்தர்கள் எதை என்று புரிந்து கொண்டு, சரியான பாதையை தேர்ந்தெடுத்து, இறைவனை பின்  உண்மை நிலையை எப்படி அறிவது?  

நிச்சயம் இறைவன் சமமாகவே எங்கு இருக்கின்றான் என்பவை எல்லாம் யாரும் அறிவதில்லை. 

ஏதோ பின் இறைவன் கடமைக்காக, பின்  வணங்குகின்றார்கள் சிலர். 
சிலர் ஏதோ இறைவன் தருவான். 
சிலர் பின் அதாவது நிச்சயம் அறிந்தும் உண்மை தனைக் கூட, பின் தெரியாமல், பின் அவ் மந்திரத்தைச் சொன்னால் , இவை வரும். 

இவை அதாவது இட்டுக் கொண்டால், அவை வரும். 
அதாவது இப்படி செய்தால், பின் அப்படி வரும் என்பதை எல்லாம் அப்பா, நிச்சயம் பின் நம்பிக்கை தான் அப்பா. 


நிச்சயம் எப்பொழுது நீங்கள் குறைவில்லாத, பின் நிச்சயம் துன்பம் இல்லாத வாழ்க்கையை எப்படி வாழ போகின்றீர்கள்?  அதை யாராவது   கற்றுக்  கொடுத்தார்களா?  என்றால் நிச்சயம் இல்லை. 

ஆனால் இன்னும் செய்திகளில் வரும். ஆனால் பின் உழைக்காமல் எப்படி பின் சாப்பிடுவது? அதாவது எப்படி ஏது என்று,  தங்கம் வரும், வெள்ளி வரும், வைடூரியம் வரும், இன்னும் பிழைப்புக்காக ஏமாற்றுவார்களே. 

““““ ஆனால் சரியாக உழைத்து வாழ கற்றுக்கொள். இறைவன் உன்னிடத்திலே இருப்பான் என்று . யாருமே பின்  அன்பு மகன்களே, அன்பு மகள்களே , பின்  சொல்லவில்லையே , சொல்லவில்லையே.”””””

இன்னும் மனிதன், இன்னும் செய்தித்தாளில் ,  பின் இடுவான். நிச்சயம் அவ் கிரகத்திற்கு  அவ் மந்திரத்தைச் சொல். நிச்சயம் இவ் கிரகத்திற்கு இவ் மந்திரத்தைச் சொல்  என்று. 

““““ஆனால் நிச்சயம் எங்கள் கட்டுப்பாட்டில் தான் அனைத்து கிரகங்களும். யாங்கள் வழி விட்டால் மட்டுமே,  கிரகங்கள் உங்களுக்கு வேலை செய்யும்.”””””


====================================================
#       கிரகங்கள் எப்படி வேலை செய்யும் ? - ரகசியம்        #
====================================================

அதாவது பின் கிரகங்கள் எப்படி வேலை செய்யும் என்றால், இப்பொழுது தெரிந்து கொள்ளுங்கள்.

““““ உழைத்து வாழ வேண்டும். ”””””
 
““““ உழைத்து வாழ வேண்டும். ”””””

““““ உழைத்து வாழ்ந்து, அதில் கால் பங்கு (வருமானத்தில் கால் பங்கு / 25% of income/salary) , நிச்சயம் பின் பிற உயிர்களுக்கு சேவை செய்ய வேண்டும்.  ”””””

மீண்டும் செப்புகின்றேன். 

சந்திரனாயினும் சரி, 
சூரியனாயினும் சரி, 
குருவாயினும் சரி, 
ராகுவாயினும் சரி, 

நிச்சயம் இன்னும் செய்வாய் எதை  என்று சுக்கிரன் ஆயினும் சரி, நிச்சயம் எனது கட்டுப்பாட்டிலே. 

நிச்சயம் என்னை மீறி, அதாவது பின் யான் இங்கு பெருமையுடன் சொல்லவில்லை.
சித்தர்கள் மீறி ஒன்றும் நடக்கப்போவதில்லை. ஆனால் நிச்சயம் பின் வாயைத்தான் மென்று மென்று.  ஆனாலும் ஒன்றுமில்லையே. 

நிச்சயம் அதாவது நிச்சயம் இனிமேலும் சொல்லுங்கள். அதாவது நிச்சயம் மீண்டும் இதை செய்தால், துன்பம் போகும் என்று.

““““ உழைத்தால் மட்டுமே துன்பம் போகும்.  ””””” 

ஒவ்வொரு பின் வியர்வையும் கூட  நீங்கள் பின் உழைக்க , பின் வியர்வை நிச்சயம் பூமித்தாயின் மடியில் பட வேண்டும். அதுதான் நிச்சயம், அதாவது அழுகை என்று சொல்லுகிறார்களே. 

நிச்சயம் எதை என்று புரிய கண்ணீர் என்று சொல்கிறார்களே , அதுதான் கண்ணீர். 

(எனக்கு ஏதும் நடக்கவில்லையே என்று) நீங்கள் நிச்சயம் அழுவதெல்லாம் பின் பொன்னீர். 

பொன்னீர் என்றால் என்ன தெரியுமா? பின் பொய் நீர் , பொய் நீர். இறைவனிடத்திலும் பொய் நீர் தான் விட்டுக் கொண்டிருக்கின்றீர்கள். 

====================================================
#                   பணம் அதிகமாகும் ரகசியங்கள்                       #
====================================================


““““ எப்பொழுது உங்கள் கடுமையான, பின் உழைப்பின் மூலம், எப்பொழுது உண்மையான , நிச்சயம் பின்  கண்ணீர் விடுகின்றீர்களோ , அப்பொழுதுதான் உங்களுக்கு பணம் வரவு அதிகமாகும்.  ””””” 


தங்கம் இன்னும், இன்னும்  இன்னும் பல பொருட்கள் , இன்னும் காலப்போக்கில் இன்னும் அறிந்தும் மனிதன் எதை எதற்கோ ஆசைப்பட்டு கொண்டே  இருக்கின்றான். நிச்சயம் இதனால் பின் ஒருவர் கூட சொல்லவில்லையே. 

““““  உழைத்து வாழ். ””””” 

““““  உழைத்து வாழ்ந்தால், கிரகங்கள் அனைத்தும், நட்சத்திரங்கள்  அனைத்தும் உந்தனுக்கு நல்லது செய்யும் என்று.  ””””” 

ஆனால் பின் இப்படியும் சொல்வதில்லை. 

பின் தர்மத்தை கடை பிடித்து  வாழுங்கள் என்று யாராவது சொல்கின்றார்களா என்றால், நிச்சயம் சொல்வதில்லை. பின் விட்டு விடுங்கள். 

அனைத்து உயிர்களும் இறைவனுக்கு சொந்தம் என்று நிச்சயம் எதையும் துன்புறுத்தாதீர்கள் என்று யாராவது சொல்கின்றார்களா என்றால், இல்லை. சரி அவையும் விட்டு விடுங்கள். 

நிச்சயம் பொய் சொல்லாதீர்கள் என்று யாராவது சொல்கின்றார்களா என்றால், நிச்சயம் , இல்லை. (சரி) பின், அதையும் விட்டு விடுங்கள். 

உண்மையாக வாழுங்கள்.  உண்மையாக வாழுங்கள். கிரகங்கள் தானாகவே வந்து உங்களுக்கு நல்லது செய்யும் என்று. 

====================================================
#         எப்போது கிரகங்கள் தண்டனை அளிக்கும்?            #
====================================================

ஆனால் மனிதனே, நீங்கள் திருடலாம். மற்றவரை கெடுக்கலாம் , பொய் சொல்லலாம், ஜீவராசிகள் கொல்லலாம். 

ஆனாலும் கிரகங்களுக்கு பரிகாரங்கள்  சொல்கின்றார்களாம், பரிகாரம் சொல்கின்றார்களாம். எப்படி அப்பா (உங்கள் பரிகாரங்கள்) பலிக்கும்? 

இன்னும் இன்னும் கிரகங்கள் அடியோடு அனைத்தும் எடுத்து தூரே வீசிவிடும் அப்பா.  சொல்லிவிட்டேன். அப்பனே பின் தன், அதாவது வயிற்றுக்காக , மற்றவர்கள் வயிற்றை  நிச்சயம் எதை என்று புரிய.  (பிறர் வயிற்றில் அடித்து வாழக்கூடாது)


““““ தன் பிழைப்பிற்காக நிச்சயம் மற்றவர்களை ஏமாற்றி விடாதீர்கள். ””””

ஏனென்றால் இறைவன் மிகப்பெரியவன். நிச்சயம் செல் செல் என்று, நிச்சயம் எவ்வளவு தூரம் பின் செல்கின்றாயா என்று பார்ப்பான். 

மனிதா, கடைசியில் , (இறைவன்) உன்னை மட்டும் அழிக்க மாட்டான். பின் உன்னை சார்ந்தோரையும் , நிச்சயம் அனைத்தும் ஒரு துளி (கூட மிச்சம் வைக்காமல்) எதை என்று அறிய அறிய, (இறைவன்) நிச்சயம் அனைத்தும் அழித்து விட்டு செல்வான்.

அப்பொழுது மீண்டும் எதை என்று அறிய, உன்னால் எழுந்திருக்கவே முடியாது. 

இன்னும் கலியுகத்தில் , இன்னும் அறிந்தும் அறியாமலும், இன்னும் பல பல துன்பங்கள் தான் நடக்கப்போகின்றது. ஏனென்றால் நிம்மதியாக வாழ முடியாது. வாழ முடியாது மனிதர்களே. 

இன்னும், அதாவது இக்கலியுகத்தில் நிச்சயம் முதலிலே ஆரம்பமாகின்றது (கலியுகம் ஆரம்பமான முதல்). இறைவன் என்ன ஏது என்று புரியாமலும் , அதனால் கலியுகத்தில் போராட்டமானதே வாழ்க்கை. 

====================================================
#                  கிரகங்களை வெல்லும் ரகசியங்கள்                  #
====================================================

இப் போராட்டத்தை முடிக்க வேண்டும் என்றால், கடின உழைப்பாளி, யார் ஒருவன் நிச்சயம், அதாவது எவ் உழைப்பாக இருந்தாலும், நிச்சயம் கடின உழைப்பாளியாக இருங்கள். 

““““ நிச்சயம், இதன் மூலம் மட்டுமே நீ கலியுகத்தில் கிரகங்களை வெல்ல முடியும்.  ””””

மற்றவைகளால் வெல்ல முடியாது. சொல்லிவிட்டேன். மானிடர்களே !!!!

இவ் அண்ணாமலையில் , உண்ணாமலை தேவியும் , கேட்டுக்கொண்டே, ரசித்துக் கொண்டே, இடையன் என்ன சொல்கின்றான் என்று, பின் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள். 

இதனால், நிச்சயம் ஒவ்வொருவரும், ஏன் எதற்கு சித்தர்கள், பின் உங்களுக்கு யாங்கள் அனைத்தும் கொடுக்க தயார். ஆனாலும், அதை வைத்துக்கொண்டு நீங்கள் நிச்சயம் தன்னில் கூட, மீண்டும் எதை எதையோ செய்துவிடுவீர்கள். (வசதிகள் வந்தால் கேடு  கெட்ட கர்மங்களை செய்து விடுவார்கள்)

அதனால் பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதாவது, நீங்கள் நிச்சயம், அதாவது 5 மதிப்பெண் எடுத்தால், உங்களுக்கு சொன்னால் என்ன புரியும்? 

அதே 20 மதிப்பெண்கள் இட்டு , நிச்சயம் என்ன சொன்னால் என்ன புரியும்? 

அதாவது, நீங்கள் ஒரு 60, 70 மதிப்பெண்கள் பெற்றால் தான், நிச்சயம் பின் அதை யாங்கள் சரியாக, உங்களை எடுத்துக்கொண்டு, உங்களுக்கு அனைத்தும் கொடுக்க முடியும்.  மோட்ச கதியும்  அளிக்க முடியும். 

====================================================
#         திருவண்ணாமலைக்கு வந்து கர்மங்களை               #
#              பெற்று செல்லும் அதிர்ச்சி ரகசியங்கள்                #
====================================================

நிச்சயம், பின் பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். (திருவண்ணாமலை கிரிவலம்) வலங்கள் வருகின்றார்கள். ஒவ்வொருவரும் எதற்காக வருகின்றார்கள் என்றால், நிச்சயம் பாவத்தை போக்க. 

ஆனாலும், நிச்சயம் பாவத்தை போக்க வரவில்லை. இன்னும் பாவத்தை இவ்வண்ணாமலையில்  சம்பாதித்து தான் செல்கின்றான். ஒவ்வொருவரும் புண்ணியத்தை சம்பாதிக்கவே இல்லை. நிச்சயம், பின் இது எத்தனை மடங்கு என்றால், பின் நூற்றுக்கு ஐந்து மடங்கு மட்டுமே பின் புண்ணியங்கள்  சம்பாதித்து செல்கின்றான். 

மற்றவர்கள் எல்லாம், நிச்சயம், பின் அண்ணாமலைகுச்  சென்றால் , கருமம் விலக வேண்டும் என்று வருகின்றான்,  (திருவண்ணாமலை கிரிவலம்) சுற்றுகின்றான். 

ஆனால், நிச்சயம், பாவத்தை சுமந்து கொண்டு, சுமந்து கொண்டு செல்கின்றானே. என்ன நியாயம்? 

—----------------------------------------------------------------------------------------------
( திருவண்ணாமலைக்கு வரும் 100 பேரில் , 5 பேர் மட்டுமே புண்ணியத்தை சம்பாதித்து செல்கின்றார்கள். மீதம் 95 பேர் கருமத்தை தான் சம்பாதித்து செல்கின்றார்கள்.)
—---------------------------------------------------------------------------------------------

என்ன? அப்பொழுது மனிதனுக்கு என்ன தெரியும் என்றால், நிச்சயம் ஒன்றும் தெரியாது. 

பூஜ்ஜியம். பூஜ்ஜியமே வாழ்க்கை. ஆனால், அப் பூஜ்யத்துக்குள்ளே , நிச்சயம் திரிந்து கொண்டிருக்கின்ற மனிதா !!  நிச்சயம் உன்னால் வர முடியவில்லையே. ஏன் வெளியே வர முடியவில்லை? பின் ஒன்றுக்கு வந்து விட்டால், நிச்சயம் (இறைவனை) ஏகனைப் பார்க்கலாம். 

ஆனால், பூஜ்ஜியத்துக்குள்ளே திரிந்து கொண்டிருக்கின்றீர்கள். எப்படி இறைவனை பார்க்க முடியும்? 

ஆனால், பின் நிச்சயம் யாங்கள் பார்க்க விடுவோம்  மனிதா, அறிந்தும் புரிந்தும். 

நன்றி கெட்ட மனிதா !!!!

இறைவனிடம் கேட்பது. இறைவன் கொடுக்காவிடில், இறைவன் இல்லை என்பது.

உயிரை பரிசாக அளித்திருக்கின்றானே. உடம்பை அழகாக பரிசாக அளித்திருக்கின்றானே. இதேவிட, பின் அதாவது நன்றி கெட்ட மனிதா, பின் உங்களுக்கு என்ன வேண்டும்? பின் உழைத்து வாழ வேண்டும். சொல்லிவிட்டேன். 

பின் கிரகங்களை அடக்கியவன் யான். பெருமிதமாக, இவ்வண்ணாமலையிலே யான், சொல்வேன். கிரகங்களை அடக்கியவன் யான். 

அதாவது, நிச்சயம், அதாவது இன்னும் இன்னும்  கூடிக்கொண்டே போகின்றது. 

பின் கிரகங்கள் , நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொருவரும் பின் அதிர்ஷ்டத்தை, நிச்சயம் அளிக்க தயார். ஆனால், அதற்கு நீங்கள் நிச்சயம் தகுதியானவர்கள் என்றால், நிச்சயம் இல்லை. 

அதிர்ஷ்டத்தை, நிச்சயம் பின் யானே சொன்னால், கிரகங்கள் அனைத்தும் கொடுத்துவிடும். ஆனால், அதிர்ஷ்டத்தை நீங்கள் பெற்றுக்கொள்ள எவ்வாறு அறிந்து புரிந்தும்.  

திருடனிடத்தில் அதிர்ஷ்டத்தை கொடுத்தால், நிச்சயம் திருடன் இன்னும் பல திருடர்களை உருவாக்குவான். ஆனால், அத்திருடனையும் நல் வழி படுத்த எங்களால் முடியும். 

அதனால், நிச்சயம் திருடனுக்கும் ஒரு வாய்ப்பை கொடுப்போம். அவ்வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டால், நிச்சயம் அத்திருடன் கூட வாழலாம்.  மற்ற திருடர்களையும் கூட பிழைக்க வைக்கலாம். இதை நிச்சயம், இதனால்தான் போராடிக் கொண்டிருக்கின்றோம். 

====================================================
#                                பக்தி என்ற கத்தி                                        #
====================================================

ஆனால், பக்திக்குள்ளே  இன்னும் மனிதர்கள் திருந்தவில்லை. போட்டி, பொறாமைகள். என்னிடத்தில் ஈசன் இருக்கின்றான். உன்னிடத்தில் இல்லை. என்னிடத்தில். அது பேசும். இது பேசும். 

அப்பப்பா, என்ன என்ன  பொய்கள்?  ஏனென்றால், கலியுகத்தில் இன்னும் வித்தியாசமான பொய்கள் எல்லாம் சொல்லுவான். ஏமாற்றுவான். 

ஏனென்றால், இன்னும் சித்தர்கள் சொல்லிக்கொண்டே. ஏனென்றால், இறைவன் இருக்கின்றானா? என்ன? இறைவன் எங்கு பார்க்க போகின்றான்? அதனால், சிறிது காலம் இறைவன் யார் என்று. 

அதாவது இறைவன் வேடத்தை வைத்து யாம் வாழ்வோம் என்று.

அதனால்தான், நன்றி கெட்ட மனிதன் என்று யாங்கள்  அதாவது மனிதனை நிச்சயம் உதைப்போம் இன்னும் கூட. 

பின் நன்றி கெட்ட மனிதனுக்கு, அதாவது இன்னும் அவ் புத்திகளால் வாழத் தெரியவில்லையே என்று  ஏது, எவை என்று அறிய. 

அது மட்டுமில்லாமல், இன்னும் வரும் காலங்களில் நிச்சயம் இறைவன், அதாவது அனைவருமே கஷ்டம் தான் பட போகின்றீர்கள் என்பதை எல்லாம் நிச்சயம் பின், இறைவனை வணங்கினாலும் ஒன்றும் நடக்கவில்லையே என்று இத்தனையும் சொல்லிவிட்டார்கள். 

பின் இறைவன் வேடத்தை அணிந்து கொண்டு  யான் முருகன், யான் பிள்ளையோன், யான் ஈசன், யான் பார்வதி, நிச்சயம் யான்  அதாவது முனியப்பன், இன்னும் எதை எதையோ சொல்லிக் கொண்டு நடிப்பான் அப்பா.

ஆனால் பின் நடிப்பதற்காகவே உங்களை இறைவன் இங்கே அனுப்பினான். 

அதாவது நீங்கள் எல்லாம் நடிப்பாளர்கள் தான். ஆனாலும், நிச்சயம் (பிறவிகடன் என்ற) இவ் நடிப்பை விட்டு விட்டு மிகப்பெரிய மகா நடிகனாக   நடித்துக் கொண்டிருக்கின்றீர்களே மனிதா?

இறைவனுக்கு என்ன தெரியாதா? 
இறைவனுக்கு என்ன கண் இல்லையா என்ன ? எதை என்று புரிய.

இதனால் பொய் பேசுவது இன்னும் இன்னும், அதாவது இறைவன், அதாவது கலியுகத்தில் அனைவரையுமே படைத்தான். கடைசியில் பார்த்தால், காலை இறைவன் பின் தலையிலே ஏறி மிதிக்கின்றான் . 
அப்பப்பா, அப்படி அதாவது அவ்வளவு பெரிய திருடன் மனிதன். 

அவ்வளவு நன்றி கெட்ட மனிதன். இதனால்தான் அப்பப்பா, ஒன்று திருந்துங்கள். திருந்தாவிடில் யாங்கள் அடித்து  திருத்தி . ஏனென்றால் பார்த்து பார்த்து எதை என்று புரிய. அவை உண்மை. இவை உண்மை. ஏது ? 

அதாவது இறைவன் என்றால் எப்படி பாசம் பொங்க வேண்டும்? ஈசன் இருக்கின்றான் என்றால், என் ஈசன் அவன்.   பின் என்  ஈசன் பக்தனா  என்று இருக்க வேண்டுமே தவிர, நிச்சயம் அவன் ஈசன் பக்தனா? யான் தான் ஈசன் பக்தன்.  (ஈசன்) என்னிடத்தில் இருக்கின்றான் என்று. 

அப்பப்பா உண்மையாக எதை என்று அறிய அப்பனே இங்கு அப்படி சொல்பவன் பொய்யானவனே. பக்தி என்பது என்னவென்றே தெரியாமல், அப்பா, நிச்சயம் வலம் வந்து கொண்டிருக்கின்றான் மனிதன்.

அதாவது நிச்சயம் அது பக்தி இல்லை அப்பா. நிச்சயம் பின் அவனுக்கு அவனுக்கே ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கத்தி என்பேன் அப்பனே  அவனே, அவன் தலையை வெட்டிக் கொள்கிறான் அவ்வளவுதான் என்பேன் அப்பனே. 

நிச்சயம், அப்பனே தற்பெருமை பேசுபவன்  எப்பொழுதும் அப்பனே பின் திடீரென்று கீழே விழுகின்றான் அப்பா. 

=======================================================
 #  அகத்திய மாமுனிவர் பக்தன் எப்படி இருக்க வேண்டும்? #
=======================================================

அதனால்  எதையும் எதிர்பார்க்காமல், நிச்சயம் தன்னில் கூட இறைவன் இருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட பின் அகத்தியன்.   

அகத்தியன் என்று சொல்லிவிட்டால் , (எங்கள்) தந்தையா !!!!! (என்று உடனே) நிச்சயம் ஓடோடி வர வேண்டுமே தவிர , நிச்சயம் பின்  அதாவது 
அவை பொய், இவை பொய் என்று சொல்பவர்களும் உண்டப்பா. 

அப்பா, அறிந்தும் எதை என்று  அறிய அப்பனே, அப்படி சொல்பவர்கள் கூட அப்பனே, அவன் பொய்யானவன். பொய்யானவனுக்கு அப்பனே, அனைத்தும் அப்பனே, நிச்சயம் எது என்று புரிய? உண்மையானவனுக்கு அனைத்தும் அப்பா, எது என்று புரிய அப்பனே.

இன்னும் இன்னும், அப்பனே, இவ்வாறு போட்டி பொறாமைகள் நிறைந்து, அப்பனே, இறைவனை கீழே வீழ்த்துவான்  அப்பா மனிதன் அப்பா. ஏனென்றால் , அப்பனே, அதற்குள்ளே யாங்கள்  நிச்சயம் மனிதனை கீழே தள்ளி விடுவோம் அப்பா. 

இதனால் ஏன் எதற்கு அனைத்துக்கும் காரணம் பின்  இறைவன் அப்பா.

இறைவனை எங்கிருக்கிறான்?  அப்பனே, ஈசன் யார் என்பதை கூட நிச்சயம் உங்களுக்கு தெரியாது அப்பா. நிச்சயம் வாக்கியத்தில் பல சித்தர்கள் வரட்டும். ஈசன் யார் என்பதை, எங்கு இருக்கின்றான் என்பதை தெளிவு படுத்துவோம்.

(அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் இடைக்காடர் சித்தர் உரைத்த வாக்கு தொடரும் )

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: