​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 29 November 2025

சித்தன் அருள் - 2025 - அகத்தியர் வாக்கு!



இங்கு ஏமாந்து போக நிறைய மனிதர்கள் இருக்கும் பொழுது, நீ ஏன் தெரிந்தே மாட்டிக் கொள்கிறாய்? தவறாக வாழ்ந்தவர்கள், சம்பாதித்தவர்கள், அரசாங்கத்திடமும், கோவில் நிறைவாகத்திடமும் ஏமாந்து போகிறார்கள், தான் சேர்த்துக் கொண்ட கெட்ட கர்மாக்களை இங்கு தொலைத்து விடலாம் என்று. அவர்களுக்கு புரிவதில்லை, செயலின் விளைவு, தண்டனையாக இனிமேல்தான் வரப்போகிறது என்று.

ஏமாற்றப்படுகிறோம் என உணர்ந்து, அமைதியாக புன்னகைத்து கொடுத்து செல்வது பல கர்மாக்களை கரையவைக்கும். நீ ஏமாறுவது இல்லாதவனிடமாகட்டும். இங்கு கர்ம பரிவர்த்தனை நடைபெறுவதை காணலாம். எந்த கர்மாவை கரைத்தாலும், எப்படி கரைத்தாலும், பிரம்மஹத்தி தோஷம் சேராமல் பார்த்துக்கொள். இறையே இறங்கி வந்து அழித்து விடு என்று உத்தரவிட்டாலும், மறுப்பதே உன் கடமை. மனிதன் உருவாக்க பிறந்தவன், அழிக்கவல்ல. அவன் உருவாக்குவது நல்லதாக இருக்கட்டும். இறைவனும், சித்தர்களும் ஆசீர்வதித்து வழி நடத்துவார்கள்.

அகத்தியப் பெருமான் வாக்கு!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

Friday, 28 November 2025

சித்தன் அருள் - 2024 - அன்புடன் அகத்தியர் - திருப்பதி வாக்கு!






27/11/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு 

வாக்குரைத்த ஸ்தலம்: திருமலை திருப்பதி.

இறைவா நீயே அனைத்தும். இறைவா நீ நன்றாக இருக்கவேண்டும்.

கோவிந்தா!!.... கோவிந்தா!!!

 ஆதி சிவசங்கரியின் பொற்கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன்.

 அப்பனே, நலங்கள்! அப்பனே, இன்னும் ரகசியங்கள் வருங்காலத்தில் எங்கு? எதை வைத்து சொல்ல வேண்டுமோ?, அங்கு நிச்சயம் தன்னில் கூட எடுத்துரைப்பேன். அப்பனே, கவலைகள் வேண்டாம்! அப்பனே,

 எம்முடைய ஆசிகள் அப்பனே!!

 ஒவ்வொன்றாக அப்பனே தான்... தான் விருப்பங்கள் எவ்வாறு? என்பவை எல்லாம் அப்பனே, பின் யாம் அறிவோம். அப்பனே,!!

 அதனாலே அப்பனே, பின் நல்விதமாக மாற்றங்களை எவ்வாறு? என்பவை எல்லாம் சில சில அப்பனே, பின் வழிகளில் கூட அப்பனே.!!!


 எத்தனை? அப்பனே, பின் குறைகள் எதை என்று அறிய அப்பனே, அவையெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, இன்றளவில் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ரகசியமாக !!!!.......

அதை யான் இப்பொழுது செப்பவில்லை. அப்பனே, 


நல்விதமாக ஆசிகளோடு அனுக்கிரகங்கள். அப்பனே, !!

இன்னும் அப்பனே, பின் பணம்! அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் வசதிகள்! அப்பனே, இன்னும் எதை என்று அறிய அப்பனே, பின் இன்பங்கள். அப்பனே, தேடி வருமப்பா,
 கவலைகள் வேண்டாம்! அப்பனே, நன்முறைகளாகவே அப்பனே, எதை என்று அப்பனே, எடுத்துரைக்க.!!!!!!



 அதனுள்ளே, அப்பனே, பின் நிச்சயம் வயது! அப்பனே
 பின் அனைவருக்குமே அப்பனே,




 பின் எதை என்று அறிய அப்பனே. அவை மட்டுமில்லாமல், பின் நல்விதமாகவே அப்பனே, பின் எதை என்று அறிந்து கொள்ள அப்பனே. அதனுள்ளே, காலங்கள் மனிதனுக்குச் சென்று விடுகின்றது என்பேன்  அப்பனே,

 இதனால் அறிந்து கொள்ள முடியாமலே, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, அனைத்தும் பின் அறிந்து கொள்வதற்கு அப்பனே, உடம்பு ஒன்றை அப்பனே, இறைவன் கொடுத்திருக்கின்றான்அப்பனே
 நிச்சயம் தன்னில் கூட

 ஆனாலும், அவைதன் அப்பனே, பின் நிச்சயம் மனிதன் பின் சரியாகவே பயன்படுத்துவது இல்லை என்பேன். அப்பனே, 


நிச்சயம் உலகம் எதை என்று புரிய. அப்பனே, அதி விரைவிலே, அப்பனே, சில மாய வித்தைகளால் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.

 அப்பனே, எதை என்று புரியாமலும் மனிதனும் கூட அப்பனே, அழிவுகளால் இதனால் உடம்பு கெட்டு. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உடம்பு அப்பனே, பாழாகின்றது.

 மீண்டும், அப்பனே, பின் தெரிந்து கொள்ள அப்பனே. இவ் ஆன்மா, அப்பனே, மீண்டும் அப்பனே, ஒரு உடம்பு தேடுகின்றது. அப்பனே, எது என்று புரிய.

 மீண்டும், மீண்டும், அப்பனே, தெரிந்து கொள்ள அப்பனே, முடியாமல். அப்பனே, பின் அவதிகள் பட்டு பட்டு. அப்பனே, பிறப்புகள் மனிதன் எடுத்து எடுத்து. அப்பனே, வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இக்கலியுகத்தில். அப்பனே, 

(சித்தர்கள் ஒவ்வொரு ஆத்மாவும் அதாவது ஒவ்வொரு மனிதனும் நல்வாழ்வு பெற முறையாக கடைப்பிடித்து வாழ வாக்குகள் கூறிக் கொண்டே வருகின்றார்கள் அதை மனிதன் பயன்படுத்துவதற்கு சக்திகள் இருந்தும் பயன்படுத்தாமல்.. அதை புரிந்து கொள்வதற்கும் கால அவகாசம் கிடைக்காமல் இறந்து மீண்டும் பிறப்பு எடுத்து மீண்டும் வந்து இப்படியே நடந்து கொண்டிருக்கின்றது)



இதனால் எதை என்று அறிய அப்பனே, எப்படி? மாற்றங்கள் மனிதனுக்கு கொண்டு வருவது என்பதை எல்லாம் அப்பனே, யாங்கள் தெளிவாக அப்பனே, வரும் வரும் வாக்கியத்தில் எடுத்துரைப்போம். அப்பனே, நலங்களாகவே!!


 இதனால் அப்பனே, குறைகள் வேண்டாம்! நல்விதமாகவே எதை என்று புரிய அப்பனே. இப்பொழுதும் கூட, அப்பனே, ஒரு ஞானியவனைப் பற்றி யான் இங்கு அப்பனே பேசுகின்றேன். நல்விதமாகவே!!


 அப்பனே, பின் கீழே அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. பின் அலமேலுமங்கா ... (ஊரில் ஞானியவன்).


(அலமேலு மங்காபுரம் அலர் மேல் மங்கை தாயார் பத்மாவதி தாயார் வீற்றிருக்கும் ஊர்)

 எதை என்று புரிய. நிச்சயம் இவை என்று அறிந்து கூட அப்பனே, நல்விதமாகவே எதை என்று அறிந்து கூட ஆனாலும், அப்பனே, பக்தியாக, பின் அதாவது நாராயணன் பக்தியாகவே திகழ்ந்தனர் என்பேன். அப்பனே, இருவரும்,
(கணவன் மனைவி இருவரும்)


 அதாவது பின் பன்மடங்காக, பின் சிறுவயதிலிருந்தே எதை என்று அறிய நாராயணன் தான் துணை என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட


 ஆனாலும், பின் வரங்கள் எதை எவை என்று பெற்றுக்கொள்ள ஆனாலும், பின் இறைவா, நீதான் அனைத்தும் செய்ய வேண்டும். அனைத்தும் நீதான் எங்களுக்கு, பின் வேறு சொந்தங்கள் இல்லை என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட அவர்கள் இருவரும். 



ஆனாலும், நிச்சயம் தன்னில் கூட அத் தம்பதிகள், நிச்சயம், பின் அதாவது பிள்ளைகளை, பின் பெற்றுக்கொள்வோம் என்பது எதை என்று அறிய தீர்மானம்.


 ஆனாலும், நிச்சயம் பெண் குழந்தை பிறந்ததப்பா. ஆனாலும், இப் பெண் குழந்தை எதை என்று அறிய அறிய!!!

 ஆனாலும், நிச்சயம் இவர்கள் இவ்வளவு? பக்தி கொண்டு, நிச்சயம் தன்னில் கூட நாராயணனிடம்,

 நிச்சயம் அதாவது வந்து   (மலையின் மீது) மேலேறி, நிச்சயம் எவ்வாறு என்பதை எல்லாம் உன் மீது பக்தி கொண்டோமே. நிச்சயம் இவ்வாறு ஏமாற்றிவிட்டாயே, பெண் குழந்தையாக,!!!!!


 பின் எதை என்று புரிய. நிச்சயம் எவை என்று அறியாமலும், பெண் குழந்தையை கொடுத்துவிட்டாயே,!!!!

 எவ்வாறு நியாயம்.???? நிச்சயம், பின் அதாவது இவ்வளவு பக்திகள் காட்டினேனே, நீ பொய் என்று.


அப்பனே, இதுதானப்பா, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன். அப்பனே, 


எப்பொழுது நம்பிக்கை இறைவன் மீது இழக்கின்றானோ!????, மீண்டும் அப்பனே, அவன் முதலில் இருந்து வருகின்றான் என்பேன். அப்பனே

, நிச்சயம் நம்பிக்கை வேண்டும். 


இதனால், அப்பனே, எதை என்று அறிய ஆனாலும், இவைதன் நிச்சயம் தன்னில் கூட. மீண்டும், இவர்கள் கீழே இறங்கி,........

 நிச்சயம் இங்குதான், பின் வணங்கிக் கொண்டு இருந்தோம்.

எதை என்று கூற, நாராயணனை, அதாவது இவ் அம்மையையும் கூட,
(நாராயணனையும் பத்மாவதி தாயாரையும் வணங்கிக் கொண்டிருந்தோம் என்று)

 எதை என்று புரிய ஆனாலும், நிச்சயம் தன்னில் அறிந்தும், எதை என்று புரிய.

 இப்படி, பின் இப்படிபட்ட (பெண்) குழந்தையை கொடுத்துவிட்டானே இனிமேல் பெருமானை வணங்கப் போவதில்லை. பின் நாம் இருவரும், நிச்சயம், பின் வேண்டாம். அமைதியாக இருந்து விடுவோம் என்று.

 ஏனென்றால், எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம், அப்பனே, இப்படித்தானப்பா, பேராசைகள் மனிதனுக்கு கலியுகத்தில், அப்பனே, பின் ஏற்படும் என்பேன். அப்பனே,

நிச்சயம், அப்பனே, இவ்வாறு, நிச்சயம், எவை என்று புரியாமலும், நிச்சயம், மனிதன் அலைந்து திரிந்து கொண்டு, எதை என்று புரிய.

 இதனால், அப்பனே, நிச்சயம், அக்குழந்தையை, நிச்சயம், அப்பனே, மனசாட்சி இல்லாமலே, அப்பனே, பின் எவை என்று அறிய அறிய, அப்பனே, குப்பை தொட்டியிலே வீசிவிட்டனர். 


அப்பனே, நிச்சயம், எவ்வாறு என்பதையும் கூட, பின் குழந்தையும் வேண்டாம், இறைவனும் வேண்டாம், போதும்.

 எதை என்று கூற வணங்கியதற்கு சரியாகவே!!.....

(நாம் வணங்கியதற்கு சரியாகவே கிடைத்து விட்டது என்ற விரக்தி நிலைப்பாட்டில்)



 இதனால்தான், அப்பனே, நிச்சயம், மனிதன், அப்பனே, ஏதோ ஒன்றுக்காகத்தான் இறைவனை நாடி நாடி வருகின்றான்.


 ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம், அவ்வாறு, பின் எவ்வாறு? என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம், பின் நாடி நாடி வந்து, அப்பனே, இறைவன் கொடுக்காவிடில், அப்பனே, பின் ஏன்,?? இறைவா????? என்றெல்லாம், அப்பனே,


 நிச்சயம், இறைவன் மீதே கோபித்துக் கொண்டு!!!!!!!!!!.


 ஆனாலும், அப்பனே, எதற்கு?, ஏன்?, எவை என்று கூற, ஏன்?, எதற்கு? கஷ்டங்கள், எதற்காக?, பின் எவை என்று கூற, நிலைகள், இன்னும், பின் பிரிவு நிலைகள் என்பதை எல்லாம் மனிதன் யோசிப்பதே இல்லையப்பா.


 இதனால், அப்பனே, பின் அதனுள்ளே அவசரங்கள் பட்டு, நிச்சயம் தன்னில் எதை என்று புரிய, பின் அறிய, எவை என்று புரியாமலும்,!!!

 ஆனாலும், நிச்சயம், எதை என்று, பின் கொங்கணனும் கூட. (கொங்கணர் சித்தர்) நாராயணனே, பார்,!!!!!


 அதாவது இவ்வளவு பக்திகள் உன்னிடத்தில் செலுத்தினார்கள், எதை என்று புரிய,!!!

 நீயும், பின் காசுகள் பொங்கி பொங்கி, பின் வழிந்து, எதை என்று கூற, லட்சுமி தேவியின் அருளும் கூட,!!!

 எவை என்று கூற, லட்சுமி தேவியே!!!!!!, நிச்சயம், எதை என்று அறிய அறிய, அதாவது கொங்கணனும் இங்கிருந்தே, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, வாரி வாரி கொடுத்தாயே!!!!!!!. இவர்களுக்கு, 
நிச்சயம்!!!


 இவர்களுக்கு, எவ்வாறு ??மனசாட்சி??!!!!!!!! 

(என்று கொங்கணர் சித்தர் நாராயணனை லட்சுமி தேவியை பார்த்து!!!!!)

எதை என்று அறிய, நாராயணன் யோசித்தான், 

எவை என்று புரிய, மனிதன் கலியுகத்தில் இப்படித்தானப்பா, நிச்சயம், தன்னில் அறிந்தும் புரிந்தும் கூட,


 அப்பனே, எவை என்றெல்லாம், அப்பனே, இறைவனை கூட, அப்பனே, ஏதாவது ஒரு காரியத்திற்காகவே அனைத்தும் செய்வானப்பா.




 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் எவை என்று அறிய,

 இறைவன் கேட்காமலே, நிச்சயம், தன்னில் கூட, பின் அதைத் தா !!! இவை தா!! என்றெல்லாம் சொல்லி சொல்லி செய்வானப்பா.


 இதனால், அப்பனே, நிச்சயம், கொங்கணனும் கூட,  அறிந்தும், இவை என்று அறிய, 

எப்படி?, நாராயணனே, பின் உன் பக்தர்கள் என்று சொல்லிக்கொண்டு, பின் திரிகிறார்கள்.

 ஆனால், வெட்கக்கேடு உனக்கே தான் என்றெல்லாம்,


 நிச்சயம், அதாவது அறிந்து கொடு!! வரத்தை,!!...... இனிமேலாவது,!!!

 நிச்சயம், தன்னில் கூட என்றெல்லாம்.


 அதனால்தானப்பா, நிச்சயம், பின் அதாவது திருமலைக்கு வருகின்ற பொழுதெல்லாம், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவ்வளவு எளிதாக, மனிதனுக்கு வரங்கள், நிச்சயம், தன்னில் கூட, நாராயணன் கொடுப்பதே இல்லை என்பேன் அப்பனே 


அப்பனே, எதை என்று புரிய, ஏனென்றால், அப்பனே, நிச்சயம், இக்கலியுகத்தில், மனிதன் இறைவனே ஏமாற்றுவானப்பா.

 அவை மட்டுமில்லாமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவை என்று புரிய, அப்பனே, மனிதனின், அப்பனே, பின் கை அப்பனே, ஓங்குகின்ற, எதை என்று புரியாமலும் கூட, அப்பனே, பின் அழிவானப்பா.
 நிச்சயம், தன்னில் கூட

பின் வருங்காலத்தில், அப்பனே, பின் இறைவன் எங்கு?, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, ஏனென்றால், மாயைகளில் சிக்கி சிக்கி அழிந்து கொண்டே வருவார்களப்பா.

 மந்திரங்கள் மறையுமப்பா. 

அப்பனே, நிச்சயம், நல்லோர்கள் மறைவார்களப்பா.

 ஏனென்றால், தீயவர்கள் அதிகரித்து, அப்பனே, நல்லோர்களை ஒழிக்க பார்ப்பார்கள் என்பேன். அப்பனே, 


ஆனாலும், அதனால்தான், அப்பனே, சித்தர்கள் யாங்கள் கலியுகத்தில், அப்பனே, எவ்வாறெல்லாம் வந்து, மனித குலத்தை காக்க வேண்டும்!!! என்பதை எல்லாம் வந்து வந்து காத்துக் கொண்டே இருக்கின்றோம். அப்பனே,


இதனை எவ்வாறு சொல்ல, ஆனாலும், அப்பனே, எத்தனை? எத்தனை?, நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரிய, ஆனாலும், பின் அப்பனே, அவ் தம்பதியினர், எத்தனை? எத்தனை?, அப்பனே, பின் பரிகாரங்கள், எத்தனை? எத்தனை?, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ்வாறெல்லாம், திருத்தலங்கள், அப்பனே, பின் எத்தனை ? எத்தனை?, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, எவ்வளவு? எவ்வளவு?, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, செய்ய வேண்டுமோ, அவ்வளவு எல்லாம் சுற்றி சுற்றி, 


ஆனாலும், அப்பனே, 
இப்படி ஒரு மனதை படைத்தவன், அப்பனே, எதை என்று புரிய, அப்பனே, அனைத்தும் வீணாகிவிட்டது.

அதனால்தான், அப்பனே, மனம் தெளிவடைய வேண்டும், தெளிவாக இருக்க வேண்டும். அப்பனே, !!

தெளிவாக இல்லாவிடில், அப்பனே, நிச்சயம், எவ்வளவு? பூஜைகள், எவ்வளவு எதை என்று அறிய, அப்பனே, செய்தாலும், அப்பனே, நிச்சயம், தோல்விகளே, அப்பனே, உண்டு.


 இதைத்தான், அப்பனே, சொல்லுகின்றேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,!!

 இதனால், முதலில், அப்பனே, பின் நல் மனதாகவே வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பேன். அப்பனே,

 அனைத்தும் ஒன்றே, அப்பனே, அன்பு, அனைத்து இடத்திலும் காட்ட வேண்டும் என்பதை எல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, மனதாலே நினைத்து, இறைவனை, அப்பனே, பின் பல வடிவில் கூட, அப்பனே, பின் நல் மனதோடு வாழ்ந்திட்டு வந்தாலே, அப்பனே, போதுமானதப்பா,

 இறைவன் அழைப்பானப்பா, எப்பொழுதும் கூட,
 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,


 இவ்வாறாக, பின் மாற்று முறையில் செயல்பட்டாலும், அப்பனே, நிச்சயம், இறையருள்கள், அப்பனே,

 ஆனாலும், அப்பனே, பின் நிச்சயம், இவ்வாறெல்லாம், நல் மனதாக, பின் இல்லை. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் எவை என்று புரியாமலும், எவை என்று எல்லாம் திரிந்து, எதை என்று அறிந்து கொள்ளாமலும் கூட,


 இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் அதாவது குழந்தையை குப்பை தன்னில் வீசிவிட்டு, எதை என்று அறிய


 ஆனாலும், நிச்சயம், பின் யார்?? காப்பாற்றுவார்கள்,???


 நிச்சயம், தன்னில் எதை என்று (திருமலையில் இருந்து) இங்கிருந்து, பின் ஓடோடி, பின் கொங்கணனும் சென்றானப்பா.!!

 நிச்சயம், பின் குழந்தை அழுது கொண்டே!!!!!, எதை என்று புரிய,


 ஆனாலும், பின் யார்? குழந்தை??, யார்??? குழந்தை,?? 

 என்று பின் அனைவருமே !!!
(அங்கு கூடியிருந்தவர்கள்)


 ஆனாலும், சிலர், பின் அப்பனே, பின் அவ்வாறாக, இவ்வாறாக,!!! (மனம் போன போக்கில் பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள்)



 இவையெல்லாம் கலியுகத்தில் தான் நடந்ததப்பா. நிச்சயம், தன்னில் கூட,

 ஆனாலும், நிச்சயம், எவை என்று அறிந்தும் கூட,

 ஆனாலும், அனைவரும், பின் (அக்குழந்தையை) பார்த்துவிட்டு, நிச்சயம், தகாத உறவில் பிறந்தவள் என்றெல்லாம், 

நிச்சயம், இன்னும் பலர், நிச்சயம், தன்னில் கூட, எவை என்று புரியாமலும் கூட, யாரோ ஒரு அனாதை, பின் அதாவது எவை எவையோ சொல்லிக் கொண்டிருந்தார்கள், அப்பனே.


 ஆனாலும், ஒருவர் கூட நல் மனதாக, இக்குழந்தை எடுத்து, பின் ஏதாவது, பின் செய்வோம் என்றெல்லாம் (எண்ணம்) வரவில்லையே.

 அப்பனே, இதுதான், அப்பனே, பக்தியா?????


, இக்கலியுகத்தில் இப்படித்தான் பக்திகள் இருக்குமே. அப்பனே, தன் சுயநலத்திற்காகவே அனைத்தும் செய்வானப்பா. 

பிறர் நலம், பின் அறியாமை, அப்பனே, பின் பிறர் நிலைமை அறிந்து கொள்ள, அப்பனே, பின் அவந்தனக்கு எதை என்று அறிய, அப்பனே, பின் அதாவது புண்ணியம் இருக்க வேண்டுமப்பா.

 சொல்லிவிட்டேன், அப்பனே,


 பிறர் நலனை அறிந்து கொள்ளவே புண்ணியங்கள் இருக்க வேண்டும்.


 அப் புண்ணியங்களுக்காகத்தான், அப்பனே, உங்களை, அப்பனே, பின் பக்குவப்படுத்தி, பக்குவப்படுத்தி!!!!!.


 இதனால், அப்பனே, இறைவன், அப்பனே, குருடன் இல்லை,

 சொல்லிவிட்டேன், அப்பனே. 

நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, மனிதன் கண்கள்தான் குருடு,

 எவை என்று புரிய பார்க்க முடியும் என்பேன். அப்பனே, பல பரிசுத்த, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, புண்ணியங்கள் செய்து கொண்டே வந்தால், அப்பனே, பின் குருடனும்,  கூட, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் நீடூடி வாழலாம் என்பேன். அப்பனே, 


இதனால், அப்பனே, பின் சுயநலக்காரன், குருடக்காரன் என்பேன். அப்பனே, 

நிச்சயம், அனைவரும், அப்பனே, இறைவனை காணாதவர்கள் குருடர்கள் என்பேன். அப்பனே, 

நிச்சயம், அக் குருடை அப்பனே, அக் குருடு, (குருட்டு கண்களை ) பின் கண்ணை வைத்துக்கொண்டு, அப்பனே, எப்படியப்பா?????, இறைவனை காண முடியும்? 

எப்படியப்பா????, நலங்கள், பின் ஆக முடியும்?


 சொல்லுங்கள், நீங்களே என்பேன் அப்பனே.


 இதனால், அப்பனே, அக்குருட்டை, அப்பனே, அக்குருட்டு, பின் கண்ணை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் மாற்ற, பின் எங்களால் மட்டுமே முடியும் என்பேன். அப்பனே,


 அதனால்தான், அப்பனே, எத்தனை?, எத்தனை?, அப்பனே,  எவை, எவை என்றெல்லாம், அப்பனே,


 வருங்காலத்தில் பலமாக தண்டனைகள் இருக்குமப்பா. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,
 ஏனென்றால், நல்லோர்களை தீயோன், அப்பனே, பின் கெடுப்பானப்பா.

 இதனால், அப்பனே, அத்தீயோர்களை யாங்கள், நிச்சயம், பின் விட்டு விட மாட்டோம்,

 பின் அழித்து நொறுக்குவோம், அப்பனே. சொல்லிவிட்டோம்,
 அப்பனே, 


ஏனென்றால், அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட செல்லமாக, பின் அப்பனே, பின் தாயே!!, பின் தந்தையே!!!, பின் குழந்தாய்!!!, இன்னும் எதை என்று கூற, மகனே!!, மகனே!!! என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், அப்பனே, எவை என்று அறிய,

(வாக்குகளில் அப்பனே அம்மையே என்று மனித குலத்தின் மீது பாசம் காட்டி வாக்குகள் தருவதை)



 அப்பனே, கோபங்கள் எவ்வாறு, பின் ஏன்? சொல்லலாம் என்றெல்லாம், அப்பனே, சில மனிதர்களும் கூட, அப்பனே, 

(அப்பனே அப்பனே அம்மையே அம்மையே என்று சித்தர்கள் பாசத்தோடு அழைப்பதை கூட சில மனிதர்கள் பரிகாசம் செய்கின்றார்கள்)



பின் எதை என்று புரிய, ஆனாலும், புரிந்து கொள்ள இயலாதப்பா.

(எதற்காக அப்பனே அம்மையே என்று சித்தர்கள் அழைக்கின்றார்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடியாது)


இதனால், அப்பனே, பின் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன், அப்பனே, பின் சித்தன் வழியில் வருவதற்கும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அதை பயன்படுத்துவதற்கும், அப்பனே, பின் நிச்சயம், தகுதிகள் வேண்டுமப்பா.

அத் தகுதிகள் மனிதனிடத்தில் குறைந்து கொண்டே வருகின்றது,!!!

 ஏனென்றால், அப்பனே, மனிதன் சுயநலக்காரன்!!, குருடக்காரன்!!,  என்பேன். அப்பனே,

 அக்குருடனுக்கு என்ன சொன்னாலும் தெரியாதப்பா. எவை என்று அறிய, அப்பனே, பின் இறைவன், அப்பனே, பின் அருகிலே இருப்பான், 

ஆனாலும், பின் குருடால், அப்பனே, காண முடியாதப்பா.

இக் குருடானது எவை என்று கூட, பாவமே என்பேன், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. 


அதனால்தான், அப்பனே, முதலில் எதை தொலைக்க வேண்டுமோ?, அதை தொலைத்திட வேண்டும் என்பேன். அப்பனே


மாற்றங்கள், அப்பனே, பின் எவ்வாறு என்பதை எல்லாம், அப்பனே, நீதி, நேர்மை, தவறாமல் வாழ வேண்டும், அப்பனே, தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 

தர்மத்தை கடைபிடித்து, கடைபிடித்து வாழ்ந்து வந்தாலே, அப்பனே, போதுமானதப்பா.

 அப்பனே, யாங்கள் உதவிகள் செய்வோம் என்போம், அப்பனே.

 அப்பனே, இதனால், அப்பனே, இன்னும் இன்னும் பல வகையிலும் கூட, அப்பனே, பின் இவ்வாறாக,....அக் குழந்தையை யாருமே பின் தொடவில்லையப்பா. எதை என்று புரிய,

 அப்பனே, ஆனாலும், கொங்கணனும் கூட, எதை என்று புரிய, அப்படி ஆனாலும், பின் வெவ்வேறு, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, அக் குழந்தையை, அப்பனே, பின் நிச்சயம், பக்தர்களே இவ்வாறுதான் சொன்னார்கள்..... அக்குழந்தை எடுத்துவிட்டால், தீட்டாகிவிடும்.

 இதனால், நிச்சயம் வேண்டாம், ஏதோ இறைவனே கொடுத்த தண்டனை என்றெல்லாம், அப்பனே, சிலர், நிச்சயம், தன்னில் கூட,

 பின்  என்ன பாவம் செய்துவிட்டதோ? என்றெல்லாம், இக்குழந்தை,

 பின் பாவம் செய்த குழந்தை என்றெல்லாம், அப்பனே,

 இவ்வாறெல்லாம் பல வழியில் கூட, அப்பனே, ஆனாலும், கொங்கணனும் கூட, ஓடி ஓடி, நிச்சயம், தன்னில் கூட, பின் அக்குழந்தையை தூக்கி, அப்பனே, நிச்சயம்,


 ஆனாலும், பலர்கள், பலர், எவை என்று அறிய, பின் யாரும், பின் தொடாதே, தொடாதே, பின் அது தீட்டு, எதை என்று கூற, பின் பாவம், எதை என்று புரிய, அதை குழந்தையை தொட்டுவிட்டால், உந்தனுக்கும் அப்படியே வந்துவிடும், பின் என்றெல்லாம், நிச்சயம்,


 ஆனாலும், வந்தது கொங்கணன் என்று, பின் யாரும் அறியவில்லை.

 ஏனென்றால், அனைவருமே குருடர்களப்பா.

 அப்பனே,
 யாங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றோம், மக்களுக்கு, பின் காட்சிகள் தந்து கொண்டே தான்,!!!...

(மனித ரூபத்தில் சித்தர்கள் வலம் வந்து கொண்டே இருக்கின்றார்கள் மனிதர்களை சந்தித்துக் கொண்டே இருக்கின்றார்கள் மனிதர்களாகிய நமக்கு தான் அதை உணர முடிவதில்லை)


 எவை என்று கூற, பின் பார்க்க, பார்க்க, ஆனாலும், அப்பனே, குருட்டு கண்களை வைத்துக்கொண்டு, அப்பனே, பின் மனிதன் என்ன செய்தாலும் முடியாது, அப்பா. சொல்லிவிட்டேன், அப்பனே.

 இதனால், அப்பனே, அக்குருட்டு கண்ணை, அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய, அறுவை சிகிச்சை தான் செய்ய வேண்டும் என்பேன். அப்பனே,

 அவ் அறுவை சிகிச்சைக்கு, அப்பனே, யாங்கள், நிச்சயம், அப்பனே, பின் துணை நிற்போம் என்போம். அப்பனே, 


இவ்வாறாக, இக்குருட்டு கண்ணையே, அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, சிகிச்சையை, அப்பனே, பின் செய்யாவிடில், மற்ற நிச்சயம், அப்பனே, உறுப்புகள் தானாகவே பழுது அடைந்து விடும் என்பேன். அப்பனே,

 தெரிந்து கொள்ளுங்கள், உண்மை நிலையை, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,

 பின் அப்பனே, நீடூழி வாழுங்கள். அப்பனே, நிச்சயம், புண்ணியங்கள் செய்யுங்கள். அப்பனே

, பின் சுயநலக்காரராக இருக்காதீர்கள் என்பேன். 

அப்பனே, நிச்சயம், ஏனென்றால், கலியவன், அப்பனே, விடப்போவதில்லை உங்களை. அப்பனே,

 இதனால் தான், அப்பனே, நிச்சயம், அப்பனே, இவ்வாறாக, நல்லோர்கள் எவை என்று புரிய, அப்பனே, தீயவன், அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, நல்லோர்களை வாழ வைக்கவும் மாட்டான் என்பேன். அப்பனே,

 அதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, பின் யாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து, முதலில் தீயவர்களை அழித்தால், அப்பனே, நல்லவன், அப்பனே, பின் நிச்சயம், தன்னில் கூட, எவ்வாறாக, நல்லோன், தீயோன், அப்பனே, இவ்வாறெல்லாம், அப்பனே, செயல்படுகின்றது என்பேன். அப்பனே,


 இப்பொழுது, பின் சொன்னேனே, அப்பனே, இவர்கள், பின் இவர்களை எதில், எவ்விடம்??, இவர்களை சேர்ப்பது என்பேன். அப்பனே,

(கூடியிருந்தோர் குழந்தையை தொட்டால் தீட்டு என்று மனசாட்சி இல்லாமல் பேசியோரை எந்த வகையில் சேர்க்க வேண்டும் என்று)


 இதுதான், அப்பனே, பின் கீழ்த்தரமான எண்ணங்கள், அப்பனே, மேல்தரமான எண்ணங்கள். அப்பனே, இவை இரண்டுமே, அனைத்தும் காரணம், அனைத்தும் இரண்டு, இரண்டே. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 


ஆனாலும், பின் அழகாகவே, நிச்சயம், கொங்கணனும், அப்பனே, தூக்கிட்டான். ,

 ஆனாலும், இவை என்று அறிந்து, நிச்சயம், குழந்தை சிரித்தது. எதை என்று புரிய, நிச்சயம், தன்னில்,

 எவை என்று கூற, பின் அழகாக சிரித்தது. ஆனாலும், நிச்சயம், பின் கொங்கணனும், எதை என்று அறிய, பின் எதை என்று புரிய, குழந்தைக்கு ஒன்றுமே தெரியாதே....... ஆனாலும், நிச்சயம், சிரிக்கிறதே என்றெல்லாம், என்ன மாயம்? என்றெல்லாம்.

ஆனாலும், அனைவரும், நிச்சயம், தன்னில், எதை என்று அறிய, பின் இது கொங்கணன். பின் அதாவது, இவனுடைய குழந்தை தான் என்றெல்லாம், தீர்மானம்  அறிந்தும் கூட, பின் அதாவது, இவனே தான், நிச்சயம், பின் அதாவது, இங்கு இட்டுவிட்டு, மீண்டும் நடிக்கின்றான் என்றெல்லாம்.

நிச்சயம், பின் இவனை, நிச்சயம், பின் சாடுங்கள் என்பதைல்லாம்!!!


 ஏனென்றால், குழந்தை இவனை பார்த்து சிரித்து விட்டது அல்லவா?

 நிச்சயம், எதை என்று புரிய, இதனால் ஒன்றும் எதை என்று அறிய, ஆனாலும், பின் தெரியவில்லை. கொங்கணனுக்கு,!!!!
 நிச்சயம், அடடா!!!!....
அறிந்தும் கூட, ஏன்? எதை என்று கூட, ஒரு நிமிடம், அப்படியே நின்றுவிட்டது. அனைத்தும் ஓடவில்லை,...

(ஒரு நிமிடம் அப்படியே கொங்கணர் சித்தருக்கு ஸ்தம்பித்தது)


 நிச்சயம், ஆனாலும், இவன்தான் திருடன். ஏதோ, பின் குழந்தையை வீசிவிட்டான், மீண்டும் பாசத்திற்காக ஓடி வந்துவிட்டான்.

 இதனால், இவனை அடியுங்கள் என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, இதுவும் ஒரு செயலே. அப்பனே, 

ஏனென்றால், இங்கு அதுவும், பின் அவன் எதை என்று அறிய, எதுவும் புரியவில்லை. பின், நிச்சயம், தன்னில் கூட, மனிதன் இவ்வாறுதான், அப்பனே, இறைவனை புரிந்து கொள்வான் என்பேன். அப்பனே, இக்கலியுகத்தில், அப்பனே, 


பின் யோசியுங்கள். அப்பனே, அப்படியும்!?!?! இப்படியும்!?!?!?!, எதை என்று புரிய, 

இதனால், அப்பனே, அனைவரும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அறிந்தும், புரிந்தும், அப்பனே, கற்களை வீசினார்கள் என்பேன். அப்பனே,


 நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், எது என்று, எவை, எவை எல்லாம் கைக்கு வருகின்றதோ, அவையெல்லாம் எடுத்து, (வீசினார்கள்) அப்பனே, 

பின் இன்னொருவன், பின் எதை என்று புரிய, ஆனாலும், இவந்தன், பின் இப்படி செய்துவிட்டானே. நாளை பொழுது, அக்குழந்தையையும் சாகடிக்கலாம். அதனால், நிச்சயம், தன்னில் கூட, அனைவரும் சேர்ந்து, இவர்கள் இருவரையுமே, பின் எரித்து விடுவோம் என்றெல்லாம். அப்பனே, 


இதனால், எதை என்று புரிய, ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, நாராயணன், பின் நிச்சயம், அனைத்தும் பார்த்துக் கொண்டிருந்தான்.

 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின் கொங்கணனும் நினைத்தான். எவ்வாறு, எதை என்று புரியா நிலைக்கும் கூட,

 இவ்வாறாக எல்லாம், பின் நடக்கின்றதே என்பவை, எதை என்று புரிந்து கொள்ள, பின் அனைத்தும், பின் லீலையே, உன்னுடைய லீலையே என்றெல்லாம், 
பின் பரிசுத்தமாக, எவை என்று அறிய,

(நாராயணனின் லீலை என்று)


 நிச்சயம், தன்னில் கூட, அனைவரும்

 (கொங்கணரையும் குழந்தையையும் சுற்றி)

 பிடித்துக் கொண்டனர்.

 ஆனாலும், அப்பனே, நிச்சயம், கொங்கணனுக்கும், பல சக்திகள் இருக்கின்றது என்பேன். அப்பனே,

 ஆனாலும், பின் கொங்கணன் நினைத்திருந்தால், அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய, அப்பனே, எவை என்று அறிய, அவையெல்லாம், (அவர்களையெல்லாம்) பின் தூளாக, அப்பனே, பின் செய்துவிட்டிருக்கலாம் என்பேன். அப்பனே,

 ஆனாலும், அப்பனே, அமைதி காத்தானே!!!!!!!!!!!. அதுதான், அப்பனே, உண்மையான பக்தி. அப்பனே, 

நிச்சயம், பின் அறிந்து கூட, அனைத்தும் தெரிந்து கொண்டவன். அப்பனே, அமைதி காப்பான். அப்பனே,


 நிச்சயம், பின் ஒன்றும், அப்பனே, பின் எதை என்று கூற, பின் அரை குறையாக, பின் அப்பனே, பின் நிச்சயம் தெரிந்து கொள்ளவன் தான், அனைத்தும் சொல்லிக் கொண்டிருப்பான் என்பேன். அப்பனே,


 இதனால், பின் அனைத்தும், ஆனாலும், கொங்கணனும் நினைத்தான். பின் இதுவும், நாராயணா!!!!, உன் செயலே என்றெல்லாம், 

எதை என்று புரிய, ஆனாலும், இவை என்று புரிந்தும், எவை என்றும் அறிந்தும் கூட, மீண்டும், பின் அனைவரும், நிச்சயம், தன்னில் கூட, இதனால், அமைதியாக கட்டிட்டு, எதை என்று புரிய, 

(மரத்தில் கொங்கணர் சித்தரோடு குழந்தையும் சேர்த்து கட்டிப்போட்டு விட்டார்கள்)



இன்னும் கூட, மரங்கள், பின் அங்கேதான்,

(இன்னும் கூட அந்த மரங்கள் இப்பொழுதும் கூட இருக்கின்றது கொங்கணரை கட்டிப்போட்ட மரம்)

 நிச்சயம், கட்டிட்டு, நிச்சயம், ஒவ்வொன்றாக!!!, இவை, எதை என்று கூற, பின் அறிந்தும் கூட, பின் ஒவ்வொன்றாக, நிச்சயம், தன்னில் கூட, கட்டைகள் எல்லாம், பின் அடுக்கத் தொடங்கினர் என்பேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட,

(மரத்தில் கட்டி போட்டு எரியூட்டுவதற்கு விறகு கட்டைகளை அடுக்கினர்)


 ஆனாலும், கொங்கணன் என்ன, எவை என்று அறிய, நாராயணனே!!!!!!, பின் அனைத்தும், எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, நடக்கட்டும், நடக்கட்டும் என்று, !!!


அப்பனே, இப்படித்தானப்பா, நிச்சயம், உண்மையுள்ள பக்தன், பின் நிச்சயம், நினைப்பானப்பா,


 எவ்வளவு? கஷ்டங்கள் வந்தாலும், நிச்சயம், தன்னில் கூட, எவ்வளவு, பின் அடி அடித்தாலும், நிச்சயம், இறைவா, உன் லீலை நடக்கட்டும், நடக்கட்டும் என்று,!!!!!

 இதுதானப்பா, பக்குவம் என்பேன். அப்பனே,

 அவ் பக்குவம், அப்பனே, மனிதனிடத்தில் இல்லையப்பா,

 அப்பனே, அவ் பக்குவங்கள் எப்பொழுது வருகின்றதோ,??? அப்பனே, அப்பொழுதுதான், அப்பனே, நிச்சயம், எதை என்று அறிய, மனிதன்!!!, மனிதன் ஆகின்றான் என்பேன். அப்பனே, 


ஆனால், அவ் பக்குவங்கள் வரவில்லை என்றால், அப்பனே, மனிதன், அப்பனே, சொல்வதற்கே!?!?!?!?!?!?!

, அப்பனே  நிச்சயம், எதை என்று கூற, மனிதனே, இல்லையப்பா,...........

 அவ்வளவுதான்!!!!!!!!!,

எதை என்று புரிய, அனைவரும் ஒன்று கூடினார்கள். அப்பனே, பின் எதை என்று புரிய, ஆனாலும், பின் கொங்கணனும் ஒன்றும், ஒன்றுமே, பின் நினைக்கவில்லை.

 நாராயணன் காப்பாற்றுவான் என்று கூட, (நினைக்கவில்லை)
 எதை என்று புரிய,


 ஆனாலும், (நடப்பது) நடக்கட்டும்!!, நடக்கட்டும்!! என்று, 


ஆனாலும், குழந்தையை பார்த்து, நிச்சயம், குழந்தை கூட, ஒன்றும் தெரியாமல், சிரித்துக் கொண்டே இருந்தது.


 ஆனாலும், நிச்சயம், அப்பொழுது கூட, பின் எதை என்று புரிய, எவை என்று அறிய, நிச்சயம், ஏதோ, எவை என்று புரியாமலும், எதை என்று அறியாமலும், திகைத்தான். பின் கொங்கணனும் கூட, 

அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அவை எவை என்று அறிய, கொங்கணன் அனைத்தும் உணர்ந்தவன்.

 அப்பனே, பின் ஒரே ஒரு மணி, எவை என்று அறிய ஒரு மணி, துளியில் கூட, அனைத்தும், அப்பனே, பின் நிச்சயம், அப்படியே அழித்திருவான்.


 ஆனாலும், அமைதி காத்திருக்கின்றான் என்றால், அப்பனே, யோசியுங்கள். அப்பனே, 


பின் இறைவன் மிகப் பெரியவனாகவே இங்கு திகழ்கின்றான்.


 இதனால், அவன் அருளாலே, பின் அனைத்தும் நடக்கின்றது என்பதெல்லாம், அப்பனே, நிச்சயம், அப்பனே, மனிதன் உணர வேண்டும் என்பேன். அப்பனே

அவ் மனிதன் உணரவில்லை என்றால், அப்பனே, நிச்சயம், பின் எப்படி யாங்கள் எதை செய்தாலும், அப்பனே, நிச்சயம், பின் ஏற்றுக்கொள்ள முடியாதப்பா, பின் ஏற்கவும்  ஏற்றுக்கொள்ளவும், எவை என்று கூட, இறைவன் தயங்குவான் என்பேன். அப்பனே, 


இதனால், நிச்சயம், ஆனாலும், இன்னும் சோதிப்போம், 

எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, அறிந்து கூட, நாராயணனும் மௌனம் காத்திருந்தான். எதை என்று புரிய,


 ஆனாலும், நிச்சயம், பின் அதாவது, கீழே,!!(அலமேலு மங்காபுரத்தில்) எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் தேவியும், பின் அமைதி காத்திருந்தாள். 
(பத்மாவதி தாயார்)




ஆனால் என்னதான்??, பின் நடக்கும் என்றெல்லாம், நிச்சயம், ஆனாலும், எதை என்று புரிய, ஆனாலும், எதை என்று அறிந்தும், புரிந்தும் கூட, பின் எவை என்று அறிய,



 நிச்சயம், பின் """"""" கோ.  !!!!!!!!!!!!! ஒன்று அறிந்தும்,

(ஒரு பசு கோமாதா)


 அழகாக, எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, பின் எதை என்று அறிந்து கூட, பின்..... கோ......(கோமாதா) அறிந்தும், எதை என்று கூற, பின் தன் பிள்ளைகளோடு உலா வந்தது, நிச்சயம், தன்னில் கூட.


(ஒரு பசு தன் கன்றுகளோடு இந்த சம்பவம் நடக்கும் இடத்திற்கு அருகில் வந்தது)


 ஆனாலும், இதை என்று புரிந்தும், அளவிற்கும் கூட, அறிந்தும், எதை என்று எவ்வாறு என்பதை எல்லாம்,  அக் கோமாதாவும், நிச்சயம், தன்னில் கூட, வலங்கள் வந்து கொண்டு, (சுற்றித்திரிந்து கொண்டு)



 ஆனாலும், நிச்சயம், பின் அது, பின் அதுவும் கூட, உணவும், நிச்சயம், தன்னில் கூட, உண்ணவில்லை. பல, பின் நிச்சயம், தன்னில் கூட, நாட்கள்,


 ஆனாலும், கத்திக்கொண்டே இருந்தது!!!

, நிச்சயம், தன்னில், எவை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட

 எதை, எதை, அறிய, அறிய, இதனால், பின் கத்தியது, எவை என்று, பலமாக, பின் அம்மா!!!!!!, அம்மா!!!!!, நிச்சயம், எதை என்று அறிய, பின் பிள்ளைகளும் கூட,
(கன்றுகளும்)

 எதை என்று, ஆனாலும், அவைதன், பின் கத்தியதற்கு, பின் இதை, பின் புரிந்து கொண்டான், கொங்கணனும் கூட,

(அவைகளுக்கு) பசிக்கின்றது, என்று 

 ஆனாலும், நிச்சயம், தன்னில் கூட, பின் எனக்கு, பின் தேவையில்லை, என் குழந்தைகளுக்காவது கொடுங்கள் என்று, கோ,

(தாய் பசு எனக்காக எதுவும் வேண்டாம் என் கன்று குட்டிகளுக்காவது ஏதாவது கொடுங்கள் என்று கத்தியது)


 எதை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, அம்மா!!, அம்மா??! என்றெல்லாம், கத்தியது, 

ஆனாலும், மனது, எவை என்று கூட, அனைத்தும், பின் கொங்கணன், எதை என்று கூற, மனது, பின் அதாவது, மனிதன் இங்கேதான், பின் நம்தனைத்தான், பின் செயல்படுத்துகின்றான்.(மனிதர்கள் அனைவரும் நமக்கு தண்டனைகள் தரத்தான் நினைக்கின்றார்கள் பசுவின் பசியை அறியவில்லை அதை கவனிக்கவில்லை என்று)



ஆனாலும், இவைதன் எவ்வாறு என்றெல்லாம், நிச்சயம், அதாவது, எவ்வாறு, எதை என்று புரிய, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும், புரிந்தும், எவை என்று அறிய, நிச்சயம், மனிதனுக்கு, இரக்கங்கள் இல்லையே என்பதை எல்லாம், 

நிச்சயம், தன்னில், எவ்வாறு என்பதை எல்லாம், பின் நினைத்து, நினைத்து, பார்க்கையில், நிச்சயம், எவ்வாறெல்லாம், எவ்வாறெல்லாம் என்றெல்லாம்,
(எப்படி மனிதர்கள் மனதில் ஈவு இரக்கம் இல்லாமல் இருக்கின்றார்கள் என்று)


 நிச்சயம், கோ!!, எவை என்று புரிய, நிச்சயம், தன்னில், அறிந்தும், இதைத்தான், நிச்சயம், அவ்வாறாக, பின் , அழுது கொண்டே, அழுது கொண்டே, 


நிச்சயம், அட, அறிந்தும், எவை என்று புரிய, மனதில் எண்ணிக்கொண்டான், ஆனாலும், கொங்கணனுக்கு, பின் மனிதன் மீது, எவை என்று கூற, பின் எதை என்று அறிய, இவ்வாறாக, பின் அக் கோமாதா அம்மா, அம்மா என்று அழைக்கின்றதே!!!!!,

 யாரும், பின் முன்வரவில்லையா என்று,

(பசுவுக்கு உணவளிக்க யாரும் வரவில்லையே)


 நாராயணனே!!!, ஏன்?? இந்த நிலைமை, நிச்சயம், தன்னில் கூட, அறிந்தும் என்றெல்லாம், நாராயணனிடம் முறையிட்டு, நிச்சயம், எதை என்று புரிய,


 இதனால், அக் கோ வும், எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் எதை என்று அறிந்தும், புரிந்தும் கூட, நிச்சயம், மீண்டும், பின்""""""""""" மா.............. என்று கத்தியது,
 அறிந்தும்,

ஆனாலும், கொங்கணன் கூட, எதை என்று அறிய, எவை என்று புரிய, நிச்சயம், பின் அதாவது, நிச்சயம், இன்னும், பின் இதை என்னிடம், நிச்சயம்,
 (தன் சுயத்தை அதாவது மனித ரூபத்தில் இருந்து மாற்றி)

 காட்டுவோம் என்று, பல வழிகளிலும் கூட, பின் அதாவது, இன்னும், எவை என்று கூட, அதனை விட்டுவிட்டால்,....(கோமாதாவை அப்படியே விட்டு விடக்கூடாது அதற்கு உணவளிக்க வேண்டும் என்று எண்ணி தன்னுடைய சுய ரூபத்தை காட்டி நாராயணனை நினைத்து) 

 நிச்சயம், தன்னில், எதை என்று அறிய, பின் எவை என்று புரிய, ஆனாலும், சுயரூபத்தை காட்டினான், நிச்சயம்,

 தன்னில் கூட பல பழங்களையும் கூட, எவை என்று கூற, பின் எவை என்று அறிய, நிச்சயம், தன்னில் கூட, பின் நாராயணா!!!!! என்று சொன்னவுடன், அனைத்தும் கையில் வந்துவிட்டது, 
(கோமாதாவிற்கு உணவளிக்க பழங்கள்)


(கோவிந்தா எனும் நாமத்தின் ரகசியம்)



பின் நிச்சயம், பின் எவை என்று கூட, கோ, எவை என்று அறிய, பலமாக, நிச்சயம், பின் தாயே,!!!!!!!!! எவை என்று கூற, என்று, பின் கோ!!!!!, பின் எவை என்று கூற, இந்தா!!!! என்றெல்லாம், 

( கோ !! இந்தா!!!

கோ இந்தா!!!!....... பழங்கள் என்று அழைத்து)

கோ இந்தா 
கோ இந்தா....கோவிந்தா


( கோ இந்தா எனும் சொல் கோவிந்தா எனும் திரு நாமமாக மாறியது)


நிச்சயம், தன்னில் கூட, பின் பரிபூரணமாக அழைத்து, பின் அனைத்தும், பின் எவை என்று கூற, வாரி, பின் நிச்சயம், தன்னில் கூட, வழங்கினான்.

இதனால், பின் எவை என்று கூற, அனைவரும், எவை என்று கூற, திகைத்தனர்,


 நிச்சயம், தன்னில் கூட, பின் அனைவருமே, பின் கோவிந்தா!!!!!, கோவிந்தா!!!!!!! என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட,


 இவ்வாறாக, அனைவரும் கூட, பின் அதாவது, நிச்சயம், பலமாக, கோவிந்தா!!!!! கோவிந்தா!!!! என்றெல்லாம், நிச்சயம், தன்னில் கூட, 


 ஏனென்றால், நிச்சயம், பின் கொங்கணனின், அதிசயத்தையும் பார்த்துவிட்டார்கள்.

 கொங்கணன் கூறுகின்றான், ஏதோ என்றெல்லாம், நிச்சயம், கோவிந்தா,!!! கோவிந்தா!!!, கோவிந்தா!!!! என்றெல்லாம்,


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இவை சொல்லிக்கொண்டே இருக்கின்ற பொழுது, அனைவரும் மனதும், பின் நிச்சயம், தன்னில் கூட, மாறியது என்பேன். அப்பனே,


(கோவிந்தா எனும் திருநாமத்தை உச்சரிக்க உச்சரிக்க மனமாற்றம் உண்டாயிற்று)


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, இதனால், அப்பனே, கோவிந்தா!!!, கோவிந்தா!!! என்று சொல்லிக்கொண்டே இருந்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் இதயத்தில் உள்ள சில வினைகள், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, நீங்கும்ப்பா,


 அவை மட்டுமில்லாமல், அப்பனே, பின் தீய மனது, எவை என்று கூட இருந்தாலும், அப்பனே, கோவிந்தா!!!, கோவிந்தா!!! என்று சொல்லிக் கொண்டிருந்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, சில, அப்பனே, மனமாற்றங்கள் ஏற்படுமப்பா, அப்பனே,

 பின் இதயத்திற்கு ஒளிப்படுமப்பா, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, 

அப்பனே, நுரையீரல் நன்கு சுவாசிக்கக்கூடிய அளவு ஆற்றல் ஏற்படுமப்பா, 

இதனால், அப்பனே, பின் தீயவை அகன்று, நல் மனதாக ஆகிவிடுவார்கள்.
 பின், அப்பனே,

 இதனால், அப்பனே, அனைத்தும், அப்பனே, இவ்வாறு, பின் சொல்லிக் கொண்டே இருக்க!!!, சொல்லிக் கொண்டே இருக்க!!!! அப்பனே, சில வழிகளில், அப்பனே, நிச்சயம், தீயவை நீங்கி, அப்பனே, நல் முறையாகவே, அப்பனே, அனைத்தும் நடந்திட்டு, அனைவரும், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட


, அப்பனே, இக்குழந்தை எது என்று கூற, பின் இறைவனுக்கு சொந்தம், இதனால், என்றெல்லாம், அப்பனே, ஒவ்வொரு நாளும், அப்பனே, அக்குழந்தைக்கு, அப்பனே, அனைவரும் மீட்டு, எவை என்று கூட, அனைத்தும் தந்தனர் என்பேன். அப்பனே,

(அனைவரின் மனது மாறி அந்தப் பெண் குழந்தையை இது இறைவனின் குழந்தை என்று நினைத்து ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் போற்றி பாதுகாத்து வளர்த்தனர்)

(இப்பொழுது இந்த பிறவியிலும் கூட அந்தப் பெண் குழந்தை)

 அப் பெண்மணியும் கூட, அப்பனே, உயர்ந்த இடத்தில், அரசபணியில் உள்ளாளப்பா, இப்பொழுது கூட, அப்பனே, நல்விதமாக,


 அப்பனே, அவள் நாமத்தையும் வருங்காலத்தில் சொல்வேன் என்பேன்.

 இதனால், அப்பனே, கோவிந்தா!!! கோவிந்தா!!!, கோவிந்தா!!!!,

 எம்முடைய ஆசிகளப்பா,!!! எதை என்று கூற,


 இதனால், அப்பனே, இவை எதற்காக வந்தவை என்று சொல்லிவிட்டேன்.

(கோவிந்தா எனும் திருநாமம் எப்படி வந்தது ? என்ற ரகசியம்)


 அப்பனே, இதனால், அறிந்து கொள்ள, இன்னும் பல ரகசியங்கள் இருக்கின்றது என்பேன். அப்பனே, ஆசிகள், ஆசிகளப்பா, கோடிகளப்பா.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

சித்தன் அருள் - 2023 - அன்புடன் அகத்தியர் - வளத்தி கோவில் வாக்கு!





வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!

சமீபத்தில் தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வளத்தி எனும் கிராமத்தில்... புராதனமான முன்னொரு காலத்தில் சீரோடும் சிறப்போடும் இருந்த ஈசன் ஆலயம் சில மனிதர்களின் தவறான நடவடிக்கைகளால் பாழடைந்து ஈசன் மட்டும் கம்பீரமாக அனைத்தையும் உற்று கவனித்துக் கொண்டு இருக்கும் ஒரு... காட்டில் அமைந்திருக்கும் ஸ்தலத்தில் காகபுஜண்டர் மகரிஷி வாக்குரைத்தார். 

ஈசனை நம்பாமல் மனிதர்களை நம்பி நம்பி.. செய்த வேலைகளால் ஈசனே தடையை ஏற்படுத்தி இருப்பதையும்... சுட்டி காட்டினார். 

இந்த வாக்கினை படிக்கும் பொழுது இறைவனையும் இறைவன் ஆலயத்தையும் மாந்திரீகத்தால் கட்டுப்படுத்த முடியுமா?? என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். 

ஆனால் குருநாதர் இதனைப் பற்றி சில சமயங்களில் அப்பனே இது கலியுகம் அழியும் யுகம்!!! அழியும் கலியுகத்திற்கு என சில விதிகள் உள்ளது பகலுக்கு எவ்வளவு சக்தியோ அதேபோல் இருளுக்கும் சக்தி உள்ளது நல்ல சக்தி எந்த அளவுக்கு சக்தி படைத்தது அந்த அளவிற்கு தீய சக்திக்கும் இங்கு சக்தி இருக்கின்றது ஏனென்றால் இது கலியுகம் கலியுகத்தின் விதி இப்படித்தான் இருக்கும் என்று கூறியிருக்கின்றார். 

அது மட்டுமில்லாமல் ஒருமுறை குருநாதரிடம் மீனாட்சி அம்மன் கோயில் வடக்கு கோபுரத்தின் கீழே இருக்கும் மகாமுனிஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் தடைப்பட்டு கொண்டே இருந்ததை குருநாதரிடம் கேட்டதற்கு 

மக்கள் சரியில்லை என்று மீனாட்சி தேவியே அதை தடுத்து நிறுத்திக் கொண்டிருக்கின்றாள் பொறுத்திருக வழியும் விட்டு விடுவாள்..

இறையருள் இருந்தால் மட்டுமே இதுவும் நடக்கும் என்று குருநாதர் தனது வாக்கில் கூறியிருந்தார். 

(சித்தன் அருள் 1066. அன்புடன் அகத்தியர் மௌனகுரு ரெட்டி ஜீவசமாதி ஆலய வாக்கில் கேள்வி பதிலில்) 

இறைவனை எந்த தீய சக்தியாலும் ஒன்றும் செய்ய இயலாது. 

இதை நம்பி நம்பி செல்கின்ற மனிதர்களுக்கு படிப்பினையாக பாடம் புகட்டுவதற்கு தான் இறைவனே வேண்டுமென்று சில சமயங்களில் நாடகத்தை நடத்துகின்றார். இதனையும் இவ்விடத்தில் புரிந்து கொள்க!!!

இவ்வுலகத்தின் மன்னன் ஈசனே என்பேன் அப்பனே... எப்பொழுது மறைந்திருக்க வேண்டும் எப்பொழுது எழுந்திருக்க வேண்டும் என்பதை ஈசனே தீர்மானிப்பான்... என்று குருநாதர் கூறியதையும் இங்கு நினைவுபடுத்துகின்றோம். 

காசியில் ஞானவாபி லிங்கத்தை குறித்து கேட்டது போதும் குருநாதர் ஈசன் முடிவு செய்வான் எப்பொழுது எங்கு தன்னை வெளிப்படுத்த வேண்டும் என்று அதன்படி ஈசன் வெளிப்படுத்துவார்.
அனைத்து முடிவும் ஈசன் கையில் என்று கூறியிருந்தார் அதன்படி தான் இந்த ஆலயமும் சரி...

ஈசனே!!! ஒரு முடிவை எடுத்தால்தான் உண்டு சித்தர்கள் மனது வைத்தால் தான் உண்டு.

இந்த வாக்கினை படிக்கும் பொழுது இந்த உண்மைகள் அனைவருக்கும் புரியவரும்.

தற்பொழுது வாக்குகள்!!!


பரமேஸ்வரனும் பரமேஸ்வரியும் பின் கைலாயத்தில், பின் பார்த்து, பின் அருள்கள்!!!!

, பின் எவை என்று உணராமலே, பின் அவர்கள் பின் உரையாடலின்  போது,  யான் தேர்ந்தெடுத்து சொல்கின்றேன் புசண்டவன் !!!

ஏனடா??  தரித்திர மனிதனின் இவ் லீலைகள்?

 எதை எதையோ செய்து கொண்டு , மாந்திரீகத்தில்  எல்லாம் போயிட்டு,  பின் வந்து எவை என்று கூற ஈசனே  கோபித்துக் கொண்டு!!!!!!!!!!!!.

 இதனால் எவ்வாறு நடக்கும்? மேன்மை பெறும்???? 

பின் இதனையும் என்று அறிவதற்கு, பின் வாயில் எதை என்று ஆனாலும் மென்று தின்கின்றீர்களே ஏதுமில்லாமல். 

அவை மட்டுமில்லாமல் ஈசனை மட்டுமே குறியாக எண்ணி நிச்சயம் நடந்திருந்தால், இன்னும் இவ் தலம் மேன்மை பெற்றிருக்கும்.

 அவை மட்டுமில்லாமல் இன்னும் சிறப்புக்கள்.

 அவை மட்டுமில்லாமல், பின் அனைவரும் பின் இங்கு வந்து வணங்குபவர்களுக்கு, நிச்சயம் ஆறுதல் கிடைத்திருக்கும். 

அவையெல்லாம் விட்டுவிட்டு!?!?!?!?!?!?!?!?!?!

 பின் இவ்வுலகத்தில் பெரியவன் நமச்சிவாயனே!!!!!. அவந்தனை விட்டுவிட்டு மனிதனை நோக்கிச் சென்று சென்று, எதனை? எதனையோ? பொய் கூறி, பின் அவந்தனும் அழிந்துவிட்டான்.

 இத்தலமும் பின் ஈசனுக்கு!!!! எதை என்று கோபித்துக் கொண்டு, இப்படி எல்லாம் பக்தர்களா??? என்று கூற ஈசன் அழகாகவே பின் நின்றுவிட்டான்.

இதனையும் என்றும் அறியாத பல மானிட ஜென்மங்களுக்கு எவை வந்தாலும் புரிவதில்லை.

 ஏனென்றால் அப்படிப்பட்ட மனிதன் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் கலியுகத்தில்,

 நிம்மதி ஏது? 

ஆனாலும் வரும், வரும் காலங்களில் எதை நோக்கிச் செல்கின்றான்?? என்பதை தீர்மானிக்கவே உண்டு. 

ஆனாலும் பணத்தையே குறியாகக் கொண்டு வாழ்ந்திருக்கின்றான் மனிதன். 

 பணம் என்னடா? ஏதடா? 

இவை என்று கூற பக்திகள். ஆனாலும் செலுத்தவில்லை என்பதற்கு. 

ஆனால் பின் மனிதனை நம்புவது போல் நமச்சிவாயனை இந்நேரம் நம்பி இருந்தால் அவனே ஏதாவது ஒரு வழியை ஏற்படுத்தி இருப்பான். 

 ஆனால் மனிதனை நம்பி!!!! நம்பி!!!! ஆனாலும் வருத்தங்கள் கூட கஷ்டங்கள் கூட. 

அப்பனே இவை  என்று கூற ஆனாலும் உண்டு ஏற்றங்கள். 

இதை அகத்தியன் தான் அழகாக எடுத்துச் செல்வான் என்பேன்.

 இப்பொழுது புரிந்ததா?

 அதனால் நிச்சயம் சிறிது சிறிதாக சில விஷயங்கள் மர்மமான முறையில் இங்கே செய்திருக்கின்றார்கள்.

 அதையெல்லாம் யாங்கள் எடுத்திட்டுத்தான் இதனை தத்துவத்தை நிச்சயமாய் கூறுவோம்.

ஏன் வளரவில்லை இத் திருத்தலம்?????

 எதனை நோக்கி பயணிக்கின்றது????

 எதனை என்று கூற?

 பின் ஈசனுக்காக கட்டுகின்றீர்களே!!!!!!!!

, ஏன்? ஈசனே எவை என்று கூற அவந்தனே செய்து முடிப்பதில்லை.?????

 ஏனென்றால் நிச்சயம் மனிதன் மனிதனை நம்புகின்றான். 

=============================================
# நமச்சிவாயா!!!!  நீயே தான் அனைத்தும்!!!! செய்து தர வேண்டும்
=============================================

நிச்சயம் 

“““நமச்சிவாயா!!!!  நீயே தான் அனைத்தும்!!!! செய்து தர வேண்டும்”””””  

என்று கூற யாராவது வேண்டிக்கொண்டீர்களா????????????? என்றால் நிச்சயம் இல்லை. சத்தியமாக இல்லை. 

=============================================
#  ஒருமுறை ஈசன் இங்கே வந்து நின்றார்…ஆனால் 
=============================================

மனிதன் மனிதனையே கொல்கின்றான்.  மனிதன் மனிதனையே ஏமாற்றுகின்றான் அவ்வாறு உலகம் போய்விட்டது!

 அப்பொழுது கூட ஆனாலும் ஒருமுறை ஈசன் இங்கே வந்து நின்றான்,

அப்பொழுது கூட எதை? எதையோ? செய்து, பின் அவ்வாறு செய்தால் இவ்வாறு நடக்குமா??  இவ்வாறு செய்தால் அவ்வாறு நடக்குமா??

 ஈசன் முன்பே. 

அப்படி என்றால் இத்திருத்தலத்தை எப்படி? ஈசன் செய்து முடிப்பான்?? சொல்லுங்கள்?

இதை என்று உணர, அதனால்தான் மானிட ஜென்மங்களுக்கு சித்தர்கள் யார்? என்று தெரியாமல் போய்விட்டது.

 விளையாடிக் கொண்டே இருக்கின்றார்கள்.  எதை என்று கூற தெரியாமலே. 

பின் பொய் சொல்லி பிழைப்பும் நடத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

 அதனால்தான், நிச்சயம் பின் எவை என்று கூற இவை போன்றே நடத்திக் கொண்டிருந்தாலும், நிச்சயம் பின் இறைவனே இல்லை என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள். சித்தனே இல்லை என்ற நிலைமைக்கு மனிதர்கள் வந்து விடுவார்கள்.

=============================================
#  இறைவன், நம்பிக்கையோடு அன்பு மட்டுமே கேட்கின்றான்
=============================================

அதனால்தான் யாங்கள் மனிதர்களை எச்சரித்துக் கொண்டே இருக்கின்றோம்.

 உண்மையை சொல்லி , நன்மையை செய்து கொண்டே இரு !! போதுமானது.

 இறைவன் ஒன்றும் கேட்கவில்லை அன்பு மட்டுமே கேட்கின்றான். அதுவும் நம்பிக்கையோடு.

 அவ் நம்பிக்கை யாரிடமுமே இல்லையப்பா. 

இவை என்று உணர ஆனாலும் தனக்குள்ளே போராட்டங்கள். தனக்குள்ளே போராட்டங்கள்.

ஆனால் பின் எவை என்று கூற அவன்!?!?!?!?!?! பின் எதை என்று கூற யான் அனைத்தும் எதை என்று நன்கு உணர்வேன் எந்தனுக்கு அனைத்தும் தெரியும்!!!! என்பவனுக்கு,!!!?!?!?!?

 ஈசன் தெரியமாட்டானா????? என்ன?

 தெரிந்து கொள்ளுங்கள். 

ஆனாலும் இவை என்று கூற ஆனாலும் இவை தன் உணர உணர சக்தி மிகுந்தவன் பின் ஈசன்.

 ஆனால் பார்த்துக் கொண்டிருப்பதையே மறந்து விடுகின்றானே!!!!!

 அவந்தன் எப்படி நல்லதை சொல்ல முடியும்???????

 எண்ணிக்கொள்ளுங்கள்!!!!!

அதனால் பொய்யானவர்கள் இவ்வுலகத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள்!!!

 நிச்சயம் அதனால் கவலைப்பட தேவையில்லை!!. 
யாங்களே நிச்சயம் இத்தலத்தை உருவாக்கிச் செல்வோம்.

 இன்னும் எதை எதை என்று கூற யாங்கள் வந்துவிட்டோம்.

 நிச்சயம் யாங்கள் எதை என்று கூறாமலே, நிச்சயம் திடீரென்று வரவழைப்போம். எதனை எதை என்று கூற. 

ஆனாலும் இவற்றின் தன்மைகளில் உண்மையா? எவை என்று கூறாமலே, நிச்சயம் எதை என்று உணராமலே.

  ஏனென்றால் நிச்சயம் சரியாக சத்தியமாக சொல்கின்றேன். நல் முறையாகவே, நல் மனதாகவே 

““““இறைவா நீயே”””” 

““““இறைவா நீயே, ””””

““““நமச்சிவாய, ””””

““““நமச்சிவாய என்றெல்லாம் கூறி, கூறி 

““““ உன்னால்தான் மட்டும்தான் முடியும்.””””
 
““““ எங்களால் ஒன்றும் முடியாது””””

““““ யாங்கள் ஒன்றும் பொம்மைகளே என்று நிச்சயமாய்,

 ஈசனையே சரணாகதி அடைந்தால், நிச்சயம் மேன்மைகள் தான் உண்டு என்பேன். ””””

அவை விட்டுவிட்டு மனிதனிடத்தில் சென்றால்!!!!....

 நிச்சயம் ஈசன் எதை என்று கூற அதனால்தான் ஈசனே சில தடங்கல்களை வைத்துள்ளான்.

 அவை மட்டுமில்லாமல் எதை என்று கூறாமலே எதனை பின்பற்றி சில தீய சக்திகளும்!!!!!!!! 

எவை என்று அப்பனே . 

ஏனென்றால் இறைவனுக்கே தீங்கு செய்யும் அளவிற்கு மனிதன் உயர்ந்து விட்டான். 

ஆனால் அவையெல்லாம் எப்படி? என்பதை கூற ஆனால் இவ்வாறு செய்பவன் கடைசியில் பார்த்தால் எங்கே இருக்கின்றான் என்பதை கூற யானே அறிவேன்!!

 இதை.

““““பல பல பல யுகங்களாக வாழ்ந்து வந்தவன் யான்.”””””” 

யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் இதையும் உணர.

அதனால்தான் சொல்லிவிட்டேன் உங்களுக்கு!!!!!
 என்ன தேவையோ நிச்சயம் விதவிதமாக யாங்களே வந்து செய்வோம். 

அதனால் குற்றங்கள் இல்லை!! குறைகள் இல்லை!! இறைவனே பரிபூரணம் ஆசீர்வதித்து!!! ஒருவருக்கொருவர் மனக்குழப்பங்கள் கொள்ள வேண்டாம். 

யான் பெரியவன். இவன் தன் பெரியவன். இவன் சொல்வது தவறு. அவன் சொல்வது சரி, என்றெல்லாம்!?!?!?!?!?!....

 நிச்சயமாய் ஈசன் அதி விரைவிலே ஒரு வழியும் வகுப்பான் சொல்லிவிட்டேன்.

இதை என்று உணர, ஆனாலும் மேற்சொன்னவாறு இன்னும் ஏராளமான சித்தர்கள். ஆனாலும் வலம் வந்து, யாங்களும் முன்னின்று, நிச்சயமாய் செய்வோம்.

 நிச்சயமாய் எதை எது என்று கூற, வரும் பின் விதவிதமாய் இன்னும் நல் நல் மனிதர்கள் பின் வருவார்கள், எவை என்று கூறாமலே. 

நிச்சயம் எதனை என்று  வருத்தப்பட தேவையே இல்லை என்பதற்கு இணங்க . 

ஆனாலும் அடிக்கடி பின் நீங்கள் எதை என்று கூற ஆனாலும் பின் அண்ணாமலையை நாடிச் செல்லுங்கள்.

 அங்கே எப்பொழுதும் சித்தர்கள் சுற்றி சுற்றி சுற்றி வருவார்கள் என்பேன்.  

அங்கு சென்றாலே சித்தர்களே மறைமுகமாக வந்து காசுகளை ஈவார்கள் என்பேன்.

இதனால் நிச்சயமாய் பன்மடங்கு உயர்வுகள் பெறுவது உறுதி என்பேன்!!!

(ஆலய திருப்பணி செய்பவர்கள் திருவண்ணாமலைக்கு அடிக்கடி செல்ல வேண்டும் அங்கு சிவாலய பணிக்கு யாசகம் ஏந்த வேண்டும் அப்படி யாசகம் ஏந்தும் பொழுது சித்தர்களும் வந்து காசுகளை இட்டுட்டு செல்வார்கள்)

 அதை எதை என்றும் கூற ஆனாலும் பல மனிதர்கள் எதை எது என்று உணராமலே!!!!

 இன்னும் இவ்வாலயத்தின் சிறப்பு எந்தனுக்கே தெரியும் என்பேன். 

அதனால் அவைதனும் வரும் காலங்களில் நிச்சயம் யான் உரைப்பேன் சொல்லிவிட்டேன்.

அப்பனே எதை எவற்றின் முன் தோன்ற, அப்பனே எவைதன் உணர உணர எப்பொழுது எவ்வாக்குகள்? செப்ப வேண்டுமோ, அப்பொழுதுதான் யான் செப்புவேன். 

எதை என்று கூற ஆனாலும் இங்கே இருக்கும் எவை என்றும் ஓர் அரசன். ஆனாலும் அவ் அரசனோ பின் நின்று நின்று ஈசா!!!! ஈசா!! என்றெல்லாம் தொழுது கொண்டிருந்தான். 

(இப்பகுதியை ஆண்ட ஒரு அரசன்  )

 ஆனாலும் அவந்தனுக்கோ பல தோல்விகள் வந்தாயிற்று. தோல்விகள் வந்தாயிற்று !!!

ஆனாலும் வெற்றி பெற முடியவில்லை. 

ஆனாலும் ஈசனையே வணங்கிக் கொண்டிருந்தான். 

ஈசா!!!!! உன்னை விட்டால் எந்தனுக்கு வேறு வழிகள் கிடையாது.

மனிதனும் பின் ஏமாற்று. (காரர்கள்)

என்னிடம் இருக்கும் புலவர்களே என்னை ஏமாற்றி, ஏமாற்றி ஏமாற்றி. 

அதனால் யான் யாரையும் நம்புவதில்லை. 

ஈசா!! நீ என்னுடன் வந்தால் நிச்சயம், யான் பின் தைரியமாக இருப்பேன் என்று கூட.

 ஆனாலும் நிச்சயமாய் பின் அதையெல்லாம் ஈசன் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றான். 

மீண்டும் இவ்வரசனுக்கு சோதனைகள் கொடுப்போம் என்று எண்ணி. 

ஆனாலும் பல சோதனைகள் பல பல வழிகளிலும் இட்டு இட்டு!!, 

ஆனால் கடைசியில் அனைத்தும் இழந்த பொழுதிலும் ஈசா!!! ஈசா!!! எவை என்று கூற. 

ஆனால் எந்தனுக்கு பின் இவையெல்லாம் இழந்தது எந்தனுக்கு சந்தோஷமே.

 ஏனென்றால் உன்னை யான் இழக்கவில்லையே என்று பின் ஈசனிடம் பின் கூற, !!!

ஈசனே கண்ணீர் விட்டான். 

அப்பொழுது புரிந்து கொள்ளுங்கள் எது பக்தி என்பதை கூட? 

எது பொய்யான பக்திகள் என்று கூற?

அதனால் உண்மையான ஒருவன் எவ்வாறு?? பக்திகள் செலுத்தி!! செலுத்தி!! பின் கஷ்டங்கள் பட்டாலும் உயர்த்திடுவான் இறைவன். 

இதனால் அவ் அரசனும் ஆனாலும் இங்கேதான் வலம் வந்து சுற்றிக்கொண்டு இங்கேதான் இருந்திருந்தான் என்பது மெய். 

ஆனாலும் இதை உணர்வதற்கு ஆனாலும் அரசனை பல வழிகளிலும் கூட பின் துரத்தி விடலாம் என்று மக்களும்!! புலவர்களும். 

ஆனாலும் தன்னிடத்தில் உள்ள புலவர்களுக்கும் பல அடியாட்களுக்கும் இவ் அரசன் பலத்த பலத்த வழிகளிலும் கூட பல வழிகளில் நன்மை செய்தான்.

ஆனால் மனிதனின் புத்திகள் எப்படி ஆயிற்று? 

அவ் அரசனையே பின் நாடு கடத்த வேண்டும் என்று கூற. 

ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டான். அவ் அரசன் ஈசனை.

ஆனாலும் பின் இங்குதான் ஒளிந்திருந்தான் அவ் அரசனும். 

ஆனாலும் பல பல வழிகளிலும் சுற்றிச் சுற்றித் திரிந்தார்கள்.  அவ் அரசனை தேடித் தேடி!!

ஆனாலும் எங்கும் சிக்கவில்லை!!

ஆனாலும் பார்த்தால் ஈசனை கெட்டியாக பிடித்துக் கொண்டிருந்தான். 

ஆனாலும் பின் மனம் கலங்கினான் ஈசனே!!

  எதற்காக?? மனம் கலங்கினான் என்றால் மனிதனின் புத்திகளை பார்த்து. 

மனிதனுக்கு பின் இவ் அரசன் எவ்வாறு? பல உதவிகள் செய்திருப்பான்.

  ஆனால் மனிதனோ எதற்காக எல்லாம் இப்படி செய்கின்றான் என்று கூட ஈசனும்!!!

ஆனாலும் நிச்சயமாய் பின் பார்வதி தேவியும் எவை நின்று, பின் அன்பானவனே!!!!

இவ்வாறெல்லாம் பின் மனிதர்கள் இருக்கின்றார்களே, இவற்றிற்கெல்லாம் என்ன சொல்லப் போகின்றாய்???? 

ஆனாலும் இருப்பது ஆனாலும் ஈசன் எதை என்று கூற

பார்வதி தேவியே!!! நிச்சயமாய் இவந்தனக்கு ஏதாவது ஒன்றை கொடுக்க வேண்டும் என்று எண்ணினான். 

ஆனாலும் சரி யாம் தனே எதை என்று கூற, ஆனாலும் இவந்தனை உணராமல் நாம் தானே இவனை காட்டிவிடுவோம் எதை என்று கூற. 

அப்பொழுது கூட என்னதான் சொல்கின்றான்??? பார்ப்போமே என்று கூட. 

ஆனாலும் பார்வதி!!! இதை என்று கூற இப்பொழுதே பலமான கஷ்டங்கள் இப்படி இவனுக்கு கொடுத்துவிட்டாய். 

ஆனாலும் இனிமேலும் இவன் தாங்கிக் கொள்வானா??? உயிரை
மாய்த்து விடுவானா???

பின் அன்பானவனே இவையெல்லாம் எப்படி?? என்று கூற? 

ஆனாலும் இதற்கு சரியான வழிகள் உண்டா? என்பதற்கிணங்க ஈசன் மறைமுகமாக ஆனாலும் ஒருவனை தூதுவிட்டு பின் இங்கேதான் இருக்கின்றான். ஒளிந்து கொண்டிருக்கின்றான் என்று!!!

நிச்சயம் மற்றொரு அரசுக்கு தெரிய வந்து, பின் சிறைப்பிடித்தார்கள். 

அப்பொழுது எவை என்று கூற அதனால் உயிரை மாய்க்கும் பொழுது, ஆனாலும் அவர் அரசனே பின் நிச்சயமாய் மரணம் உண்டு என்பதை கூட அறிந்து கொண்டான்.

மனிதர்கள் பிடித்துவிட்டார்களே…

. ஈசனை பிடித்துக்கொண்டும் பின் இவ்வாறு எதை என்று எண்ணாமலே ஈசன் மீதும், ஆனாலும் பின் கண்ணீர் விட்டு பின் அழுதான். 

எதற்காக?? அழுதான்?? என்றால், 

ஈசா !!! உன்னை விட்டு பிரிந்து செல்கின்றேனே!!!! என்பதற்காகத்தான் மனம் வருந்தினான். 

அப்பொழுது ஈசனும் புரிந்து கொண்டான் இவ்வளவு பக்தியா!!!  என்று !!

ஆனாலும் இதை என்று ஆனாலும் அப்பொழுது கூட பின் அரசவை சேர்ந்தது. (அரச சபை)

சேர்ந்து சேர்ந்து இன்னும் எதனையும் உள்நோக்கி பின் வரவழைத்தனர் இவ் அரசனை. 

ஆனால் பல மனிதர்கள்!!!?!?!

, பின் ஆனால் அரசனோ நல்லவன் என்று இறைவனுக்கு தெரியும். 

ஆனால் மனிதர்கள் ஆனால் மனிதர்களுக்கு பல பல வழிகளில் உண்மை புரிந்தவன் இவ் அரசன். 

ஆனாலும் இதை அறியாமலே ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொய்யைச் சொல்லினார் அவ் அரசன் மீது. 

ஆனாலும் இதையும் என்று சபையில்.

ஆனால் ஈசனும் பார்வதி தேவியும் அமைதியாக பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றார்கள்.

ஆனாலும் இவை தன் உணர 

ஒருவன் சொன்னான் இவந்தன் பின் எவை என்று கூற பைத்தியக்காரன் என்று... 

இன்னொருவன் சொன்னான்!! இவந்தனக்கு இரக்கம் இல்லை என்று… 

இன்னொருவன் சொன்னான் இவன் திருடன் தான் என்று கூட.. 

இன்னொருவன் சொன்னான்!!...

ஆனால் பல பல அசிங்கமான பேச்சுக்களும். 

இதனால் பின் ஆனாலும் அவ் மன்னன் மேலே பார்த்து ஈசனே!!!!!! இவ்வாறெல்லாம் பொய் கூறுகின்றார்களே.!!!!! 

ஆனால் என் மனது உந்தனக்கே தெரியும் என்று கூட......

பலமாக நமச்சிவாயனே!!!!  என்று அழைத்தான்

ஆனாலும் அங்குள்ள சபை எதை என்று கூற!!!
(சபையில் இருந்த அனைவரும்)

ஆனாலும் அனைவரும் நமச்சிவாயனா? எங்கு இருக்கின்றான்?????

அவந்தனெல்லாம் என்று கூற பலர் சிரித்தனர். 

நமச்சிவாயன் இருந்திருந்தால் உன்னை இப்படியாவது, பின் இங்கெல்லாம் இப்படியாவது மானபங்கம் படுத்தி விடுவீர்களா என்ன??? என்று கூற அனைவரும் நகைத்தார்கள். நகைத்து நகைத்து!!!!

ஆனாலும் அதற்கு நமச்சிவாயனும் பின் பொறுமையாகவே இருந்தான். 

ஆனால்!?... பார்வதி தேவிக்கு பொங்கி எழுந்தது கோபம்.

ஈசனே!!!! உம்மை எதை என்று கூற இவ்வாறு நம்பிக் கொண்டிருந்தால், பின் நான் தான் முட்டாள்!!!!

நான் நேரடியாகவே அவனைச் சென்று காப்பாற்றுவேன் என்று கூற பொங்கி எழுந்துவிட்டாள். 

ஆனாலும் பின் ஈசனே எவை எவ்வாறு என்பதை கூட பின் பொறு தேவி!! பார்ப்போம்.!!!

என்னதான் நடக்கின்றது?? என்று கூட. ஆனாலும் இன்னும் ஏராளமான பல பல இல்லங்களையும் அமைத்து தந்தான் அவ் அரசன்!!(நாட்டு மக்களுக்கு)

ஆனாலும் இதைச் சுற்றி உள்ளவர்கள் ஆனாலும் எதை என்று கூட பல மனிதர்களுக்கு நீர் நிலைகளையும் உருவாக்கினான். பல பல மனிதர்களுக்கும் எவை என்று கூற மரங்களையும் நட்டு வைத்தான். பல பல பின் கிணறுகளும் தோண்டினான் அழகாகவே. 

இவ்வாறு இருக்கும் அரசனையே எப்படி செய்துவிட்டார்கள்?? பார்!!!

ஆனாலும் இவ் அரசனோ இதை என்று கூறாமலே,  நமச்சிவாயன்  பக்தனே

ஆனாலும் இங்குள்ள அனைத்து தலங்களுக்கும் எதை என்று கூறாமலே ஆனாலும் இன்னும் சிறப்புகள் உண்டு 

ஆனாலும் ஒருவன் எதை என்று கூற இவந்தனை பின் இவ்வாறு பின் விட்டுவிட்டால் இவந்ததன் கேவலமாகவே, 

ஆனால் இவ் அரசன்?? என்னென்ன தவறுகள் செய்தான்?? என்பதையும் கூட எங்களுக்கு தெரியும் என்று கூற. 

ஆனால் புலவர்கள் கூட இப்படித்தான் சொன்னார்கள்.

ஆனாலும் மிஞ்சியது  புலவர்கள் தான் திருடர்கள். 

ஆனால் மனம் கலங்கியது யாம் திருடர்கள் என்று ஒத்துக்கொண்டாலும், ஆனால் நிச்சயம் நம் பழிகள் எல்லாம் இவ் அரசன் மீது போட்டு விடுவோம் என்று கூட. 

இவன் அதைச் செய்தான். அதில் இதை வைத்தான். பின் திருத்தலங்கள் எல்லாம் சென்றான். அங்கெல்லாம் பின் வீணானதை !!!

பின் மக்களிடையே  கொள்ளை அடித்தான் என்றெல்லாம் பொய். 

ஆனாலும் அவ் அரசனோ பின் எதற்கும் பின் வருந்தவில்லை!! ஈசா!!  நமச்சிவாய!!! என்றெல்லாம் தான் பின் மனதில் நினைத்துக் கொண்டிருந்தான். 

ஆனாலும் உண்டா?? இதற்கு தீர்வுகள் இல்லை என்பதை கூட!!

இதனால் அவ் மன்னனை எதை என்று கூறாமலே இன்னும் தரித்திர பேச்சுக்களால் பேசி பேசி!!!, 

ஆனாலும் ஒருவர் கூட அவந்தனக்கு உதவிகள் செய்யவில்லை. 

ஆனால் இவ் அரசனோ அனைவருக்கும் உதவிகள் செய்திருந்தான்.

அதையும் கூட. ஆனாலும் நிச்சயம் எவை என்று கூற. இதனால் நிச்சயம் தூக்கிலிட சென்றார்கள்.

இவை என்று கூற மரண தண்டனையும் உண்டு என்பதை சொல்லிட்டு தூக்கிலிடப் போகின்றார்கள். 

தூக்கிலும் பின் இவை என்று அறிய.  

அதனால் நிச்சயம் பின் இதை என்று கூற ஆனாலும் இன்னொருவனும் (மற்ற அரசன்)

அவ் அரசனும் எதை என்று கூற, 

ஆனாலும் அரசனும் பின் இவ் அரசனை பார்த்து கடைசியில் உந்தனக்கு என்ன வேண்டும் ???என்று பின் உற்று நோக்கினான். 

நீ திருடன்! நீ திருடன்! தான் என்று கூற. 

ஆனாலும் அவ் அரசனோ நிச்சயமா அமைதி காத்துக் கொண்டிருந்தான்.

இன்னொரு எவை என்று கூற அவ் அரசன் நிச்சயமாய் மனிதர்கள் அனைவரும் உன்னை திருடன் என்று சொல்கின்றார்களே!  நீ என்ன கூறுகின்றாய்? 

ஆனாலும் நிச்சயமாய் இவ் அரசனுக்கும் தெரிந்துவிட்டது.

நிச்சயம் யாம் ஒன்று தான் இங்கு இருக்கின்றோம். (தனியாளாக)

ஆனாலும் அனைவரும் பின் ஏற்றுக் கொள்வார்களா என்ன?  யாம் உண்மையை புரிந்து புரிந்து அடுத்தவருக்கு சொன்னாலும், பின் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.

அதனால் நிச்சயம் எதை என்று கூற மௌனம் காத்திருந்தான். 

அதனால் நிச்சயம் பின் இன்னொரு அரசனும், பின் இவன் திருடன் தான் உண்மையிலே என்று பின் முடித்துவிட்டான். (முடிவெடுத்து விட்டான்)

ஆனாலும் பின் அனைவரும் சென்றுவிட்டார்கள்.

ஆனாலும் இதை என்று அறிய அவ் அரசனும் மெதுவாக இவ் அரசனை நோக்கி, இவ்வாறு நல்லது செய்தாயே!!!!!

இப்படி எல்லாம் கடைசியில் உந்தனக்கு எப்படி வந்தது பார்த்தாயா?? 

ஆனால் நான் எதை என்று கூற ஆனாலும், யான் அனைத்தும் தீங்கு செய்து கொண்டே தான் இருக்கின்றேன்.  என்னை நம்புகின்றார்கள் பார்!!.  

அதனால்தான் மனிதர்களுக்கு தீங்கு செய்ய வேண்டும் என்று கூற அவ் அரசன். 
(மற்ற அரசன்)

ஆனால் இவ்வரசனோ பின் ஆகட்டும் அப்படியே. 

யான் நல்லதுதான் செய்தேன். 

அதனால் பின் மக்கள் என்னை என்ன சொன்னாலும் இவை என்று கூற அவற்றுக்கெல்லாம் உண்மை என பொருளை புரிந்து!!! (தவறுகள் ) யான் எதுவும் செய்யவில்லை என்று கூட !!எந்தனுக்கும் தெரியும். என் ஈசனுக்கும் தெரியும். 

அவர்களுக்கு மட்டும் தெரிந்தால் போதுமே தவிர!!!

மனிதர்களுக்கு (அறிந்து கொள்வதை) பற்றி அவசியமில்லை என்று கூற. 

ஆனாலும் பின் தூக்கிலிட நேரங்கள் வந்து கொண்டே இருந்தது.

மீண்டும் சபைகள் கூடியது. 

கூடிட்டு பின் மீண்டும் அரசன் உத்தரவிட்டான். 

பின் இதை என்று கூற, ஆனால் அரசன் பல வழிகளிலும் பின் வாழ்ந்தவன் என்று தெரியாமல், அரசனையே இன்னொரு அரசன் திருடனே என்று அழைத்தான். 

அதுதான் மனதிற்கு வேதனைக்குரியது. 

“திருடா உந்தனுக்கு இன்னும் ஏதாவது ஆசைகள் உள்ளதா”???
என்று கூட (கடைசி ஆசை)

பார். அப்பொழுது மனிதனின் மனதை பார்த்தாயா? 

அதனால் அவ் அரசனும் பின் சொன்னான் யான் உண்மையை சொன்னாலும் யாரும் நம்பப் போவது இல்லை. நம்பப் போவதில்லை!!

. எனக்காக யாரும் இல்லை இங்கு.

அனைவரும் பின் ஆனாலும் யான் அனைத்தும் நல்லதையே தான் செய்தேன். 

ஆனால் இறைவனுக்கு மட்டுமே தெரியும் என்று கூட!!

  இவைதன் உணர உணர இன்னும் இவந்தனக்கு, ஆனாலும் ஈசன் மீது பக்திகள் பெருக்கெடுத்து ஓடியது.

ஓடியது ஆனாலும் ஈசன் மீது இருக்கும் அன்பு இன்னும் இவந்தனக்கு ஓயவில்லை. 

ஆனால் ஒரே ஒரு எண்ணம் தான் இருந்தது. 

நிச்சயம் ஒரே வழி நம்பிக்கைத்தான்.

என் ஈசன் வருவான்!!! என் ஈசன் வருவான்!! என்று கூட. 

ஆனால் பின் யார்? என்று கூற!!! ஆனால் என் ஈசன் என்று வருவான் என்பதை கூட பலமாக சொல்லவில்லை. 

மனதிலே நினைத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் ஈசன் அனைத்தும் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றான். 

ஆனால் ஈசனுக்கு தெரிந்துவிட்டது.

ஆனால் ஈசனோ அமைதியாக இவந்தனுக்கு ஏதாவது உதவிகள் செய்ய வேண்டும் என்று கூட நினைத்தான். 

அதனால் மீண்டும் மீண்டும் எதை என்று, ஆனாலும் இவற்றின் தன்மையை உணர்ந்து உணர்ந்து. 

ஆனாலும் நிச்சயமாய் பின் அரசனும் பின் திருடனே !!!உந்தனக்கு இன்னும் (கடைசி) அவகாசம் வழங்கப்பட்டு விட்டது. 

இன்னும் எதையாவது வேண்டுகின்றாயா?

என்று கேட்க, நிச்சயம் இல்லை. 

இதனால் மீண்டும் ஒரே ஒரு ஆசைதான் இருக்கின்றது. 

என் ஈசனை யான் பார்த்துட்டு ஒரே முறை வந்து விடுகின்றேன் என்று கூற. 

இதனால் ஆனாலும் நிச்சயமாய் செல்!! என்று கூற!!!
(அனுமதி)

திரும்பவும் இங்கே வந்து விட்டான். 

ஈசனை பார்த்து, ஈசா!!!! யான் எப்படி, உயிரை என்னை எடுக்கப் போகின்றார்கள்!!

ஆனாலும் உந்தனை விட்டு பிரிய முடியவில்லையே ஈசா!!!

ஆனாலும் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.

எந்தனக்கும் ஆறுதல் சொல்ல யாருமில்லையே!!! 

யான் எப்படி செல்வது?

அதனால் இந்த உலகத்தில் அனைவரும் என்னை திருட்டு பட்டங்கள் கட்டி இப்படி ஆக்கிவிட்டார்கள். 

ஆனாலும் நீயே பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றாய்.

ஆனாலும் நிச்சயமாய் உன்மேல் அன்பு, எதனை என்று கூற இவ் ஆன்மா பின் இறக்கின்ற பொழுது எங்கு செல்வது?

எதை அறிவது என்று கூற தெரியாமல் போய்விடுமே? ஈசா!!!!

எவை என்று கூற, அதனால் உன்னை மறக்காமல் இருக்க ஒரு மனம் கொடு என்று கூற. 

ஆனாலும் அப்பொழுது கூட ஈசன் கண் கலங்கினான்.

இப்படிப்பட்ட பக்திகளா?? என்று. 

அப்பனே அனைவருக்கும் சொல்கின்றேன்!!! ஈசன் மீது பக்தி கொண்டவர்களை, நிச்சயம் சோதிப்பான்!!! தாங்கிக் கொள்வானா??? என்று.

அதையெல்லாம் மீறி தாங்கிக் கொண்டால், நிச்சயம் உங்களை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது என்பேன் அப்பனே. 

இதனால் அவந்தனக்கு மகிழ்ச்சியாக ஈசனே திரும்பவும் உன்னை பார்க்க முடிய போவதில்லை.

இதனால் யான் சென்று வருகின்றேன் என்று கூற.

ஆனாலும் பின் அரசவைக்குள் நுழைந்தான். 

பின் நன்றாகவே எந்தனுக்கு பின் இதை என்று !!...ஆனாலும் யான் திருடன் தான் ஒத்துக் கொள்கிறேன் என்று இவன் மனதே சொல்லிவிட்டது. 

ஆனால் இறைவனுக்கு மட்டும் தான் தெரியும் இவன் தன் திருடன் இல்லை என்று கூட. 

இதனால் மக்கள் அனைவரும் உடனடியாக இவந்தனை பின் மரண நோக்கத்தில் (தூக்கு மேடைக்கு)
எடுத்துச் செல்லுங்கள், எடுத்துச் செல்லுங்கள் என்றெல்லாம் கூக்குரலிட்டார். 

ஆனாலும் பின் இறைவன் எதை என்று கூற, !!! 

அதனால் பின் ஓடோடி ஒரு மனிதன் வந்தான். எங்கிருந்தோ? வந்தான். இவந்தனுக்காக யான் வாதாடுவேன் என்று கூட. 

ஆனால் வாதாடிவிட்டான்
மக்களை. எதை என்று புரிந்து பின் வாதாடினான். 

முட்டாள் மக்களே!! அனைத்தும் செய்தானே இவ் அரசன். 

ஆனாலும் இவ் அரசனை போய் இப்படி சொல்லி விட்டீர்களே!!!!!

ஆனால் மேல் நோக்கி ஒரு அரசன் உட்கார்ந்து இருக்கின்றானே அவன் தான் திருடன் என்று. 

ஆனால் (மற்ற) அரசனுக்கு வந்தது கோபம்.  

அவை மட்டுமில்லாமல் உண்மையைச் சொன்னான் புலவர்களை பற்றி எல்லாம். 

ஆனாலும் இதை என்று கூற ஆனாலும் பின் யார் ?இவன்? ஒருவன்

எதை என்று கூறாமலே, ஒருவனை இவன் இவந்தனுக்கு உத்தரவா ? 

அரசனையே மிஞ்சிய பேச்சு பேச்சுகள்.

இவந்தனை தூக்கிலிட்டு உடனே பின் தூக்கிலிடப் போகின்றேன் என்று எவை என்று கூறாமலே அரசன் கூறிவிட்டான்.

ஆனாலும் நிச்சயமாய் அனைவரும் பிடித்தார்கள். 

அவன் யார்? தெரியுமா?
ஈசன் !!!! தான் என்பேன். 

நமச்சிவாயனே !! என்று.

இதனால்தான் சொல்கின்றேன். எதை என்று கூற அப்பொழுது நிச்சயம் பின் சுய உருவம் எடுத்து பின் யான் தான் பின் ஈசன்!!!! என்று கூற,

அனைவரும் மெய் சிலிர்த்து விட்டார்கள்.

எதை என்று கூற அப்படிப்பட்டவன் ஒரு எதை என்று கூற ஒரு ஒரு சாதாரண மனிதனுக்கே இறங்கியவன் ஈசன். 

இன்னும் எதை என்று கூற அதனால் மக்கள் (கண்களை) திறந்து  திறந்து திறந்து பார்த்ததில் ஒன்றுமில்லை. (கண்களைத் திறந்து பார்த்தல் சிந்தித்துப் பார்த்தல்)

திறந்து எதை என்று கூறாமலே இன்னும் மக்கள் ஈசன் இருக்கின்றானா??  இறைவன் இருக்கின்றானா???  என்றெல்லாம் கூறி.  

அதனால் ஈசன் என் பக்தனை இவ்வாறு சோதிப்பதா என்று கூற? 

அதனால் பின் அவ் திருடன் பட்டம் கட்டினார்களே!!! அவ்   பின் அவந்தனுக்கு மிக்க மகிழ்ச்சி.

ஈசனே வந்துவிட்டாயா!!  என்னை காப்பாற்றி விட்டாயா !!

போதும்!! எனக்கு ஏதும் தேவையில்லை!! 

நீயே!!

எதை என்று கூற அதனால் நிச்சயம் பல பல மனிதர்களையும் அங்கே சுட்டிக்காட்டினான் ஈசன். 

இதனால் உண்மை நிலையை உணர்ந்தான் எவை என்று கூற மீண்டும் அத்திருடனுக்கு அரச பதவிகள் வழங்கப்பட்டது. 

அனைத்தும் வாரி வழங்கினான் ஈசன்.

இதனால் எதை என்று கூற  இவ் எதனை என்று கூறாமலே!!!!


தற்போது நிற்கும் இருக்கும் செஞ்சிகளையும் இதை என்றும் கூற செய்து செய்து, இங்குள்ள அனைத்தும் செய்தவன் அவ் அரசனே!!!!

(செஞ்சி கோட்டைகளை)

தீர்மானித்துக் கொள்ளுங்கள்.(யார் என்பதை புரிந்து கொள்ளுங்கள்)


(செஞ்சிக்கோட்டையை கட்டியவர்கள் அதாவது காகபுஜண்டர் மகரிஷி குறிப்பிடும் மன்னன் 

செஞ்சியர் கோன்
அல்லது ஆனந்த கோன்.. இவ் இரு அரசர்களின் ஒருவராக இருக்கலாம்!!... செஞ்சி கோட்டை 11ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது என்ற வரலாற்று தகவலும் சான்றாக உள்ளது)

பல்லவர்கள் வழி வந்த காடவ மன்னன் செஞ்சியர் கோன் காடவன் கட்டியதாகவும், இடையர் குலத்தைச் சார்ந்த அனந்தக்கோன் என்பவர் கட்டியதாகவும் இருவேறு கருத்துகள் உள்ளன. செஞ்சியின் இரண்டு நூற்றாண்டுகள் வரலாற்றை கூறும் மெக்கன்சி சுவடித்தொகுப்புகளில் இது தொடர்பான பல தகவல்கள் உள்ளன.)

(செஞ்சி நாயக்கர்களில் குறிப்படத்தக்கவரான பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர் காலத்தில் தற்போதைய செஞ்சிக்கோட்டை வடிவமைக்கபட்டது இதன்பிறகு 17 ஆம் நூற்றாண்டில் தான் தேசிங்கு ராஜா பட்டத்திற்கு வருகின்றார்)

உங்களுக்கு யான் (யார் என்று )சொல்லத் தேவையில்லை!!

இதனை என்று கூற அறிய அதனால் அவந்தன் இங்கேயே ஒருநாள் நிச்சயமாய் பின் அனைத்தும் செய்துவிட்டு மக்களுக்காக!!!! இங்கேயே ஒரு ஞானி போல் பின் அமர்ந்துவிட்டான். 

இன்னும் அவனுடைய சூட்சமங்கள் இங்கே காணப்பட்டுக் கொண்டே இருக்கின்றது.

ஞானிக்கு ஞானியாகி விட்டான்!!

இதனால் அவன் அருளால் தான் இன்னும் மிஞ்சி உள்ளது என்பேன்.

தெரிந்து கொள்ளுங்கள்.  எதை என்று !!

ஆனாலும் இனிமேலும் நிச்சயம் அகத்தியன் அருளால் படிப்படியாக இத்தலம் மேற்படும் என்பேன்!!! மேன்மைகள் பெற்று இன்னும் ஈசனும் உதவி புரிவான் என்பேன்!!

சொல்லிவிட்டேன். 

அதனால் பக்திகளைப் பற்றியும் யான் சொல்லிவிட்டேன்!!

உண்மையான பக்தி இப்படித்தான் இருக்க வேண்டுமே தவிர!!!!, பின் ஈசன் மீது ஒரு பக்தி, மனிதன் மீது ஒரு பக்தி இருக்கக் கூடாது என்பேன். 

இதனால் எவ்வாறு மிச்சம் என்பதையும் கூட சொல்லிவிட்டேன்!!

நிச்சயம் ஈசனை வணங்கினால் கைவிடமாட்டான்!!!

கை விடுவது போல்  இருப்பானே!!!! தவிர கடைசியில் மீட்டுக் கொள்வான். 

இதான் அப்பனே வழி!!

இன்னும் அகத்தியன் இத்திருத்தலத்தைப் பற்றி சிறப்பான வாக்குகளையும் இன்னும் பின் எதிர்நோக்கி காத்திருக்கின்றான்.

இதனால் வரும் காலங்களில் நிச்சயம் இதை தெரிவிப்பான் அகத்தியனும் கூட. 

நிச்சயம் யாங்கள் வந்துவிட்டோம் நிச்சயம் சில சில தீவினைகளையும் அகற்றி நிச்சயமாய் மேன்மை செய்ய வைப்போம்!!

அன்பு அன்பு அன்புக்குரியவர்கள் எதை எதை என்று கூற ஈசனிடத்தில் அன்புக்குரியவராக இருங்கள்!! போதுமானது. 

இன்னும் என்னென்ன நடக்கப்போகின்றது?? என்று நீங்களே பாருங்கள். 

மீண்டும் வந்து சித்தர்கள் யாங்கள் நிச்சயம் உரைப்போம். 

ஆலயம் பற்றிய விவரங்கள் 

ஆலயம் தற்பொழுது சிமெண்ட் கொட்டகையில் அமைந்துள்ளது ஆலய திருப்பணிக்காக பொதுமக்கள் குழுவாக ஒன்று சேர்ந்து முயற்சிகள் எடுத்து வருகின்றனர். 

ஆலய குறிப்பு

https://share.google/hFNOoKL4DiBEAGiRt

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Thursday, 27 November 2025

சித்தன் அருள் - 2022 - திரு.ஹனுமந்ததாசனின் கஞ்சமலை வாக்கு - 12 !


சித்தன் அருள் - 2011ன் தொடர்ச்சியாக!

அவன் எந்த உருவத்தில் வந்தாவது உங்களை காப்பாற்ற போகிறான்.

வாக்குறுதி அளித்து விட்டான், அவன் விஸ்வரூபம் எடுத்தும் விட்டான்.

இதுவரை அமைதியாக இருந்து தியானம் செய்து கொண்டிருந்த அவன், இறை நோக்கி செய்து கொண்டிருந்த அவன், இப்பொழுது அவன் அந்த இருக்கையில் இருந்து எழுந்து வந்து, மான் சடையுடுத்தி, மயிலிறகால் மேலே சொரிந்து கொண்டு வெளியே வந்திருக்கிறான் ஆனந்தமாக !

முசுடு என்று சொன்னதற்கு எல்லாம், என்மேல் அவனுக்கு கோபம் தான், என் மேல் வருத்தப்படுகிறான், நான் என்ன முசுடுவா என்று ? என்னை கடிந்து கொள்ளுகிறான். ஆகவே நான் விளையாட்டாகத்தான் சொன்னேன், நான் கோபித்துக் கொள்ள மாட்டான் என்று தான் சொன்னேன். அவன் உண்மையை சொன்னால் அவனுக்கே கோபம் வருகிறது, ஒருவேளை அவனும் மனிதனாக மாறிவிட்டானோ என்று கூட நானும் யோசித்தேன், ஆனால் தட்டி கொடுத்து உண்மையை சொன்னாய், ஆனால் இனிமேல் வாய் திறந்து சிரிக்கிறேன் என்றான்.

நீ சிரிப்பது மட்டுமல்ல, எல்லோரையும் சிரிக்க வை என்றும் சொன்னேன்.

சிரிக்க மட்டுமல்ல அவர்களை சிந்திக்கவும் வைப்பேன், அவர்களுக்கு வேண்டியதை செய்ய போகிறேன் என்று சொன்னான்.

ஏற்கனவே சொன்னேன் சித்தர் காலம் என்று.சித்தர் காலத்தின் முதல் படியை காலாங்கிநாதர் இன்று முதல் ஆரம்பிக்க போகிறார். அவன் சொல்லுகிறான் உங்கள் அத்தனை பேருக்கும், உங்களுக்கு என்ன வேண்டுமோ, எதை வேண்டுமோ ? என்ன வேணாலும் கேட்கலாம், அது ஒரு ஆசை, இதை தான் வேண்டும் என்று கேட்க மாட்டேன் அது உனது விருப்பம், உன் விருப்பத்தை நிறைவேற்றி வைக்க வேண்டியது என் கடமை. ஆகவே காலாங்கிநாதர் துணை கொண்டு, அன்னவனை மனக்கண்ணால் நினைத்துக்கொள், சற்று ஒல்லியான உருவம், உயர்ந்த உருவம், ஆறடி உயரத்திற்கு இருக்கிறான், அவன் ஜடாமுடி ஏறத்தாழ இரண்டு அடிக்கு மேலே இருக்கிறது, கருந்தடி ஒன்று இடுப்பிலே அளவு வரைக்கு இருக்கிறது. அது அக்குள் வரைக்கும் இருக்கிறது. அந்த மரச்செடிக்குள் ஒளிந்து கொண்டிருக்கிறான். கமண்டலம் அவன் கையில் இல்லை. ஆனால் முகத்திலே தீட்சண்யம் இருக்கிறது. 36 லட்சங்களை முகத்திலே அமைதியாக குடிகொண்டிருக்கிறது. இப்படி ஒரு கற்பனை எண்ணிக்கொள். சிவந்த மேனி, அவன் வாய் திறந்து சிரித்தால், அவன் நிச்சயம் செந்தாமரை சிரிப்பது போன்று தோன்றும். சிரிக்க மறுக்கிறான் தவிர, சிரிப்பான் அவன். ஆனால் அவனே இப்பொழுது வாய் திறந்து சொல்லுகிறான், அவன் உருவத்தை இப்பொழுது சொல்லிவிட்டேன், இதை கற்பனையில் செய்து கொண்டு, எந்த பிரச்சனை இருந்தாலும், கை கால் அலம்பி கொண்டு, வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து, பிரம்ம முகூர்த்தத்தில் அவனை நோக்கி ஒரு முறை வலம் வா, உனது வேண்டுகோளை, மானசீகமாக பிரார்த்தனை வை, விரைவிலே நிறைவேற்றி தருகிறேன் என்று சொல்லியிருக்கிறான். அவனால் முடியுமா என்று நான் கூட யோசித்தேன், விதிமகளும், பிரம்ம தேவனும் கூட, காலாங்கிநாதன் முன் நிற்க பயப்படுவர்கள். அவனுக்கு மரியாதை கொடுப்பவர்கள். ஆக அப்படிப்பட்ட பிரம்மாவும், விதிமகளும் கூட இன்றைய தினம் வாய்திறந்து காலாங்கிநாதர் என்ன செய்தாலும் செய்யட்டும், அவன் வேண்டுகோளை நிறுத்த, எப்பேர்ப்பட்ட  கொடிய தவறுகள் செய்திருந்தாலும், எப்பேர்ப்பட்ட பாவங்கள் செய்திருந்தாலும், எப்பேர்பட்ட குற்றங்களை தெரிந்தோ தெரியாமலும், அறிந்தோ அறியாமலும்  செய்திருந்தாலும், பக்தியோடு இல்லாமல் பிரார்த்தனை செய்திருந்தாலும், தப்புத்தப்பாக பிரார்த்தனை செய்தாலும், மந்திரம் சொல்லாமலே த்யானம் செய்தாலும், அல்லது மறக்காமல் திட்டினாலும் கூட, அதையும் கூட புஷ்பமாக எண்ணிக்கொண்டு, அவர்களுக்கு உதவி செய்ய வருகிறேன் என்கிறான். ஆக இன்று முதல் உங்களுக்கு காலாங்கிநாதர் உங்கள் வேண்டுகோளை நிறைவேற்ற சரியாக செயல்பட தயாராகிவிட்டான். அதாவது அவன் விஸ்வரூபம் எடுத்து விட்டான்.அவன் விஸ்வரூபம் எடுத்தால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியும். ஆக விஸ்வரூபம் என்பது கோபத்தால் அல்ல, அன்பால், பண்பால் அவன் இறங்கி வந்திருக்கிறான். இதனை ஆண்டு காலம், ஒதுங்கி இருந்ததை விட்டுவிட்டு, இன்றைய தினம் புதியதோர் உலகத்தை படைப்பது போல, ஆர்வத்தோடு எழுந்து வந்திருக்கிறான்.

அவனுக்கு உங்களுடைய அன்பு, உங்கள் பாசம், உங்களுடைய பிரார்த்தனை எல்லாம் ஆச்சர்யமாக இருக்கிறது, ஆனந்தமாக இருக்கிறது. ஆக அவன் அகத்தியனை விட பன்மடங்கு பலசாலி, எதையும் செய்யக்கூடியவன். அகத்தியன் சற்று யோசித்துதான், அவனுடைய கர்மவினையையும் யோசித்து பார்த்து, எல்லோருடைய கோபத்துக்கும் ஆளாகாமல், நடுநிலையாக செயல்படுபவன் எண்ணியெண்ணி செயல்பட்டு கொண்டிருக்கிறேன். இதில் கூட தவறு இருக்கலாம். அனால் காலங்கிநாதன் சற்று பிடிவாதக்காரன். அவன் சண்டை போடக்கூடியவன். ஒருமுறை சிவனையே கையை பிடித்து இழுத்து, என் வேண்டுகோளை ஏன் மறுக்கிறாய்? என்று உரிமையோடு கேட்டான். செல்லமாக சிவபெருமான் கன்னத்தை தட்டி, அந்த உரிமை கூட அவனுக்கு இருக்கிறது. சிவபெருமான் கூட இதுவரைக்கும் அவன் மீது எந்த ஆத்திரமோ, கோபமோ கொண்டதாக தெரியவில்லை.

அப்படிபட்டவன் உங்களுக்காக, உங்கள் வேண்டுகோளை ஏற்று செயல்படுவதற்காக இன்றைய தினம் எழுந்து வந்திருக்கிறான்.

அவனை எப்படி பயன்படுத்த வேண்டுமோ, அப்படி பயன்படுத்தி கொள்வது உங்கள் கடமை. அதை தான் அகத்தியன் முடிக்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Wednesday, 26 November 2025

சித்தன் அருள் - 2021 - அன்புடன் அகத்தியர் - ஓதிமலை வாக்கு!





30/6/2025 அன்று குருநாதர் அகத்திய பெருமான் உரைத்த பொது வாக்கு:

வாக்குரைத்த ஸ்தலம்: ஓதியப்பர் சன்னதி ஓதிமலை.நள்ளிரவு 12:11AM.

ஆதி சிவ சங்கரியின் பொற் கமலத்தை பணிந்து செப்புகின்றேன். அகத்தியன்,

அப்பனே, நிச்சயம் தன்னில் அப்பனே, அருகிலிருந்து யானே நடத்தி வைத்தேன். அப்பனே, பின் உங்களுக்கு என்ன தேவை இதைவிட?

  நிச்சயம் தன்னில் கூட உங்கள் குறைகளை கூட. அப்பனே, நிச்சயம் போக்குவேன். யானே, அப்பனே, 

நிச்சயம் தன்னில் கூட. அவரவர், அப்பனே, நிச்சயம் பின் பாவத்தை பார்த்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, 


அதையும் கூட. அப்பனே, வருங்காலத்தில் உங்களுக்கு தெரியாமலே, நிச்சயம் யானே சரி செய்து விடுவேன். அப்பனே, நலங்களாக அதனால் குறைகள் வேண்டாமப்பா,


 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, எத்தனை,? எத்தனை? விதவிதமான மனிதர்கள். அப்பனே, எத்தனை?, எத்தனை? விதவிதமான பாவங்கள் மனிதனுக்கு!! அப்பனே,!!

 அவையெல்லாம் செப்பிக் கொண்டிருந்தால், அவை செப்பிட்டும் அவை செப்பிட்டு, நிச்சயம் எதிர்முனையில். அப்பனே, பின் என்ன நடக்கும்???? என்பதை எல்லாம் யான் அறிவேன். அப்பனே


, நீங்கள் குழந்தைகள், என் குழந்தைகள். அதனால், பின் செப்பினாலும், நீங்கள் பின் பயப்பட்டு, பின் அறிந்து கூட, பின் இப்படி, இப்படி என்று இருந்து விடுவீர்கள்.

(மனிதர்களாகிய நாம் என்னென்ன பாவங்கள் செய்தோம் என்னென்ன கர்ம வினைகள் நமக்கு உள்ளது என்பதை எல்லாம் நமக்கு தெரிவித்தால் நாம் பயந்து மனமடைந்து போய் விடுவோம் 

நாம் அனைவரும் சித்தர்களின் குழந்தைகள் குருநாதரின் குழந்தைகள் அதனால் நம்மை நல்வழியில் நடக்க வைத்து புண்ணியங்களை செய்ய வைத்து நம்மளுடைய பாவங்களை நமக்கே தெரியாமல் அகற்றி வருகின்றார்கள்)




 அதனால், எங்கள் குழந்தைகளுக்கு பின் எப்படி?, பின் பாவத்தை உறிஞ்ச தெரியும் என்று எங்களுக்கு தெரியும்ப்பா,


 நிச்சயம் அப்படியே உறிஞ்சிட்டு, நிச்சயம் உங்களுக்கு தேவையானதை யானே வழங்குவேன்.

 அப்பனே, நிச்சயம் விதியை வென்றவர் உண்டோ? நிச்சயம், அப்பனே, இவ்வுலகத்தில் விதியை வெல்ல முடியாதப்பா, 

பிரம்மன், அப்பனே, பின் எழுதியது எழுதியது தானப்பா,

 இதனால் நீங்கள் இறைவன் அருகிலே இருந்தாலும், பின் பூஜைகள் செய்தாலும், அப்பனே, எத்தனை?, எத்தனை? தான, பின் தர்மங்கள் செய்தாலும், அப்பனே, நிச்சயம், அப்பனே, நிச்சயம் எவை என்று கூட கலியுகத்தில் மாற்ற முடியாதப்பா, !! இதனால் உங்களுக்காக, அப்பனே, பின் உழைத்துக் கொண்டிருக்கின்றேன். அப்பனே, 


இதனால், நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, இவ் உங்கள் நம்பிக்கை, நிச்சயம், அப்பனே, பின் யான் காத்திருவேன். அப்பனே, மாற்றிடுவேன்
 விதியை. 


நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, எதை என்று புரிய, ஒவ்வொருவருக்கும், அப்பனே, ஒவ்வொரு குறையோடு தான்!!!

 இருப்பினும், அப்பனே, பின் அன்போடு, அப்பனே, பின், அதாவது, அப்பனே, பின், இறைவனை நினைத்து, நினைத்து, அப்பனே, பின், நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின் வருகின்றீர்களே!!!!!!. அப்பனே,

 பின் ஆனந்தத்தில் ஆனந்தமப்பா,!!!


 அப்பனே, நிச்சயம், எவ்வாறு, பின் கஷ்டத்திலும் கூட, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், இறைவனை வணங்காமல், அப்பனே, பின், இறைவனை வணங்காமல், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. கலியுகத்தில், அப்பனே, இவ்வளவு கஷ்டங்களா????? என்று சென்று விடுவானப்பா, மனிதன், 
அப்பனே, பாதியிலே, இறைவனை, அப்பனே, பின், விட்டுவிட்டு சென்று விடுவானப்பா,


 ஆனால், இறைவனை குறை கூறிக்கொண்டிருப்பானப்பா, 


ஆனாலும், எத்தனை கஷ்டங்களாயினும், அப்பனே , நிச்சயம், தன்னில் கூட. பின், இறைவனையே, சேவித்து, நன்மைகளை செய்ய வேண்டும் என்று துடிதுடித்துக் கொண்டிருக்கின்றீர்களே. அப்பனே,


 உங்களுக்கு யான் நன்மைகளையே செய்வேன். அப்பனே, வருங்காலத்தில்!!

 கவலை விடுங்கள். அப்பனே, நிச்சயம், அப்பனே, விதியினை பார்த்தால், ஒவ்வொருவருக்கும், அப்பனே, ஒவ்வொரு வேதனையில் அப்பா!!, நிச்சயம், தன்னில் கூட.

 அப்பனே, பின், யான் பார்த்துக் கொண்டே இருக்கின்றேனப்பா,

 அவையெல்லாம், நிச்சயம், யானே நீக்கிடுவேன். அப்பனே, உங்கள் இல்லத்தில், அனைவரும் இல்லத்தில், யான் வருவேன். அப்பனே, நிச்சயம், கவலையில் இல்லையப்பா, அறிந்தும் புரிந்தும் கூட. 


இதனால், அப்பனே, நன்மைகளாகவே, நன்மைகளாகவே, அப்பனே, ஒவ்வொருவருக்கும், ஒவ்வொரு, அப்பனே, இன்றைய நாளில் சக்திகள் கொடுத்திருக்கின்றேன். அப்பனே,


 அவ் சக்திகள் போகப்போக புரியுமப்பா,

 உங்களை நீங்கள் அறிவீர்களாக.


அப்பனே, நலங்களாக. இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. கலியுகத்தில், அப்பனே, மனிதனால், அப்பனே, பின், நிம்மதியாக வாழ முடியாதப்பா,!!!


 இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. சித்தர்கள், யாங்கள், நிச்சயம், மனிதனுக்கு, நிச்சயம், தன்னில் கூட. கலியுகத்தில், அப்பனே, மனிதனால், அப்பனே, பின், நிம்மதியாக வாழ முடியாதப்பா,

 இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. சித்தர்கள், யாங்கள், நிச்சயம், மனிதனுக்கு, நிச்சயம், தன்னில் கூட. எங்கள் அருள் அறிந்தும் கூட, பின், பலமாக கொடுத்து, அப்பனே!!!

, ஐயோ, பாவம் என்று, நிச்சயம், வந்து கொண்டு, அப்பனே, பாவத்தை ஒழித்துக் கொண்டிருக்கின்றோம்.
அப்பனே!!

அப்பனே, சற்று பொறுமையாக இருந்தால், அப்பனே, நிச்சயம், அனைத்தும்,அப்பனே, முடியுமப்பா,!!!

 நிதானத்துடன் செயல்பட்டால், அனைத்தும் முடித்து தருவோம். யாங்களே, அப்பனே,


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், ஆத்திரம் பட்டாலும், அப்பனே, விதியை மாற்ற முடியாதப்பா!!

அப்பனே, நிச்சயம், யாங்கள்தான் மாற்ற வேண்டும். அப்பனே,

 இதனால், உங்கள் வினை, அப்பனே, இப்படி ஒவ்வொருவரையும் கூட. அப்பனே, பின், எப்படி,? ஏது? என்று கூட. அப்பனே, நிச்சயம், வாட்டுகின்றது. வருங்காலத்தில், என்பவை எல்லாம், யாங்கள் அறிவோம். அப்பனே,

 நிச்சயம், தன்னில் கூட. அதற்கு ஏற்றார் போல், அனைத்தும், யாங்களே, மாற்றித் தருவோம்.


 அப்பனே, வெல்க, அப்பனே,!!!


 எப்பொழுதும், நிச்சயம், தன்னில் கூட, உங்கள் இதயத்திலே வாழ்ந்து கொண்டிருப்பேன். அப்பனே,!!!,
 அப்பனே, நலங்களாக.


 இதனால், அப்பனே, பின், வாழ முடியாத காலம். அப்பனே,இக் கலியுகம். 

 நிச்சயம், அப்பனே, இருட்டில் இருக்கின்றானப்பா, மனிதன்,

 அப்பனே, உங்களையும் சேர்த்துத்தான் சொல்கின்றேன். அப்பனே, ஒவ்வொருவனுக்கும் ஒவ்வொரு வினை!

 ஆனாலும், அப்பனே, நிச்சயம், உங்களை யான்  விட்டு விடுவதில்லை என்பேன். அப்பனே,

 நிச்சயம், ஆசிகளை கொடுத்து, அப்பனே, பின், பகலுக்கு எடுத்து வருகின்றேன். அப்பனே, போதுமா? அப்பனே, ஆசிகள்!!!

 அப்பனே, அவ்வாறு கொண்டு வந்துவிட்டால், அப்பனே, நீங்களே, அப்பனே, இன்னும், அப்பனே, பல மக்களுக்கு புண்ணியம் செய்வீர்களாக. அப்பனே,


 இதனால், நீங்களும் புண்ணியங்கள் பெருக்கிக் கொள்ளலாம் என்பேன். அப்பனே, 


அப்பனே, அத்தனை சக்திகளும் மனிதனிடத்தில் உள்ளதப்பா, 

இதனால், அப்பனே, அவ்சக்திகள், அப்பனே, பின், நிச்சயம், சிலருக்கே, அப்பனே, பின், கொடுத்து, அப்பனே, அதை இயக்கிடுவேன் என்பேன். அப்பனே,

 நிச்சயம், அனைவருக்கும் கொடுத்திட்டாலும், அப்பனே, நிச்சயம், எதை என்று புரிய, அப்பனே, புரியாமல் போய்விடுவான் என்பேன். அப்பனே, மனிதன், 


இதனால், அப்பனே, விதியை வெல்லும் சக்தி, அப்பனே, மனிதனுக்கு வருங்காலத்தில் சொல்லிக் கொடுப்பேன் என்பேன். அப்பனே, 




 அப்பனே, நீங்களே, அப்பனே, அன்புடனே, இறைவனை நேசித்து,!!!! நேசித்து,!!!..

ஆனாலும், துன்பத்தோடு தான் வாழ்ந்து வருகின்றீர்கள்.


  ஆனாலும், அப்பனே, அத்துன்பம், அப்பனே, எப்படி போக்குவது?? என்பதெல்லாம், அப்பனே, வருங்காலத்தில், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, நிச்சயம், அறிந்தும் புரிந்தும் கூட.

 இதனால், அப்பனே, நிச்சயம், இன்பம், துன்பம், அப்பனே, இவை என்று புரிய, அப்பனே, அறிந்தும் கூட. 

இதனால், அப்பனே, இரண்டுமே வைத்திருக்கின்றான் என்பேன். அப்பனே, இது மறைமுகமாக, அப்பனே, அறிவியல் வழியாக எடுத்துரைத்தால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின், அணுவாகவும் செயல்படுகின்றது என்பேன். அப்பனே,

 துன்ப அணு !! இன்ப அணு, !!
அப்பனே, நிச்சயம், அத் துன்ப அணுவை, அப்பனே, போக்குவதற்கு முதலில், அப்பனே, பல ஆலயங்கள், அப்பனே, பல வகையான இவ்வாறு மூலிகைகள், நிச்சயம், கொண்டு செய்தாலே, அப்பனே, அவ் அணுவை அழித்து விடலாம் என்பேன். அப்பனே, 

(துன்ப அணுக்களை ஒழிக்க ஓதி மலையில் செய்தவாறு பல ஆலயங்களுக்கு சென்று இதுபோன்று பல்வேறு மூலிகைகளை பயன்பவேண்டும்ஹோமம் செய்ய வேண்டும்
இப்படி செய்யப்படும் ஹோமத்தில் தொடர்ந்து கலந்து கொண்டால் துன்ப அணுக்கள் ஒழிந்து விடும்)


நிச்சயம், வருங்காலத்தில் என் பக்தர்களுக்கு அதையும் தெரிவிப்பேன். அப்பனே,

  அப்பனே, ஆனாலும், பின், அவ் துன்ப அணுவை, அப்பனே, அழிப்பதற்கு சாதாரணம் இல்லை என்பேன்.


. அப்பனே, அதை எப்படி அழிப்பது??? என்பதையெல்லாம், அப்பனே, உங்களுக்கே, அப்பனே, பின், உள்நுழைந்து, அப்பனே, சில சில வழியில் கூட, பின், செப்புவேன் என்பேன். அப்பனே,

 நிச்சயம், அப்பனே, அனைவருமே எங்கள் குழந்தைகள், அப்பனே,

 நிச்சயம், தன்னில் கூட, யாங்கள் காத்திருவோம். அப்பனே, 

நிச்சயம், அப்பனே, பின், எங்களை நம்பி வந்துவிட்டீர்கள் அல்லவா?

 அப்பனே, சிறிது காலம் பொறுத்தீர்கள் என்பேன்.

. அப்பனே, நிச்சயம், அப்பனே, எப்படி? நீங்கள் எல்லாம்,
நீங்கள் குழந்தைகள்,  நிச்சயம், என்னிடத்தில், நிச்சயம், தன்னில் கூட,


அதாவது, அழகாக, நிச்சயம், பின், இனிப்பு வாங்கித் தாருங்கள் என்று கேட்பீர்களாக. நிச்சயம், அறிந்து கூட, வாங்கித் தருகின்றேன், வாங்கித் தருகிறேன் என்று அழைத்துச் சென்று கொண்டே இருந்து மாற்றிடுவேன். அனைத்தும்,


அப்பனே, மனிதன் ஒவ்வொரு பின், அதாவது, நிச்சயம், தன்னில் கூட வினைக்காக, அப்பனே, நிச்சயம், அறிந்தும் கூட, அப்பனே, பின், எதை என்று அறிய போராடி, அதாவது, அப்பனே, பின், அனுபவிக்க ஏன்? மனித பிறப்பு எதனால் ஏற்படுகின்றது? என்பவை எல்லாம் விவரமாக குறிப்பிடுவேன். அப்பனே, 


ஏன் நோய்வாய்  படுகின்றான்? பின் அப்பனே, ஏன் இறக்கின்றான்? அப்பனே,
நிச்சயம், தன்னில் கூட, அனைத்தும் குறிப்பிடுவேன். என் பக்தர்கள், அப்பனே, அனைத்தும் தெரிந்து கொண்டு வாழ வேண்டும். அப்பனே,

நிச்சயம், தன்னில் கூட, முதல் வகுப்பிலே தேர்ச்சி பெற வேண்டும் என்றெல்லாம், அப்பனே, நிச்சயம் கூறிக்கொண்டே இருக்கின்றேன்.


  அப்பனே, முதன்மை,  இரண்மை, அப்பனே, இவ்வாறாக எடுத்துச் சென்றாலே, அனைத்தும் உங்களுக்கே புரியுமப்பா, 

இதனால், அப்பனே, உங்களை அனைவருமே யான் இன்று கண்டிட்டேன். லோபாமுத்திரையோடு!!!


அப்பனே, இன்னும் ஆசிகள், அப்பனே, இன்னும் ரகசியங்கள் சொல்வேன். அப்பனே, பின், அதாவது, இப்பொழுது போதுமப்பா,

அனைவருக்குமே ஆசிகள் அழகாக யானேசெய்து முடித்துட்டேன். அப்பனே, 


குருநாதரிடம் சில அடியவர்கள் சில சந்தேகங்களையும் கேள்விகளையும் கேட்டனர் அவர்களுக்கு குருநாதர் உரைத்த பதில் வாக்கு. 


ஒரு அடியவர் காசி செல்வது குறித்தான குருநாதரிடம் வைத்த விண்ணப்பத்திற்கு

குருநாதர் உரைத்த பதில்

காசி, அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, அப்பனே, அதாவது, திடீரென்று காசி யாத்திரை என்று சொல்லிவிட்டாய். அப்பனே, நிச்சயம், அப்பனே, அதாவது, பாவத்தை கொடுத்தவன்!!!! பாவத்தையே, பின், நிச்சயம், தன்னில் கூட அழிப்பானா ??என்று நீ கூறு.


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

காசி யாத்திரை செல்ல வேண்டும் என்று நீங்கள் கேட்டு விட்டீர்கள் !!

குருநாதர் பாவத்தை.. அதாவது நீங்கள் முற்பிறப்பிலோ எப்பிறப்பிலோ செய்த கர்மாக்கு ஏற்ப உங்களுக்கு பாவம் ஏற்பட்டுள்ளது பாவத்தை உங்களுக்கு அதற்கு தண்டனையாக கொடுத்த இறைவனே அவ்வளவு சீக்கிரத்தில் பாவத்தை அழிப்பதற்கு வழியை ஏற்படுத்துவாரா என்று உங்களிடம் கேட்கின்றார்.


குருநாதர்:

அப்பனே இதனால், நிச்சயம், தன்னில் கூட, பின், ஒவ்வொருவரும் அழைத்து செல்பவரும் அனைவரிடத்திலும் பாவங்கள். அப்பனே,

 இதனால், அப்பனே, கஷ்டங்கள் பட்டுதான் பார்க்க வேண்டும். ஈசனை!!

 சொல்லிவிட்டேன். அப்பனே, 

அவ்வாறு கஷ்டப்பட்டு கண்டிட்டால் மட்டுமே பாவ வினைகள் தீருமப்பா, !!

சுலபமாக கண்டிட்டால், அப்பனே, நிச்சயம், அப்பனே, சேராது எவை என்று கூட புண்ணியங்கள்!!!

 போதுமா? உந்தனக்கு!!!


  அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, சாதாரண மனிதனை காண வேண்டும்? என்றாலே எவ்வளவு கஷ்டங்களப்பா, 


சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம்

ஐயா நீங்கள் சாதாரண ஒரு மனிதரை பார்ப்பது என்றாலே அவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் அவரிடம் சொல்ல வேண்டும் அதன் பிறகு அவரை சந்திக்க வேண்டும் அப்படி இருக்க இறைவனை பார்க்க வேண்டும் என்றால் கஷ்டங்கள் பட்டு தான் ஆக வேண்டும்.


குருநாதர்:

அப்பனே!!, எங்கெல்லாம் நீ சிரமப்படுகின்றாயோ?, அங்கெல்லாம் புண்ணியம் சேருகின்றது என்று வைத்துக்கொள். அப்பனே, அவ்வளவுதான்!! சொல்லிக்கொடு. அனைவருக்கும் !!!

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

குருநாதர் கூறியது காசிக்கு செல்லும் உங்கள் அனைவருக்கும் பாவங்கள் இருக்கின்றது.. அதனால் காசிக்கு செல்வதென்றால் இறைவனை காண்பது என்றால் பல சிரமங்கள் கஷ்டங்களை கடந்து தான் பார்க்க வேண்டும் இதை அனைவருக்கும் கூறு என்று சொல்லுகின்றார்.


குருநாதர்:

 அப்பனே, இதனால், நிச்சயம், தன்னில் கூட எதை என்று புரிய. அப்பனே, எவை என்று அறிய ஏன்  அப்பனே, ஏன்? அப்பனே, பின், எங்கெங்கு? எதை என்று அறிய அறிய!!!

 அவ்வளவு தூரத்தில் இருக்கின்றான் அவன்.
(ஈசன்)


 அப்பனே, இறைவனை, அப்பனே, அலைந்து, திரிந்து, அடிபட்டு, மிதிபட்டு கண்டால்தான். அப்பனே, உத்தமம்.


 அப்பனே, அனைத்தும் சுலபமாக கிட்டிவிட்டால், அப்பனே, இறைவனுக்கு மதிப்பு ஏதப்பா?????,

சுவடி ஓதும் மைந்தனின் விளக்கம் 

இந்த உலகத்தில் எதுவுமே சுலபமாக கிடைத்துவிட்டால் அதற்கு மதிப்பு எதுவும் இல்லை என்று குருநாதர் குறிப்பிடுகின்றார்



குருநாதர்:

  அப்பனே, நிச்சயம், அறிந்தும் புரிந்தும் கூட இன்னும், அப்பனே, சொல்கின்றேன். வாக்குகள், அப்பனே, குறை இல்லை. அப்பனே, நிச்சயம், இன்னும், அப்பனே,



 இது தனி உலகம். அப்பா!!! என்று போகனே உரைத்திட்டான். 




 அப்பனே, இதனால், அப்பனே, இதற்கு நிச்சயம் பல சான்றுகள் உண்டு.

அவற்றையெல்லாம் வெளிக்கொண்டு வரும்பொழுது, நிச்சயம் அனைத்தும் புரியுமப்பா, 


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சிலருக்கு கூட ராகு தோஷங்கள். அப்பனே, நிச்சயம், பாம்பு ஒன்று. அப்பனே, நிச்சயம், தன்னில் உமிழ்ந்திட்டு, அப்பனே, பின், அதை எடுத்துட்டு சென்றுவிட்டது. 

(குருநாதரும் போகர் பெருமானும் வாக்குகளில் குறிப்பிட்ட அந்த நாக தேவதை  இந்த பூஜையின் போதும் மறைமுகமாக வந்து சிலருக்கு ராகு கேது தோஷங்கள் இருந்தது அதை நீக்கிவிட்டு சென்றுவிட்டது நாக தேவதையின் ரகசியம் குறித்து சித்தன் அருள் 1592 பதிவில் உள்ளது அந்த பதிவில் நாக தேவதையை குறித்த குருநாதர் வாக்கின் சிறு குறிப்பு இன்னும் பல சிறப்புக்கள் உண்டு என்பேன் அப்பனே ஆனாலும் நவகிரகங்களுக்கும் சம்பந்தங்கள் உண்டு என்பதை போல் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது அப்பனே நாக வடிவத்தில் அப்பனே அறிந்தும் கூட பல வழிகளிலும் கூட இன்று இருக்கின்றது அப்பா

அதற்கும் சம்பந்தங்கள் அப்பனே அறிந்தும் கூட எதை என்றும் அறிய அறிய ராகு கேது என்றெல்லாம் தோஷங்கள் அப்பனே

கழியுமா ?????

நிச்சயம் கழியாது அப்பனே!!! ஏன் எதற்கு அப்பனே ஆனாலும்!!!!!......

இங்கு இருக்கின்றதே நாக தேவதை அப்பனே அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே.......அவள்தன் ஒரு வைரத்தை அப்பனே வைத்துள்ளாள் அப்பனே அறிந்தும் கூட வயிற்றினில் அப்பனே

அவைதன் நிச்சயம் அப்பனே அறிந்தும் கூட அப்பனே அதாவது பின் மறைமுகமாகவே சிலசில ஒளிக்கற்றைகள் (வெளிப்படுத்தும்)  பின் கண்ணுக்குத் தெரியாதப்பா!!!!

அப்பனே ஆனாலும் (ஓதி மலையில் தங்கி உறங்க வேண்டும்) உறங்கினால் புரியுமப்பா !!!!நிச்சயம் அறிந்தும் கூட நிச்சயம் அவள்தனை  பார்த்து விட்டாலும்!!...

(இரவில் நாக தேவதை ஒளிக்கற்றையை வெளிப்படுத்தும் பொழுது)

பயந்து இறந்து விடுவானப்பா மனிதன்!!!

அதனால் தான் அப்பனே அனைத்திற்கும் காரணங்கள் உண்டு அப்பனே!!

(சில ஆலயங்களில்)
 ஏன் இரவில் தங்கக் கூடாது?? சில ஆலயங்களுக்கு செல்லக்கூடாது?? ஏன் அப்பனே சில ஆலயங்களுக்கு கூட பெண்கள் அனுமதிப்பதில்லை??
 அனுப்பாமல் அப்பனே இப்படியே எதை என்றும் அறிய அறிய அப்பனே... அனைத்தும் காரணத்தோடு தான் செய்கின்றார்கள் அப்பனே

ஆனாலும் இதையே அறிந்தும் கூட உண்மைதனை மறைத்து மறைத்து அப்பனே இன்னும் விளக்கங்கள்)




 அப்பனே, நலங்களாகவே இதனால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, மனிதனின் படைப்பு, அப்பனே, ஒரு அற்புத படைப்பு என்று!!!


 ஆனாலும், அப்பனே, நிச்சயம், அதை ஏன், எதற்கு? அப்பனே, அதாவது சொல்லிக்கொண்டே இருக்கின்றேன். அப்பனே, மனிதனை படைத்து, அப்பனே, பின், மனிதனை காக்கும் அளவிற்கு, அப்பனே, நிச்சயம், அப்பனே, ஒரு பெட்டியும் கொடுத்துள்ளானப்பா,


  அப்பனே, அதை சரியாக உபயோகப்படுத்தவே, உபயோகப்படுத்துவதே இல்லை. என்பேன், அப்பனே!!, அதை தூக்கி ஓரமாக வைத்துள்ளீர்கள். நீங்கள், அப்பனே,

 அதை எப்படி? பின் எடுத்து, அப்பனே, உங்களை பின் சரி செய்ய என்றெல்லாம் யான் கூறுகின்றேன். அப்பனே,நிச்சயம்

 அப்பனே, அறிந்தும் இதனால்தான், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, வினைகள் காலம். அப்பனே, அதாவது நோய்கள் காலம் என்பேன். அப்பனே, மனிதனுக்கு ஒவ்வொரு வினையிலும் கூட, அப்பனே, பின் சற்று ஏற்படுத்தி நெருங்க போகின்றது. அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, பின் நோய்கள் அப்பனே,

 ஆனால் எப்படி சரிப்படுத்துவது? அப்பனே, நிச்சயம், பின் அதையும் கூறுகின்றேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட, ஒரு திருத்தலத்தில் இங்கேயே எதை என்று புரிய. அப்பனே,


 இதனால், அப்பனே, நிச்சயம், மனிதனின் பின் அதை சீர் செய்ய. அப்பனே, நிச்சயம், நீடூழி, அப்பனே, வாழலாம் என்பேன். அப்பனே,



  அப்பனே, இறைவன் அனைவருக்குமே, அப்பனே, அனைத்தும் கொடுப்பதில்லை என்பேன். அப்பனே,


 நிச்சயம், ஒவ்வொன்றிலும், அப்பனே, பின் பிடுங்கி வைத்திருக்கின்றான் என்பேன். அப்பனே,


 அதையும் கொடுத்துவிட்டால், அப்பனே, நிச்சயம், பின் படைத்தவனை, அப்பனே, கண்டுகொள்ள மாட்டார்கள் என்பேன். அப்பனே, மனிதன்!!

 அதனால்தான் பிடுங்கி வைத்துள்ளானப்பா,



  இதனால், அப்பனே, பக்தி பொய்யாக போகும் என்பேன். அப்பனே, அனைவருக்கும், அப்பனே, 

பின் கொடுத்துட்டால், அப்பனே, உலகம், அப்பனே, பின் தீமையில் சென்றுவிடும். இதனால், அப்பனே, பின் ஒவ்வொருவருக்கும் நல் பக்தியில் உள்ளவருக்கு பிடுங்கி வைத்துக்கொண்டு, அப்பனே, இதன் மூலம் நிச்சயம் இன்னும் மாற்றுங்கள் என்று, அப்பனே, மாற்றிய பிறகு கொடுக்கின்றேன் என்று ரகசியமாக வைத்திருக்கின்றானப்பா, பத்திரமாக!!!!!


 அப்பனே இதனாலதான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இங்கு இருப்பவர்களுக்கு, பின் அனைவருக்குமே ஒவ்வொன்றை பிடுங்கி வைத்துள்ளானப்பா, பத்திரமாக!!!

அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நிச்சயம் இப்பொழுது கொடுத்துவிட்டால்!?!?!?!

, அப்பனே, நிச்சயம் பின், அதாவது இவ் இதை!,(ஆலயங்கள் பூஜைகள் இறைவன் தரிசனங்கள்) அதாவது, அப்பனே, பின் முருகனை பார்ப்பது எவர்? 

(மனிதர்களுக்கு அனைத்தும் கொடுத்து விட்டால் அனைத்தும் கிடைத்துவிட்டால் இறைவனை மறந்து விடுவார்கள் ஆலயத்திற்கு செல்ல மாட்டார்கள் தர்ம நெறியை கடைப்பிடிக்க மாட்டார்கள்)



 அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இன்னும் ரகசியங்கள் சொல்கின்றேன். அப்பனே, ஒவ்வொன்றாக, அப்பனே, அனைத்தும், அப்பனே, பின் சொல்லிக் கொண்டிருந்தால், அப்பனே, புரியாதப்பா. நிச்சயம், அப்பனே, உலகத்திற்கு, அப்பனே, நன்மைகள் வேண்டும். அப்பனே, உங்களால் ஆசிகள்,
 அப்பனே, பின் ஆசிகள்,

 யான் உங்களுக்கு தேவையானதை யானே ஏற்படுத்துகின்றேன். ஆசிகளப்பா, ஆசிகள்.


ஆலயத்தில் சேவை செய்து வரும் அடியவர் ஒருவர் குறித்து குருநாதரிடம் கேட்டதற்கு


 அப்பனே, எதை என்று புரிய அப்பனே, அவன் இறந்தவன் தானப்பா,

 அப்பனே, பின், அதாவது, முருகன், அப்பனே, உயிர் கொடுத்து, அப்பனே, வைத்திருக்கின்றானப்பா, அவ்வளவுதான்.


  அப்பனே, நிச்சயம், அப்பனே, இறந்தவனுக்கு என்ன கூறுவது?

 இறைவன் படைப்பு. அப்பனே, நிச்சயம், முருகன் வேலைக்காக வைத்திருக்கின்றான். அப்பனே, நிச்சயம், அப்பனே, பின், முருகன் வேலை, அப்பனே, செய்வானப்பா. 


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட சில தடை தாமதங்கள். அப்பனே, நிச்சயம், அப்பனே, எதை என்று புரிய. அப்பனே, முருகன் ஏற்படுத்திக் கொள்வான் என்பேன். அப்பனே, அழகாகவே!!
 கவலை விடுங்கள்.

மற்றொரு ஓதி மலையில் சேவை செய்து வரும் அடியவர் குருநாதரிடம் தனக்காக வாக்குகள் கேட்ட பொழுது


 அப்பனே, எப்படியோ போயிருக்க வேண்டியவன். அப்பனே, ஆனால் இப்படி வைத்திருக்கின்றான் என்றால், அப்பனே, முருகனை நினைத்து பெருமைப்படு.


கூடியிருந்த மற்றொரு அடியவர் குருநாதர் எனக்கும் ஆசிகள் தரவேண்டும் குருநாதா என்று கேட்டதற்கு


 , அப்பனே, நிச்சயம், இன்றைய பொழுதில், அப்பனே, அனைவருக்குமே ஆசிகள் என்று, அப்பனே, போகன் சொல்லிவிட்டான். அப்பனே, குறைகளை விடுங்கள். அப்பனே, நிச்சயம், அதாவது சொல்லிக்கொண்டே தான் இருக்கின்றேன். அப்பனே, ஒவ்வொருவனுக்கும், அப்பனே, ஒவ்வொரு குறை. அப்பனே, அதையெல்லாம், அப்பனே, யானே நீக்கி, அப்பனே, உங்களிடத்தில் இருக்கின்றேன். அப்பனே, வருவேன். அப்பனே, நீக்கி தருவேன் என்பேன். அப்பனே, கவலை விடுங்கள். கவலை விடுங்கள். 



மற்றொரு அடியவர் மற்ற ஒருவருக்காக கேட்ட பொழுது


அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. முருகன் அழகாக, அவன் பின் எண்ணிய எண்ணங்கள் ஈடு ஏற்றுவான் என்பேன். அப்பனே, 

ஏனென்றால், அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. அப்பனே, பின், அதாவது, அவன் எண்ணிய இடங்கள் ஈடேறாமல். அப்பனே, நிச்சயம், அவன் ஆன்மா பிரியாதப்பா சொல்லிவிட்டேன். அப்பனே, நிச்சயம், தன்னில் கூட. இயக்குகின்றான் கந்தனே!!!
 இயக்குகின்றான் கந்தனே. அப்பனே, நிச்சயம், எப்பொழுதும் அடியேனாகவே இரு. முருகனுக்கு!!

அடியார் 

 மடம் ஒன்றை ஆரம்பிக்கலாம் என்று இருக்கின்றேன் குருநாதா ஆசிகள் வேண்டும். 

அப்பனே, கந்தனே இயக்குவான் என்று சொல்லிவிட்டேன். இதற்கு என்ன அர்த்தம்?


 அப்பனே, நிச்சயம், தன்னில் கூட போதுமானதப்பா. அப்பனே, அவரவர் விருப்பப்படி அப்பனே, நிச்சயம், தேவையுள்ளவை. அப்பனே, நிச்சயம், உங்கள் மனதை, நிச்சயம், யான் ஆராய்ந்து பார்த்துவிட்டேன். அப்பனே, தேவையுள்ளதை கொடுப்பேன். அப்பனே, தேவையில்லாததை கொடுக்க மாட்டேன்.

 சொல்லிவிட்டேன். அப்பனே, நிச்சயம், அப்பனே, அனைவருக்குமே ஆசிகள். அப்பனே, தேவையானதை, நிச்சயம், கொடுப்பேன். அப்பனே, நிச்சயம், அப்பனே, பாருங்கள். சக்தியை, முருகன் சக்தியை. அப்பனே, ஆசிகள் போதுமானதப்பா.

 அப்பனே, இன்னும் வாக்குகள். அப்பனே, ரகசியத்தோடு குறிப்பிடுகின்றேன். இப்பொழுது போதுமானதப்பா. ஆசிகள், ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!