​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 March 2023

சித்தன் அருள் - 1309 - அன்புடன் அகத்தியர் - மஞசுநாதேஸ்வரா தர்மஸ்தலா கர்நாடகா



10/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு - வாக்குரைத்த ஸ்தலம் :  மஞசுநாதேஸ்வரா தர்மஸ்தலா கர்நாடகா

ஆதி ஈசனின் பொற்கமலத்தை  பணிந்து செப்புகின்றேன் அகத்தியன்!!!

அப்பனே நலன்கள் பெருகிவரும் அப்பனே!!! மக்களுக்கு!!!!

ஆனாலும் அதை ஏற்றுக்கொள்ள அப்பனே மனிதனால் வருங்காலங்களில் இயலாது!!!!

அப்பனே ஏனென்றால் அப்பனே மாயத் திரையில் அப்பனே மனிதன் விழுந்து விடுகின்றான் அப்பனே இதை எப்படித்தான் மாற்ற முடியும் என்பதையெல்லாம் நிச்சயம் அப்பனே ஏதாவது ஒரு வழியில் அப்பனே யாங்கள் மாற்றி அப்பனே அமைப்போம் !!!!

என்னுடைய பக்தர்களுக்கும் அப்பனே சரிசமமாய் அப்பனே எதை கொடுக்க வேண்டும் எதை கொடுக்கக்கூடாது அப்பனே!!!! எதன் மூலம் கர்மாக்கள் சேரும் எதன் மூலம் கர்மாக்கள் சேராது என்பவெல்லாம் யான் அறிந்து நிச்சயமாய் என் பக்தர்களுக்கு யான் செய்வேன்  அப்பனே!!!!!

இவை அப்பனே பின் யுகங்கள் யுகங்களாகவே அப்பனே யான்  செய்து வருகின்றேன் அப்பனே யான் அனைத்தும் செய்வதற்கு எதை என்றும் அப்பனே நல்விதமாகவே அனைத்தும் செய்வது உங்கள் நலனுக்காகவே அப்பனே!!!!

யான் எதற்கு போராட வேண்டும் ??அப்பனே!!!!

எதற்கு எதை என்று அறிந்து அறிந்து ஆனாலும் என் மக்கள் அப்பனே போராட்டங்கள் அப்பனே மனக்குழப்பங்கள் அப்பனே பின் மனது மாற்றம் இவையெல்லாம் பட்டு பட்டு எழுந்து கொண்டிருக்கிறார்கள் அப்பனே!!!

ஆனாலும் இதற்கு என்ன அப்பனே உத்திரவாதம் என்பதையெல்லாம் அப்பனே எதற்காக வருவது எல்லாம் எண்ணிப் பார்க்கின்ற   பொழுது அப்பனே இதனையும் அறியாமல் அப்பனே கர்மாவே!!!!!

இதனால் அப்பனே முதலில் கர்மாவை தான் நீக்க வேண்டும் அப்பனே கர்மத்தை நீக்கித்தான் அனைத்தும் கொடுக்க அப்பனே விதியின் பாதையும் கூட கர்மா விதி அப்பனே பின் கர்மா இது நடக்குமா எதை என்று அறிந்து அப்பனே நிச்சயம் அப்பனே கர்மா எப்படியோ அதன் பின்னே விதி கூட அப்பனே!!!!! 

இதனை மறுப்பதற்கு ஒன்றுமில்லை ஆனாலும் நிச்சயம் அப்பனே விதியினை கூட யான் மாற்றுவேன் விதியை கூட யான் மாற்றுவேன் என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றேன்!!!!

ஆனாலும் அப்பனே முதலில் கர்மாவை மாற்ற வேண்டும் கர்மாவை மாற்றினால் அப்பனே தானாகவே விதியும் மாறிவிடும்!!!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அளவிற்கு கூட அப்பனே என்னுடைய வாக்குகள் அப்பனே என் பக்தர்களுக்கு நிச்சயமாய் போய் சேரும் அப்பனே!!!!!

அதை நன்கு கடைப்பிடித்துக் கொண்டுதான் அப்பனே வாழ்வார்கள் கடைநாளும் என்பேன் அப்பனே!!!! 

அப்பனே என்னுடைய சீடர்களும் இப்புவிதன்னில் அப்பனே இருக்கின்றார்களப்பா!!!!!

நிச்சயம் வரும் காலங்களில் அவர்களுக்கெல்லாம் அப்பனே எப்படியெல்லாம் இப்புவிதன்னில் அப்பனே வாழ்ந்தால் நன்மைகள் அப்பனே பெறும் என்பதையும் கூட நிச்சயம் அதாவது என் பக்தர்களுக்கும் என் பிள்ளைகளுக்கும் அப்பனே யான் சொல்வேன்!!!!!

அப்பனே பொய்யான உலகம் பொய்யான மானிடர்கள் அப்பனே இப்படி இருக்கின்ற பொழுது அப்பனே எப்படியப்பா உண்மையான பக்தி இவ்வுலகத்தில் வரும் என்பதை கூட யான்  ஆராய்ந்து ஆராய்ந்து நிற்கின்றேன்!!!!

அப்பனே கலியுகத்தில் உண்மையானவைகள் அப்பனே இல்லையப்பா!!!!! அனைத்தும் பொய்யானவைகள் தான் அப்பனே!!!!

பொய்யானவைகளை பின்பற்றி பின்பற்றி அழிந்து அழிந்து தானும் அழிந்து அனைவரும் கெடுத்துக் கொண்டிருக்கின்றான் அப்பனே!!!! 

நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் நிச்சயம் அப்பனே அகத்தியன் அதாவது எதை என்றும் அறிந்து பின் என்னுடைய வாக்குகள் அதாவது ஒரு சொல் என் வாயிலிருந்து விட்டு விட்டால் அப்பனே நிச்சயம் அது நிறைவேற்றியே நிச்சயம் தீரும் என் வாக்கு அதுபோல் என்பேன் அப்பனே!!!!!!

இதனால் அப்பனே அதனால் தான்  அப்பனே பின் கர்மத்தை பொறுத்தே அப்பனே எப்படி எதை என்று செய்ய வேண்டும் என்பதையெல்லாம் யான் எடுத்துரைத்துக் கொண்டே வருவேன் !!!!!அப்பனே 

ஆனாலும் பல மனிதர்கள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே பின் இறைவனை நம்பினோமே!!!!!!! அப்பனே ஒன்றுமே ஆகவில்லையே எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!!..... இறைவனை நம்பினேனே எந்தனுக்கு ஒன்றுமே செய்யவில்லை இறைவன்!!!!!.....

ஆனால் அப்பனே இறைவன் செய்ய தகுதி அதாவது அப்பனே பின்  தயாராகிக் கொண்டே இருக்கின்றான்!!!! 

ஆனால் பெற்றிருக்க தகுதி உன்னிடத்தில் இல்லையே அப்பா !!!!

ஆனாலும் அப்பனே அதை பெறுவதற்கான வழிகள் எங்கள் கையில் என்பேன் அப்பனே!!!!!

இதனால் நிச்சயம் அனைத்தும் மாறச் செய்வேன் அப்பனே என்னால் அனைத்து முடியும் என்பேன் அப்பனே!!!!

காப்பதற்கும் அழிப்பதற்கும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் யான் எதை என்று சொல்ல!!!!!!!!.......

அப்பனே ஒரு பக்தியை பற்றி இங்கு எடுத்துரைக்கின்றேன் அப்பனே!!!!!    புசுண்ட முனியும் அப்பனே திருத்தலத்தை பற்றி சொன்னான்!!!! 

அதாவது நாராயணனை(சென்னகேசவர் திருக்கோயில்) பற்றி எடுத்துரைத்தான் அப்பனே இன்னும் சூட்சமங்கள் பல அங்கு ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் அதையெல்லாம் இப்பொழுது எடுத்துரைக்கவில்லை அப்பனே யானும் கூட!!!! புசுண்டமுனியும் கூட  நிச்சயம் வருங்காலங்களில் அதனை பற்றி யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!!!

மர்மங்கள் பல பல உறுதியாக ஒளிந்துள்ளது அப்பனே!!  திருத்தலங்களில் கூட!!!!! 

அப்பனே அதை பின்பற்றி சரியாகவே அமர்ந்து அப்பனே பின் தியானங்கள் செய்தால் அப்பனே கூடுதல் சக்திகள் நம்மில் பின் அதாவது உடம்பில் அப்பனே பின் நுழையும்!!!!

இதனால் அப்பனே மாற்றங்கள் அப்பனே அனைத்திலும் கூட அப்பனே!!!! 

உடம்பில் எப்பகுதியில் அப்பனே கிரகங்கள் வேலை செய்கின்றது என்பதையெல்லாம் நிச்சயம் அடுத்தடுத்த வாக்குகளில் யான் சொல்லப்போகின்றேன் அப்பனே!!!!! 

அதை தூய்மையாக வைத்துக் கொண்டால் அப்பனே நிச்சயம் பின் கிரகங்கள் அங்கே விழுந்து அப்பனே நன்மைகள் ஏற்ப்பட்டு அனைத்தும் வெற்றி அடையலாம் என்பேன் அப்பனே!!!!!

அப்பனே மற்றொரு முறையை சொல்கின்றேன் ஆசை இல்லாதவனுக்கு கிரகங்களும் வேலை செய்யாதப்பா!!!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய ஆசைகள் அப்பனே இருக்கின்றவர்களுக்கு அப்பனே கிரகங்கள் வேலை செய்யும் என்பேன் அப்பனே!!!!

பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே அப்பொழுது எத்தனை பேர் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட கிரகங்கள் அப்பனே பிடியில் கூட!!!!!!

இதனால் ஒவ்வொன்றாக நிச்சயம் என் பக்தர்கள் அப்பனே நிச்சயம் மனதை மாற்றவும் யாம்தனக்கு தெரியும் என்பேன் அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய  அதனால் என் பக்தர்கள் அப்பனே சந்தோசம் என்பேன் அப்பனே!!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே என்னுடைய நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்......யான் சென்று 

யான் சென்று அப்பனே நிச்சயம் என் பக்தர்களை காத்து உயர்வான இடத்திற்கு அழைத்துச் செல்வேன் தர்மத்தை அழித்து அழித்து இதற்கு அதாவது அப்பனே கர்மா அழிவதற்கு அப்பனே எதை என்றும் அறிய அறிய ஒன்றும் அப்பனே தேவையில்லை!!!!!

அப்பனே எங்களுடைய அருள்கள் இருந்தாலே போதுமப்பா!!!!!!

சித்தர்கள் கர்மாவை நீக்கியே எதை என்றும் அப்பனே அதை நீக்கியே வாழ வைப்பார்கள்!!!!!

அப்பனே புவியில் வேண்டாமப்பா புவியில் பிறந்தாலே அப்பனே கஷ்டங்கள் கஷ்டங்கள் என்றெல்லாம்!!!! அப்பனே வேண்டாமப்பா!!!! 

இப்புவிதன்னில் அப்பனே எப்படி எதை என்று அறிந்து அறிந்து என் பக்தர்களுக்கு எப்படியெல்லாம் மனவேதனை வரும் எப்படியெல்லாம் நோய்கள் வரும் என்பதையெல்லாம் யான் அறிந்து கொண்டே இருக்கின்றேன் அப்பனே!!!!!

அவை எல்லாம் கர்மத்தின் வழியேவா?!!!!  இதனால் அப்பனே அவையெல்லாம் எப்படி எல்லாம் நீக்கப்பட வேண்டும் என்பதையெல்லாம் நிச்சயம் வருங்காலத்தில் யான் நிச்சயம் அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே அனைத்தும் உணர்ந்தவன் அனைத்தும் உணர்ந்தவன் யான் அப்பனே!!!!!!

எதை என்று அறிய அறிய அனைத்தும் எதை என்று அறிய அப்பனே பின் நல்விதமாகவே ஈசனும் கூட அப்பனே!!!!! 

அகத்தியா!!!!! உன்னால் எதை என்று அறிந்து அறிந்து அனைத்தும் செய்ய முடியும்!!!!!  என்பதைப்போல் அப்பனே ஆனால் அனைத்தும் தெரிந்தவன் யான்!!!! 

இப்பொழுது இங்கு சொல்கின்றேன் அப்பனே!!!! 

ஈசனிடத்தில் இருந்து கொண்டே அப்பனே!!!!!  எதை என்று அறிய அறிய!!!! 

அப்பனே ஆனாலும் அமைதி காக்கின்றேன் அப்பனே!!!! 

அதனால் தான் ஈசனே!!!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும்.... என்னை பற்றி அறிய அறிய இன்னும் சித்தர்கள் செப்புவார்களப்பா!!!!!! 

இதனால் அப்பனே நிச்சயமாக புவி தன்னில் தெரியாமலே பிறந்து விட்டீர்கள் அப்பனே!!! 

ஆனாலும் தெரிந்தும் வாழ கற்றுக்கொள்ளுங்கள் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே!!! 

அப்பனே உண்மையான பக்திக்கு நிச்சயம் அப்பனே வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே!!!! தாமதமாகலாம் ஆனால் அப்பனே நிச்சயம் அதே போல தான் பாவமும் புண்ணியமும் அப்பனே!!! 

பாவம் செய்கின்றவர்கள் நன்றாக இருக்கின்றார்களே என்று அனைவரும் எண்ணலாம்... 

ஆனாலும் அப்பனே பொறுத்திருக!!!!!!  பார்ப்போம் என்பது தான் இதன் வாக்கு!!!! 

புண்ணியங்கள் செய்தவனும் இவ்வாறு கஷ்டங்கள் படுகின்றோமே என்பதை கூட நினைத்து பார்க்கலாம்... 

ஆனாலும் அப்பனே இதற்கும் பொறுத்திரு!!!!! என்று தான் அர்த்தம் அப்பனே!!!!! 

பின் புண்ணியமாகிலும் அப்பனே சிறிது கால தாமதம் ஆகவே செயல்படும்!!!! 

பாவங்களாயினும் இன்னும் கால தாமதமாகவே செயல் படும் அப்பனே!!!! 

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இதற்கும் யான் விளக்கங்கள் நிச்சயம் தரப்போகின்றேன் அப்பனே!!!!  எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே!!!! 

உணர்ந்து அப்பனே எதை என்றும் கூட ஒரு நாதன் அவன் நாமம் எதையென்றும் அறிந்தும் அவந்தன் சிவ பக்தன் அப்பனே!!!!  மிகுந்த அதாவது ஈசன் மீது பற்று கொண்டவன் அப்பனே 

பல ஆலயங்களுக்கு திரிந்தவன்.......திரிந்து திரிந்து அப்பனே   ஈசனும் விளையாடினான் அதாவது ஈசனும் வரவில்லை அப்பனே அண்ணாமலை அதாவது பஞ்சஸ்தலங்களையும் ( பஞ்சபூத தலங்கள்) அப்பனே இன்னும் ஏராளமான தலங்களையும் தரிசித்து அப்பனே கடைசியில் அப்பனே எதை என்றும் உணராத அளவிற்கு கூட அப்பனே இமயமலைக்கு சென்றான் அங்கேயும் அப்பனே காண இயலவில்லை அதாவது ஈசனை !!!!!

அப்பனே இப்படியே காலங்களில் கனிந்து கனிந்து ஆனாலும் பின் ஈசனே!!!!!  உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றேனே எந்தனுக்கு தரிசனங்கள் தரவில்லையே!!!!!!!! ஏன் இந்த பிறப்பு??????......

பல கஷ்டங்கள் உணவில்லாமல் உறங்காமலும் உன்னை நினைத்துக் கொண்டிருந்தேனே ஆனாலும் வயதும் ஆகிவிட்டது. கால்களும் ஓய்ந்து விட்டது கைகளும் பின் எதை அறிய அறிய கண்களும் மங்கி விட்டது எதனை என்றும் அறிய யான் எப்படித் தான் செல்வேன் என்று!!!!!

ஆனாலும் பின்  அங்கே அமர்ந்தான்!!!!! அதாவது ஆனாலும் நிச்சயமாய் பின் அறிந்து அறிந்து பின் ஈசன் மறைவிடம் மாறுவேடம் புகுந்து அதாவது அவன் இருக்கும் இடத்திற்கு வந்தான்!!!!

பின் மகனே நன்றாக இருக்கின்றாயா என்று ஆனாலும் பின் முதியவன் ஆகிவிட்டான்!!!! முதியவன் ஆகிவிட்டான் அவ் பக்தன்!!!

பின் நன்றாக இருக்கின்றேனப்பா!!!!!! ஆனாலும் ஈசனோ நன்றாக இருக்கின்றாயா? யான் உன்னை பல வழிகளிலும் பார்த்திட்டேன் ஆனாலும் ஈசனை நினைத்து நினைத்து தவம் செய்து கொண்டிருக்கின்றாய்!!!!!

ஆனால் ஈசனோ பின் உன்னை கண்டு கொள்ளவே இல்லை ஈசன் ஏமாற்றுக்காரன் என்றான் அதாவது ஈசனே!!!!...........

ஆனால் அவ் பக்தன்  அப்படி எல்லாம் சொல்லாதே அப்பா எந்தனுக்கும் வயதாகிவிட்டது ஆனால் ஈசன் நிச்சயமாய் எந்தனுக்கு எவை என்று அறிய அறிய ஏதாவது ஒரு ரூபத்தில் காட்சியளிப்பான் என்று!!!!! 

ஆனாலும் ஈசனே பின் முட்டாளே அறிந்தும் அறியாமலும் பிறந்து விட்டாய் உலகத்தில் ஆனாலும் எங்கெங்கோ இவ் சோகங்கள் எல்லாம் ஆனாலும் ஈசனை கண்டோர்  உண்டா??????? இவ் உலகில்!!!!!!

ஆனாலும் அறிந்து நீயும் ஈசன் ஈசன் என்று அதாவது பின் நினைத்துக் கொண்டிருக்கின்றாயே அவ் ஈசன் வரப்போவதில்லை!!!!!!! இங்கேதான் நீ மாண்டு போகப்போகின்றாய் என்று!!!! 

ஆனாலும் அவ் பக்தன்!!!!! 

வார்த்தைகளை விடாதே!!!!!! பின் எனக்காவது எதை என்று அறிய வயதும் ஆகிவிட்டது என்னைவிட நீ மூத்தவனாகத்தான் இருக்கின்றாய் அதனால் தான் யான் ன் திட்டவில்லை!!!!!

ஆனால் சிறியவனாக இருந்தால் ஆனாலும் பின் என் ஈசன் என் மனதில் இருக்கின்றான் பரவாயில்லை..........வராமல் போனாலும்  எதை என்று அறிய அறிய என்று!!!!!!

ஆனாலும் பின் ஈசன் பின் மீண்டும் இவனை எப்படியாவது சோதிக்க வேண்டும் என்று!!!!!

ஆனாலும் சரி யானும் ஈசனை நோக்கி தவம் இருந்தேன். ஆனாலும் பின் பல வருடங்களாக ஈசன் அதாவது எதை என்று பைத்தியக்கார ஈசன்!!!!!!  எந்தனுக்கு தரிசனமும் கிடைக்க அதாவது கிடைக்கப்பெறவில்லை பின் ஈசன் எதை என்று அறிய கடைசியில் பார்த்தால் உண்ண வழியும் இல்லை!!!! பைத்தியமாகிவிட்டேன்!!!! சொந்தபந்தங்கள் யாருமில்லை என்று அநாதை ஆகி விட்டேன் 

ஆனாலும் அவ் பக்தன் அப்படியெல்லாம் சொல்லாதே ஈசன் நிச்சயம் என் கண்ணுக்குத் தெரிவான்!!!!!

சரி அப்படி என்றால் நிச்சயமாய் அறிந்து அறிந்து சரி ஏன் இங்கே தங்கி விட்டாய்!!??? நீ தான் எதை என்றும் அறிந்து ஈசன் மீது பின் பற்று கொண்டாயே பின்பு அறிந்து அறிந்து என்று  இன்னும் நடந்து சென்றாக!!!! ............

ஆனாலும் வயது ஆகிவிட்டதே என்று எண்ணி விட்டாயா!!!! முதியவா!!!!! என்று ஈசனும்!!!

நிச்சயம் எந்தனுக்கு வயதாகவில்லை யான் எழுந்து நடப்பேன் என் ஈசனை காணப் போகின்றேன் என்றெல்லாம் காடுகளும் மலைகளும் அலைந்து திரிந்து ஆனாலும் கடைசியில் பார்த்தால் அதை அறிந்து ஈசனே!!!! ஈசனே!!!!  என்றெல்லாம் ஆனாலும் பார்வதி தேவியும் பின் மணாளனே மணாளனே ஏன் இவ்வாறு உன் பக்தனுக்கு சோதனைகள் கொடுத்தால் எப்படித்தான் தாங்குவான் என்று!!!!

நிச்சயம் பார்வதி தேவியே!!!!!! சோதனை கொடுத்தால்தான் பக்குவங்கள் பிறக்கும் பக்குவங்கள் பிறந்தால் தான் இறையருள் அதாவது என்னுடைய அருளையும் பெற முடியும் !!!!

இன்னும் ஞானம் அனைத்தும் கிட்டும்

ஆனாலும் பின் பார்வதி தேவி!!!!

இருந்தாலும் மணாளனே இவையெல்லாம் பின் அதிகம்

பின் பொறுத்திரு தேவியே!!!!

நடப்பதை பார் என்று!!!!

ஆனாலும் அவ் முதியவன் நிச்சயம் என் ஈசன் இருக்கின்றான் என்று அப்படியே அங்கிருந்து புறப்பட்டான்!!! பல ஆண்டுகள் கடந்தது

வழியில் அதாவது பின் உண்ண அதாவது தர்மம் ஏந்தி பின் அங்கங்கே இருக்கும் பின் மனிதரிடத்தில்!!!

ஆனாலும் இதனை அறிய இவ்வாறு சூட்சுமம் மிகுந்ததாயினும் நிச்சயம் துணைக்கு ஆனாலும் பின் பார்வதி தேவி ஈசனார் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட பின்!!! 

மணாளனே இன்னும் சோதனையா உன் பக்தனுக்கு!!!! 

வயதும் ஆகிவிட்டது இறக்கும் அதாவது தருவாயில் வந்து விட்டான் நீ ஏதாவது செய் என்று!!!

நிச்சயம் அறிந்து அறிந்து தேவியே!!!!

செய்கின்றேன் ஆனாலும் பார் என்று!!!

ஆனாலும் சரி தேவியே பின் சென்று வருகின்றேன்

 அதாவது பூலோகத்திற்கு!!!!

 அறிந்து என்று மீண்டும் கூட அதனால் அவை அறிந்து மீண்டும் மீண்டும் பின் கிழவன் போல் வேடம் அணிந்து வந்தான்!!!!!

 வந்தான் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அறிந்தும் கூட பின் முதியவனே  பின் ஆனாலும் பக்தன் என்னையா முதியவன் என்கிறாய் பின் நீதான் முதியவன்!!!

 உனக்குத்தான் வயதாகிவிட்டது ஆனால் எந்தனைக்கே வயதாகவில்லை என் ஈசன் என் உள்ளே இருக்கின்றான் அதனால் இனி மேலும் என்னை முதியவன்என்று அழைக்காதே!!!!!!!

 சரி அதாவது ஈசனும் இளைஞனே என்று அழைக்கலாமா??? என்று!!! தெம்பும் வந்துவிட்டது அவ் பக்தனுக்கு!!!!! 

ஓ!!!!!!  அழைக்கலாமே!!! என்று!!! 

இளைஞனே!!! யானும் ஈசனை நோக்கித்தான் புறப்பட்டு கொண்டிருக்கின்றேன்!!!! ஆனாலும் ஆண்டுகள் பின் பல ஆண்டுகள் பின் ஆனாலும் ஈசன் என்னை கண்டு கொள்ளவே இல்லை அதனால் எப்படி என்று அறிய ஆனாலும் கவலைகள் இல்லை பின் அதாவது பின் அவ் பக்தன் ஈசனை நோக்கி!!!! 

கவலைகள் இல்லை!!!! 

இதுபோல் பல மனிதர்கள் என்னிடத்தில் தெரிவித்துவிட்டார்கள் ஆனால் யான் எதற்கும் மனம் கலங்கவில்லை ஈசனை பார்ப்போம் என்னிடத்தில் அதாவது யானும் தனியாகச் செல்கின்றேன் ஆனாலும் ஒன்று என் ஈசனின் மனதில் கொண்டிருக்கின்றான்!!!!!

நீயும் யார் இல்லை என்று கூட  என்னிடத்தில் தெரிவித்துவிட்டாய்!!! ஈசனாரும் பல ஆண்டுகள் அதாவது ஈசனை நோக்கியும் பின் எதை என்று அறிந்தும் பின்தவத்தை மேற்கொண்டு........என்னுடன் வா !!!!செல்வோம்!!!!

எங்கு உயிர் பிரிகின்றதோ??? அங்கேயே அறிந்து அறிந்து நிச்சயம் ஆனாலும் ஈசன் ஒரு நாள் நிச்சயம் நாம் இறந்ததாயினும் நிச்சயம் வந்து பின் கண்களில் கண்ணீர் சிந்துவான் என்று!!!!!

ஆனாலும் பின் பக்தன் ஆனாலும் இப்படியெல்லாம் இருக்கின்றான் என்று எண்ணி எண்ணி!!!! 

ஆனாலும் இளைஞனே ஆனாலும் எதை என்றும் அறியும் தகும் தகுதிக்கு இளைஞனே யான்தான் முதியவன்!!

நீயோ இளைஞன் ஆனாலும் பின் உன்னை அதாவது தர்மம் ஏந்த எந்தனுக்கு மனது வரவில்லை!!!!

அதனால் எங்கு செல்கின்றோமோ அங்கு வரை யானே!!!! தர்மம் அனைவரிடம் இட்டு யானும் உண்ணுகின்றேன் நீயும் உண்!!! என்று!!!

இதனால் பின் அதாவது ஈசனே!!!! தர்மம் ஏந்தினான் ஏந்தினான்!!! ஏந்தினான்!!  பின் அனைவரிடத்திலும் தர்மம் ஏந்தி ஏந்தி அவ் இளைஞனுக்கு அதாவது பக்தனுக்கு கொடுத்தான்!!!!!

 புரிந்து கொள் எதை என்று அறிய அறிய பின் அப்பா எதை என்றும் உணர்ந்து உணர்ந்து!!!!! 

அப்பனே சித்தர்களே எதை என்று உணர்ந்து எவை என்று அறிய பக்தி இங்கு எங்கு செல்கின்றது பார்!!!!

 எது பக்தி என்பது கூட இதனால் பின்  கடைசியில் இங்கு வந்தார்களப்பா!!!!!!!

 இதனால் அங்கிருந்து அதாவது இமயமலை தன்னில் இருந்து அதாவது இவை என்று அறிய அறிய இங்கு வரை பின் பிச்சை ஏந்தி !!!ஏந்தி!!!! அவ் இளைஞனுக்கு அதாவது பக்தனுக்கு கொடுத்துக் கொள்ள சந்தோசம் மிகுந்து காணப்பட்டது!!!!!

ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஈசனாரும் ஆனாலும் நிச்சயமாய் இனி மேலும் பக்தனுக்கு காட்சியளிக்க வேண்டும் என்று எண்ணி நிச்சயமாய் அதாவது இத் திருத்தலத்திலே!!!!!!!! பின்  காட்சியளித்தான்.!!!!!

ஆனாலும் பின் அவ் இளைஞன் அதாவது அவ் பக்தன் பின் யார்??? என்று தெரிந்து கொண்டாயா இளைஞனே என்று!!!!

பின் ஈசனே!!!!!!!!!!! என்றெல்லாம் கண்ணீர் மல்க கண்ணீர் மல்க ஈசனே ஈசனே. ...... எந்தனுக்காக பிச்சை ஏந்தினாயா!!!!!!!!

பின் யானும் உணர்ந்து கொள்ளவில்லையே!!!!!! ஈசனே எதை என்றும் அறிய அறிய பின் எவை என்றும் ஆனாலும் எதை என்றும் பின்  அதாவது இளைஞனே!!!!!

உன்னை இளைஞன் என்றே அழைக்கின்றேன் உனக்கு என்னதான் தேவை??? என்று அறிய 

இல்லை இல்லை!!!! 

நிச்சயம் எதை என்று அறிய அறிய பின் எந்தனுக்கு உணவு இல்லை என்றாலும் 

நீ பிச்சை ஏந்தி அதாவது  உன் நிலைமை என்ன!!!!!!

ஈசனே!!!!!

ஆனாலும் 

என் நிலைமைக்கு இறங்கி வந்து நீயும் எதை என்று அறிந்து அறிந்து அனைவருக்கும் எதை என்று கூட இவ்வாறு எல்லாம் நிச்சயம் ஆனாலும் நிச்சயம் தன் பக்தனுக்காக பிச்சை எடுத்தான்!!!!

எவை என்றும் அறிந்தும் அறிந்தும் ஈசன்!!!!

ஆனாலும் பக்தனுக்கு எதை என்ற அறிய அறிய ஆனாலும் பின் ஈசனே

எதை என்று கூற அப்பா!!!!!!!!!!!!!!! என்றெல்லாம்!!!!

பின் ஆனாலும் அப்பனே என்றெல்லாம் உன்னைத்தான் அப்பனே என்று சொல்ல வேண்டும் என் மீது இவ்வளவு பக்திகள் அளவு கடந்த பக்திகள் அப்பனே உந்தனுக்கு என்ன தான் வேண்டும் என்று ஈசன் கேட்க!!!!!

நிச்சயம் இங்கேயே நீ தங்கிவிட வேண்டும் வரும் பக்தர்களுக்கு ஏதும் இல்லாதவர்க்கு எல்லாம் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் அன்னத்தையும் அளித்தும் கூட இன்னும் ஞானங்களை பெற வழி செய்ய வேண்டும் அதாவது உண்மைதனை புரிய வைக்க வேண்டும் பல கஷ்டங்கள் பட்டு பட்டு பின் உண்மை நிலை புரிந்து புரிந்து பின் பலவகையில் கூட நிச்சயம் அருட்செல்வமும் பொருட் செல்வமும்  கொடுக்க வேண்டும் என்று பின் அதாவது அவ் பக்தன் கூறினான் !!!!!!

நிச்சயம் உன் விருப்பப்படியே ஆகட்டும் அதை அறிந்து யானே இங்கு தங்கி விடுகின்றேன் என்று !!!!

அப்படியே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் அதாவது  அவ் பக்தனின் உயிரும் பிரிந்தது.

இதனால் அவ் உயிரையும் கூட அப்படியே எதை என்று அறிந்தும் அறிந்தும் ஈசனார்!!!!!!!  தன் எதை என்று அறிய தன் காலடியில் வைத்துக்கொண்டு இப்பொழுது கூட பின் அவ் பக்தன் வருவோருக்கெல்லாம் நிச்சயம் ஏதோ ஒரு ரூபத்தில் பின் யான் தான் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்  எந்தனுக்காக பிச்சை எடுத்தானே ஈசன் நிச்சயம் அதாவது ஈசன் பக்தர்களுக்கு யான் நிச்சயம் இங்கு வருபவர்களுக்கு எல்லாம் அனைவருக்கும் கூட அன்னத்தை அதாவது அனைத்தும் கொடுத்து அனுப்புகின்றேன் என்று எண்ணி வரும் அதாவது இயலாதவருக்கெல்லாம் அனைத்தும் பின் கொடுத்து அனுப்பிக்கொண்டே இருக்கின்றான். அவ் பக்தன்!!!!

இதை எவ்வாறு என்பதை கூட அதனால் தான் அப்பனே எதை எதை என்று அறிய அறிய உயர்ந்த பக்தியை காட்டுங்கள் அப்பனே!!!! 

சோதனைகள் இருந்தாலும் கடைசியில் அது சாதனைகளாக போய்விடும் அப்பனே!!!!

இவைதன் யான் சொல்லவில்லை அப்பனே உணர்ந்து உணர்ந்து பெரியோர்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!!!

இப்பொழுது கூட அப்பனே அதனால் தான் கஷ்டங்கள் இருந்தால் தான் வாழ்க்கையப்பா!!!!!!

கஷ்டங்கள் இல்லாமல் வாழ்க்கை என்பது தித்திக்காது என்பேன் அப்பனே!!!!! 

ஆனால் மனிதர்கள் அப்பனே யாரும் புரிந்திருக்கவில்லை என்பேன் அப்பனே இவையெல்லாம் !!!!

அப்பனே வரும் காலங்களில் நிச்சயம் அப்பனே இன்னும் இன்னும் அறிவியல் அறிவியல் வழிகளில் எதை என்றும் அறிய எப்படி எல்லாம் உயிர் எங்கெல்லாம் ஒருவனுக்கு தங்கி நிற்கின்றது என்றெல்லாம் நிச்சயம் யாங்கள் அதாவது விஞ்ஞானம் பூர்வமாகவே யான் எடுத்துரைப்பேன் அப்பனே!!!!!!

 எந்தனுக்கு தெரியாத விஞ்ஞானமே இல்லைப்பா!!!!!!

யான் அனைத்தும் கற்றவன் அப்பனே இப்பொழுது கூட நிச்சயம் உலகத்தில் ஒவ்வொன்றையும் கூட ஒவ்வொரு மனிதனை கூட பின் என்னால் கணிக்க முடியும் அப்பனே 

கால்கள் இப்படி இருந்தால் ஒரு எண்ணங்கள் கைகள் இப்படி இருந்தால் ஒரு எண்ணங்கள் அப்பனே!!!! அனைத்தும் எதை என்றும் அறிய அறிய வரும் காலங்களில் எடுத்துரைக்கின்றேன் அப்பனே !!!!

கிரகங்களில் அப்பனே அதாவது கிரகங்கள் எப் பகுதிகளெல்லாம் உள்ளது என்பதை கூட யான் எடுத்துரைக்கின்றேன். எப்படி கட்டுப்படுத்துதல் என்பதை கூட!!!!!

ஆனாலும் அப்பனே என் பக்தர்கள் எதை என்றும் அறிய அறிய ஒரு உயிரையும் கொல்லக்கூடாது என்பதை கூட நிச்சயம் சபதம் ஏற்க வேண்டும்!!!!!!!!! அப்பனே!!!! 

எதை என்றும் அறிய அறிய அப்பனே  அனைத்தும் இயற்கையாக சென்றால் அப்பனே நலம்!!!!! 

செயற்கையாக சென்றால் அப்பனே பாவம்!!!!

அப்பனே இவையெல்லாம் உணர்ந்து உணர்ந்து என் பக்தர்களை நிச்சயம் 

வரும் காலங்களில் மாற்றி அமைத்து அதாவது எதை என்று அறிய அறிய உயர்ந்த இடத்திற்கு யான் அழைத்துச் செல்வேன் அப்பனே!!!!

 நன்றாகவே ஆசிகள்!!! ஆசிகள்!!!! 

மற்றொரு வாக்கும் மற்றொரு தலத்தில் உரைக்கின்றேன் ஆசிகள்!!! ஆசிகள்!!!!!

ஆலயம் முகவரி மற்றும் விபரங்கள் 

முகவரி:

அருள்மிகு மஞ்சுநாதர் திருக்கோயில் தர்மஸ்தலா,

பெல்தங்கடி தாலுக்கா,

தெட்சிண கன்னடா மாவட்டம்

மங்களூர் அருகில்,

கர்நாடகா-574-216.

தொலைபேசி எண்

+91 8256 277121, 277141

கோவில் திறக்கும் நேரம் மற்றும் மூடும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.

விவரங்களைப் பின்தொடரவும்

வழக்கமான நாட்கள் -

காலை: 6:30 முதல் மதியம் 2:30 வரை

மாலை: 5:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை

இந்தக் கோவிலில் உள்ள மூலவர் தங்கத்தாலான சிவ லிங்கமாக, காட்சியளிக்கின்றார். ஈசன் இத்திருத்தலத்தில் மஞ்சுநாத சுவாமிகள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றார். தர்ம தேவதைகளின் உதவியாளரான, அன்னப்ப சுவாமிகள் இந்த தர்மஸ்தலா தலத்தின் மகிமைக்கு ஒரு முக்கியம் காரணமாக திகழ்கின்றார். மஞ்சுநாதரின் சன்னிதியின் வலப்பக்கத்தில் தர்மதேவதைகளுக்கென தனியாக ஒரு சந்நிதியும், கன்னியாகுமரி அம்மனுக்கு என்று தனியாக ஒரு சந்நிதியும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே உள்ள அன்னபூர்ணா சத்திரத்தில் தினம்தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அன்னதானத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.

சிறப்பு நாட்கள், திங்கள் மற்றும் ஞாயிறு -

காலை: 6:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை

மாலை: 5:30 மணி முதல் இரவு 9:00 மணி வரை திறந்திருக்கும்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!!

No comments:

Post a Comment