41. தமிழ் மொழி என்றும் வாழ என்ன செய்ய வேண்டும்
ஒன்றும் செய்யத் தேவை இல்லை. யாங்கள் பார்த்துக் கொள்வோம்.
42.தந்தையே திருவடி போற்றி . தாங்கள் ஈழத்துக்கு கதிர்காமத்துக்கு வரவேண்டும்/வந்து வாக்கு உரைக்கும் போது அங்குள்ள பழைய ஈச்வரங்களின் வரலாறுகளையும், வழிபாட்டு நுணுக்கங்களையும் அருள வேண்டும். இது விரைவில் நடக்கவேண்டும் என உங்கள் அடியார்கள் விரும்புகின்றோம்.
நிச்சயம் எதை என்று அறிய! அறிய! வரத்தான் போகின்றேன். பல உண்மைகள் அங்கு பொதிந்துள்ளது, அவைகளை எடுத்துரைக்கத்தான் போகின்றேன்.
43. எங்கள் அனைவருக்கும் சிவனாகவும், பார்வதி தேவியாகவும் விளங்கக்கூடிய எங்கள் தாயே, தந்தையே..... லோபாமுத்திரா தாய் பொது வாக்காக அல்லது அருள் ஆசியாக ஒரு முறை ஏனும் நாடியில் வந்து அருள்வார்களா......பொறுத்து அருள்க. அடியேன் சிறியேன் திருவடி பணிந்து கேட்கிறோம்... ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ.
நிச்சயம்! அறிந்து! அறிந்து! அதனால், பக்குவங்கள் ஏற்படுத்தி ஏற்படுத்தி, நிச்சயம் உரைப்பார்கள் அப்பனே! யானே அழைத்து வருவேன் அப்பனே!
44. நித்ய வாழ்க்கையில் அத்வைத சாதனையை நடைமுறை படுத்துவது எவ்வாறு, குருநாதா?
எது என்று அறிய! அறிய! நித்தியம் என்று நித்யகல்யாணி என்கிற மூலிகையை உண்டு வரச்சொல், பின் பார்ப்போம், இரு மாதங்கள் கழித்து.
45. பாரதத்தின் வடக்கில் வாழும் எங்களுக்கு "திருவாசகத்தை" படித்து புரிந்து கொள்ள முடியவில்லை. அதற்க்கு சமமாக ஏதேனும் வெளியிடப்பட்டுள்ளதா?
அறிய! அறிய! "நமச்சிவாய! நமச்சிவாய!" என்று "நமச்சிவாயனை" அழைக்கச்சொல். ஒரு நாளைக்கு 1008 முறை. நிச்சயம் யான்களே வந்து அழைத்துச் செல்வோம். அறிந்து! அறிந்து! "நமச்சிவாயா!" என்று சொன்னால் உலகமே வசியமாகிவிடும்!
46. ராமாயணம் பலராலும் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொன்றுக்கும் வித்யாசங்கள் உள்ளது. எது உண்மையானது என்று எப்படி உணர்வது?
ஆனால், அறிந்து, அறிந்து! இதை எப்படி செப்புவது? ஆனாலும், வரச்சொல்! திரும்பவும் யான் செப்புகின்றேன்! கேட்கத் தயாரா?
47. மகான் நந்தீஸ்வரரை பற்றி கூறுங்களேன், குருநாதா!
அறிந்து! அறிந்து! எத்தனை சித்தர்கள் இருக்கின்றார்கள்? எத்தனை திருத்தலங்கள் இருக்கின்றது! அவற்றை எல்லாம் கேட்காமல், முதலிலே எது என்று அறிய, அங்கு கையை வைக்கின்றானே! இவன்தன் முதல் வகையான திருடனப்பா!
48. வேதக் கணிதம் பற்றி கூறுங்களேன். அது மனிதர்களுக்கு கற்பிக்க எங்கும் கிடைப்பதில்லையே!
அறிந்து அறிந்து. மண்டை குழப்பி 0 = 0 இதற்க்கு, நிச்சயமாய் ஒரு உபயம் இருக்கும். அவ் உபயத்தை நிச்சயமாய் இவன்தனை தேர்ந்தெடுக்கச்சொல். பின்பு இவன், எதை என்று அறிய! இங்கு இவன்தன் என்றால், இறைவனைத்தான் யான் குறிப்பிடுவேன். இறைவனுக்கு சொற்ப வாழ்க்கையா என்று குறிப்பிடுவது போல். ஆனால், தீர விசாரிக்க, அறிந்து! அறிந்து மீண்டும் சொல்லுகின்றேன்! 0 = 0
49. கோவில்களை நிர்மாணிக்கும் பொழுது, சூரிய/சந்திரர்கள் வெளிச்சம் மூலஸ்தானத்தில் இருக்கும் இறை ரூபங்கள் மீது படும் விதமாக, எப்படி கண்டுபிடித்து அமைக்கிறார்கள்? இது வேத கணித முறைப்படி தான் அமைக்கப்படுகிறதா?
அறிந்து! அறிந்து! எவை என்று அறிய! அறிய! யங்கள், எப்படி எது என்று அறிய! அதாவது, ஏற்கனவே சொல்லிவிட்டோம், எவை என்று அறிய, அறிய.கிரகங்கள் எங்கு சக்திகள் அதிகமாக இருக்கிறதோ, அங்குதான் திருத்தலம் அமைத்தோம் என்று. ஆனால், இதை கூட ஓத முடியவில்லை என்றால், யான் எப்படி வாக்குகள் செப்புவது? அதனால் தான், கட்டங்கள் பட்டால்தான் இறைவனை காண முடியும். அதேபோல், தேடித் தேடி வந்தால் தான், கட்டங்கள் பட்டு வந்தால்தான், எமது நாடியும் கிடைக்கும்.
ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment