31. பெரியபுராணம் ஓதுவதற்கு தாங்கள் அருளி வழிகாட்ட விரும்புகின்றோம் ஐயனே!
அறிந்து, அறிந்த, நிச்சயம், பின் அதாவது அறிய! அறிய! அப்பனே! அனைத்தும் கண்கள் காண்கின்றது. ஆனால், எவை என்று அறிய! அறிய! அதாவது, ஆடை வேண்டுமென்றால், ஓடி ஓடி, அழகாக ஆடை எடுத்துக் கொள்கின்றான். ஆனால் அவ்புத்தகத்தை பார்க்கச்சொல்,, எடுக்கச்சொல், பார்ப்போம், படிக்கச்சொல் பார்ப்போம். ஆசிகள் உண்டு.
32. பெரியபுராணம் காட்டுவது அன்பா? பக்தியா? ஞானமா? இந்த மூன்றுக்கும் உள்ள தொடர்பில் நாங்கள் எங்களை செம்மைப்படுத்த வழிகாட்டுங்கள் குருநாதா
அறிந்து, அறிந்து, இப்பொழுதுதான் இதைச் சொன்னேன். எதை, எவை என்று அறிய, அறிய, ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில், நிச்சயம் ஒதச்சொல், கடைசியில் யான் வந்து, இதனைப்பற்றி விவரமாக, ஆனால், இப்பொழுது சொன்னாலும், புத்திகள், எவை என்று அறியாது, நிச்சயம் ஏற்காது. அதனால், அனைத்தும் ஓதி வரச்சொல், கடைசியில், இவ்வளவுதானப்பா, வாழ்க்கை என்று சொல்லி விடுவார்கள்.
33. நம் தமிழகத்தை ஒரு கல்ப காலம் தாங்கள் கோணாத கோல் கொண்டு கோலோச்ச வேண்டும். அதை காணும் மற்றும் அனுபவிக்கும் முதல் தலைமுறை நாங்களாகவும் இருக்க வேண்டுகிறேன்!
நிச்சயம் எது என்று அறிய! அறிய! நிச்சயம் யான் காட்சிகள், மனிதனுக்கு கொடுக்கின்றேன். அனைத்து ஆசைகளும் துறந்து வரச்சொல், இப்பொழுதே ஆசிகள், அதாவது என்னை நேரில் காண. நிச்சயம் உத்தரவு, அதாவது யான் லோபாமுத்திரையோடு நேரிலே காட்சியளிக்கின்றேன், யான். ஆனால், மனிதனின் ஆசைகள், பேராசைகளப்பா! பணத்தின் மீது ஆசை, அதாவது, பின் பெண்கள் மீது ஆசை, அதாவது இன்னும் சொல்லப்போனால், ஏதன் ஏதன் மீதோ ஆசை! இவ்வாறு ஆசைகள் வைத்துக்கொண்டு. என்னை எப்படி பார்க்க முடியும்? யான் வந்தாலும், உன் கண்களுக்கு தெரியாதப்பா.
34. வானில் ஒரு சில நட்சத்திரங்கள் மட்டும் நகர்ந்து செல்வதை காண முடிகிறது.இதுதான் சித்தர்களா அல்லது வேறு நிகழ்வா? மேலும் சில நேரங்களில் நூறு அடிக்கும் உள்ளாகவே வேகமாக சென்று மறையும்(பட்டாசு போல) ஒளியையும் காண முடிகிறது. இது என்ன ஐயா?
நிச்சயமாய், இவற்றுக்கெல்லாம் பதில், யான் எங்கு சொல்லவேண்டுமோ, அங்குதான் சொல்வேன். ஆனால். மனிதன் நகருகின்றானே! அவன் மனிதனா? இல்லை பேயா? இதை கனிவாக கவனித்துக் கொண்டாலே போதுமானது. யான் இதை இங்கு சொல்வேன். மனிதன் தான் பேய்! பேய்தான் மனிதன். ஆனாலும் உண்மை நிலைகளை அறிந்து, அறிந்து நட்சத்திரங்கள், எவை என்று அறிந்து அறிந்து, இதனைப்பற்றி, இடைக்காடன் விவரமாக குறிப்பிடுவான் ஒரு தலத்தில். பொறுத்திருங்கள்.
35. ஸ்கந்த ஷஷ்டி கவசத்தில் குறிப்பிட்டு இருக்கும், 36 முறை கவசத்தை உருவேற்றி வழிபடும் முறையை பற்றி அறிய வேண்டும். சஷ்டி, கிருத்திகை, விசாகம், செவ்வாய் பௌர்ணமி போன்ற தினங்கள் முருகனுக்கு உகந்த நாட்களே. மேலும் இடைப்பட்ட நாட்களிலும், உகந்த நாட்களிலும் இந்த பாராயணத்தை எவ்வாறு ஓத வேண்டும் ஐய்யா.
ஒன்றும் தேவை இல்லை. யான் ஒன்றைத்தான் சொல்லுகின்றேன், அதை, செய்யச் சொல். எங்கு இருக்கின்றார்களோ அங்கிருந்து, அதாவது யார் இதை கேட்டார்களோ, எதை என்று அறிந்து அவன்தன் எது என்று அறிய, அதாவது அவன்தன் என்பது இறைவனே, கந்த சஷ்டியை எடுக்கச்சொல், ஓதிக்கொண்டே, செந்தூரை அடையச்சொல். பின்பு பார்ப்போம், எப்படி என்பது முருகன்!
36. சித்தர்கள் மிக அதிகமாக துணை வருவது பைரவர் வாகனத்தின் உருவில் தான். அதன் சூட்சுமக் காரணம் என்ன. வேறு ரூபத்தில் அவர்கள் அதிகம் வருவதில்லை. மனித அறிவுக்கு எட்டாத இது போன்ற பல தருணங்கள் மலைக் கோவில்களில் நடக்கின்றது. இதன் பொருட்டு மனிதனுக்கு உணர்த்தும் சட்சுமக் காரணம் என்ன ஐய்யா
அப்பனே! எது என்று அறிய அறிய! ஆனாலும், அப்பொழுது கூட கண்களுக்கு தெரிந்ததைத்தான் சொல்லுகின்றான். கண்ணுக்கு புலப்படாத, எதை என்று அறிய! அறிய! யாங்களே மனிதனுக்கு பின்னாலே வருகின்றோம்! ஒரு சில மனிதர்கள், அதை ஏன் உணர்வதில்லை, முதலில். அதை உணரச் சொல், மருதமலைக்குச் செல்லச் சொல். இதனைப்பற்றி விவரமாக குறிப்பிடுகின்றேன்.
37. கரையேரா ஆசைகள் எல்லாம் வாசனையாய் மாறுமென்று - இதன் பொருள் எதுவென்று விளங்கவில்லை. ஆசை - வாசனை, இதன் சட்சுமப் பொருள் ஐய்யா
விளங்காமலேயே போகட்டும். எதை என்று அறிய! அறிய! விளங்கினாள் கூட ஒன்றும் லாபமில்லை, அதனால், விளங்காமல் இருப்பதே! தெரியாமலே கேட்கின்றேன். எங்கிருந்தோ கேள்விகள் வருகின்றது! ஆனாலும், புத்திகள், அறிவுகள், பலமறிய பலமறிய செந்தூரை நாடிக்கொண்டே இருக்கச்சொல், இதனை நிச்சயம் எடுத்துரைப்பேன்.
38. . ஒரு கட்டத்திற்கு மேல், அனைத்துமே குருநாதர் மட்டுமே என்று நன்கு உணர்ந்த பின்பு, ஆலயம் செல்வது கூட வேண்டாம் என்ற மனநிலை வந்துவிட்டது. இறைவனே குருவாய் இருக்கும்போது, குருநாதர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருப்பார். மனதால் இறைவனை நினைக்கின்றோம். குரு கூடவே இருந்து வழிநடத்துகின்றார். இதன் பொருட்டு அகத்தியர் அடியார்களுக்கு குருநாதர் உணர்த்தும் அறிவுரை ஐய்யா.
எதை என்று அறிய! அறிய! மனதை தொட்டுச்சொல், எதை என்று அறிய! அறிய! ஏதும் தேவை இல்லை என்பது, ஒரு பத்து நாட்கள், அண்ணாமலைக்கு சென்று பிச்சை எடுக்கச் சொல், நிச்சயம், யானே வந்து பிச்சை இடுகின்றேன், அங்கு.
39. அகத்தியப் பெருமானையும், லோபாமுத்ரா அம்மாவையும், வணங்கி, விளக்கு ஏற்றி வழிபட்டு, பின் அகத்தியர் அடியார்கள் மிகுந்த அன்புடன் அவர்களின் திருஉருவப் படத்திற்கு முன் அமர்ந்து, அவர்களோடு பேசி, உளமார கொஞ்சிடும் போது, குருநாதர் இதை எல்லாம் எவ்வாறு கருதுவார்.
எதை என்று அறிய! அறிய! எவை என்று புரிய! புரிய! விளக்குகள் எது என்று அறியாமலே! அன்பை மட்டும் செலுத்துங்கள், செலுத்துங்கள் என்றெல்லாம் நாங்கள் சொல்லிக்கொண்டே இருக்கின்றோம். அவ் அன்பை மட்டும் செலுத்தினால் போதும் யாங்கள் உன் குடும்பத்தில் ஒருவராக வந்து விளையாடுவோம். அவ்வளவுதான்!
40. அய்யனே ஹரிஷி(அரிசி ) மற்றும் அனைத்து தாவர வித்துக்களும் தங்களின் திருக்கரத்தால், அதாவது சிவனும் ஹரியும் சேர்ந்து அண்டசராசரத்தில் புனிதத்தில் மிக மிக புனிதமான ஒருவர் கையில் அதை கொடுத்தால்தான் அது பல்கி பெருகும் என தங்களிடம் அதை கொடுக்க, தாங்கள் அனைவருக்கும் விஸ்வரூப தரிசனம் கொடுத்து அனைத்து வித்துக்களையும் தாங்களே உருவாக்கியதாக படித்திருக்கிறோம்... மேலும் அந்த தருணத்தில் அரங்கேறிய தங்களின் மாபெரும் விஸ்வரூப தரிசன நிகழ்வை பற்றி தயை கூர்ந்து நம் அடியவர்களுக்கு அருள வேண்டி பணிகிறேன் தந்தையே........ அடியேன் தவறாக கேட்டிருந்தால் பொருத்தருளக எங்கள் தந்தையே..........
அறிந்து! அறிந்து! பல வழிகளிலும் கூட இதற்கு தகுந்த யோசனைகள் உண்டு. இதற்கான பதில்கள், நிச்சயம், நேரடியாகவே விவரிக்கிறேன். ஆனாலும் நிச்சயம் எதை என்று அறிய! அறிய! ஏதும் தேவையில்லை! அதாவது அகத்தியந்தான் தேவை என்று வருபவர்களுக்கு, எங்கிருந்தாலும், விஸ்வரூபத்தை யான் காட்டுவேன். ஆனாலும், பயந்து, நீங்கள் கத்திவிடுவீர்கள். அதனால்தான், எதை என்று கூற, யான் பயப்படுகிறேன்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment