50.அனைத்து தெய்வங்களையும் குழந்தை ரூபத்தில் வழிபடும் கோவில்கள் இவ்வுலகில் உள்ளது. அதுபோல் சிவபெருமானை பால ரூபத்தில் வழிபடும் இடங்கள் ஏதேனும் உள்ளதா? தெரிந்து விடும்!
எவை என்று அறிய! ஒரு மாதத்திற்கு, நான்கு முறை உத்தரகோசமங்கைக்கு செல்லச் சொல். தெரிந்துவிடும்! அங்கு, எதை என்று அறிய! அறிய! உறங்கும்பொழுது நிச்சயம், இரவில், அறிந்து, அறிந்து, குழந்தை ரூபத்தில், அதாவது, குழந்தைக்கு சலங்கை பின் போட்டால், எவை என்று அறிய, எப்படி, எவை என்று அறிய சத்தம் கேட்க்கும். நிச்சயம் உணர்ந்து கொள்ளலாம். ஆனால், நிச்சயம், ஒரு மாதம் இல்லை, இரு மாதம் இல்லை, இடைவான் சத்தத்தையே கேட்க வேண்டுமென்றால், எப்படி? எதை என்று அறிய! அறிய! சென்று கொண்டே இருக்கச்சொல், பார்ப்போம். மீண்டும் வாக்குகள் உண்டு, கேட்ப்போம்!
51. அன்புத் தந்தையே, சோளிங்கர் தலத்தில் வீற்றிருக்கும் ஸ்ரீ யோக ஆஞ்சநேயர் ஸ்வாமியின் துதியில் ' ஓம் அகத்தியன் துதிப்போய் போற்றி ' எனப் போற்றப்படுகிறார். அப்படி என்றால் அனுமன் தங்களைத் துதிக்கின்றாரா ? இதன் வரலாறு மற்றும் தாத்பர்யம் என்ன? அருள்கூர்ந்து விளக்குங்கள்
நிச்சயம் எது என்று அறிய! அறிய! உண்டு என்பேன். இதன் சூட்ச்சும ரகசியங்களை கூட இப்பொழுது சொன்னாலும், மனிதன் ஏற்கமாட்டான். ஆனால் ஒரு ரகசியத்தை சொல்லிவிடுகிறேன். ஒரு நேரம் ராமன் எது என்று அறிந்து! அறிந்து, மயக்கத்தில் இருந்துவிட்டான். ஆனால், அவ் மயக்கத்தை போக்க அனுமான் அறிந்து, அறிந்து, நிச்சயமாய், எவ் மருந்துகளையும் பயன்படுத்தினான். ஆனால், அனுமானால், ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆனால், சீதைப்பிராட்டி, நிச்சயமாய், அழையுங்கள் அகத்தியனை, அதாவது மாமுனிவனை, என் தந்தையை என்று. நிச்சயம் அனுமான் என்னை அழைத்தான். ஆனால், அழைத்து வந்து கொண்டிருக்கும் போதே பின் அனுமான் "குள்ள முனியே! பின் என்னாலே முடியவில்லை, உன்னால், அனைத்தும் முடியுமா என்று கேள்விகள் கேட்டான். ஆனால், சரி! அறிந்து! அறிந்து! என்னால் முடியாதப்பா! நீ தான் நிச்சயம் சக்தி வாய்ந்தவன் என்று! ஆனால் அனுமான் சிரித்துவிட்டான். நேரடியாக ராமன் இடத்திற்கு சென்றேன். "ராமனே" என்று அழைத்தேன். முழித்துக் கொண்டான். அங்கு அனுமான் நிற்பதை பார்த்தான். "அகத்திய மாமுனிவரே! நிச்சயம் நீங்கள் வலிமை படைத்தவர்தான். உண்மையை ஒத்துக்கொள்ளுகின்றேன். ஆனாலும் எது என்று அறிந்து அறிந்து, இவ்வுலகத்தில் நான்தான் பலசாலி, என்னை தூக்க முடியுமா என்ன? என்று. ஆனால், ஒரே விரலிலே தூக்கிவிட்டேன், எவை என்று அறிந்து அறிந்து! இத்திருத்தலம்தான், பத்மநாபஸ்வாமியே!
அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! இதையும் கேட்பான். அவதாரங்கள் எவை என்று அறிய! அறிய! அங்கு வேறு அவதாரம்! இங்கு வேறு அவதாரம்! எவை என்று அறிய! அறிய! இவை மட்டும் புரிந்து கேட்பான் மனிதன், அதனால் முட்டாள் மனிதன் என்பேன்! ஆனாலும், எவை என்று அறிய! அறிய! ரகசியங்களை, யான் கூற மாட்டேன். குழப்பங்கள்தான்.
52.தியானத்திற்கும் வாசி யோகத்திற்கும் உள்ள வேறுபாட்டை தயவு செய்து விளக்கம் கொடுங்கள். -அகத்திய பெருமானே!
ஒன்றை மட்டும் சொல்லுகின்றேன்! த்யானம் என்றால் இறந்து போய்விடுவது. ஆனால், இதன் ரகசியத்தை கூட உள்ளுணர்ந்து பார்த்தால், நிச்சயம் யோகங்கள்! த்யானம் என்றால், இறந்தவனுக்கு சமம். ஆனால், வாசி என்றால், அனைத்து இன்பங்களுக்கு சொந்தம். அனைத்து உறுப்புகளும், எவை என்று அறிய! அறிய! இன்பத்தை நாடியே செல்லும்! வாசிகள் கற்றவர்கள் இல்லையப்பா! அப்படி கற்றிருந்தாலும், ஒரு பெண்ணை அவன் வைத்துக் கொண்டிருப்பான்.
53.அகத்திய பெருமானே மனிதனுடைய ஏழு சக்கரங்களை அண்ட ஆற்றலுடன் எவ்வாறு இணைகிறது
எதை என்று அறிய! அறிய! அறுபடை வீடுகளுக்கும் செல்லச் செல்ல, ஆறு சக்கரங்கள் அறிந்து, அறிந்து செயல்பட்டுவிடும்! ஏழாவது சக்கரத்தை நிச்சயம் யான் கூறமாட்டேன். ஆனாலும், உண்மைகளை புரிந்து! புரிந்து! ஆறு சக்கரங்களை வெளிக்கொண்டு வர, எதுவும் செய்யத்தேவை இல்லை. அறுபடைவீடுகளுக்கும் சென்று கொண்டே இருந்தால், திறந்துவிடும். ஏழாவது, நிச்சயம் சொல்லிவிடுகிறேன், கடைசியில்தான் சொல்லுவேன்.
54. பேரையூரில் உள்ள மேல பரங்கிரிநாதன் (முருகன்) கோவிலுக்கு எப்பொழுது குடமுழுக்கு நடைபெறும் .(வேல் வடிவில் முருகன் காட்சி கொடுத்த இடம்).
அறிந்து! அறிந்து! யானே அங்குதான் இருக்கின்றேன்! யானே பார்த்துக் கொள்ளுகின்றேன். அமைதியாக இருந்தால் போதும், வாயை மூடிக்கொண்டு!
55. தங்களின் வேதபுரிக்கு அருகில், 1000த்திற்கும் மேற்பட்ட பலவித லிங்கங்கள் ஒரே இடத்தில் சாதாரணமாக தரையில் ஒரு வனத்திற்குள் உள்ளதே. அதை பற்றி ஏதேனும் கூற முடியுமா?
அறிந்து! அறிந்து! புரிந்து! புரிந்து! எனது ஆராய்ச்சிகளும் அங்கு தங்கி நிற்கின்றது. இன்னும் எவை என்று அறிந்து, பூமியின் அடியில் உள்ளதப்பா! ஆனாலும், வெளிக்காட்டவில்லை. நிச்சயம் அறிந்து அறிந்து! உண்மை, அதாவது பொய்க்கே இவ்வுலகம் சொந்தமானால், உண்மைக்கும் சொந்தம். உண்மை வரும்பொழுது நிச்சயம் காண்பிப்பேன். வந்து கொண்டிருக்கின்றது உண்மை.
56. கோதாவரி தாய்க்கு நன்றி சொல்லும் விதமாக, வருடத்தில் ஒரு நாள், பத்ராசலம் கோவில் நதிக்கரையில், ராமர், சீதை, லக்ஷ்மணர், ஆஞ்சநேயர், நால்வரும் வந்து ஆரத்தி எடுத்து பூசை செய்வதாக, முன்பு ஒரு முறை கூறியுள்ளீர்கள். அந்த முகூர்த்த நேரம் வரும் தமிழ் மாதம், திதி, நட்சத்திரம், நேரம் கூற முடியுமா, குருநாதா?
அறிந்து அறிந்து, நிச்சயம் இல்லை. ஒரே வரியில் சொல்லுகின்றேன். மார்கழி மாதம்.
மார்கழி மாதம் எந்தத்திதி, நட்சத்திரம், ஏதேனும்?
அறிந்து! அறிந்து! நிச்சயம் இவ்வாறு யான் செப்பிக் கொண்டிருந்தால் அனைத்தையும் கெடுத்துவிடுவான் மனிதன். அறிந்து அறிந்து! இதனால் எவை என்று உணர்ந்து உணர்ந்து ஆனால் நிச்சயம் சொல்வேன் அறிந்து. வைகுண்டம், ஏகாதசியிலே! அப்பனே! எதை யான் சொல்ல. மற்றொரு நாளும் இருக்கின்றது! அதை நான் சொல்ல மாட்டேன்.
ஹனுமந்ததாசன் ஸ்வாமியை மட்டும், சொல்லிக் கொடுத்து போகச் சொன்னீர்களே! எங்களுக்கும் அந்த வாய்ப்பு கிடைக்காதா?
அப்பனே! நிச்சயம்! அறிந்து! அறிந்து! என் பின்னே சுற்றிக் கொண்டிருந்தான் அவன்தன்! அதனால்தான், சொன்னேன். ஆனால், அறிந்து, அறிந்து சொல்கின்றேன்! பொறுத்து இருக்க!
57. Beetlegeuse என்கிற ஒரு நட்சத்திரத்தை நம் ஜோதிட சாஸ்த்திரத்தின் திருவாதிரை நட்சத்திரம் என்பர். 600 ஒளி வருட தூரத்தில் இருக்கும் அது, வெடித்து சிதற தயாராகிக் கொண்டிருக்கிறது என்று விஞ்சானிகள் கூறுகின்றனர். அது உண்மையா?
அறிந்து அறிந்து, எவை என்று உணர்ந்து! திருவாதிரை நட்சத்திரம் எவை என்று உணர்ந்து! உணர்ந்து! தெரிந்து! எரிந்து! யானும் ஒரு நட்சத்திரத்தை பற்றி அறிந்து அறிந்து. நிச்சயம் அப்பனே! ஒரு நட்சத்திரமானது! ஆனால், இவற்றின் தன்மைகள் கூட, புதிதாகவே பெயர் வைக்கின்றேன்! எவை என்று தெரியாமலே, அவ் நட்சத்திரம், மனிதனை நெருங்கும் பொழுது அழிவுகள் ஏற்படும். அதுதான் அப்பனே! தவசித்தன்!
அறிந்து அறிந்து! இவ்வாறே செய்து கொண்டிருந்தால், தவசித்தனும் கூட அழித்து விடுவான், மனிதர்களையும் கூட. இவ்வாறு சொல்லிக் கொண்டிருக்கின்றேனே, அவ் தவசித்தன் யார் என்று கேட்டால், திருவாதிரை நட்சத்திரம்தான். அதாவது ஈசன்தான். ஆனாலும், இவை எல்லாம் உணர, உணர, மக்களுக்கு எவ்வாறெல்லாம் இவை புரிய வைக்கப் போகின்றேன் என்று! பின் ஈசனுக்கு, நாள் எது? நட்சத்திரம் ஏது? அதனால், விண்வெளியில் ஆராய்ச்சிகள் என்னுள் பலப்பல. அதெல்லாம் புரிந்து .... ஆனாலும் இங்கு பத்து ஆதாரங்கள் உள்ளது, ஓட்டைகள். பின் எது என்று அறியாமலே, ஒரு ஓட்டையை திறந்துவிட்டால் நிச்சயம் அழிவுதானப்பா மனிதனுக்கு. அதனால்தான் பின் இப்பொழுது சொல்லுகின்றீர்களே, கிருமிகள் தாக்குகின்றது என்று கூட, அங்கிருந்து சாதாரணமாகவே மனிதனை தாக்கிவிடும் அப்பனே! அதனால், இறைவன், எதை என்று கூற, அவ்வழியை, மூடுவான், திறப்பான். நீங்கள் இதை புரிந்துகொண்டால் நன்று. இதனைப்பற்றி நிச்சயம், யான் ஆராய்ச்சிகளாகவே செய்துள்ளேன். இதனை தெளிவாகவே வரும் காலங்களில் உரைக்கின்றேன்,அப்பனே!
58.அன்புத் தந்தையே,தற்காலத்தில் சித்த மற்றும் ஆயுர்வேதம் போன்ற பாரம்பரிய மருத்துவத்தின் நிலை கவலை அளிப்பதாக இருக்கின்றது. எவ்வளவோ , அற்புதமான தீர்வுகள் இருந்தும் அதற்குத் தகுந்த அங்கீகாரத்தை பெரும்பாலோனோர் தருவதில்லை. தர்மத்தைக் கடைப்பிடித்து உண்மையான வழியில், லாப நோக்கம் இல்லாமல் வைத்தியம் செய்யும் மருத்துவர்கள் வாழ்க்கை நிலை கடினமாகவே உள்ளது. இலவசமாக மருத்துவம் செய்து கடனாளி ஆகியோரும் இருக்கின்றனர். அதே சமயம் நவீன மருத்துவத் துறையில் உள்ள சிகிச்சை குறையுடையாதாக இருந்தாலும், அத்துறையில் உள்ளோர், மிக நன்றாக பொருள் ஈட்டுகின்றனர். இந்த நிலை எப்படி மாறும்? அதற்கு பாரம்பரிய மருத்துவத் துறையில் உள்ள மருத்துவர்கள் செய்ய வேண்டியது எனன ? எம் போன்ற மக்களின் கடமை என்ன ?
அப்பனே! எதை என்று அறிந்து! அறிந்து! இருக்கின்றதப்பா! அவைகள் எல்லாம் வைத்துக்கொண்டு, பானங்கள் சம்பாதிக்க கூடாது என்பேன். அவ் பானங்கள் சம்பாதிக்க, மனிதன், மனதில் எண்ணிவிட்டால், பலிக்காதப்பா, பலிக்காது. ஏன் என்றால், இவ்விமருந்துகள், இயற்க்கை எவை என்று அறிய! அறிய! அப்பனே! அனைத்தும் இலவசமாகவே கொடுக்கத்தான் நன்றாகுமே தவிர, காசுகள் பிடுங்கிக்கொண்டு கொடுத்தால், அப்பனே! ஏதும் லாபமில்லை அப்பா! நஷ்டம்தான் அப்பா! அதுமட்டுமல்லாமல், யார் கொடுக்கின்றானோ, அவன் காசுகள் வாங்கி,, அவந்தனுக்கு, கர்மாக்கள் சேருகின்றதப்பா, என்மக்களுக்கு, யானே கடை காலங்களில், அனைத்தையும் வாரி வழங்குவேன் அப்பா!
59. காவடியின் தாத்பர்யம் என்ன? அதன் விதிமுறைகளை கூற முடியுமா?
அப்பனே! அறிந்து! அறிந்து! முதலில், இதனை எடுத்து வரச்சொல். பின் விவரமாக குறிப்பிடுகின்றேன் அப்பனே!
60. நான் கனடா நாட்டில் வசிக்கிறேன். இங்கு தாங்களும், இறைவனும் வந்து செல்லும் இடங்களை காட்டி அருள முடியுமா?
முட்டாளே! அறிந்து! அறிந்து! உன் பக்கத்திலே வந்து சென்று கொண்டு இருக்கின்றேன். அதை கூட நீ உணரவில்லையே! அப்பொழுது, நீ பணங்கள் சம்பாதிக்கவே, பிறந்துள்ளாயா, என்ன? என்னிடத்தில் வா! உரைக்கின்றேன்! [இன்னொருமுறை வாக்கை கேட்கச்சொல்!]
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment