​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 13 March 2023

சித்தன் அருள் - 1300 - பொதுவாக்கு - 3


21. சௌந்தர்யலஹரியில் உள்ள ஸ்லோகங்களை நல்ல விஷயங்களுக்கும் உபயோகப்படுத்துகின்றனர். அதே நேரத்தில், அதர்வண பூசைகளும் உபயோகிக்கிறார்கள். ஏன் இந்த முரண்பாடு?

எதை என்று அறிய! அறிய! மானிட ஜென்மமே, நீ பார்த்தாயா? பார்த்தாயா, உண்மை சொல். எங்கு பார்த்தாய் என்பதை நீயே சொல், பின்பு உரைக்கின்றேன், இதை பற்றி.

22. அதர்வண வேதம் ஏன் கலியுகத்தில் தடை செய்யப்பட்டுள்ளது?

எது என்று அறிய, அறிய! இதனை பயன்படுத்திக் கொண்டால் மனிதன் நிச்சயமாய், தவறான வழிகளில் எல்லாம் நோக்கிச் செல்வான். இதனால்தான், அவை செயல் பட்டாலும், செயல் இழக்கச் செய்வோம் யாங்களே!

23. தியானம் செய்யும் பொழுதும், கனவிலும் பல உத்தரவுகள் கிடைப்பது உண்டு. அவை இறைதான் உரைக்கிறது என்று எப்படி உணர்வது? அவை கேட்பவனுடைய எண்ணமல்ல, உண்மையாகவே இறையின் உத்தரவு என்பதற்கு ஏதேனும் அளவுகோல் உள்ளதா? தயை கூர்ந்து அருளவும்.

எதை என்று அறிய! அறிய! கனவுகள் எல்லாம் முன் ஜென்மத்தில் எவை என்று அறிந்து அறிந்து வந்தவை தானப்பா! அவ் ஆன்மாவுக்கு மட்டும் தெரியும். அதனால் வந்து கொண்டு இருக்கின்றது. ஏதாவது முறையில் தெளிவு பெற வைக்கின்றது. ஆனால், அதையும் கூட மனிதன் ஏற்கவில்லையே, அப்பனே!

24. மது அருந்துவதால தீமை என்று தெரிந்தும் மனித மனம் அதையே நாடி செல்கிறதே இறைவா, இவர்களை நல்வழிப்படுத்த வழியேதும் (மருத்துவம்) இல்லையா ஐயா. கர்மாவால இப்படி மனித மனம் மதுவை தேடினாலும்  மருந்தேதும் இல்லையா ஐயா! இதுபோன்ற குணக்கேடுகள் நீங்க அருள்வாய் அப்பனே!

உணவு உட்கொண்டால் பாபம் அதிகரித்து விடும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனாலும், ஏன் உணவைத்தான் உட்கொள்கின்றன மனிதன்?

உணவு உட்கொள்ளாமல், மனிதனால் வாழ முடியுமா?

நிச்சயம் இருக்கின்றது அப்பனே! ஒரு நாள் கூட உன்னால் இருக்க முடியாது அப்பனே! மருத்துவம், நிச்சயம், இறைவனே என்பேன்!

25. வரும் தலைமுறைக்கு நாம் இயற்கைக்கு செய்த பாவங்களை சரி செய்து  இயற்கையை பாதுகாக்கும் முறையினை/ வழியினை தாங்கள் அருகில் இருந்து வழி நடத்தும் ஆசியிணை வேண்டுகிறோம். எவ்வாறு இந்த பணியில் ஈடுபடவேண்டும்? தொடக்கம் வேண்டுகிறோம்.

அறிந்து, அறிந்து, சரியான கேள்விதான். வரச்சொல். நிச்சயம் பல மரங்களை யாங்கள் சொல்வோம். நடச்சொல், எது என்று அறிய, அறிய! நிச்சயம், இதை நிச்சயம், எதை என்று கூற? பத்தாயிரம் மரக்கன்றுகளை நடச்சொல்.

26. தமிழ் மொழிக்கு உரிய  கடவுள் முருகப்பெருமான் ,  தாங்கள்  தமிழ் மொழிக்கு  இலக்கணம் வகுத்தவர், இதனை பற்றி  கூறுங்கள் ஐயனே!

முட்டாளே, எதனை என்று அறிய! அறிய! இவ்வுலகத்திலுள்ள அனைத்து மொழிகளையும் யாம் அறிவோம். ஆனால் மனிதர்கள் நீங்கள்தான், அறிவே இல்லை. எதை கேட்க வேண்டும்ப், எதை கேட்க கூடாதோ! யார் சொன்னது? முருகன், இவ்வுலகத்துக்கே ஈசன்! ஆனால் எங்கெங்கோ பேசுகின்றார்கள் மனிதர்கள். அனைத்து மொழிகளையும் தெரிந்தவன் இறைவன்.

27. மானிடர் ஆன்மா மரணமெய்தாது மறுபடி பிறக்கும். ஏழு ஜென்மங்க;ள் : முன் ஜென்ம பாவங்களை இந்த பிறவியில் அனுபவிப்போம்.ஆக இறந்தோர் எங்கோ பிறந்திருப்பர்.பின் நாம் ஏன் திதி சிரார்த்தம் செய்யவேண்டும்? எங்கோ உயிர் மீண்டு வாழ்வோர்க்கு திதி தருவது சரியா? இறந்தவர் வந்துண்ணுவாரென படைப்பது சரியா?

எதை என்று, நிச்சயம், பல வாக்குகளிலும் கூட, இதை உரைத்துவிட்டேன். அறிந்து! அறிந்து! மரியாதையுடன் கேளுங்கள் என்று கூறுகிறோம், ஆனால், அதைக்கூட கேட்கத்தெரியாத மனிதனுக்கு யாங்கள் எப்படி வந்து உரைப்பது. அதனால், அறிந்து, அறிந்து, நிச்சயம் பிறந்து விட்டால், செய்ய மாட்டார்கள் மனிதர்கள். நிச்சயம் இறைவன் அவ்வாறு விடமாட்டான், இது சத்தியம்.

28. மனதில் கோப அலை மேலெழும் போது அதனை மற்றவரிடம் கொட்டாது கட்டுப்படுத்தி அமைதி படுத்த உளவியல் ரீதியாக வழிமுறைகள் கூறியுள்ளனர்.ஆன்மீக ரீதியில் ஏதேனும் வழிகள் உள்ளனவா?

நிச்சயம் உண்டு. இதைத்தான் யான் சொன்னேன். பின், கழுத்து வரைக்கும் நிச்சயமாய், தண்ணீரில் மூழ்கி, தியானங்கள் செய்யச்சொல் என்று. ஆனால் கேட்பதில்லை. மீண்டும், மீண்டும், இதைத்தான் கேட்கின்றார்கள்.

29. பெரியபுராணம் அன்பில் விளைந்ததா? பக்தியில் விளைந்ததா?

முதலில், இதனை படித்து வரச்சொல். பிறகு யான் அனைத்தும் படித்துவிட்டேன் என கூறச்சொல். பிறகு உரைக்கின்றேன்.

30. திருஞானசம்பந்தர் தன்னை பாடினார். சுந்தரர்பெருமான்  பொன்னை பாடினார். திருநாவுக்கரசர் என்னை(சிவத்தை) பாடினார். இந்த வரிசையில் மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம் எப்படி எடுத்துக் கொள்வது குருநாதா?

எப்படி எடுத்துக்கொள்வது? அதாவது, சிவாலயங்களை, எது என்று அறிந்து அறிந்து, அதாவது, இமயமலையில் வீற்றிருக்கும் வேதநாதன் என்று சொல்கிறார்களே, அவந்தனை சென்று பார்க்கச்சொல். (கேதார்நாத்). நிச்சயமாய் இதற்கான பதில் நேரில் சொல்கின்றேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment