81. வள்ளலார் என்று கூறினாலே கரிசாலை மூலிகை பற்றி தான் அறிகின்றோம். கரிசாலை மூலிகை பற்றி பிரத்யேகமாக கூறுவதற்கான மூலம் அறிய வேண்டுகின்றோம்.
இதைப்பற்றி ஏற்கனவே உரைத்துவிட்டோம். தேடிக் கண்டு கொள்க!
82. வள்ளலார் அருளிய திருவருட்பாவில் ஆனந்த களிப்பு பாட்டில் மருந்து என்று கூறி பாடுகின்றார். இங்கு குறிப்பிடப்படும் மருந்து பற்றி அறிய வேண்டுகின்றோம்.
அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! முதலில் உடம்பிலுள்ள மருந்துகளை நீக்குக! அவ் மருந்துகள் என்னென்று சொல்லட்டுமா? முதலில் கோபம்தான் அப்பனே! பின் பொறாமை அப்பனே! மேலும் நீங்களே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே! இதிலாவது புத்திகள் பிறக்கட்டும்!
83. மாயையில் இருந்து விடுபட ஏதேனும் மந்திரம் கூற முடியுமா?
அப்பனே நிச்சயம்! இவை எது என்று அறிய! அறிய! யாங்கள் தான் நிச்சயம் இதற்கு வழி! யாங்கள் தான் வந்துள்ளோம் இதற்கு! யாங்கள்தான் நிச்சயம் இதை நீக்குவோம்.
84. முக்திக்கென ஏதேனும் குறிப்பிட்ட கோவிலை காட்டியருள முடியுமா?
அப்பனே! முதலில், யான் சொல்வதை கேளுங்கள் அப்பனே! யானே காண்பிக்கிறேன் அப்பனே!
85. யாருக்கும் உதவ முடியாமல் இந்த மண்ணுக்கு பாரமாக இருக்கும் வலி போகவும் மற்றவர்களுக்கு உபயோகமாக இருக்க ஏதேனும் தீர்வு அருளுமாறு வேண்டுகிறோம்.
அப்பனே! எது என்று அறிந்து, அறிந்து, ஒன்றும் செய்யத் தேவை இல்லை அப்பனே! அறிந்து, அறிந்து எறும்புகளுக்கு உணவிடுதல் போதுமானது, அப்பனே! மனிதனுக்கு ஏன் உணவளிக்க? மனிதனுக்கு, யாங்களே உணவளித்துக் கொள்கின்றோம் அப்பனே! இதையாவது செய்யச் சொல் அப்பனே!
86. வானியல் சார்ந்து பார்க்கும் போது சூரியன்,புதன்,வெள்ளி, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி போன்ற கோள்கள் வரை அறிய முடிகின்றது. இவற்றுள் ராகு,கேது கோள்கள் பற்றி மேலும் அறிய விரும்புகின்றோம்.
அப்பனே! எது என்று அறிய! அறிய! ராகு, கேதுக்கள் - ஈசனும், பார்வதியுமப்பா! அப்பனே! எதுவென்று அறிய! அறிய! இதன் விளக்கங்கள் இருக்குதப்பா. இதனைப்பற்றி, நிச்சயம் விரிவாக விரைவில், விவரிக்கிறேன்! அப்பனே! என் ஆராய்ச்சியில், பல கண்டுபிடிப்புகள், அதனால், இப்பொழுது கூட சொல்லுகின்றேன், ராகு கேதுக்கள் என்பது ஈசன் பார்வதியே! அப்பனே! எது என்று அறிந்து அறிந்து! ஈசன் மிக கருணை உள்ளவனப்பா! பார்வதியும், மிகுந்த கருணை உள்ளவளப்பா! அதனால் தான் இவ்வுலகில் பிறக்கக்கூடாது என்பதற்காகவே, பல கட்டங்கள் இடுகின்றனர் என்பேன் அப்பனே! இதான் ராகு-கேது. அப்பனே! எது என்று கூற. ஒருவனுக்கு ராகு வந்துவிட்டால், அப்பனே! கேது வந்துவிட்டால் ஒன்றும் பலிக்காதப்பா. எது என்று அறிய! முதலில் கர்மத்தை கழிக்கவேண்டும் என்பதுதான் சத்தியம் அப்பனே! ஆனால் இதற்கு, என்னென்ன பரிகாரம் அப்பனே! ஒன்றும் செய்ய இயலாது அப்பனே! தோல்வியில்தான் முடியும் அப்பனே! அதனால் ராகு-கேதுக்கள் என்பது தோல்வி கிரகங்கள் அல்ல, வெற்றி கிரகங்கள் அப்பனே! கர்மத்தை தொலைத்தால் தான் வெற்றியும் கிடைக்கும்! ராகு கேதுக்களைப்பற்றி நிறையவே ஆராய்ச்சி செய்து வைத்துள்ளேன். அப்புத்தகத்தைக்கூட யானே மறைத்துவிட்டேன். இக்கலியுகத்தில் சொல்லப் போகின்றேன் அப்பனே! ஆதலால், ராகு கேதுக்களைப்பற்றி, எவராலும், இவ்வுலகில் குறிப்பிட முடியாது என்பேன், யாங்கள் சித்தர்களால் மட்டுமே குறிப்பிட முடியும் என்பேன் அப்பனே!
87. மகான் கொங்கண மகரிஷி - கொங்கணர் கடைக்காண்டத்தில் அகத்திய மாரிஷி நமா என்றென்றோது என்று வருகின்றது. இதில் மாரிஷி என்பது சரியா? என்று விளக்கம் தாருங்கள் ஐயனே! நாங்கள் அகத்திய மகரிஷி நம என்று ஓதுகின்றோம்.
அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பா என்றால் என்ன, தந்தை என்றால் என்ன. வேறு வேறா என்னப்பனே!
88. தெருவோரக் குழந்தைகள் முதல் சோமாலியா வரை அனைவரது துயரம் தீரவும் அருளுங்கள். இதற்கு, பிரார்த்தனை மட்டுமே போதுமா?
அப்பனே! எது என்று அறிய! அறிய! யானே, பல குழந்தைகளை என் கையால் எடுத்துள்ளேன். இது, யாருக்காவது தெரியுமா அப்பனே! அதனால், இயலாதவர்களுக்கு, யான் தான் முதலில் வந்து உதவி செய்வேன் என்பதை பல வழிகளிலும், தெரிவித்துவிட்டேன் அப்பனே! அதனைக் கூட உணரவில்லை அப்பனே! அதனால், நிச்சயம் எது என்று அறிந்து அறிந்து, குழந்தைகளை யான் விட்டு விடுவதில்லை அப்பனே! ஆனால், யாராவது குழந்தை பாதிப்பு அடைந்துள்ளதா என்று பார் அப்பனே. யானே அங்கு சென்று அந்தக் குழந்தையை முதுகில் போட்டு சீராட்டுவேன். அவர்களும், இப்பொழுது, சந்தோஷமாக இருக்கின்றார்கள அப்பனே! முதலில் நீங்கள் சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.
89. நாக சக்திக்கும் மனித குலத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன?
அப்பனே! எவை என்று அறிய! அறிய! இதனைப்பற்றியும் சொல்லுகின்றேன் அப்பனே! நாக சக்தி என்பது மனிதன் நாக்கே என்பேன். இதனைப்பற்றி, இன்னும் விவரமாக குறிப்பிடுகின்றேன்!
90.சீதாதேவியின் குழந்தை பருவத்தில் நடந்த ஏதாவது ஒரு நிகழ்ச்சியை கூறுங்கள் குருநாதா!
அப்பனே! எது என்று அறிய! அறிய! அப்பனே! நிச்சயம், உணர்ந்து! உணர்ந்து! அப்பனே! சீதா தேவி விளையாடிக்கொண்டிருக்கும் பொழுது யானும் அப்பனே! எதை என்று கூற, எதை என்று அறிய! அறிய! யானை போல் முதுகில் சுமந்து சென்று கொண்டிருந்தேன் அப்பனே! போதுமா! இன்னும் வேண்டுமா? சொல்லுகின்றேன்! பொறுத்திருக்க! அச்செல்லப் பிள்ளைக்கு, இவ்வளவு கட்டங்கள் என்றால், அப்பொழுது மனிதர்கள் நீங்கள் இக்கலியுகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்கள். புரிந்து கொள்ள வேண்டும் அப்பனே! யான் இருக்கின்றேன். அதனால்தான், என்னுடைய அடியார்களை யான் முதுகிலே சுமப்பேன் அப்பனே!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment