61. ஒரு கோவிலிலோ அல்லது பூஜையிலோ, இறை அருள்வதை உணர்வது எப்படி?
அறிந்து! அறிந்து! இதைத்தான் சொல்லவந்தேன். இதன் தன்மையை கூட ஒரு திருத்தலத்தில் தான் யான் சொல்வேன். பொறுத்திருக்கச் சொல்.
62. ஞான வாழ்க்கை நாங்கள் எப்படி வாழவேண்டும்?
புசண்டன் பேசுகின்றேன்! அறிந்து! அறிந்து! ஞான வாழ்க்கையை நீ விரும்பக்கூடாது! நாங்கள்தான் விரும்ப வேண்டும்! மனித முட்டாளே!
63. ஐயா கண் பார்வை தெளிவு பெற ஆசனங்கள் கூறவும் ஐயா!
அறிந்து அறிந்து! சிரசாசனம் செய்யச் சொல்! போதுமானது! ஆனால், ஒரு தடவை மட்டும் செய்தால், பல தடவை செய்ய வேண்டும்! சொல்லிவிட்டேன்!
64. குருநாதா, அப்பா, ஞானாலயம்- பாண்டிச்சேரியில் சத்திய யுகத்திற்கு ஆன்மாக்களை தேர்ந்தெடுக்கும் முக்தி ,பிறவில்லாத பெருநிலை நிகழ்வு நடைபெற்று வருகிறது. தாங்கள் அதை பற்றி கூறினால் சித்தன் அருள் வலை தளத்தில் வாசிக்கும் அடியவர்களுக்கு சென்று சேரும்!
அப்பனே! எவை என்று அறிய! அறிய! அப்பனே! எவை என்று உணர்ந்து! உணர்ந்து! இதை இப்பொழுது யான், எவை என்று அறிய அறிய, செப்புவதில்லை இப்பொழுது. பொறுத்திருங்கள்!
65. வரும் தலைமுறைக்கு நாம் இயற்கைக்கு செய்த பாவங்களை சரி செய்து இயற்கையை பாதுகாக்கும் முறையினை/ வழியினை தாங்கள் அருகில் இருந்து வழி நடத்தும் ஆசியிணை வேண்டுகிறோம். எவ்வாறு இந்த பணியில் ஈடுபடவேண்டும்? தொடக்கம் வேண்டுகிறோம்.
நிச்சயம்! எவை என்று அறிய! அறிய! இக்கேள்வியை கேட்பதே சந்தோஷமே! நிச்சயம் பல இடங்களில் கூட பல விலங்குகளுக்கு அறிந்து அறிந்து பின் நீரை இடச்சொல். பல உணவுகளை வைக்கச்சொல். பல மரங்களை நடச்சொல். இதை உடனடியாகச் செய்யச்சொல்! புண்ணியமப்பா! எதை என்று அறிந்து அறிந்து இன்னும், தர்மம் தலை காக்குமப்பா! இதை நிச்சயம் செய்து வர! செய்து வர! என்னுடைய ஆசிகளும் கிட்டுமப்பா!
66. ஒரு பெண் என்கிற முறையில், நான் புகுந்த வீட்டில்/பிறந்த வீட்டில் உள்ள பித்ருகளுக்கு தர்ப்பணம் தரலாமா?
எதை என்று அறிந்து அறிந்து. வளர்த்தவனை மறந்தது விடுகின்றாளே, பெண் புகுந்த வீட்டுக்கு சென்ற பின்பு! இவள் பெண்ணா! இல்லை எதை என்று அறிய! அறிய! நிச்சயம்! பிறந்த வீட்டையும் மறக்கக்கூடாது, புகுந்த வீட்டையும் மறக்கக்கூடாது! அப்படி இருப்பவள்தான் பெண். நிச்சயம், பின் அறிந்து! அறிந்து! பின் வளர்த்தவனை மறந்து விட்டாலும் வருபவனை, நிச்சயம் எதை என்று அறிந்து! அறிந்து! இப்பொழுது ஒரு நாமத்தை வைத்துக் கொள்வோம்! நித்யா என்று! கணவன் பெயர் பால் என்று. அப்பெண், கணவனுடன் சென்று, வளர்த்தவனை மறந்துவிட்டு, அறிந்து! அறிந்து! தற்பொழுது வந்திருப்பவனை, நிச்சயம்! பெயரில் இணைத்துக் கொண்டால் என்ன லாபம்? அப்பொழுதே அங்கே சந்தேகங்களும், குழப்பங்களும் உருவாகின்றது. இதனால், நிச்சயம், பிறந்த வீட்டை மறக்காத பெண்களே, பெண்கள்.
67. புது புது நோய்கள் வந்து கொண்டே உள்ளது . தப்பிக்க வழி சொல்லுங்கள் ஐயா!
நிச்சயம், தப்பிக்க வழி, யான் சொன்னேன்! பத்து ஓட்டைகள் என்று கூட. ஏற்கனவே சொல்லிவிட்டேன்! அறிந்துள்ளீர்களா என்ன? அதனால், புண்ணியங்கள் பல செய்யுங்கள், இல்லாதவர்களுக்கு கூட. புண்ணியங்கள் எப்படி செய்வது என்று கூட யான் தெரிவிக்கின்றேன், மரியாதையுடன் கேட்டால்.
68. அப்பா! எந்த மார்கத்தில் சென்றால் அருட்காட்ச்சி தெரியும்? எந்த மார்க்கம் இறைவனை அடைய மிகச்சிறந்தது?
அப்பா! அப்பா! என்னுடைய மார்கத்தில் வாருங்கள்! நிச்சயம்!
69. இந்த காலகட்டத்தில் பெண்களுக்கு அதிகஅளவு மாதவிடாய் தள்ளிப்போதல் பிரச்னை இருக்கிறது(PCOD ) இதற்கு மருந்து உண்டா?
நிச்சயம் உண்டு என்பேன். முதலில் பகையானது, இறைச்சியே என்பேன். அது மட்டுமல்லாமல், அறிந்து அறிந்து, பல வழிகளிலும், சொல்லுகின்றேன். அதாவது, செயற்கையை பின்பற்றுகின்றார்கள், பலர். இயற்கைக்கு வரச்சொல். அப்பனே! யான் பல மூலிகைகளை உரைத்துவிட்டேன். அவ் மூலிகைகளை எடுக்கச் சொல்! போதுமானது! பின்! உணவுகள்! ரசாயனம் கலந்து விட்டதப்பா! இதனால்தான் அப்பனே! பெண்கள் என்பவர், இறைச்சியே உண்ணக்கூடாது அப்பனே! இப்படி இருந்தால் அப்பனே! அனைத்தும் நலன்களாகும் அப்பனே! மனிதன் கர்மத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான். ஆனால், செல்லட்டும் அப்பனே! அவனே திருந்திக் கொள்வான். அப்பனே! படிப்படியாக மேலே செல்லும் பொழுது, அடிபட்டு, மீண்டும் கீழே விழுந்து விடுகின்றான் அப்பனே! அப்பொழுது யாங்கள் எழுப்புகின்றோம். மீண்டும் தவறு செய்தால், இப்படி நடக்குமா என்று தவறு செய்கின்றான்! மீண்டும் யாங்கள் அடித்தால், திருந்திவிடுவான்.
70. நாம் அன்றாடம் வாழ்வில் பயன்படுத்தும் பால் (மாட்டுபால்) மரபணு மாற்றப்பட்ட மாட்டில் இருந்து பெறப்படுகிறது அந்த பாலை குழந்தைகள், வயது முதிர்ந்தவர் அனைவரும் உட்கொள்கின்ற அந்த பாலில் உள்ள தேவையற்ற அனைத்தையும் எடுத்துக் விட்டு குடிக்க ஏதுவாக மாற்ற வழி கூறுங்கள்.
நிச்சயம் இருக்கின்றதப்பா! தேடி தேடி அலைந்தால் கிட்டும்! இதைக்கூட உன்னால் தேடி அலைய முடியவில்லையே! அப்பொழுது, குழந்தை ஏன் பெற்றுக்கொண்டாய் நீ? இதை யான் கேட்டால், தவறு என்பார்கள் அப்பனே! ஆனால், யான் பார்த்துக் கொள்கின்றேன்!
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
No comments:
Post a Comment