​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 31 March 2023

சித்தன் அருள் - 1315 - அகத்தியப்பெருமான் உத்தரவில் கிடைத்த அனுபவம்-2


தொடர்ந்து மடிப்பிட்ச்சை எடுத்து நிற்கும் பொழுது, ஒரு வயதான தம்பதியர் வந்தனர். அந்த அய்யாவின் முகத்தில் அத்தனை ஒரு தேஜஸ். நல்ல வசீகரமான, நம் குருநாதர் போன்ற முகம், உருவம். அந்த அய்யா, பாதாள லிங்க சன்னதிக்குள் போகும் போதே வெளியே நின்ற என்னை பார்த்துக் கொண்டே சென்றார்.

தரிசனம் முடித்து அவர்கள் இருவரும் வெளியே வரும் பொழுது, அவர் பையிலிருந்து பணத்தை எடுத்து, அந்த அம்மாவிடம் கொடுத்து "அவளுக்கு போடு!" என்று கொடுத்தார்.

அப்பொழுது, நான் அம்மாவிடம் மடியேந்தி, "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறி வாங்கிக் கொண்டேன். அவர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை, நின்று ஒரு க்ஷணம் என்னை பார்த்துவிட்டு, கீழே இறங்கிப்போய், தன் கண் கண்ணாடியை நகற்றிவிட்டு, கண்ணை துடைத்துக் கொண்டார். ஏதேனும், ஆனந்தத்தால் மனம் நெகிழ்ந்து அவர் கண்களில் கண்ணீரோ என்று தோன்றியது. ஏன் என்றால், அகத்தீசப்பா கூட பல முறை வாக்குகளில் சொல்லியிருக்கிறார், “நீங்கள் மனத்தால் ஒன்றி, உண்மையான அன்போடு ஒரு விஷயத்தை செய்கிற பொழுது, ஆனந்தத்தால், என் கண்களும் கலங்கி விடாதா என்று”. அவர்கள் இருவரையும் கண்ட பொழுது, அகத்தீசப்பாவும், லோபா அம்மாவும்தான் வந்திருந்து மடிப்பிட்ச்சை போடுகிறார்களோ என்று தோன்றியது. சில மணித்துளிகள் கடந்து, அவர்கள் செல்லும் வரை, அந்த ஐய்யாவையே நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அவர் முகத்தில் அத்தனை தெய்வீகம்.

இந்த கைங்கர்யம் முடிய ஒரு அரைமணி நேரம் இருக்கும். நிறையபேர் வந்து மடிப்பிட்ச்சை போட்டுக் கொண்டு இருந்தார்கள். மீண்டும் இன்னொரு வயதான தம்பதியர் என்னை பார்த்துக் கொண்டே ரமணர் கோவிலுக்குள் சென்றனர். அவர்கள் தரிசனம் முடித்து வெளியே வரும் பொழுது, அந்த அய்யா ஒரு 20 ரூபாய் நோட்டை அந்த அம்மாவிடம் கொடுத்து போடச் சொன்னார். அந்த அம்மாவிடம், நான் வணங்கி, "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறி, குனிந்து மடிப்பிட்சை வாங்கும் போதே, அது என்ன உணர்வு என்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்த பணத்தை வாங்கும் பொழுது, என்னையும் அறியாமல், அழுதுவிட்டேன். அது என்னவோ ஒரு பரவசநிலை, ஏதோ என்னை தூக்கிப் போடுவது போல் உணர்ந்தேன். 

நான் அழுவதைக் கண்டு, அந்த அம்மா என்னை கட்டி அணைத்தபடி, தன் தோள்களில் என் தலையை சாய்த்து வைத்துக் கொண்டு "ஏன் அழுகின்றாய்? எதற்காக அழுகிறாய்!" என்று என் தலையை தடவிக் கொடுத்தவாரே கேட்டார்கள்.

நான் என் அழுகையை கட்டுப்படுத்த முடியாதவளாய், அழுதபடியே அவர்களுக்கு பதிலளித்தேன், வார்த்தைகள் வரவில்லை. “அம்மா இந்த கைங்கரியம், நான் எனக்காகவோ அல்லது எந்தவொரு வேண்டுதலுக்காகவோ செய்யவில்லை. என் குருநாதர் அகத்தியப்பெருமானும் - லோபமுத்ரா அம்மாவும். என் குருநாதர் உரைத்த வாக்கிற்காக நான் அவர் திருவடிக்கு இந்த கைங்கரியத்தை செய்கின்றேன். உங்கள் இருவரையும் பார்த்ததும், என்னையும் அறியாமல் நான் அழுது  விட்டேன். ஏனென்று எனக்குத் தெரியவில்லை" என்று நான் அழுதவாறே அவர்களிடம் பேசினேன். 

நீங்கள் என் அருகில் வந்ததும், என் லோபா அம்மாவும், அகத்தீசப்பாவும் வந்ததாக நான் உணர்ந்தேன். அவர்கள் இருவரும் உங்கள் ரூபத்தில் வந்ததாக நினைக்கிறேன்! என்னவோ தெரியலை, உங்களை பார்த்தவுடன், அவர்கள் நினைவில், என்னையும் அறியாமல் அழுகை வந்துவிட்டது!" என சொல்லவும், அடுத்த நொடியில், அந்த அய்யா, என் தலை மேல் கைவைத்து, "உன் குருநாதரே வந்ததாகத் தான் வைத்துக் கொள்ளேன்! அகத்தியப்பெருமானே, நேரடியாக வந்ததாக வைத்துக் கொள்!" என்றார்.

அவ்வளவுதான், அவர் இவ்வாறு கூறியதும் அடுத்த நொடியே, என் நிலை மறந்து, "ஓம் அகத்தீசாய நமஹ! ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறிக்கொண்டே அவர் காலில் விழுந்து  நமஸ்கரித்தேன்.

அந்த பெரியவர், என் தலையில் கைவைத்து "நீ நல்லா இருப்பம்மா! நல்லா இருப்பே!" என்று குருநாதர் எப்பொழுதும் கூறுகிற வாக்குகளான, "உலகம் வாழ வேண்டும்", “நல் உயிர்கள் வாழவேண்டும்”, "உன் குருநாதர் அருள் உனக்கெப்போதும் உண்டு!" என்று மண்டியிட்டு இருந்த என் தலையில் கைவைத்து ஆசிரவாதம் செய்தார். 

எழுந்து நின்ற என்னிடம், அந்த அம்மா, "கண்ணை துடைத்துக் கொள்!" என்று கூற, அந்த அய்யாவோ " விடு, விடு அவள் அழுக்கட்டும் விடு. உண்மையான அன்பு  வெளிப்படும் போது, அங்கு அழுகை மட்டும் தான் வரும். அவளின் அன்பை நிச்சயம் என்னால் புரிந்து கொள்ளும் தன்மை எனக்கு இருக்கு!" என்றார்.

படியில் இருந்து இறங்கிய அவர், மீண்டும் என்னை பார்த்து ஆசிர்வாதம் செய்வது போல், தன் வலது கையை உயர்த்தி, "உன் குருநாதர் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு மா!" என்று கூறிவிட்டு, திரும்பி அவர்கள் இருவரும் பெரிய நந்தியை நோக்கிச் சென்றனர். 

இவை அனைத்தும் ஒரு 2-3 நிமிடங்களுக்குள் நடந்திருக்கும். என் மனமும் உடலும் நிச்சயமாய் என் கட்டுப்பாட்டில் இல்லை என்பது எனக்குத் தெரிந்தது. என் அழுகையை நிறுத்திய பாடு இல்லை. நடந்து செல்லும் அவர்களை நினைத்தவாறே, நான் வழக்கம் போல் அம்மை அப்பரிடம், "அகத்தீசப்பா லோபாம்மா, இந்த நாய்க்கு நீங்க தான் வந்து பிச்சை போட்டீங்களா " என்று கேட்டுக் கொண்டேன். 

அதற்கு முன் வரை, எத்தனையோ பேரிடம் கையேந்தி மடிப்பிட்சை வாங்கிய பொழுது, மனம், பூரணமாகவில்லை, அழுகையும் வரவில்லை. ஆனால், இவர்களிடம் மடிப்பிச்சை வாங்கியபின், அந்த பரவசம் என்னுள் பரவி வெகுநேரம் நின்றது. யார் எனக்கு மடிப்பிச்சை தந்திருந்தாலும், என் அகத்தீசப்பாவும், லோபா அம்மாவும் வந்து பிட்சை போட்டது, என் மனம் நிறைந்து போனது. மனதால் அவர்களுக்கு கோடி கோடி நன்றிகளை சொல்லிக்கொண்டேன். 

சில நொடிகளே கடந்திருக்கும், அந்த ஐய்யா மட்டும் மீண்டும் என்னை நோக்கி வந்தார். தன் பையிலிருந்து 100 ரூபாயை எடுத்து, "இதுக்கு முன் 20 ரூபாய் போட்டோம் இல்லையா! அது எங்கள் கணக்கு! இந்த 100 ரூபாய் உன் குருநாதர் உனக்கு கொடுக்கறதா நினைச்சுக்கோ! இதை உன்குருநாதர் கணக்கில் வை!" என்றார்.

அவ்வளவுதான்! நான் என் கட்டுப்பாட்டை இழந்து விட்டேன்."ஓ!" என கதறி அழுதுவிட்டேன். ஏன் என்றால், அருள் வாக்கில் அகத்தீசப்பா, கூறியிருந்தது இது தான்.

"அண்ணாமலைக்கு சென்று பிச்சை எடுக்கச் சொல், நிச்சயம், யானே வந்து பிச்சை இடுகின்றேன், அங்கு"

மறுபடியும், அவர் காலில் அப்படியே விழுந்து அவர் பாதங்களைத் தொட்டு வணங்கினேன். மனதுள், "அகத்தீசப்பா! கோடி கோடி நன்றி உங்களுக்கு. இந்த நாய்க்கு நீங்களே வந்து கொடுத்துவிட்டீர்கள்" என்று நினைக்க, அவர் மீண்டும், தலையில் கைவைத்து "நீ நல்லா இருப்பம்மா! நீ நினைப்பதெல்லாம் நடக்கும்!" என்று ஆசிர்வதித்துவிட்டு, “உன் குருநாதர் ஆசிர்வாதம் உனக்கு எப்போதும் உண்டு!" என்று கூறிவிட்டு, சென்றார். இந்த நிகழ்வு, மிக நிச்சயமாய் குருநாதர் அன்றி வேறு இல்லை என்று நான் நன்கு உணர்ந்தேன். 

மேலும் அரை மணி நேரம் வரை அங்கு நின்று கொண்டிருந்தேன். அவர்கள் சுவாமி தரிசனம் செய்து விட்டு வருவார்களா என்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அதற்குப் பின் அவர்களை அங்கு காண முடியவில்லை.

இந்த மனநிலையில், சரி! மடிப்பிச்சை கிடைத்தது போதும் என்ற தீர்மானத்துக்கு வந்தேன். மொத்தம் 2339 ரூபாய் கையிலிருக்க, அதைக் கொண்டு, ஒரு உணவு விடுதியில், 25 மதிய உணவை (சாதம், சாம்பார், ரசம், கூட்டு பொரியல், பாயசம், அப்பளம்) முழு சாதமாக வாங்கினேன். அதனுடன் ஒரு லிட்டர் அளவு கொண்ட, 25 பாட்டில், குடி நீரும்!

குருநாதர் சொல்வது போல், கிரிவலப் பாதையில் அமர்ந்திருக்கும், மிகுந்த வயதானவர்கள், உடலால் பாதிக்கப்பட்டவர்கள், கூன் போட்டு நடப்பவர்கள், வயதான தம்பதிகள் போன்றவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மட்டும் அன்னத்தை கொடுத்தேன்.

அவ்வாறு ஒரு இடத்தில் அன்னம்பாலிப்பு செய்யும் போது, நல்ல உடல் நிலையில் இருக்கும், ஆனால்  மிகுந்த ஏழ்மையான நிலையில் இருந்த ஒரு தம்பதி நின்று கொண்டு இருந்தனர். நான் அங்கு இருந்த வயதானவர்களுக்கும், ஒரு கால் நடக்க இயலாத ஒரு வயதானவருக்கும் அன்னைத்தைக்  கொண்டு கொடுத்தேன். இந்த தம்பதி இருவரும், என்னிடம் உணவு கேட்கவில்லை. இருப்பினும் அவர்கள் நின்ற ஒரு கோலம், ஈசனும் பார்வதியும் நின்ற அமைப்பாய், அந்த அய்யாவின் உடலில் ஒரு பகுதியை மறைத்தவாறு, நான் அவரில் சரி பாதி என்று கூறுவது போல் இருந்தது. அவர்கள் நின்ற விதம் "எங்களுக்கும் கொடுத்துவிட்டு போ!" என்றது போல் இருந்தது. வேறு சிந்தனை இல்லாமல், அவர்கள் இருவருக்கும் உணவையும் நீரையும் கொடுத்து விட்டு, மானசீகமாக, "ரொம்ப நன்றிங்க ஐய்யா" என்று சொல்லிக்கொண்டேன். அந்த ஐய்யா "நல்லா இரும்மா " என்றார்.

என் மனம் வழக்கம் போல் அகத்தீசப்பாவும், லோபா அம்மாவும் வந்து என்னிடம் பெற்றுக் கொண்டதாய் நான் உணர்ந்தேன். ஏன் என்றால், குருநாதர் பல முறை வாக்குகளில் சொல்லி இருக்கிறார், " நானும் வந்து உங்களுடன் உணவு உண்டேன், தேநீர் அருத்தினேன் என்றெல்லாம்". 

இப்படி, திருவண்ணாமலையில் “பிட்ச்சை எடு” என்ற அகத்தீசப்பாவின் உத்தரவை, அவருடைய திருவருளால் நிறைவேற்றி, பின்னர் மதிய உணவருந்தி, மாலையில் பிரதோஷ நேரத்தில் கிரிவலம் செய்து, குருநாதரும் அண்ணாமலையாரும் கொடுத்த இந்த அரும்பெரும் வாய்ப்பை நல் முறையாக பயன்படுத்திக் கொண்டேன்.

குருநாதரின் இந்தக் கருணையை பகிர்வதில் அளவுகடந்த மகிழ்ச்சியும் பரவசமும் அடைகின்றேன். அனைத்தும், நன்றிகளுடன், லோபாஅம்மா அகத்தீசப்பா திருவடிகளில் சமர்ப்பணம்.

"பிச்சை எடு" என்ற உத்தரவு இத்துடன் நிறைவு பெற்றது!

அகத்தியர் அடியவர்களே! குருநாதர் உத்தரவை சிரம் மேற்கொண்டு செய்தால், இப்படிப்பட்ட அனுபவம் கிடைக்கச் செய்வார். பற்றறுப்பதும் எளிதாகும்!

மேலும், அகத்தியப் பெருமானின் ஒரு உத்தரவு, மேலே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. படித்து, புரிந்து, உணர்ந்து, நடை முறைப் படுத்தவும்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்..... தொடரும்!

சித்தன் அருள் - 1314 - அன்புடன் அகத்தியர் - உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்!






11/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு. வாக்குரைத்த ஸ்தலம் : உடுப்பி கிருஷ்ணர் ஆலயம்

ஆதி ஈசனின் பொற்கமலத்தை  பணிந்து செப்புகின்றேன்  அகத்தியன்!!!!!

அப்பனே நலன்கள் எதை எதை என்று யான் அறிந்து சொல்ல அப்பனே  இப் புவிதன்னில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்!!!!!

ஆனாலும் அப்பனே  பின் அதன் தன்மையை பின் மனிதன் எப்பொழுதுமே உணர்ந்து இருக்கவில்லை ஆனால் அப்பனே எதை என்று யானும் ஆனாலும் தெரிவித்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!! 

நிச்சயம் அப்பனே நிச்சயம் இறை அருள்கள் பலமாயினும் அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய வெற்றிகள் உண்டு என்பேன் அப்பனே !!!

ஆனால் இறையருள் அப்பனே குறையாகின் அப்பனே நிச்சயம் வெற்றிகள் இல்லையப்பா!!!!!

அப்பனே தோல்விகள் தான் அப்பனே சில மனிதர்கள் கூட யான் இறைவனை வணங்குகின்றேனே!!!!!! இறைவன் எதை என்று அறிய அறிய பின் நமச்சிவாய !!!!!! என மந்திரத்தை முருகா !!!!!எனும் மந்திரத்தை பின்  விநாயகர் பெருமானே எனும் மந்திரத்தை இன்னும் பின் அம்பாளுடைய மந்திரத்தையும் பின் செப்பிக் கொண்டிருந்தேனே!!!!!!!!!!!! எந்தனுக்கு ஒன்றும் லாபங்கள் இல்லை என்று  சொல்பவரும் உண்டு உண்டு!!!!

அப்பனே ஆனாலும் உன் மனதை நீ தெளிவுபடுத்த வேண்டும் அப்பனே தெளிவுபடுத்தி நீ யாரென்று உணர்ந்து அப்பனே அப்பொழுதுதான் இறைவன் இடமும் சென்று அப்பனே நிச்சயம் முறையிட்டால் அனைத்தும் செய்வான் அப்பனே!!!!!!

எண்ணத்தில் அப்பனே அழுக்குகள் வைத்துக்கொண்டு இறைவனை வணங்கினாலும் அப்பனே ஒரு பிரயோஜனம் இல்லை என்பேன் அப்பனே!!!!

பின் கடைசியில் பின் இறைவனை வணங்கினேனே!!!!! பல பூஜைகள் செய்தேனே என்றெல்லாம் அப்பனே கேட்பீர்கள் என்ன லாபம்?????? அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் தான் அப்பனே எண்ணம் சரியாக வைத்து கொள்ளுங்கள் அப்பனே!!!! 

நிச்சயம் அப்படி வைத்து கொள்ளாவிடிலும் கூட நிச்சயம் அப்பனே ஏதாவது எதை என்று அறிய அறிய கஷ்டங்களை கொடுத்து கொடுத்து யாங்கள் நிச்சயம் மாற்றுவோம் அப்பனே!!!!! 

நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்!!!!  அதனால்தான் அப்பனே மனிதர்களுக்கு பல வகையிலும் கூட கஷ்டங்கள் வந்து கொண்டே இருக்கின்றது!!!! 

ஆனாலும் அப்பனே நலமாகவே அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து 

இக் கிருஷ்ணனும் அப்பனே பல அவதாரங்கள் பின் ஒரு அவதாரம் எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பல செய்த அதாவது பல பல ஜென்மங்களில் செய்த புண்ணியங்கள் அப்பனே உங்களை நிச்சயம் அழகாகவே பின் அதாவது பின் அந்தந்த தெய்வங்கள் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் உங்களை அழைக்கும்!!!! 

அப்பனே எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் இன்னும் அப்பனே இப்படியே வாக்குகள் உரைத்து கொண்டு உரைத்துக்கொண்டு இனிமேலும் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் யாங்களே தெரிவிப்போம்!!!! அப்பனே மனிதர்களுக்கு கூட!!!!! 

அப்பனே எதை என்று உணர்ந்து உணர்ந்து இதனால் அப்பனே பன்மடங்கு உயர்வுகள் எப்படி கிடைக்கும் என்பதை கூட  யாங்கள் நிச்சயம் கணித்து கணித்து விட்டோம் அப்பனே!!!! 

ஆனாலும் பன்மடங்கு மனிதனை உயர்த்தி விட்டாலும் அப்பனே பின் அவந்தன் எதை என்று அறிய அறிய எப்படியெல்லாம் செய்வான் என்பதை கூட யாங்கள் பார்த்து தான் அதையும் கொடுப்போம் அப்பனே!!!! 

ஆனாலும் அனைத்தையும் கொடுத்திட்டால் அப்பனே அவன் இறைவனையும் வணங்க மாட்டான்!!!! தன் பணத்தை ஈட்டிக்கொண்டு எதை என்று அறிய மக்களையும் கவனிக்க மாட்டான்!!!!! 

அப்பனே சரியாக புரிந்து கொள்ளுங்கள் அப்பனே 

வரும் காலங்களில் அப்பனே நோய்கள் தான் பலமாக உள்ளது அப்பனே!!! 

ஏனென்றால் எதையென்று அறிய அறிய அப்பனே மனிதன் தன்னைதானே  கெடுத்து கொண்டிருக்கின்றான் அப்பனே !!!!

பல வழிகளிலும் கூட பல திருத்தலங்களை யாங்கள் அமைத்தோம்!!!! 

ஆனாலும் அதனை கூட அப்பனே மனிதன் அங்கு சென்றால் கஷ்டம் தான் வருகின்றது இங்கு சென்றால் எந்தனுக்கு கஷ்டங்கள் தான் வருகின்றது என்று!!!! அப்பொழுது ஏன் இறைவனை வணங்க வேண்டும்????? என்றெல்லாம் அப்பனே கலி புருஷனின் காலமும் அப்பனே இன்னும் எதை என்று அறிந்து அறிந்து மாற்றம் அடைய மாற்றமடைய அப்பனே இன்னும் வருத்தங்கள் தான்!!!!!

ஆனாலும் எதை என்று உணர்ந்து உணர்ந்து அதனால் அப்பனே மௌனத்தை பின் உணர்ந்து உணர்ந்து அதாவது பின் எதையென்று உணர்ந்து உணர்ந்து அமைதியாக எதை என்றும் கூட  உணர்ந்து ஆனாலும் மௌனம் அமைதி எதையென்றும் அறிய சாந்தி!!!! இன்னும் அப்பனே வேறுபாடுகள் இவற்றிற்கெல்லாம் வேறுபாடுகள் உண்டு என்பதை எல்லாம் நிச்சயம் அழைத்து அழைத்து யான் சொல்வேன் அப்பனே!!!! 

இன்பத்திற்காகவே செல்கின்றாயா??? அப்பனே எதை என்று ஆனாலும் ஒரு பிரயோஜனமும் இல்லையப்பா!!!!

ஆனாலும் கடைசியில் அப்பனே மீண்டும் மீண்டும் இறைவனை வந்து அடைந்து விடுகின்றாய் அப்பனே !!ஆனாலும் அப்பனே முயற்சிகள் பல செய்ய வேண்டும் அப்பனே!!!!

இறைவனை காண காண கஷ்டங்கள் பட வேண்டும் என்பேன் அப்பனே!!!

அப்பொழுதுதான் இறைவன் ஆசியும் தரிசனம் அருளும் கிடைக்கும் அப்பனே!!!! 

பின் ஒரு முறை இல்லை பலமுறை இல்லை அப்பனே அதாவது எதை என்று அறிய அறிய !!!  "

""""""ஒரு முறை இல்லை !!!!

 """"பத்து முறையில்லை!!!!!

 அப்பனே!!!  """" நூறு முறை இல்லை !!!!

""""""ஆயிரம் முறை இல்லை!!!!! 

அப்பனே லட்சம் எதை என்று அறிய அறிய!!! தொழுதால் தான் அப்பனே இறைவனின் தரிசனமும் கிட்டுமே தவிர........

.ஆனால் நடுவில் அப்பனே சில சோதனைகள் இறைவன் கொடுத்தாலும் ஆனாலும் அப்பனே அதில் தோல்வி அடைந்து விடுகின்றான் மனிதன்!!!!

இதனால்தான் அப்பனே இறைவன் கூட அமைதி பொறுத்துக் கொண்டு அப்பனே இவர்களுக்கு கொடுத்தாலும் ஒரு பிரயோஜனம் இல்லை இப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுகின்றான் அப்பனே!!!!! 

ஆனாலும் அப்பனே இறைவனிடத்தில் எதை என்று அறிய அறிய ஒரு தந்தை எதை என்று அறிய அறிய தன் பிள்ளை நன்றாக இருக்க வேண்டுமே என்று எண்ணுவான் ஆனாலும் நிச்சயம் அப்பிள்ளை தன் தந்தை பேச்சை கேட்டால் அத் தந்தைக்கு சந்தோசம்!!!

அப்பனே அனைத்தையும் அத் தந்தை செய்வான்!!! அப்படி இல்லையென்றாலும் அப்பனே எதை என்று அறிய அறிய  அமைதியை காத்து விடுவான் அவ் தந்தை!!!!

இது போலத்தான் அப்பனே எதை என்று கூட இறைவன் கூட அப்பனே இறைவனுக்கு இறைவனுக்கு பிடித்தார் போல் நிச்சயம் நடந்து கொண்டால் அப்பனே எதை என்று அறிய அறிய இறைவனே எதை என்று அறிய பின் தன் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு அனைத்தும் செய்வது அப்பனே நிச்சயம் அதாவது உண்மை எதை என்று அறிய நிச்சயம் உண்மை!!!!

அப்பனே பல வேறுபாடுகள் உள்ளன. அப்பனே அனைத்திற்கும்  எதை எதை என்றும் அறியறிய வகுத்தவனும் ஞானி!!!!! 

இதனைபற்றியும் விவரமாக சொல்கின்றேன்!! அப்பனே. வரும்! வரும் ! காலங்களில் கூட அப்பனே எங்கெல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே பின் எவை என்று கூட மாடு போல் உழைத்து!! உழைத்து!! அப்பனே  வந்தால்தான் இறை ஆசிகள் கிட்டும் இறைவனின் தரிசனமும் கிட்டும் எங்களுடைய அருள்களும் கிட்டும் அப்பனே!!!!!

ஏதோ எதை என்று அறிய அறிய பின் ஏதோ ஒன்றை சொல்லிவிட்டார்கள் பரிகாரங்களாக சென்றுவிட்டார்கள் அதாவது பின் சென்று பின் செய்து விட்டார்கள் பின் போதும்...... அனைத்தும் அப்பனே மாறிவிடும் என்றால் அப்பனே எதை என்று அறிய அறிய இது இறைவனின் தீர்ப்பு அப்பனே !!!

இறைவனின் தீர்ப்பு யாராலும் மாற்ற முடியாது!! அப்பனே!! 

மனிதனுடைய தீர்ப்பை நிச்சயம் எங்கள் அருளாலும் இறைவன் அருளாலும் நிச்சயம் மாற்ற முடியும் அப்பனே இங்கு தீர்ப்புக்கள் அதாவது கலியுகத்தில் மனிதனின் தீர்ப்புக்களே பலம் ஆகி கொண்டு போய் கொண்டு இருக்கின்றது !!!

ஆனால் அப்பனே அது நிரந்தரம் இல்லை!!!

 """""""""அழித்து விடுவோம் அப்பனே!!! ஒரு நொடி போதும் !!..........

அப்பனே  ஆனாலும் பின் பொறுத்திரு!!! பொறுத்திரு!!!  பின் எவை என்று அறிய அறிய...... திருந்தட்டும்!!!! திருந்தட்டும்!!!! என்றெல்லாம் யாங்கள் பார்த்துக் கொண்டே இருக்கின்றோம் அப்பனே!!! 

எதை என்று எச் செய்கைகள் மூலம் எதை என்று அறிந்து அறிந்து இதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே பின் எதை என்று கூட நீதியை பின் நிலை நாட்டுவதற்காகவே அப்பனே பல யுகங்களாகவே அப்பனே பிறப்பான் பிறப்பான் என்பதை கூட யாங்கள் வழி வகுத்துக் கொண்டே வழி வகுத்து ஆனாலும் அப்பனே இதனைப் பற்றி எதை என்று அறிய அறிய.........

தவறான செய்திகளப்பா!!!! பறந்து போய் விட்டனப்பா!!!!!!

ஆனாலும் இதையென்றும் அறிந்தும் அறிந்தும் கூட அதனால் மக்கள் பல பல வழிகளிலும் கூட எதையென்று அறிய அறிய அப்பனே அவைகளையே ஏற்றுக்கொண்டு அப்பனே!!!!

இப்படியா ஒருவன்!!!!!!!

அதாவது கிருஷ்ணன் என்பதை கூட அப்பனே தெள்ள தெளிவாக புரிந்து கொண்டனர்!!!

இவையெல்லாம் அப்பனே பின் . . வீணான மனிதர்களால் வந்தவை தான் அப்பனே!!!!! 

எவையென்றும் அறிய அறிய அப்பனே இவந்தன். ( கிருஷ்ணர்) உண்மையை தெரிவிக்கின்றேன்!!!!! அதாவது பெண்கள் அனைவரையும் கூட பின் தெய்வமாக எண்ணி அதாவது தாயாக எண்ணினால் அப்பனே நிச்சயம் அனைத்தும் சாதிக்கலாம் என்று அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அப்பனே எவற்றை என்று  புரிந்து அப்பனே பின் நல்விதமாகவே உணர செய்தவன் !!!

ஆனாலும் அப்படியே மாற்றி விட்டார்கள் அப்பனே இதுதான் தான் பொய்யான உலகமப்பா!!! 

ஆனாலும் இதையெல்லாம் சகித்துக்  கொண்டு அப்பனே அதனால் தான் கடைசியில் சொல்லிவிட்டான் அப்பனே நீதி எது என்று அறிய அறிய நிலை நாட்டுவதற்கும்  தர்மத்தை காப்பதற்கும் அப்பனே நிச்சயம் நிச்சயம் யான் தோன்றுவேன் என்பதை கூட இதை நீங்கள் அனைவரும் உணர்ந்ததே!!!!

அப்பனே ஆனால் கிருஷ்ணனின் லீலைகள் எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் மாறுபட்டு விட்டன அப்பனே ஆனாலும் அதன் வழியாகவே வந்தவர்கள் எதை என்று கூட கருணை மிக்கவர்களாக இவ்வாறு வள்ளல் பின் பேரொளியாக அப்பனே இவ்வாறு செய்தால் தான் நிச்சயம் தர்மம் கூட உன்னை காக்கும் என்று நிரூபித்தவன்!!!!!!

இப்படிப்பட்டவன் அப்பனே எப்படி லீலைகள் செய்ய முடியும்?????????

( கோபியர் காதல், ராச லீலை எல்லாம் பொய் தகவல்கள் ஆகும் மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பொய்கள்)

என்பதையெல்லாம் அப்பனே பொய்யான கணக்கை ஒன்றை கூறி மனதை திசை திருப்பி அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து

அப்பனே காதலுக்கும் இவந்தன் வழிவகுத்தான் என்று பொய்யான தகவலப்பா!!!!!!!

இவ்வாறு பரப்புபவர்கள் பார்ப்பவர்கள் பின் அதாவது பரப்பியவர்களை கூட அப்பனே கஷ்டத்தில் மூழ்கியுள்ளார்கள் என்பதை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே!!!!

அதனால் இவனுடைய கொள்கை ஒன்றே தான்!!!!

அப்பனே அனைத்து பெண்களையும் கூட பின் தாய் எதை என்று அறிய அறிய அப்பனே தாயாக எண்ணிவதே!!!!!!!!

 ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அதனால்தான் அப்பனே எவை என்று உணர்ந்தும் உணர்ந்தும் அப்பனே பின் அவ்வாறு நினைத்தால் தான் எதை என்று அறிய அறிய அதற்காகவே எவை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும்..... ஆனாலும் அனைத்து பெண்களும் எதை என்று அறிய அறிய முன் ஜென்மத்தில் செய்த எதை என்று உணர்ந்து உணர்ந்து இவர்கள்(கோபியர் பெண்கள்) எதை என்று அறிய அறிய அதாவது கிருஷ்ணனுக்கு தான் தாயாகவே இருக்க வேண்டும் என்று எண்ணினார்கள் அப்பனே!!!!

ஆனால் மனிதர்கள் அப்படியே மாற்றி விட்டார்கள் அப்பனே!!!!

 எதை என்று அறிய அறிய ஆனால் அது நிச்சயம் இல்லைப்பா!!!! 

""""""கிருஷ்ணன் உணர்த்தியவன்!!!!!!

 உணர்த்தியது!! """ நீதி!! பின் ""தர்மம்!!! எதை என்று அறிய அறிய பின் """அனைவரும் சமம் !!என்று அறிய அறிய என்று காட்ட!!!!! ஆனால் வந்திருப்பவனை அப்படியே. மாற்றிவிட்டனர்...... 

....எதை என்று அறிய அறிய அப்பனே இன்னும் ஏராளமான வாக்குகளில் கூட இவந்தனை( கிருஷ்ணர்) பற்றி நிச்சயம் யான் சொல்வேன் அப்பனே!!!!

""""""அவதார புருஷன்!!!!

அதனால் எவை என்று அறிய அறிய அப்பனே இப்பொழுது கூட பாதிக்கு மேல் உண்மைகளை மறைத்து விட்டனர் என்பேன் அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!

அப்பனே அதாவது இங்கு ஏன் இவந்தன் திருத்தலம் கொள்கின்றான்!!??!!! அதாவது கொண்டு  எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஆனாலும் அப்பனே இதன் தன்மைகளையும் கூட """"""பத்மநாபசுவாமி..... அப்பனே ஏன்??? அங்கு அவை தன் உணர உணர  பின் """"""துவாரகா!!!!!  எதை என்று அறிந்து அறிந்து அப்பனே இன்னும் """""மதுரா!!!!! எதை என்றும் உணர்ந்து உணர்ந்து....... 

ஆனாலும் பின் பார்த்தீர்களா!!!!! அப்பனே அனைத்திற்கும் எவை என்று அறிய அறிய பின் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் பின் திருப்பதி ஏழுமலையான் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இன்னும் அப்பனே இவையெல்லாம் உணர்த்துபவை அதாவது உணர்த்துவது உண்மை!!!!!

அப்பனே நீங்கள் எல்லாம் எதை என்று அறிய அறிய அப்பனே நிச்சயம் உண்மைகள் உண்டு!!!!! மாறுபட்டவை எல்லாம் இல்லை!!!!

அப்பனே நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே ஒவ்வொரு யுகத்திலும் கூட நிச்சயம் பின் அதாவது கிருஷ்ணனை பிள்ளையாக அடைய முடியவில்லையே???!!!!!.......... என்று எண்ணி பக்தி பின் அதாவது கிருஷ்ணன் மீது  இருந்தவர்களுக்கெல்லாம் பின் அடுத்தடுத்து பிறப்புகள் எடுத்து எடுத்து பின் பிள்ளையாக வாழ்ந்திட்டான்!!!!! அப்பனே!!!

இதன் தன்மையை பின் உணர்ந்து விட்டீர்களா அப்பனே!!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய அதனால் தான் அப்பனே இன்னும் எதை என்று அறிய அறிய பிள்ளையாகவே இருக்கின்றான் பிள்ளையாகவே பிறக்கின்றான்!!!!! என்பதையெல்லாம் அப்பனே நிச்சயம் உண்மையான அப்பனே!!!! உண்மையானவையே அப்பனே!!!!

இன்னும் எதை எதை என்று அறிய அறிய அப்பனே போரை( மகாபாரதபோர்) பற்றியும் கூட எப்படி எதையென்று அறிய அறிய ஓர் இலக்கணத்தை எதை என்று உறுதிப்படுத்தி அப்பனே எதை என்று அதனுடன் தொடர்பை செய்து யான் நிச்சயம் காட்டுவேன் அப்பனே இதன் உண்மைகளை கூட!!!

அதனால் தான் அப்பனே பின் கலியுகத்தில் யார் ஒருவன் பெண்களை தெய்வமாக நினைக்கின்றானோ!!!!! நிச்சயம் அவந்தன் உயர்வு அடைவான் இது நிச்சயம் சத்தியம் அப்பனே!!!!

 ஆனால் அப்படி யாரும் நினைப்பதில்லையப்பா!!!! அதனால் தான் மனக்குழப்பங்கள் எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று அறிய அறிய இன்றைய காலம் அப்பனே தாழ்ந்து கொண்டே போய் கொண்டிருக்கின்றது அப்பனே எதையென்றும்!!!

அதனால்தான் அப்பனே நிச்சயம் பின் எதை என்று அதனால் தான் அழிவுகள் அழிவுகள் என்று வந்து கொண்டு இருக்கின்றது அப்பனே!!!!

திருந்துங்கள்!!! அப்பனே எதை என்று அறிய அறிய அனைத்திற்கும் காரணம் மனமே!!!! அப்பனே அவ் மனதை பக்குவப்படுத்து அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே பக்குவபடுத்தி அப்பனே நிச்சயம் இருந்தால் தான் அதாவது அப்பனே காலி நிலம் எப்படி?? இருக்கும்?? என்பதை கூட நீங்கள் உணர்வீர்கள்!!! அப்பனே அப்படி சரியாக இருந்துவிட்டால் அப்பனே அதாவது தியானங்கள் செய்து அப்பனே நன் முறையாக இருந்து விட்டால்  அவ் தியானத்தில் கூட யாங்கள் நிச்சயம் வருவோம்!!!! 

உண்மையான தியானங்களில் அப்பனே ஆனாலும் இன்றைய நிலைகள் அப்படி இல்லையப்பா!!!!! 

""""""போதையாகவே திகழ்கின்றான் ஒருவன் !!!அப்பனே!!........ போதையிலே எதை என்று அறிய அறிய என்னை அகத்தியா!!!!! நமச்சிவாயா!!!! அதாவது முருகா என்றெல்லாம் சொல்லி கொண்டு இருக்கின்றான் அப்பனே!!!

என்ன பிரயோஜனம் அப்பனே??????

 எதை என்று அறிய மீண்டும் எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே அதனால் உண்மை நிலைகளை புரிந்து புரிந்து அப்பனே சரியான வழியில் சென்று சென்று அப்பனே உயர்ந்தவர் ஆகிவிடலாம் அப்பனே!!!! 

நிச்சயம் எவ்வாறெல்லாம் உயரலாம் என்பவையெல்லாம் நிச்சயம் அப்பனே நீதி நேர்மை தவறாமல் வாழ்ந்து வந்தாலே அப்பனே நிச்சயம் உயர்வுகள் கிடைத்துவிடும்  என்பேன் அப்பனே!!!! 

அப்படி இல்லை என்றால் அப்பனே நிச்சயம் ஒரு நாள் அப்பனே கீழே தான் விழ வேண்டும் அப்பனே!!!

இதை அனைவரும் உணர்ந்து கொள்ளவே அப்பனே யான் ஒவ்வொரு திருத்தலங்களில் கூட வந்து வாக்குகள் அப்பனே எங்கு எப்பொழுது?? செப்ப  வேண்டுமென்பதையெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன் அப்பனே!!!!

அதனால் நிச்சயம் சொல்கின்றேன் அப்பனே ஏற்கனவே எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று புரியாமல் அப்பனே ஒரு திருத்தலத்தில் இருந்து கூட உரைத்திருந்தேன் அப்பனே!!!!!!

தன் நிலைமைக்கு தானே காரணம் என்று !!!

இதை யான் சொல்லவில்லை அப்பனே ஏற்கனவே நீங்கள் அனைத்தும் அறிந்தவையே!!!! 

ஆனாலும் மறந்து விடுவீர்கள் என்பேன் அப்பனே!!!!! ஆனால் தீயவை மட்டும் பின் மறக்க கூடியவை அல்ல ஆனாலும் எதையென்று அறிய நல்லவை எல்லாம் மறந்துவிட்டு அப்பனே தீயவை எல்லாம் அப்பனே மனதில் நிறுத்திக்கொண்டு அப்பனே இருக்கின்றீர்களே!!!!!  அப்பனே தீயவை என்பது யான் கர்மாவை தான் சொல்கின்றேன் அப்பனே!!

நல்லவை என்பது யான் புண்ணியமாகத்தான் எதை என்று அறிந்து அறிந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன் அப்பனே !!!

அதனால் புண்ணியங்கள் செய்யுங்கள் அப்பனே எண்ணத்தை சரியாக வைத்துக் கொண்டாலே அதுவும் எதை என்று அறிய அறிய அப்பனே அது ஒரு பெரும் புண்ணியமப்பா!!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே எதை என்று தெரிவிக்க தெரிவிக்க அப்பனே நிச்சயம் ஏற்றங்கள் உண்டு என்பேன் அப்பனே நலமாகவே!!! 

நலமாகவே எதை என்றும்!!!....... அறியாத அறியாத செல்வத்தையும் கூட அப்பனே நிச்சயம் எதை என்றும் உணர்ந்தும் உணர்ந்தும் யான் நிச்சயம் கொடுப்பேன் அப்பனே !!!! தன் மக்களுக்கு அப்பனே!!! 

நலமாகவே எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே இன்னும் வாக்குகள் ஏராளமாக காத்துக் கொண்டிருக்கின்றது அப்பனே!!!!

சிறிது சிறிதாக உரைக்கின்றேன் இன்னும் அப்பனே!!!

பல சித்தர்கள் எதை எதை அறிய அறிய அப்பனே இன்னும் வாக்குகள் செப்புவார்கள் என்பேன் அப்பனே!!! 

நலம் ஆசிகள் ஆசிகள் இன்னும் அப்பனே திருத்தலத்தை பற்றியும் பல வகையான சூட்சுமங்கள் உள்ளது என்பேன் அப்பனே இன்னும்  அதனை பற்றிவிவரமாகவே குறிப்பிடுகின்றேன் அப்பனே !!!!

ஆசிகள்!!!! ஆசிகள் !!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

உடுப்பியின் கிருஷ்ணர் கோயில் தென்னிந்தியாவிலேயே மிகவும் புகழ் பெற்ற புண்ணிய யாத்ரீக ஸ்தலமாகும். கிருஷ்ண பகவானை தரிசிப்பதற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வருகை தருகின்றனர். 

இந்தக் கோயிலில் உள்ள விசேஷம் இங்கு கிருஷ்ணர் ஒரு ஒன்பது துவாரங்கள் கொண்ட ஜன்னல் வழியாக தரிசனம் அளிக்கும் அம்சமாகும். இப்படி கிடைக்கும் தரிசனம் பக்தர்களுக்கு எல்லா வளத்தையும் கொடுக்கும் என்பது ஐதீகம்.

இங்குள்ள கிருஷ்ண விக்கிரகத்தின் மீது செய்யப்பட்டுள்ள அலங்காரம் மனம் மயக்கும் விதத்தில் காணப்படுகிறது. சில சமயம் தங்க ஆபரணங்களாலும் சில சமயம் வைர ஆபரணங்களாலும் இந்த விக்கிரகம் அலங்கரிக்கப்படுகிறது.

கருட பகவானுக்கும், ஹனுமானுக்கும் இங்கு தனியே பீடங்கள் உள்ளன. 1500 வருடங்களுக்கு முந்தைய வரலாற்றை கொண்டுள்ள இந்தக் கோயில் இந்தப்பகுதியிலேயே பழமையான கோயில் எனும் பெருமையை பெற்றுள்ளது. ராம நவமி மற்றும் உகாதி போன்றவை இங்கு கோலாகலமாக கொண்டாடப்படும் திருவிழாக்களாகும்.

பிரதான பஸ் நிலையத்திலிருந்து 1 கி.மீ கிழக்காகவும், ரயில் நிலையத்திலிருந்து 3 கி.மீ மேற்காகவும் இந்த கோயில் அமைந்துள்ளது. கோயிலுக்கு ஆட்டோவில் செல்ல பஸ் நிலையத்திலிருந்து பத்து ரூபாயும், ரயில் நிலையத்திலிருந்து இருபத்தி ஐந்து ரூபாயும்  வசூலிக்கப்படுகிறது. காலை 5 மணியிலிருந்து இரவு 9.30 வரை கோயில் திறந்துள்ளது.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Tuesday, 28 March 2023

சித்தன் அருள் - 1313 - அன்புடன் அகத்தியர் - தலைக்காவேரி குடகுமலை








11/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த பொதுவாக்கு.  வாக்குரைத்த ஸ்தலம் :  தலைக்காவேரி குடகு மலை

ஆதி முதல்வனை மனதில் எண்ணி செப்புகின்றேன்  அகத்தியன்!!!!!

அப்பனே எம்முடைய ஆசீர்வாதங்கள் அப்பனே எதை  எதை என்று அறிய அறிய அப்பனே பின் என் பக்தர்களுக்கு சென்று கொண்டே இருக்கும்!!!

ஆனாலும் அப்பனே பல பல கர்மா வினைகள் அப்பனே பின் அண்டி அண்டி அப்பனே  எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று கூற ஆனாலும் வரும் காலங்களில் அவையெல்லாம் நிச்சயம் மாற்றத்தை உருவாக்கும்!!!!

ஆனாலும் நோய் அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே  சொல்லி  வைத்துக்கொண்டே பின் இருக்கின்றேன் இதனால் அப்பனே நிச்சயம் பல புண்ணிய நதிகளில் நீராட நீராட அப்பனே நிச்சயம் மாற்றங்கள் தான் உண்டு!!!

ஆனாலும் அப்பனே எதையெதையோ பயன்படுத்தி அப்பனே ஆனாலும் அதனால் தான் அப்பனே பின் பல பல ஞானிகளும் கூட அப்பனே பின் இளவயதில் அப்பனே கற்க கற்க நாளும்  என்றெல்லாம்!!!! அப்பனே 

ஆனாலும் அது தெரியாமல் அனைத்து ஆட்டங்களை ஆடிவிட்டு கடைசியில் அப்பனே வயதாக பின் அதாவது வயதான நேரத்தில் பின் இறைவனை வணங்குவதும் அப்பனே புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் அப்பனே எதை என்று அறிய  அறிய!!!!

இருப்பினும் பின் ஒரு சந்தர்ப்பம் இறைவன் கொடுக்கின்றான் அப்பனே திருந்துவதற்காக!!!!!

அப்பனே அதையாவது சரியாக பயன்படுத்திக் கொண்டு இனிமேல் எதை என்று அறிய அறிய இறைவன்தான் அனைத்திற்கும் காரணம் என்று உணர்ந்துவிட்டால் அப்பனே அவனே மிக அப்பனே உயர்ந்தவனாகின்றான் என்பேன் அப்பனே!!!!

மீண்டும் மீண்டும் கர்மாக்கள் எதையென்று சேர்த்துக் கொண்டே இருப்பவன் அப்பனே ஆனாலும் சிறிது காலத்திற்கு நன்றாகத்தான்.................

ஆனாலும் அப்பனே அக் கர்மாவே அவந்தனை எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே அதேபோலத்தான் அப்பனே புண்ணியங்கள் செய்யச் செய்ய கஷ்டங்கள் வந்தாலும் அப்  புண்ணியங்கள் எங்கே அழைத்துச் செல்லும் என்பதை கூட யான் அறிவேன் அப்பனே!!!!

இதனால்தான் அப்பனே பல பல வழிகளிலும் கூட புண்ணிய நதிகளை யாங்கள் உருவாக்கினோம் அப்பனே!!!!! இப்பொழுது கூட பல சித்தர்கள் ஞானிகள் ரிஷிமார்கள் குருமார்கள் அப்பனே இவர்கள் எல்லாம் அப்பனே என்றுமே அறியாமல் பல பல அப்பனே  பின் காவேரி அப்பனே பின் எதை என்று கூட இன்னும் ஏராளமான அப்பனே பின் தாமிரபரணி இன்னும் அப்பனே இன்னும் இன்னும் அப்பனே கங்கை தன்னில் பிரம்மபுத்ரா பின் நர்மதா அப்பனே தபதி பின் சிந்து எதை என்று அறிய இன்னும் கூட இப்ப புண்ணிய நதிகளில் நீராடி  நீராடி விட்டு சென்றே கொண்டிருக்கின்றார்கள் அப்பனே  இவ்வாறு பின் இவ்வாறு நீராடும் பொழுது அப்பனே  அத்தண்ணீர் எதையென்று அறிய அறிய அப்பனே பின் அங்கு சென்று மனிதர்கள் கூட நீராடும் பொழுது நீராடுகின்ற பொழுது அவர்கள் பின் நீராடிய நீர் அப்பனே அப்படியே பின் வரும் பொழுது அது புண்ணியமாகி மனிதரிடத்திலும் அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே மனிதனும் கூட இது சிறிது சிறிதாக கர்மவினையிலிருந்து புண்ணியம் ஆகின்றான் அப்பனே !!!!

அதனால் தான் அப்பனே சொல்கின்றேன் அப்பனே இன்னும் இன்னும் யாங்களும் கூட  அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து கூட அதுமட்டுமில்லாமல் அப்பனே எங்கு அதிகமாக சக்திகள் விழுகின்றதோ அதாவது எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் அங்கு தான் நாங்கள் உருவாக்கியுள்ளோம்!!!!! 

அதேபோலத்தான் இவ் நதியும்  அதாவது காவிரி அப்பனே எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட அதனால் பல கர்மாக்களை அப்பனே நிச்சயம்  தீர்ப்பதற்காகவே  உருவாக்கி உள்ளேன் அப்பனே!!! 

ஆனாலும் அனுதினமும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே செயல்பட்டு செயல்பட்டு அப்பனே நீராடிக் கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் மாற்றங்கள் உறுதி உறுதி என்பேன் அப்பனே எதை என்றும் அறியாமல் அப்பனே என்னால் முடியவில்லையே என்று ஏக்கத்தாலே இருப்பவர்களை கூட அப்பனே அறிந்து அறிந்து நிச்சயம்  செயல்பட்டால் அப்பனே  என்னிடத்தில் கேட்டாலே ஏதாவது ஒரு ரூபத்தில் நிச்சயம் அழைத்து வந்து அப்பனே ஏதாவது ரூபத்தில் நிச்சயம் யான் அருள்வேன் என்பேன் அப்பனே 

அதனால் அப்பனே ஒரு  துளி அப்பனே பின் எண்ணத்தில் உண்மையான எதை என்று அறிந்து அறிந்து வைத்துவிட்டால் அப்பனே நிச்சயம் அதை யான் எப்படி
பின் எடுத்துச் செல்வது என்பதையெல்லாம் நிச்சயம் யான் எடுத்துச் சென்று விடுவேன் அப்பனே!!!!

குற்றங்கள் குறைகள் அப்பனே எதை என்று அறிய அறிய மனிதரிடத்திலே அப்பனே முதலில் எண்ணத்தை தூய்மைப்படுத்த தூய்மைப்படுத்த அப்பனே நிச்சயம் மேற் சொன்ன வார்த்தைகள் அப்பனே எதை என்று அறிய புண்ணியத்தை கூட பெருக்கிக் கொள்ளலாம் என்பேன் அப்பனே!!!! 

முதலில் எண்ணத்திலிருந்தே கர்மா தோன்றுகின்றது என்பேன் அப்பனே !!! அவ் எண்ணத்தை நன்கு மாற்ற மாற்ற அப்பனே புண்ணியம் பெருகிக்கொண்டே போகும் அப்பனே மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே போகும்!!!

எண்ணத்தை கீழ்த்தரமாக ஆக்க ஆக்க கர்மம் சேர்ந்து கொண்டே போகும் அப்பனே கீழ்தரமாகவே போய்விடுவார்கள் மனிதர்கள்!!! இப்படித்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அப்பனே!!!

நிச்சயம் பல பல மூலிகைகளையும் கூட அப்பனே யான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

காவேரி!!!..... அப்பனே இதில் கூட இந்த மூலிகைகள் அடங்கி!!!!! அப்பனே எதை என்று அறிந்து அறிந்து எவை என்று உணர்ந்து உணர்ந்து அப்பனே பின் சென்று கொண்டே இருக்கின்றது அப்பனே!!!! 

நிச்சயம் எவை என்றும் அறிந்தும் அறிந்தும் இன்னும் குற்றாலத்தில் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய அப்பனே ஓர் அப்பனே ஓர்""""""" நாக கன்னிகை """" எதை என்று அறிய அறிய அப்பனே அங்கு எதையென்று நீராடும் அனுதினமும் அதிகாலையிலே!!!!! அப்பனே அதாவது மூன்று மணி அப்பனே எதையென்றும் அறிய அறிய அப்பனே அங்கு நவ கன்னிகைகள் கூட அப்பனே எதை என்றும் அறிய அறிய பின் நீராடுவார்களப்பா!!!!!!!! 

இன்னும் எதையென்று அறிய அறிய அப்பனே பின் """" பாம்பின் கால் பாம்பறியும்!!!!!!! என்று ஒரு பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!!! 

எதையென்று அறிந்து அறிந்து அப்பனே அங்கு நீராடும் பொழுது அப்பனே ஊர்ந்து செல்கின்றது அது பல ஆண்டுகளாக காணப்படுகின்றது. அப்பனே அப் பாம்பு எதை என்று அறிய அறிய அது ஊர்ந்து செல்லும் பொழுது அப்பனே சிறிது....... ""'""'கக்கும்!!!!! 

அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே அது """""" விஷேசமானது """""" அங்கே கலக்கின்றது!!!!!  அதனால்தான் அப்பனே பின் எதை என்று நதியில் அதாவது குற்றாலத்தில் ஓடுகின்ற எவை என்று அறிந்து அப்பனே நிச்சயம் பின் பார்த்து கொள்ளுங்கள்!!!! 

அங்கே நீராடும் பொழுது அப்பனே பின் மேலிருந்து படுகின்ற பொழுது அப்பனே சில மாற்றங்கள் உருவாகும் என்பேன் அப்பனே!!!!!! 

எதை என்று அறிய அறிய அப்பனே அங்கே பின் தாராளமாக பின் தலையில் நுழையும் பொழுது கூட அப்பனே மாற்றங்கள் அப்பனே கண்ணுக்கும் அப்பனே எதை எதை என்று அறிய அறிய அப்பனே ஏராளமான விஷயங்கள் மறைந்து கொண்டு எதை என்று அறிய அறிய....மறைத்தும் விட்டனர் அப்பனே!!!

அதனால் தான் குற்றாலத்திலே யான் இருக்கின்றேன் அழகாகவே அப்பனே !!!!!

அங்கெல்லாம் அப்பனே யான் எதை என்று கூட ஒரு மடத்தை அமைத்து பல மனிதர்கள் எதை என்று அறிய அறிய ஒரு காலத்தில் அப்பனே இந்திரனும் சந்திரனும் அங்கு வந்து எதை என்றும் அறிய அறிய அப்பனே பல வினைகளை தீர்த்து கொண்டான் அதாவது இந்திரனுக்கு சாபம் இருந்த பொழுது அப்பனே எதை என்று ஒரு காலத்தில் அப்பனே பின் கண் எதை என்று கால்களையும் இழந்து விட்டான்!!!!!

எதை என்று அறிய அறிய ஆனாலும் அப்பனே பின் எவையென்று புரிய அப்பனே அவந்தனுக்கு மோட்சம்எதையென்று ஆனாலும் அப்பனே மறுபிறவி வேண்டும் என்று எண்ணி அழகாக பிறந்தான்

ஆனாலும் அப்பனே பின் எதை என்று உணராமலே ஆனாலும் பின் மூளை பின் சற்று குறை( மூளைகுறைபாடு நோய்) அப்பனே அவை மட்டும் இல்லாமல் அப்பனே கண்களும் குறை( குருட்டு தன்மை, செவிட்டுதன்மை) காதுகளும் குறை இவையெல்லாம் தீர்ப்பதற்கு அப்பனே எதையென்று அறிய என்னை நாடி நாடி வந்து அப்பனே யான் இங்கே பின் பல தண்ணீர்களையும்( தீர்த்தம்) தண்ணீர் எதை என்று அறிய அறிய பல மூலிகைகளான அப்பனே கொடுத்து எவை என்றும் உணர்ந்து உணர்ந்து பின் நோய்களை குறைத்தேன்!!!!!

இதனால் அப்பனே அவந்தன் கூட அப்பனே அனைத்தும் சரியாகி ஒரு பதவி வகித்தான் அப்பனே அதை அனைவரும் உணர்ந்ததே!!!! 

அதனால் அப்பனே சற்று தாமதிக்காமல் அப்பனே யாங்கள் எதையெதை என்று சொல்வோம்... அவையெல்லாம் நிச்சயம் சரியாக கடைப்பிடித்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் தான் உண்டு!!!!

அதாவது அப்பனே எந்தனுக்கு எதை என்று அறிய அறிய அப்பனே பின் வேலைகள் பளு அதிகம் என்பதைக் கூட அப்பனே எதை என்று எங்களால் முடியவில்லை என்பதாயினும் நிச்சயம் யோசித்துப் பார்!!!!!!

அனைத்தும் உன்னால் அதாவது மனிதனிடத்தில் அனைத்தும் கொடுத்திருக்கின்றான் இறைவன் அப்பனே!!!!!

ஆனால் அதை சரியாக பயன்படுத்துவதில்லை அப்பனே எதை எதை என்று அறிய அறிய ஆனாலும் சரியாக பயன்படுத்தி விட்டால் அவன் அனைத்தும் எதை என்று அறிய அறிய அப்பனே ஆளலாம் என்பேன். ஆனால் கர்மா எப்பொழுதும் அப்பனே விட்டு விடுவதே இல்லை !!!!.......

ஆனாலும் கர்மா எதை என்று அறிந்து அறிந்து அப்பனே பின் வந்து கொண்டிருந்தாலும் எதிர்நோக்கி அப்பனே அதாவது இதன் தன்மையையும் கூட எப்படி எது என்று அறிய அறிய அப்பனே ...""மீனை""""" போலே அப்பனே நிச்சயம் பின் மேல்நோக்கி தான் செல்ல வேண்டும் நீரில் கூட.......  அப்பனே!!!!

பின் இறங்கும்போது "" மீன்!! மேல்நோக்கி செல்லும் அப்பனே இவ்வாறு கர்மா தன்னை பிடித்து கொள்ளும்  பொழுது மேல் நோக்கி செல்ல வேண்டும் அப்பனே!!! 

மனிதன் அதாவது எப்படி செல்ல வேண்டுமென்றால் திருத்தலங்களை கூட நாடி பல புண்ணிய நதிகளில் கூட நீராட வேண்டும்!!!!

ஆனால் கர்மா விடாது என்பேன் அப்பனே!!!!

வேண்டாம் என்பது........ ஏன் திருத்தலத்திற்கு போக வேண்டும்???????????

எதை என்று ஏன் புண்ணிய நதிகளில் பின் நீராட வேண்டும் ???????? என்பவை எல்லாம் அப்பனே பின் மனதிற்குள் வரும் அதுதானப்பா!!!!! கர்மா!!!!!

ஆனால் மீன் போன்று அப்பனே பின் மேல் நோக்கிச் சென்றால் அப்பனே பின் இறைவனே எதை என்று அறிய அறிய இவன் தைரியமாக அனைத்தும் எதை என்று அறிந்து அறிந்து பார்க்கின்றான் என்று கூட கர்மத்தை நிச்சயம் பின் நீக்குவோம் !!!!! நீக்குவான்!!! என்பேன்!!!!

அப்பனே இதை அறிந்து இதை அறிந்து அப்பனே செயல்பட வேண்டும்!!!!! எதை என்று அறிய அறிய இன்னும்  இன்னும் அப்பனே இவற்றின் தன்மைகளிலிருந்து வந்து வந்து அப்பனே எங்கெல்லாம் சக்திகள்!!!! 
எதையென்று அறிய அறிய அங்கெல்லாம் யான் வந்து பல பல மடங்களையும் கூட அப்பனே பல பல வழிகளிலும் கூட ஆலயங்களை கூட எழுப்பினேன் அப்பனே!!!!!! 

இன்னும் அதை எதை என்று அறிய அறிய இன்னும் சக்திகள் வருங்காலங்களில் கூட்டுவேன்!!!!!!!! 

அப்பனே நலன்களாக நலன்களாக ஆசிகள் ஆசிகள் அப்பனே நலன்களாகவே யான் இங்கே தான் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே எங்கேயாவது இருப்பேன்!!!!

ஆனால் ஒரு பிடித்த இடம் அப்பனே இங்கே தான் எதை என்று அறிந்து அறிந்து அதனால் அப்பனே நன்மைகளே ஆகட்டும் ஆகட்டும் மீண்டும் வந்து உரைக்கின்றேன் அப்பனே இன்னும் பல திருத்தலங்கள் பற்றியும் இன்னும் ஏராளமான திருத்தலங்களை பற்றியும் கூட அப்பனே நிச்சயம் சிறிது சிறிதாக பின் உரைப்பேன் என்பேன் அப்பனே பின் தொடர்ச்சியாகவே அப்பனே இன்னும் பன்மடங்கு இருக்குதப்பா!!!!!!!!!!!!!!!!!!! 

எதையென்று அறிய அறிய அப்பனே வரலாறும் கூட அப்பனே!!!!!!!!! 

இவைதனை உணர்த்தி விட்டால் அப்பனே மனிதன் நிச்சயம் மெய்சிலிர்த்து போவான் அப்பனே!!! 

இன்னும் வாக்குகள் காத்துக் கொண்டிருக்க!!!!!!!

என்னுடைய ஆசிகள் !!!!! நலம்!!!

ஆலயம் மற்றும் விபரங்கள் 

பிரம்மகிரி மலையின் மீது கடல் மட்டத்திலிருந்து 1276 மீ உயரத்தில் உள்ள இந்த ஸ்தலம் காவேரி ஆறு உற்பத்தி ஆகும் இடம். கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம்( கூர்க்) மடிகேரி தாலுகா பாகமண்டலாவில் உள்ள காவிரியின் பிறப்பிடமான தலைக்காவிரி உள்ளது.

ஓம் ஸ்ரீலோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Monday, 27 March 2023

சித்தன் அருள் - 1312 - அகத்தியப்பெருமான் உத்தரவில் கிடைத்த அனுபவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சித்தன் அருள் - 1301 - பொதுவாக்கு - 4 இல், 38வது கேள்வியின் பதிலில் கூறியது போல் ஒரு அகத்தியர் அடியவர், குருநாதர் சொல்படி ஒருநாள், திருவண்ணாமலையில், பிக்க்ஷை எடுத்து அவர் கூறியதை, குருநாதரின் அருளால் நிறைவேற்றினார். குருநாதர் 10 நாட்கள் பிக்க்ஷை எடுக்குமாறு கூறியிருந்தாலும், அவரின் அருளுடன் ஒரு நாளிலே, மிகுந்த அனுபவங்களுடன் திருப்தியாக, இயலாதவர்களுக்கும், சாதுக்களுக்கும் அன்னம் அளித்து, அன்று பிரதோஷ காலமாக இருந்ததால் கிரிவலமும் சென்று, மிக மனத் திருப்தியுடன் குருவின்-இறைவனின் அருளைப்பெற்றார். அவர் அகத்தியப்பெருமானிடம் கேட்ட கேள்வியும், அதற்கு அவர் அளித்த பதிலும் கீழே தரப்பட்டுள்ளது. 

கேள்வி:-

38. . ஒரு கட்டத்திற்கு மேல், அனைத்துமே குருநாதர் மட்டுமே என்று நன்கு உணர்ந்த பின்பு, ஆலயம் செல்வது கூட வேண்டாம் என்ற மனநிலை வந்துவிட்டது. இறைவனே குருவாய் இருக்கும்போது, குருநாதர் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டு தானே இருப்பார். மனதால் இறைவனை நினைக்கின்றோம். குரு கூடவே இருந்து வழிநடத்துகின்றார். இதன் பொருட்டு அகத்தியர் அடியார்களுக்கு குருநாதர் உணர்த்தும் அறிவுரை ஐய்யா.

குருநாதரின் பதில்:-

எதை என்று அறிய! அறிய! மனதை தொட்டுச்சொல், எதை என்று அறிய! அறிய! ஏதும் தேவை இல்லை என்பது, ஒரு பத்து நாட்கள், அண்ணாமலைக்கு சென்று பிச்சை எடுக்கச் சொல், நிச்சயம், யானே வந்து பிச்சை இடுகின்றேன், அங்கு.

அன்றைய தினம் நடந்த நிகழ்ச்சிகளை.அவருக்கு கிடைத்த அனுபவத்தை அவர் சொன்னபடியே உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

"திருவண்ணாமலைக்கு சனிக்கிழமை (18.03.23), மாலை புறப்பட்டேன். ஞாயிற்றுக் கிழமை அதிகாலை 2.30 மணிக்கு சென்றடைந்து, சற்று நேரம் ஓய்வெடுத்து பின் கோவில் திறந்தவுடன் சுவாமியையும், அம்பாளையும் முதலில் தரிசனம் செய்து, அம்மை அப்பரின் அருளைப்பெற்று, பின்பு குருநாதர் அண்ணாமலையில் செய்யச் சொன்ன கைங்கரியத்தைச் செய்து, அன்று பிரதோஷமானதால், மாலை பிரதோஷ காலத்தில் கிரிவலம் போகலாம் என்று தீர்மானித்தேன்.

அம்மை அப்பனிடம், நம் குருநாதர் எப்போதும் தன் அடியவர்களுக்கு சொல்லும் தர்ம காரியமான இயலாதவர்களுக்கும் , உடல் ஊனமுற்றோர்களுக்கும் , வயது முதிர்ந்து கூன் இட்டு நடப்பவர்களுக்கும், தேடிச்சென்று தர்மம்  செய்யுங்கள் என்று உரைப்பதை மனதில் கொண்டு, இவர்கள் போன்றவர்களுக்கு “அன்னம் பாலிக்க வேண்டும்" என்ற குருநாதரின் அறிவுரையையும், "அண்ணாமலையில் பிக்க்ஷை எடு" என்ற உத்தரவையும் கூறி விண்ணப்பமிட்டு, மானசீகமாக அருள் வாங்கி, உண்ணாமுலை அம்மையின் சன்னதிக்கு வெளிப் பிரகாரத்தின் முன்பு வந்து நின்றேன்.

அங்கு இருந்த கோவிலில்  பணி  செய்யும் ஒரு ஊழியரிடம், விஷயத்தைக் கூறி, எதற்கும் அனுமதி பெற்று விடலாம் என்று கேட்க, அவர்களும் " நீங்கள், மடிப்பிச்சை எடுப்பதானால், இங்கு நிற்க வேண்டாம், ராஜ கோபுரத்தின் முன்பு செல்லுங்கள், இங்கு கோவிலுக்குள்  நிர்க்கக்கூடாது!” என்று கூறினார்கள்.

திருவண்ணாமலை கோவிலுக்கு அடிக்கடி செல்வதால், எனக்குத் தெரிந்த ஒரு ஐயா அங்கு இருந்தார். அவர் "அம்மா! நீங்கள் வெளியே எல்லாம் போக வேண்டாம், நீங்கள் பெரியநந்திக்கு அருகில் (ஒரு இடத்தைக் குறிப்பிட்டு), இங்கு நில்லுங்கள் என்று கூறினார். நான் அவர் கூறியதை மனதில் கொண்டு, அருணகிரிநாதருக்கு, முருகர் காட்சி கொடுத்த சன்னதிக்கு நேரே, முருகனையும் பார்த்தவாரு, ரமணமகரிஷி அமர்ந்த பாதாள லிங்கத்திற்கு செல்லும் படியில் நின்று கொண்டேன்.

அவர் கூறியபடியே அங்கு நின்று, மடிப்பிச்சை எடுத்தேன். மடிப்பிச்சை எடுக்கும் பொழுது, சற்று பதட்டமாகத்தான் இருந்தது. என்ன? அப்பா (அகத்தியப்பெருமான்) வருவாரா? இந்த அடிநாய்க்கு குருநாதர் நேரில் வந்து பிச்சை இடுவாரா என்று? - என்ற எண்ணம் எல்லாம் மனதுள் ஓடிக்கொண்டிருந்தது.  பிரார்த்தனையாக, குருநாதரின் மந்திரம் மட்டுமே   சொல்லிக் கொண்டிருந்தேன்.

இது என்னவோ ஒரு பெரிய திருவிளையாடல் என்றுதான் தோன்றியது. பிச்சை எடு என உத்தரவிட்டது அகத்தீசப்பா என்றாலும், பிச்சையை போட்டது, அண்ணாமலையார்தான் என்று எனக்குத் தோன்றியது. அப்பனின் அனுமதியும் அருளும் இல்லமால், எங்கும் எதுவும் நடக்காது. ஸ்வாமியின் அருளினால், ஏறக்குறைய இரண்டு மணி நேரம் தான் நின்றிருப்பேன். பார்த்தீங்கன்னா, 2339 ரூபாய் பிட்சைதானமாக விழுந்தது. இது மிகப்பெரிய “ஆச்சரியம் மற்றும் அற்புதம்” என்று தான் சொல்லவேண்டும். காரணம், ஒரு க்ஷணத்தில் சுவாமி இவ்வளவு பெரிய தொகையை கொடுத்துவிட்டாரே என்று.

குருநாதர் வாக்குரைத்த அன்றே முடிவு செய்துவிட்டேன். என் விதியின், பயனால், பத்து நாட்கள் முடியாவிட்டாலும், அப்பா சொன்னதை வழிமொழிய, ஒரு நாளாவது பிச்சை எடுக்க வேண்டும் என்று விரும்பி, “அப்பாவிடம் அப்போதே மானசீகமாக கூறிவிட்டேன், ஒரு நாளாவது எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுங்கள்” என்று. இந்த வாய்ப்பை கொடுத்த அருணாச்சலப் பெருமானுக்கும், அபிதகுஜாலாம்பாள் அன்னைக்கும், மிக அற்புதமாய் வழிநடத்திய நம் குருநாதருக்கும், லோபாமுத்ரா தாய்க்கும் கோடான கோடி நன்றிகளையும் நமஸ்க்காரங்களையும் சொல்லிக்கொண்டேன்.

இதற்கு முன் திருச்செந்தூரில் இதே போல பிட்ச்சை எடுத்த போது, அதை காணிக்கையாக முருகன் திருவடியில் கோவில் உண்டியலில் போட்டு விட்டேன். அப்பொழுது, தெரியவில்லை எனக்கு. குருநாதரின் அறிவுரைகளை சித்தன் அருளில், படிக்கத்தொடங்கிய காலம் முதல், எப்பொழுது, இந்த மாதிரி பிட்சை எடுத்தாலும், அன்னம் பாலிப்புக்குத்தான் கொடுக்க வேண்டும் என்று ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.

ஆகவே, இந்த முறை இயலாதவர்களுக்கும், உடல் ஊனமுற்றோர்களுக்கும், வயது முதிர்ந்து கூன் இட்டு நடப்பவர்களுக்கும், தேடிச்சென்று அன்னம் பாலிக்க வேண்டும் என முன்னரே தீர்மானித்தேன். 

இந்த முறை அகத்தீசப்பா, என்னை அழவைத்து, அவர் திருவடி பிச்சைக்காக காத்திருக்கும் இந்த அடிநாயை, ஆனந்தக்  கண்ணீரில் திக்கு முக்காட வைத்துவிட்டார், என்பதுதான் உண்மை. எனக்கு, அப்பொழுது நடந்ததை நினைக்கும் பொழுதே நாடி நரம்புகள் அடங்கிப்போய் ஒருவித பதட்டம் வருகிறது. குருநாதர் நிகழ்த்திய அந்தத் தருணத்தில், நான் என் நிலையில் இல்லை என்பதை உணர்ந்தேன்.

பாதாளலிங்க கோவில் முன் மடிப்பிச்சை ஏந்தி நின்று கொண்டிருந்தேன். உள்ளே செல்பவர்கள், 1,2,5,10,20,50,100,200 என, இரண்டு கைகளையும் ஏந்தியவாறு நீட்டி நின்ற முந்தானை தலைப்பில் காணிக்கை போட்டுவிட்டு சென்றனர்.

தர்ம காரியங்கள் செய்யும் போது, எதையும் எதிர்பார்க்காமல் இருக்கவேண்டும் என்று அகத்தீசப்பா கூறியிருந்தாலும், ஏதோ ஒரு உந்துதலால், பிட்ச்சை போட்ட ஒவ்வொருவரையும் அவர்கள் முகத்தை நோக்கி, இவர் அகத்தீசப்பாவாக இருப்பாரோ? என்று ஆவலில் பார்த்தேன். நான் அவரை பார்க்க முடியாது, அந்த அளவுக்கு எனக்கு ஞானமும் கிடையாது! ஆனால் அவர் என்னை பார்ப்பார் இல்லையா! என்பதற்காக, எதிர் பார்ப்போடு இருந்தேன்.

அப்பொழுது, ஒரு அய்யா வந்தார். கழுத்தில் ருத்ராட்சம் போட்டிருந்தார். ரமணர் கோவிலுக்குள் சென்றார். தரிசனம் முடித்து, திரும்பி வேகமாக வெளியே வந்தவர். தன் மணிபர்ஸை திறந்து, சட்ரென்று, 500 ரூபாய் நோட்டை எடுத்து ஆசிர்வாதம் பண்ணுவது போல் கை உயர்த்தி போட்டுவிட்டு, நிற்காமல் சென்று விட்டார். மேலும் சாமானிய மனிதர்கள் 500 ரூபாய் பிச்சையிடுவது மிக மிக அறிது.

யார் பிட்ச்சை இட்டாலும், "குருநாதர் திருவடி சமர்ப்பணம்! அகத்தீசப்பா திருவடி சமர்ப்பணம்!" என்று கூறி, "ஓம் அகத்தீசாய நமஹ!", "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று கூறி, கீழே குனிந்து வணங்கி பணிந்துதான் அனைவரிடமும் கையேந்தி வாங்கினேன்!

ஆனால், இந்த அய்யாவோ, நான் வணங்குவதை பொருட்படுத்தாமல், ஒரு க்ஷணத்தில் சென்று மறைந்தார். நான் குனிந்து வணங்கி "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று சொல்லிக் கொண்டு, நிமிரும் போதே, அதற்குள் அவர் பெரிய நந்தியைக் கடந்து, விட்டார். நடையில் அத்தனை ஒரு வேகம். கோவிலுக்குள் செல்லும் படிக்கட்டு முன்பு வரை அவரைப் பார்த்தேன். எப்படி இவர் இவ்வளவு பெரிய தொகையைக் கொடுத்தார் என்ற வியப்புடன். எங்கு மறைந்தார் என்று யோசிக்க கூட முடியவில்லை. அவர் படியேறி ஆலயத்திற்குள் செல்வதை நான் பார்க்கவில்லை. இவ்வளவு வேகமாக அவர் சென்று விட்டாரா என்று சிந்தித்துக்கொண்டு இருந்தேன். அவர் தெரிகிறாரா! என்று தேடிப்  பார்க்க, அவர் இல்லை.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமasர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Sunday, 26 March 2023

அன்புடன் அருள் - 1311 - அன்புடன் அகத்தியர் - குக்கே சுப்பிரமணியர் கோவில்!






11/2/2023 அன்று குருநாதர் அகத்தியபெருமான் உரைத்த ஆலய பொதுவாக்கு வாக்குரைத்த ஸ்தலம் : குக்கே சுப்ரமண்யா ஸ்வாமி கோயில். கர்நாடகா 

ஆதி ஈசனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன்!!!!  

 அப்பனே எதை எதை யான் சொல்ல அப்பனே!!!!! நிச்சயம் என் மக்கள் அப்பனே எதை என்றும் உணராமலே வாழ்ந்து வருகின்றனர் அப்பனே!!!!

ஆனாலும் நிச்சயம் சித்தர்கள் யாங்கள் நிச்சயம் வழி வகுப்போம் அப்பனே மாற்றி அதாவது வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவோம்!!!

 அப்பனே ஆனாலும் வரும் காலங்களில் நோய்கள் அப்பனே பற்றிக்கொள்ளும்!! அப்பனே ஒவ்வொரு விதமான எதை என்றும் தெரியாமலே வரும் என்பேன் அப்பனே!!!!

ஆனாலும் சொல்வதெல்லாம் அப்பனே எதை என்று அறிய  அறிய யாங்கள் நிச்சயம் அப்பனே இப்படி நடக்கும் என்பதையும் கூட யாங்கள் ஏற்கனவே பல கணித்திருக்கின்றோம் அப்பனே!!!!

ஆனாலும் நிச்சயம் அவையெல்லாம் வரும் காலங்களில் அப்பனே பல  பயங்கரமான அப்பனே எதை என்று அறிய அறிய ஆனாலும் அவையெல்லாம் நிச்சயம் யாங்கள் நீக்கி!!!......  ஆனாலும் மனிதர்களுக்கு அதை உரைத்தாலும் அப்பனே மனதில் பயம் ஏற்பட்டு அப்பனே எதை என்று அறிய அறிய  அதனால் அப்பனே நிச்சயம் அது எவை என்று யான் சொல்ல ஆனாலும் அப்பனே அவையெல்லாம் மாற்றி அமைத்து நிச்சயம் நல்வாழ்க்கை யான் தருவேன் அப்பனே !!!! நலமாகவே இதனால் குறைகள் குற்றங்கள் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட அப்பனே நிச்சயம் வாழ்வில் பல மனிதர்களுக்கு கூட எல்லையில்லா மாற்றங்கள் வந்து கொண்டே தான் இருக்கின்றது !!!

ஆனாலும் பல மனிதர்களுக்கு எல்லையில்லா துன்பங்களும் கூட வந்து கொண்டே இருக்கின்றது அப்பனே!!!!

இவற்றிற்கெல்லாம் காரணம் எதை என்று அறிந்தும் அறிந்தும் கூட யான் எதை என்றும் அறிய!!!!

ஆனாலும் நிச்சயம் எப்படி எதை என்று அறிய அறிய எல்லையில்லா வருத்தங்கள் படுபவரை கூட யான் பார்த்துக் கொண்டே தான் இருக்கின்றேன் அப்பனே 

நிச்சயம் மனமிரங்கி  எதை என்று அறிய அறிய சித்தர்களுக்கு யான் செப்பியுள்ளேன் அப்பனே!!!!!

நிச்சயம் மாற்றி மாற்றி அப்பனே பின் வாழ்க்கை தரத்தை பின் நிச்சயம் சமமாகவே எடுத்துச் செல்வார்கள் என்பேன் அப்பனே!!!

 கவலை இல்லை அப்பனே!!!!

இன்னும் ஏராளமான பின் சித்தர்களும் எதை என்று அறிந்தும் அறிந்தும் சொல்வார்களப்பா!!!!!

 அதை பின்பற்றி கொண்டாலே நலம் நலம் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே அதை பின்பற்றுவதற்கும் புண்ணியங்கள் வேண்டும் என்பேன் அப்பனே!!!! அதனால்தான் சில சில ஆலயங்களுக்கும் கூட யான் செல்லச் சொன்னேன் அப்பனே!!!!! 

யாங்கள் அமைத்த பின்  ஆலயங்களுக்கு கூட அப்பனே சென்றால் சிலசில பரிசுத்தமான அப்பனே அடியில் இருக்கும் எதை என்று கூற சக்திகள் மேலேழும்பி எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அவந்தனை தாக்கும் பொழுது அப்பனே பின் நிச்சயம் மனது மாறும் என்பேன் அப்பனே!!!!!! தெளிவுகள் பெறும் என்பேன் அப்பனே!!!!! 

அப்பனே புத்தியில்லாத மனிதனாக ஏன் அலைகின்றாய்!???  அப்பனே!!!!

எதையென்று அறிந்து அறிந்து எதற்கும் ஆசைப்படக்கூடாது என்பேன் அப்பனே!!!!

அப்படி ஆசைப்பட்டால் கிரகங்களும் கூட உன்னை பிடித்துக் கொள்ளும் என்பேன் அப்பனே!!!!

அதனால்தான் பின் எதை என்று அறிய அறிய அப்பனே பின்  பின் ஆசைகளே வேண்டாம் அப்பனே!!!!!!!

நடப்பது நடக்கட்டும் என்று இருங்கள் அப்பனே போதுமானது !!!!

மற்றவையெல்லாம் யாங்களே வந்து வழிகாட்டுவோம் அப்பனே ஒருவன் ஆசைகள் இல்லாமல் இருந்தால் அப்பனே அவனை தேடி யாங்களே வருவோம் என்போம் அப்பனே!!!!!

ஆனால் ஆசைகள் அதாவது பேராசைகள் இருந்தால் அப்பனே கிரகங்களை பிடித்துக்கொண்டு அதாவது பின் ஆட்டும்!!!!

அப்பனே கிரகங்கள் சரியாக அவனை பிடித்துக்கொண்டு பிடித்துக் கொண்டு ஆடுகின்ற ஆட்டத்தை கூட பார்த்து பார்த்து அவந்தன் கடைசியில் இறைவன் இல்லை என்று நிலைமைக்கு வந்து விடுவான்!!!!

அப்பனே ஆசைகள் வேண்டாம் அப்பனே எதை என்றும் அறிந்து அறிந்து இறைவனை எதற்காக வணங்குகிறீர்கள் என்பதை கூட தெரிந்து வணங்கி நல்விதமாகவே உயர்வதற்கான வழிகள் அப்பனே நல் முறையாகவே மாற்றத்திற்கான வழிகள் யாங்கள் சொல்லிக் கொண்டே வருகின்றோம்.!!!!!

எங்களை பின்பற்றுபவர்கள் நிச்சயம் ஒரு அணுவளவும் குறைகள் வராது அப்பனே!!!!

எதை என்றும் அறிய அறிய யாங்கள் எடுத்துச் செல்வோம் அப்பனே நல் முறையாக நிச்சயம் வள்ளலாரின் நிச்சயம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அவனுடைய பின் நேர்மையையும் கூட எதை என்றும் அறிந்தும் அறிந்தும் உண்மையை கூட !!!!! அப்பனே நிச்சயம் அப்பனே கடைபிடித்து வந்தாலே அவன் சொல்லிய வார்த்தைகள் கேட்டாலே அப்பனே மனங்கள் மாறும் என்பேன் அப்பனே!!!!!!

அப்பனே யான் ஏற்கனவே சொல்லிவிட்டேன்!!!!! தெரியாமல் பிறந்து விட்டோம் இவ்வுலகத்தில் அப்பனே தெரிந்தும் வாழ வேண்டும் அப்பனே !!!!

இத்தெளிவு பெற வேண்டுமென்றால் அப்பனே வள்ளலார் வகுத்த பல பழமொழிகளை கூட எடுத்துக் கொள்ள வேண்டும் அப்பனே அது சரியானதாக பின் அப்பனே என்று கூட பல மொழிகளாகவும் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் வாழ்க்கையின் தத்துவத்தை மேம்படுத்துவதற்காகவும் நிச்சயமாய் அப்பனே அறிந்து அறிந்து எதை என்று செயல்பட்டு அப்பனே கொண்டே தான் இருக்கின்றது அப்பனே நலமாகவே!!!!

அதனால் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அப்பனே அறியுங்கள் வாழ்க்கை தத்துவத்தை கூட !!!!!

அப்பனே ஆசைகளில் மூழ்காதீர்கள்!!! மூழ்காதீர்கள் அப்பனே!!!!

ஆசைகளில் மூழ்கினால் அப்பனே மீண்டும் மீண்டும் அப்பனே எதை என்று அறிய அறிய சொல்கின்றேன்!!!!

கிரகங்கள் தன்னை பிடித்துக் கொண்டால் அப்பனே எதை என்று அறிய நிச்சயம் கஷ்டங்கள் எதை என்றும் அறிய அறிய!!!

அதனால் அப்பனே இறைவா நீயே!!!! நீயே படைத்தாய்!!!! உன்னால் அனைத்தும் செய்ய தெரியும் என்று நிலைமைக்கு வாருங்கள் அப்பனே !!!

அனைத்தும் செய்வான் அதை விட்டுவிட்டு அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் சில மனிதர்கள் கூட அப்பனே இறைவனை காண வேண்டும் என்று எண்ணுகின்றார்கள் அப்பனே!!!! 

வள்ளலார் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிந்தும் அளவிற்கு கூட பின் பல ரகசியங்கள் கூட இறைவனிடத்தில் சொன்னான் அப்பனே எதற்காக என்றெல்லாம்

இன்னும் தெரியப்படுத்தவில்லை அவை எல்லாம் வரும் காலங்களில் யான் தெரியப்படுத்துகின்றேன் அப்பனே!!!

ஆனாலும் அவன் சுற்றிய அப்பனே திருத்தலங்கள் அப்பனே ஏராளம் ஏராளம்

பின் இறைவனை பார்த்து விடுவோம் என்ற ஏக்கம் அப்பனே அவன் மனதில் இறைவன் நினைப்பை தவிர வேறு ஒன்றும் இல்லையப்பா!!!!!

ஆனாலும் அறிந்து அறிந்து அப்பனே ஆனாலும் ஒரு பிறவியில் இன்னொரு பிறவியில் கூட அப்பனே எதையென்று அறிய அறிய இன்னும் கூட உடம்பில்லாமல் வாழ்ந்து வருகின்றான் அப்பனே!!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அவற்றின் தன்மைகளை புரிய புரிய ஆனாலும் கடைசியில் அப்பனே இறைவன் அப்பனே இறைவன் எங்கு தரிசனம் ஆனாலும் ஜோதி வடிவமாக சென்றுவிட்டான்!!!!

அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் நீங்கள் அறிந்தவைகளே!!!!! 

அப்பனே இறைவன் எப்படி வேண்டுமானாலும் எதை என்றும் அறிய அறிய இறைவன் நினைப்பாகவே இருந்தால் அப்பனே நிச்சயம் தரிசனங்கள் இறைவனே நிச்சயம் கொடுப்பான் !!!!! அப்பனே எதை என்றும் அறிய அறிய

இதனால் அப்பனே நீங்கள் எதை எதை ஆசைப்படுகின்றீர்களோ அப்பனே ஆனால் நிச்சயம் துன்பங்களாயின் அப்பனே யாம்தனக்கு தெரியும் ஆனாலும் அதை நிச்சயம் நீக்கிவிடும் சக்தி என்னிடத்திலே உள்ளது!!!!

அப்பனே எதை என்று அறிந்து அறிந்து அதனால் நிச்சயம் அப்பனே எதை என்று அறிய அறிய நீங்கள் எதைக் கேட்டாலும் அதன் மூலம்  கர்மா என்றால்  அப்பனே அதனை நிச்சயம் யான் கொடுத்து விடமாட்டேன்!!!! கொடுத்து விடமாட்டேன்!!!!!  சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

ஆனால் உங்களுக்கு தெரியாது அகத்தியன் கொடுக்கவில்லையே இறைவன் கொடுக்கவில்லையே என்றெல்லாம் புலம்புகின்றீர்கள்!!!!! 

ஆனாலும் அப்பனே நிச்சயம் கர்மம் சேராமல் எதை நீங்கள் கேட்கின்றீர்களோ அதைத்தான் யான் கொடுப்பேன் ஆணித்தரமாக சொல்லிவிட்டேன் அப்பனே!!!!!

அதனால் எதை என்றும் அறிய அறிய என்னிடத்தில் என்னிடத்தில் அதை இவை என்று அறிய கஷ்டங்கள் என்று அறிய பின்  தொல்லைகள் என்று அறிய பின் நோய்கள் என்று அறிய அப்பனே இவையெல்லாம் நிச்சயம் கலியுகத்தில் வந்து கொண்டே இருக்கும்!!!!

அப்பனே எதை என்று அறிய அறிய யான் சொல்லியதை சரியான முறையில் பயன்படுத்தி வந்தால் அப்பனே நிச்சயம் குறைகள் வராதப்பா!!!!!
வராதப்பா!!!!! 

பல மூலிகைகளை கூட பல வாக்கியத்தில் கூட பல சித்தர்கள் செப்பி  விட்டார்கள் அப்பனே!!!!!

அதனை எல்லாம் பயன்படுத்திக் கொண்டு வந்தாலே அப்பனே நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும் அப்பனே!!!

தன் இல்லவள்( மனைவி) எதை என்று அறிய அறிய நன்றாக தன் பிள்ளைகள் நன்றாக அப்பனே  இன்னும் சொந்த பந்தங்கள் நன்றாக நன்றாக அப்பனே  இவையெல்லாம் எதற்கு அப்பனே கர்மா தான்!!!

அப்பனே மற்றவர்கள் என்னை மற்றவர்களை எதை என்று அறிய அறிய அப்பனே மற்றவர்களையும் கூட அப்பனே அவர்களைப் பற்றி வேண்டு!!!!!!

அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று எண்ணு!!!!! 

அப்பனே நலமாகவே தான் தன் மனைவியும் எதை என்று அறிய அறிய தன் பிள்ளைகளும் நன்றாக இருப்பார்கள்.!!!

அதை விட்டுவிட்டு அப்பனே எதை என்று அறிய எங்களிடத்தில் எதை என்று அறிய எந்தனுக்கு சந்தோசம் இல்லையே!!!! மணம் ஆகவில்லையே!!!! அதாவது குழந்தைகள் இல்லையே எதை  எதை என்று அறிய அறிய அப்பனே அனைத்தும் பின் வகுக்கப்பட்டது !!!!!

அதாவது நீயே ஏற்படுத்திக் கொண்டவை தான் என்பேன் அப்பனே!!!!

இதனால் அப்பனே பின் ஏற்கனவே சொல்லிவிட்டேன் அப்பனே இன்னும் பெரியோர்கள் கூட தன் நிலைமைக்கு தானே காரணம் என்ற பழமொழியும் உண்டு என்பேன் அப்பனே!!!! 

இதை நன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் அப்பனே!!!!

தன் நிலைமை என்னவென்று கூட யான் அறிவேன் அப்பனே!!!! நீ என்னென்ன எதை எதை என்று அறிய அறிய என்னென்ன தவறுகள் செய்திருக்கின்றாய் என்பதை கூட உன் மனதை அதாவது மனசாட்சிக்கு எதை என்று அறிய அறிய பயப்படாமல் அப்பனே யான் புண்ணியவான் என்று நிச்சயம் என்னிடத்தில் உரை!!!!!! 

அதாவது சித்தர்களிடத்தில் அப்பனே!!! இவ்வாறு வேண்டிக்கொண்டால் அப்பனே நீ என்னென்ன ??கர்மம்??? செய்தாய்?? என்பதை கூட அதுவும் கூட இக்காலத்திலும் கூட என்னென்ன??? செய்தாய்??! என்பதை கூட அப்பனே யான் சொல்வேன் அப்பனே 

அப்பொழுது நிச்சயம் அப்பனே தண்டனைகள் உண்டு அப்பனே!!!

யான் எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்று புரிய புரிய அப்பனே சொன்னாலும் நிச்சயம் நீ தலைகுனியத்தான் போகின்றாய்!!!  அப்பனே 

அதனால் அப்பனே எதைக் கேட்க வேண்டுமோ அதை கேளுங்கள் அப்பனே நலமாகவே!!!!

இவ் உலகத்தில் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட செப்பிக்கொண்டே யுக யுகங்களாகவை பல  மனிதர்களுக்கு வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்து கொண்டே அப்பனே எதை என்று அறிந்தும் அறிந்தும் சொல்லிக் கொண்டு வருகின்றோம் சித்தர்கள்!!!! யாங்கள்!!! 

புவி தன்னில் பிறக்க வேண்டாம் !!!!! புவி தன்னில் பிறக்க வேண்டாம் என்றெல்லாம் ஆனால் மனிதனோ யாங்கள் இங்குதான் பிறக்க வேண்டும் கஷ்டத்தை அனுபவிக்க வேண்டும் என்றெல்லாம் பிறந்து பிறக்கின்றார்கள் அப்பனே அப்படி பிறந்து கூட அப்பனே சந்தோஷம் இல்லாமல் வாழ்கின்றார்கள் அப்பனே!!! 

சில காலம் துன்பம் சில காலம் இன்பம் அப்பனே 

ஆனாலும் இயலாதவர்களும் உண்டு!!! 

அப்பனே நிச்சயம் எதை என்று அறிய அறிய அனைவரும் கர்மாவிற்காகவே பிறந்தவர்கள் அப்பனே!!!! கர்மத்தை அனுபவித்து கொண்டே இருக்கின்றார்கள் அப்பனே!!! 

ஆனால் எத்தகுதி யாரிடம் இருக்கின்றதோ அப்பனே சில மனிதர்களுக்கு கூட யாங்கள் நிச்சயம் அக் கர்மத்தை நீக்கும் சக்தி கொடுப்போம்!!!!!

அவர்கள் தான் அதை நீக்கிவிட வேண்டும் அப்பனே !!!!

மற்றவர்கள் அதை நீக்கிவிட்டால் அப்பனே கர்மா அவனை எதை என்று அறிய அறிய துரத்தி துரத்தி அடிக்கும் என்பேன் அப்பனே!!!!! 

இதனால் அப்பனே எதை என்று கூட சரியாக சொல்லுங்கள் அப்பனே பொய் பேசாமை அப்பனே பக்திக்குள் நுழைந்து விட்டால் உண்மையாக இருங்கள் அப்பனே!!!! நலமாகவே நலமாகவே 

அப்பனே நிச்சயம் இறைபலங்கள் பற்றியும் கூட இன்னும் எங்கெங்கு எதை என்று அறிய அறிய யாங்கள் எதை என்று கூட எங்கெங்கு சென்றோமோ!!!!!! அங்கெல்லாம் நிச்சயம் மனிதர்களுக்கு வழி வகுத்து விடுவோம் அப்பனே!!!!!! 

ஆனால் நிச்சயம் ஏற்றுக் கொண்டால் அப்பனே நிச்சயம் பின் நீங்கள் கேட்டீர்களே!!!!! அனைத்தும் கிடைக்கும் அப்பனே!!!! 

எதையென்றும் அறிய அறிய அப்படி இல்லை என்றாலும் அப்பனே பின் எதை என்று அறிய அறிய அப்பனே!!!!! தோல்வியில்தான் முடியும் என்பேன் அப்பனே!!!!

இவைதன் பல வாக்குகளில் நான் சொல்லிவிட்டேன் அப்பனே!!!

ஏதோ எதை என்று அறிந்து அறிந்து அகத்தியன் சொல்கின்றான் என்று விட்டுவிடுவதும் உண்டு!!!! என் பக்தர்களும் இதுபோலத்தான் செய்கின்றார்கள் அப்பனே 

ஆனாலும் அப்பனே எதை என்றும் அறிய அறிய யான் சொல்லியிருக்கின்றேன் அப்பனே கர்மாவை எதை என்று அறிய அறிய அதாவது பல சித்தர்களும் கூட சொல்லிவிட்டார்கள் அப்பனே
கர்மாவை தேடி தேடி அலைந்து திரிந்து கர்மத்தை சம்பாதித்து கொண்டிருக்கின்றான் மனிதன்!!!!

ஆனாலும் புண்ணியங்களை தேடி தேடி சேர்க்க முடியவில்லையே!!!!  அப்பனே எதை என்று அறிய அறிய அப்பனே  புண்ணியங்களையும் கூட தேடித்தேடி தான் நிச்சயம் சேர்க்க வேண்டும்

கர்மத்தை தேடி தேடி சேர்க்கின்றாயே அதைபோலத்தான் அப்பனே புண்ணியங்களை கூட தேடி தேடி நிச்சயம் சேர்க்க வேண்டும்

அப்படி சேர்த்து விட்டால் அப்பனே வாழ்க்கையில் ஒரு குறையும் வராது என்பேன் அப்பனே!!!!! 

அப்பனே நீங்களே யோசியுங்கள் அப்பனே!!!!!

எவ்வாறு புண்ணியம் செய்தீர்கள் அப்பனே மனதில் எதையெதையோ என்று அறிந்து அறிந்து எப்படியெல்லாம் பாவங்கள் செய்தீர்கள் பாவங்கள் செய்தீர்கள் அப்பனே வரும் காலங்களில் பாவங்கள் என்பதை கூட பட்டியலிட்டு காட்டுவேன் அப்பனே!!!!!!

அதைச் செய்தாலும் நிச்சயம் பாவங்கள் தான் அப்பனே!!!!  சண்டை, பிரச்சினைகள் போராட்டங்கள் மனக்குழப்பங்கள் இவைகள் தானே மனிதனை அழித்துவிடும் என்பேன். கொன்று விடும் என்பேன் அப்பனே கலியுகத்தில்!!!!!

அப்பனே கலியவன் சரியாக தெரிந்து கொண்டான் அப்பனே மக்களை திசை திருப்புவதற்கான வழிகள் அப்பனே போராட்டங்களை மனக்குழப்பங்களை சண்டைகளை கச்சரவுகளை அப்பனே எவை என்று அறிய அறிய!!!!!

அதனால் அப்பனே அது கூட அப்பனே கர்மா நிலைமைக்கு ஏற்பவே கிரகங்களும் கொடுத்து......அப்பனே

அதனால்தான் ஆசைகள் வேண்டாமப்பா!!!! ஆசைகள் வேண்டாமப்பா!!!  புவிதன்னில் பிறக்கவேண்டாமப்பா!!! பிறக்க வேண்டாமப்பா!!!! 

ஆனாலும் அதற்காகத்தான் யாங்கள் வந்தோம் மனிதனை புவியிலே நிச்சயம் பிறக்க வைக்க கூடாது புவியிலே பிறக்க வைத்து விட்டாலே பின் கஷ்டங்கள் கஷ்டங்கள்!!!

அப்பனே மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் அப்பனே எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட!!!! 

அதனால் அப்பனே நிச்சயம் அதனால்தான் பல திருத்தலங்களை கூட பின் இவ்வாறு அமைத்தால் அங்கு சென்று நிச்சயம் கர்மாக்களை அழித்துக் கொண்டு அப்பனே பின் பேரின்பம் எதை என்று அறிந்து அறிந்து!!!!

அப்பனே முக்திக்கும் வழி அப்பனே பின் மேலோகத்திற்கு சென்று விடலாம் அப்பனே

அதனால்தான் பின் எங்கெங்கெல்லாம் அப்பனே பின் புண்ணியங்கள் அதாவது பல பலங்கள் அதாவது சக்திகள் மிகுந்து அப்பனே கிரகங்களை கூட நட்சத்திரங்களை கூட அப்பனே பின் ஒளி அதிக அளவு படுகின்ற பொழுது கூட யாங்கள் நிச்சயம் அங்கே திருத்தலங்களை அமைத்துள்ளோம் என்போம் அப்பனே

இதனால் நிச்சயம் அங்கங்கு சென்று வந்தால் அப்பனே ஆனாலும் கர்மா கழியும் பொழுது அப்பனே கஷ்டங்கள் கூடிக்கொண்டே போகும் நடுவில் நிச்சயம் நிறுத்தக்கூடாது என்பேன் அப்பனே!!!! 

திருத்தலங்களுக்கு செல்லச் செல்ல கஷ்டங்கள் வரும் என்பேன் அப்பனே ஆனாலும் எதற்காக என்றால் கர்மம் கழிகின்றது என்றுதான் அர்த்தம் அப்பனே!!! 

ஆனால் அனைத்தையும் கழித்து விட்டால் அப்பனே புண்ணியங்கள் சேரும் என்பேன்!!!!

ஆனால் மனிதன் சிறிது தூரத்திற்கே அலைந்து திரிந்து விட்டால் அப்பனே ஆனாலும் யான் சென்றேன் பல திருத்தலங்களுக்கு ஆனால் கஷ்டங்கள் தான் மிஞ்சி விடுகின்றது என்று அமைதியாக இருந்து கொண்டு விடுகின்றான் அப்பனே

அதனால்தான் மீண்டும் அப்பனே அவ் பின் கர்மா கரைய அப்பனே அப்படியே தேங்கி நிற்கின்றது என்பேன் அப்பனே!!!

இதனால் நிச்சயம் அவனால் ஒன்றும் செய்ய இயலாது என்பேன் அப்பனே 

நிச்சயம் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே உப்பு கூட அப்பனே எதையென்று நீரில் இட்டால்தான் கரையும் என்பேன் அப்பனே!!!! 

மனிதனின் கர்மா அப்படித்தான் அப்பனே திருத்தலங்களுக்கு சென்று சென்று அப்பனே வாயில்லா ஜீவராசிகளுக்கு உணவு அளித்து அளித்து அப்பனே இயலாதவர்களுக்கும் உணவு அளித்து அளித்து ஏதாவது செய்து கொண்டே வந்தால் அப்பனே நிச்சயம் கர்மா கரைந்து விடும் என்பேன் அப்பனே!!!!

இது உண்மை சத்தியம்!!!

அப்பனே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் மூடத்தனமாகவே இருக்கின்றார்கள் மனிதர்கள் அப்பனே இன்னும் புரிந்து கொள்ளவில்லை அப்பனே அவையெல்லாம் நிச்சயம் யாங்கள் எடுத்துச் சொல்வோம் அப்பனே..

எதை என்று அறிய அறிய அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய ஆனாலும் எதை என்றும் உணர்ந்து உணர்ந்து அப்பனே சில காலங்கள் எதையென்று அறியாமலே நிச்சயம் மனிதன் வாழ்ந்து வந்து விட்டான் அப்பனே!!!! 

ஆனாலும் இனிமேலும் தெரிந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் அப்பனே 

நிச்சயம் எதை என்று அறிய அறிய அப்பனே அப்படி இல்லை என்றாலும் நிச்சயம் பெரிய பெரிய கஷ்டங்கள் எதை என்று அறிய அறிய வந்து கொண்டே இருக்கின்றது இவ்வுலகத்தில் அப்பனே 

நலமாகவே வாழுங்கள் அப்பனே என்னுடைய ஆசிகள் அப்பனே சித்தர்களின் ஆசிகள் அப்பனே சித்தர்கள் அப்பனே கொடுக்க தயாராகிக் கொண்டே இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே!!!!

ஆனால் மனிதன் கேட்கக் கூடாதவை எல்லாம் கேட்கின்றான் அப்பனே!!! 

அதனால்தான் எங்களுக்கு எதை என்று அறிய அறிய கோபங்கள் மனிதன் மீது அதனால் அப்பனே எவை என்று அறிய அறிய அப்பனே அதனால் பரிசுத்ததோடு இருங்கள் உண்மையை பேசுங்கள் அப்பனே இயலாதவர்களுக்கு இப்படி செய் இப்படி கடந்து செய் இப்படி சென்றால் நலமாகும் என்று அப்பனே 

வேண்டாம் அப்பனே எதற்கும் ஆசைப்படாதீர்கள் எதற்கும் ஆசைப்படாதீர்கள் என்பேன் அப்பனே!!!

ஆனாலும் பின் இதை பார்க்கும் ஒரு மனிதன் சொல்வான் எதற்கும் ஆசைப்படாதீர்கள் என்று சொல்லிவிட்டீர்கள் அகத்திய மாமுனிவரே!!!! 

எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பணம் இருந்தால் தான் இவ்வுலகத்தில் வாழ முடியும் பின் எதற்காக என்றெல்லாம் இன்னும் இதை பார்த்துவிட்டு மனிதர்கள் சொல்வார்கள் என்பேன்!!!!

ஆனாலும் அப்பனே நிச்சயம் பணம் இருந்தால் உன்னால்  வாழ்ந்து விட முடியுமா என்ன !!!! அப்பனே  ஆனால் இறைவனின் அருள்களும் எங்கள் அருள்களும் இல்லாமல் நிச்சயம் வாழ முடியாது என்பேன் அப்பனே!!!! 

பணங்கள் தந்து விடுகின்றேன் அப்பனே நிச்சயம் உன்னால் வாழ முடியுமா என்ன????

அப்பனே சிந்தித்துக் கொள்ளுங்கள் அப்பனே ஒவ்வொரு வாக்கிலும் ஒவ்வொரு வாக்கியத்திலும் கூட அப்பனே சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே !!!

பணத்தால் எதை என்றும் அறிய அறிய அப்பனே ஒரு நொடியில் நிச்சயம் என்னால் உங்களுக்கு பணம் கொடுக்க முடியும் அப்பனே!!!!

ஆனாலும் அப்பனே நீங்கள் மீண்டும் கர்மத்தில் வீழ்ந்து அப்பனே அனைத்தும் சேர்த்துக் கொண்டு விட்டு பின்பு மீண்டும் அழிந்து இப்படியெல்லாம் வாழ்ந்தோமா என்று அப்பனே  நீங்கள் எண்ணக்கூடாது அதனால்தான் அப்பனே எது என்று அறிய அறிய அப்பனே அருள்கள் கோடி எதை என்றும் அறிய அறிய அப்பனே அருள்கள் பெற்றுவிட்டால்  அப்பனே பணங்கள் எதை என்று அறிய அறிய தாராளமாக வந்துவிடும் என்பேன் அப்பனே!!!!

அதனால் அப்பனே மீண்டும் மீண்டும் சொல்லுகின்றேன் அப்பனே

ஆசைகள் வேண்டாம் ஆசைகள் வேண்டாம் அப்பனே!!! 

ஆசைகள் அப்படி எதை என்று அறிய அறிய நீங்கள் கேட்டு கொண்டே இருந்தால் அப்பனே நிச்சயம் அதை எவை என்று அறிய அறிய நடக்கப் போவதும் இல்லை!!!!

ஏனென்றால் கிரகங்கள் உன்னை பிடித்துக் கொள்ளும் என்பேன் அப்பனே !!!! சரியாகவே அப்பனே! முதலில்  ஆசைகள் வேண்டாம், வேண்டாம் அப்பனே கிரகங்கள் அப்பனே எதை எதை என்று அறிய அப்பனே தூரவே நிறுத்துங்கள் அப்பனே இதைத்தான் யான்  முதலில் சொல்வேன்!!!!!! அப்பனே

பின் எதை எதை என்றும் அறிந்தும் அறிந்தும் ஆனாலும் நிச்சயம் எதை எதை என்று அறிய அறிய என் பக்தர்களுக்கும் கூட இன்னும் வாக்கியங்கள் பல பல வழிகளிலும் கூட எடுத்துரைப்பேன் அப்பனே!!!

சரியாகவே பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றிகள் வெற்றிகள் உண்டு உண்டு என்பேன் அப்பனே!!!!

எதை என்று அறிய அறிய அப்பனே எதை என்றும் உணர்ந்தும் கூட அப்பனே நிச்சயம் பின் அதாவது   இவ் ஊரிலே பின் எதை என்றும் அறிய அறிய இல்லங்கள்   இவ்வூரிலே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் அப்பனே பன்மடங்கு ஆனாலும் பின்  இவ் ஊரில் பல இல்லங்கள் இருந்தது அப்பொழுது

ஆனாலும் இப்பொழுது அவையெல்லாம் அழிந்துவிட்டது என்பேன் அப்பனே ஆனாலும் மலை அரசர்கள் இங்கு வாழ்ந்து தான் வந்தார்கள்!!!!

ஆனாலும் ஒரு இல்லத்தில் எதை என்று அறிய அறிய அப்பனே பின் தாய் தந்தையர் முருக பக்தி ஆனாலும் அப்பனே முருகா முருகா என்றெல்லாம் அழைத்து அழைத்து பின் முருகா எதையென்றும் அறிய வேண்டி வேண்டி வேண்டி வேண்டி எதை என்றும் அறிய அறிய ஆனாலும்  அவ் மலைவாசிகள் எதை என்று அறிய அறிய பின் முருகனை நினைத்து பின் எங்கு அலைந்து திரிந்து அப்பனே எங்கெங்கோ சென்றார்கள் பல திருத்தலங்களுக்கு கூட அப்பனே!!! 

ஆனாலும் நடந்தே!!!! எதை எதை என்று அறிய அறிய அப்பனே எவை எவை என்று அறிய அறிய அப்பனே பின் 20 வயதில் தொடங்கி அப்பனே 50 வயதுகள் ஆகிவிட்டது அப்பனே பல திருத்தலங்களை சுற்றினர் அப்பனே!!!

நலமாகவே மீண்டும் இங்கு வந்து விட்டனர் அப்பனே ஆனால் குழந்தை பாக்கியம் இல்லை அப்பனே எதை என்றும் அறிய அறிய!!!!

அப்பனே ஆனாலும் பின் தன் குடிசையில் தங்க அப்பனே ஆனாலும் பின் எதை என்று உணர்ந்து உணர்ந்து  அவ் அம்மையும் பின் கணவரிடம் அப்பனே எதை என்று அப்பனே எதை என்றும் உணர்ந்து எதை என்றும் கூட இவ்வாறு பின் அவ் மகள் சொன்னாள்!!!!!! 

உன்னை நினைத்து நினைத்து பாடுபட்டு பாடுபட்டு நிச்சயமாய்  எங்கும் காணப்படவில்லையே!!!!! முருகன் என்று கண்களில் கண்ணீர்.

ஆனாலும் பின் அவந்தனுக்கும் எதை என்றும் அறிய அறிய அப்படித்தான் சரி யாம்தன் ஏழைகள்!!!!!!! அதனால் இறைவனுக்கு இறைவனுக்கு கூட பின் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட மனசாட்சி இல்லையே இறைவன் கூட கண்ணுக்கு தெரியவில்லையே பின் இவ்வளவு ஆண்டுகள் ஆகிவிட்டது மீண்டும் அதாவது பின் வயதாகி மடிந்து விடுவோம் இங்குதான் என்று!!! 

ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் பின் ஒரு குழந்தை இருந்தால் நன்றாக இருக்கும் என்று பின் அவ் மகளும் எண்ணினாள்!!!!

நிச்சயம் இதை முருகன் புரிந்து கொண்டான்!!!! எதை என்றும் அறிய அறிய!!!! 

அதனால் பின் அதாவது ஒரு இரவில் உறங்கிக் கொண்டிருக்கும் பொழுது மறுநாள் அதிகாலையில் ஒரு குழந்தை சப்தம் கேட்டது ஆனால் எதை என்றும் அறிந்தும் அறிந்தும்

ஆனாலும் பின் பார்த்தால் ஒரு குழந்தை அழகான பெண் குழந்தை!!!!!

ஆனாலும் பின் எதை என்றும் அறிய யாரோ??? விட்டுவிட்டு சென்று விட்டார்கள் என்று ஆனாலும் எடுத்து வளர்த்தனர்!!!!!

ஆனாலும் பின் முருகன் தான் இதை அழகாகவே எதை என்று அறிய அறிய!!!!!

ஆனாலும் இவற்றின் தன்மைகள் கூட ஆனாலும் வயதான காலத்தில் ஒரு குழந்தையா என்று எண்ணி ஆனாலும் வளர்ந்தாள்!!!!!!

ஆனாலும் முருகனை பாடி பாடி இங்கெல்லாம் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் இவர்களுக்கு கூட உணவில்லை இதனால் பின்  அதாவது பெரிய கிராமத்தில் பின் முருகனின் பாடலை அதாவது எதை என்றும் அறிந்தறிந்து வளர வளர அக் குழந்தைக்கு பின் எதை என்று கூற முருகனின் பக்தி அதாவது எதை என்று அறிய அறிய அறிவுகள்!!!!! முருகனே கொடுத்து அனுப்பினான் என்பதை!!!!!

இதனால் பின் அங்கெல்லாம் ஏதாவது முருகன் பாடல்கள் பாடல்கள் பாடி பாடி பின் பணத்தை அதாவது ஏதோ கொடுத்தால் பின் உணவாகவே கொடுப்பார்கள்... எதை என்றும் அறிந்தும் அறிந்தும் அதை இல்லத்திற்கு எடுத்து வந்து அனைவரும் உண்ணுவார்கள் !!!!

ஆனாலும் அறிந்தறிந்து எதை என்றும் அறியாமல் ஆனாலும் பின் இவர்களும் மனதில் இவ்வாறு இக் குழந்தையை அதாவது கடைசி காலத்தில் நம்தனக்கும் வயதாகிவிட்டதே!!!!!!!!! ஆனாலும்  இக் குழந்தையை யார்? பார்த்துக் கொள்வார்கள்?

பின் இவள்தனுக்கும் ஒன்றும் தெரியவில்லை பாடல்களைப் பாடி பின் உணவு எதை என்று யாராவது என்று கொடுத்தால் உட்கொண்டு எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட இப்படி.....இவள்தனுக்கு என்னதான் செய்வது என்று தெரியாமல்!!!!

ஆனாலும் வயது பின் கடந்துவிட்டது இறப்பும் வந்து விட்டது ஆனாலும் இறந்து விட்டார்கள்!!!

ஆனால் குழந்தையோ பின் அழுது புலம்பினாள்!!!! 

யாரும் இல்லையே எதை என்றும் அறிய அறிய ஆனாலும் மக்களும் பின் எதை என்றும் அறிய அறிய பின் பாசங்கள் காட்ட ஆளில்லையே என்று ஏங்கினாள்!!!!!! 

ஆனாலும் முருகன் பார்த்துக் கொண்டே இருக்கின்றான் ஆனாலும் இதை என்று அறிய அறிய... ஆனாலும் சரி என்று கூட அனைவரும் எவை என்று அறிய அறிய ஆனாலும் அனைவரும் ஒன்று கூடி எதை என்று பல ஆட்கள் ஆனாலும் பின் எவையென்றும் அவர்களும் சமாதி ஆயினர்!!!

 ஆனாலும் இக் குழந்தையை பார்த்து இவள்தன் பாடி பாடி முருகனை பாடி பாடி என்னதான் சம்பாதித்தாள்????? இவளின் தாய் தந்தையரும் இறந்து விட்டனர்!!!இவள்தனை யாரும் இவ்வூரில் பார்க்க கூடாது இவளிடம் யாரும் பேசக்கூடாது இவளுக்கு யாரும் உணவை கூட தரக்கூடாது!!!!!!

ஏன் என்றால் இவள்தன் அனைத்தும் இழந்தவள் அதனால் இவளை பார்த்தாலே அனைவரும் அனைத்தையும் இழந்து விடுவார்கள் என்று எண்ணி!!!!!

ஆனாலும் எதை என்று அறிய அறிய அனுதினமும் எவை என்று கூட முருகா!!!!! முருகா!!!! என்றெல்லாம் பாடினாள் ஆனாலும் நிச்சயம் பின் எதை என்று அறிய அறிய உணவு கூட கிட்டவில்லை!!!!

10......20,........30,...... நாட்கள் கடந்துவிட்டன!!!!! 

ஆனாலும் அறிந்தும் அறிந்தும் எதை என்றும் புரிந்தும் புரிந்தும் ஆனாலும் நிச்சயமாய் உணவுகளை யாரும் வழங்கவில்லை !!!!! எதை என்று கூட அழுது புலம்பினாள்!!!!! முருகா முருகா என்றெல்லாம்!!!!

அழுது புலம்பி ஆனாலும் நிச்சயமாய் எதை என்று உணர்ந்து உணர்ந்து பின் முருகன் கூட கண்களில் பின் கண்ணீர் மல்க பின் ஆனாலும் சரி பார்ப்போம் என்று குழந்தை ரூபத்தில் வந்துவிட்டான் முருகன்!!!!!

ஆனாலும்  எதை என்று அறிய அறிய அழுது கொண்டே!!!........ ஆனாலும் நிச்சயம் அவ் பெண்மணி எதை என்றும் அறிய அறிய ஆனாலும் எடுத்து தூக்கினாள் முருகனை!!!!!!

ஆனாலும் எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் இவ்வாறு குழந்தையை யாரோ விட்டு விட்டு சென்று விட்டார்களே என்றெல்லாம்!!!!! நிச்சயம் பின் ஊருக்குள் சென்று அதாவது இவள்தனை தனிமைப்படுத்தி வைத்திருந்தனர்..... பின் சிறிது தொலைவு சென்று!!!

ஆனாலும் அனைவரும் சேர்ந்து யாரோ குழந்தையை இவள் தன் எதை என்று அறிந்தறிந்து திருடிவிட்டாள்!!!!  இவள்தன் திருடி!!! என்று கூட பட்டம் சூட்டி!!.... ஆனாலும் பின் அனைவரும் கூட ஒன்று கூடி பின் யார் இந்த குழந்தை எங்கே இருந்து கடத்தி வந்தாய்??? என்றெல்லாம்!!! நிச்சயம் இவள்தனக்கு ஆனாலும்!!

இல்லை இல்லை எதை என்று அறிய அறிய எவை என்று புரிய புரிய நிச்சயம் இல்லை இல்லை இக்குழந்தை தானாகவே அங்கு தவழ்ந்து ஓடிக்கொண்டிருந்தது!!!!

ஆனாலும் பின் எதை என்று அவ் மலையின் அரசன் நிச்சயம் ஆண் குழந்தை ஆனாலும் யார் எதை என்று அறிய அறிய எங்காவது எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட ஆனாலும் பின் ஒரு பெண் வந்து ஓடோடி வந்து பின்  இக்குழந்தை என் குழந்தை தான் என்று!!!

ஆனாலும் எதை என்றும் அறிய நிச்சயம் ஆனாலும் அவளுடைய குழந்தை இல்லை ஆனாலும் எதை என்றும் அறிந்து பின்பற்றுகின்ற பொழுது நிச்சயம் முருகன் பின் அவள்தன் அதாவது மூளைச்சலவை மூளையை சலவை செய்து பின் பைத்தியக்காரி ஆக்கி!............

 ஆனாலும் அப்படியே அவள் சென்று விட்டாள்!!! அவள்தன் எதை என்று கூட!!!

ஆனாலும் பின் முருகன் இவளிடத்திலே அதாவது பின் அழகாக தூக்கிக் கொண்டிருக்கின்றாள் இப் பெண்மணி !!!! எதை என்றும் அறிந்தும் அறிந்தும் கூட எவை என்றும் புரிந்தும் கூட!!!!

ஆனாலும் இவளை நோக்கி கற்களை வீசினார்கள்!!! இதோடு இறக்கட்டும் ஆனாலும் அக்குழந்தையைக் கூட பின் எதை என்று அறிய மக்கள் பார்க்கவில்லை யார் குழந்தையும் இல்லை இக் குழந்தையும் சேர்ந்து சாகட்டும் என்று அதாவது குழந்தை சாகட்டும் என்று இப்படிப்பட்ட மனிதர்களும் கூட இக்கலியுகத்தில் இருக்கின்றார்களப்பா!!!!! இருக்கின்றார்கள்!!!!!

அப்பனே பார்த்துக் கொள்ளுங்கள் அப்பனே மனிதனின் மனது எப்படி எல்லாம் இருக்கின்றது என்பதை இப்பொழுது கூட அப்படி அப்பனே மனிதனின் தன்மை மனங்கள் அதாவது தான் அப்பனே எண்ணம் போல் வாழ்க்கை என்கின்றார்கள் அப்பனே!!!

தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் தன் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும்   என்றெல்லாம் எண்ணுகின்றார்களே இவர்கள் எல்லாம் மனிதர்களா??!!

அப்பனே பின் பார்ப்போம் எதை என்று அறிய அறிய பாருங்கள்.....

எதை என்று கற்களை வீசத் தொடங்கினார்கள்!!!! ஆனாலும் ஒரு கல் கூட அப்பனே எதை என்றும் அறிய பின் வீச தொடங்க வீச தொடங்க அப்பனே ஒரு கல்லும் அதாவது ஒரு கல் கூட நிச்சயம் இவர்களை தொடவில்லை கற்கள் கீழே விழுந்தது!!!!

ஆனாலும் எதை என்றும் அறிய அறிய அப்பனே எவை என்றும் புரியாத அளவிற்கும் கூட நிச்சயம் அப்பனே மனிதர்கள்.... ஆனாலும் இவை நம்பி எதை என்று அறிய அறிய!!!!!

ஆனாலும் எங்கோ சக்திகள் இருக்கின்றது என்பதை கூட உணர்ந்து எதை என்றும் அறிய அறிய ஆனாலும் முருகன் அதாவது அக் குழந்தை அனைவரையும் கூட பார்த்து அப்படியே நிற்க வைத்து விட்டான் அப்பனே அந்த மனிதர்களைக் கூட அங்கேயே!!!!!

பின் அடித்து நொறுக்கி அப்பனே பின் அனைத்தையும் அழித்து விட்டான் அப்பனே!!!

ஆனாலும் அவ் மனிதர்கள் எல்லாம் பிறந்து தான் இருக்கின்றார்கள் இவ்வுலகத்தில் அப்பனே!!!! கஷ்டங்கள் பட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றார்கள் அப்பனே எதை என்று அறிய அறிய!! 

இக் கர்மா தானப்பா!!! இப்படி செய்தால் அப்பனே பின் ஆன்மா எப்படி பின் உடம்பு எடுக்காது????? கூறுங்கள் அப்பனே!!!

ஆனாலும் எதை எதை என்று அறியறிய அப்பனே எவை என்று புரியப் புரிய  ஆனாலும் அப்பனே நிச்சயம் பின் அப் பெண்மணிக்கும் கூட சந்தோஷங்கள்!!!!

முருகா!!!!  யான் உன்னை சுமக்கின்ற பாக்கியம் !!!!எதை என்று அறிய அறியறிய இங்கேயே தங்கி விடுவோம் என்று எண்ணி நிச்சயம் அப்பனே எதை என்று அதாவது அக் குழந்தை அதாவது முருகன் எதை என்று அறிய அறிய பின் எவை என்று புரியப் புரிய ஆனாலும் அவள்தன் எண்ணினாள்!!!!! பின் முருகன் நம்தனுக்கு இருக்கின்றானே!!!!! தூக்கிக் கொண்டிருக்கின்றோமே!!......  இப்போது நம் தாய் தந்தை இருந்திருந்தால்!!!!!!!!!!!! எதை என்று அறிய அறிய என்று நினைக்க அவர்களும் உயிர்பிழைத்து வந்து விட்டார்கள் அப்பனே!!!

ஆனாலும் அப்பனே!!!!யாங்கள் நினைத்தால் பின் மனிதர்களைக் கூட இறப்பாயினும் பின் உயிர் பிழைக்க வைக்க தெரியும் என்பேன்!!.... எங்களுக்கு கூடு விட்டு கூடு பாயும்!!!....................!!!!! அப்பனே ஒரு மனிதனை பிறக்கவைக்கவும் தெரியும் பின் இறக்க வைக்கவும் தெரியும் அப்பனே!!!!

அதனால் எதையென்று அறிய அறிய முருகா!!!!! உந்தனுக்கு எதை என்று அறிய அறிய தெரிந்து  கொண்டார்கள் அப்பனே!!!! 

இங்கேயே நிச்சயம் நாங்கள் திருத்தலம் அமைத்து விடுவோம் என்று நிச்சயம் அவர்களே உயிரோடு எதை என்று அறிந்து அறிந்து முருக பக்தர்களே இத்திருத்தலத்தை அமைத்தார்கள் என்பேன் அப்பனே!!!!!

மறுநாள் எதை எதை என்று அறிய அறிய அமைத்து அமைத்து அப்பனே பெரிய பின் அரசனாகவும் ஆகிவிட்டார்கள் என்பேன் அப்பனே!!!!! ஜென்மங்கள் ஜென்மங்களாக அப்பனே!!!!

அப்பனே எதை எதை என்று அறிய அறிய இதனால் அப்பனே பக்தியை செலுத்துங்கள் அப்பனே உண்மையான பக்தியை செலுத்துங்கள்!!!! எப்படி நடந்து கொள்வது என்பதை கூட வரும் வரும் வாக்கியத்தில் கூட யாங்கள் சொல்லிக்கொண்டே இருப்போம் அப்பனே!!!

இன்னும் நலன்கள் பெற்று அப்பனே எப்படியெல்லாம் வாழ்க்கை தத்துவத்தை உணர்ந்து அப்பனே வெற்றிகள் பெறலாம் என்பதற்கான வழிகளையும் யாங்கள் காட்டுவோம்!!!!!

எங்கள் வழியில் வருபவர்களுக்கு குறைகளும் கிடையாது அப்பனே!!!! எங்களை எதை என்று அறிய அறிய அப்பனே பின்பற்றி பின்பற்றி அப்பனே நடப்பவர்களுக்கு கூட அப்படி அனைத்தையும் ஒவ்வொன்றாக விலக்கச் செய்வோம் அப்பனே!!!!!

நலன்கள்!!! ஆசிகள்!!! மற்றொரு திருத்தலத்திலும் கூட உரைக்கின்றேன் அப்பனே நலன்கள் ஆசிகள் ஆசிகள்!!!!

ஆலய முகவரி மற்றும் விபரங்கள் 

கர்நாடக மாநிலம் மங்களூருவில் அமைந்துள்ளது குக்கே சுப்பிரமணியா கோவில். கர்நாடகாவில் உள்ள முருகன் வழிபாட்டுத் தலங்களில் இது பிரபலமானது. பல யுகம் கண்ட கோவிலாக இத்தலம் விளங்குகிறது.குக்கே சுப்ரமணியா கோவிலுக்கு அருகிலேயே ஆதி சுப்ரமணியா கோவிலும் உள்ளது. வால்மீகா எனும் புற்று இந்தக் கோவிலின் கருவறையிலேயே காணப்படுகிறது. மிகப் புராதனமான இந்த புற்று வடிவங்கள் ஆதிசேஷன் மற்றும் வாசுகி என்று வணங்கப்படுகின்றன. மேலும், இக்கோவிலைச் சுற்றிலும் பசுமையான காடுகளும் மலை அருவிகளும் காணப்படுகின்றன.

மங்களூருவில் இருந்து 105 கிலோமீட்டர் தொலைவிலும், பெங்களூருவில் இருந்து 299 கிலோமீட்டர் தொலைவிலும் இந்த புனித ஆலயம் அமையப் பெற்று இருக்கிறது.

Subrahmanya Post, Kadaba, Taluk, Subramanya, Karnataka 574238.

குக்கே சுப்ரமண்யா கோவில் தினமும் காலை 06:00 மணி முதல் இரவு 08:00 மணி வரை திறந்திருக்கும் . மதியம் 01:30 மணி முதல் 03:00 மணி வரை தரிசனத்திற்கு பிற்பகல் இடைவேளை உண்டு . இந்த நேரத்தில், பக்தர்கள் பல்வேறு பூஜைகள் மற்றும் சேவைகளில் பங்கேற்கலாம். கோவிலின் பிரசாத நேரம் மதியம் 12:30 முதல் 1:30 மணி வரை.குக்கே சுப்ரமணிய கோயிலை எப்படி அடைவது?

குக்கே சுப்ரமணிய கோவிலுக்கு எப்படி செல்வது என்பது இங்கே:

விமானம் : அருகிலுள்ள விமான நிலையம் மங்களூரில் உள்ள பாஜ்பே சர்வதேச விமான நிலையம் 120 கிமீ தொலைவில் உள்ளது.
ரயில் : கோவிலில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சுப்ரமணிய சாலை நிலையம் அருகில் உள்ள ரயில் நிலையம் ஆகும்.
சாலை : கர்நாடகாவில் உள்ள அனைத்து முக்கிய நகரங்கள் மற்றும் நகரங்களில் இருந்து சுப்ரமணியாவிற்கு KSRTC பேருந்துகளை இயக்குகிறது.குக்கே சுப்ரமண்யா கோவில் நிர்வாகத்தில் பல விருந்தினர் மாளிகைகள் மற்றும் சௌல்ட்ரிகள் உள்ளன, அவை தங்குவதற்கு முன்பதிவு செய்யலாம். விருந்தினர் இல்லங்கள் அக்ஷரா, ஆஷ்லேஷா, கார்த்திகேய கிருபா, குமார கிருபா, ஸ்கந்த கிருபா, ஒரு சோல்ட்ரி மற்றும் ஒரு கோவில் குடிசை. இவை தவிர, பல தனியாருக்குச் சொந்தமான லாட்ஜ்கள் மற்றும் ஹோட்டல்கள் சுப்ரமணிய நகரத்தில் இயங்குகின்றன. அவர்கள் அடிப்படை வசதிகளை வழங்குகிறார்கள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

Saturday, 25 March 2023

சித்தன் அருள் - 1310 - அன்புடன் அகத்தியர் - குருநாதர் அகத்தியப் பெருமான் தற்போது தந்த உத்தரவு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!!!!

குருநாதர் அகத்தியப் பெருமான் தற்போது தந்த உத்தரவு

அப்பனே அனைவருக்கும் எம்முடைய ஆசிகள்!!!!

அப்பனே இவ்வுலகமே பேரழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது!!!!
என் பக்தர்கள் யான் கூறியவற்றை ஒவ்வொன்றாக செய்து வருகின்றார்கள் சந்தோஷம் அப்பனே!!!!

என் பக்தர்கள் இனி இவ் வெயில் காலத்தில் அனைவருக்கும் அனைத்து ஜீவராசிகளுக்கும் கூட நீர் மற்றும் உணவை வழங்குதல் வேண்டும்!!!!

சாலையோரங்களில் பந்தல் அமைத்து நீர் மோர் மற்றும் நீரில் வெல்லம் இட்டு துளசி இட்டு இவையன்றி கூற வேப்பம் கொழுந்துகளை இட்டு அனைவருக்கும் தருதல் வேண்டும் அப்பனே!!! மூலிகை குடிநீராக வழங்கும் பொழுது நோய்களின் தாக்கங்களும் பெருமளவில் குறையும் அப்பா!!!!

( மூலிகை குடிநீர் பானையில் நீரை நிரப்பி அதில் வெல்லம் துளசி இலைகள் வேப்பம் கொழுந்து இலைகள் அத்தி இலைகள் வில்வ இலைகள் எலுமிச்சை சாறு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு, அருகம்புல் சுத்தம் செய்தது சுக்கு பொடித்தது  நீர் அளவிற்கு ஏற்ப இவற்றையெல்லாம் நன்றாக கலக்கி இம்மருந்துகள் எல்லாம் நீரில் நன்றாக ஊறி இருக்க வேண்டும் இந்த மூலிகை நீரை அனைவருக்கும் வழங்குதல் வேண்டும்)

இதனை என் பக்தர்கள் நிச்சயம் செய்து வர வேண்டும் அப்பனே ஒவ்வொரு திருத்தலங்களிலும் சாலை ஓரங்களிலும் கோடை வறட்சி மிகுந்த பகுதிகளிலும் அனைத்து ஜீவராசிகளுக்கும் பறவைகளுக்கு கோமாதாக்களுக்கு பைரவர்களுக்கு இயலாதவர்களுக்கு கட்டாயம் அளிக்க வேண்டும் அப்பனே இதை என்னுடைய கட்டளையாக எடுத்துக்கொண்டு என் பக்தர்கள் அனைவரும் செய்துவர செய்து வர புண்ணியம் பெருகுமப்பா!!!!

அப்பனே புண்ணியங்கள் எதுவும் இல்லாமல் நேரடியாக இறைவனை கண்டாலும் லாபம் இல்லை அப்பனே!!!!

பல பல புண்ணிய செய்திருந்தால் மட்டுமே அப்பனே இறைவனும் அருள் புரிவான் அவந்தன் தரிசனமும் கிட்டும்!!!!!

அப்பனே ஒன்றைச் சொல்கின்றேன் உங்களுக்கு புண்ணியம் இருந்தால் மட்டுமே நீங்கள் எத்தனை ஆலயத்திற்கு சென்றாலும் உங்கள் புண்ணியம் மட்டுமே இறைவனிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் அப்படி புண்ணியம் இல்லை என்றால் அப்பனே ஒரு பிரயோஜனமும் இல்லை அப்பனே!!!!

என் வழியில் வருபவர்களுக்கு அப்பனே பல புண்ணிய செயல்களை செய்வித்து அப்பனே கருமத்தை நீக்கி இறைவனை காணவும் இறைவன் தரிசனத்தை பெறவும் யான் வழியை ஏற்படுத்துவேன் அப்பனே!!!

நிச்சயமாய் சொல்கின்றேன் அப்பனே என் பேச்சைக் கேட்டு என் வழியில் வருகின்றவர்களூக்கு இறைவன் தரிசனம் உறுதியப்பனே இது சத்தியம்!!!!!

கலியுகத்தில் கர்மங்களும் பாவங்களும் பெருகிக்கொண்டே போகின்றன அப்பனே மனிதரிடத்தில் யாரிடத்தும் புண்ணியங்கள் இல்லை அப்பா!!!!!

ஆனாலும் புண்ணியங்களை செய்து வர செய்து வர கர்மங்கள் குறையும் அப்பா!!!!

அப்பனே யான் மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் என் பேச்சை கேட்டு வருகின்றவர்களுக்கு கவலைகள் இல்லை குற்றங்களும் இல்லை அப்பனே!!!!

நல்முறையாக அனைத்து ஜீவராசிகளுக்கும் உதவிட வேண்டும் பாதசாரிகளுக்கு நீர் மோர் வழங்குதல் அன்னத்தை அளித்தல் இது போன்ற புண்ணிய காரியங்களை செய்து வர வேண்டும்..... நீர் தானம் பெரும் புண்ணியம் அப்பா...

அப்பனே நீர்மோர் பந்தல்களை அமைத்து அனுதினமும் வருகின்றவர்களுக்கெல்லாம் உதவி வர வேண்டும் அவர்களது மனம் மகிழ்ந்தாலே உங்களுக்கு புண்ணியம் பெருகும் அப்பா!!!!

அப்பனே சகல ஜீவராசிகளையும் சமமாக பாவித்து எந்த ஒரு உயிருக்கும் துன்பத்தை கொடுக்காமல் அவைகள் மனமகிழ முடிந்தவற்றை வழங்கி வந்தாலே உங்களது பாவக்கணக்கு குறைந்து அப்பனே புண்ணிய கணக்கு குவிந்து விடும்.... அப்பனே உங்களிடம் அதிக அளவு புண்ணியங்கள் இருந்தால் இறைவனாலும் ஒன்றும் செய்ய முடியாது!!!!!

அப்பனே தன்னுயிர் போல பிறகு உயிரை காண வேண்டும்.... தான் வாழ நமக்கு அப்பனே எப்படி எப்படி தேடி அலைந்து திரிந்து கற்றுக்கொள்கின்றோமே அதுபோல பிற உயிரையும் பேணுதல் வேண்டும் அப்பனே!!!!

என் வாக்கினை என் பக்தர்கள் நிச்சயம் கேட்டு நடந்தால் வாழ்க்கையில் மாற்றங்களை யானே ஏற்படுத்துவேன் இது நிச்சயம்!!!!!

கலியுகத்தில் மனிதர்களாகிய நீங்கள் கர்மங்களை குறைத்து புண்ணியங்கள் பெருக்க யான் வழிகாட்டுகின்றேன் என் வழியில் வாருங்கள் அனைத்தையும் யான் செய்து தருகின்றேன் அப்பனே!!!

நலம் ஆசிகள்!!!!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!