​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 17 April 2017

சித்தன் அருள் - 647 - அந்தநாள் >>> இந்த வருடம் (2017)


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2016ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கலாம்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம் ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக்கொள்கிறேன்.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

02/08/2017 - ஆடி மாதம் - புதன்கிழமை  - சுக்லபக்ஷ தசமி திதி மதியம் 04.20 வரை, அனுஷம் நக்ஷத்திரம் அன்று மாலை 05.54 வரை

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவக்ரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

03/08/2017 - ஆடி மாதம் - வியாழக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி இரவு 06.19 வரை, கேட்டை நக்ஷத்திரம் இரவு 08.28 வரை.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

04/08/2017 - ஆடி மாதம் - வெள்ளிக்கிழமை  - சுக்லபக்ஷ த்வாதசி திதி இரவு 08.15 வரை, மூலம் நட்சத்திரம் இரவு 10.59 வரை.

ஒதிமலை ஓதியப்பர் பிறந்த நாள்:- (போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.) 

20/08/2017 -ஆவணி மாதம் - சதுர்தசி திதி மறுநாள் காலை 02.25 வரை, பூசம் நட்சத்திரம் அன்று இரவு 06.04 வரை .

கோடகநல்லூர்:- (எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிர பரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.)

02/11/2017 - வியாழக்கிழமை  - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி அன்று பகல் 02.27 வரை, ரேவதி நட்சத்திரம் மறுநாள் காலை 05.10 ("த்ரயோதசி" திதிக்கு முக்கியத்துவம் கொடுத்து ரேவதி நட்சத்திரமாயினும் "வியாழக்கிழமை" தெரிவிக்கப்பட்டுள்ளது. தெய்வீக விஷயங்களுக்கு திதிக்குத்தான் முக்கியத்துவம்.) 

புதிய தகவல்:-

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2017 முதல் 13/01/2018க்குள் வருகிறது. 

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

15 comments:

 1. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

  ReplyDelete
 2. " சற்றுன்று ஏகுக ஈரோட்டில் உள்ள ஒரு மலை கோவில்லுக்கு . இந்த கோவிலில் சித்தர்கள் நங்கள் சிவபெருமானின் அனுமதியோடு அபிஷேகம் ஆராதனை செய்கிறோம் 150 வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அபிஷேகம் ஆராதனை சிவபெருமானும் ஏற்றுகொள்கிறார் நாளைக்கும் எங்கள் பூஜை தொடரும் அப்போதும் பெருமளவு தேவர்கள் வருவகள் அந்த கட்சியை பார்க்க கண் கோடி வேண்டும் நாளைக்கு இந்த கோவிலின் நாடு வழில் நிற்காதே வெளிச்சத்திற்கு எதுவும் கொண்டுவரதே அந்த நந்திக்கு பக்கத்தில் கண்ணை முடிகொண்டு தியானத்தில் இரு இறைவனை நேரடியாக பார்க்கமுடியாது கண்ணை முடிகொண்டல் காட்சி தெரியும் .." -

  அய்யா இது ஹனுமததாசன் அய்யா எழுதிய " நாடி சொல்லும் கதைகள் " என்ற புத்தகத்தில் இருந்து எடுத்தது , அவருக்கு ஈரோட்டில் உள்ள ஒரு மலை கோவிலில் அகத்தியர் அருளால் கிடைத்த அனுபவத்தை எழுதிஉள்ளார் . இதில் குறிபிடப்படும் கோவில் எங்கு உள்ளது என்று தங்களால் கூறமுடியுமா .? அனைவரும் இறை அருள் பெறவேண்டும் என்ற நோக்கில்தான் கேட்கிறேன் ...

  ReplyDelete
  Replies
  1. ​உண்மையிலேயே அந்த மலை எந்த ஊரில் உள்ளது என்று தெரியாது. ஈரோடு என்று அதை சுற்றி உள்ள மலைகளை .துருவிப் பார்த்தவர்கள், வெறும் கையோடு திரும்பி வந்தார்கள். நிகழ்ச்சிகளை படிக்கும் பொழுது, மிகுந்த ஆபத்தான இடம் என்று மட்டும் புரிகிறது. அதை தேடி போகாமல் விட்டுவிடுவது நல்லது. இறைவன் அருள், மற்ற இடங்களில் தேடிக் கொள்வோம்.

   Delete
  2. நன்றி அய்யா :)

   Delete
  3. Sir, we had an opportunity to be at that temple with Agathiyar blessings. From perundurai to Coimbatore route near vijayamangalam. The mountain is caked arasanamalai. The same symptoms what hanumad dasa mama told. Near by railway track, steep hill with poor steps. But very fortunate to be there

   Delete
  4. Sir we were fortunate to go to that temple. It's on the way to Coimbatore from perundurai. Near vijayamangalam toll plaza. Take left you will see a big mountain named arasanamalai. Same temple what hanumadasa mama told. Near by railway track.

   Delete
 3. ஐயா,
  ஸ்ரீ அகஸ்திய பெருமான் சொன்ன கோயில் அதுதானா.மேலும் தகவல்கள் வேண்டும்.சென்று பார்க்க விரும்புகின்றோம்.தங்களை தொடர்பு கொள்வது எப்படி.

  ReplyDelete
 4. arasannamalai near vijayamangalam .
  pooja is done on all sundays by four persons.
  dont get afraid of that temple.
  on all sundays from 8-3pm there will be poojas conducted .its great to visit that temple.

  ReplyDelete
  Replies
  1. how much time will it take to reach the top from the base

   Delete
 5. ஐயா மேல் சொன்ன ஊர்களின் வழிகளை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. நம்பிமலை - திருநெல்வேலி > வள்ளியூர் > ஏர்வாடி > திருக்குறுங்குடி.
   பாபநாசம் - திருநெல்வேலி > சேரன்மாதேவி > பாபநாசம்.
   கருங்குளம், திருச்செந்தூர் - திருநெல்வேலி > கருங்குளம் > திருச்செந்தூர்.
   ஓதிமலை - கோயம்பத்தூர் > annur >ஓதிமலை.
   கோடகநல்லூர் > திருநெல்வேலி > சேரன்மாதேவி வழித்தடத்தில் நடுக்கல்லூர் > கோடகநல்லூர்.

   Delete
 6. AGNILINGAM ARUNACHALAM SIR HAVE U VISITED ARASANNAMALAI?PLS COME AND EXPERIENCE THE BLESSINGS.

  ReplyDelete
  Replies
  1. GVIE ME THE TRAVEL ROUTE FROM TIRUNELVELI TO ARASANNAMALAI TO MAKE THE PLANS.

   Delete
 7. from thirunelveli,sivakasi,viruthunagar,madurai,dindugul,Continue to follow Erode - Vellakoil Main Rd/erode-perundurai-olapalayam,vijayamangalam,arasannamalai.

  if u surely come pls intimate us.on all sundays poojas are there.i will connect u with persons if help needed.

  ReplyDelete
 8. குரு வாழ்க! குருவே துணை!!

  ReplyDelete