​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 18 December 2016

சித்தன் அருள் - 540 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

வீட்டின் அருகில் இருக்கும் லோபாமுத்திரா சமேத அகஸ்தியப் பெருமான் கோவிலில் இன்று காலை அபிஷேக, பூசைகளுடன் அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரத்தை, நண்பர்கள் இருவருடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடினோம். மிக அருமையான தரிசனம், ஆசிர்வாதத்துடன், அங்கு அப்போது எடுக்கப்பட்ட ஒரு சில புகைப்படங்களை உங்கள் பார்வைக்காக கீழே தருகிறேன். நான்காவது படத்தை சற்று பெரிதாக்கி பார்த்தால், ஓரளவுக்கு அகத்தியரும், லோபாமுத்திரையும் தெரிவார்கள். அவர் அருள் பெற, நீங்கள் அனைவரும், இன்று விழைவீர்கள் என நம்புகிறேன்.




அகத்தியப்  பெருமானின் இன்றைய அருள் வாக்கு


அவரவர் செலுத்துகின்ற வாகனத்திலிருந்து, வெளிவரும் நச்சுப்புகை, இந்த அண்டத்திற்கும், உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால், இகுதொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம், நறுமணமிக்க புகையை ஆலயங்களிலே அதிகம் இட்டு, இட்டு, இந்த குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.

5 comments:

  1. [ROUGH TRANSLATION] The poisonous smoke emitted by your vehicle adversely affects the universe and creatures in different ways. So, all those connected with vehicles, should regularly offer fragrant smoke in temples in a big way, as a parihara for this defect.

    ReplyDelete
    Replies
    1. Om Agatheesaya Namah

      Its really superb Parihara

      Delete
  2. Om Agatheesaya Namah

    where is this temple and please provide some details about this if possible.

    ReplyDelete