​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Friday, 25 September 2026

சித்தன் அருள் - 2325 - அன்புடன் அகத்தியர் - தண்ணீர்மலை கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு!




அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால்  22/09/2026  அன்று தண்ணீர்மலை மலேசியாவில்  நடந்த   கூட்டுப்பிரார்த்தனை சத்சங்க வாக்கு - பகுதி 1

தேதி: 22 செப்டம்பர் 2026
நாள்: செவ்வாய்க்கிழமை
நேரம்: மாலை 5:30pm

வாக்குரைத்த ஸ்தலம் : தண்ணீர்மலை ஸ்ரீ பாலதண்டாயுதபாணி தேவஸ்தானம், பினாங்கு (Waterfall Sri Balathandayuthapani Devasthanam, Penang) 

Google map link :- https://maps.app.goo.gl/3jg3bAzZfzWwpjvNA 

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து, செப்புகின்றேன் அகத்தியன். 

அம்மையே, அப்பனே, எவை என்று புரிய, நிச்சயம் அனைவரையும் பின் பார்த்திருக்கின்றேன் பல திருத்தலங்களில்.  எவை என்று  பின் லோபாமுத்திரையோடு எம்முடைய ஆசிகள். 

குருநாதர்:-  ஏன்?  எதற்காக  இறைவனை வணங்குகின்றோம்?  என்றெல்லாம் தெரியாமலும் மனிதன் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் இருக்கின்றான். இதனாலே  சில கஷ்டங்கள், மனிதனுக்கு பல வேதனைகள், பல துன்பங்கள். 

குருநாதர்:-  இவைத்தன் அறிய, இதனால்தான் 

***** இறைவனை எப்படி வணங்க வேண்டும்? ***** 

எதை என்று புரிய…. 

***** மற்றவர்களுக்காகவே ***** 

எதை புரிய நிச்சயம் தன்னில் கூட 

***** இவ்வாறாகவே வணங்கினால் உனக்கு என்ன தேவையோ, அதை சரிமுறையாகவே கொடுப்பான். அவ்வளவுதான். ***** 

குருநாதர்:-  எதை தெரிவிக்க, இதனால் பின் நிச்சயம் தன்னில் கூட எவ்வாறாக பல விஷயங்கள் யான் உரைக்கப் போகின்றேன் இங்கு. 

குருநாதர்:-  இதனால் பின் நிச்சயம் அனைவரும் உலகத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று முருகனை எண்ணி, அனைவரும் பின் உங்கள் மனதில் என்ன ஏது என்று அறிய, பின் உங்களுக்கு நிச்சயம் தன்னில் கூட என்ன பாடல், பின் அனைவரும் பின் நிச்சயம் தன்னில் கூட அறிந்தும் கூட எவ்வாறு என்பதை எல்லாம் புரிந்து, முருகனை வேண்டிக்கொள்ளுங்கள். பின்பு யான் செப்புவேன். 

அடியவர்:- வணக்கம் அய்யா…அகத்தியர் அப்பா  என்ன சொல்றாருன்னா, எல்லாரும் ஒரு மனதோடு ஒரு முருகனின் பாடலை…...
 
ஒரு அடியவர் :- ( என்ன பாடல் என்று கேட்க )
 
சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன பாடல்? அகத்தியரே கேட்டுக்கலாம். 

குருநாதர்:-  அப்பா, முருகன் கோபம் கொள்ளும் பொழுதெல்லாம், அருணகிரி மனமோடு பாடுவான். இதனால்…..

அடியவர்:-  முத்தைத்தரு பத்தித் திருநகை அந்த பாடலை தான் பாடுவார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பாடல் பாடி மனம் மகிழ வைப்பாராம்.

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால அது வந்து, அது பாடல். நீங்க பாடுங்கப்பா என்று சொல்கின்றார்  வந்து, அதனால பாடுங்க. எல்லாரும் சேர்ந்து பாடுங்க, ஐயா. எல்லாரும், ஐயா, எல்லாரும் நல்லா இருக்கணும். உலகம் நல்லா இருக்கணும். எல்லா பிரச்சனைகளோட, இத்தனோ பேர் பிரச்சனைகளோட வாழ்றாங்க. அதெல்லாம் தீர்த்து வைப்பா. உன்னால்  தான் முடியும். இறைவன் ஒரு நிமிஷம் வேண்டிக்கிட்டு, அவரை மகிழ்விக்கணும். ஒரு பாடல் பாடுகள், பின்பு அனைவரும் சொல்றாங்க, ஐயா. எல்லாம் கைதட்டி, நல்லா, எல்லாரும் நல்லா இருந்தா, கைதட்டி பாடுங்க.
 
( அடியவர்கள் அழகாக பாடல் பாட ஆரம்பித்தனர் ) 


முத்தைத்தரு பத்தித் திருநகை
     அத்திக்கிறை சத்திச் சரவண
          முத்திக்கொரு வித்துக் குருபர ...... எனவோதும்

முக்கட்பர மற்குச் சுருதியின்
     முற்பட்டது கற்பித் திருவரும்
          முப்பத்துமு வர்க்கத் தமரரும் ...... அடிபேணப்

பத்துத்தலை தத்தக் கணைதொடு
     ஒற்றைக்கிரி மத்தைப் பொருதொரு
          பட்டப்பகல் வட்டத் திகிரியில் ...... இரவாகப்

பத்தற்கிர தத்தைக் கடவிய
     பச்சைப்புயல் மெச்சத் தகுபொருள்
          பட்சத்தொடு ரட்சித் தருள்வதும் ...... ஒருநாளே

தித்தித்தெய ஒத்தப் பரிபுர
     நிர்த்தப்பதம் வைத்துப் பயிரவி
          திக்கொட்கந டிக்கக் கழுகொடு ...... கழுதாடத்

திக்குப்பரி அட்டப் பயிரவர்
     தொக்குத்தொகு தொக்குத் தொகுதொகு
          சித்ரப்பவு ரிக்குத் த்ரிகடக ...... எனவோதக்

கொத்துப்பறை கொட்டக் களமிசை
     குக்குக்குகு குக்குக் குகுகுகு
          குத்திப்புதை புக்குப் பிடியென ...... முதுகூகை

கொட்புற்றெழ நட்பற் றவுணரை
     வெட்டிப்பலி யிட்டுக் குலகிரி
          குத்துப்பட ஒத்துப் பொரவல ...... பெருமாளே.

 ( பாடல் முடிந்தவுடன் )

குருநாதர்:- அப்பனே , ஈசனை நினைத்து , அப்பனே , அனைத்து, அப்பனே, நிச்சயம் தன்னில் அனைத்தும் உயிர்களும்  நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே பின் அதாவது  சிவபுராணம் ஓதுக.
 
( அடியவர்கள் திருவாசகம் ஓத ஆரம்பித்தனர்….)

நமச்சிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க!
இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க!
கோகழி ஆண்ட குருமணி தன் தாள் வாழ்க!
ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க!
ஏகன், அநேகன், இறைவன், அடி வாழ்க! 
………….
………….
………….
( கருணை கடல் இறைவன் , கர்மங்களை நீக்கும் மகத்தான சிவபுராணம் பாடி முடித்த பின்னர் வாக்குகள் அருளினார்கள்….) 

குருநாதர்:- இதைத்தன் அறிய, எவ்வாறு என்பதை கூட, பல பல திருத்தலங்களைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்படி பின் தெரியாமல் வணங்கினாலும் ஆசிகள் எதை என்று புரிய  நீங்களே புரிந்து கொள்ளுங்கள். கிடைப்பதில்லை. 

குருநாதர்:- இதைத்தன் அறிய இன்னும் பல வரலாறுகள், இறைவனுடைய வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது. 

குருநாதர்:- ஏனென்றால் கலியுகத்தில் இவையெல்லாம் மனிதனுக்கு தெரிவித்தால் பின் அதாவது மனிதன் பிழைத்துக் கொள்வான் என்று, பல பின் நிச்சயம் தன்னில் கூட, எவை என்று அறிய, பின் பல பல மானிடர்களே  பின் சுவடியில் எழுத்து மூலம் எழுதி வைத்துள்ள அனைத்தும் நிச்சயம் எங்கெங்கேயோ தூக்கியும் (பதுக்கியும்) இன்னும் சிலர் திருடியும்… இன்னும் சிலர் நெருப்பில் இட்டும் கூட.  

குருநாதர்:- ஆனாலும் கலியுகத்தில் அவையெல்லாம் யாங்கள் எழுதி வைத்ததை எல்லாம் இப்பொழுது யாம்   சொல்லப் போகின்றோம்.

குருநாதர்:-  அப்பனே,  ஏன் இந்த பாவம்  எதை என்று புரிய…. ஆனாலும் ஒவ்வொரு எதை என்று கூற அப்பனே நிச்சயம் தன்னில் கூட அனைவருக்குமே சில பாவங்கள் உண்டு. ஆனால் இறைவன் நாமத்தை  செப்புகின்ற பொழுது அவ்  பாவங்கள் கரைந்து புண்ணியமாக போகும். 

குருநாதர்:-  இவ்வாறாக பல ஞானிகள் (நாமத்தை, வரலாற்றை) பின் தெரிவித்து அதாவது தெரிந்து கொண்டால் நிச்சயம் தன்னை கூட புண்ணியங்கள் சேரும். அப் புண்ணியம் பலத்தால் நீங்கள் மற்றவர்களையும் காப்பாற்றலாம். அதைத்தான் நாங்கள் சொல்ல வந்தோம்.
 
அடியவர் :- இப்ப வர்ற வழியில தாப்பால வந்து ஜெகநாத் சுவாமிகள் இருக்காரு. 

===========================
google link :-  https://maps.app.goo.gl/2mTvwx6cXkEci2dEA
(ஜெகநாதர் சுவாமிகள் வட இந்தியாவின் பூரி நகரில் 1814-ல் பிறந்து, மலேசியாவிற்குப் புலம்பெயர்ந்து வாழ்ந்த ஒரு மகா சித்தர் ஆவார். ) 
===========================

அடியவர் :- (ஜெகநாத் சுவாமிகள்) அவருடைய உண்மை வரலாறு என்னன்னு உண்மையிலேயே தெரிஞ்சுக்கிட்டு நீங்க அவங்க வணங்குனீங்கன்னா, அவருடைய நாமம் சொல்லும்போது, அதை அவர் இறை நாமமா மாற்றி, அதை உங்களுக்கு புண்ணிய பலனா மாற்றி, வழங்குவார். அப்ப உங்களுடைய பாவ கர்மா என்பது குறையும் அப்படின்னு சொல்கிறார்.

குருநாதர்:-  ஏன்?  எதற்காக?  முருகனைப் பற்றி இப்பொழுது சொல்ல போகின்றேன். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment