​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 12 September 2026

சித்தன் அருள் - 2304 - அன்புடன் அகத்தியர் - 02/08/2026 திருவண்ணாமலை கூட்டு பிரார்த்தனை - பாகம் - 7





அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026  அன்று திருவண்ணாமலையில் நடந்த  12 வது சிவபுராணம்  கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 7

நாள், நேரம்  : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.  


இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.

முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-  
https://youtu.be/npiKG6l6z6o


===========================
#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
===========================

ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள். 


( பகுதி 6  தொடர்ச்சியாக…… )


பகுதி 7  வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=27872 

குருநாதர் :- அப்பனே எவை என்று புரிய, இவர்களுக்கு அப்பனே மரியாதை. அப்பனே எவை என்று கூற, அப்பனே பின் 10,000-ஐ அப்பனே பின் ஒன்றோடு இணைத்து தருக. 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, வாங்க ஐயா.


சுவடி ஓதும் மைந்தன் அடியவர்கள் உரையின் தொகுப்பு  :-
இந்த உரையாடல் முழுவதும் இறைபக்தி, சித்தர்கள், தர்மம், நல்ல எண்ணங்கள், மனித சேவை போன்ற ஆன்மீகக் கருத்துகள் ஆழமாக பேசப்படுகின்றன. கீழே முக்கியமான சாரம்:
🔹 1. இறைவனை எதிர்பார்ப்பில்லாமல் வணங்க வேண்டும்
“எதையும் எதிர்பார்க்காம வணங்கணும்… அதுதான் உண்மையான பக்தி” என்று உரையில் கூறப்பட்டுள்ளது.
எதிர்பார்ப்புடன் வணங்கினால் கஷ்டம் அதிகரிக்கும், எதிர்பார்ப்பில்லாமல் வணங்கினால் பலன் அதிகம்.
🔹 2. தகுதி வளர்த்தால் இறைவன் கொடுப்பார்
மனிதனின் தகுதி, மனநிலை, ஒழுக்கம் ஆகியவற்றைப் பொறுத்தே இறைவன் தருவார்.
“தகுதி என்னவோ அவ்வளவு கொடுப்பார்” என்று உரையில் தெளிவாக உள்ளது.
🔹 3. சித்தர்கள் மட்டுமே இறைவனை உணர முடியும்
சாதாரண மனிதன் நேரடியாக இறைவனை அடைய முடியாது; சித்தர்களின் வழியே மட்டுமே.
கரண்ட் உதாரணம் மூலம் “நேரடியாக தொட்டால் ஷாக் அடிக்கும்” என விளக்கப்படுகிறது.
🔹 4. மனித சேவை மிக உயர்ந்த தர்மம்
பணம் கொடுத்தால் சித்தர் வரமாட்டார்கள்;
“மனிதனுக்கு சேவை செய்யணும்… நாலு பேருக்கு நல்லது செய்யணும்” என்பது முக்கிய போதனை.
🔹 5. நல்ல எண்ணங்கள் – உயர்ந்த உள்ளம்
உயர்ந்த எண்ணங்கள் இருந்தால் இறைவன் உட்கார்ந்து வழிநடத்துவார்.
கெட்ட எண்ணங்கள் இருந்தால் வாழ்க்கை பள்ளத்தில் தள்ளப்படும்.
🔹 6. புண்ணியம் – பாவம்
கண்ணதாசன் கூறிய வரிகள் மேற்கோள்:
“நீ செய்த தர்மமோ பாவமோ ஒரு நாள் உன்னை அடிச்சுவிட்டு செல்லும்”
புண்ணியம் இருந்தால் சுற்றியவர்களும் உயர்வார்கள்;
பாவம் இருந்தால் சுற்றியவர்களும் அழிவார்கள்.
🔹 7. மனநிலை – தெளிவு
தெளிவான மனதில் இறைவன் ஆராய்வார்.
திருமூலர் கூறிய “தெளிவு” முக்கியம் என வலியுறுத்தப்படுகிறது.
🔹 8. குருநாதர் – வழிகாட்டுதல்
குருநாதர் சரியான நேரத்தில் வந்து வழிநடத்துவார்.
அவரின் வார்த்தையை கேட்க வேண்டும்.
🔹 9. தர்மம், நீதியில் இருந்து விலகக்கூடாது
“புரண்டுடாதீங்க… யாருக்கு வினை உங்களுக்கு தான் வினை”
தர்மத்தில் நிலைத்திருந்தால் இறைவன் கையை பிடித்து கூட்டிச் செல்வார்.
🔹 10. வாழ்க்கை – நியூஸ் பேப்பர் உதாரணம்
“இன்றைய நியூஸ் பேப்பர், நாளை வேஸ்ட் பேப்பர்”
மனித வாழ்க்கையும் அதுபோல; நல்லதை மட்டும் எடுத்துச் சொல்ல வேண்டும்.
🔹 11. கலியுகத்தில் வாழ்வது கஷ்டம்
பொய், ஏமாற்றம், கெட்ட எண்ணங்கள் அதிகம்.
அதனால் புண்ணியம் செய்ய வேண்டும், நல்ல மனதோடு இருக்க வேண்டும்.
🔹 12. இறைவன் மிகப்பெரிய ஆள்
மனிதன் தூசி போன்றவன்;
இறைவன் ஒரு காற்றால் எல்லாவற்றையும் மாற்றிவிடுவார்.
( உரையின் நிறைவில் திருக்கைலாய வைத்திய குழுவினருக்கு ரூ 10,000 அளித்து மரியாதை செய்தார்கள் ) 
ஒரு அம்மை அடியவரின் உரை:- https://youtu.be/npiKG6l6z6o?t=29217 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, படிப்போம்; அடுத்த அகத்தியர் என்ன சொல்றார்னு பார்ப்போம். 

https://youtu.be/npiKG6l6z6o?t=29277 

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் ரகசியத்தைச் சொல்லப் போகின்றேன்.  அதனுள்ளே முருகனை அப்பனே, அனைவரும் அப்பனே, பின்—அதாவது மனதார பாடுங்கள். 

குருநாதர் :- அவை மட்டும் இல்லாமல், அப்பனே, அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று அப்பனே, அண்ணாமலையோனும் உண்ணாமலை தேவியும் அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட மனதார— அப்பனே, பின் ஒரு நிமிடம்— எதை என்று கூறப்பின், அப்பனே, பின் மனதார தியானித்துக் கொண்டு, பின் எழுந்து நின்று பாடல் பாடுக, அப்பனே, நிச்சயம்— அப்பனே, பின் எவை என்று கூற வெற்றி கிட்டும். அனைவரும் அப்பனே, எவை என்று கூறப்பின் சுகமாக வாழ்வார்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் எழுந்து நில்லுங்க, ஐயா. ஐயா, நல்லா ஒரு நிமிஷம். அண்ணாமலையாரையும் உண்ணாமலையாரையும் நினைச்சு, எல்லாரும் நல்லா இருக்கணும்ப்பா. நானும் நல்லா இருக்கணும்; எங்களை சார்ந்தவரும் நல்லா இருக்கணும்; இந்த நாடும் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு, வேண்டிக்கிட்டு, அப்படியே எழுந்து நில்லுங்க. முருகரை வாழ்த்தி பாடுவோம்; அப்பொழுது ஒரு வாக்கு சொல்வார். 


===========================
#   அனைவரும் 1 நிமிடம் தியானம்  செய்தனர்….
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=29334

(அதன் பின்னர் …..) 

பாடல் ….கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை….
https://youtu.be/npiKG6l6z6o?t=29395

===========================
#   பஞ்ச ஸ்தலம், அறுபடை வீடு ரகசியங்கள்….வாக்கு ஆரம்பம் 
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=29855   

குருநாதர் :- அப்பனே, அறிந்தும் கூட—அதாவது, அறுபடை வீடுகளைப் பற்றியும், அப்பனே, பஞ்ச ஸ்தலங்களைப் பற்றியும்—ரகசியத்தைச் சொல்லப் போகின்றேன், அப்பனே. இதனால்  அறுபடை, அப்பனே, பின் நிச்சயம் போற்றிப் பாடுக. 

சுவடி ஓதும் மைந்தன் :-   ரகசியம் சொல்றார்: அறுபடை வீடு பற்றியும், பஞ்ச ஸ்தலங்களைப் பற்றியும். அதனால, அறுபடை வீடு வர்ற மாதிரி, ஒரு எல்லாத்தையும் ஒரு பாடல் பாடி…..

பாடல் …. அறுபடை வீடு கொண்ட திருமுருகா…
https://youtu.be/npiKG6l6z6o?t=29886

===========================
#   முருகப்பெருமானின் சேனாதிபதிகள்  ரகசியங்கள்
===========================


https://youtu.be/npiKG6l6z6o?t=30407 

குருநாதர் :-  அப்பனே அறிந்தும் இவை என்று ஆறு அதாவது மனிதனுக்கு அப்பன நிச்சயம் தன்னில் கூட அப்பனை எவை என்று புரிய 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா மனிதனுக்கு எத்தனை அறிவு ஐயா?

அடியவர்கள் :- ஆறு 

குருநாதர் :-  அப்பனே, அறிந்தும் கூட, இவ் ஆறறிவை அப்பனே மனிதன் பயன்படுத்துகின்றானா என்றால், நிச்சயம் அப்பா, நீங்கள் சொல்லுங்கள்?

அடியவர் 3:- இல்லை 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆறறிவும் மனிதன் பயன்படுத்துகின்றானா என்றால்?....... 

சுவடி ஓதும் மைந்தன் :-  இல்லை. 
https://youtu.be/npiKG6l6z6o?t=30442

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அதாவது, அப்பனே, எதை என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, தன் படைபலத்தை அப்பனே, பின் தன் சேனாதிபதிகள் எல்லாம், அப்பனே, பின் அறுபடைகளில் கூட, அப்பனே, முருகன் அமர்த்தி  உள்ளான், அப்பா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா? படை—தன்னோட படையில் எங்க அமைத்திருக்கார்? ஆறு படைகளிலும் தன்னோட—ஐயா, புரியுதுங்களா, ஐயா? ஐயா, 

சுவடி ஓதும் மைந்தன் :- ஆறு படைகளிலும் என்ன அமைச்சிருக்கார்? முருகர் தன்னோட சேனாதிபதிகளை ரெடி பண்ணி வச்சிருக்கார். 

===========================
#   அறுபடை வீடுகள் தரிசனம் = ஆறு அறிவு வளரும்…
===========================
# தொடர்ந்து தரிசனம் செய்து கொண்டே இருங்கள்……
===========================

குருநாதர் :-   எதை, ஏது என்று புரிய—இதனால், பின் ஆறு அறிவை…. ஆறு அறிவும் இயக்க வேண்டும் என்றால், அடிக்கடி, நிச்சயம் அங்கு சென்றால், நிச்சயம் ஆறறிவும் தானாக வளரும் அப்பா.
 
அடியவர் :- சிவாய நம !!!!!  .
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா?
 
அடியவர் :-  அறுபடை வீடுகளுக்கு போக சொல்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன் அறுபடை வீடுகளுக்கு அடிக்கடி போக சொன்னாருன்னா, ஆறறிவு எல்லாருக்கும். அந்த ஆறறிவு யாரும் வேலை செய்றது இல்ல. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அந்த ஆறறிவும் வேலை செய்யணும்னா, எங்க போகணும்? அறுபடை வீடு போகணும்னு சொல்றாருங்க, ஐயா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப அறுபடை வீடுக்கு போனா மட்டும்தான்?  

அடியவர் :-  ஆறறிவு வளரும். 

குருநாதர் :-  எதை என்று புரிய—ஏனென்றால், மனிதனை பின் செதுக்குவதற்காக சேனாதிபதிகளை விட்டு வைத்திருக்கின்றான் முருகன். அதனால், முதலில் பின் குத்துவார்கள் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட.
 
அடியவர் :-  நம்மளை செதுக்கணும். மனிதர்களை செதுக்கணும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   முதல்ல என்ன பண்ணுவாரு? உடனே கொடுத்துட மாட்டாரு. என்ன பண்ணுவாரு? ஒரு அறிவும் வந்து செயல்படுத்தி என்ன பண்ணுவாரு? சேனாதிபதியை வச்சுக்கிட்டு என்ன பண்ணுவாரு?
 
அடியவர் :-  குத்துவாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   செதுக்குவாருங்க, ஐயா, முதல்ல.
 
அடியவர் :-  ஒரு கல் எப்படி சிலையாகும்? குத்தி குத்தி தான்… அதை சிலையாக்க முடியும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால என்ன பண்ணுவாங்கன்னா, முதல்ல—ஐயா, புரியுதுங்களா? முதல்ல என்ன பண்ணுவாரு?
 
அடியவர் :-  குத்தணும். குத்துனா உடைச்சாதான்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  உடைச்சாதான். 

குருநாதர் :-  எதை என்று அறிய—ஆனாலும், இதை கூட மனிதனுக்கு தெரியவில்லை. எதை என்று புரிய—பின் அறுபடை வீடு, அறுபடை வீடு என்று சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள். எப்படி இறைவனை காண்பான் இவ் புத்திசாலி மனிதன்? 

சுவடி ஓதும் மைந்தன் :-   விளையாட்டா சொல்றாரு. இப்படி புத்திசாலி இருக்கிறான்ப்பா மனுஷன். அறுபடை வீடு பத்தியும்?
 
அடியவர் :-  ஒன்னும் தெரியல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஒண்ணுமே தெரியல.
 
அடியவர் :-  சும்மா சுத்தி சுத்தி வந்துட்டு இருக்கான். பேசிக்கிட்டே.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  சும்மா வந்து— 

===========================
#   ஒவ்வொரு அறுபடை வீடுகளும் , ஒவ்வொரு அறிவுகள் அருளும்.
===========================

குருநாதர் :-  அறிந்தும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட—இவ்வாறாக, நிச்சயம் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு—எவை என்று—ஒவ்வொரு அறிவு என்பேன். 

குருநாதர் :- எதை என்று புரிய—இதை புரிந்து கொண்டு சென்றாலே, பின் அறிவு பலமாகும்.  வெற்றியும் நிச்சயம்.
 
அடியவர் :-    ஒவ்வொரு வீடுக்கும், ஒவ்வொரு படை வீடுக்கும் ஒரு அறிவு இருக்குன்றாரு. இதை புரிஞ்சுக்கிட்டு போனாலே, நமக்கு வெற்றி வரும்ன்றாங்க. வெற்றி…. ஆறறிவு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஆறறிவு.
 
அடியவர் :-  அறுபடை? ஆறறிவு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஆறறிவு. உங்களுக்கு ஆறறிவும் செயல் பண்ணனும்னா, என்ன பண்ணனும்?
 
அடியவர் :-  ஆறுபடை வீடுக்கும் தொடர்ச்சியா போயிட்டு இருக்கணும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   போயிட்டே இருக்கணும். அப்பதான் என்ன ஆகும்?
 
அடியவர் :-  ஆறறிவு வேலை செய்யும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஆறறிவு வேலை செய்யும். இல்லையென்றால்?
 
அடியவர் :-  செயல்படும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   செயல்படும். இல்லையென்றால்?
 
அடியவர் :- அவ்வளவுதான். முட்டாளா இருக்க வேண்டியதுதான்.
https://youtu.be/npiKG6l6z6o?t=30603 

குருநாதர் :-  எதை என்று அறிய—இதனால்தான், எதை என்று புரிய—பின் சேனாதிபதிகள் எல்லாம், பின் முருகன் அமைத்து வைத்திருக்கின்றான். நிச்சயம் தன்னில் கூட, 

குருநாதர் :-   கலியுகத்தில், ஆறு அறிவை வைத்துக்கொண்டும், மனிதன் செயல்பட மாட்டான் என்பது, பின் ஏற்கனவே, பின்—அதாவது, இட்ட கட்டளை, ஈசன். 

குருநாதர் :-   இதனால், பின் நிச்சயம் தன்னில் கூட, வருவோருக்கெல்லாம், அம்பினால் குற்றி, நிச்சயம் ஆறறிவை பொங்கச் செய்வான். அவ்வளவுதான். இதுதான் அறுபடை வீடு.
 
அடியவர் :- அப்பா !!!!!!
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, சொல்லுங்க, ஐயா.
 
அடியவர் :-  கலியுகத்துல மனுஷனுக்கு ஆறறிவு இருந்தா கூட, ஒன்னும் செய்ய மாட்டான். அதனாலதான் வந்து, இது சிவபெருமானுக்கே இது தெரியுமாம். அதனாலதான் முருகப்பெருமான், அவருடைய சேனாதிபதி வீரர்களை வச்சு, ஒவ்வொரு படை வீடு போறப்போ, அம்பை வச்சு குத்தி குத்தி, அந்த ஆறறிவை பொங்க செய்றாரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- முதல்ல என்ன பண்ணுவாரு? எல்லாம் கொடுக்க மாட்டாரு. அறிவை—

குருநாதர் :- எதை, ஏது என்று புரிய—புதைத்திருக்கும் அறிவை, பின் வழிகாட்டுவான். அறிந்து கூட, பின் முருகப்பெருமான்.
 
அடியவர் :- புதைஞ்சு கிடக்குது இந்த அறிவு. அதை வெளிக்கொண்டு வர்றதுக்கு தான் முருகப்பெருமான் உதவி செய்றாரு.

===========================
#   குருநாதர் சொல்லும் வழிமுறைகளை மட்டும் பின்பற்றுங்கள்.
===========================
#   மற்ற அனைத்தையும் தூக்கி எறியுங்கள்.
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=30660 


குருநாதர் :- ஆனால், எதை என்று புரிய—நிச்சயம் தன்னில் கூட, மனிதனுக்கு அதுவும் கூட, நிச்சயம் தெரியவில்லை. எவை என்று யான் கூற….

குருநாதர் :- இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, பின்—அதாவது, அங்கு சென்றால் இது நடக்கும். 

குருநாதர் :- எவை என்று புரிய இவையெல்லாம் தூரே, பின் தூக்கி எறியுங்கள், அப்பா.
 
அடியவர் :-  அங்க போனா அது நடக்கும். இங்க போனா இது நடக்கும். தயவு செஞ்சு இதெல்லாம் தூக்கி போடுங்கப்பான்றாங்க.
 
குருநாதர் :- அறிந்து எதை என்று கூற—உன்னில் எவை என்று கூற—பின் ஆறு அறிவை, பின் எழுப்பும். அதனை வைத்துக்கொண்டு நீங்கள் முன்னேறலாம். அவ்வளவுதான்.
 
அடியவர் :-   ஆறுபடை வீடுக்கு போனா, உங்களுடைய ஆறறிவை வந்து பொங்கி வரச் செய்யும். அதை வச்சு நீங்க பொழைச்சுக்கலாம்ன்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பொழைச்சுக்கோங்கன்றாரு. 

===========================
#   சூரசம்ஹார ரகசியங்கள்.
===========================

குருநாதர் :- எதை, ஏது என்று புரிய இதனால், நிச்சயம் தன்னில் கூட—சொல்லிவிட்டேன் எவை என்று புரிய.

குருநாதர் :- இதனால்தான், பின் சூரசம்ஹாரம் எப்படி நடக்கின்றது பாருங்கள். ஆறறிவை நீங்கள் பின் சரியாக பயன்படுத்தவில்லை என்றால், நீங்கள் பின் வாழ்க்கை—அப்படியே—எவை என்று கூற—பின் புதைத்து விடுவான் முருகப்பெருமான்.
 
அடியவர் :- அப்பா, சூரசம்ஹாரம் எதுக்கு?
 
சுவடி ஓதும் மைந்தன் :-  சூரசம்ஹாரம் எதுக்கு நடக்குது?
 
அடியவர் :-  ஆறறிவு இல்லன்னா?
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஆறறிவு இல்லன்னா, அவன் என்ன பண்ணுவாரு? நீ வேஸ்ட்டாய், அப்பா. உன்னை போட்டு, உன்னை தாக்குற வேலை விட்டு, குட்டு, நீ ஒதுங்குறான்ட்டு, உன்னை என்ன பண்ணுவாரு?
 
அடியவர் :-  குத்தி தூக்கிருவார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  என்னங்க, ஐயா?
 
அடியவர் :-  குத்தி தூக்கிருவார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அதுதான்—என்னது, ஐயா?
 
அடியவர் :-  சூரசம்சாரத்துடைய ரகசியம்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா, ஐயா? தூங்கிக்கிறீங்களா, யாரும்?
 
அடியவர் :- தூங்கல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  தூங்காதீங்க. இறைவன் நம்மளுக்கு கொடுக்கிறது வந்து பெரிய விஷயங்கள். இதெல்லாம் வந்து—இந்த உலகத்துல நம்ம வந்து இதெல்லாம் வந்து தெரிஞ்சுக்கணும்னா, பெரிய யாராலும் சொல்ல முடியாது.
 
அடியவர் :-  யாருக்கும் தெரியாது.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  யாருக்கு தெரியும்? சித்தர்கள் வந்தாதான் தெரியும். எல்லாருக்கும் இப்படி எல்லாம் இருக்குதான்னு சொல்லிட்டு.
 
அடியவர் :-  கோடி கோடி ரூபாய் கொட்டி கொடுத்தா கூட, இந்த ஞானம் கிடைக்காது.
 
ஆறறிவை நம்ம கரெக்டா பயன்படுத்தனும்னா, எங்க போகணும்?
 
அடியவர் :-  ஆறுபடை வீடுக்கு போகணும்.
 
குருநாதர் :- எதை, ஏது என்று அறிய—இப்படியே அறிந்தும்—அதை பின் அதைப் பற்றியும் இன்னும் விளக்குவேன். ஆனாலும், உங்களுக்கு நேரமில்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாரும் உங்களுக்கு நேரமில்லை. நீங்க கிளம்பணும். அதைப் பற்றி இன்னும் அப்புறம் வச்சுக்கலாம்.
 
அடியவர் :-  நெளிய ஆரம்பிச்சுருவீங்க. கொஞ்ச நேரம் ஆனா.

===========================
#   இறைவியின் முப்படை ரகசியங்கள்.
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=30758 

குருநாதர் :-  எதை என்று அறிய முப்படை பற்றி கூறுங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முப்படை பற்றி கூறுங்கள். முப்படை—
 
சுவடி ஓதும் மைந்தன் :-  விமானப்படை.
 
அடியவர் :-   தரைப்படை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா?
 
அடியவர் :-   காலாட்படை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  கப்பல் படை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  என்னங்க, ஐயா?
 
அடியவர் :-  காலாட்படை.
 
அடியவர் 3 :-தரைப்படை, விமானப்படை, கப்பல் படை. 

குருநாதர் :-   அப்பனே, எதை என்று அறிய 

***** காஞ்சி காமாட்சி, ***** 

*****  அப்பனே மதுரை மீனாட்சி ***** 

*****  அப்பனே, எவை என்று அறிய நிச்சயம் காசி விசாலாட்சி அப்பா. ***** 

குருநாதர் :- இதற்கு எவை என்று இதனால், எவை என்று புரிய பின்—அதாவது, பின் நீங்கள் என்ன செய்கின்றீர்களோ, தயாராக வைத்திருக்கின்றாள் அப்பனே, சொல்லிவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  முப்படை யாரு?
 
அடியவர் :-  காஞ்சி காமாட்சி  அம்மா

அடியவர் :-  மதுரை மீனாட்சி அம்மா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லாம் ஒண்ணுதான்.
 
அடியவர் :-  காசி விசாலாட்சி அம்மா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   ஆர்மி ஒண்ணுதான். ஆனா என்ன பண்ணி வச்சிருக்காங்க, ஐயா? எல்லாம் வெயிட்டிங். யாரை போடுறதுக்கு வெயிட்டிங், ஐயா ?.....

அடியவர் :-  ( ஆச்சரிய சிரிப்புகள் ) 

===========================
#   இறைவனின் பஞ்சபூத படை ரகசியங்கள்.
===========================

https://youtu.be/npiKG6l6z6o?t=30812 

குருநாதர் :- அப்பனே, எவை என்று அறிய—ஈசன் பஞ்சபூத ஸ்தலங்கள், அப்பனே. நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு இறைக்கி  வைத்திருக்கின்றான் அப்பா. ஈசனும் கூட, அப்பனே, படைகளை கூட. ஏனென்றால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உலகம் எவையால் அழியும் என்பது எல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அங்கங்கு, அப்பனே.
 
அடியவர் :-  பாருங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப, பஞ்ச ஸ்தலங்கள்ல யார் இறக்கி வச்சிருக்கிறார்?
 
அடியவர் :-  முப்படை.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஈசன் என்ன இறக்கி வச்சிருக்கிறார்?
 
அடியவர் :-  முப்படை, அம்மா, வச்சிருக்காங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  முப்படை இல்ல. படையை .
 
அடியவர் :-  ஆமா, படையை .
 
குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய—அண்ணாமலை எதனை குறிக்கின்றது?
 
அடியவர் :-   நெருப்பு.
 
குருநாதர் :-  அப்பனே, எதை என்று அறிய—நெருப்பினால் அழிவு வரும். அதை நிச்சயம் தடுக்க, அப்பனே, இங்கு படைபலம் இருக்கின்றது, அப்பா. எதை என்று புரிய.
 
அடியவர் :-   சிவாய நம !!!!!  .
 
சுவடி ஓதும் மைந்தன் :-  நெருப்பினால் ? 

அடியவர் :-   உலகத்திற்கு அழிவு வரும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உலக அழிவு வரும். அதை காக்க? 
 
அடியவர் :-   அந்த.
 
சுவடி ஓதும் மைந்தன் :- படையைஎன்ன பண்ணி—படையை என்ன வச்சிருக்காரு?
 
அடியவர் :-   நெருப்பு படையை. ஒரு படம் வச்சிருக்காரு இங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :- படையை வச்சிருக்காரு.
 
குருநாதர் :-   அப்பனே, எவை என்று புரிய அவை மட்டுமில்லாமல், எப்பொழுதும், அப்பனே, பின் மனிதன் எதை என்று புரிய அப்பனே, சூடாகத்தான் இருப்பான் என்பேன் அப்பனே. இதனை குறைப்பதற்காகவே, எவை என்று புரிய—அப்பனே, தெரிந்து கொள்ளுங்கள். 

குருநாதர் :-  அப்பனே, சூடாக இருக்கும் மனிதனை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அண்ணாமலையை கண்டால், இறைவன் எரித்து விடுவான்.
 
அடியவர் :-   சிவாய நம !!!!!  .
 
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பவுமே சூடா இருக்கக்கூடாது. கூலிங்கா இருக்கணும் நம்ம வந்து. ஐயா, புரியுதுங்களா, ஐயா?
 
அடியவர் :-    சூடா இருக்கக்கூடாது. 

குருநாதர் :-  அப்பனே, எதை என்று கூற—ஒன்றை—பின் அடுத்து கூறுங்கள். 

அடுத்து என்ன? திருவண்ணாமலை பற்றி சொல்லிட்டோம். 

அடியவர் 2 :- நீர்.

குருநாதர் :- அப்பனே, எவை என்று புரிய—அப்பனே, நீரினால், அப்பனே, அழிவு வரும் என்பதெல்லாம் தெரியும். 

குருநாதர் :- அப்பனே, இதனால், எதை என்று புரிய—அப்பனே, எவை என்று அறிய—நிச்சயம் தன்னில் கூட தன்,  அப்பனே படையை,  அங்கேயும் இறக்கி வைத்துள்ளான் அப்பா. இதனால்தான், அப்பனே, பின் எதை என்று கூற நீங்களே உணருக. அடுத்தடுத்து.
 
அடியவர்  :- சிவாய நம !!!!!  , சிவாய நம !!!!!  .
 
சுவடி ஓதும் மைந்தன் :- நிலத்தினால் வரும். நீரினால் வரும். ஆகாயத்தினால் வரும்.
 
அடியவர்  :- காற்றால வரும்.
 
சுவடி ஓதும் மைந்தன் :- காற்றால வரும். அதனால, ஈசன் என்ன பண்ணிருக்காரு?
 
அடியவர்  :- ஒவ்வொரு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- ஒவ்வொரு இடத்திலயும் அவர் படையை நிறுத்தி வச்சிருக்காரு.

===========================
#   இறைவனின் பஞ்சபூத ஆலயங்கள் ஏன் அருகிலேயே உள்ளது ?
===========================


குருநாதர் :-  அப்பனே, கலியுகத்தில் இவை இதனால் அழிவு வரும் என்பதெல்லாம் ஏற்கனவே, அப்பனே, பல யுகங்களாக கணிக்கப்பட்டதே என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அதனால் அமைத்து வைத்துவிட்டான், அப்பா, ஈசன் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  அப்பனே, வெகு தொலைவு இல்லை என்பேன் அப்பனே. எவை என்று கூற—அப்பனே, பஞ்சபூத ஸ்தலங்கள் என்பேன் அப்பனே. அருகிலே இருக்கின்றது.  என்ன காரணம் என்று யாருக்காவது தெரியுமா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  பஞ்சபூத ஸ்தலங்கள் எல்லாம் பெருசு எல்லாம் இல்ல. இங்கே சுத்தி தான் இருக்குது.
 
அடியவர்  :-  ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பக்க பக்கமா இருக்குது, ஐயா.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏன்? 

அடியவர்கள்   :-  ( சிந்தனை ஓட்டங்கள் …. ) 

https://youtu.be/npiKG6l6z6o?t=30948 

குருநாதர் :- அப்பனே, எதை என்று புரிய—அப்பனே, நிச்சயம் தன்னில் கூட—பின் வரிசையாக இங்கிருந்து அடித்தால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட—எதை என்று புரிய—அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வேகமாக செல்லும் என்பேன் அப்பனே. வில், அம்புகள்.
 
அடியவர்  :-   ஓ.
 
சுவடி ஓதும் மைந்தன் :-இங்கிருந்து அடிச்சாதான்.
 
அடியவர்  :-   அந்த சக்தி இங்கதான் இருக்கு.
 
சுவடி ஓதும் மைந்தன் :- இங்கதான் இருக்குதுன்றார் சக்திகள். இந்த பஞ்ச—இது வந்து.

===========================
#   தாய் தந்தை தெரியவில்லை என்றால், என்ன ஆகும் குழந்தைக்கு ? 
===========================

குருநாதர் :-  அப்பனே, எதற்கு அறுபடை வீடு என்பதும் தெரியவில்லை. 


குருநாதர் :-  அப்பனே, முப்படைகள். அப்பனே, பின் அதிபதி. அப்பனே, எவை என்று அறிய—பின் அம்பாள் என்றும் தெரியவில்லை. 


குருநாதர் :-  அப்பனே, எவை என்று அறிய—அப்பனே, பின் ஏன் பஞ்சபூத ஸ்தலங்களும் என்றும் தெரியவில்லை என்பேன் அப்பனே. 

குருநாதர் :- அப்பொழுது இறைவனை வணங்கினால் என்ன ஆகும் என்பேன் அப்பனே. சொல்லி—எவை என்று அறிய—அப்பனே, நிச்சயம் தன்னில். 

குருநாதர் :- அதனால், நிச்சயம் தன்னில் கூட படைத்தவன் பற்றியே தெரியவில்லை. 

குருநாதர் :- அதாவது, நிச்சயம் தன்னில் கூட ஒரு பிள்ளைக்கு தாய் தந்தையே பற்றி—எவை என்று புரிய—நிச்சயம் தெரியவில்லை என்றால் என்ன ஆகும்….?  என்பதை நீங்கள் நினைத்துக் கொள்ளுங்கள்.
 
அடியவர்  :-   சிவாய நம !!!!!  .
 
சுவடி ஓதும் மைந்தன் :- எக்ஸ்பிளைன் பண்ணுங்க, ஐயா.
 
அடியவர்  :-  அதாவது, படைச்ச இறைவன்… நம்மள படைச்சாரு. தந்தை. தாய் தந்தையரை பத்தியே வந்து நமக்கு தெரியல. பஞ்சபூத ஸ்தலங்களுடைய ரகசியம் தெரியல. அறுபடை வீடு எதுக்கும் தெரியல. அம்மா, அம்பாளுடைய முப்படை எதுக்கும் தெரியல. அப்புறம் இறைவனை வணங்கி என்னப்பா பிரயோஜனம்?  அப்படின்றாங்க. இதை பத்தி தெரியாமல் இறைவனை எப்படி வணங்குறீங்கன்னு கேக்குறாங்க, ஐயா.?
 
சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி வணங்குறாங்க? அறுபடை வீடுன்னு எதுக்குன்னே தெரியல. உன்னுடைய அறிவை.
 
அடியவர்  :-  பயன்படுத்தல.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  பயன்படுத்துவதற்காக. பயன்படுத்தல. அதனால, பயன்படுத்துவதற்காகத்தான்.
 
அடியவர்  :-  அறுபடை வீடு.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  அறுபடை வீடு.
 
அடியவர்  :-   மக்களை பல்வேறு இடர்பாடுகளில் இருந்து நீர், நிலம், காற்று, ஆகாயம், இந்த மாதிரியான பஞ்சபூதங்களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளில் இருந்து மக்களை பாதுகாக்கிறதுக்கு தான் பஞ்சபூத ஸ்தலங்கள்ல இறைவன் தன்னுடைய படையை நிறுத்தி வச்சிருக்கிறார்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  படையை நிறுத்தி வச்சிருக்கிறார். இதனால் அழிவு வரும். 

குருநாதர் :-  அப்பனே, இதனால் அழிவுகள் வந்து கொண்டே தான் இருக்கின்றது என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  எதை என்று புரிய—அப்பனே, பின் மனிதன், அப்பனே, பின் அதாவது, புத்திக்கு எட்டாத வரையில், அப்பனே, பின் எட்டாத வகையில் இறைவன் இருக்கின்றான் அப்பா. 

குருநாதர் :-  எப்படிதான் உணர்ந்து கொள்ள போகின்றானோ என்பேன் அப்பனே.


அடியவர்  :-  இப்படி மனிதனுடைய புத்திக்கு எட்டாத வகையில… நீங்க செயல்படுறதுனாலதான், அதாவது, அழிவுகள் வந்து கொண்டே இருக்கு, அப்படின்றாங்க.
ttps://youtu.be/npiKG6l6z6o?t=31059 


குருநாதர் :- அப்பனே, எதை, ஏது என்று புரிய—அப்பனே, இன்னும் அவதாரங்கள் பல பல. ஏன், எதற்கு என்று தெரியாமலும் மனிதன் இருக்கின்றான் என்பேன் அப்பனே. தெரிந்து கொண்டால்தான், அப்பனே, நிச்சயம் நீயும் வாழ்வாய்.  அப்பனே, மற்றையும் வாழச் செய்வீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.
 
அடியவர்  :-  நிறைய அவதாரங்கள் எல்லாம் இருக்குப்பா. அதை பத்தி எல்லாம் ஒன்னும் தெரியலப்பா. அதை பத்தி எல்லாம் தெரிஞ்சுகிட்டாதான் நீங்களும் வாழ்வீங்க. மிச்சம் எல்லாரும் வாழ முடியும், நன்றாக வாழ முடியும்ன்றாங்க.

===========================
#   தாய் மூகாம்பிகை அன்னை , கொல்லூர் ரகசியங்கள் 
===========================
 
குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய—அப்பனே, இவ்வாறாக, அப்பனே, பின், அப்பனே, அனைத்தும் மூன்று மூன்று. எவை எவை என்று கூறுக. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாமே மூன்று மூன்று. என்னென்ன கூறுகன்றார்?
 
அடியவர்  :-  மூன்று மூன்று.எதை சொல்லுவோம்?

அடியவர்  2 :- பிரம்மா , விஷ்ணு , சிவன் 
 
அடியவர்  :-  மும்மூர்த்திகள்.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  மா, பலா,  வாழை.
 
அடியவர்  :-  முக்கணிகள்.
 
அடியவர் 2, சுவடி ஓதும் மைந்தன் :-   நேற்று, இன்று, நாளை.
 
ஒரு அடியவர் :- இயல் இசை நாடகம் 
 
அடியவர்  :-  இயல் இசை நாடகம் 
 
அடியவர்  :-  அதான்ப்பா, மும்மூர்த்திகள் சொல்லியாச்சு. முக்கணிகள் சொல்லியாச்சு. இயலிசை நாடகம், மூவிசைகள் சொல்லியாச்சு. வேற இந்த மாதிரி செட்டா. 

ஒரு அடியவர் :- மும்மலங்கள்.

அடியவர்  :-  மும்மலங்கள். சூப்பர். அப்புறம்.
https://youtu.be/npiKG6l6z6o?t=31127 


குருநாதர் :-   அப்பனே, இவை யாவும் ஓரிடத்தில்  சென்றால் அனைத்தும் விலகிவிடும் என்பேன் அப்பனே. எவை என்று புரிய—அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் ஒரே நேர்கோட்டில், அப்பனே, இழுத்துச் செல்லும் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-   அனைத்தும், அப்பனே, பின் ஒன்றும் வேண்டாம் என்ற நிலைமை ஏற்படும் என்பேன் அப்பனே. 

குருநாதர் :-  வெற்றி வாய்ப்பை, அப்பனே, பின் ஒளி அலைகளாக, அப்பனே, நிச்சயம் அங்கு வந்து குவியும் என்பேன் அப்பனே. எவை என்று கூற—அவை தான், அப்பனே, பின் முகா. எவை என்று அறிய—நிச்சயம் தன்னில் கூட, பின் மூன்று வகையான அம்பிகளாக, ஒரே அம்பிகளாக செயல்படுகின்றாள் என்பேன் அப்பனே. 

===========================
#   குருநாதரின் பொது உத்தரவு அனைவருக்கும்.
#  நிச்சயம் அனைவரும் அடுத்தடுத்து சென்று வருக…..
===========================

குருநாதர் :-   நிச்சயம் அங்கு சென்று வருக, அனைவரும் கூட, அப்பனே, பின் அடுத்தடுத்து, அப்பனே.
 
அடியவர்  :-  சிவாய நம !!!!!     சிவாய நம !!!!!  .
 
அடியவர்  :-  மூகாம்பிகை. கொல்லூர். மூகாம்பிகை அம்மன். அங்க போனீங்கன்னா இந்த மும்மலங்களை அழிக்கலாம். சூப்பரா சொல்லிருக்காங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-   டைரக்டா. அங்க என்ன ஆகுது, ஐயா?
 
அடியவர்  :-  மூன்று சக்திகளுடைய ஆற்றல்களும் அங்க வந்து கொல்லூர்ல வந்து அதிகப்படியா கிடைக்கிறதுனால, அங்க போனா இந்த மும்மலங்களை அழிக்கலாம்ன்றாங்க. 

===========================
#  தாய் மூகாம்பிகை அன்னை ஆலய தரிசனம் 
===========================
#  மாந்திரீகங்கள், மாய வித்தைகள் செய்தவரையே திருப்பி தாக்கும் 
===========================

குருநாதர் :-  எதை, எவ்வாறு, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட இன்றளவில் எவை என்று புரிய—அதிக அளவு ஆற்றல், அனைத்து கிரகங்கள் ஆற்றல் ஒரு சேர, நிச்சயம் தன்னில் கூட ஒரு புள்ளியில் பின் இருத்தி, நிறுத்தி, நிச்சயம் பின் அங்கு குவிய, எதை என்று அறிய—நிச்சயம் தன்னில் கூட மனிதனுக்கு பின் ஏற்படும் எவை என்று கூற—மாய வித்தைகள் பின் அழிந்து போகும் சொல்லிவிட்டேன். எவை என்று புரிய—பின் அழிந்து, பின் அப்புள்ளி எவை என்று கூற—அவ்  ஈர்ப்பு விசையை மனிதன் பின் ஏற்றுக்கொண்டு மீண்டும் அவ்விசையை பின் எவன் எவை என்று கூற செய்தானோ, அவனிடத்தில் மீண்டும் மாற்றப்படும் சொல்லிவிட்டேன்.
 
அடியவர்  :-  சிவாய நம !!!!!  . சிவாய நம !!!!!  . சிவாய நம !!!!!  . 

அடியவர்  :-  யாரெல்லாம் இந்த மாந்திரீகங்கள், இந்த மாதிரியான பிரச்சனைகள்ல, மாய வித்தைகள்ல பாதிப்பட்டுக்கிறாங்களோ, அவங்க போனா, அங்க போனா, அந்த வந்து அங்க வந்து அந்த ஆற்றல் அதிகமா இருக்கிறதுனால, அதை ஈர்த்து யார் உங்களுக்கு விட்டாங்களோ, அவங்களுக்கே திருப்பி போயிடும்ன்றாங்க.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  போயிடும்ன்றாங்க. 

குருநாதர் :-  எதை என்று கூற—நிச்சயம் தன்னில் கூட இவ் தேசத்தில் எதை என்று புரிய—அனைத்தும் எவ்வாறெல்லாம் கற்றுக் கொண்டிருக்கின்றார்கள் என்பதை எல்லாம் நிச்சயம் தன்னில் ஏன், எதற்காக, எவை என்று புரிய—எதை என்று அறிய—இன்னும்  பின் சித்தர்கள் வந்து சொல்வார்கள், உங்களை நீங்கள் வெல்ல. 

குருநாதர் :-   இதனால் நல்விதமாகவே எவை என்று கூற பின் வெற்றிக்கான படிகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இன்னும் ரகசியத்தை சொல்கின்றேன். பின் அதாவது, வேலோனை துதித்து பாடுக.
 
அடியவர்  :-   நிறைய ரகசியங்கள் இருக்குப்பா. சித்தர்கள் எல்லாம் சொல்லுவாங்க. ஒன்னு ஒன்னா சொல்றோம். மூகாம்பிகை எல்லாம் கட்டாயம் போயிட்டு வாங்கன்னு சொல்லி இருக்காங்க. குருநாதர் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் ஆலயம். எல்லாரும் போயிட்டு வாங்க. நிச்சயமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  ஏற்கனவே சொன்னாரு.
 
அடியவர்  :-  ஆமா.
 
சுவடி ஓதும் மைந்தன் :-  முருகன் பாடல் பாடுங்க, ஐயா.
 
அடியவர்  :-  முருகன் பாடல் பாடுங்க.
 
பாடல் …. ஆடுகின்றானடி தில்லையிலே 
https://youtu.be/npiKG6l6z6o?t=31309 

பாடல் …. பித்தா பிறைசூடி பெருமானே 
https://youtu.be/npiKG6l6z6o?t=31552

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment