​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 7 September 2026

சித்தன் அருள் - 2293 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 18!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்கு - பகுதி 18 ( நிறைவு பகுதி)

வாக்குரைத்த நாள், நேரம்  :-  05/07/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 

===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின் பொற்  கமலத்தை பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அம்மையே, அப்பனே, அனைவருக்குமே எம்முடைய ஆசிகள். 

( பகுதி 17  அதன் தொடர்ச்சியாக ….)

===========================
# அடியவர் #15 - தர்மத்தை பற்றி உரைத்து ஆரம்பித்தார்கள்…
===========================

அடியவர் # 15:- ஐயா, எல்லாரையும், நம் போலைவே  நடத்தி, அன்பாக நடத்துறதுதான் தர்மம். 

குருநாதர் :- அப்பனே, யாருக்காவது இருக்கின்றதா இக்கலியுகத்தில்? 

அடியவர்கள் :- ( அமுக்க சிரிப்புகள் )

அடியவர் 7  :- யாருக்காவது  இருக்கான்னு கேட்கிறார். 

அடியவர் # 15:-  முயற்சிதான் செய்ய வேண்டும். 

குருநாதர் :-  அப்பனே, முயற்சி செய்யாவிடில்? 

அடியவர் # 15:-  நம்மளுக்கு கர்மம் வந்து சேரும்.

குருநாதர் :-  அப்பனே, பயிற்சி எடு. 

அடியவர் 7  :- முயற்சி பண்ணா பயிற்சி எடு. வேற எதாவது கேட்கணுமா. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய அப்பனே, கவலைகள் வேண்டாம் அப்பனே.

சுவடி ஓதும் மைந்தன் :- அதை பத்தி கவலைப்படாதப்பா. பண்றவன் நிறைய இருக்காங்க. நான் ஏற்படுத்தி பண்ணிக்கிறேன்ட்டார். அடுத்து?

===========================
# அப்பனே, யார் தேர்வு எழுதட்டுமா?
===========================

அடியவர் # 15:- ஐயா, காலேஜ் இப்பதான் லாஸ்ட் இயர் வந்திருக்கேன். ஐயா தான் பார்த்து எனக்கு கைட் பண்ணனும். அடுத்த வேலை எல்லாம். 

குருநாதர் :-  அப்பனே, யான் எழுதட்டுமா? 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  எக்ஸாம் நான் எழுதட்டுமா? 

அடியவர் #15:-  இல்ல, இல்ல. அடுத்து வேலைக்கு அதெல்லாம் அவங்கதான் பார்த்து. 

குருநாதர் :-  அப்பனே, முதலில் அப்பனே இது எழுதி தருகின்றேன். பின்பு பார்ப்போம். 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் எழுதி பாஸ் பண்றேன். அப்புறம் வந்து வேலை தரேன் பண்றேன். 

ஒரு அடியவர் :- ( ஆச்சரியத்துடன் ) அய்யா எக்ஸாம் (குருநாதர்) அவரே  எழுதிடுறாரா அய்யா?. 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா, அவருக்காக ஹெல்ப் பண்ணுவாரு. இவர் சரியா படிக்கல மாதிரி தெரியுது. 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )

சுவடி ஓதும் மைந்தன் :- ஏதாவது பண்ணுவாரு. வேற ஒன்னும் இல்ல. ஏதாவது பண்ணுவாரு. 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் )

ஒரு அடியவர் :- அப்படித்தான் வந்துட்டு இருக்கு. 

அடியவர் 7:- அதுதான் எழுதி பண்ணுவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது பண்ணுவாரு. ஓகேங்களா? 

===========================
# பல் வலிகள் நீங்க - வேப்பிலையால்  அனுதினமும் பல் துலக்க நன்று.
===========================

அடியவர் #15:-   அப்படியே எனக்கு பல்லு வியாதி வந்திருக்கு. அதுக்கு ஏதாவது செய்யணுமா? இல்ல, அப்படியே விட்டுரலாமா? 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூட அனுதினமும் எது என்று புரியஅப்பனே, நிச்சயம் தன்னில் கூட வேப்பிலையால் அப்பனே, பின் இதற்கு ஏற்கனவே உரைத்துவிட்டேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- நிறைய விஷயங்கள் உரைச்சிருக்காரு. நல்லா வந்து வேப்பிலை நல்லா பண்ணுங்க. இது பண்ணுங்க. அப்படியே இப்படி பண்ணி ஓகேங்களா? 

அடியவர் #16:-  ரூட் கேனல் பண்ண சொல்றாங்க. பண்றதா? எனக்கு 13 பல்லுக்கு ரூட் கேனல் பண்ணனும் அப்படின்னு சொல்லி இருக்காங்க. இப்ப அதுக்காகத்தான் கேக்குறேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- அது என்ன சொல்றதுன்னா கொஞ்சம் அந்த 

அடியவர் #16:-  (இடை மறித்து…. ) அது ரைட்டு. இப்ப ஐயா சொல்லி இருக்கிறது எல்லாம் செய்யணுங்கிறது… எல்லாம் ரைட்டு. இது ஒன்னு கூட வாயில வைக்காது. அதான் ரூட் கேனல் பண்றதா? என்னன்னு? 

குருநாதர் :- எதை என்று புரிய முதலில் எவை என்று கூற பின் அதாவது பின் நுழை. 

சுவடி ஓதும் மைந்தன் :- நல்லா அந்த இது வேப்பிலை  இருக்கு பாருங்க. அந்த அமுத்துமான்னு சொல்றாரு. அமுத்து போடு. கடி. அப்புறம் பாத்துக்கலாம்ன்றாரு. ஓகேங்களா? 

===========================
# அடியவர் #17 – வாக்குகள்
===========================

அடியவர் #17:-  ……………

குருநாதர் :-  எதை எது என்று புரிய எம்முடைய ஆசிகள் யான் பார்த்துக் கொள்கின்றேன். எவை என்று புரிய அனைத்தும். 

அடியவர் #17:-  அவங்க அப்பா, அம்மாவுக்கும் …………

குருநாதர் :-  எதை என்று புரிய யான் பார்த்துக் கொள்கின்றேன் என்று சொல்லிவிட்டாலே என்ன? 

சுவடி ஓதும் மைந்தன் :- யான் பார்த்துக் கொள்கின்றேன்? ஓகே, 

குருநாதர் :-  இதனால்  எது என்று புரிய. எவை என்று புரிய. இதனால்  நிச்சயம் பின் சற்று பொறுத்தே எவை என்று ஒரு விதியின் பாதையில், 

சுவடி ஓதும் மைந்தன் :-  விதியின் பாதையில இப்ப சிக்கி இருக்காங்க. அதனால கொஞ்சம் பொறுத்து. ஏன்னா விதியில இருந்தா வந்து ரொம்ப அது கொஞ்சம் கொஞ்சம் இருங்க. ஏதாவது அகத்தி பண்ணனும். விதியின் பாதையில கொஞ்சம் இதா இருக்கு. 

குருநாதர் :-  அப்பனே, கவலைகள்  இல்லை. பார்த்துக் கொள்வோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது அகத்தியர் பண்றேன்னு சொல்லி இருக்காரு. 

அடியவர் #17:- புவனேஸ்வரன் ஒரு அம்மா எப்போ வீடு? 

சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா? 

அடியவர் #17:- புவனேஸ்வரன் அம்மா வீடு…... 

அடியவர் :- அவங்க பாட்டிங்க. அந்த பொண்ணோட பாட்டி வீடு வாங்க. இடம் வாங்கி போட்டு இருக்காங்க. வீடு காட்டுறதுக்கு 

குருநாதர் :-   எதை எது என்று புரிய. அப்பனே, பின் அதாவது அனைத்தும் யான்தான் முடித்து தர வேண்டும். 

அடியவர் 7:-  பண்ணி தரேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏதாவது பண்ணி தரேன். அப்படின்னா என்ன தெரியுமா? உங்களால ஏதோ ஒரு ஸ்டெப் எடுத்து ஏதாவது அவரே பண்ணி கொடுப்பாருங்க. யார் மூலமாவோ ஏதோ பண்ணி அவர் பண்ணுவாருங்க. ஐயா, கரெக்டா? ஏன்னா அவர் சொல்றாருன்னா விட்டுருங்க. ஐயா, ஏதோ ஒன்னு நடந்துரும்ங்க. ஐயா, சரிங்களா? 

===========================
# அடியவர் #18 – வாக்குகள்
===========================

அடியவர் #18:- அண்ணனுக்கு ……….. அண்ணனுக்கு ஆசிகள் . 

குருநாதர் :-   அப்பனே, ஆசிகள் எப்பொழுதும். 

அடியவர் #18:-  அம்மா அப்பா ரொம்ப உடம்பு முடியாமல் 

குருநாதர் :-   எதை என்று அறிய அப்பனே, எதை பற்றியும் கவலைப்படாதே. அனைத்தும் யான்தான். அப்பனே, என்னிடத்தில் வந்து விட்டாய் அல்லவா? 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, விதியின் படிகள் எல்லாமே வந்து ஓகேங்களா? அது பார்த்துக்கிறோம்னா அதை விட்டுருங்க. ஐயா, விடுங்க. ஐயா, அவர் ஏதாவது ஒரு முறையில பார்த்து உங்களுக்கு செய்வாருங்க. ஐயா.
 
===========================
# அடியவர் #19 – வாக்குகள்
===========================

அடியவர் #19 :- என்னால மெடல் வின் பண்ண முடியுமா? இந்தியாவுக்காண்டி?  

சுவடி ஓதும் மைந்தன் :-  என்னங்க? 

அடியவர் #19 :-  சித்தர் வழியில என்னால இந்தியாவுக்காண்டி மெடல். 
( சித்தர்கள் அருள் மூலம் என்னால் நமது இந்தியாவுக்காக மெடல் என்னால் வாங்க முடியுமா ?) 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற. அப்பனே, மீனாட்சி பார்த்துட்டு வா. அப்பனே, சொல்கின்றேன் சில ரகசியங்களை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  மீனாட்சி அம்மாவை வந்து பார்த்துட்டு வாங்க  ஐயா, கேட்டு நான் சொல்றேன்றாரு. ஓகேங்களா? வேற எதாவது இருக்கா?

அடியவர் #19 :-  பண கஷ்டமாதான் இருக்கு. 

குருநாதர் :-  அப்பனே, அனைவருக்கும் உண்டு. மீனாட்சி, தைப்பாள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மீனாட்சி அம்மாவை பார்த்துட்டு வாங்க. ஓகேங்களா? 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று புரிய பின் எது என்று புரிய அப்பனே, பின் ஒரு சித்தன் ஆலயத்துக்கு சென்று கொண்டே இரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, அங்க போயிட்டு வந்து ஒரு சித்தர் ஆலயத்திற்கு சென்று கொண்டே இருக்கணும். 

அடியவர் #19 :-  ஸ்போர்ட்ஸ் பண்றதுக்காக நான்-வெஜ் சாப்பிடாம இருந்தேன். 

குருநாதர் :-  அப்பனே, அதனால்தான் சொன்னேன் அப்பனே, அங்கு சென்றிட்டு வா.

சுவடி ஓதும் மைந்தன் :- அங்க சென்றுட்டு வா. அப்புறம் நான் சொல்றேன். அது மீனாட்சி கோவில் போயிட்டு வந்துட்டு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்தது 

===========================
# அடியவர் #20 – வாக்குகள்
===========================

அடியவர் #20 :-  ஐயா, ஃபேமிலிக்கு எதுவும் பண்ண விட மாட்டேங்குறாங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மையே, யான் செய்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- நான் செய்கின்றேன். யாருமா? 

அடியவர் :- ………….

சுவடி ஓதும் மைந்தன் :- ரைட், ரைட். அதுதான். அதனால அவர் செய்ய கட்டுற போறான். நான் செய்யணும்ட்டாரு. 

அடியவர் #20 :- எனக்காண்டி யாரு இருக்கா? 

குருநாதர் :-  எது என்று அறிய பின் அதாவது யான் இங்கு வந்து உனக்கு வாக்குகள் உரைக்கின்றேன். அதை கூட நீ புரிந்து கொள்ளவில்லை என்றால் எப்படி 

சுவடி ஓதும் மைந்தன் :-  நான் வந்து இங்கு உனக்காக வந்து வாக்கு சொல்லி இருக்கிறேன். அப்ப எனக்கு அகத்தியர் இருக்கிறதை நீ சொல்ல மாட்டேன்ற எம்மான்றாரு. அடுத்து,?

அடியவர் #20 :- நான்  எப்படி அய்யா படிப்பேன்? 

குருநாதர் :-  எது என்று நீ நன்றாக படித்தால் எதை என்று உண்டு வாழ்க்கை. நிச்சயம் பின் அட்டகாசம் செய்தால் முடிந்தது வேலை. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க தான் வந்து ரிஸ்க் எடுத்து காலையில மாலையிலோ நல்லா படிக்கணும்ன்றாரு. வந்து உன் கையில இருக்குமா? நீ ஒழுங்கா படிச்சேன்னா நான் உன்னை தூக்கி விட்டுறேன்றாரு. ஆனா அரட்டச்சா 

அடியவர் :- நல்லா படிப்பா ஐயா

===========================
# அடியவர் #21 – வாக்குகள்
===========================

அடியவர் #21 :- ஐயா, கொல்லூர் மூகாம்பிகை டெம்பிள்ல நீங்க மந்திரம் எல்லாம் கொடுத்தீங்க இல்லையா? அதே மாதிரி ராமேஸ்வரம் யாத்திரை போறோம் இல்லையா? ( அதே போல் மந்திரம் ) 

குருநாதர் :-   எது என்று அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எது என்று புரிய, பின் அப்பனே, பின் அதாவது ஒரு இடத்தில் அப்பனே, ஒரு மந்திரம். அப்பனே, பின் இன்னொரு இடத்தில் இன்னொரு முறையாக சொல்வேன். அப்பனே, இதனால்  அப்பனே, பின் பொறுத்திருங்கள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு இடத்துல ஒரு மந்திரம் சொல்லுவாரு. அடுத்து அதே மந்திரம் சொன்னாருன்னா சொல்ல மாட்டாரு. என்ன செய்யணும்னு நான் சொல்றேன். பண்றேன். 

அடியவர் #21 :- கோவில்ல தீபம் ஏத்துறோம் இல்லையா? 

அடியவர் :- கடல்ல, 

அடியவர் #21 :-  கடல்ல அப்ப வந்து அணஞ்சு அணஞ்சு போயிரும். தீபம் ஏற்றும் போதே. (பூசணி தீபம் ) பூசைக்காக தீபத்தை எல்லாம்.  அதுக்கு என்ன (மாற்று) வழி ? 

குருநாதர் :-   அப்பனே, எது என்று கூற இதற்கு பெயர் என்ன? காற்று.

சுவடி ஓதும் மைந்தன் :-  ( சில உரையாடல்கள் ) 

குருநாதர் :-   அப்பனே, எது என்று கூற பின் உன்னால் முடிந்தால் நிற்கவை  பார்ப்போம். யானும் வருகின்றேன். அடுத்த முறை, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் எரிவதை பார்க்கின்றேன். 

அடியவர் :- கண்டிப்பா வாங்க ஐயா 

யாத்திரை குழு அடியவர்கள்  :- ( பரவசம்… கருணைக்கடல் குருநாதர் அடுத்த முறை கூட வருவேன் என்று சொல்லியதால்….. ) 

சுவடி ஓதும் மைந்தன் :-   கண்டிப்பா, அடுத்த முறை நான் வருவேன் உன் கூட. எரிவதை  நான் பார்க்கிறேன்ப்பா. 

===========================
# அடியவர் #22, #23 – வாக்குகள்
===========================

அடியவர் #22:- ராகவேந்திர பூஜை 355வது ஆண்டு இந்த வருஷம் நடத்தணும். மந்திராலயம் போய்ட்டு வந்து 

குருநாதர் :- கவலைகள் வேண்டாம். அனைத்தும் அருளும் இருக்கின்றது. ஏனென்றால் எவை என்று கூறப்பின் எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பலமுறை பல பிறப்புகளில் பின் அவன் பிறந்துள்ளான். ஆனாலும் இன்றளவும் பின் ராகவேந்திரனே  என்று அழைக்கின்றாள். ஆனாலும் ஒரு பிறவியில் அவனுக்கு நீ சேவை செய்தவள்தான். அதனால் அனைத்தும் நடக்கும். 

அடியவர்:-   நீங்க வந்து அவர் சேவை செஞ்சிருக்கீங்க. 

அடியவர் 7:- நீங்க ஏற்கனவே அவர் ஜென்மத்துல… 

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர் பல பிறவிலே வந்திருக்காருமா ராகவேந்திரர். இந்த பிறவியில தான் நம்ம ராகவேந்திரர்னு தெரியுது. அடுத்தடுத்த பிறவில எப்படின்னு தெரியாது இல்ல. ஆனா ஒரு பிறவியில அவருக்கு சேவை செஞ்சிருக்கீங்க. நீங்க வந்து நீங்க வந்து சேவை செஞ்சிருக்கீங்க. அதனால கூட நல்லதே நடக்கும்ன்றாரு. 

அடியவர் #23 :- ஐயா, ஒரு ஐயாவே, ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி ஒரு ₹5000 கொடுத்தேன். மந்திராலயத்துக்கு 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க ரெண்டு பேருங்களா? 

அடியவர் #23 :-  ஆமா, 

சுவடி ஓதும் மைந்தன் :- ரைட். அதனால வந்து அவர் ஆசி பெருசா இருக்குமா உங்களுக்கு வந்து ஓகேங்களா? டோன்ட் வரி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து? 

===========================
# அடியவர் #24 – வாக்குகள்
===========================

அடியவர் #24  :- ஐயா, நமஸ்காரம் ஐயா, என் குழந்தைக்கு வந்து பிறப்பில் இருந்து மெடிசின் ப்ராப்ளம் இருக்கு. 

குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய. எதை பற்றியும் கவலைப்படாதே. அப்பனே, தர்மம் தலை காக்கும் என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 

சுவடி ஓதும் மைந்தன் :- நீ எதை பத்தியும் கவலைப்படாதப்பா. தர்மம் தலை காக்கும். 

குருநாதர் :- அப்பனே, எது என்று புரிய அப்பனே, இதனால்  அப்பனே, பின் ஒளிந்துள்ளது என்பேன்  அப்பனே, தர்மம். புண்ணியங்கள் அப்பனே.கவலைப்படாதே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புண்ணியங்கள் சில தர்மங்கள் இப்ப வந்து அது ஒளிந்துள்ளது. இவருக்கு ஆக்டிவ் புண்ணியங்கள். புண்ணியங்கள் வந்து, 

குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற கவலை இல்லை என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இவ்வாறாக இருந்தால்தான் அப்பனே, பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அது வந்து செயல்பட்டுச்சுன்னா, நீங்க பல விஷயங்கள் புரிந்து கொள்ள முடியாதுன்றது உங்ககிட்ட. அப்ப, அது வந்து செயல்படாம இருக்கும் வரையில் நீங்க புரிஞ்சுகிட்டு சில விஷயங்கள் எல்லாம் புரிஞ்சுப்பீங்களாம் நீங்க வந்து… புரிஞ்சு வந்த… உடனே ரொம்ப கஷ்டம். 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற பின் எதையும் அப்பனே, பின் யானே வழிகள் செய்கின்றேன். கந்தனும் துணை நிற்பான். அப்பனே, கவலைகள் எப்பொழுதும் பட தேவையில்லை என்பேன்  அப்பனே நிச்சயம். பின் உன் அருகிலே தான் நான் இருக்கின்றேன். வழியும் செய்வேன். வழிகளும் நடத்துவேன். பின் மனிதன் என்றாலே கஷ்டம் என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் கவலை இல்லை என்பேன்  அப்பனே. பலமுறை பல இடத்தில், அப்பனே, பின் ரகசியமாக எல்லாம் உன்னை பார்த்திருக்கின்றேன். அப்பனே, நலமாக இதனால்  எம்முடைய ஆசிகள். பின் எதை பற்றியும் கவலைப்படாதே. அனைத்தும் இறைவனுடைய செயல் என்று சொல்லிவிட்டு சென்று கொண்டே இரு. 

அடியவர் 7 :- பையனை பத்தி கேளு. 

அடியவர் #24  :- பையனுக்கு ஆசீர்வாதம் பண்ணுங்க ஐயா. காலேஜ் ஜாயின் பண்றான் ஐயா. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூற. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சோறு போட்டாய் அல்லவா? அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :- சாப்பாடு போட்டுக்கிறப்ப, எல்லாருக்கும் வந்து அதனால கவலை விடுப்பான்ட்டாரு. வந்து சோறு போட்டுக்கிறேன். அவர் தானம் ஏதோ பண்ணிக்கிறீங்க. நீங்க வந்து அதனால வந்து அது வந்து காக்கும்பான்னுட்டாரு. வந்து அவர் 

அடியவர் #24  :- வைஃப்ோட ஹெல்த். 

குருநாதர் :-  அப்பனே, கவலை விடு. இதற்கும் இதுதான் பதில். சோறு போட்டிருக்கின்றாய். 

சுவடி ஓதும் மைந்தன் :- எதுக்கு இதான் பதில். 

அடியவர் :- ராமேஸ்வரம் அது மாதிரி பண்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நிறைய அதனாலதான் எல்லாரும் சோறு போட்டு இருக்கீங்களா? அந்த சோறு உன்னை காப்பாத்தும். 

அடியவர் :- தர்மம் தலை காக்கும். 

குருநாதர் :-   அப்பனே, நல்ல ஆசிகள். கவலை வேண்டாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பல எது என்று புரிய. அப்பனே, பின் எம்முடைய ஆசிகள் கடை நாளும் உண்டு என்பேன்  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. கந்தனுடைய அனுக்கிரகங்கள் அப்பனே, நிச்சயம் தன்னில் இருக்க, அப்பனே, பின் எவை என்று புரிய.  அப்பனே, இதனால்  அப்பனே, நீ என்ன ஏது என்று நினைக்கின்றாயோ? சில தடைகள். அப்பனே, பின் தாமதங்கள். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, நல்ல விதமாக எம்முடைய ஆசிகள் இருக்கின்ற பொழுது, கவலை வேண்டாம் என்பேன்  அப்பனே. உன்னை அப்பனே, பின் ஏதாவது ஒரு முறைக்கு யான் பயன்படுத்திக் கொள்வேன். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? 

குருநாதர் :-  அப்பனே, நலமாக இதனால்  அப்பனே, எது என்று புரிய. பின் அனைத்து புத்திகளும் எவை என்று அறிய அப்பனே, பின் அதாவது தேவையான பின் எவை என்று கூட புத்தி. யான்தான் செய்ய வேண்டும் என்பேன்  அப்பனே.  விதியில் தன்னில் கூட அப்பனே, பின் சில வகையில் கூட அப்பனே, பின் தடை ஏது என்று புரிய. அப்பனே, பின் சில மனமாற்றங்கள். அப்பனே, பின் ஏது என்று புரிய. சில சில வகையில் கூட அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, வாழ்க்கையில் எவை வேண்டுமோ, அவையும் கூட எழுதாமல் வைத்து விட்டான் பிரம்மன். இதனால் , அப்பனே, யான் மாற்றுகின்றேன். பொறுத்திரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில விஷயங்களை வந்து எழுதாம விட்டாரு. ஓகேங்களா? நீங்க என்ன? அதனால வந்து அதை நான் என்ன பண்றேன்? மாத்தி எழுதுறேன்பா. 

குருநாதர் :-  அப்பனே, இதனால்  அதற்கு எவை என்று கூறப்பின் எது என்று புரிய. பின் இதனால்  அனைத்தும் அப்பனுக்கு நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :- அதனால சில விற்றை என்ன வேணுமோ, சில மருந்து அவர் விட்டாரு. எழுதாம, அதனால என்ன பண்றாரு? 

அடியவர் #24  :-  ஐயா, மாத்தி எழுதுவார். 

சுவடி ஓதும் மைந்தன் :-  மாத்தி எழுதுறேன்றாரு. 

குருநாதர் :-  அப்பனே, இதனால் தான் எது என்று புரிய அப்பனே, இதனால்  மனிதனால் எவை என்று கூட செய்ய முடியாது அப்பா. ஆனால் மனிதன் அதை செய்கின்றேன், இதை செய்கின்றேன் என்று. அப்பனே, பின் எது என்று புறம் பேசி, அப்பனே, சொல்லிக் கொண்டிருப்பான் என்பேன்  அப்பனே. 

குருநாதர் :-   ஆனாலும், அப்பனே, பிரம்மன் அப்பனே, பின் எழுதி, அப்பனே, அழகாக இவ்வுலகத்தில் எவை என்று கூற. அப்பனே, பின் சித்தர்கள் மாற்றுவார்கள் என்பேன்  அப்பனே. சித்தர் ஆசிகளும் அப்பனே. இதனால் , அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒரு 48 அப்பனே, பின் ஜீவ சமாதிகளுக்கு சென்ற பின், பின்  ஆசிகளை கேளு. ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  48 ஜீவ சமாதி. ஜீவ சமாதி சொல்லணும். ஏதோ சொல்லி இருக்காரு. போயிட்டு வாங்க. ஐயா, 

அடியவர் #24  :-  சரிங்க. ஐயா, தம்பிக்கும் ஆசீர்வாதம். 

குருநாதர் :- அப்பனே, எது என்று கூற வந்துவிட்டாய் அப்பனே, அடுத்த முறை பின் அழைத்து வா. அப்பனே, சிறப்பான வாக்குகள் சொல்கின்றேன். அப்பனே, யான் பார்த்துக் கொள்கின்றேன். அப்பனே, எங்கு எதை வைக்க வேண்டுமோ. அப்பனே, எங்கு எவை என்று கூற. அப்பனே, யார் மூலம் செல்ல வேண்டுமோ, அவர் மூலம் புகழை தருகின்றேன் அப்பனே. ஆசிகள். ஆசிகள். 

அடியவர் #24  :-   நன்றி, நன்றி, நன்றி. 

அடியவர் #24  :-   ஐயா, உஞ்சல் தாராட்டு பார்க்க சொல்லி இருந்தீங்க . ஐயா, பார்த்துட்டு வந்தேன்… முன்னோர்கள் அங்க. 

குருநாதர் :- அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இடையிடையே. அப்பனே, சென்று தரிசித்து வந்தால் சிறப்பு. 

சுவடி ஓதும் மைந்தன் :- இன்னொன்னு உங்களுக்கு என்னென்ன தேவையோ, நீங்க அடிக்கடி போயிட்டு வந்தீங்கன்னா இன்னும்? 

அடியவர் #24  :- சிறப்பு. 

சுவடி ஓதும் மைந்தன் :- சிறப்பு

அடியவர் #24  :- மறைமுகமா  ஒரு ஞானியோட ஆசீர்வாதம் கிடைக்கும்னு சொன்னீங்க. ஐயா, மூகாம்பிகை செல்வதற்கு வெளிப்பாடு…. 

குருநாதர் :-  எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. அப்பனே, சில ரகசியங்கள் எல்லாம் இப்பொழுது வேண்டாம். அப்பனே, நன்முறைகளாக மீண்டும் அப்பனே, ஞானிகளை சந்தித்து வா. அப்பனே, 

அடியவர் #24  :- நன்றி, நன்றி, நன்றி. 

===========================
# அடியவர் #25– வாக்குகள்
===========================

குருநாதர் :-   தாயே, எது என்று புரிய எதையும் கேட்டுவிடாதே. உன்னை யானே வழி நடத்துகின்றேன். போதுமா? நிச்சயம் எதை கேட்டாலும் பின் பதில் இல்லை இங்கு. 

சுவடி ஓதும் மைந்தன் :- நீங்க எதையுமே கேட்கக்கூடாது. நீ எதை கேட்டாலும் இங்கு? பதில் இல்லை. 

குருநாதர் :-  நம்பிவிட்டாய் அல்லவா? செய்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :- நம்பிவிட்டாய் அல்லவா? செய்கின்றேன். 

குருநாதர் :-  நல்விதமாக பின் சித்தர் ஆசிகள் எதை என்று புரிய. இதனால்  உன் வழியில் நீ செல். பின் எதை வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  உன் வழியில நீ போயிட்டே இரு. எதை வந்தாலும் நான் பார்த்துக்கிறேன். 

அடியவர் #25  :- குருவே சரணம்!!!!! குருவே சரணம்!!!!!

குருநாதர் :-  எதை என்று அறிய தாயே, கவலைகள் வேண்டாம். நிச்சயம் தன்னில் கூட ஆசிகள். பின் நிச்சயம் எது என்று அறிய பின் ஒருமுறை பின் பூமிநாதனுடன் சென்று வா. 

சுவடி ஓதும் மைந்தன் :-  திருச்சி. பூமிநாதர் கோயில்.  மண்ணச்சநல்லூர் சென்றுவர சொல்றாரு. வந்து ஓகேங்களா? 

===========================
# அடியவர் #27– வாக்குகள்
===========================

அடியவர் #27  :-  ( குழந்தைகள் கல்வி தொடர்பாக கேள்விகள் ) 

குருநாதர் :-  தாயே, எவை என்று புரிய. இவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட இறையர்களால் மாறும் நிச்சயம் தன்னில் கூட. இவையெல்லாம். தாயே, எவை என்று புரிய பின் ஒரு கேள்வியே இல்லை. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, நல்லா படிப்பாங்கம்மா. 

அடியவர் #27  :-  ( எனக்கும் ……. ஒரு ஏழு வருஷமா…….பிரச்சனை ………இருக்காங்க. அது ……………..) 


===========================
# ஏவல் தாக்கங்கள் நீங்க வாக்குகள்
===========================

குருநாதர் :-  எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட பொறுத்திரு. எது என்று புரிய. இதனால்  நிச்சயம் தன்னில் கூட பின் அதாவது பின் தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி. தன்னில் கூட நிச்சயம் பின் எலுமிச்சை தீபத்தை நிச்சயம் பின் ஓர்  பின் 48 நிச்சயம் ஏற்றிக்கொண்டே வா. நிச்சயம் சில விஷயங்கள் மாறும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  தேய்பிறை அஷ்டமி, வளர்பிறை அஷ்டமி, எலுமிச்சை தீபத்தை, பைரவருக்கு  கண்டிப்பா நீங்க போட்டுக்கிட்டே வரணும். ஓகேங்களா? 

குருநாதர் :-  நிச்சயம் சில சில எவை என்று புரிய. பின் எவல்  நிலைகள் மாறும். நிச்சயம் தன்னில் கூட நன்றாக பின் தெளிவும் பிறக்கும். பின் விரும்பியது நடக்கும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? அடுத்து ?

===========================
# அடியவர் #28 – வாக்குகள்
===========================

அடியவர் #28  :- டாக்டர் ஒருத்தர் வரணும்னு எதிர்பார்த்தாரு. அவர் வர முடியாத ஒரு சூழ்நிலை ….

குருநாதர் :- அப்பனே, எம்முடைய ஆசிகள் எதை என்று புரிய அப்பனே, ஆனாலும் நல்ல ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-   ஐயா, அவருக்கு அகதியாரோட ஆசிகள் இருக்கு.

அடியவர் #28  :- அவரை  அடுத்த முறை அழைச்சிட்டு வரலாமா? 

===========================
# அசைவம் உண்பவர்களுக்கு நெற்றியில் அடித்தால் போல எடுத்து சொல்லுங்கள்….
===========================

குருநாதர் :-  அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற அப்பனே, ஒரு உயிரில் பின் கொன்று. பின் எவை என்று புரிய அப்பனே, பின் வரக்கூடாது என்று சொல்லிவிடு. பார்த்துக்கொள்வோம். 

சுவடி ஓதும் மைந்தன் :-   சாப்பிட்டு வரக்கூடாதுன்னு வந்து சொல்லுங்க அய்யா. நிறுத்த சொல்லுங்க ஐயா. 

அடியவர் 7:- ஐயா, ஒரு உயிர் எடுக்கிதால  வரக்கூடாது, 

சுவடி ஓதும் மைந்தன் :-  வரக்கூடாது. அடுத்து?

குருநாதர் :-  அப்பனே, பின் பளிச் என்று சொல். சித்தன் சொன்னான் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  பளிச்சு என்று சொல்லு. அடி அடிக்கிற மாதிரி சொல்லுன்றாரு. ஐயா, புரியுதுங்களா? 

அடியவர் #28  :-  பளிச்சுன்னு சொல்லணும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  பளிச்சு, அடி அடிக்கிற மாதிரி சொல்லணும். ஒரு உயிர் கொல்லாதடா. 

குருநாதர் :- ஆனாலும் இதற்கும் ஏதோ ஒன்று சொல்லுவான். அதையெல்லாம் நீ ஒத்துக்கொள்ளாதே. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆனா இதற்கும் என்ன பண்ணுவாரு? பதில் ஏதாவது சொல்லுவாரு. ஏதாவது பதில் சொல்லுவாரு. ஏய், இது சாப்பிட்டாதான் நல்லா இருக்கும். அப்படி இப்படின்னு சொல்லுவாரு. அதெல்லாம் நீ வந்து கண்டுக்காத. 

குருநாதர் :- அப்பனே, பின் எவை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட பின் பலமாக அடிவிழும் என்று சொல். இதை நிறுத்தாவிடில் 

அடியவர் #28  :-  அடி, விழும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதை நிறுத்தலைன்னா பலமாக அடி, விழும், என்று சொல்லிவிடு. 

அடியவர் #28  :-   சரிங்க, 

குருநாதர் :- ஏமாற்றிக் கொண்டிருந்தான் இத்தனை நாள். இனிமேல் ஏமாற்ற முடியாது. 

அடியவர் #28  :-   சரிங்க, 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுவரை என்ன? ஏமாத்தி இருந்தான். வந்து இனிமேல்? 

அடியவர் #28  :- ஏமாற்ற முடியாது, 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஏமாத்த முடியாது. 

அடியவர் #28  :- சரி, 

குருநாதர் :- அறிந்தும் எம்முடைய ஆசிகள்.

அடியவர் #28  :-  சரி, 

சுவடி ஓதும் மைந்தன் :- அப்புறம்? 

அடியவர் #28  :-   அன்னதானம் ஒருத்தர் பண்ணிட்டு இருந்தாருன்னு சொன்னேன் இல்லையா? அவரு இந்த சேவை வந்து 16 வருஷமா பண்ணிட்டு இருக்காரு. அவர் உடம்பு சரியாதனால நின்னு போற மாதிரி ஒரு சூழ்நிலை. அது தொடர்ந்து நடக்குறதுக்கு குருநாதர் ஆசிகள். 

குருநாதர் :- அப்பனே, ஆசிகள்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஆசிகள். 

அடியவர் 7:- காலையில் அப்ப நடக்கும்னு சொன்னாரு.

===========================
# அடியவர் #29  – வாக்குகள்
===========================

அடியவர் #29 :-  குழந்தை …..

குருநாதர் :-  எது என்று புரிய. தாயே, நிச்சயம் இதைப்பற்றி இப்பொழுது வேண்டாம். ரகசியமாக சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-   இப்பொழுது வேண்டாம். அம்மா, ரகசியமாக சொல்கின்றேன். 

குருநாதர் :-  எம்முடைய ஆசிகள்.

சுவடி ஓதும் மைந்தன் :-   அவருடைய ஆசிகளும் சொல்றாரு. 

அடியவர் 7:-  வேற எதாவது உங்களுக்கு ஏதாவது வேணுமா? 

அடியவர் #29 :- ……..

குருநாதர் :-  எது என்று கூட கவலைப்படாதே. தாயே, 

சுவடி ஓதும் மைந்தன் :-   கவலைப்படாதீங்க  அம்மா . 

===========================
# அடியவர் #30 – வாக்குகள்
===========================

சுவடி ஓதும் மைந்தன் :-  கேளுங்க?

அடியவர் #30  :- ……..

குருநாதர் :-  அப்பனே, எவை என்று புரிய எம்முடைய ஆசிகள். அப்பனே, என்ன வழி செய்ய வேண்டுமோ, அதை நான் செய்கின்றேன். அப்பனே, எதையும் கேட்கவே தேவையில்லை என்பேன்  அப்பனே. எம்முடைய ஆசிகளோடு. ஏனென்றால் உன் விதி, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூறப்பின் ஏது என்று புரிய, அப்பனே, எதை பிரம்மன் பின் எப்படியோ எது என்று கூற பின் வெற்று  தாள் போல். அப்பனே, நிச்சயம் தன் அதனால் பின் யான் என்ன செய்ய வேண்டும் என்றெல்லாம். அப்பனே, பின் எவை என்று வழி நடத்துகின்றேன். அப்பனே, அமைதியாக இரு. அமைதியாய் போல் உட்காரு. 

அடியவர் #30  :- ( …….. திருமணம் நடத்தலாமா? …….)

குருநாதர் :-  எது என்று அறிய பின் நிச்சயம் 

சுவடி ஓதும் மைந்தன் :-  நடத்தலாம். 

அடியவர் #30  :-  சின்ன பையன் ……… ஐயா, சொன்ன திருத்தலங்களுக்கு நாங்க போயிட்டு வரோம். 

குருநாதர் :-  எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட அறிந்து கூட  பின் எவை என்று அடித்து மிதித்து ஆனாலும் பின் எவை என்று கூற பின் பார்த்துக் கொள்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  சில அடிகள் எல்லாம்… நீ பேசி நீ வரலையே. நான் அடிச்சு மிதிச்சே. நான் பார்த்து 

அடியவர் #30  :-  நீங்க இருக்கிற நம்பிக்கையில தான்….ஆனா அவன் வந்து தவறா எதுவும் போயிறக்கூடாதுல. தவறான பாதையில…

சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் அடிப்பாருமா. அடிச்சி மிதிச்சு வைப்பாரு. நீங்க போங்கம்மா. நீங்க… உங்க பேச்சு கேக்கலன்னா…. அங்க என்ன பண்ணுவாரு? அடிச்சி  மிதிப்பாருன்னா எப்படி அது வந்து ? 

அடியவர் 7 :- ஆசீர்வாதம் கொடுப்பாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அப்படி இல்ல. 

அடியவர் 7 :-  அவனை  திருத்துவாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   திருத்துவாரு 

அடியவர் #30  :-  சிந்தனையில தான் அப்படி நடக்குறானா? அவன் நல்லா பேச்சு கேட்டு வந்தவன்…. இப்படி ஆகிவிட்டான் ( கவலையுடன் கேட்டார்கள்) 

குருநாதர் :-  எது என்று புரிய நிச்சயம் கவலை வேண்டாம். எது என்று புரிய. நிச்சயம் பின் அடுத்த வாக்கில் இதை சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்து, 

அடியவர் #30  :-  ஐயா, ரொம்ப உடம்பு முடியாம இருக்காங்க. ஐயா, ஒரு ரொம்ப உடம்பு முடியாம இருக்காங்க. ஐயா, அவங்க குணமாயிருமா? குடும்பத்துல எல்லாருமே சாமியவே வெறுத்துட்டு. 

===========================
# மனிதனுடைய சொல்:- “செய்தால் சாமி….செய்யாவிடில் சாமி இல்லை”.
===========================

குருநாதர் :-  எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட செய்தால் சாமி செய்யாவிடில் சாமி இல்லை. அவ்வளவுதான் மனிதனுடைய சொல். 

சுவடி ஓதும் மைந்தன் :-   செய்தால் சாமி. செய்யாவிடில் சாமி இல்லை. 

அடியவர் #30  :-  தெய்வத்தை வழிபட்டால் கிடைக்கும். 

குருநாதர் :-  அறிந்தும்  கூட, தாயே, நிச்சயம் தெய்வத்தை எது என்று புரிய. பின் கர்மம், அதாவது ஒரு உப்பு மூட்டை எது என்று அறிய.  பின் அதாவது கிலோ எவை என்று, எதை அறிந்தும் கீழ் தள்ளி அறிந்தும் எது என்று புரிய. இதனால்  பின் அறிந்தும் எது என்று அறிய.

சுவடி ஓதும் மைந்தன் :-    கீழ் தள்ளினா? 

ஒரு அடியவர் :- கஷ்டத்தை கொடுக்கின்ற மாதிரி. 

சுவடி ஓதும் மைந்தன் :-  கீழ் தள்ளினா நம்ம என்ன புரிஞ்சுக்கிறது? 

ஒரு அடியவர் :-  கீழ தள்ளி, கீழ தள்ளி, 

சுவடி ஓதும் மைந்தன் :-  கீழ தள்ளி 

குருநாதர் :-  எது என்று அறிய. நிச்சயம் பின் அவரவர் பின் செய்கிறதாலே மனிதனின் பின் எவை என்று புரிய, பின் செய்கையினாலே இவையெல்லாம்… 

சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதனோட செய்கைகள் தான். இதெல்லாம் வந்து… போர்ஸ், நெகட்டிவ் போர்ஸ். 

குருநாதர் :- தாயே, இதையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட பின் இறைவனை வணங்கினாலும், ஆனாலும் நிச்சயம் பின் பொறுத்திருந்தால்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா, இதெல்லாம் வந்து மனுஷன் ஏவல். அதெல்லாம் இருக்குது இல்ல….அதனோட விஷயம், அதெல்லாம் வந்து அது பொறுத்தே ஆகவேண்டும் நீங்கள்…. 

குருநாதர் :- எது என்று புரிய நிச்சயம் தன்னில் கூட இதனால்  இறைவனை குறை கூறக்கூடாது. ஆனாலும், நிச்சயம் இவ்வாறு இருந்தால் இறைவனே குறை கொள்ள. 

சுவடி ஓதும் மைந்தன் :-  நெகட்டிவ் போர்ஸ் இருந்தா என்ன பண்ணுவாரு? இறைவனே வந்து திட்டுவாங்க. 

அடியவர் #30  :-  அப்படித்தான் திட்டிட்டு இருக்கான்

குருநாதர் :-  எது என்று புரிய. இதனால்  அதை மாற்ற அடுத்த வாக்கில் சொல்கின்றேன். ஒரு உபாயம்…

சுவடி ஓதும் மைந்தன் :-  அடுத்த வாக்கில்… அது முதல்ல அது மாற்றத்துக்கு ஒரு உபாயம் சொல்றேன். நெகட்டிவ் போர்ஸ், 

குருநாதர் :-  எம்முடைய ஆசிகள். அடுத்த வாக்கில் விவரிப்பேன்.

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேமா? 

அடியவர் #30  :- கோமாதா ? 

சுவடி ஓதும் மைந்தன் :-  அம்மா , அம்மா…. அது வேணாம். நான் சொல்றேன், ஒரு தடவை சொல்லலாம். ஆமா, அது எது முடிவெடுத்தாலும் உங்களுக்கு நல்ல முடிவு போடுது. 

அடியவர் #30  :-  காப்பாத்தி கொடுத்தால் போதும். அவ்வளவுதான். 

===========================
# அடியவர் #31  – வாக்குகள்
===========================

அடியவர் #31   :-  ஐயா, எங்க ……. உடம்பு சரியில்ல….

குருநாதர் :-   தாயே, கவலை விடு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகே, 

அடியவர் #31   :-  சரி. ஐயா, 

அடியவர் 7    :- கேளுங்க. 

===========================
# அடியவர் #32  – வாக்குகள்
===========================

அடியவர் #32 :- ஐயா, முற்பிறவியில் என்னவாக இருந்தேன்? 

குருநாதர் :-   தாயே, இன்னும் பின் அவ்  நேரங்கள் வரவில்லை. பொறுத்திருந்தால் சொல்வேன். 

ஒரு அம்மை அடியவர் :- ஐயா, ஐயா, பொண்ணு ……சங்க கவசம் படிக்கணும். ….

குருநாதர் :-  எதை என்று அறிய பின் எதைப் பற்றியும் கவலைப்படாதே. இப்பொழுது அமைதியாக இரு தாயே.பின் எவை என்று உன் நேரம் முடிந்துவிட்டது. அடுத்தவருக்கு நேரத்தை கொடு. 

===========================
# அடியவர் #33   – வாக்குகள்
===========================


அடியவர் 7    :- கேளுங்க, கேளுங்க, கேளுங்க. ஐயா, 

அடியவர் #33 :-  அப்பாவுக்கு குடும்பம்….

குருநாதர் :-  அப்பனே, எது என்று கூட எவை என்று அறிய அப்பனே, நிச்சயம் பின் உன்னை நான்தான் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சொல்லிவிட்டேன். 

குருநாதர் :-  அப்பனே, இதனால்  எதை செய்தாலும் நான்தான். 

குருநாதர் :-  அப்பனே, ஏனென்றால் அப்பனே, ஏவல் நிலைகள். அப்பனே, எது என்று புரிய. எங்கு சென்றாலும் பின் நிச்சயம் தன்னில் கூட  எவராலும் விலக்க முடியாதப்பா. இதனால் , அப்பனே, பொறுத்திரு. அனைத்தும் செய்கின்றேன். 

அடியவர் #33 :-  வாழும் காலம் மட்டும் புண்ணியங்கள் தடைபடாமல்…. 

குருநாதர் :-  அப்பனே, எது என்று அப்பனே, பின் அதனால்தான் சொன்னேன். அப்பா, நிச்சயம் எதையும் நம்பி பின் சென்றுவிடாதே. என்பேன் அப்பனே நிச்சயம் தன்னில் கூட. பின் கர்மத்தை சேர்த்துக் கொண்டிருக்கின்றாய். 

சுவடி ஓதும் மைந்தன் :- எதையும் நம்பிடாதப்பா இனிமேல்…

அடியவர் #33 :-   வேலைக்கு போகணும் ஐயா. 

குருநாதர் :- அப்பனே, எதை கூட அனைத்தும் செய்கின்றேன் உனக்காக. அமைதியாக இருக்க வேண்டும். 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீ எதையோ வந்து, அது இது சொல்றாங்க, அப்படி சொல்றாங்க. அதெல்லாம் நம்பக்கூடாது. அமைதியா இரு. நான் செய்றேன்ப்பா. 

குருநாதர் :- அப்பனே, உன்னில் இருந்தே உன்னை வழிநடத்துகின்றேன். போதுமா? 

சுவடி ஓதும் மைந்தன்:- உன் கையிலிருந்து உன்னை வழிநடத்துகின்றேன். 

குருநாதர் :-  அப்பனே, பார்த்துக்கொண்டே இருப்பேன் அப்பனே நிச்சயம். ஏதாவது தவறு  செய்தால் அங்கே அடித்து விட்டு வந்து விடுவேன். 

சுவடி ஓதும் மைந்தன்:- நான் பார்த்துட்டே இருப்பேன். உன்னை யாருக்குன்னா அடி கர்மாக்கள் எல்லாம் எடுத்து, எடுத்து விலக்குகிறேன். வந்து அதனால நீ கரெக்டா போயிட்டே இரு. வேலை பாரு. அப்படி ஏதாவது திருப்பியும் வேற அங்க சொன்னாங்க, இங்க சொன்னாங்க ( அப்படினு தவறான வழியில்) போனேன்னா, நானே உன்னை அடிச்சிருவேன். புரியுதுங்களா? ஓகே, 

===========================
# நினைத்தது நிறைவேற……
===========================

குருநாதர் :-   அப்பனே, நல்ல விதமாக எது என்று கூட, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அப்பனே, அதாவது பின், அதாவது அமாவாசை, பௌர்ணமி தன்னில், அப்பனே, பின் பைரவனை  வணங்கிக்கொண்டே வா. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட நினைத்தது நிறைவேறும். அப்பனே, நிச்சயம் தொடர்ந்து செய்ய வேண்டும். 

அடியவர் 7:- அமாவாசையும், பௌர்ணமியும், பைரவர் கோவிலுக்கு போய் தொடர்ந்து செய்ய வேண்டும்.. 

குருநாதர் :-   அப்பனே, நல்ல விதமாக எம்முடைய ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன்:- ஓகே? 

===========================
# அடியவர் #34   – வாக்குகள்
===========================

அடியவர் 7:-  கேளுங்க. ஐயா, 

அடியவர் #34 :-  ……..என்ன பண்ணனும்? 

குருநாதர் :-  அப்பனே, இப்பொழுது எதுவும் செய்தால் செய்யாதே. அப்பனே, நிச்சயம் சொல்லிவிட்டேன். அப்பனே, ஏற்கனவே. அப்பனே, எது என்று புரியும். அடுத்த வாக்கில் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  சில விஷயங்கள் அப்பே சொல்லிட்டாரு. உங்களுக்கு என்ன? 

மற்றொரு அடியவர்  :- …………

குருநாதர் :-  தாயே, உனக்கும் நேரம் முடிந்துவிட்டது. நிச்சயம் அடுத்த வாக்கில் சொல்கின்றேன். 

சுவடி ஓதும் மைந்தன்:-  உனக்கும் நேரம் முடிந்துவிட்டது. 

===========================
# அடியவர் #35   – வாக்குகள்
===========================
===========================
# குருநாதர் உரைக்கும் வாக்குகளை பிறருக்கு எடுத்து சொல்ல ஆற்றல்கள் அதிகமாகும்….. 
===========================

அடியவர் #35 :-  ……………………. நிலைமை ரொம்ப மோசமாக….

குருநாதர் :-   எதை என்று கூற நிச்சயம் தன்னில் கூட, பின் அதாவது எதை என்று கூட, அதனால்தான், நிச்சயம் தன்னில் கூட. மக்களை ஏற்படுத்தி, நல் எவை என்று கூற மாற்றங்களை எவை  என்று கூற யான் தந்து, நிச்சயம் தன்னில் கூட. பின் ஆறுதல் படுத்தி, நீங்கள் மற்றவரிடத்தில் சொல்லுங்கள். நிச்சயம் இதுவே போதுமானது. ஆற்றல் அதிகமாகும். 

சுவடி ஓதும் மைந்தன்:-   மக்களிடம் நல்லது சொல்லுங்க என்று சொல்கின்றார். 

குருநாதர் :-    அதற்காகத்தான் இன்னும் பின் எவை என்று கூட, பணி சிறக்க, எவை என்று கூட. உழவார பணி எல்லாம் சொல்கின்றேன் தாயே. அங்கங்கு, நிச்சயம் பின் எம்முடைய ஆற்றலை பெருக்கி, பின் எதை என்று கூற பின் என் பக்தரை உருவாக்கி, சரி செய்து கொள்வோம். கவலை விடு. 

===========================
# அடியவர் #36   – வாக்குகள்
===========================

அடியவர் #36 :-  ஐயா, பௌர்ணமி முடிஞ்ச உடனே வாக்கு கிடைக்குமா?

குருநாதர் :-  அப்பனே, எது என்று புரிய, அப்பனே, பல வழிகள் கூட,அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. எதை என்று தெரியாமலே வாழ்ந்து கொண்டிருக்கின்றாய். 

பின், அப்பனே, எது என்று புரிய, அப்பனே, இதனால் , அப்பனே, பல வழிகள் கூட உதவிகள், அப்பனே, பின் செய்து கொண்டே தான் இருக்கின்றேன். 

அப்பனே, கவலை வேண்டாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட,  எது என்று புரிய. 

அப்பனே, பல வழிகள் கூட, அப்பனே, பிரம்மன் எது என்று தெரியாமலே. அப்பனே, பின் போராட்டமான வாழ்க்கைக்கு அப்பனே, எது என்று புரிய…..பின் வித்து எதை என்று அறிய…. அதாவது, வித்திட்டுள்ளான். அப்பனே, இவை அறிந்து எது என்று புரிய அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

இதனால் , அப்பனே, பின் மனம் மாற்றாக எது என்று கூட, பின் யான் எழுதுகின்றேன் அடுத்தடுத்து, அப்பனே. இதனால் , அப்பனே, இதோடு. அப்பனே, பின் முடித்து இருக்கின்றான். பின், அப்பனே, பின் அடுத்து எவை என்று புரிய. அப்பனே, பின் எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, பின் புரிந்து. அப்பனே, அவனிடத்திலே கேட்டு, அப்பனே, ஏன் எழுதவில்லை என்று அடுத்த வாக்கில் சொல்கின்றேன். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன்:- என்ன சொல்லிட்டாரு தெரியுங்களா? 

அடியவர் #36 :- பிளாங்க் விட்டது… எழுதல. 

சுவடி ஓதும் மைந்தன்:-  இது வயசு வரைக்கும் அப்படியே விட்டாரு. அது சொன்னது… இது வயசு வரைக்கும் உங்களுக்கு வந்து எல்லாம் எழுதினாரு. எல்லாம் பண்ணாரு. எல்லாம் வந்து எல்லாம் பண்ணாரு. அடுத்து உனக்கு வந்து எழுதல. ஏன் எழுதவில்லை? அவனிடத்தில் கேட்கிறேன். 

குருநாதர் :- அப்பனே, யானே சொல்வேன் அப்பனே. ஆனாலும், நிச்சயம் தன்னில் மீண்டும் என்னை கேட்பான் பிரம்மன் எவை என்று கூட. அகத்தியனே !!!!! எவை என்று கூட. நீயே அனைத்தையும் எடுத்துக் கொள்கின்றாயா என்று?

சுவடி ஓதும் மைந்தன்:-  நானே சொல்லுவேன். ஆனா யாருக்குள்ள போனோமோ, அவர்  கையில போய்தான் செய்வார் . 

குருநாதர் :-  அப்பனே, இதனால் , நிச்சயம் தன்னில் கூட என்ன எழுதுவது? அடுத்து பார்ப்போம். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன்:-  அது என்ன எழுதணும்? 

குருநாதர் :-  அப்பனே, முதல் வாழ்க்கை முடிந்துவிட்டது. 

சுவடி ஓதும் மைந்தன்:-  ஃபர்ஸ்ட் சாப்டர் க்ளோஸ். 

குருநாதர் :-  அப்பனே, இரண்டாவது எவை என்று புரிய. அப்ப, நிச்சயம் தள்ளி கூட. அவன் என்ன நினைக்கின்றான் என்று அப்பனே கேட்டுட்டு. அடுத்தபடி சொல்கின்றேன். அப்பனே, ஆசிகள் 

அடியவர் #36 :-  வேலை மாறுது? 

குருநாதர் :-  அப்பனே, எவை என்று கூற. அப்பனே, பின் எது என்று புரிய. அப்பனே, பின் கவலை இல்லை. அப்பனே, எதை வேண்டுமானாலும் செய்யலாம். என்பேன், அப்பனே, 

அடியவர் #36 :-  வேலை…….

குருநாதர் :-  அப்பனே, எவை என்று புரிய. அப்பனே, பின் எவை என்று கூற. பின் என்ன வேண்டுமானாலும் செய். யான் இருக்கின்றேன் துணை. 

===========================
# அடியவர் #37   – வாக்குகள்
===========================

அடியவர் #37 :-  …..

குருநாதர் :-   அப்பனே, அப்பனே, எம்முடைய ஆசிகள் வழி நடத்துகின்றேன் அப்பனே, நல்விதமாக. அப்பனே, எது என்று புரிய அப்பனே, நல்விதமாக ஆசிகளில் இருந்து, அப்பனே, எதற்காக பிறந்தாய்? என்பவையெல்லாம் அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

அப்பனே, பின் அனைவருக்கும் சில விஷயங்கள் உண்டு. எதற்காக? எதற்காக? என்றெல்லாம். அவையெல்லாம் வருங்காலத்தில் எடுத்துரைக்கின்றன். அப்பனே, பரிபூரணமாக. அதனால், பொறுத்திரு. அப்பனே, பின் வழிகள் செய்கின்றேன். 

ஏன்? எதற்காக? சில விஷயங்களை யான் சொல்லவில்லை என்றால், அப்பனே, சில போராட்டங்கள் பிரம்மன் எழுதி வைத்திருக்கின்றான் அப்பா. அவையெல்லாம் உங்களால் நீக்க முடியாது அப்பா. 

இதனால் , அப்பனே, யானே நீக்கி, நீக்கி அனைத்தும், அப்பனே, நிச்சயம் தன்னில் தருகின்றேன். கவலை வேண்டாம். அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். ஆசிகள் பரிபூரணம். மீண்டும், பின் அடுத்த வாக்கில் சந்திப்போம் எது என்று புரிய. 

===========================
# அடியவர் #38   – வாக்குகள்
===========================

அடியவர் 7:- ……

குருநாதர் :- அப்பனே, எது என்று கூறப்பின் உன்னை தேடி வந்துவிட்டேன். அப்பனே, நீ எதையும் கேட்டு விடாதே. 

ஒரு அடியவர் :- ஐயா, அவருக்கு என்ன சொல்லுவீங்க? ( யாத்திரை குழு அடியவர் ) வாக்கு  சொல்லவே இல்லை. 

அடியவர் :- …….

குருநாதர் :-  அப்பனே, எது என்று அப்பனே, பின் அருகிலே இருக்கின்றான். அப்பனே, 

சுவடி ஓதும் மைந்தன்:-  இந்த ஓலை அருகிலே இருக்கின்றான். என்ன சொல்றதுன்னு கேக்குறாரு. 

குருநாதர் :-   அப்பனே, எது என்று புரிய. அப்பனே, பின் நிச்சயம் தள்ளி கூட சொல்வேன். அப்பனே, ஒரு நாள் காத்திரு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  கண்டிப்பா சொல்வேன். 

அடியவர் 7:- ஐயா, கேளுங்க.

குருநாதர் :-  அப்பனே, இங்கு பொருள்கள் விற்கின்றார்களா. என்ன? இவருக்கு, இவருக்கு என்று. அப்பனே, ஒரு மாம்பழத்தை எடுத்துக் கொடு. 

அடியவர்கள் :- ( சிரிப்புகள்).

ஒரு அடியவர் :- திருச்சியில் உள்ள அந்த ஆலயத்தின் பூஜை. 

குருநாதர் :-   அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. பின் அனைத்தும் நல்லதாகவே நடக்கும். அப்பனே, 

ஒரு அடியவர் :-   ஐயா,ஆசீர்வாதம். 

குருநாதர் :-   அப்பனே, எது என்று கூட. பின் அனைவருக்கும் ஆசிகள் என்று சொல்லிவிட்டேன். அப்பனே, 

எல்லாருக்கும் ஆசீர்வாதங்களும் சொல்லிட்டாருமா? ஏதாவது இருக்குதா? 

குருநாதர் :-   எது என்று தாயே, நிச்சயம் தன்னில் கூட. இப்பொழுது வேண்டாம். போதுமானது. அனைவரும் எவை என்று காத்துக் கொண்டிருக்கின்றார்கள். எவை என்று கூறப்பின் வேண்டுமென்றால், நிச்சயம் தன்னில் கூட. சூடாக ஏதாவது கொடு. 

சுவடி ஓதும் மைந்தன்:-  சூடாக எல்லாருக்கும் ஏதாவது கொடுமா? 

அடியவர் :- ( இல்லத்தின் முன் கோமாதா வந்தது குறித்து கேட்டபோது…) 

குருநாதர் :-  அப்பனே, ரகசியம் சொல்வதில்லை. அப்பனே, சொல்லிவிட்டேன். ஆசிகள், ஆசிகள். அனைவருக்குமே மீண்டும் மூன்று மாதங்கள் கழித்தே சொல்வேன். அனைவரும் எவை என்று வரும். அப்பொழுது சில ரகசியங்கள் சொல்வேன். சில மூலிகைகள் பற்றியும் தெரிவிப்பேன். ஏனென்றால், நிச்சயம் ஒவ்வொன்றாக சொல்ல வேண்டும். இல்லையென்றால், மனக்குழப்பங்களாக போய்விடும். ஆசிகள், ஆசிகள், ஆசிகள். 

ஒரு அடியவர் :- ஐயா, அந்த பைரவர் நேத்து கடிச்சு. இதெல்லாம் போட்டோம். இன்ஜெக்ஷன் எல்லாம் போட்டு. ஹாஸ்பிடல் எல்லாம் போய்…. 

குருநாதர் :- எதை எது என்று புரிய. கவலை வேண்டாம். 

சுவடி ஓதும் மைந்தன்:-  கவலை வேண்டாம். 

அடியவர் 7:- நல்லதுக்கு தான். நல்லதுக்கு தான். 

( அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 05/07/2026  அன்று சென்னையில் நடந்த   அன்புடன் அகத்திய மாமுனிவர் யாத்திரை குழுவினருக்கான சத்சங்க வாக்குகள் நிறைவு அடைந்தது……. ) 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: