​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 12 September 2026

சித்தன் அருள் - 2307 - அன்புடன் அகத்தியர் - போகர் வாக்கு!



அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 30.08.2026   அன்று அன்புடன்  போகர் சித்தர் திருச்செந்தூரில் உரைத்த வாக்கு. 

வாக்குரைத்த நாள் :-  30.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) 


வாக்குரைத்த ஸ்தலம் :-  திருச்செந்தூர் ஆலயம்.


===========================
#   அன்புடன் போகர் சித்தர்   வாக்கு 
===========================


பூவனமதை ஆளுகின்ற அழகாக, வழியும் செய்கின்ற, அனைத்து உயிரையும் காக்குகின்ற, அனைத்திற்கும் கருணை ஆக விளங்குகின்ற, ஈசனே !!!!!  பரிபூரணமாக வணங்குகின்றேனே !!!!! 


தாயே, வணங்குகின்றேனே !!!!!


கந்தப் பெருமானே, வணங்குகின்றேனே !!!!!!


போகனே உரைப்பேனே. 


அறிந்தும், இதைத்தன் எவ்வாறு என்பதையெல்லாம் மனிதனுக்கு தெரிவித்து வருகையில்…. 


ஆனால் மனிதன் என்னவோ அறிந்தும், தீய பழக்கங்கள் பின் வந்து வந்து, வந்து வந்து, வாட்டுமே. 


வாட்டும் அதை அறிந்தும், இதைத்தன் அறியாத வகையில் கூட, துன்பங்கள்—அதாவது மனிதன் செய்யும்—அதாவது துன்பங்கள் எவ்வாறு, எதைப் புரியும் அளவிற்கும் கூட, அதன் அளவே நிச்சயம் அதற்கு அதிகமாகவே நிச்சயம் இறைவன் வாரி வழங்குகின்றான். 


இதனாலே சித்தர்கள் பல வகைகளில் வந்து மனிதனுக்கு செப்புகின்றனர். 


இவ்வாறாக கலியுகத்தின் முற்றாகவே வந்து கொண்டே இருக்கின்றது இன்னும். 


===========================
#   குருநாதர் பாடங்களையே ஏற்காத பொறாமைக்காரர்கள்….
===========================


இதனால்தான் அகத்தியனே பரிபூரணமாக மக்களுக்கு தெளிவாக, அழகாக பாடங்களை கற்பித்துக் கொண்டிருக்கின்றான். 


ஆனாலும் மனிதன் அதை பின் ஏற்றுக்கொள்ளவும். 


ஆனாலும் போட்டி, பொறாமைகள் இன்னும் எதை பின் புரியாமலே இருக்கின்றான். 


எப்படி, எதற்கு, எதற்கு, இதைத்தன் எவ்வாறு என்பதையெல்லாம் பொறாமைக்காரனாகவே வலம் வந்து கொண்டிருக்கின்றான். 


இதனால் பின் இறைபக்திகள் எதை என்று சொல்ல?


===========================
#  இறைவன் தன் சுயரூபத்தை காட்டும் பொழுது , உலகம் தாங்காது…
===========================


இதைத்தன் உருவாக எக்காலம் அறிந்தும், இவைத்தன் பின் முற்பகுதியில் இருந்தே, இதனால் முற்ற முற்ற… 


இறைவன் அடிக்கடி தன் சுயரூபத்தை காண்பிக்கின்ற பொழுது, மனிதனால் தாங்க இயலுமா என்றால் நிச்சயம் இயலாது. 


===========================
#   பாசத்துடன், மீண்டும் சந்தர்ப்பத்தை வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றோம்.
===========================


அதை மட்டும் இல்லாமல், அறிந்தும், இவைத்தன் புரியாத நிலையில் இருந்தாலும், அகத்தியன் பல வகைகளில் கூட சொல்லி, சொல்லி, சொல்லி, மனிதனுக்கு இப்படி இருங்கள், இப்படி இருங்கள் என்று.


அதாவது பின் தந்தையே,  தாயை என்றெல்லாம், அதாவது பாசப் பொழிவினை பொழிந்து, பொழிந்து, மனிதனிடத்தில். 


அது மட்டுமில்லாமல், பின் திருந்துங்கள், அப்பனே என்றெல்லாம் செல்லங்களாக, பின் அதாவது பின் அழைத்து, அழைத்து. 


ஆனாலும் மனிதன் திருந்த பாடில்லை. 


ஆனாலும் மீண்டும் சந்தர்ப்பத்தை வாரி வழங்கிக் கொண்டே இருக்கின்றோம். 


இவைத்தன் புரியாமலும், மனிதன் சுற்றித் சுற்றித் திரிந்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு இதை நிறுத்துவது? 


===========================
#   திருச்செந்தூரில் வரவுள்ள பேரழிவு 
===========================


பல இயற்கை பேரழிவுகள் இன்னும் எதைப் புரியாமலே. 


இங்கும் வரப்போகின்றது ஒரு பேரழிவு. 


ஆனாலும் அதை முருகன் பார்த்துக் கொள்வான். 


மனிதன் நிலைமை எவ்வாறெல்லாம், எதை என்று நுனி பொழுதில் அனைத்தும் மாறிவிடுமாம். 


இவைத்தன் அறிந்தும், உண்மைதனை விளக்க பல சித்தர்கள் பின் வந்து கொண்டே இருப்பார்கள். பின் நிச்சயம் அவ்வாறு இல்லை என்று. 


இல்லை என்றால் நிச்சயம் தன்னில் ஈசனிடம் பின் கூறி, இவர்களை திருத்த முடியாது என்று நிச்சயம் கடைசியில் பின் அனைத்தும் பின் அறிந்தவை. 


அதாவது பின் வாயால் சொன்னாலும், அவைத்தன் அதாவது உண்மைதனை எதை என்று புரிய. 


(வாயால் நடக்க உள்ள அழிவை சொன்னாலும்,  அவ் வாக்குகள் சாபமாக போய்விடும் ) 


===========================
# மனதிற்குள் இறைவனை நிறுத்திச் செய்யும் அபிஷேகங்கள் மேலானது.
===========================


இவைதன் அறியாம வகைகளில் கூட, மனிதன் எங்கேங்கோ எதனை எதனையோ அபிஷேகங்கள், ஆராதனைகள் இன்னும் பல வகைகளில் கூட. 


ஆனாலும் தன் மனதை பின் முதலில் ஏன் இறைவன் எதற்காக, பின் அனைத்தும் பின் இறைவனுக்கு பின் செய்கின்றான்?  பின் அது எவை இறைவன் ஏற்றுக் கொள்வானா? 


நிச்சயம் தன் மனதிற்கு செய்யுங்கள். மனதினுள்ளே இறைவனை நினைத்து அனைத்து அபிஷேகங்கள் செய்யுங்கள். 


===========================
# நீக்கப்பட வேண்டியவை:-  பொய் சொல்லாமை, துரோகம் செய்யாமை மற்றும் பொறாமையைத் தவிர்த்தல் ஆகியவையே இறைவனுக்குச் செய்யும் உண்மையான சமர்ப்பணம்.
=========================== 


அதாவது பின் பொறாமை நீக்கி, அதாவது இன்னும் எதை எதையோ பொய் சொல்லாமை நீக்கி, இன்னும் துரோகங்கள் நீக்கி, இன்னும் பின் நல் மனதாகவே அனைத்திடத்திலும் கருணை காட்டுங்கள். அதுவே பின் இறைவனுக்கு நீ செய்யும் சமர்ப்பணம். அதாவது மனதுள்ளே வைத்து, 


அதை விட்டுவிட்டு, எங்கு ஏது பின், அதாவது அனைத்தும் பின் மனதிற்குள் பின் வைத்துக்கொண்டு, இறைவனை அடைந்தாலும், இறைவன் பின் அறிந்தும் எதைச் செய்வான் என்றால், நிச்சயம் உன் மனதிற்குள்ளேவே இருக்கின்றதே…... அவ்வழுக்குகளுக்கு ஏற்பவே பின் தண்டனையும் கொடுப்பான். தெரிந்து கொள்ளுங்கள். 


தெரிந்து கொள்ளாவிடில் இன்னும் வருத்தங்கள் தான் மனிதனுக்கு. 


வாழ முடியாத காலம் கலியுகம் என்பதை எல்லாம் சித்தர்கள் பல பின் ரகசியங்கள் தெரிவித்துக் கொண்டே வருகின்றார்கள். 


ஆனாலும் மனிதன் அதைத்தன் இவைத்தன் எவ்வாறு எதை என்று புரிய, பின் அறிந்தும், எதனை எதனையோ பின்னாடி, பின் சென்று, பின் முன்னாடி எதை என்று அறிய, அதாவது பின் நிற்கின்றான் இறைவனிடத்தில் வந்து.  யான் உத்தமன் என்று. 


===========================
# இறைவனையே ஏமாற்றும் மனிதன்….
=========================== 
# தன் வினை தன்னை சுடும் 
=========================== 


அறிந்தும், இவைத்தன் இறைவன் எதை புரிந்து கொள்ளும்,  அதாவது பின் அனைவரையும் ஏமாற்றலாம். மனிதனை மனிதனை ஏமாற்றலாம். ஆனாலும் இறைவனே மனிதன் பின் ஏமாற்றுகின்ற ஏமாற்று….இறைவனே மனிதன், அதாவது புரிய, புரிந்து கொள்ளுங்கள். 


இதனால்தான் இறைவன் பின் எப்பொழுதும் கோபித்துக் கொள்ளவில்லை. இறைவனும் கருணையாகத்தான் இருக்கின்றான். 


ஆனாலும் தான் செய்த தவறுகளே பின் தனக்கு பின் தண்டனையாக வருகின்றது என்பது இது பின் உண்மையே. அறிந்ததே அனைத்தும். 


இவ்வாறாகவே பல வகைகளில் கூட, அனைத்து உயிர்களும் பின் மனிதனுக்கு சொந்தம் என்று, அதாவது பல ஞானிகள் உரைத்து வந்தனர். 


ஆனாலும் அதைத்தன் நிச்சயம் பின் தனக்கே சொந்தமாக்கி, தனக்காகத்தான் படைக்கப்பட்டவை என்பதையெல்லாம் பின் மனிதன் எவ்வாறு எவ்வாறோ தீய எண்ணங்களாக கொண்டு, இன்னும் எதை என்று புரிய.


இதனால் பின் பல அழிவுகள். ஆனாலும் அவ்வழிகள், அவ் அழிவுகள் எவ்வாறு தடுப்பது என்று மனிதனுக்கு தெரியாது. 


தெரியாதடா பின், அதாவது மூடுகெட்ட எவை எதை என்று புரிய, பின் முட்டாள் மனிதனுக்கு இதைத்தன் அறிய. 


இதனால் மனிதன் எதை எதையோ புலம்பிக் கொண்டிருப்பான். பின் அவை இவை இவ்வாறு செய், அவ்வாறு செய் என்றெல்லாம் நிச்சயம் மனது சரியில்லை என்றால், நீ எவ்வாறு செய்தாலும், பின் வீண் அனைத்தும் வீணாகவே. 


=========================== 
# ஒருவன் செய்யும் தவறு, மின்சாரம் பாய்வது போல் பலருக்கும் பரவி பாதிப்பை ஏற்படுத்துகிறது. 
=========================== 


இதனால் எண்ணங்கள் உயர்வாக எண்ணிக்கொள்வது எதை என்று புரிய.


பின் அறிவு கெட்டவன், பின் மனிதன் வருங்காலத்தில் எதை என்று புரியாமலும், நிச்சயம் பின் ஏது என்று புரிய, பின் ஒரு மனிதன் தவறு செய்கையில், பின் அது பல மனிதர்களுக்கு சென்று, பின் பாய்கின்றது. 


எப்படி மின்சாரம் எங்கு எதை என்று பாய்கின்றதோ, அப்படியே சென்று கொண்டே இருக்கின்றது. 


இதனால்தான் பின் இன்னும் பொறாமைக்காரர்கள் இவ்வுலகத்தில் எதை எதை தவிக்கின்றார்கள். 


அகத்தியன் என்னவோ சொன்னான், அதையெல்லாம் மனிதன் ஏற்று நடந்திருக்கின்றானா என்றால், நிச்சயம் இல்லை. 


ஏன் எதற்காக ஒருவன் ஒருவன் அவை பொய், இவை பொய், இதைத்தன் அதைத்தன், அவைத்தன் எவை எதை அப்படி இல்லை, இப்படி இல்லை என்பதையெல்லாம் நிச்சயம் மனிதன்… அதாவது பின் ஒரு தீய சக்திகளாகவே, பின் நிச்சயம் நடந்து கொண்டிருக்கின்றான் இறைவனை வணங்கியும். 


இவ்வாறு தீய சக்திகளில் முதலில் எங்கு அடைக்க வேண்டுமோ, அங்கு அடைத்திடுவோம். எதை என்று புரியாமல் கூட, 


இதனால் நிச்சயம் மனிதன் செய்யும் எவை என்ற தவறுக்கு, மனிதனே தண்டனைகள் அனுபவிக்கின்றான். 


=========================== 
# குருநாதர் பாசத்துடன் அப்பனே, அம்மையே என்று சொல்வதை உணராத மூடர்கள்……
=========================== 


இதனால்தான் செல்லங்களே, செல்லங்களே என்றெல்லாம், அப்பனே, அப்பனே என்றெல்லாம், பின் நிச்சயம் பின் போகாதடா என்றெல்லாம், பின் அகத்தியன், பின் அதாவது அழுது புலம்பி, மனிதனிடத்தில் பின் சொல்லிக் கொண்டிருக்கின்றான். 


ஆனால் மனிதன் என்னவோ, அப்பனே என்று ஏன் சொல்கின்றான், அகத்தியன் என்றெல்லாம், எவை எதை என்று புரிய, ஏன் இப்படி எல்லாம் அகத்தியன் சொல்வானா என்றெல்லாம்.. அவை இப்படி என்பதையெல்லாம் நிச்சயம் எதை என்று அறிய, பின் இப்பொழுது, 


பின் அதாவது அகத்தியன், பின் என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கின்றான். ஆனாலும் அவை யாரும் மதிப்பதில்லை. 


ஏனென்றால் அனைவருமே இங்கு பொய்யானவர்கள் தான். 


=========================== 
# சித்தனை தொட்டவர்கள்…….என்ன ஆவார்கள் ?
=========================== 


சித்தர்கள், பின் சாதாரணமானவர்கள் இல்லை. 


எங்களை தொட்டவர்கள், பின் நிச்சயம் கெட்டார்கள். அவ்வளவுதான் சொல்லிவிட்டேன். 


இதைத்தன் அறியாது இவ் முருகப்பெருமான் இடமே, பின் இருந்து இங்கிருந்தே, பின் சொல்லி இருக்கின்றோம். 


சித்தனை வணங்குவது, பின் சாதாரணம் இல்லை. 


ஒழுங்காக வணங்க வேண்டும். 


இவைத்தன் எப்பொழுதோ சொல்லி இருக்கின்றோம். 


ஆனாலும் மனிதன் அப்படி இல்லை. 


இதனால் கஷ்டங்கள், கஷ்டங்கள் என்று தெரிந்து கொண்டால்.  


நிச்சயம் அதனால்தான் சித்தனிடம் வருவதற்கு தகுதிகள் வேண்டும். அத்தகுதிகள் யாரிடம் இல்லை. 


எதை என்று புரிய, ஆனாலும் நிச்சயம் எங்களை எப்படி நீங்கள் பின் அழைக்கலாம் என்பதையெல்லாம், பின் எதை என்று அறிய, 


****** மனதாலே நல்ல எண்ணங்கள் உடையவர்கள் தான் எங்களை அழைத்திட வேண்டும். ******


****** அப்படி இல்லை என்றால், சாபங்களே… உங்களுக்கு தானாகவே வந்து சேருமடா. மனித முட்டாளே…  ******


இதைக்கூட புரிந்து கொள்ளாமல், மனிதன் தெரிந்து கொண்டிருக்கின்றான். எவ்வாறு சித்தர்கள் பெயரை வைத்து, எவ்வாறு என்பதையெல்லாம், அதாவது என்னென்னவோ சொல்லிக் கொண்டிருக்கின்றான். 


ஒருவனாவது உருப்படியாக இருக்கின்றானா என்ன? இல்லையே!!!!!


இன்னும் இதைத்தன் தரித்திரங்களே சேகரித்துக் கொண்டிருக்கின்றான். 


எவ்வாறு முருகப்பெருமான் எதை எவை என்று உண்மையான பல வகையில் கூட, பின் உண்மை இல்லை மனிதனிடத்தில். 


இதனால்தான் பின் இவை எதை புரியாமல் கூட, பின் அழிவுகள் பலத்த அழிவுகளாக வந்து கொண்டிருக்கின்றது. 


=========================== 
# அபாய எச்சரிக்கை 
=========================== 
# அகத்திய மாமுனிவர் சொன்ன வாக்குகளை தடுப்பவர்களுக்கு சாபங்கள் வந்து சேர்ந்து கொண்டே இருக்கின்றது….
=========================== 


இன்னும் எவை என்று அகத்தியன் கீழிறங்கி, மனிதனுக்கு நல்வாக்குகள் செப்புவோம், செப்புவோம் என்றெல்லாம். 


ஆனாலும் மனிதன் அதை தடுத்துக் கொண்டிருக்கின்றான். 


எப்படியாவது எதை என்று புரிய என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட, 


****** இதனால் மனிதன் எவை அகத்தியன் சொன்னதை எவர் அவர் தடுத்தார்களோ, அவருக்குத்தான் நிச்சயம் சாபங்களாக போய்க்கொண்டிருக்கின்றது. புரிந்தும் கூட ******  


இதனால் உண்மையானவர்கள் எவர் என்றால், நிச்சயம் இல்லை. 


எதை என்று இதனால்தான் துன்பங்கள். 


******  உண்மையானவர் என்று இருந்தால், அவனுக்கு ஏன் துன்பம் உரைப்போகின்றது?  ****** 


சித்தன் எதை என்று புரிந்து கொள்ளுங்கள். நிச்சயம் தன்னில் கூட. 


******  துன்பம் வந்தோர் எல்லாம் நிச்சயம் பாவப்பட்டவர்களே. ******  


******   சித்தர்களை எவை ஏமாற்றுவதற்காக பல வகையிலும் கூட செய்தவர்களே. ******  


=========================== 
# உண்மையானவன் சித்தன் அருகிலே இருப்பான்.
# சித்தனும் உண்மையானவனுக்கு அனைத்தும் செய்வார்கள். 
=========================== 


இதனால் உண்மையானவன் எங்கள் அருகிலே இருப்பான். 


நாங்களும் உண்மையானவனுக்கு அருகிலே இருந்து அனைத்தும் செய்வோம். 


ஆனால் அறிந்தும் எவை எதை என்று புரிய, இதனால் சித்தன் எவை என்று அறிய, பின் ஒரு நல்லவனுக்கு பின் எதையாவது, பின் அதாவது அனைத்தும் கொடுப்பான். அனைத்தும் எதை என்று கூற இறைவனையும் காட்டுவான். 


ஆனால் இங்கு பொய்யானவர்களே. 


இதனால்தான் இப்புவியை எதை என்று அறிய, பின் ஈசன் அடிக்கடி பின் கோபம் கொண்டு. 


பின் ஈசனிடத்திலே எதை என்று அறிய, இன்னும் பின் அதாவது பல வகையிலும் கூட ஞானங்கள் உபசரிப்பதற்காக நிச்சயம் பல சித்தர்கள் வருவார்கள். அவை ஒழுங்காக தெரிந்து கொண்டால் நன்று. 


=========================== 
# கலியுகத்தில் ஆபத்துகளில் இருந்து தப்பிக்கும் உபாயம்….
=========================== 


இனிமேலும் பின் அவை பின் அறிந்தும் இவைத்தன் புரியாமலும் இருந்தால், அழிவுகள் நிச்சயமாக இன்னும் எங்கெங்கு எதை என்று புரிய வரப்போகின்றது… என்பதையெல்லாம் அனைவருக்குமே தெரியும். 


அதாவது அங்கு வருகின்றது கலியுகத்தில் என்னென்ன நடக்கப் போகின்றது என்பதையெல்லாம். 


ஆனால் எப்படி தடுத்து நிறுத்துவது???  என்பதெல்லாம் நிச்சயம் மனிதனுக்கு தெரியாது. 


தெரியாதடா எதை என்று கூற  பல வகையில் கூட இவையான் செப்பிக்கொண்டே இருக்கின்றேன். 


ஆனாலும் எப்படி தடுப்பது? 


பின் ****** ஒழுங்காக  ******  எதை என்று புரிய, 


பின்  ******  சித்தர்கள் சொன்னதை அழகாக ஏற்று நடந்தால், வருங்காலத்தில் தப்பித்துக் கொள்வீர்கள்.  ******  


இல்லையென்றால், பின் யாராலும் காப்பாற்ற முடியாது. 


இதை மனிதன் பின் அதாவது போலி கௌரவத்திற்காக சொல்லிக் கொண்டே இருப்பான். அவை இவை என்று…. 


முருகப்பெருமான், பின் நிச்சயம், பின் அதாவது இன்னும் கடல் கொந்தளிப்பு எல்லாம் வரப்போகின்றது. 


ஆனால் முருகன் அழகாக பின் காத்திருப்பான். 


****** ஆனாலும் நிச்சயம் மனிதன் திருந்தவில்லை என்றால், முருகனும் அமைதியை காத்து விடுவான். சொல்லிவிட்டேன். இங்கிருந்தே. ******


அதாவது எதை என்று என் மகன், அதாவது அருகில் பின் இருந்தே.


=========================== 
# இன்னும் அனைவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள்.
=========================== 


இதைத்தன் பின் அனைவரும், பின் ஒன்று சேர்ந்து இன்னும் எதை என்று புரியும் அளவிற்கு கூட இன்னும் அனைவருக்காக வேண்டிக்கொள்ளுங்கள். 


இதைத்தன் சித்தர்கள் வாய்ப்பும், அதாவது சித்தர்கள் ஒரு வாய்ப்பாக நிச்சயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 


=========================== 
# சித்தர்கள் அளிக்கும் வாய்ப்பு.
# பயன்படுத்தினால் - புண்ணியம் 
# தடுப்பவனுக்கு - பாவங்கள் 
=========================== 


சித்தர்கள் பின் வாய்ப்பு, பின் அளிக்கின்றார்கள். 


****** அது யார் பயன்படுத்துகின்றானோ, அவன் தனக்கு புண்ணியம். ******   


****** இன்னும் புண்ணியம் சேர்ந்து கொண்டே இருக்கும். ******


=========================== 
# தடுப்பவனுக்கு - பாவங்கள் 
=========================== 


அதை தடுப்பவனுக்கு பாவங்கள் சேர்ந்து கொண்டே இருக்கும். பாவத்தினால் ஒன்றும் செய்ய முடியாது. 


அந்த பாவத்தினால் அனைத்தும் பின் இவனும் அழிந்து, மற்றவர்களும் அழித்து விடுவான். 


எவ்வாறு என்பதையெல்லாம் இதனால் இதற்கு ஒரு கூட்டமே இருக்கின்றது. 


சித்தர்கள் பின் எவை என்ற வழி, பின் அவைத்தன் இவைத்தன் பின்பற்றக் கூடாது என்பதற்கு இணங்க.


இதனால் அனைவரையும் தூக்கி எறிவோம் வருங்காலத்தில். 


பின் எதை எதை என்று கூட சித்தனின் வாக்கினை எவை என்று புரிய, நிச்சயம் அறிந்தும் பொய், அதாவது பொய் என்பதெல்லாம் நிச்சயம் தன்னில் பொய் என்று கூறுபவன் எல்லாம் தூக்கி தூரே வீசிவிட்டு, பின் நல்லதாக செய்வோம். 


ஏனென்றால் காலம், அதாவது கலியுகம் முற்றிய காலமாகவே வந்து கொண்டிருக்கின்றது. 


இனிமேலும் விட்டுவிட்டால், சித்தர்கள் எதை என்று புரிய, பின் மனிதன் திருந்த போவதில்லை. 


இன்னும் ஆசிகள். 


இன்னும் பின் முருகனும், பின் வந்து செப்புவான். சில இடங்களில் கூட 


நல் ஆசிகள். போகனுடைய பின் ஆசிகள் எப்பொழுதுமே பின் இருக்கும். 


ஆனாலும் மனிதன் அதை பெற்றுக் கொள்வதற்கும் அவசியமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் அழிவே ஆசிகள். 


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: