அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் 02/08/2026 அன்று திருவண்ணாமலையில் நடந்த 12 வது சிவபுராணம் கூட்டு பிரார்த்தனை வாக்கு - பகுதி 1
நாள், நேரம் : 02/08/2026 (ஞாயிற்றுக்கிழமை) , காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை.
இடம் : உலக நன்மைக்காக 12 வது சிவபுராண கூட்டுப் பிரார்த்தனை ஆண்டாள் சிங்காரவேலு திருமண மண்டபம், வேங்கிக்கால், திருவண்ணாமலை.
முழு கூட்டு பிரார்த்தனை நிகழ்வின் நேரலை :-
https://youtu.be/npiKG6l6z6o
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
பகுதி 1 வாக்கின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=11221
ஆதி மூலனை மனதில் எண்ணி செப்புகின்றேன் அகத்தியன். நல்விதமாகவே ஆசிகள்.
ஆசிகள் அடுத்தடுத்து கந்தன் வந்து வாக்குகள் செப்புகின்ற பொழுது, அதன் முன்னே பின் குழந்தைகளை பாடச் சொல்லுங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- குழந்தைகள், அகத்தியர் என்ன சொல்றார்னா, "முருகர் வருவார்ப்பா." யாரு வருவாரு?
அடியவர் :- முருகர்.
சுவடி ஓதும் மைந்தன் :- முருகர் வருவாரு. அதுக்குள்ள சின்ன சின்ன குழந்தைங்க யாராவது இருந்தா பாட சொல்லுங்க. சின்ன சின்ன குழந்தைங்க எடுத்துட்டு வாங்க அம்மா , எல்லாரும்.
அடியவர் :- அந்த குழந்தைகளை வரச் சொல்லுங்க. பாடக்கூடிய குழந்தைகள் எல்லாம் மேல வாங்கம்மா.
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாம் சின்ன சின்ன குழந்தைகள் தானே, வாங்க எல்லாரும்.
அடியவர் :- சின்ன குழந்தைகள், பாடக்கூடிய குழந்தைகள் எல்லாம் மேல வாங்க.
===========================
# குழந்தைகள் மேடையில் வந்து அமர்ந்தார்கள் ….
===========================
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=11258
===========================
# அன்புடன் அகத்திய மாமுனிவர் வாக்கு
===========================
இவ்விடத்தின் நேரலை :- https://youtu.be/npiKG6l6z6o?t=11285
குருநாதர் :- இதனையும் நன்று, ஏது என்று புரிய, சரியாகவே அறிந்தும் பல உண்மைகளை யானே தெரிவிப்பேன். கவலைகள் வேண்டாம்; அறிந்தும் கூட, எதனால், ஏன், எதற்கு—அறிந்தும் இவைத்தன் பல வகையிலும் கூட அறிந்தும் இவை உள்ளம் புரியும்படியும் கூட மக்கள் அறிந்தும் அறிந்தும் இதனாலே வினைகள் பல பல வழிகளில் பின் சந்தித்து, பல பின் போராட்டங்களையும் தானே உற்பத்தி செய்து கொண்டிருக்கின்றார்கள் இக்கலியுகத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிஷன் வந்து என்ன சொல்றாருன்னா, அகத்தியர் வந்து… தன் துன்பத்தை தானே உற்பத்தி செய்து கொண்டிருக்கிறார்களாம் — ஐயா, புரியுதுங்களா?
சுவடி ஓதும் மைந்தன் :- தன்னுடைய துன்பத்துக்கு யார் காரணம்? அது ஏற்கனவே சொல்லிட்டாரு. இந்த கலியுகத்துல நிறைய வந்து.. தானே வந்து… துன்பத்தை வந்து… தங்களே…. நீங்களேமா சுமக்குறது. வேற யாரும் இல்லைங்க ஐயா வந்து…. துன்பத்தை யார் வந்து தந்துக்கிறது? வந்து…. நீங்களே என்றாரு.
குருநாதர் :- அறிந்தும் முருகப்பெருமானை நோக்கி, சரியாகவே எதை என்று புரிய, அறிந்தும் இவை என்று புரியாத வகையில் கூட இருந்தாலும், நல்விதமாக எம்முடைய ஆசிகள். இதனால் கவலைகள் வேண்டாம். அறிந்தும் பல வழியில் கூட உண்மைகள் இன்னும் ஞானத்தின் கட்டாயம். அவ் ஞானத்தை நீங்கள் உணர்ந்து கொண்டால் நன்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஞானம் உணர்ந்து கொள்ளணும் என்றார் வந்து அகத்தியர், வந்து அந்த ஞானம் இப்பொழுது சொல்வார் என்றார் வந்து…. ஞானம். ஐயா, புரியுதுங்களா? ஞானம் என்றால் என்ன? அதெல்லாம் சொல்றார் என்றார் வந்து…
குருநாதர் :- மனித உடம்பில் ஏற்படும் பின் விசித்திரமான எண்ணங்கள் எப்படி எல்லாம் உருவாகின்றது என்பதை எல்லாம் தெரியப்படுத்துவேன், கந்தன் வந்த பிறகே.
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன சொல்றாருன்னா, மனிதனிடத்தில் நம்ம என்னென்ன வினைகள் ஏற்படும், நம்ம எப்படி எல்லாம் கஷ்டங்கள் வரும், அதெல்லாம் வந்து யார் தெரிவிக்கிறாராம் வந்து? முருகர் வந்ததுக்கு பிறகு அகத்தியர் சொல்றார்….. முருகர் வந்த பிறகு நான் சொல்றேன்பா என்றாரு.
குருநாதர் :- இதைத்தன் உருவாக்க அறிந்தும் எவை என்று அறிய, இதைத்தன் எவ்வாறாக இதனாலே பின் அனுபவமே சிறந்தது, சால சிறந்தது. அவ அனுபவம் உடம்பு எப்படி பெருகின்றது என்பதை எல்லாம் யான் சொல்லிக் கொடுக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- அனுபவ பாடம் மிக வந்து… எவ்வளவு சால சிறந்தது. அந்த உடம்புல வந்து அனுபவம் எப்படி பிறக்கும், எப்படி எல்லாம் ஏற்படும்னு சொல்லிட்டு என்ன சொல்றாரு அகத்தியர் வந்து…… சொல்லிக் கொடுக்கிறார்.
குருநாதர் :- இவை அறிவித்து எதை அறிந்தும் கூட, எதனாலே அறிந்தும் ஏது என்று புரிய, இதனைத்தன் பின்
**** தன்னில் த்தானே பின் உயர்த்துதல், ****
**** தன்னில் த்தானே பக்குவப்படுத்துதல், ****
**** தன்னில் த்தானே வெல்லுதல், ****
இவையெல்லாம் கற்றுக் கொடுக்க போகின்றேன்.
https://youtu.be/npiKG6l6z6o?t=11443
சுவடி ஓதும் மைந்தன் :- தன்னில் த்தானே வெல்லுதல், அப்புறம் தன்னில் த்தானே பக்குவப்படுத்துதல், அப்புறம் என்னங்கயா, அடுத்தது தன்னில் த்தானே உயர்த்துதல். அதெல்லாம் நான் வந்து இப்ப கத்து கொடுக்கிறேன்பா என்றார் .
===========================
# வெற்றி பாதை கலியுகத்தில் மூடப்பட்டுள்ளது.
===========================
குருநாதர் :- அப்பனே நலமாகவே மனிதனுக்கு வெற்றி பாதையில், ஆனால் அப்பாதை பின் கலியுகத்தில் மூடப்பட்டுள்ளது அப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகத்தில மனிதனுக்கு வெற்றி பாதை பிரகாசமா இருக்குது. ஆனால் அது வந்து என்ன பண்ணிட்டாங்க?
அடியவர் :- மூடப்பட்டிருக்கிறது.
சுவடி ஓதும் மைந்தன் :- மூடப்பட்டிருக்கின்றது, அவ்வளவுதான்.
குருநாதர் :- இவைதன் மூடப்பட்டிருக்க, குழப்பங்கள் பல மனிதனுக்கு குழப்பத்தாலே அழிவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அந்த பாதை மூடப்பட்டிருக்கறதுனால?
அடியவர் :- குழப்பங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனுக்கு குழப்பங்கள் ஏற்பட்டு,
அடியவர் :- அதனாலே அவன் அழிஞ்சிருவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனாலே
அடியவர் :- அந்த குழப்பங்களாலே மனிதன்
சுவடி ஓதும் மைந்தன் :- குழப்பங்களாலே அழிஞ்சிருவான்.
குருநாதர் :- அவை மட்டுமில்லாமல் இன்னும் இன்னும் எப்படி எல்லாம், அதாவது மனிதனை அறிந்தும் இவைதன் புரிய, பின் அதாவது விஞ்ஞான பூர்வமாக விளக்க போகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் மனிதனுக்கு சொன்னாலும்?
அடியவர் :- புரியாதுப்பா….
சுவடி ஓதும் மைந்தன் :- புரியாது. அது என்ன பண்றாரு,எப்படிங்கயா
அடியவர் :- அதை அழிக்கவும், உங்கள் அப்படின்றத விஞ்ஞான பூர்வமா நான் உங்களுக்கு விளக்குறேன், அப்படின்னு சொல்லிருக்காங்க குருநாதர்.
குருநாதர் :- எதை ஏது என்று அறிய, எதனாலே பல வருத்தங்கள் மனிதனுக்கு, இவ் வருத்தங்களை வைத்துக்கொண்டு, பின் அதாவது எப்படி காலம் செலுத்துவான்? அதாவது பின் எப்படி வாழ்வான்.?
அடியவர் :- நிறைய கவலைகள், நிறைய வருத்தங்கள், இதெல்லாம் வச்சுக்கிட்டு, நீங்க எப்படிப்பா வாழ போறீங்க,
சுவடி ஓதும் மைந்தன் :- வாழ போறீங்க, எப்படி இன்னும் காலத்தை கடக்க போறீங்க,
அடியவர் :- கடக்க போறீங்கன்னு.
குருநாதர் :- இதைத்தானே உணர்ந்து அறிந்து சித்தர்கள் யாங்கள் வைத்திருக்கின்றோமே. இதனாலே எதை என்று புரிய, அறிய எவை வேண்டியவற்றை… அறிய வேண்டியவற்றை அறிந்து… தொலைக்க வேண்டியவற்றை, பின் தொலைத்து…. பின் நல்வாழ்க்கையாக எப்பொழுது மனிதன் வாழ போகின்றானோ ?????
அடியவர் :- இதெல்லாம் எங்களுக்கு முன்னாடியே தெரியும்பா. எதை நீங்க அறியணுமோ, அதை அறிஞ்சு, எதை நீங்க உணரணுமோ, உணர்ந்து, எப்ப வந்து நல்ல வாழ்க்கை நீங்க வாழ போறீங்கப்பா, அப்படிங்கிறாரு.
===========================
# குருநாதர், மேடையில் ஏன் குழந்தைகளை முன் நிறுத்துகின்றார்கள்?
===========================
குருநாதர் :- இதனை அறிவித்து, இக்குழந்தைகளை கூட ஏன், எதற்காக, எவை என்று அறிய, வருங்காலத்திலே பள்ளி, அதாவது பின் பள்ளிக்கு எவ்வாறு என்பதெல்லாம், கல்வி கற்கக் கூடிய இடங்கள் எல்லாம், நிச்சயம் பின் நரகமாக போகும். இதனால் பல வருத்தங்கள்.
சுவடி ஓதும் மைந்தன் :- அகத்தியர் ஏன் சின்ன பசங்களை அழைச்சாருன்னா…….. முதல்ல கல்வி கூடங்கள் என்ன ஆகும் வந்து?
அடியவர் :- நரகமா போயிரும்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- நரகமாக போகும்.
https://youtu.be/npiKG6l6z6o?t=11580
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய, கல்வி கற்கும் ஒழுக்கமே, பின் நிச்சயம் கற்பிக்க இயலாது வருங்காலத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- வருங்காலத்தில அந்த கல்வியில் ஒழுக்கம் இல்லாதவங்க எல்லாம் வந்து… கல்வியில தான் ஒழுக்கம் இல்லாம போயிடும், தெரியாம போயிடும்.
குருநாதர் :- இதனாலே மாற்றங்கள் வேண்டும். தான் தன் தந்தை, அதாவது எவை என்று அறிய, எவை தன் பின், பின் அன்னையோ, நிச்சயம் தன் பிள்ளை உயர்வாக, பின் எவை என்று கூட ஓதி, பின்பு எதை எதையோ செய்ய வேண்டும் என்று. ஆனாலும், அத்தனை தடைகளாகும்.
சுவடி ஓதும் மைந்தன் :- வருங்காலத்துல கல்வி என்பது என்ன ஆகுமாம்? தன்னோட அம்மாவும் அப்பாவும் பெரிய பெரிய கையில, பெரிய பெரிய ஆளாகணும்னு சொல்றாங்க. ஆனால் அந்த கல்வியே என்ன ஆகுமாம். வந்து?
அடியவர் :- தடைகளாயிடும்,
சுவடி ஓதும் மைந்தன் :- தடைகள் ஆயிடும்.
குருநாதர் :- அறிந்தும் ஏது என்று புரிய, இன்னும் பின் பள்ளிகளிலே அறிந்தும் இவைத்தன் எவ்வாறு என்பதும் கூட காதல் கூடங்களாக மாறும்.
அடியவர் :- ( நொந்து போய் ) அப்பா !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- பள்ளிகளே என்ன ஆகும் வந்து?
அடியவர் :- காதல் கூடங்களாக,
சுவடி ஓதும் மைந்தன் :- காதல் கூடங்களாக மாறும்.
அடியவர் :- மாறும்.
குருநாதர் :- இவ்வாறாக பின் மாறிவிட்டு, பின் ஒழுக்கம் சீர்கெட்டு, அறிந்தும் பின் பல கெட்டு, அனைத்தும் கெடும்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதனால ஒழுக்கம் கெட்டு, சீர்கெட்டு, எல்லாம்?
அடியவர் :- அழியும்,
சுவடி ஓதும் மைந்தன் :- கெட்டு போயிடும்.
குருநாதர் :- இதனாலே ஒழுக்கம் இல்லாமல் எதை ஏது என்று புரிய, பின் அறிந்தும் ஆணும் எவை என்று கூற, பெண்ணும் திரிவார்கள் அப்பா. உலகம் அழிவு நிலைக்கு வருவது எதை என்று கூற, பின் அறிந்து கூற, இதுவே பின் நிச்சயம் தன்னில் கூட உத்தரவாதம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒழுக்கம் இல்லாமல் ஆணும் பெண்ணும் திரிகின்ற பொழுது, இதுதான் வந்து?
அடியவர் :- உலக அழிவு.
சுவடி ஓதும் மைந்தன் :- உலக அழிவுக்கு?....
சுவடி ஓதும் மைந்தன் :- காரணங்கள்.
குருநாதர் :- இவைத்தன் எதிர்த்து நின்று, எதை என்று கூற, பின் அன்னை தந்தை கேட்டாலும், பின் பொய் சொல்வார்கள் பிள்ளைகளே.
அடியவர் :- ஆமாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதை எதிர்த்து நின்று, ஏன்டா இது மாதிரி பண்றேன்னு சொன்னா, அம்மாவிடத்திலும், அப்பாவிடத்திலும் ?
அடியவர் :- பொய்தான் சொல்லுவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பொய்தான் சொல்லுவாங்கப்பா.
குருநாதர் :- கல்விச்சாலைகளே பொய்களாக்கும் எவை என்று கூற, பொய்களையே சொல்லிக் கொடுக்கும் வருங்காலத்தில்.
https://youtu.be/npiKG6l6z6o?t=11689
சுவடி ஓதும் மைந்தன் :- வருங்காலத்தில் என்ன பண்ணுமாம் கல்விச்சாலையில?
அடியவர் :- பொய்கள் தான் சொல்லி தருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- பொய்கள் தான் சொல்லி தருவாங்க. உண்மைகள்?
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லி தரமாட்டார்கள்,
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லி தரமாட்டார்கள்.
===========================
# கூட்டுப்பிரார்தனைகள் அதிகமாகும்…
===========================
குருநாதர் :- இதனாலே சித்தர்கள் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, ஆனால் மனிதனால் முடியும் அனைத்தும். அதனாலே பின் நிச்சயம் தன்னில் கூட இன்னும் கூட்டுவோம். கூட்டத்தை யார் தடுத்தாலும்,
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாரு?
அடியவர் :- மனிதனால ஒன்னும் செய்ய முடியாதுப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- மனிதனால ஒண்ணுமே செய்ய முடியாதுன்றாரு. நான் இன்னும் வந்து கூட்டத்தை கூட்டி, நாங்க நல்லது செய்வோம்ன்றாருங்க. சித்தர்கள் வந்து நான் மனிதன் என்ன பண்ணாலும் ஒன்னும் பண்ண முடியாது. இன்னும் கூட்டத்தை கூட்டி, நாலு பேருக்கு நன்மையே செய்வோம்.
https://youtu.be/npiKG6l6z6o?t=11729
குருநாதர் :- அறிந்தும் பின் அவை மட்டும் போதாது. கடைசியில் இறைவனே பொய்யாக்குவான். அவ்வளவுதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- கடைசில என்ன பண்ணிடுவாங்க? இதெல்லாம் பண்ணாம போனா கூட, கடைசில என்ன பண்ணிடுவாரு?
அடியவர் :- இறைவனே பொய்ன்றுவான் மனிதன்.
குருநாதர் :- எது என்று கூட இன்னும் பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் நிச்சயம் தன்னில் கூட இறைவனை பற்றி பேசாமல், காதலை பற்றி சொல்லிக் கொடுக்கும் வருங்காலத்தில்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்னும் பெரிய பெரிய நிறுவனங்கள்னா என்ன சொல்றது?
அடியவர் :- நிறுவனங்கள். வேலைக்கு போற இடத்துல, படிக்கிற இடத்துல, எல்லா இடத்துலயும் இதைத்தான் சொல்லிக்கொடுப்பாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன பண்ணுவாங்க? இறைவனை பத்தி
அடியவர் :- சொல்லித் தரமாட்டாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- சொல்லிக் கொடுக்க மாட்டாங்க.
அடியவர் :- இறைவனை பொய்ன்றுருவாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை பொய் என்று உரைச்சு . இவங்க என்ன வந்து ?
அடியவர் :- காதலை வளர்ப்பாங்க.
===========================
# மனிதனின் - மாஸ்டர் பிளான்…..
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=11762
குருநாதர் :- அறிந்தும் எவை என்று கூற, அறிந்தும் கூட இத்தேசம், அறிந்தும் கூட, பின் எவை என்று புரிய, பின் பல பல, பின் தேசங்கள், அறிந்தும் ஏது என்று அறிய, பல பல நாடுகள், எவை அறிந்தும் இதைத்தன் உருவாக்க, நிச்சயம் கெடுத்திட வேண்டும் இளைஞனை. இவ்வாறு இளைஞனை கெடுத்தால், அனைத்தும் அழிந்துவிடும் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் கூட. இதனால் ஒரு புதிய இறைவனை உருவாக்குவோம் என்றெல்லாம், நிச்சயம் திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றார்கள். முடியாதப்பா.
அடியவர் :- ( அதிர்ச்சியில் உறைந்து போய் ) சிவாய நம !!!!! சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாங்க தெரியுங்களா?
அடியவர் :- சிவாய நம !!!!!
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனை?
அடியவர் :- ஒரு புதிய இறைவனை உருவாக்க,
சுவடி ஓதும் மைந்தன் :- உருவாக்கணும்.
அடியவர் :- அவங்க….
சுவடி ஓதும் மைந்தன் :- இறைவனே உருவாக்கணும். அப்ப என்ன பண்ணனும்னா?
அடியவர் :- இளைஞர்களை கெடுக்கணும்.
சுவடி ஓதும் மைந்தன் :- இளைஞர்களை கெடுக்கணும். அப்ப இளைஞர் கெடுக்கணும்னா என்ன பண்ணனும்?
அடியவர் :- காதலை தூண்டி விடுதல்…..
சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாமே ஒரு பெரிய பெரிய நிறுவனங்கள் எல்லாம் வந்து இந்த சாப்ட்வேர், இந்த கம்ப்யூட்டர், இதெல்லாம் இருக்குல்ல. வந்து அதுல என்ன பண்ணுவாங்களாம்? வந்து இளைஞர்களை வந்து இறைவனை வணங்காம பண்ணுவாங்களாம். முதல்ல அது என்னென்ன பண்ணனும்னு சொல்லிட்டு, அப்படி எல்லாம் பண்ணுவாங்களாம்.
குருநாதர் :- எதை ஏது என்று ஆணும் பெண்ணும் சமமாக எவை என்று புரிய.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்படிங்க அய்யா இது வந்து?
அடியவர் :- ஆணும் பெண்ணும் சமம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சமம் என்று…
குருநாதர் :- இவைதன் இப்படி செய்தால் நன்று. இல்லையென்றால் வெளியே சென்றுவிடு என்றெல்லாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் வந்து? அய்யா சொல்லுங்க அய்யா.
அடியவர் :- அவங்க குருநாதர் வந்து நம்ம எதிர்காலம், அதாவது இந்த இளைஞர்கள் வந்து எப்படி போயிடுவாங்க? இந்த கம்ப்யூட்டர் காலத்துல, கம்ப்யூட்டர்னால எப்படி கெட்டு போவாங்கன்றத சொல்லிட்டு இருக்காங்க.
===========================
# இறைவன் மனிதனுக்கு திருந்த அளிக்கும் ஒரு மாபெரும் வாய்ப்பு….
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=11844
குருநாதர் :- இதனாலே எவை என்று புரிய, இதனாலே அதை அதை தடுக்குவோம். யாங்களே அறிந்தும் எதை என்று அறிய, சிறு சிறு வகையில் கூட எவ்வாறு ஊர்ந்து செல்கின்றது என்பதை எல்லாம் இதைத்தன் அறிந்தும், அறிந்தும் கூட, பின் எவ்வாறு, பின் செவ்வக வடிவிலோ, எவை என்று அறிய, பின் ஒளி வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ சென்றடைந்த அவையெல்லாம் நிறுத்தினால், மனிதன் நிச்சயம் திருந்தி விடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு தெரியுங்களா? டவரை பத்தி சொல்றாருங்க. ஐயா,
அடியவர் :- ம்….
சுவடி ஓதும் மைந்தன் :- டவரை கட் பண்ணா,
அடியவர் :- ம்….
சுவடி ஓதும் மைந்தன் :- டவர், டவர்ங்க. ஐயா, டவர் தெரியாதா?
அடியவர்கள் :- ( புரிபவத்தில் சிறிது குழப்பம் )
ஒரு அடியவர் :- …………. ( தொலைவில் இருந்ததால் ஆடியோ தடங்கல் )
சுவடி ஓதும் மைந்தன் :- செல்போன் டவரு, இதெல்லாம் கட் பண்ணோம்னா, மனுஷன் வந்து?
அடியவர் :- சரி ஆயிடுவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இன்டர்நெட் டவரு, இதெல்லாம் வந்து… இதெல்லாம் கட் பண்ணா என்ன ஆகுமாம் மனுஷன்?
அடியவர் :- சரி ஆயிடுவான்,
சுவடி ஓதும் மைந்தன் :- சரி ஆயிடுவான்.
குருநாதர் :- இதனாலே பல இயற்கை சீற்றங்கள் வரப்போகின்றது.
அடியவர் :- சிவாய நம..
சுவடி ஓதும் மைந்தன் :- இதனாலே இதெல்லாம் இப்படி, இதெல்லாம் இவன் மனுஷன் இப்படி யோசிக்கிறான் இல்ல? அப்ப இறைவன் எவ்வளவு யோசிப்பாரு? இதனால என்ன ஆகுது?
அடியவர் :- பல இயற்கை சீற்றங்கள்,
சுவடி ஓதும் மைந்தன் :- பல இயற்கை சீற்றங்கள் வரப்போகின்றது.
அடியவர் :- டவர் அழிகிறதுக்கு
குருநாதர் :- இவ்வாறாக எது என்று புரிய, இவ்வாறாக எது என்று புரிய, நிச்சயம் தன்னிலே கூட வருகின்ற பொழுது, மனிதன் யோசிப்பான். எப்படி பின் சாத்தியமானது? எப்படி இவையெல்லாம் பின் நடக்கின்றது? என்பதை எல்லாம்….
அடியவர் :- சிவாய நம…..
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப என்ன பண்ணுவார்? வந்து
அடியவர் :- ஆமா, அடி மேல, அடி மேல அடிக்கிறப்பதானே யோசிப்பான். இறைவன், இறைவனை பத்தி மனிதன் யோசிப்பான்.
===========================
# முதலில் பக்தியில் உள்ளவர்களுக்கே….. அடிமேல் அடி.
===========================
குருநாதர் :- அப்பனே, இப்பொழுதே ஆரம்பித்து விட்டான் இறைவன். பக்தியில் உள்ளவர்களுக்கே அடிமேல் அடி.
அடியவர் :- சிவாய நம,
சுவடி ஓதும் மைந்தன் :- இப்பவே ஆரம்பித்து விட்டார். இறைவன் யாருக்கு அடி?
அடியவர் :- பொய் பேசுறவன் இங்க (ஆன்மீகத்தில்) நிறைய பேர் இருக்கிறான். வெளியில (உள்ளவனை) விடு.
சுவடி ஓதும் மைந்தன் :- ஆமாம்…..
அடியவர் :- அதனால முதல் அவனுக்கு தான் அடி.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தி உள்ளவனுக்கே?
அடியவர் :- அடி. முதல் அடி.
===========================
# குருநாதர் தனது பெரும் கருணையால் - இறந்தவரை பிழைக்க வைத்து, அவரை இவ் மேடைக்கு அழைத்தார்…முருகப் பெருமான் பாடல் பாட…
===========================
குருநாதர் :- எதை ஏது என்று புரிய, இதனால் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட குழந்தைகளை பின் அமர வைத்து, பின் முருகன் பாடலை, பின் எதை என்று கூற, அறிய, பின் எதை என்று அறிய, பின் அதாவது இறந்தவனை யான் பிழைக்க வைத்திருக்கின்றேன். **** “பைத்தியக்காரன்” **** என்று அழைப்பேன். அவனை பாடச் சொல்.
சுவடி ஓதும் மைந்தன் :- வாங்க அய்யா.
சுவடி ஓதும் மைந்தன் :- ( மேடையில் உள்ள குழந்தைகளை ) இருங்க. அவர் பாடட்டும்.
அடியவர் :- அவர் பாட, பாட, இவங்க பாடுமா?
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, அவர் பாடுவாரு. ( மேடையில் உள்ள குழந்தைகளை ) இங்க இருக்கட்டும்ன்றாரு.
https://youtu.be/npiKG6l6z6o?t=11970
குருநாதர் :- இதை எவ்வாறு என்று அறிந்தும் எதை என்று புரிய, அறிந்தும் எவை என்று அறியா, எவ்வளவு வகையில் இருக்கின்றது? இதனால் அழிவு நிலை வந்து கொண்டே.
குருநாதர் :- இதனால் எப்படி காக்க முடியும்? மனிதன் எவை என்று அறிய, இதனால் நிச்சயம் தன்னில் கூட ஒரு பழமொழியும் உண்டு. முள்ளையே, பின் எவை என்று கூற, பின் எடுக்க முடியும் என்று.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு பழமொழி உண்டு. முள்ளை?
அடியவர்கள் :- முள்ளால் எடுக்க முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- முள்ளால் எடுக்க முடியும். அப்ப மனிதனை, மனிதனை வச்சுதான்?
அடியவர்கள் :- சரி பண்ண முடியும்.
சுவடி ஓதும் மைந்தன் :- சரி பண்ண முடியும்.
https://youtu.be/npiKG6l6z6o?t=11997
குருநாதர் :- இவைதன் இப்பொழுது பின் எதிர்முனையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. அவை எப்படி பின் நேர்முனையாக செயல்படும் என்பதை எல்லாம் சொல்லித் தருகின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- என்னங்க அய்யா இது?
அடியவர் #2:- நெகட்டிவ்,
சுவடி ஓதும் மைந்தன் :- நெகட்டிவ் எனர்ஜி அதிகமா வந்து இருக்குது. எப்படி நாங்க பாசிட்டிவா மாத்துறதுன்னு சொல்லித் தரோம்.
https://youtu.be/npiKG6l6z6o?t=12016
குருநாதர் :- எவை ஏது என்று அறிய, பக்தியில் உள்ளவனுக்கே அறிந்தும் அறிவுகள் இல்லையப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தியில் இருக்கிறவனுக்கே அறிவில்லை.
குருநாதர் :- பக்தியில் இல்லாதவனுக்கு எப்பொழுது அறிவு வரும்?
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தியில் இல்லாதவனுக்கு ?
அடியவர் :- எப்போ அறிவு வரும்னு கேக்குறாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- எப்பொழுது அறிவு வரும்?
குருநாதர் :- அப்பனே, இப்பொழுதெல்லாம் பின் இளைஞர், இளைஞர்கள் இடத்தில், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, இறைவன் படம் வைக்கப் போவதில்லை அப்பனே, நிச்சயம் தன்னில் கூட.
அடியவர் :- ஆமா,
சுவடி ஓதும் மைந்தன் :- இப்ப எல்லாம் இறைவன். இப்ப யாருக்கா?
அடியவர் :- யாரு? பூரா எல்லாம் அரசியல்வாதிகள், நடிகர்கள், இவங்க படத்தை வச்சு தானே சுத்துறாங்க. இறைவன் படம் யாரு (வச்சிருக்காங்க)?
சுவடி ஓதும் மைந்தன் :- இல்ல, இல்ல, படம் அப்படி இல்ல. இப்ப அந்த ஒளி அலைகள் வருது இல்ல?
அடியவர் :- ஆமா,
சுவடி ஓதும் மைந்தன் :- வேவ்ஸ் கம்ப்யூட்டர்ல எல்லாம் இறைவன் படம் வச்சிருக்கீங்க. வந்து
அடியவர் :- அதான், அதான், அதான், அதான்.
சுவடி ஓதும் மைந்தன் :- எதை எதை கெடுக்கணுமோ, அதுதான். அதெல்லாம் வச்சிருக்காங்கப்பா.
அடியவர் :- ( கம்ப்யூட்டர், மொபைல் ) டெஸ்க்டாப் ஸ்கிரீன் சொல்றாங்க. (குருநாதர்) ஐயா.
===========================
# குருநாதர் அருளால் , அம்பலமான “நான் கடவுள்” சதித்திட்டம்.
===========================
# இளைஞர்களின் பெற்றோர்களே.… எச்சரிக்கையாக இருங்கள்….
===========================
# இளைஞர்களிடம் தர்மத்தை எடுத்துச் சொல்லுங்கள்
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=12063
குருநாதர் :- எதை ஏது என்று புரிய ஏன் என்றால், நிச்சயம் தன்னில் கூட இளைஞர்களுக்கு பின் வாரி வழங்கி, பின் சம்பளத்தை அறிந்து கூட, பின் கொடுத்து எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட, பின் அனைவரையும் கெடுப்பார்கள் எவை என்று கூட பெரியோர்களையும் கூட.
குருநாதர் :- ஏனென்றால் இவர்களை கெடுத்தால், பெரியோர்களும் தானாக கெட்டு விடுவார்கள். பின் கெட்டு, பின் அழிந்து, சீரழிந்து, எவை என்று புரிய, பின் உருவாக்கலாம். பின் இறைவனை என்று.
குருநாதர் :- மனிதனே, யான் தான் இறைவன் என்று சொல்வதற்கும் கூட தயாராக இருக்கின்றான்.
அடியவர் :- சிவாய நம…. சிவாய நம…..
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன சொல்றாரு தெரியுமா? இதெல்லாம் கேட்டுக்கோங்க. ஐயா,
அடியவர் :- மாஸ்டர் பிளான்…
சுவடி ஓதும் மைந்தன் :- மாஸ்டர் பிளான். இதெல்லாம் வந்து எப்படி எல்லாம் இளைஞர்ல இருந்து கெட்டுப்போறது பண்றது? எல்லாருமே கெட்டுப்போயிட்டு, எல்லாம் சம்பளம் நிறைய அதிகமா கொடுத்து, அவங்க எல்லாம்… அவங்க பிரைன் வாஷ் பண்ணி… அப்ப அவங்க வந்து தாய் தந்தை பேச்சை கேட்க மாட்டாங்க. சண்டை போடுவாங்கம்மா. வேலைக்கு போறவங்க எல்லாம் பாருங்களேன். சண்டை போடுவாங்க. அகத்தியர் சொல்றதுதான் இது சத்தியம் ஐயா. ஜீவநாடியில் வருவதெல்லாம் ஒன்னொன்னு சத்தியம், பொய் இல்லை.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப உங்க கையில வந்து சண்டை போடுவாங்க. என்னமா, இப்படி பண்றா? அப்படி எதிர்த்து பேசுவாங்க. அப்ப என்ன பண்ணுவீங்க? உங்களுக்கும் மனவருத்தம் ஏற்படும். அப்ப ஒரு பெரிய ஆள் என்ன பண்ணுவான்? வந்து மனுஷனே, டேய், நான்தான்டா இறைவன், நான்தான்டா எல்லாம் கண்டுபிடிச்சு வச்சுக்கிறேன். அவனை பேச்சு கேப்பாங்களா ஐயா…. எல்லாருக்கும் புரியுதுங்களா? ஐயா? அவன் பேச்சு கேட்பான். கம்ப்யூட்டர்ல இப்படி இருக்குதா… இது சொல்றது ரைட்டுப்பா.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, புரியுதுங்களா? அப்ப இறைவனை வந்து புதுசா மனிதன்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, இது என்ன சொல்றாருன்னா, மனுஷன் தான் இறைவன் என்றார். வந்து ஐயா சொல்ல ஆரம்பிச்சுருவான். ஏய், நான்தான்டா இறைவன் பாருடா. இப்படி பண்றேன். நான் வந்து கம்ப்யூட்டர்ல இப்படி பண்ணா, அது செய்யும்டான்னு சொல்லிட்டு யாரு
அடியவர் :- மனிதனை மனிதனே சொல்லுவான். அதுக்கு மனிதனே வந்து வேலைகள் எல்லாம் ஆரம்பிச்சாச்சுன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அது டேட்டா எல்லாம் ஆரம்பிச்சாச்சு. அதனால வந்து கண்டிப்பாக வந்து வேலைக்கு போறீங்களோ பாருங்களேன். நீங்களே சாஃப்ட்வேர் கம்பெனில இருக்கிறவங்க எல்லாம் பேச்சை கேட்க மாட்டாங்க.
அடியவர் :- அவங்களையும் மாத்திடுவாங்களாம். இளைஞர்கள் பெரியவர்களையும் மாத்திடுவாங்களாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- மாத்திடுவாங்களாம். இது என்னமா? இது என்னப்பா? இது பொய்ப்பா? இது
அடியவர் :- பூமர், பூமர்னு சொல்றாங்க. பாருங்களேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- பக்தர்களே, அதே மாதிரி மாத்துவாங்களாம். வந்து அப்படி மாறுகின்ற பொழுது எல்லாம் மாத்திட்டு, கடைசில வந்து… கம்ப்யூட்டர்ல வந்து.. ஒரு மனுஷன் வந்து… நான்தான்டா இறைவன்னு சொல்லிட்டு, அந்த காமிச்சிருவான். உருவத்தை காமிச்சிருவான்.
https://youtu.be/npiKG6l6z6o?t=12189
குருநாதர் :- அப்பனே, அழிந்தது உலகம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அவ்வளவுதான். க்ளோஸ். ஐயா, புரியுதுங்களா யாருக்காவது?
சுவடி ஓதும் மைந்தன் :- அப்ப என்ன பண்ணுவாராம்? கம்ப்யூட்டர்ல எல்லாம் வந்து அம்மா அப்பாவை மதிக்காம பண்ணிட்டு, இறைவனும் வணங்காம பண்ணிட்டு, கம்ப்யூட்டர்ல ஒரு ஆளு வச்சிருவாராம். வந்து
குருநாதர் :- இவன்தான் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட ஏற்பாடு செய்து கொண்டிருக்கின்றான். அதனையும் கூட
சுவடி ஓதும் மைந்தன் :- நம்புதான் கடவுள். ஐயா, புரியுதுங்களா? ஐயா,
அடியவர் :- இதுக்கெல்லாம் ஏற்பாடு செஞ்சுட்டு இருக்காங்களாம். மாதா, பிதா, குரு, தெய்வம் எல்லாத்தையும் மறந்து, எவனோ ஒரு மனுஷனை தெய்வமா வணங்க போறான். மனுஷன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- அப்படி மனுஷன் போது என்ன பண்ணுவாரு? வந்து
அடியவர் :- (இறைவன்) உலகம் அழிச்சிருவாரு. அவ்வளவுதான்.
குருநாதர் :- பின் அடுத்தடுத்து என்ன சீற்றங்கள் எல்லாம் நடக்கப்போகிறது என்பது முருகன் வந்து சொல்வான். தடுப்பவனும் அவனே.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- அடுத்தடுத்து என்ன சீற்றங்கள், இயற்கை சீற்றங்கள் வரப்போகின்றது என்று சொல்வார். தடுப்பதும்
அடியவர் :- முருகப்பெருமான் தான்.
===========================
# கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய நல் வாக்கு…
===========================
# சபாஷ்…. கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களே
===========================
குருநாதர் :- அறிந்தும் எது என்று கூற, பல மாற்றங்கள் உருவாக்கியுள்ளார்கள். எவை என்று புரிய, பின் நீங்கள் செய்த எவை என்று கூற, பிரார்த்தனையில் தான்.
அடியவர் :- சிவாய நம…..
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த உலகத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
அடியவர் :- சிவாய நம…..
அடியவர் :- சிவாய நம…..
கூட்டுப் பிரார்த்தனை அடியவர்கள் :- ( சந்தோஷத்தில் பலத்த கரகோசங்கள் )
சுவடி ஓதும் மைந்தன் :- நீங்கள் செய்த?
அடியவர் :- பிரார்த்தனையினால…
சுவடி ஓதும் மைந்தன் :- பிரார்த்தனையினால் மட்டும்தான்.
அடியவர் :- இது நடந்திருக்குன்றாங்க.
(அன்பு அடியவர்களே , நாம் அனைவரும் வாழ்த்துவோம் அனைத்து கூட்டுப் பிரார்த்தனை அடியவர்களை…….மென்மேலும் அவர்கள் பணி சிறக்கட்டும்…உலகம் உயர்வடையட்டும்…. )
குருநாதர் :- இவைதன் எப்படி போகும் என்று ஒலி என்பது எல்லாம் யான் எடுத்துரைக்கின்றேன்.
சுவடி ஓதும் மைந்தன் :- இதெல்லாம் எப்படி நீங்க எல்லாம் ஒன்னா கூடி பேசும்போது, எல்லாம் நல்லா இருக்கணும்னு சொல்லிட்டு,
அடியவர் :- இந்த சப்தம்.
சுவடி ஓதும் மைந்தன் :- சப்தம் ஒலிக்கின்ற பொழுது, எங்க போய் கேட்கணும்னு சொல்லிட்டு நான் சொல்றேன்.
===========================
# கூட்டுப் பிரார்த்தனைகள் மூலம் பகுதிகள் இன்னும் மேன்மையாக்குக…..
===========================
https://youtu.be/npiKG6l6z6o?t=12286
குருநாதர் :- அறிந்தும் இதனால் நிச்சயம் தன்னில் கூட இன்னும் மேன்மையாக்குக. எது என்று அறிய, பின் பக்தியை.
குருநாதர் :- இவ்வாறு பக்தியை மேன்மையாக்க, மேன்மையாக்க தானாகவே நிச்சயம் தன்னில் கூட அழைத்து, எவை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று அறிய, பின் எவை எவை என்று அழிவதற்கு பின் உத்தரவமாக இருக்கின்றதோ, அவை கீழ் இறங்கிவிடும்.
அடியவர் :- சிவாய நம…..
சுவடி ஓதும் மைந்தன் :- இவ்வாறு பக்தியை நம்ம பரப்ப, பரப்ப, மனிதனிடத்தில் எவையெல்லாம் அழிவதற்கு வந்து?
அடியவர் :- காத்துக்கிட்டு இருக்குதோ,
சுவடி ஓதும் மைந்தன் :- காத்திருக்குதோ, தானா என்ன ஆகும்?
அடியவர் :- எல்லாமே வந்து நிறுத்திடலாம். எல்லாமே நிறுத்திரலாம்ன்றாங்க.
சுவடி ஓதும் மைந்தன் :- கீழ நிறுத்திடலாம்பா.
குருநாதர் :- அதுவும் மனிதனால் மட்டுமே சாத்தியம்.
சுவடி ஓதும் மைந்தன் :- அதுவும் மனிதனால் மட்டுமே சாத்தியம்.
குருநாதர் :- எதை ஏது என்று கூற, பின் அதாவது கண்ணிமைக்கும் நேரத்தில் உலகத்தை அழித்துவிட்டு செல்லலாம். ஆனாலும் எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட எவை என்று கூற, அறிய இதனால் பின் தண்டனைகள் அதிகமாக்குகின்ற பொழுது, மனிதன் திருந்துவான்.
அடியவர் :- சிவாய நம.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு செகண்ட்ல
அடியவர் :- உலகத்தை அழிச்சிடலாம்.
சுவடி ஓதும் மைந்தன் :- ஒரு நொடியில
அடியவர் :- இறைவன் அழிச்சிருவாராம்.
சுவடி ஓதும் மைந்தன் :- உலகத்தை இறைவன் அழிச்சிட்டு போலாம். ஆனால் என்ன சொன்னாரு?
அடியவர் :- தண்டனைகள் கொடுத்தாதான் மனிதன் திருந்துவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- தண்டனைகள் அதிகமாக, அதிகமாக மனிதன்?
அடியவர் :- திருந்துவான்.
சுவடி ஓதும் மைந்தன் :- திருந்துவான்.
குருநாதர் :- இதனாலே எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட பின் எவை என்று புரிய, இதனால் மனிதனுக்கு முதலில் எதை தடுத்திட வேண்டுமோ, அவைதான் முதலில் மனிதனுக்கு தேவை. இன்றைய காலகட்டத்தில் பணம் என்றே. எவை என்று அதைத்தான் நினைத்துக் கொண்டிருக்கின்றான்.
சுவடி ஓதும் மைந்தன் :- இந்த காலகட்டத்தில் மனிதனுக்கு என்ன தேவை? பணம், அதுதான் முக்கியம்னு நினைச்சுட்டு இருக்கிறார். வந்து
குருநாதர் :- ஆனால் அவை இல்லை. பின் பின் முருகனை நோக்கி பாடலை பாடு. முருகன் வந்து செப்புவான் அழகாக. அப்பொழுது யானும் இன்னும் செப்புகின்றேன். உங்கள் பாவத்தை ஒழிக்கச் செய்ய மந்திரங்களையும் சொல்லித் தருகின்றேன்.
அடியவர் :- சிவாய நம….. சிவாய நம….. சிவாய நம…..
சுவடி ஓதும் மைந்தன், அடியவர் உரையின் சுருக்கம்:- ( இந்த உரையாடலில், இருவரும் நாட்டின் நலன், மக்களின் நலன், மற்றும் இறைவன் மீதான பக்தியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார்கள். மனிதன் நடத்தும் போராட்டங்கள், குறைசொல்லல்கள், அரசியல் குற்றச்சாட்டுகள்—இவை எந்த மாற்றத்தையும் உருவாக்காது; உண்மையான மாற்றம் இறைவனை வேண்டி, பக்தியுடன் நடக்கும்போது மட்டுமே நிகழும் என அவர்கள் கூறுகிறார்கள். மக்கள் நல்ல மனதுடன், பொறாமை இல்லாமல், ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ வேண்டும்; அமைச்சர்கள், சேவை செய்பவர்கள் எல்லாரும் மக்களுக்கு நன்மை செய்யும் மனநிலையுடன் இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார்கள். மனிதன் தனியாக எதையும் சாதிக்க முடியாது; இறைவன் கையில் தான் “சுவிட்ச்” இருக்கிறது, அதைத் தட்டினால்தான் நல்லது நடக்கும். சித்தர்கள் சொல்வதை கேட்டு, அதன்படி நடந்தால் நாட்டு மக்கள், வாரிசுகள் எல்லாரும் நல்ல வாழ்க்கை வாழ முடியும். )
சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, பாடுங்க ஐயா. ஐயா, பாடும்போது எல்லாம் ஜோரா, கைதட்டி, எல்லாரும் நல்லா இருக்கணும். பாடுங்க ஐயா.
பாடகர் :- ( பாட ஆரம்பித்தார்கள் )
கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை?
கொங்குமணி நாட்டினிலே குளிர்ந்த மலை எந்தமலை?
தேடி வந்தோர் இல்லமெல்லாம் செழிக்கும் மலை எந்த மலை?
தேவாதி தேவரெல்லாம் தேடி வரும் மருதமலை
அஆஆ.. மருதமலை மருதமலை முருகா
மருதமலை மாமணியே முருகய்யா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
தேவரின் குலம் காக்கும் வேலய்யா ஐயா
மருதமலை மாமணியே முருகய்யா
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமார்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!
.jpeg)
.jpeg)

Om Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDelete