​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 16 September 2026

சித்தன் அருள் - 2315 - அன்புடன் அகத்தியர் - முருகர் வாக்கு!



வாக்குரைத்த நாள், நேரம், இடம்   :-  13/09/2026 (ஞாயிற்றுக்கிழமை இரவு - விநாயகர் சதுர்த்திக்கு முந்தைய நாள், சுவடி ஓதும் மைந்தன் இல்லம்)

அனைத்தும் காத்து, அருளை ஈயக்கூடிய  தந்தையே !!!!!!  தாயே !!!!!! 

பணிந்தேனே, செப்புகின்றேனே, வேலனவனே !!!!!! 

இதைத்தன் உணர்ந்து எவ்வாறு, இதைத்தன் உணராமலும் பல மக்கள்.

இதைத்தன் கலியுகத்தில் சித்தர்கள் வந்து மக்களுக்கு தெளிவுபடுத்துவார்கள். 

தெளிவுபடுத்தி…. ஆனாலும் இதைத்தன் ஏற்றும் கூட செய்ய முடியாமல் போகும். 

போகுமடா, இதைத்தன் எவ்வாறு உணர்ந்து இருந்தும் கூட. 

இதனாலே பாவங்கள் சூழ்ந்து, இன்னும் மனிதனிடத்தில் பல வழிகளில் கூட தண்டனைகள் மனிதன் பெறத்தான் போகின்றான். 


அனைவரையும் உணர்ந்தேன், பார்த்தேன். 


பின் இவைத்தன் ஓரிடத்தில் பின் அருளாசிகள் கொடுத்து விட்டேன். 

இவைத்தன், அதாவது பரிபூரணமாக அருளாசிகளை, வள்ளி தெய்வானையோடே. 

இவ்வாறாக, இதைத்தன் உணர்ந்து இருந்தாலும், இதைத்தன் சில சில பாவங்கள், அதாவது பின் தொடர்ந்து வருவதாலே. 

வருவதாலே, அதைத்தன் பின் இடையிடையே நிறுத்தி அகத்தியன்,  அதைத்தன் எவ்வாறு பின் நீக்கிட வேண்டுமோ, அவ்வாறெல்லாம் நீக்கிட்டு, பரிசுத்தமான ஆற்றல் எல்லாம் தந்து கொண்டிருக்கின்றான். 

இதனால் நீங்கள் இவைத்தன் எவ்வாறு, இதைத்தன் ஓடி ஓடி, 

******  தந்தையின் பின் இல்லத்திற்கு சென்றாலும், ****** 

******  பின் இவைத்தன் அறிய, பின் என்னுடைய இல்லத்திற்கும் வந்தாலும், பின் அருளாசிகள் பலம். ****** 

****** இவைத்தன் அவ் அருளாசிகள் பலத்தால், பல பல இவைத்தன் பின் பல பிறவிகள் செய்த பாவங்கள் தீருமே. ****** 

******  இதனாலே தீர்ந்து தீர்ந்து, மீண்டும் சில மனக்குழப்பங்கள் ஏற்படுமே. ****** 

ஏற்பட்டு, எது வினை, எவை புரியாத அளவிற்கு கூட, ஆனாலும் சற்று பொறுத்திருந்தால், சில வழி வகைகளில் அகத்தியனை. நிச்சயம் செய்வான். 

நிச்சயம் செய்வித்து, பின் உங்களுக்கு என்ன தேவையோ, அவை தந்திடுவான். கவலைகள் வேண்டாம். 


கவலைகள் வேண்டாம், குழந்தைகளே. 

இதைத்தன் எவ்வாறு உணர்ந்திருந்தும், சில, அதாவது பிணைக்கப்பட்டுள்ளது. கலியுகம் என்பது பாவத்தாலே பிணைக்கப்பட்டுள்ளது. 


இதனால் இப்பாவத்தின், அதாவது இவைத்தன் உணராத வகையிலும் கூட, புண்ணியத்தை எப்படி சேர்க்க முடியும்? 


அதனால்தான், பின் அதாவது பாவம் என்ற கிணற்றில் மனிதன் வாழ்ந்து கொண்டு இருக்கின்றான். 


எவ்வாறு, இதைத்தன்… 


******  ஆனாலும் அகத்தியன் முழு முயற்சியோடு அக் கிணற்றிலிருந்து பின் தூக்கிவிட பார்த்துக்கொண்டு. ******  


ஆனாலும் அவைத்தன் யாங்கள் கிணற்றில் தான் இருப்போம் என்று மனிதன். 


****** பின் இவைதான் விதியின் தன்மை. ****** 


******  இதுதான் கலியுகம். ****** 


அதனாலே, பின் அதாவது இவைத்தன் அறிய, பின் மீண்டும் மீண்டும் இறை பக்தியில், பின் ஆழ்ந்த சிந்தனையில், சித்தர்கள் பின்னே சென்றாலும், இதைத்தன் எவ்வாறாக கிணற்றிலிருந்து உடனடியாக, இவைத்தன் அறிய ஏற்றி விட, எவை புரிய. 


இதனால் மெது மெதுவாக தள்ளித் தள்ளி, முதலில் இதைத்தன் அறிய, ஒவ்வொரு படிக்கட்டாக மேலே ஏற்றுவார்கள். 


அதனுள்ளே, பின் ஏறுவதற்கு முன்னே, மனிதனுக்கு பல பாவினைகள் சூழ்ந்து, பின் அதாவது ஏன் இவ்வாறு வணங்கினோம்……


வணங்கியும் பிரயோஜனம் இல்லை என்றே… 


இதைத்தன் உணர்ந்து, இவைத்தன் மீண்டும் ஏறுகின்ற நேரத்தில், மீண்டும் இவ்வாறு நினைப்பதால், மீண்டும் கிணற்றில் விழுந்து விடுகின்றான். 


எவைத்தன் மீண்டும், பின் சித்தர்கள் வந்து எழுப்புவதற்கு, இவ்வாறு தான் மனிதன், பின் நம்பிக்கையை இழந்து விடுகின்றான். 


இதைத்தன் இதனால், ஏது புரிய. 


==================================
#  3 மாதங்கள் பின்னால்  நடக்க வேண்டியவை, எப்போது பத்து மடங்கு தள்ளி பின் னே  நடக்கும்? 
==================================


****** இன்னும் அகத்தியன் பல வகையில் கூட நன்மைகள் செய்ய தயாராகவே. ******


தயாராகவே. 


******  ஆனாலும் இதை செய்தால் நன்மை என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கக்கூடாது. ****** 


******  ஏன், எதற்கு இவ்வாறாக நினைத்தாலே, இன்னும் பின் அதாவது மூன்று மாதங்கள் பின் நடக்க வேண்டியவை, இன்னும் அதாவது பத்து மடங்கு தள்ளி பின் நடக்கும். ****** 


இதனாலே, இதனால் கவலைகள் வேண்டாம். 


ஒவ்வொரு மனதையும் யான் ஆராந்திருக்கின்றேன். 


அனைவருக்குமே ஒவ்வொரு விதத்திலும் குழப்பங்களே. 


குழப்பங்கள் எப்பொழுது தீரும் என்பவை எல்லாம். ஆனாலும் யானும் சென்ற இடங்கள் எல்லாம் பின்னே வந்து கொண்டிருக்கின்றேன். 


ஒவ்வொரு விதத்திலும், ஒவ்வொரு நிலைமையும், பின் அதிகம், பின் பாவங்களே. 


இதனால் எப்படி, இதைத்தன் அகத்தியன் பரிபூரணமாக நீக்கிக் கொண்டே தான் இருக்கின்றான். 


****** ஒரு பிறவியில், அதாவது பாவத்தை நீக்குபவன், எவை புரிய யாருமில்லை. ****** 


ஆனாலும் இதைத்தன் கடைப்பிறவியாக இருப்பதனால் மட்டுமே, இதைத்தன். 


ஆனாலும், பின் நீங்கள் அனைவரும் அகத்தியனிடம் நிச்சயம் மறுபிறவியில், பின் இதைத்தன் வேண்டி, இதைத்தன் எவ்வாறாக இப்பொழுது போதும்.


மறுபிறவியில் அனுபவிப்பதற்கு சில சந்தர்ப்பங்கள், சந்தர்ப்பங்கள் தாருங்கள் என்று சொல்லிவிட்டால், அகத்தியன் உடனடியாக கொடுத்து விடுவான். 


ஆனாலும் நீங்கள் இதைத்தன் அறிய, அகத்தியன் வேண்டாம்.. பிறவியே என்றே, அனைத்து பிறவிகளில்  இருக்கும் பாவம், இப்பொழுதே கழியட்டும் என்று அருகிலே இருந்து கொண்டு, உங்களுக்கு மனக்குழப்பங்கள், சில சில வருத்தங்கள் ஏற்பட்டாலும், பின் அதை எப்படியோ ஒரு மூலமாவது மறைத்து, உங்களை தள்ளிக்கொண்டே சென்று கொண்டிருக்கின்றான். 

கவலைகள் வேண்டாம். 

இன்னும் பிறவியின் ரகசியம் எவ்வாறு உணர்ந்து, இவைத்தன் குழந்தைகளே, கவலைகள் இல்லை. 


எப்படி, இதைத்தன் உணர்ந்து, எப்படி, எதற்காக வந்தீர்கள் என்பவை எல்லாம், அகத்தியன் பரிபூரணமாக, இன்னும் பின் சித்தர்கள் பரிபூரணமாக செப்புவார்கள். 


அப்பொழுதுதான் உங்களுக்கு புரியும், ஏன், எதற்காக இப்பிறவி என்று. 


பின் யார் ஒருவன், பின் கடைபிற்பாக, பின் எடுத்து, இவைத்தன், அதாவது இப்புவிதன்னிற்கு வருகின்றார்களோ, அவர்களுக்கு நிச்சயம் தன்னில் கூட விதியின் பயனை, பின் நிச்சயம், பின் அறிந்து கொள்வதற்கு, பின் சித்தர்கள் உதவிகரமாக இருப்பார்கள். 

ஆனால் மற்றவர்கள் மறுபிறவி, மறுபிறவி, மறுபிறவி, பின் இருக்கின்ற பொழுது, பின் நிச்சயம் விதி தன்னை கூட யாரும் அறிந்து கொள்ள முடியாது, அப்பா. 

முடியாதடா இவைத்தன் அறிய. 

ஏது பிறவி, இவைத்தன் உணராத வகையிலும் கூட. 

இதனால், பின் கலியுகத்தில், மீண்டும் சொல்கின்றேன், பாவத்தில், பின் அதிக அளவு பிணைக்கப்பட்டுள்ளான் மனிதன். 


இதனாலே, ஏன், எதற்கு, இவைத்தன், அதாவது கலியுகம், கடையுகம், இவைத்தன் அறிய. 


பின் கலியுகத்தின், பின் இவைத்தன் உணராத அளவிற்கும் கூட…


****** பின் வருத்தங்கள் ஏற்பட்டு, மனிதனையே, அதாவது தன்னைத்தானே, பின் கெடுத்து அழிய வேண்டும் என்பது விதி. ******


ஆனாலும் சித்தர்கள் பாவங்கள்..


அதாவது மனிதன் பாவம் என்று கீழே இறங்கி வந்து, இப்படி நடடா என்றெல்லாம் சொல்லிக்கொண்டு இருக்க…. பின் இவைத்தன் அறிய, அறிய…
ஆனாலும் அப்பாவம், அதாவது ஒரு மனிதனை கயிற்றால், நிச்சயம் பன், எவை புரிந்து, இதைத்தன் உணர்ந்து, பின் நிச்சயம் பல, பின் சுற்றுகள் கட்டிவிட்டால்…… கை கயிறால் கட்டிவிட்டால், ஒரே பின் சமயத்தில், இதைத்தன் உணர பிரிக்க முடியுமா என்றால், நிச்சயம் பிரிக்க முடியாது. 


இதனால்தான், ஒரு பிடி, ஒரு பிடி என்றெல்லாம், பின் பிடித்து, பிடித்து, அதைத்தன் மெது மெதுவாக, மெது மெதுவாக, சித்தர்கள் பிடிங்கிக் கொண்டிருக்கும் பொழுது, அப்பொழுதுதான், இவைத்தன், அதாவது முதலில் கால்களிலிருந்தே வருவார்கள். 


அங்கிருந்து, எவை பின் வயிற்றுக்கு, பின் பகுதிக்கு வருகின்ற பொழுதே, மனிதன், எவை தன் நம்பிக்கை இழந்து விடுகின்றான். 


அவ்வளவுதான், ஒன்றும் ஆகாது என்று. 


இதன் மீண்டும் முழு முயற்சியோடு, இவைத்தன் நிச்சயம் ஆகும் என்று, பின் நினைத்து சென்றால், உறுதியாகும் மனது. 


உறுதியாகும் மனது, இவைத்தன், இதைத்தன் எவ்வாறு உண்மை என்று, பின் உறுதிப்படுத்தி, நிச்சயமாகவே, பின் இறைவனை காணலாம். 

****** இதனால், மெய்ஞானம் பெறுவதற்கு, பின் வருத்தங்கள் பல பட வேண்டும். ****** 


மெய்ஞானங்கள் பெறுவதற்கு, பல பல இழப்புகளை, எதை தெரியாமல், எவைத்தன் மனக்குழப்பத்தாலே, பின் இவைத்தன் அறிய. 


****** இதனால் நீங்கள் பின் வந்திருப்பது, மெய்ஞானம் அடைவதற்கே. ******


இதனால் சில வருத்தங்கள் ஏற்படும். 


அதையெல்லாம், பின் தாண்டி வந்தால், பின் நிச்சயம், பின் சித்தர்கள் காண்பிப்பார்கள் வழிகள். 

இதனால் வழிகள் பலபல.  பின் வழிகள் என்பது எல்லாம் வழி,   வலி என்பதற்கு பொருள் என்ன? 


இவை தன் தத்துவங்களாகவும், பின் அகத்தியன் சொல்லி கொண்டே நடத்தியும் வருவான். கவலைகள் வேண்டாம். 


****** வலியுடனே பிறந்தீர்கள். ****** 


******  வழியும் செய்வான். ****** 


******   பின் அவ்வலிகளை நீக்க…******  


******   புரிந்து கொள்ளுங்கள். ******  


புரிந்து கொள்ளுங்கள், குழந்தைகளே. கவலைகள் வேண்டாம். 


எப்பொழுதும் நாங்கள் துணை இருந்து, மனக்குழப்பங்கள் வேண்டாம். மனக்குழப்பங்கள் வேண்டாம். 


******   பின் பாடி பாடி என்னையெல்லாம் அழைத்ததே, நான் எங்கெல்லாம் நீங்கள் பாடுகின்றீர்களோ, சந்தோஷமாகவே வந்து, பின் பரவசப்படுத்தியதோடு, வள்ளி தெய்வானையோடே.******  


ஆனாலும், பின் எவை புரிய, கடைசியாக பிறவி ஆயிற்றே. 


இதனால் சில சில வினைகள், பின் அப்படியே, பின் அதாவது, பின் சந்தித்து தீர்க்க வேண்டும் என்பது விதி. 


இவ்வாறாக இருந்தால் மட்டுமே, தெளிவு கடைசியில் வரும். 


இல்லையென்றால், நீங்கள் அகத்தியனிடம்  கேட்டாலும், எனக்கு மறுபிறவி வேண்டும். 


சில கர்மாவுக்கள், அவ் மறுபிறவியில் அனுபவித்துக் கொள்கின்றேன் என்று கேட்டால், உடனடியாக உங்களுக்கு தேவையானதை கொடுத்து விடுவான். 


ஆனால் அகத்தியனை பின் நம்பினோர், எவைத்தன் புரிய , எவைத்தன் உரிய, அனைத்தும் பின் முதலிலே நீக்குவான். அவ்வளவுதான். 


கவலைகள் வேண்டாம். 


அருளாசிகள்..


==================================
# விநாயக பெருமானிடம் உள்ள 8 பேர் ரகசியங்கள்…..
==================================


மூத்தோனின் அருளாசிகள் பலம். 


நாளை பொழுதில் (14/09/2026 விநாயகர் சதுர்த்தி)  உங்களுக்கு, பின் மூத்தோன் அருளாசிகள் வாங்கித் தருகின்றேன். 


****** என் மூத்தோனிடம் இன்னும் எட்டு பேர்கள் இருக்கின்றார்கள். ****** 


******  இவ்வுலகத்திற்கு அது தெரியுமா என்றால், நிச்சயம் தெரியாது. ****** 


****** அவ் எட்டு பேர்கள் அருள் இருந்தால் மட்டுமே… ******


******  அவ் எட்டு பேர்கள் யார் என்று, பின் வருங்காலத்தில், இவ்வுலகத்திற்கு அகத்தியன் உரைப்பான். ****** 


இப்பொழுது ஆசிகள் நிச்சயம் எவை என்று புரியும் அளவிற்கும் கூட, கவலைகள் வேண்டாம். 


******  எங்கெல்லாம் சென்றீர்களோ….. அங்கெல்லாம் அகத்தியன் லோபா முத்திரையோடு வந்து, ஆசிகள்…. அருளாசிகள் இன்னும் இவைத்தன் அறிய. ****** 


இதனாலே, பின் இவைத்தன் அறிய, ஒவ்வொரு பின் அறிந்தும், ஆன்மாவும் சில விஷயங்களை கூட பரிதாபப்பட்டே , இவைத்தன் விதியும் கடுமையாகவே இருக்கின்றது உங்களுக்கு. 


இவ்விதியை நிச்சயம், பின் அகத்தியன் வந்து, இவைத்தன் அறிய, பிரம்மாவிடம் கூட சண்டைகள் இட்டுக்கொண்டே, இட்டுக்கொண்டே..


சில இவ்வாறாக, இவைத்தன் அறிய, இப்படி பின் ஏன் படைத்தாய்?  சில சில வழிகளில் கூட, பின் அறிந்தும், இவைத்தன் அறிய..


இவ்வாறாக, பின் பிரம்மனும், 


****** பின் அகத்தியனே !!!!!! ****** 


******  பின் பொறுத்திரு. ****** 


******  அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. ****** 


பல வகைகளில் கூட, எவ்வாறு எதை புரிய என்றெல்லாம், நிச்சயம், பின் அதாவது, ஏன், எதற்காக என்றெல்லாம், உமக்கே தெரியும். 


==================================
# கண்ணிமைக்கும் நொடி பொழுதில், அனைத்தும் மாற்றிவிடும்  சக்தி அகத்திய மாமுனிவருக்கு உண்டு. 
==================================


இவைத்தன் அறிய… இதனால் அகத்தியனும் கூட. 


ஆனாலும், பின் ஒரு கண்ணிமைக்கும் நொடியில், கண்ணிமைக்கும், கண்ணிமைக்கும் நொடி பொழுதில், இதைத்தன் அனைத்தும் மாற்றிவிடும், பின் சக்தி அகத்தியனுக்கு உண்டு. 


ஆனாலும், ஏன் தயங்குகின்றான் என்றால், தன் பிள்ளைகள் எவை என்று, அனைத்தும் உணர வேண்டும். 


உணராவிடில், இவ்வுலகத்தில் வாழ முடியாது. 


இவைத்தன் அறிந்தும், இதனால், இவைத்தன் அறிய, பின் உணர்ந்து கொள்ள வேண்டும். 


உணர்ந்து கொண்டால் மட்டுமே, வெற்றிகள் உண்டு. 


கர்மா, அதாவது பாவமும் போகும். புண்ணியம். 


==================================
# புண்ணியங்கள் சேமிப்பு கிடங்கில்…..
==================================


ஆனாலும், புண்ணியத்தை அழகாக, இவைத்தன் எப்படி, பின் சேமிப்பு கிடங்கில் வைத்திருக்கின்றீர்களோ, அவ்வளவு, அவ்வளவு, பின் சேமிப்புகள், அதாவது சேமிப்பு கிடங்குகள், வைத்திருக்கின்றீர்கள்  நீங்கள். 


******  அதைத்தன் அகத்தியன் எப்பொழுது எடுப்பான் என்று, அகத்தியனே வந்து சொல்வான். ******  


******  கவலைகள் வேண்டாம். ****** 


இதனால், பாவங்கள், பின் அதாவது, கழிந்து கொண்டே இருக்கின்றது. 


****** இப்பாவம் கழிகின்ற பொழுது, சில சில எண்ணங்கள் மாறுபடும். ****** 


******  சில வழிகளில் தொந்தரவுகள் வரும். ****** 


******  சில வழிகளில் கூட, போராட்டங்கள் வரும். ****** 


******  இவையெல்லாம் சகித்துக் கொண்டால், மெய்ஞானத்தை உணரலாம். ****** 


******  நீங்கள் எவைத்தன் அறிய, மெய்ஞானத்திற்காக வந்தவர்கள். ****** 


அவ் மெய்ஞானத்திற்காக எப்படி, எதை என்று புரிய, எவ்வாறெல்லாம் கஷ்டங்கள் பட வேண்டும் என்பதை எல்லாம் தீர்த்து…கவனித்து…. சித்தர்கள், பின் இவைத்தன் அறிந்து கொள்ளும் அளவிற்கும் சக்திகள் கொடுத்து, பக்குவப்படுத்தி, இதைத்தன் அனைத்தும் அறிவின் வழியாகவே, இறைவனை காணச் செய்வார்கள். 


கவலைகள் வேண்டாம். 


சென்ற இடமெல்லாம், நிச்சயம், சித்தர்கள் வந்து, வந்து, உங்களுடன் பேசியும் இருக்கின்றார்கள். 


சில சில கர்மாக்களும்……


சில சில நோய்களும்…… 


சில சில வருத்தங்களும்……


பின் அதாவது, பாவத்தை எடுத்தும் சென்றிருக்கின்றார்கள். 


==================================
# இக்கலியுகத்தில் மனிதனிடத்தில் பாவம் 90%. புண்ணியம் 10%
==================================


அப்படி எவைத்தன் அறிய, அதாவது, இக்கலியுகத்தில், பின் மனிதனின் பங்கு, பின் அதாவது, பின் நூற்றுக்கு 90% பாவம். 


10 பின் சதவீதம் மட்டுமே புண்ணியம் இருக்கின்றது. 


எப்படி வாழ்வான்? 


அதனாலே, உடனடியாக, பின் இவைத்தன் உணர்ந்து, இவைத்தன் 90% ஆக இருப்பதை, பின் நீக்க முடியுமா என்றால், அவ்வளவு சுலபமில்லை. 


இதனால்தான், சித்தர்கள், பின் அதாவது, நீங்கள் தேடி வந்தீர்களா என்றால், நிச்சயம் இல்லை. 


இவைத்தன் அறிய, அகத்தியனே உங்களைத் தேடி, ஐயோ, இவர்கள் பாவம். 


இவர்கள் வாழ்க்கை பரிதாபப்பட்டது என்றெல்லாம், உங்களைத் தேடி வந்திருக்கின்றான். 


அவ்வளவுதான். 


சித்தனை தேடி, சித்தனை அழைத்தாலும், பின் அதாவது, 


எவைத்தன் உருண்டாலும், 


பிரண்டாலும், 


பின் ஐயோ !!!!!!  என்று 


அகத்தியனே !!!!!! என்று சொன்னாலும், 


பின் நிச்சயம் சித்தர்கள் வருவார்களா என்றால், நிச்சயம் வரமாட்டார்கள். 


ஐயோ, பாவம், பின் இவைத்தன் சிறிது புண்ணியம் வைத்துக் கொண்டு, இவ்வாறு, பின் வாழத் தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கின்றார்களே. பாவப்பிடியில் என்று, நிச்சயம், இதைத்தன் அறிய.. 


==================================
# அகத்திய மாமுனிவரின் கருணை….
==================================


******   பின் ஒவ்வொரு பிறவியிலும், பின் அகத்தியனை குருநாதனாகவே எண்ணிக்கொண்டு, வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே, அகத்தியன் இப்பிறவியில் வந்து, பின் கையை, பின் எவைத்தன் இழுத்து, அனைத்தும் யான் செய்கின்றேன். யான் செய்கின்றேன் என்று.. ******   


******   அதாவது, சிறு குழந்தைகளுக்கு, எவ்வாறாக, பின் அதாவது, இனிப்பு, பின் இதோ, வாங்கிக் கொடுக்கின்றேன், வாங்கிக் கொடுக்கின்றேன் என்றெல்லாம், அகத்தியன் பக்குவப்படுத்தி… பக்குவப்படுத்தி…. இதை மாற்றுகின்றேன்.. அதை மாற்றுகின்றேன் என்றெல்லாம் சொல்லி, சொல்லி… உங்களை அழைத்துக் கொண்டே, பாவத்தை அளித்துக் கொண்டே, சென்று கொண்டிருக்கின்றான். ******   


கவலைகள் வேண்டாம். 


ஆசிகள், வள்ளி தெய்வானையோடு.


இன்னும் அகத்தியன் தெரிவிப்பான். 


மற்றோரும் வாக்கிலும் யான் தெரிவிப்பேன் வள்ளி தெய்வானையோடு வந்து.  இப்பொழுது ஆசிகள் !!!!!! 


( சித்தன் அருள் - 2278 - அன்புடன் அகத்தியர் - சென்னை சத்சங்க வாக்கு - 05/07/2026 - பகுதி - 10! 

சென்னை சத்சங்கத்தில் நிச்சயம் வெற்றிகள் தரும் 11 செவ்வாய் கிழமை வெள்ளி வேல் வழிபாடு. # திருச்செந்தூரில் வெள்ளி வேலை சமர்ப்பணம் செய்ய வேண்டும் போன்ற வழிபாடுகளை அருளியிருந்தார்கள்.  அவ் வாக்கினை செயல் படுத்த வெள்ளி வேல் அனைவர்க்கும் செய்து எடுத்து வந்திருந்தார்கள். ) 

அடியவர் :-  ( வெள்ளி வேல் அனைவருக்கும் கொடுப்பது குறித்து கேள்வி. )


அன்புடன் முருகப்பெருமான் :- எதை உணர, எவை இருந்து.  அதாவது, யான் இருக்கும் இடமெல்லாம், எவை புரிய, புரிந்து கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- முருகன் இருக்கும் இடமெல்லாம்?

அடியவர் :- வேல்


சுவடி ஓதும் மைந்தன் :- வேல்.  அப்ப? 


அடியவர் :- வெள்ளி வேல் எல்லாருக்கும் கொடுக்கலாம்.


சுவடி ஓதும் மைந்தன் :-  வேல் வந்து எல்லாத்துக்கும் கொடுக்கலாம். 


அடியவர் :- கொடுத்துட்டு, ( 11 செவ்வாய் கிழமை வெள்ளி வேல் வழிபாடு பூசை செய்து..பின்னர் )  திருச்செந்தூரில் கொடுக்க வேண்டும்.  (வெள்ளி வேல்  சமர்ப்பணம் செய்ய வேண்டும்) 


அன்புடன் முருகப்பெருமான் :- இன்னும் அகத்தியன் வந்து உரைக்கின்ற பொழுது, பல பல வகைகளில் கூட, ஏன், எதற்காக, இப்பிறவி என்றெல்லாம், வருங்காலத்தில், உங்களுக்கு நிச்சயம், அகத்தியன் சொல்வான். ஏனென்றால், அப் பக்குவ நிலைக்கு வந்துவிட்டீர்கள். ஏனென்றால், பின் சுகம், எவை புரியும் அளவிற்கும் கூட, சுகம் இல்லை. துக்கம் தான் அதிக அளவு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓகேங்களா? அதுக்குள்ள யார் வந்துருவாரு? 


அடியவர் :- அகத்தியர்.. 


சுவடி ஓதும் மைந்தன் :- ஏன் இது மாதிரி சொல்லிட்டு, ஏன் நடக்குது எல்லாம் வந்து (அகத்திய மாமுனிவர்) சொல்லுவார். 


அன்புடன் முருகப்பெருமான் :-  இதனாலே, பின் அதாவது, கலியுகம், இவைத்தன் அறிந்தும், புரியாத அளவிற்கும், மனிதன் இதனால், பின் கலியுகத்தில், மனிதன் தன்னைத்தானே, பின் கெடுத்துக்கொண்டு, மற்றவர்களையும் கெடுக்க வேண்டும் என்பது விதி. 


அன்புடன் முருகப்பெருமான் :-  இதுதான், பின் மனிதன், மனிதனே அழித்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் விதி. 


****** ஆனாலும், அகத்தியன் இருக்கையில், கவலைப்பட தேவையில்லை. ****** 


அவ் பாவத்திலிருந்து, அதாவது, பின் பாவம் என்பது இங்கு சாக்கடையிலே.  


அனைவரும் சாக்கடையில் கால் வைத்துவிட்டார்கள். 


அதைத்தன் கழுவுது எப்படி என்பதை எல்லாம் தெரியாமல், தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். 


ஆனாலும், கழுவினாலும், அதன் துர்நாற்றம் மாறவில்லையே. 


இதை போக்குவதற்காகவே, சித்தர்கள் இருக்கின்றார்கள். கவலைகள் வேண்டாமடா , குழந்தைகளே.

அடியவர் :- கணபதி டாலர்…. கணபதி  வைக்க சொல்லிருந்தீங்க…. பண்ணிட்டு வந்திருக்காங்க. 

அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் அறிய, இதற்கு பின் உத்தரவாதம், அகத்தியனை அளிப்பான். அளிக்கட்டும். இவைத்தன் அறிய, இதைத்தன் புரிய, பின் புரியாவிடிலும், இன்னும் இதைத்தன் ஏன், எவ்வாறு அணிந்து கொள்வதற்கு, அணிந்து கொள்கிறார்கள் மனிதர்கள் என்ற நிலைமையும் கூட, இன்னும் பொதுவான வகுப்பிலே, அகத்தியன் சொல்கின்ற பொழுது தெரியும். 


அன்புடன் முருகப்பெருமான் :-  ஏன், எதற்காக, ருத்ராட்சம் அணிகின்றார்கள்? ஏன், கழுத்தில் பல வகையில் கூட, மாலைகள் அணிகின்றார்கள் என்பவை எல்லாம் யாருக்கும் புரியாது. 


அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் உணர்ந்து, அகத்தியன் நிச்சயம் சொல்வான். 


அதை நீங்கள் புரிந்து கொண்டு, செயல்பட்டு, இன்னும் பின், அதாவது, எவ்வெவ் வழிகள் எல்லாம், நிச்சயம், மனிதன் இறைவனை வைத்து, ஏமாற்ற வேண்டுமோ, அவ்வளவு ஏமாற்றிவிட்டான். 


ஆனால், இன்னும் சித்தர்கள், இன்னும் பல மடங்காக சென்று, இன்னும் அறிவியலை எடுத்து வந்து, அப்பொழுது உங்கள் திறமைகளை, பின் இவ்வாறு தான் என்று, கண்ணோடு, எவை கொண்டு. அதாவது, கண்கள் இருந்து பார்க்கவில்லையே. ஆனாலும், பார்க்க வைப்பார்கள் சித்தர்கள். 

அடியவர் :-  ஐயா நேத்து மகாதேவ மலையில், சித்தர் பார்த்தேன். 

(இவ் குழுவினர் 12.09.2026 அன்று வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள மகாதேவ மலை சிவன் கோவில் தரிசனம் செய்தனர். அங்கு அடிவாரத்தில் ஸ்ரீலஸ்ரீ மகானந்த சித்தர் (மகா ஆனந்த சித்தர் - விபூதி சித்தர் ) வாழ்ந்து வருகிறார் அவரை தரிசித்த போது…. கேட்டார்கள்)


அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் அறிந்து, பின் இதை ஏற்கனவே, அதாவது, தெளிவுபடுத்தி, எங்கே ஞாபகம் வைத்துக் கொள்ளாதடா, குழந்தாய்.  இதிலேயே இருக்கின்றது. 


சுவடி ஓதும் மைந்தன் :-  அது (முன்னமே வாக்கில் ) சொல்லிட்டாருங்க, ஐயா…


அடியவர் :-  சரிங்க  அய்யா.


அன்புடன் முருகப்பெருமான் :-  கவலைகள் வேண்டாம். நல்லுணர்வோடு, இன்னும் சில தவிப்புகள்.  பின் அறிந்தும், இவைத்தன் அறியாவிடிலும், ஏன், எதற்கு, இப்பிறவிகள் என்பதெல்லாம்.

அன்புடன் முருகப்பெருமான் :-  இவ்நேரத்திலும், யான், பின் ஏன், எதற்காக, உங்களுக்கு வருகின்றேன். பின் எவை என் திருத்தலத்திற்கு வந்தாலும், உங்களை துரத்தி விடுவார்கள். ஆனாலும், பின் யான் வந்தேன் என்றால், எண்ணிக்கொள்ளுங்கள். உங்கள் பின் பாவம் எப்படிப்பட்டது என்பது. அதை தீர்ப்பேன். கவலைகள் வேண்டாம். 


சுவடி ஓதும் மைந்தன் :-  என்ன சொல்றார்  புரியுதுங்களா? 


அடியவர்:- (முருகப்பெருமான்) கோயிலுக்கு போனாலும் வெளியே விரட்டிடுவாங்க.


சுவடி ஓதும் மைந்தன் :-  வெளியே விரட்டிடுவாங்க. ஏன் உங்களை தேடி வந்தேன்னு, அவர் முருகர் வந்து தேடி வந்திருக்கிறார். அதனால வந்து, அந்த பாவம் இதுல மாற்றி இருக்கிறதுனாலதான், அது வந்து, நான் உங்களை இது பண்ண விட்டுறேன்னு சொல்றாரு. வந்து…

அன்புடன் முருகப்பெருமான் :-  இதனால், பின் யான் திருத்தலத்திலே இருப்பேன் என்றால், நிச்சயம் இருக்க போவதில்லை. இதை தன் சித்தர்களே உணர்த்தி வைத்திருக்கின்றார்கள். 


அன்புடன் முருகப்பெருமான் :- அதனால்தான், சித்தர்கள் அந்நேரம் செல்க என்று. ஆனாலும், பல மக்கள் செல்கின்றார்கள். ஆனாலும், ஆசீர்வாதம் கிடைக்குமா என்றால், சந்தேகமே….. குழந்தைகளே. 


சுவடி ஓதும் மைந்தன் :- அதனால, சித்தர்கள் என்ன சொல்றாங்க? இந்த நேரத்துல போன்னு சொல்றாங்க. வந்து, அந்த நேரத்துல , அவங்க இருக்கிறாங்க. என்ன சொன்னா, வந்து…


அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் அறிய, கவலைப்பட தேவையில்லை. இதைத்தன் அறிய, பின் வள்ளி தெய்வானையோடு, எம்முடைய ஆசிகள் எப்பொழுதும், நானும், இவைத்தன் பலன் அறுபடை, பின் வீடுகளுக்கு செல்கின்ற பொழுதும், ஆசிகள் பலமாக கொடுக்கின்றேன். பின் உங்கள் பின்னே வந்து. ஆசிகள், ஆசிகள். 


ஒரு அரியவர் கேள்வி :- ( ……………………….) 


அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் எவ்வாறு என்பதை எல்லாம், இவனுக்கு எது புரிய, இவைத்தன் அறிய, விதி தன்னில் கூட, இவனுக்கு ஒரு குறை. ஆனாலும், இக்குறை எங்கு சென்றாலும், தீர்க்க முடியாது என்பதே குறை. இதனால், விதி தன்னில் கூட, இவ்வாறு பிரம்மன் படைக்கும் பொழுதே, எழுதிவிட்டான். ஆனால், மாற்றுவது, அகத்தியனே. பொறுத்திருக்க சொல்.


சுவடி ஓதும் மைந்தன் :- அது மருந்தோ…..இருங்க, அகத்தியர் சொல்றாரு. விதியிலேயே பிறக்கும் பொழுது, என்ன பண்ணிருக்காரு? இந்த விஷயத்துல, இவரு போராடி, அப்படி எழுதி இருக்காருமா வந்து, அதுல வந்து, அது, அது விதியை மாத்தணும்னா, யாரால முடியும்னா… எவ்வளவு மருந்து எடுத்துக்கலாம்… சரி, அகத்தியர் ஏதாவது சொல்லுவாரு. பாத்துக்கலாம். 


ஒரு அரியவர் கேள்வி :-  என் தம்பி ( ………………………) 15 வருஷம் ஆச்சு. 


அன்புடன் முருகப்பெருமான் :-   எவை புரிய, இதைப்பற்றி, இப்பொழுது வேண்டாம். இவைத்தன் அறிந்தும், அமைதியாக மறந்துவிடு. எவ்யோசனைகளும் கொள்ள வேண்டாம். எவ்யோசனைகள் பின் வந்து கொண்டே இருந்தால், சில தீமைகள் உனக்கு நடந்து கொண்டே இருக்கும். வேண்டாம். ஆனால், சித்தர்கள் காத்துக் கொண்டிருக்கின்றார்கள். எப்போது சொல்ல வேண்டும் என்று கவலை விடு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க அதை பத்தி கவலை விட்டுருங்கன்னு சொல்றாரு. வந்து, 


அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் மனம் குழம்பி, எதை என்று அறிய, நீயும் குழம்பி, எவைத்தன் மற்றவர்களையும் குழப்பி, கடைசியில், பின் ஏன், எதற்காக? 


சுவடி ஓதும் மைந்தன் :-  எதுவுமே யோசிக்க கூடாதுன்றாரு வந்து.  நீயும் குழம்பிய, மற்றவரையும் குழப்பிடுவீங்கன்றாரு. வந்து, அதனால வேணாம், யோசிக்காத. 

அடியவர் 1:- நாளைக்கு விநாயகர் சதுர்த்தி எப்படி கொண்டாடுறதுன்னு கேட்டிருக்காரு? 


அன்புடன் முருகப்பெருமான் :-   இதைத்தன் எவ்வாறு, பின் மூத்தோனை  எவ்வாறு கொண்டாடினாலும், மூத்தோன்  மனம் மகிழ்வான். அவ்வளவுதான். அன்பு மட்டுமே பிரதானமானது. 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைதன்  அன்போடு வணங்கினால், அன்போடு அனைத்தும் கொடுப்பான். அன்பில்லாது எதை பின் தொடர்ந்தால், நிச்சயம் அவ்வாறே கொடுப்பான். மனம் எப்படியோ, அப்படியே, மூத்தோன் கொடுப்பான். 


அடியவர் :-  எல்லோருக்கும் பொதுவான  வாக்கு  ?


சுவடி ஓதும் மைந்தன் :-   எல்லோருக்கும்  பொதுவான வாக்கு இது வந்து. உங்க மனசுல இருக்குதோ …. எப்படி வணங்குறீங்களோ… இப்ப வந்து, அன்பான எப்பா எனக்கு ஏதாவது கொடுன்னா, கொடுத்துருவாரு. அன்பு..


அன்புடன் முருகப்பெருமான் :-   இதைத்தன் எவ்வாறு அன்றைய தினத்தில், அதாவது மனதில் எண்ணுகின்றீர்களோ, அதேபோலத்தான் வாழ்க்கையும் கொடுப்பான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்ப, அன்றைய தினத்துல வந்து, 


அடியவர் :-  நாளைக்கு அன்போட வணங்கணும். 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்கள் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்களோ, அதேதான் கொடுப்பான். 


அன்புடன் முருகப்பெருமான் :-   இவைத்தன் பாவமானாலும் சரி, புண்ணியமானாலும் சரி. 


****** பாவத்தை நினைத்து வாழ்ந்தால், பாவத்தை அள்ளிக் கொடுப்பான். ****** 


******  புண்ணியத்தை நினைத்து வாழ்ந்தால், புண்ணியத்தை அள்ளிக் கொடுப்பான். ******  


******  இதுதான், பின் அதாவது, மூத்தவனுடைய வேலை. ****** 


சுவடி ஓதும் மைந்தன் :- என்ன சொல்றாரு? நீங்க பாவம் ஏதாவது அந்த நேரத்துல எண்ணீங்கன்னா, சரிப்பா, அதே மாதிரி ஆகட்டும். ஓகேவா? அதே மாதிரி, அந்த நேரத்துல புண்ணியமாக நம்ம யோசிச்சோம்னா, ரைட் குடுறாருன்னு சொல்லிட்டு போயிட்டே இருப்பார். 


அன்புடன் முருகப்பெருமான் :-   இவைத்தன் ஆனாலும், வருந்துவதில்லை. மூத்தோனே. 


அன்புடன் முருகப்பெருமான் :-  அனைவருக்கும் கொடுத்துக்கொண்டே இருக்கின்றான். பின் அறிந்தும், 


****** பாவமானாலும் சரி. ****** 


****** புண்ணியமானாலும் சரி. ****** 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஐயா, புரியுதுங்களா இது வந்து?  எல்லோருக்கும் அவர் எல்லாம் வருத்தப்படுறது இல்ல வந்து.  


அடியவர் :- வருத்தப்படுறது இல்ல. நம்ம எப்படியோ…


சுவடி ஓதும் மைந்தன் :-   நீங்க வந்து எப்படி இருக்கிறீங்களோ, அந்த நேரத்துல நீ அப்படியே இருப்பா. 


அடியவர் :-  அப்படியே கொடுத்துருவர்…


சுவடி ஓதும் மைந்தன் :-  எப்படி சொல்றாருன்னா, அப்ப வந்து?  நீ எதை விரும்புற? 


அடியவர் :- பாவத்தை விரும்புனா…பாவத்தை கொடுப்பார் . 


சுவடி ஓதும் மைந்தன் :-  இப்ப வந்து என்ன சொல்றாரு? ஒரு விதத்துல வந்து, நம்ம என்ன அந்த நேரத்துல பண்றோமோ…


அடியவர் :- அதை கொடுத்துடுவார்.  


சுவடி ஓதும் மைந்தன் :-  அது பன் மடங்கு கொடுப்பாருங்க. ஐயா, வேற ஒன்னும் இல்ல. 


அடியவர் :-  ஆனா, அதுக்காக வருத்தப்படுவது இல்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  வருத்தப்படுவது இல்லை. நீ வந்து, இப்ப வந்து, நான் ஜாலியா இருக்கிறேன்னு சொல்றாரா? 


அடியவர் :-  ஜாலியாவே  இரு.


சுவடி ஓதும் மைந்தன் :-   ஜாலியா போடா. ஐயா, எனக்கு பாவத்தை ஒழிக்கணும்னு கேக்குறீங்களா? சரி, உன் பாவத்தை ஒழிச்சு, நீ முன்னேறுறா. அவ்வளவுதான். 


அடியவர் 3 :- அங்க நாம போய் நின்னாவே…  நம்ம மனசு ஆராஞ்சுகுடுத்துருவாரு.


சுவடி ஓதும் மைந்தன் :-  ஆமா. குடுத்துருவாரு. அவர் வந்து… 


அன்புடன் முருகப்பெருமான் :-  இதனாலே, இதைத்தன் எவ்வாறு குனிந்தும், உணர்ந்தும், எவ்வாறாக…. இதனாலே, பின் நின்றாலே, பின் அதாவது, மூத்தோனுக்கு தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அங்க போய் நின்னாலே, 


அடியவர்  :-  மூத்தவனுக்கு தெரியும். 


சுவடி ஓதும் மைந்தன் :-   மூத்தவனுக்கு தெரியும்ன்றாரு. 


அடியவர்  :- அவங்களோட மனசெல்லாம் ஆராஞ்சி பார்த்து…


சுவடி ஓதும் மைந்தன் :-   ஆராய்ந்து  இருப்பாருன்றாரு வந்து… 


அடியவர்  :-  ஆராய்ந்து  பார்த்து,  அதுக்கு ஏற்ப கொடுத்து


சுவடி ஓதும் மைந்தன் :-    ஆமா 

அன்புடன் முருகப்பெருமான் :-  இவைத்தன் அனைவரும் இதைத்தன் அறிய, ஆனாலும், பின் அதாவது, பல கோடி மக்களை பார்த்திட்டான் மூத்தோனே இதைத்தன் அறிய. 


அன்புடன் முருகப்பெருமான் :-  ஆனாலும், பின் மூத்தோன், பின் மனமார, பின் சந்தோஷப்பட வேண்டும் என்றே, இதை செய்ய வேண்டும். இதுதான் விதி. 


அன்புடன் முருகப்பெருமான் :-  ஆனாலும், மனிதன் சந்தோஷப்படுவதற்காக செய்கின்றான். பின் அப்படியே ஆகட்டும் என்று, மூத்தோன்  சொல்லிவிட்டு, சென்று விடுகின்றான். ஆனால், வருந்துவதோ, மனிதனே. 


அடியவர்  :-   விநாயகர் சந்தோஷப்படுவதற்காக செய்யணும். ஆனால், மனிதன் சந்தோஷப்படுவதற்காக செய்றாங்க. 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் சந்தோஷப்படுவதற்காக செய்றாங்க . ஆனால், கடைசில, வருந்துவது யாரு? 


அடியவர்  :-   மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  மனிதன் தான். 


அன்புடன் முருகப்பெருமான் :-  இதனால், அனைத்தும் மனிதன் செய்துவிட்டு, கடைசியில், இறைவன் மேல் பழி சுமத்துவான்  மனிதன் கலியுகத்தில். அவ்வளவுதான். இது வேடிக்கையா?  அல்லது வாடிக்கையா? 


அடியவர்  :-   வேடிக்கை


சுவடி ஓதும் மைந்தன் :-  வேடிக்கையா? எல்லாத்தையும் கொட்டுற மனுஷன் செஞ்சுட்டு, கடைசில யாரு இது பண்ணுவாரு? கடவுள் மேல போட்டுருவாராம். 


அன்புடன் முருகப்பெருமான் :-  ஆனால், கடவுள், அதாவது, கண்ணுக்கு தெரியப்போகின்றானா என்ன?  பின்  அவ்வளவு பின் அறிவாளி மனிதன்.  இதனால்தான் கெடுத்து, அதாவது, கெடுகின்றான் மனிதன். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அதனால, அவ்வளவு பெரிய அறிவாம் மனுஷனுக்கு வந்து… அதனாலதான், மனுஷன் எப்படி இருக்க? எதுக்காக கெடுறது? அதனாலதான். 

ஒரு அடியவர்  :-  ( அய்யா , மரம் நட ஆசி வேண்டும்..இது குறித்து வாக்குகள் கேட்ட போது….) 


அன்புடன் முருகப்பெருமான் :-  இவை தன் தாயே. எதைத்தன் மரம் நட்டாலும், எதைத்தன் அறிய. ஆனாலும், எங்கு எவை தன் அறிய.  


****** உன் ஆற்றல் எங்கே அதிகமாக இருக்கின்றது என்பது, அகத்தியனுக்கு மட்டுமே தெரியும். அங்கு நட்டால் மட்டுமே சிறப்பு. ******


இல்லையென்றால், பின் இவை தன் பாவம்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :- எங்க நடனும்?  ஏன்னா, நம்ம தெரியாம…..அதுதான் எதுவும் தெரியாம செஞ்சிருக்க கூடாது. ஒரு இடத்துல, உங்களுக்கு எங்க ஆற்றல் அந்த கரெக்டா வந்து விழுதோ, அங்கதான் வந்து…


அன்புடன் முருகப்பெருமான் :-  இவை தன் அறிய. இப்பொழுது வெளிச்சத்தில் இருக்கின்றாய். அறிந்தும், இவைத்தன் ஆனாலும், பின் இவை அறியாமல், பின் பின், அதாவது, இரவு தன்னில், அதாவது, பின் இருந்தால், எப்படி அங்கு நட்டால், நிச்சயம் அப்படியே ஆகும். வெளிச்சம் எங்கு இருக்கின்றது உனக்கு?  பின் ஆனாலும், இப்பொழுது கண்கள் இருக்கின்றது. ஆனால், வெளிச்சம் தெரிகின்றது. ஆனால், இவ் வெளிச்சம் மறைமுகமானது. அவ் வெளிச்சம் யாருக்கும் தெரிவதில்லை. 


அடியவர் 3 :-  ஐயா, சரவணன் கொஞ்சம் சொல்லுங்க. ஐயா, 


அன்புடன் முருகப்பெருமான் :-  எவை எது என்று உண்மை எதைத்தன் அறிய…. என் பெயரை வைத்துக்கொண்டு, எவை என்று புரிய கேட்கின்றாயே? இது நியாயமா? எதற்காக வைத்தாய் நீ?  


அடியவர்கள்:- ( குபீர் சிரிப்புகள் )  


சுவடி ஓதும் மைந்தன் :- என் பேரை வச்சு, ஏன்பா, என் பேரை எதுக்கு வச்சீங்கன்னு கேட்டாரு. 


அடியவர் 3 :-  சரி, அய்யா (....ஆடியோ தெளிவில்லை ....)  பாருங்க அய்யா. 

அன்புடன் முருகப்பெருமான் :-  இதைத்தன் அறிய எவ்வாறு என்பதை எல்லாம் சொல்லிவிட்டேன். அனைத்தும் பாவத்தில் மிதந்து கொண்டு இருக்கின்றார்கள். அதாவது, கிணற்றில் இருக்கின்றார்கள். இதைத்தன் மெதுமெதுவாக, பின் உண்மையாக அறிந்தும், பின் இறைபக்தியோடு இருந்தால், நிச்சயம் அக் கிணற்றிலிருந்து மேலே தூக்குவான்.  அவ்வளவுதான். அனைவருக்குமே.


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் என்ன பண்ணிறாங்க? உங்களுக்கு சொல்ல.  பொதுவா சொல்றார்.  எல்லாமே கிணற்றுல விழுந்துட்டாங்க. பொறுமையா, இறைபக்தியோடு நடக்கும்  நம்மளுக்கு அப்படின்னு சொல்லிட்டு, மனசோட நம்பிக்கையோடு இருந்தா, மெதுவா அந்த கிணற்றுல இருந்து என்ன பண்ணுவாங்க? 


அடியவர்கள் :- தூக்கி விடுவாங்க 


சுவடி ஓதும் மைந்தன் :-  தூக்கிட்டு வந்து கரைக்கு விடுவாங்க. இல்லையென்றால்?.....


அன்புடன் முருகப்பெருமான் :- ஆனாலும், இவை தன் அறிய, இதனால், பின் பரிபூரணமாகவே, எம்முடைய ஆசிகள். கவலைகள்  வேண்டாம். அகத்தியன் இன்னும் சொல்வான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  அகத்தியர் வரும்பொழுது சொல்றேன்னு சொல்லி இருக்காரு. 

அடியவர் :- ( ஒரு இடத்தில் ……… ) மோர் சேவை பண்றாங்க. ரெண்டு வருஷமா. ( அது குறித்து வாக்குகள் கேட்ட போது ) 

அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் எவ்வாறு  பின் தானங்கள்… தானங்கள் செய்வதற்கும் புண்ணியங்கள் வேண்டுமடா. வேண்டுமடா. இதைத்தன் அறிய, அனைவரும் தானங்கள் செய்ய முடியாது. தானங்கள் செய்தாலும், பாவங்களாக போய்விடும். யாருக்கு அத்தகுதி இருக்கின்றதோ, என் தந்தையே முடிவெடுப்பான். கவலைகள் வேண்டாம். ஆனாலும், பின் உன் சேவையை தொடர்ந்து செய். பார்த்துக் கொள்வோம். ஆனால், அதிலிருந்து நன்மையோ, தீமையோ என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. 

அடியவர் :- சரிங்க அய்யா.

அன்புடன் முருகப்பெருமான் :- இவை தன் அறிய, நாளை பொழுதில் மனமாரக,  மனம் உவந்து , இதைத்தன் மூத்தவனுக்கு வழிபாடுகள் பலபல. அன்பாலே, அவன் தனக்கு பிடித்தது. இதைத்தன் அறிய. 


****** பின் ஆனாலும், மூத்தோன்  யார் என்பதே இன்னும் தெரியவில்லை. பல, பின் அதாவது, இவ்வுலகத்திற்கே. ******

அன்புடன் முருகப்பெருமான் :- ஆனாலும், அகத்தியன் வந்து சொல்கின்ற பொழுது, பின் இவைத்தன் அறிய, இவைத்தன் புரிய, இன்னும் ஞானங்கள் மனிதனுக்கு எவ்வாறெல்லாம்… எங்கு இருக்கின்றான் என்பதை எல்லாம் தெள்ளத்தெளிவாக அகத்தியன் உரைக்கின்றான். 

அன்புடன் முருகப்பெருமான் :- இதனால், (2026 விநாயகர் சதுர்த்தி) நாளை பொழுதில், தன் மனமாக, மனம் உருகி என்ன வேண்டுமோ, அதை வேண்டிக்கொள்ளுங்கள். பன்மடங்காக கொடுப்பான். இதைத்தன் அறிய, பலமாக, இவைத்தன் பின் எட்டு. இவைத்தன் அறிய, பின் இவைத்தன் வகையான, இதைத்தன் செய்தாலே, பின் மூத்தவனுக்கு பிடிக்கும். 

அடியவர் 1:- எட்டு வகையான நெய்வேத்தியங்கள்…. 

அடியவர் 4:- கொழுக்கட்டை…

அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன்  எட்டு,  இவைத்தன் அறிய, இதற்கும் சம்பந்தம் உண்டு. பின் அறிவாக, அகத்தியனே  வந்து சொல்வான். 

அடியவர் 4:-  அய்யா பொதுவா, மது பழக்கத்துல, சின்ன பொண்ணுங்க, காலேஜ் பசங்க, இது பண்றாங்க. அவங்களுக்கு நாங்க என்ன முருகா பண்ணனும்? 


அன்புடன் முருகப்பெருமான் :- இவை தன் அறிய, என் தந்தை முடிவெடுத்து வைத்திருக்கின்றான். அனைத்தும், அனைவரையும் அழித்து விடுவோம் என்று. ஆனால், சித்தர்களோ, பொறுமையாக இருங்கள், இருங்கள் என்றெல்லாம்… என் தந்தையிடம், பின் ரகசியமாக, சித்தர்கள் சென்று சென்று.. இதனாலே, ஆனாலும், சித்தர்கள் சரி என்று சொல்லிவிட்டால், அனைவரும் சரிசமமாக அழித்துவிட்டு சென்று கொண்டே இருப்பான் என் தந்தை. 


சுவடி ஓதும் மைந்தன் :- எல்லாருமே, இறைவன் கொஞ்சம் இருங்க, இருங்கன்னு சொல்லிட்டு இருக்காரு. 


அன்புடன் முருகப்பெருமான் :- ஏன், கலியுகத்தில் எவ்வாறு, இதைத்தன் அறிய.  அதாவது, தாயே… இவை போன்று, பின், அதாவது, தன்னைத்தானே கெடுத்துக் கொள்ள வேண்டும் என்பது. ஏனென்றால், கலியுகம், அதாவது, பாவப்பட்டது. பாவப்பட்டது, இதைத்தன் அறிய. இதனால்தான், அதிவிரைவில், பின், இவைத்தன் அறிய, உண்மையானவை, அதாவது, இவைத்தன் அழிய. ஆனாலும், பொய்யானவை, எவைத்தன் புரிய. 

அன்புடன் முருகப்பெருமான் :- இதனை அறிவதற்கும் பல ஆண்டுகள் அறிந்தும்.  இதனால், கலியுகத்தில் இன்னும் இவ்வாறாக இருந்தால், தன்னைத்தானாக, பின், தன்னைத்தானே அழித்துக் கொண்டு, உடனடியாக, அக்குடும்பத்தையும், பின், அவனே அழிப்பான். இறைவனுக்கு இங்கு… பார்த்துக் கொண்டிருப்பான் வேடிக்கை…

சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு வீட்ல ஒருத்தர் தவறு செஞ்சாருன்னா..எல்லாத்துக்கும் தண்டனை விழும்ன்றது வந்து.  ஏன்னா, அதன் மூலமா என்ன பண்ணுவாங்க? வந்து, 


அடியவர் 4:- குடும்பமே கஷ்டப்படும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  குடும்பமே ?

அடியவர் 5 :- கஷ்டப்படுது. 

அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் கலியுகம், இதனால்தான், சில சில, பின், இவைத்தன், அதாவது, சித்தர்களே  காப்பாற்றிக் கொண்டு. இதனாலே, பின், சித்தர்கள் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றார்கள். திருந்தினால், திருந்துங்கள் என்று. 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதனாலதான், சித்தர்கள் என்ன பண்றாங்க? வந்து, திருந்தினால், திருந்து, ஒரு சான்ஸ் கொடுக்கிறேன்னு சொல்லிட்டு, வந்து, இது பண்றார். 

அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய ஆனாலும், பின், 

****** நீங்கள் இதைத்தன் எத்தனை கோடிகள் குவித்தாலும், யான் வரப்போவதில்லை. ஆனால், உங்கள் அன்பிற்காக வந்திருக்கின்றேன். ****** 


அடியவர்கள் :- ( பக்தி பரவசத்தில் ) முருகா !!!!!! முருகா !!!!!! முருகா !!!!!! 

சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க எத்தனை கோடி குவிச்சாலும், வந்து, என்னெல்லாம் நான் வரமாட்டேன்ப்பா. உங்கள் அன்பு ஏதோ, நீங்க கஷ்டப்பட்டீங்க, ஏதோ ஒருத்தருக்கு ஒரு கஷ்டம் இருக்குது. வந்து, அது என்னையே தேடி இருக்கிறீங்க. நீங்க வந்து, அதனால, இந்த நேரத்துல நான் சொல்ல வந்தேன்ட்டார். 

அன்புடன் முருகப்பெருமான் :- மனிதன் எவ்வாறு இருக்கின்றான் என்று பாருங்கள். என்னை பார்ப்பதற்கும், இந்நேரத்தில் மீண்டும் சொல்கின்றேன். ஓடி வந்தாலும், மனிதன்  உங்களை வெளியே தான் தள்ளிவிடுவான். இதுதான், பின், கலியுகம். 

சுவடி ஓதும் மைந்தன் :-  இதுதான்?  கலியுகம். 

அடியவர் :- கலியுகம்,

சுவடி ஓதும் மைந்தன் :- கலியுகம்

அடியவர் :-  கருணைகடல்….. 

அன்புடன் முருகப்பெருமான் :- இதனாலே, எவ்வளவு, பின், எங்களை வணங்கினாலும், யாங்கள் உத்தரவிட வேண்டும் உங்களுக்கு.  அவ்வளவுதான். 

அடியவர் 6 :-   ஐயா, மழையே பெய்யலையா… 

அன்புடன் முருகப்பெருமான் :- எவைத்தன், பின், மாற்று. இதைத்தன் அறிய , நல்வகை சொல்லு. நல்மனதோடு இருக்கச் சொல். போதும், 

சுவடி ஓதும் மைந்தன் :- எப்பா, நல்லவங்களா இருங்க. நல்ல மனசை எண்ணுங்கடா. டேய், நல்ல பூஜை, இது வந்து, நல்ல புண்ணியம் பண்ணுன்னு சொல்லு. மழை வருதுன்றாரு. 

அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, பின்  இவையும், பின்  அதாவது, அகத்தியன் அனைத்தும் சொல்வான். பின்  அதாவது, சொல்லிச் சொல்லி அழுத்தி விட்டார்கள். அதாவது, இவைத்தன், அவைத்தன் என்று.  ஆனாலும், அகத்தியன் சொல்வான். இதற்கு சரியான தீர்வு. 

சுவடி ஓதும் மைந்தன் :-  சரியான தீர்வு, அகத்தியர் சொல்லுவார். 

அடியவர் :- ஐயா பாடல் பெற்ற திருத்தலங்களில் உழவாரப்பணி ( செய்ய ஆசி கேட்ட போது ) 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அகத்தியன் சொல்லட்டும். பின்பு பார்த்துக் கொள்ளுங்கள். 


சுவடி ஓதும் மைந்தன் :- ஐயா, அவர் சொல்ல மாட்டார். ஆசீர்வாதம் கொடுத்துட்டு போவாரு. 

அடியவர் :- இப்ப வரை மலை யாத்திரை நம்ம டீமோடு இன்னும் போகல. அது மாதிரி போவதற்கு ஆசி வேண்டுகின்றேன் ஐயா.


அன்புடன் முருகப்பெருமான் :- புரியும். அதாவது, சற்று பொறுத்திருங்கள். இதைத்தன் அகத்தியன் எடுத்து ஆசீர்வாதங்கள் கொடுக்கட்டும். அனைவருக்கும் எம்முடைய ஆசிகள். 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் ஆசீர்வாதம் சொல்லிட்டாரு. 

அடியவர் 7:- ( ஐயா, முருகர்  வந்து எங்க அப்பா தானுங்க அய்யா. என் பொண்ணு கூப்பிட்டால் வரலை அய்யா. )


அன்புடன் முருகப்பெருமான் :- இவை என்று அறிய புரிந்து, இவைத்தன் பின், அதாவது, நீங்கள் அழைத்தாலும், எவை தன் புரிய, நிச்சயம் அறிந்தும், இவைத்தன்… எங்களுக்கு யாரை பின் பிடிக்கின்றதோ, அவர்களுக்காக, பின் இறங்கி வருவோம். அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-   அதனால, வந்து, நீங்க அழைத்தாலும், எல்லாரும் முருகனை அழைக்கிறாங்க. 


அடியவர் :-  அவருக்கு யாரை பிடிக்குமோ….


சுவடி ஓதும் மைந்தன் :-   எங்களுக்கு யாரு பிடிக்குமோ, நான் அதுக்காகத்தான் வருவேன். அப்பனா பார்த்துக்கோங்க. அம்மா சூப்பரா சொல்றாரு வந்து. டேலன்ட்டா, ஒரு டேலன்ட்டா சொல்றாரு வந்து…. 

அடியவர் :- எல்லாரையும் கூப்பிடுறீங்க. 

சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாரும் கூப்பிடுங்க. நான் வந்துருவேனா? 

அடியவர் :- யாருக்கு, அவருக்கு பிடிச்சது? 


சுவடி ஓதும் மைந்தன் :-   எனக்கு யார் பிடிச்சதோ? அப்பதான் நான் வருவேன். இறைவன், அவருக்கு பிடிச்சது. அதனால வராரு. இப்படி எல்லாம் ஒரு 


அடியவர் 1 :- முருகன் அப்பாவின் தரிசனம் கிடைப்பதற்கு, நாங்கள் 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறியேன். புரியேன். பின், அதாவது, ஒவ்வொன்றாக, இவைத்தன் பின் செய்திட்டு கேட்டால், நன்று.  செய்யாமலே கேட்டாலும், நியாயமா? 

(அதாவது முன்னர்  உரைத்த வழிபாடுகளை செய்திட்டு,  பின்னர் ஆசி வாக்கு கேட்க நன்று.) 

அடியவர் 8 :-  ஓதிமலைக்கு அடுத்த வாரம் முருகா !!!!! (   ஆசிகள் கேட்டபோது ) 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் எதை என்று புரிய எவ் மலைக்கு  வந்தாலும், இதைத்தன் அறிய யான் எங்கு ஆசிகள் தருவேன் என்று யாருக்கும் தெரியாது. அவ்வளவுதான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஓதி மலைக்கு வந்தாலும் சரி ,  எந்த மலைக்கு வந்தாலும் சரி.  நான் எங்க ஆசீர்வாதம் தருவேன்  என்று யாருக்கும் தெரியாது. 


அடியவர் 8 :-  வரதுக்கு ஆசி.


அன்புடன் முருகப்பெருமான் :- எவைத்தன் புரிய  அனைத்தும் எம்முடைய ஆசிகள். அருகிலே வழி நடத்துவேன். 

அடியவர் 8 :-   ஐயா, நாங்க எல்லாருமே (முருகர்) அவர் பிள்ளைகளா எப்போதும் இருக்கவேண்டும். ஆசி வேண்டும்.


அன்புடன் முருகப்பெருமான் :- எவைத்தன் அறிய, இதைத்தன் புரிய. இப்படி சொல்கின்றாயே. இதற்குத்தான் பல பக்குவங்கள். குழந்தாய், இதைத்தன் அறிய. 


இதனால்தான் உண்மையான, அதாவது, ஞானங்கள் பெற, பல பக்குவங்கள். இதைத்தன் அறிய, கஷ்டங்கள் தான். 


****** பின், அதாவது, எங்களை கண்டடைய ஒரே வழி, கஷ்டங்கள் தான். ****** 


எப்பொழுதோ, அகத்தியன் சொல்லிவிட்டான். இதனால், இதைத்தன் அறிய, கஷ்டங்களே இல்லை என்றால், யாங்களும் வரப்போவதில்லை. இதனாலே.

சுவடி ஓதும் மைந்தன் :-   என்னை கண்டுகிறதுக்கு ஒரே வழி என்ன வழி  ? 

அடியவர் :-  கஷ்டம்தான். 

சுவடி ஓதும் மைந்தன் :-   கஷ்டம்தான் 

அடியவர் :- கஷ்டப்பட்டு தான்  இறைவனை காண முடியும்.


சுவடி ஓதும் மைந்தன் :-  அப்பதான் என் வழியில வந்து..

அடியவர் 1 :- முருகன் அப்பா எங்களை அழைத்து.. எங்களுக்கு வந்து தீட்சை கொடுக்கணும்னு கேட்குறாங்க. (அலைபேசியில் மற்றொரு அடியவர் கேட்ட கேள்வி) 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய மூடர்களே, யான் வந்ததே தீட்சை தானடா.


அடியவர் 1 :- ( அலைபேசியில் இவ் வாக்கினை எடுத்துரைத்தார்கள் ) 

சுவடி ஓதும் மைந்தன் :-  நம்ம வந்து மந்திரம் எவ்வளவு நம்ம வந்து தீட்சை கொடுத்தா…. அந்த மந்திரம் (உச்சரித்தால்) செஞ்சா முருகர் வருவார். புரியுங்களா? சரியா சொன்னாரு. நம்ம எவ்வளவு மந்திரம் சொன்னா முருகர் வருவாருன்னு சொல்லிட்டு இது பண்றாங்க. அப்ப அவர் ஒரே வரியில் சொல்லிட்டாரு. என்ன சொல்லிட்டாரு வந்து? 

அம்மை அடியவர் :- நான் வந்ததே  தீட்சை தான்ன்றாரு. 

சுவடி ஓதும் மைந்தன் :-   வந்ததே  தீட்சை தான்ன்றாரு. . இப்ப எதுக்காக தீட்சை நமக்கு பெறுறோம்? அப்பா ஒரு இறைவனை காண்பதற்கு தானே தீட்சை பெறுறோம். அந்த மந்திரம் அப்ப என்ன ஆச்சு? இவர் வந்து இவர் வந்துட்டாலே வந்து என்ன ஆச்சு? 

அடியவர்கள் :- தீட்சை, தீட்சை..

சுவடி ஓதும் மைந்தன் :-    அதுதான் தீட்சைன்றாரு. வந்து 

அடியவர் 1 :-  அழகனே குமரன் ஐயா, எங்களுடைய வாழ்க்கை மாறுவதற்கு எனக்கு ஒரு மந்திரம் வந்து ( கொடுங்கள் ) 

அன்புடன் முருகப்பெருமான் :- எது புரிய  எவரது பின் வாழ்க்கையும் மாறாதது. இவைத்தன்அறிய  பின், அதாவது இறைவன் நினைத்தாலே, அதாவது என் தந்தை நினைத்தாலே உண்டு.

அடியவர் 1 :- ( தொலைபேசியில் இவ் வாக்கினை எடுத்துரைத்தார்கள் ) 

( ஒரு அடியவருக்கு சில வாக்குகள் ) 

அன்புடன் முருகப்பெருமான் :- இதை தன் அறிய அனைவருக்குமே எம்முடைய ஆசிகள் எதையும் கேட்காதீர்கள். அதாவது நீங்கள் தன் அறிந்தும் இவைத்தன் புரிய. அதாவது இவைத்தன் அறிய என்னை, அதாவது இவைத்தன் கேட்டால்தான் யான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. 


அதனால் அன்பாலே, பின் எவை தன் புரிய, பின் நினைத்தாலே யான் பதில் சொல்வேன். கவலைகள் வேண்டாம். 


எதை என்று அறிய, இவைத்தன் புரிய. அதாவது இதைத்தன் அறியாவிடிலும் கூட, பின் அதாவது 


****** ஒரு மூடன் தான், பின் மீண்டும் மீண்டும் கேள்விகள் கேட்டுக் கொண்டிருப்பான். ****** 


அடியவர் 10:- முருகனையே அண்ணா,  அண்ணா என்றுதான்  கூப்பிடுறேன். 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, இதைத்தன் புரிய. யானும் தம்பி !!!!!  தம்பி !!!!!! என்று அழைக்கின்றேன். போதுமா? 

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 

அடியவர் 11 :-  அய்யா , எங்களுக்கு அருணகிரிநாதருடைய ஆசிகள் வேணும் அய்யா . அவர் போல பக்தி வேண்டும் அய்யா.

அன்புடன் முருகப்பெருமான் :- அவனே சொல்வான். இதைத்தன் அறிய, அவனுடைய அருள் என்னவென்று.  வாழ்க்கையே எதைத்தன், அதாவது கஷ்டத்திலேயே மிதந்திருக்கின்றான். அவனுடைய அருள் கேட்கின்றாய். அதனால் அவ்வருளை கிட்டிவிட்டால், எதைத்தன் அறிய, வாழ்க்கையே ஒரு போராட்டமாகிவிடும். அவன் சொல்லட்டும் வந்து. பின் வரவழைக்கின்றேன். அவனையும் கூட. 

அடியவர் 1 :- (எனக்கு கடந்த பிறவியில் இருந்த ……. சித்திகளை இந்த பிறவியிலும் எப்படி இருந்தாலும் கொடுத்து விடுங்கள், தயவு செய்து ) 

அன்புடன் முருகப்பெருமான் :- எவை எது என்று புரிய ஆனாலும், இவையெல்லாம் கேட்பது நியாயமா? குடும்பம் இவனை நம்பி இருக்கின்றது. ஆனாலும் இப்பொழுது பின் கொடுத்தாலும், குடும்பத்தை விட்டு ஓடோடி சென்றால், இவைத்தன் எவ்வாறு நியாயமடா? மூடனே, இதைத்தன் அறிய உன் பிள்ளைகளை யார் பார்ப்பது? இதைத்தன் அறிய பின், அதாவது உன் இல்லத்தவளை யார் பார்ப்பது? இதெல்லாம் வாய் பேசுகின்றது. அவ்வளவுதான். கவலைகள் வேண்டாம். இருந்தாலும், அகத்தியன் வந்து சொல்லட்டும்.

அடியவர் 1 :- ( எங்களுடைய விதி எங்கு சென்றாலும் மாறும்? என்று கேட்கின்றார் ) 

அன்புடன் முருகப்பெருமான் :- எவை என்று வரும், எங்கு சென்றாலும், தலைகீழ் நின்றாலும், நிச்சயம் தன்னில் கிணற்றில் விழுந்தாலும் மாறாது. பின் அகத்தியன் வந்து சொல்லட்டும். பின் அகத்தியன் வந்தால்தான், அவை என்று, எவை என்று அறிய வினா. எவை என்று புரிய பதில். 


அடியவர்கள் :- ( சிரிப்புகள்)  


அன்புடன் முருகப்பெருமான் :- நாளை பொழுதில் மனமார, பின் மூத்தோனை நினைத்துக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமோ, அதை நிச்சயம் செய்வான்.


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன்  போதுமா? இவைத்தன் ஆசிகளோடு, வள்ளி தெய்வானையோடு, ஆசிகளோடு மீண்டும் உரைப்பேன். இன்னும் நலன்கள் பெற. 


ஒவ்வொரு பிறப்பின் ரகசியம் கூட.  


இப்பொழுது பின் உரைத்தாலும், நேரங்கள் இல்லை. 

இதனால், பின் உங்கள், அதாவது தொண்டினை, அதாவது என்ன, எதற்காக, எதைத்தன், அதாவது….. 

****** எதையும் நினைக்காமல் செய்யுங்கள். போதும்.  ****** 

******  இதைத்தன் அறிய, யாங்கள் நினைப்போம், உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பது. ****** 

அடியவர் 12  :-  ( தொழில்)  நன்றாக போக வேண்டும்….

அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் எவை என்று அறிய, முதலில் பின் இதைத்தன் அறிய, மூடனாக இருக்காதே. எவை என்று அறிய, மனதின் பின் வந்தவை எல்லாம், எவைத்தன் அதன்படியே, பின் ஓடுகின்றாய். மனதை மாற்று.  தியானம் செய். அப்பொழுதும் உன் வாழ்க்கை இனிக்கும். இல்லையென்றால், பைத்தியவனாகவே சுற்றுவாய். கடை நாளும் , இப்படியே அவை, இவை என்று எதை, எவை என்று திடீரென்று வரும். எதைத்தன் எவ்வாறு என்றெல்லாம், எதைத்தன். அதனால், முதலில் மனதை, பின் அதாவது இதைத்தன் அறிய, பின் மனதின் அழகாக தியானப்படுத்தி, மனநிலை ஒரு நிலைப்படுத்து. போதும்.  அப்படி இல்லை என்றால், பல நிலை ஆகிவிடும். இதனால், விபரீதம் ஆகிவிடும். 

அடியவர் 1:-  அவங்களுடைய மரகத சிலை வந்து திருடு போயிருச்சுன்னு சொல்லிட்டு….அழகன் முருகனின் மரகத முருகனின் சிலை….

அன்புடன் முருகப்பெருமான் :- என்று புரிய அதாவது, நாங்கள் எதுவுமே கேட்கவில்லை. மனிதன் வைப்பான். மனிதனே திருடிவிடுவான். அவ்வளவுதான்.

அடியவர்கள் :- ( குபீர் சிரிப்புகள் ) 


அடியவர் 1:-  பழனியில் இருக்கும் தங்களுடைய தசா பாஷாண மூர்த்தி… ( ஆடியோ தெளிவில்லை ) 


அன்புடன் முருகப்பெருமான் :- எவ்வாறு என்பது திருடினான் என்று.  ஆனாலும், நீங்களும் என் உண்மையில் பின் அன்பு, பின் அதாவது இதைத்தன் வைத்திருக்கிறீர்கள். அதாவது, நீயும் “அண்ணா” என்று (எனை)  அன்போடு அழைக்கின்றாய் என்று…. அவனும் கூட, பின் அதற்கு அன்போடு தானே எடுத்துச் சென்றிருப்பான். ஏன் இவ்வாறு நினைக்கக்கூடாது? 

அடியவர்கள் :- (குபீர் சிரிப்புகள்…..) 

சுவடி ஓதும் மைந்தன் :-  அதுதான் என்னன்னா, மனிதனே  வந்து வைப்பான்.  மனிதனே  வந்து திருடுவான்.  மனிதனே  வந்து வைப்பான். வேற ஒன்னும் இல்ல. அதனால வந்து திருடன் கூட என்ன சொல்றாரு பாருங்க. முருகர் வந்து நீ ஆசைப்படுற…. நீ ஆசைப்படுறல, அண்ணா, அண்ணான்னு சொல்லிட்டு…. அவனும் அதே மாதிரி ஆசை வச்சுட்டான். நாங்க அதுக்கு அவருக்கு வந்து வருத்தம் இல்லைன்றாரு. 

அடியவர் 1:-  அவங்களுக்கு பழனி தசபாசானம் மூர்த்திக்கு அபிஷேகம் செய்த பாலை அருந்தலாமா என்று?  


அன்புடன் முருகப்பெருமான் :- எதை, ஏது என்று புரிய. இப்பொழுது அங்கு எவை என்று கூற  பாசனம், எவை என்று அறிய, இவைத்தன் அதாவது பின் இருக்கின்றதா என்றால், நிச்சயம் இல்லை. சிறிதளவே கிள்ளி வைத்திருக்கின்றார்கள். அதைத்தன் எங்கு இருக்கின்றது என்று யான் சொல்வேன். 

அன்புடன் முருகப்பெருமான் :- அதுவும் இவைத்தன், அதாவது அங்கு இருக்கும் சிலவற்றை பிடித்து, அபிஷேகம் செய்யுங்கள் என்று காசுகள் கொடுத்து, பின் அதாவது அவன் மனமார, பின் செய்தால், ஒரு இடத்தில் வந்து, பின் அவன் நினைத்தாலே உண்டு. 


சுவடி ஓதும் மைந்தன் :-  ஒரு மனிதன் நினைத்தால்தான் உண்டாம். நல்லா காசு குடுத்தோம்னா, அங்க கரெக்டா ஊத்தி….. அந்த இதுல அவனுக்கு தெரியுமா….எங்கதான் இருக்குதுன்னு சொல்லிட்டு…. அப்ப அதை எடுத்து கொடுத்துருவோம் உன்கிட்ட…  இல்லைன்னா, வந்து காசு கொடுக்கலைன்னா …மனிதனா பாருங்களேன். 


அடியவர் :-  ஐயா காலையில் 3 வருசமா கூட்டுப்பிரார்தனை செய்கின்றோம். அது என்ன மாதிரி பாடல்கள் என்று ?


அன்புடன் முருகப்பெருமான் :- இவைதன் அகத்தியன் சொல்லட்டும், போதும். இதத்தன் அறிய.  அதாவது எப்பாடலை பாடினாலும் …. மீண்டும் மீண்டும் தெரிவிக்கின்றேன். பின் யாங்கள் அன்பு…. அதாவது பாவம் என்று உங்களுக்கு வரவேண்டுமே தவிர, நீங்கள் எவ்வாறு அழைத்தாலும், யாங்கள் வரப்போவதில்லை. 


சுவடி ஓதும் மைந்தன் :-  நீங்க எவ்வாறு கூப்பிட்டாலும் சரி, எவ்வாறு வேணாலும் நாங்க வருவோமானா, ஏதோ பாவம் பார்த்து வரணும், நாங்கன்றாரு முருகர். வந்து நாங்களா பாவம் பார்த்து. 


அன்புடன் முருகப்பெருமான் :- இதைத்தன் எவ்வாறு இன்னும் கேள்விகள்.  ஆனாலும் பல வேலைகள் எனக்கு. இன்னும் விட்டால், பின் இவைத்தன், அதாவது என்னவென்றே தெரியாமல். இதனால் மூத்தோனை அன்பாக, பின் வேண்டிக்கொள்ளுங்கள்  என்ன தேவை என்று.  அகத்தியன் வருவான். மீண்டும் யான் வாக்கினை ஜெபிக்கின்றேன். இப்பொழுது போதும், ஆசிகள் 


அன்புடன் முருகப்பெருமான் :- இவைத்தன் அறிய, நாளை பொழுதில் நன்றாகவே, இவைத்தன் அறிய, மூத்தோனை வழிபடச் சொல். மீண்டும். பின் அகத்தியன் தெரிவிப்பான், பின் சொல் ஒரே சொல்தான். 


சுவடி ஓதும் மைந்தன் :-  எல்லாருக்கும் ஒரே ஒரு சொல்தான், 


அடியவர்கள் :- முருகப்பெருமானுக்கு அரோகரா !!!!!! அரோகரா !!!!!! 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment