​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Tuesday, 15 September 2026

சித்தன் அருள் - 2314 - அன்புடன் அகத்தியர் - பல்லாவரம் வாக்கு!




முருகப்பெருமான்  09.08.2026   அன்று  உரைத்த வாக்கு. 

வாக்குரைத்த நாள் :-  09.08.2026  (ஞாயிற்றுக்கிழமை) 

வாக்குரைத்த ஸ்தலம் :- சென்னை பல்லாவரம் அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ள குமரன் குன்றம் சுவாமிநாத சுவாமி முருகன் ஆலயம். 


கூகுள் மேப்:-  https://share.google/RgS6TdtecgZi7gSab 


===========================
#   அன்புடன் முருகப்பெருமான்   வாக்கு 
===========================


பல லோகங்களை அழகாக கையில் வைத்து, அனைத்தும் காக்குகின்ற தாயே, தந்தையே, பணிகின்றேனே வேலனவனே !!!!!! 


உரைப்பேனே, அறிந்தும் அனைவருக்குமே எதைப் புரிய. 


அறிந்தும் எவை என்று அறிய, 


வள்ளி, தெய்வானையோடே வந்து, வேலவனே  !!!!!!  


உரைப்பேனே !!!!!! 


===========================
#    ஒருவனுக்கு ஞானத்தைக் கொடுத்துவிட்டால், அவ் அந்த ஞானத்தின் மூலம் தனது வாழ்க்கையின் தத்துவத்தைப் புரிந்து வெற்றி கொள்வான். 
===========================


எதை என்றும் அறியும் பல வழிகளுக்கு ஏற்படுத்து வரைக்கும் அறிந்தும் எதை என்றும் உணராத பின்  மானிடர்கள், இவ்வுலகத்தில் அறிந்தும் எதை என்று அறிய, எவ்வாறு என்பதையும் நின்று பார்த்தாலும், அறிந்தும் பல குறைகள். 


இவை என்று அறிய, பின்  என்னிடத்திலே வந்து, எவை என்று உரிய உரிய அறிந்தும்  கூட , பின்  வேண்டுதல் அறிந்து கூற, நிறைவேற்றி எவை என்று கூற, பின்  நிறைவேற்றியும் யான் தருவேன், எதை என்று அறிய. 


இதைத்தன் உணராது  அறிந்தும், இதைத்தன் பின் புரியாதாக இருந்தாலும், அவை தன் நீக்கி அறிந்தும், பின் பொருளோடும், பின் விளங்கி, எதை என்று அறிய, ஞானத்தைப் பின் அள்ளித் தருவேனே. 


அறிந்து கொள்ளும். 


முதலில் ஞானத்தை அள்ளி, பின் தந்து, அவை எவை என்று அறிய, அவ் ஞானத்தை கொடுத்தாலே, அறிந்தும் எவை என்று புரிய, பின் உங்களுக்கே புரியும் வாழ்க்கையின் தத்துவத்தை கூட.


இதனாலே  எதை என்று கூற, முதலில் எவ்வாறு எதனைத் தருவது என்றே, பின் அறிந்தும் எதை என்று கூற…. 


****** வள்ளி தெய்வானையோடே   ஞானத்தைத் தருகின்றேன். ****** 


******  அவ் ஞானத்தின் மூலம், பின் அனைத்தும் உணர்ந்து கொள்வாய், உணர்ந்து கொள்வீர்களாக. ****** 


உணர்ந்து கொண்டு, அறிந்தும் எதை உணராத வகையிலும், அறிந்தும் இவைத்தன் உணர்ந்து, எவை என்று பின் அறிந்து, ஒவ்வொருக்கும் ஒவ்வொரு குறையாகவே, எவை என்று அறிந்து கூட, பின் ஒவ்வொரு குறையாக, எதனை என்றும் அறிய, அவரவர் பின் ஏற்படுத்தியதே குறை. 


எதை என்று கூற… ஆனாலும் இக் குறையை பின் ஏற்படுத்தி, ஏற்படுத்தி, எதை என்று என் அருகில் வந்தாலும், அறிந்தும் எதை என்று புரிய, இதனால் பின் அவ் குறை எவ்வாறு பின் வந்தது என்பதை எல்லாம், 




****** பின் ஞானத்தின், அதாவது தான். ****** 


******  அதனால்தான், அவ் ஞானத்தை உங்களுக்கு கொடுத்திட்டால், அவ் ஞானத்தின் மூலம் நீங்கள் வெற்றி கொள்ளலாம். ****** 


அறிந்தும்  கூற, இதனாலே, பின் இவைத்தன் பின் உலகம் அறிந்தும் எதை என்று புரிய, 


****** என் தாயும், தந்தையும் அருளே பரிபூரணம், அனைவருக்குமே. ****** 


===========================
#    ஞானங்கள் பெறுதலே, பின் உச்சக்கட்டம்
===========================
#  அம்மை அப்பனை காண்பதே சிறப்பு
===========================




******  இவ்வுலகத்தில் அறிந்தும் இவைத்தன் ஞானங்கள், ஞானங்கள் பெறுதலே, பின் உச்சக்கட்டம்.  ****** 




****** அறிந்தும் கூட, பின் இறைவனை காணுதலே ****** 




******  பின் தாயும் தந்தையும் காணுதலே, சிறப்பு. ****** 


===========================
#  அன்னையின் ஆடி மாதத்தில், முருகப்பெருமான் வழங்கும் ஞானம்.
===========================


இதை என்றும் புரியாத, பின் அனைவருக்கும் அறிந்தும், எவை என்று புரிய, பின் உணர வைக்கும், பின் தன்மையை, பின் ஏற்றுக்கொண்டு, அறிந்தும் எவை என்று கூற, வள்ளி தெய்வானையோடு, ஆசிகளோடு…


பின் எவை என்று கூற, என் அன்னை, என் அறிந்து கூட, பின் (ஆடி) இவ் மாதத்தில், என் அன்னையின் மாதத்தில், அறிந்தும் எதை என்று புரிய, பின் வருவோருக்கெல்லாம், பின் ஆசிகளோடு , எவை என்று என் தாயின், பின் கட்டளை ஏற்று, அறிந்தும், பின் அனைவருக்கும், எவை என்று கூற, 


******  பின் ஞானத்தை அள்ளித் தருதலே, எவை என்று கூற, பின் அதாவது தாயும் தந்தையும், பின் காணுதல்…. ******  


===========================
#  குற்றம் உணராத வகையில் , எப்படி குறை தீர்க்க முடியும் ? 
===========================


அனைவரும், எவை என்று கூற, பின் ஏறி ஏறி, பின் குறை தீர்ப்பான், குறை தீர்ப்பான், முருகன் என்றெல்லாம் வந்து கொண்டே, வந்து கொண்டே….


****** ஆனாலும் எப்படி குறை தீர்ப்பேன்? ****** 


எதை என்று அறிய  இனி உணராத வகையில், எக் குறை எவை என்று கூற, யான் தீர்ப்பேனே, எவை என்று அறிய. 


மனிதா, இவை தன் புரிந்துகொள்.. 


******  எதை என்று அறிய, இவ்வாறு, பின் அறிந்து கூட, பின் என்னிடத்தில் நீ வந்தாலே, ஞானத்தை அள்ளித் தருவேன். ****** 


******  அவ் ஞானத்தை வைத்துக்கொண்டு, பல வழிகளில் கூட, அறிந்தும் உண்மையான, உண்மையானதை நீங்கள் உணர… ****** 


===========================
#  எப்போது முருகப்பெருமானின் ஆசிகள் கிட்டும் ?
===========================


******   பின் எதற்காக கவலைகள் வருகின்றது, எப்பொழுது நீங்கள் உணருகின்றீர்களோ, அப்பொழுதுதான், பின் அருள்களும் கூட, அனைத்தும் யான் ஈவேன், வள்ளி தெய்வானையோடு.. ******  


******   அப்பொழுதுதான், அதை வைத்துக்கொண்டு, நீங்கள் வாழ்வீர்களாக, எதை என்று கூற.. ******  


===========================
# மனிதர்களுக்குத் தேவையான வரங்களை அளித்தாலும், அவர்கள் ஞானமில்லாத காரணத்தால்…..மீண்டும் மீண்டும் தவறு செய்து கொண்டே இருக்கிறார்கள்.
===========================


பின் எதையும் எவை என்று கூற, 


எக் குற்றம் எதனால் வந்தது? 


என்பது தெரியாமலே, அறிந்து கூட, வந்தாலும், யான் அறிந்தும்  கூட, அருளாசிகள் கொடுத்தாலும், பின் மீண்டும் மீண்டும், மனிதன் தவறு செய்து கொண்டே இருப்பான், அறிந்து கூட.


****** இதனால்தான், பின் வெளிச்சம், எதை என்று கூற, முதலில் இருட்டில் இருக்கும், எவை என்று கூற, மனிதனை வெளிச்சத்தில், பின் கொண்டு வர வேண்டுமே… ****** 


அறிந்தும் எதை என்று புரியாத நிலைக்கு, வருந்தாத நிலைக்கு, வந்தாலும், எவை என்றும் புரியாத, அறியாத வகையில், ஒன்றுண்டோ.. 


அறிந்தும் இவை என்று, ஞானத்தின் மைய புள்ளியாகவே, அறிந்தும் எதை என்று கூற, மானிடர் கலியுகத்தில், எவ்வாறு என்பதை எல்லாம், வாழ்ந்து பார்க்கின்றான்…


வாழ்ந்து, எவை என்று கூற, ஒன்றாக கூடி, எதனை என்று அறிந்தும், எவை என்று ஞானத்திற்கு, உச்ச, எவை என்று புரியாத வகையிலும், வாழ்ந்து கொண்டிருக்கையில்….


எவ்வாறு வாழ்கின்றான்? 


எதை என்று கூற, நோய் நொடியோடு, எவை என்று கஷ்டங்களோடு, எவை என்று புரிய, பின்னிப் பிணைந்து, வாழ்ந்து கொண்டிருக்கின்றானே !!!!!!


எவை என்று கூற, அவையாவும் எங்கு தீருமோ என்பதை எல்லாம், மனிதன் பின் வந்து, வந்து, பின் காலடிகள் எடுத்து வைத்து, எடுத்து வைத்து, எதை என்றும் உணராமல், எவை என்றும் அறியாமலும், வைத்து வைத்து, எதை என்று கூற, தெரியாமலே செல்கின்றானே..


அறிந்தும் பின் அறியாமலும், பல வலிகளோடு..


===========================
# சிறுக சிறுக ஞானத்தை கொடுத்துக்கொண்டே வந்தால்,  ஞானத்தின் வழியே, பெருக, பெருக, பின் வாழ்க்கை மாறும்.
===========================
# மனிதர்களுக்குச் சிறுகச் சிறுக ஞானத்தைப் புகட்டி, அவர்களின் வாழ்க்கையை மாற்றுவதே சித்தர்களின் முதன்மை நோக்கம்/குறிக்கோள். 
===========================




****** சித்தர்கள் ஞானத்தை உபதேசிக்க, வந்து கொண்டே இருக்கின்றார்கள்.  ****** 




******  அவ் ஞான உபதேசத்தை கூட பெற்றால், அறிந்தும் கூட, பின் நன்றே. ****** 




******  அவ் பெற்றமைக்கும் கூட, பின் அருளாசிகள் வேண்டுமே, ****** 




******  எது என்று கூற, எங்களுடைய அருளாசிகள் வேண்டுமே. ****** 




இதனால்தான், எது என்று கூற, முதலில் ஞானத்தை போதித்திடுக, ஞானத்தை போதித்திடுக, என்றெல்லாம், சித்தர்களிடம் சொல்லி சொல்லி, எவை அறிய, புரிய, புரிய வைத்து, அறிந்தும் கூட…


பின் எங்களுடைய ஆசிகளோடு , பின் அதாய், அனைத்தையும் வெல்வீர்களாக. 


தாயும் தந்தையும் அறிந்தும், பின் பரிபூரணமாக, பிறக்க வைக்கின்றார்கள்.


ஆனாலும், மனிதன் ஏது என்று புரியாமல். வாழ்ந்து அறிந்தும் கூட, பின் எதை என்று அறிய, மாயதனில் சிக்கி, அறிந்தும் எதை என்று அழிந்து, மீண்டும் பின் ஏதாவது சீர்கெட்டு, எதை என்று மீண்டும் வருகின்றானே, அறிந்தும் கூட, 


பின் மீண்டும் எவை என்று கூற அருளாசிகள் கொடுத்தாலும், பின் கெட்டு விடுவான் என்பதை எல்லாம் நாங்கள் அறிவோமே. 


அறிவோமே, சிறு குழந்தைகளே, அறிந்தும் எதை, எதை என்று புரிய, இதனால்தான், எவை என்று புரிய, பின் வருவோருக்கெல்லாம், முதலில் ஞானத்தை…


இதனால்தான், அறிந்தும் எவை என்று கூற, பின் அதாவது, நான் அங்கு சென்றேன், இங்கு சென்றேன், எதை என்று, பின் யாரும் உதவிலையே என்றெல்லாம், பின் அறிந்தும் எதை என்று கூற, மானிடர்கள் அறிந்து கூட…




******  அதனால்தான், எவை என்று கூற, பின் அவ் ஞானத்தின், பின் அதாவது, சிறுக சிறுக கொடுத்துக்கொண்டே வந்தால், அறிந்து கூட, அவ் ஞானத்தின் வழியே, பெருக, பெருக, பின் வாழ்க்கை மாறும் என்பதே, பின் குறிக்கோளாக, அதாவது, சித்தர்களின் குறிக்கோளாக.. ****** 


===========================
# எதையும் வேண்டாமல் இறைவனை வேண்டுதல்….
===========================


இதனால் மாற்று எண்ணத்தை மாற்று, அறிந்தும் எதை என்று புரிய, 


****** பின் ஏது என்று கூற, எங்களிடத்தில் வந்தாலும், அறிந்து கூட, பின் எதையும் கேட்காதீர்கள், எதை என்று கூற… ****** 


பின் அதாவது, எவை என்று கூற, பின் உங்களுக்கு எவ்வாறு, பின் எவ்வாறு எவ் அறிவை கொடுத்தால், உங்களுக்கு அதை, பின் பயன்படுத்தி, நீங்கள் வெற்றி கொள்வீர்கள் என்பதை எல்லாம் யாங்கள் உணர்வோம், அறிந்தும் எதை என்று புரிய…


இதனாலே, அதையே கொடுப்போம்….


****** முதலில் ஞானத்தையே கொடுப்போம், எதை என்று புரிய ****** 


பின் ஓடி ஓடி, எவை என்று அறிய, எதை என்று கூற, கால்கள் தேய்ந்து, அறிந்தும் எதை என்று புரிய, எவை என்று அறிய, பின்… 


குழந்தைகளே !!!!!!  எதை என்று அறிய, 


அறியாமலும், பின் எவை என்று புரியாமலும், ஓடோடி, பின் வந்து, எதை என்று கூற, ஆசிகள், அவை, இவை என்றெல்லாம் பெற்றுக்கொண்டு… 


எதை என்று புரிய, பின் எதற்காக வாழ்கின்றீர்கள் என்பதே தெரியாமல், வாழ்ந்து கொண்டிருக்கின்றீர்களே, எவை என்று கூற…. 


அவ்வாறு, பின், பின் தெரியாமல், பின் வாழ்ந்து கொண்டிருக்கையில் , பின் இறைவன் தெரிவானா? 


எவை என்று கூற, பின் வாழ்க்கை தெரியுமா, என்ன? 


எவை என்று கூற, ஒன்றும் தெரியாது. 


இதனால் , எவை என்று கூற, பின் எவ்வாறாக, பின் ஒன்றும் தெரியாமல், பின் வாழ்ந்தாலும், பின் அழிவுகள், எவை என்று கூற, பின் மனிதனால், எவை என்று கூற, 


பின் அதாவது, மனிதன், எவை என்று அழிவை பெற்றுக்கொண்டு, எது என்று அறிய, பின் தன்னைத்தானே, எவை என்று புரிய, பின் நிச்சயம் தன்னில் கூட, துன்பத்திற்கு, எவை என்று உள்ளிழுத்து, உள்ளிழுத்து அது என்று கூற…


===========================
# அருணகிரிநாதரின் பக்தி: எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், 'முருகா' என்று மகிழ்ச்சியோடு அழைத்த அருணகிரிநாதரின் நிலையே உயர்ந்த பக்தி மற்றும் பண்பாகும்.
===========================
 
இதனாலே, பின் அனைத்தும் தெரிந்து கொள்….


பின் வாழ்க்கையும் மாறும்….


சிறக்கும்…


அறிந்தும் இதை என்று அறியா, 


பின் அருணகிரியின் வாழ்க்கை வரலாற்றை, பின் எவை என்று கூற.. 


என் பக்தன் அருணகிரி எவ்வாறெல்லாம், பின் வாழ்ந்தான்? எதை என்று கூற, 


எப்படி, எவ்வாறெல்லாம், பின் இறுதிவரை, எவை என்று கூற, என்னிடத்திலே, எவை என்று… 


****** எவ்வளவு துன்பம் கொடுத்தாலும், எவை என்று கூற, பின்னிப் பிணைந்து, அறிந்து கூட, முருகா என்றே, பின் அழைத்தானே, எவை என்று சந்தோசமாக..****** 


******  இதுதான் பக்தி ****** 


எவை என்று கூற, 


******  உயர்நிலை ******   எவை என்று கூற, 


******  பின் பண்பு, பின் எவை என்று கருணை நிலை******  


எதை என்று கூற, 


===========================
# ஞானம் பெற்றவர்களே, இன்பம் பெற்றவர்கள்
===========================
# ஞானம் பெறாதவர்கள், துன்பம் பெற்றவர்கள்
===========================


இப்பொழுது மனிதன், பின் எவ்வாறு என்பதெல்லாம், எதை என்று அறிய..


பின் ஞானிகள், மனிதனாக இருந்து தான், ஞானிகள், எவை என்று புரிய..


பின் எதை என்று அறிய, இதனால், எவை என்று 


****** ஞானம் பெற்றவர்களே, ஞானிகள் ****** 


 எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, 


******  எது என்று ஞானம் பெற்றவர்களே, பின் இன்பம் பெற்றவர்கள், எவை என்று அறிய ****** 


******  நிச்சயம் ஞானம் பெறாதவர்கள், துன்பம் பெற்றவர்கள், எவை என்று புரிய, பின் எதை என்று அறிய, அறிந்து கூட ****** 


பின் அதனால்தான், முதலில் என்ன, பின் வழங்கப் போகின்றேன் என்பதை எல்லாம்.. 


******   எங்களிடத்தில் வந்தால், பின் வள்ளி தெய்வானையோடு  ஞானத்தை தான் வழங்குவேன்..******  


******   அறிந்தும் எதை, ஞானத்தின் மூலம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ******  


அறிந்தும் எதை என்று கூற, எதனால் தவறு நடக்கின்றது ? ? ? ? ? ? 


எதனால் இவ்வாறு வாழ்க்கை வீணாக போகின்றது ? ? ? ? ? ? 


எதனால்  ? ? ? ? ? ?  எதனால்   ? ? ? ? ? ?  என்பதை எல்லாம்


எதனால்  ? ? ? ? ? ? 


எதனால் ? ? ? ? ? ? 


எதனால்  ? ? ? ? ? ? 


என்பதை எல்லாம் நீங்கள் உணர்ந்து கொண்டால், 


பின் மாற்று யோசனைக்கு, எவை என்று புரிய, பின் இதனாலே, பின் வருந்தி , எவை என்று கூற….


===========================
# மனிதன் தன் தவற்றை உணர்ந்து எப்போது  தலை குனிகின்றானோ, அப்பொழுதே இறைவனும் , சித்தர்களும் அனைத்தும் நடத்தி வைப்பார்கள் 
===========================


பின் இதனால் தவறு செய்தேனே !!!!!! 


இவ்வாறு தண்டனை வருகின்றதே என்று அறிந்தும்!!!!!!  


எது என்று கூற, 


****** எப்பொழுது மனிதன், எவை என்று எளிதில் , பின் எவை என்று கூற, தலை குனிகின்றானோ ……. ****** 


******  அப்பொழுதே, யாங்கள், பின் தலை குனிந்து, எவை என்று கூற, நடத்தி வைப்போமே, அனைத்தும் அறிந்தும், எது என்று கூற ****** 


===========================
# அனைத்தும் யாங்கள் அறிவோம்…..அதற்கு ஏற்பவே பலன்களும் தருவோம்…..
===========================


உள்ளொன்று புறமொன்று அறிந்தும், 


எவை என்று அறிய, 


பின் உள் புறம், எவை என்று அறிய, 


பின் உள், எவை என்று அறிய, பின் அறிய, அறிய, 


பின் அறியாமலும், எவை என்று கூற, 


******   ஆனாலும், அனைத்தும் யாங்கள் அறிவோம்… ******  


******   அறிந்தும், அதற்கு ஏற்பவே பலன்களும் தருவோம், எது என்று புரிய… ******  


===========================
# கருணைக்கடல், குருநாதர், பொதிகை வேந்தன், அகத்தின் ஈசன் , தந்தை அகத்திய மாமுனிவர்  முன்னின்று மக்களைக் காப்பதாலும், அன்னை பார்வதி தேவை மற்றும் தந்தை ஈசனாரிடம்  மக்களுக்காகப் பரிந்துரைப்பதாலுமே உலகம் தப்பித்துக் கொண்டிருக்கிறது. 
===========================


அறிந்தும், எவை என்று கூற, 


******    அகத்தியன், எவை என்று அறிய, முன்னின்று காக்கையில், பின் தப்பித்துக் கொண்டிருக்கின்றீர்கள் ******    


எவை என்று அறிய…..


******    பின் உலகமும் தப்பித்துக் கொண்டிருக்கின்றது ******   


******    அறிந்தும், பின் அகத்தியன் வந்து, வந்து ******   


******    தாய் தந்தையோடு, பின் எவை என்று கூற, உரை வைத்து ******   


எவை என்று புரிய, அறிந்தும் கூட, பின் 


******    மக்களை காப்பாற்று !!!!!  ******   


******    காப்பாற்று !!!!! என்றெல்லாம், ******   


******    கலியுகத்தில், பின் மனிதனுக்கு புத்திகள் கெடும்.. ******   


******    எது என்று புரிய, அறிவுகள் கெடும், ******   


******    எவை என்று கருணை, பின் இல்லாமல் போகும், ******    


அறிந்தும் எது என்று அனைத்தும், 


ஆனாலும், பின் அகத்தியனே , எவை என்று கூற, பலசித்தர்களோ , பின் வந்து, தாயும் தந்தையிடம், எது என்று கூற, மனிதனுக்கு, எவை என்று கூற, 


******  யாங்கள் கொடுப்போம் ******  


******  யாங்கள் கொடுப்போம் என்று ****** 


****** அதனாலே, உலகம் இன்னும் எவை என்று இயங்கிக் கொண்டிருக்கின்றது  ******
    
===========================
# கலியுகத்தில் குருநாதர் அகத்திய மாமுனிவர், சித்தர்களின் வேண்டுதலலே உலகைத் தாங்கிப் பிடிக்கிறது. இல்லையெனில், ஒரு நிமிடத்தில் உலகம் பின்னோக்கிச் சென்றுவிடும் அபாயம் உள்ளது. 
===========================


இல்லை என்றால், எது என்று அறிய, 


மீண்டும், எவை என்று அறிய, பின் எவை என்று புரிய, 


எவை என்று ஓர் மணித்துளி, எது என்று கூற, மீண்டும், எவை என்று அறிய, பின் வலம்  வருகின்ற பொழுது, 


எவை என்று கூற, பின் அதாவது, நிச்சயம் தன்னில் கூட, மீண்டும், எவை என்று கூற, பின் அவ்வாறு, பின் எதை என்று கூற, பின் முன்னோக்கி செல்கையில், 


பின் எவை என்று உலகம், பின் பின்னோக்கி, எவை என்று கூற, 


சிறிது நேரம், பின் தாய் தந்தையால் முடியும், 


******  எவை என்று கூற, பின் இழுத்து விட்டால், அவ்வளவுதான், எது மனிதன் ஆடிவிடுவான் ****** 


அதையும் தெரியவில்லையே, 


===========================
# பூவுலகிற்கு வந்த நோக்கம் தெரியாமல் வாழும் மனிதர்கள்……
===========================


மனிதன் எங்கிருந்து வந்தான்? 


எதற்காக வந்திருக்கின்றான்?


எதற்காக?


எவை என்று கூற, எப்படி மனிதன் என்பதை எல்லாம் ?


பின் தெரியவில்லையே ! 


 அறியும், எவை என்று கூற, 


அறிந்து கொள்ளவில்லையே ! 


இதனால், இவையெல்லாம் தெரியாத மனிதனுக்கு, அறிந்தும் எவை என்று கூற, ஆசிகள் கொடுத்துவிட்டால், பின் கெடுத்துவிடும், அனைத்தும் கூட.


===========================
# ஞானத்தை முதலில் தந்தாலே, அவ் ஞானத்தை வைத்து பிழைத்துக் கொள்ளுங்கள். 
===========================


******  இதனாலே, பின் ஞானத்தை முதலில் தந்தாலே ****** 


******  மீண்டும் மீண்டும், எதை தருவேன் என்று சொல்லிவிட்டாலும், அறிந்து கூட ****** 


******  பின் ஞானத்தை தருவேன் ****** 


அவ் ஞானத்தின்  (மூலம்) ,  மீண்டும்  பிழைத்துக் கொள்ளுங்கள், எவை என்று புரிய, 


===========================
# தன்னம்பிக்கை:- 
===========================
#  "நீயே உனக்குத் துணை" என்ற நிலையை அடைய ஞானம் அவசியம். ஞானம் பெற்றவன் மற்றவர்களுக்கும் துணையாக இருந்து சேவை செய்ய முடியும்.
===========================




******  பின் நீயே உனக்கு துணை ******  


எவை என்று புரிய, 


பின் நீயே உனக்கு துணை இல்லை என்றால்…… 


எவை என்று புரிய, எது என்று தெரியும், என்ன கொடுத்தாலும், எதை, எவை என்று புரிய, எதனை பெற்றுக் கொள்வாய்? 


எதனை ஏற்க, அறிந்தும், பின்னர் எதனை என்று…


அதனால்தான், எவை என்று ஞானத்தை கொடுத்தால், 


உனக்கே நீ துணையாக இருந்து….


எவை என்று புரிய, மற்றவர்களுக்கும் துணையாக இருந்து….


அனைத்தையும், பின் காத்தறிந்து….


எவை என்று புரிய, பின் எவை என்று சேவை செய்து, 


எங்களிடத்தில் நீங்கள் வருவீர்களாக.


===========================
#  யான் என்ன கொடுத்தேன்?  என்னிடம் வந்த ஞானிகளுக்கு?
===========================


இவ்வாறே, என்றும் அறிய, எவ்வாறு எல்லாம், இன்னும் ஞானிகள், எது என்று கூற, பின்… 


******   கந்தா  !!!!!! ******  


******    முருகா   !!!!!!  ******  


******   பின் கதிர்வேலா   !!!!!!  ******  


******    பின் கார்த்திகேயா    !!!!!!  ******   


என்றெல்லாம், பின் ஓடோடி வந்தார்களே எவை என்று புரிய….


முதலில் என்ன கொடுத்தேன், அவர்களுக்கு ? ? ? ? ? ? 


எவை என்று சந்தோஷத்தையா  கொடுத்தேன் ? ? ? ? ? ? 


இல்லை !!!!!!


எது என்று கூற 


******     ஞானத்தை கொடுத்தேன். ******    


ஞானத்தை வைத்துக்கொண்டு, எவை என்று கூற, பின் எவை என்று புரிய, ஞானம் என்பது இல்லை, எவ்வாறு என்பதெல்லாம், 


ஞானம், இறைவன், எவை என்று கூற, பின் பல வழிகளில் கூட, ஞானங்கள் எடுத்துரைத்து, எதை என்று போதாதற்கு, வழிவகை, எவ்வாறு என்பதை எல்லாம், மனிதன், எவை என்று கூற…


===========================
#  யார் அறிவுள்ளவன் ? யார்  அறிவில்லாதவன்? 
===========================


******     தன்னைத்தானே மேம்படுத்திக் கொண்டிருக்கின்றான், எவை என்று கூற, அறிவுள்ளவன், எவை என்று கூற…******    


******     அறிவில்லாதவன், தன்னைத்தானே கீழ்நோக்கிக் கொண்டிருக்கின்றான், எவை என்று கூற, பின் ஆண்களும், பெண்களும்  ******    


எவை என்று அறியாத வகையில் கூட, எதற்காக, பின் வணங்குகின்றோம் என்று தெரியாமலே, வந்து, வந்து, வணங்கி, எவை என்று கூற, 


===========================
#  மனிதில் அழுக்குகளை வைத்து கொண்டு வேண்டுவது. அருள் தராவிடில் புலம்புவது.  
===========================




மனதில் அழுக்குகள் வைத்து, 


பல உயிர்களை பின் கொன்று , கொன்று , எதை என்று கூற, 


******     பின் அருள் தந்திடுவேனா, என்ன? ******    


எவை என்று கூற, மீண்டும், பின் அருள் தாராவிடிலும் , முருகன், எவை என்று செய்யவில்லையே என்றெல்லாம்….


பின் உத்தரவாதம், எவை என்று புரிய, அறிந்தும் இதை என்று அறியாமல் இருந்தால், 


எவை என்றும்  


===========================
#   உண்மைதனைம,  ஞான தத்துவத்தினை மக்களுக்கு எடுத்துரைத்தாலே போதும். 
===========================


******     உண்மைதனை  ஞான தத்துவத்தினை, எவை என்று கூற, பின் எடுத்துரைத்தாலே போதும் ******    


எவை என்று கூற, அழிவுகள் பல வகைகளில் கூட, மனிதனுக்கு, எவை என்று புரியாமல், பின் வந்தாலும்…


===========================
#   கலியுகத்தில் அனைத்தும் சித்தர்கள் இயக்கமே.
===========================


இதைத்தன் நிச்சயம் தன்னில் கூட, அழியுகத்தில், எவை என்று புரிய, பின் அனைத்தும், சித்தர்கள், பின் இயக்கமே, எவை என்று புரிய, 


****** இதனால், சித்தர்கள் இயக்குகின்ற பொழுது, எவை என்று மனிதன், பின் தாழ்ந்து போவான் வருங்காலத்தில் ****** 


எது என்று புரிய, மனிதனின்  யோசிக்காத, பின் சிந்தனைகள், எவை என்று புரிய, பின் ஏனென்றால், மனிதன், எது என்று கலியுகத்தில், எவை என்று மறைக்கப்பட்ட, எவை என்று… 


===========================
#   கலியுக இருளில் இருந்து வெளிச்சத்திற்கு வாருங்கள்….
===========================


******  இருளாகவே கலியுகம் என்பது இருளாகவே எவை என்று புரிய, பின் இருக்கின்றது.  ****** 


அவ் இருளில் எப்படி எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் வரமா  எவை என்று கூற 


எப்படி?  


எப்படி?  


ஏது என்று பின் மனிதனை எவை என்று தன்னைத்தானே காப்பாற்றுபவனே  இருட்டில் எவை என்று கூற 


எவை என்று புரிய அறிந்தும் எதை என்று உணராத வகையில் கூட அறிந்தும் புரிந்தும் உண்மைதனை ஞானம். 


******  ஞானத்தை உணர்ந்தவனே  எவை என்று கூற மெய்ஞானம்.  ****** 


******  மெய்ஞானத்தை உணர்ந்தவனே எவை என்று கூற ****** 


******  எங்கள் இடத்தில் ****** 


******  (எங்கள்) அருகில் எவை என்று கூற ****** 


பின் நீங்கள் முதலில் இருட்டில் உள்ளீர்கள் எவை என்று கூற.


******   வெளிச்சத்திற்கு எவை என்று கூற வாருங்கள். ******  


அதாவது கலியுகத்தில் மனிதன் பின் அனைத்தும் எவை என்று கூற எது என்று அறிய அறிந்தும் பல வகையான உண்மைகளை பின் கற்றுணர்ந்து எது என்று கூற இருட்டினில் கூட 


அவ் இருட்டினில் இருந்து பின் வெளிச்சத்திற்கு வரவேண்டும். 


எவ்வாறு நீங்கள் வருவீர்கள் ???? 


எது என்று கூற அறிந்தும் கூட. 


அவ் இருட்டில் கூட அறிந்தும் கூட இவை தன்…. 


பின் வரங்கள் கொடுத்துவிட்டாலும் …..


எவ்வாறு நீங்கள் பயன்படுத்துவீர்கள்? 


சொல்லுங்கள் ? 


எவை என்று கூற பின் மனிதர்களே !!!!!!


எது என்று குழந்தைகளே  !!!!!!  அழகாக 


நிச்சயம் பயன்படுத்த முடிவதில்லை.  


===========================
#   கலியுக இருளில் இருந்து எப்படி வெளிச்சத்திற்கு வருவது?.
===========================
# கை தன்னில் ஒரு விளக்கை கொடுத்தால் நிச்சயம்  வெளிச்சத்திற்கு வந்துவிடுவான் மனிதன். 
===========================


இதனால் எவை என்று கூற  வெளிச்சத்திற்கு எவை என்று கூற 


அறியாது எது என்று புரிய 


புரியாமல்…. உணராமலும்…. அறிந்தாலும்…. 


எதை தன் உணர்ந்து எறிந்து எரித்து போராடி நின்றாலும்…. 


எதை தன் உணராத வகைகளும் எவை என்று கூற 


அதாவது வெளிச்சம் பின் எவை ஏது என்று அறிய நிச்சயம் தன்னில் கூட பின் இருட்டில் இருக்கும் எவை என்று கூற 


****** அதாவது பின் கை தன்னில் பின் ஒன்று விளக்கை கொடுத்தால் பின் நிச்சயம் தன்னில் அறிந்தும் எவை என்று வெளிச்சத்திற்கு வந்துவிடுவான் ****** 


******  அதனைத்தான் நாங்கள் செய்வோம் வருங்காலத்தில் ****** 


எது என்று புரிய பின் ஏது என்று அறிய. 


===========================
#   புரியாத புதிர் இவ் உலகமே……
===========================


இதனால் பின் அறிந்தும் எவை என்று அறியாத 


புகழாத ஒன்றுக்கும்… 


எரியாத ஒன்றுக்கும்…. 


எது என்று அறிய புரியாத நிலைக்கு வந்தாலும்… 


புரியாத புதிர் ஏதாவது அது…


ஏதாவது எது எது என்று கூற? 


பின் அறிந்தும்  கூட உலகமே. 


உலகமே நின்று நின்று அறிந்தும் இதை என்றும் பார்க்காத வகையிலும் எவை என்றும் நின்று நின்று பார்த்தாலும் 


இதைத்தன் உணராத வகையிலும் எவைத்தன் உணர்வானே… 


===========================
#   இறைவனை உடலினுள் எங்கு காண்பது ? 
===========================


உணர்வானே… 


இன்னின்று… 


அன்னின்று… 


கண்ணின்று… 


கண்ணிட்டு… 


கண்களுக்குள்ளே… 


எவை எதை என்று புரிய பின் 


****** என்னை காண்பானே …. கண்ணுக்குள்ளே இருக்கின்றேன் ****** 


******  அதனையும் காண்பானா எவை புரிய அறிய எதனை என்று எதை என்று போல அறிந்தும் எவை என்று கூற ****** 


******  கண்ணுக்குள் இருப்பவனை பின் எப்பொழுது காண்பான்? ****** 


******  எதை என்று புரிய பின் எதை என்று அறிய பின் தாயும் தந்தையும் எங்கு இருக்கின்றார்கள் தேடி தேடி ****** 


******  உன் கண்களுக்குள்ளே இருக்கின்றார்கள் ****** 


******  அவை தன் எப்பொழுது நீங்கள் உணர்வீர்களாக ? ****** 


பின் அதை வைத்துக்கொண்டு பின் அறிந்து கூட பின் எதை எதையோ நோக்கி எவை என்று அறிய 


எதை என்று கூட பின் எவை எதையோ பேச… 


பின் என்னென்னவோ மறைத்து… 


பின் போய் பேசி எவை என்று அறிய… 


******   பின் கண்ணையே இழந்து விடுகின்றான். ******  


எது என்று கண்ணை இழந்தவன் அனைத்தும் இழந்துவான் எவை என்று கூற… 


தாயும் தந்தையும் எது என்று புரிய இதனால் நிற்பதுமே எவை என்று கூற அறிந்தும் 


எதையும் பின் ஏது செல்வதுமே அறிந்தும் எவை என்று கூற பின் கனவே… 


கனவே வாழ்க்கையானால்… 


===========================
#   முப்பெரும் தேவர்கள்……
===========================


அறிந்தும் இதைத்தன் உணராமல் எவை என்று புரிய 


புரிந்தும் அறிந்தும்.. 


ஒன்று ஆகையில்… 


ஒன்று எதை என்று கூற இரண்டாகையில்… 


இரண்டு பின் மூன்றாகையில்… 


எத்தனை எத்தனை எதை என்று கூற அறிந்து கூற… 


மூன்றாகையில் என்னவென்று எதை என்று.. 


உத்தமம் பின் முப்பெரும் தேவர்களே  எதை என்று அறிய…


எதை என்று உணராது அளவிற்கும் பின் பகுத்தறிவு இல்லையே ….


அறிந்தும் இவைதான் ஞான உபதேசத்திற்கு எதை என்று உறிந்தும்…. 


உரிந்தும் அறிந்தும் எவை என்று புரிய 


பின் புரியா வண்ணம் இருந்தாலும்…. 


இதைத்தன் நிக்காத பின் ஓடினாலும்…. 


எங்கு ஓடினாலும்… 


பின் ஓட ஒழிந்து கொண்டாலும் மனிதனால் என்று புரிய பின் எவை என்று அறிய…. 


===========================
#   உண்மைதனை பொய்யாக்கி.. பொய்யை உண்மையாக்கி…..
===========================


பின் வாழ தெரியாமலே எவை என்று அறிந்து அறிந்து கூட உண்மைதனை பொய்யாக்கி….. 


பின் பொய்யையும்  உண்மையாக்கி… 


அறிந்தும் எவை என்று ஞானத்திற்கு பின் தலைவனாக்கி….. 


அறிந்தும் எவை என்று கூட அனைத்துக்கும் நானாகி….. 


எவை என்று எல்லாம் மனிதனை அறிந்து கூட 


ஆனால் எவை என்று போதித்தது இதையெல்லாம் யார்?


யார் ஆட்டி படைத்தவர்கள்?  


எவை என்று புரிய 


அறிந்தும் பின் யார் ஆட்டி படைப்பவன்? 


என்பதை எல்லாம் உணரவில்லையே….. 


===========================
#   பாவத்தின் தத்துவ நிலை கருப்பு 
===========================


உணரவில்லையே பின் அறிந்தும் எது என்று ஏன் என்றால் எதற்கு எவை என்று கூற பின் பாவத்தின் தத்துவ நிலை… 


****** பாவத்தின் தத்துவ நிலை என்பது கருப்பு ****** 


அறிந்தும் எது என்று அறிய பின்னால் அவ் கருப்பு எவை என்று கூற நிறத்தை எவை என்று கூற முதலில் தொலைக்க வேண்டுமே எவை என்று கூற. 


அவ் கருப்பு எவ்வாறு மாறும்? 


என்பதை எல்லாம் பின் தெரிந்து ஞானத்தை உணர்ந்தவர்கள்… 


அதாவது சித்தர்களே…..  


எவை என்று கூற  சொல்வார்களே…. 


===========================
#  (black கறுப்பை - கருமை நிறம் )  பாவத்தை  நீங்கிவிட்டால்…. 
===========================


****** சொல்லிட்டு பின்னர் கறுப்பை நீங்கிவிட்டாலே அறிந்தும் எது என்று எங்களை காண்பீர்களாக ****** 


******  காண்பீர்களாக எதை என்று கூற உன் கண்களிலே எவை என்று கூற யாங்கள் இருக்கின்றோம் ****** 


******  எப்பொழுது நீங்கள் கண்டு உணர்வீர்களாக எதை என்று கூற ****** 


அனைத்தும் எங்களை தேடி அறிந்தும் தெரிந்து ஓடோடி வருவதில்லை எவை என்று புரிய… 


பின் எங்களை எது என்று கூட காண்பீரே…. 


******  ஆனால் உன் கண்ணுக்குள் இருக்கும் எவை எங்களை எப்படி காண்பீர்களாக நீங்கள் சொல்லுங்கள் பார்ப்போம்?  குழந்தைகளே ****** 


******  காண முடியுவதில்லையே !!!!!! ****** 


ஏன் எதற்கு அறிந்தும் எவை என்று கூற அனைத்தும் எவை என்று கூற மாயம்.. 


******  மாயத்தை எவை என்று மனிதன் பின் அதாவது பின்பற்றி வந்தாலே காண முடியாது  !!!!!! ****** 


******  காண முடியாதே  !!!!!! ****** 


===========================
#  முருகப்பெருமான் ஞான உபதேசம்:- 
===========================
#   “உன் கண்களிலே யாங்கள் இருக்கின்றோம்”
===========================


******  அதனால்தான் எதை என்று உன் கண்களிலே யாங்கள் இருக்கின்றோம் என்று ****** 


******  ஞானத்தை கொடுக்கின்றேன் முதலில் மக்களுக்கு அறிந்தும் கூட ****** 


பின் எதை என்று கூற…


 பின் அஞ்ஞானத்தின் வழியே அனைத்தும் எவை என்று உணர்ந்து 


அதை பெற்று எது என்று அறிய 


===========================
#  குறைகளை எப்போது நீக்க முடியும் ? 
===========================


இதனால் பின் அனைத்தும் 


எவை என்று ஒவ்வொரு ஜீவராசியும் எவ்வாறு குறைகள் உள்ளவைகளாக பிறந்தாலும் அறிந்தும் எது என்று கூட… 


என் தாயும் தந்தையும் அனைத்தும் தெரியும் 


அனைத்தும் தெரிந்து எப்பொழுது பின் தர வேண்டும் எப்பொழுது தந்தால் நன்றாகும் என்பவை எல்லாம் தெரியும். 


அறிந்தும் இதனால் எவ்வளவு போராடினாலும் எவ்வளவு எது என்று வந்தாலும் எவை என்று கூற நாங்கள் என்ன கொடுப்போமோ அதைத்தான் கொடுப்போம். 


எவை என்று கூற பெற்றுக்கொள்ளுங்கள் எதை என்று கூற 


கொடுக்காவிடில்… பின் பக்குவம் இல்லை எவை என்று அறிய.. 


நிச்சயம் நீங்கள் தவறு செய்திருக்கிறீர்கள் என்பதுதான் அர்த்தம். 


எது என்று புரிய பின் நிச்சயம் தன்னில் மீண்டும் எவை என்று கூற… 


அதனால் சிந்திக்க  வேண்டும். 


அவ் சிந்திப்பு இல்லை என்றால் எவை என்று கூற வாழ்ந்தவனும் பிரயோஜனம் இல்லை. 


அறிந்தும் எது என்று கூற அதனால்தான் ஞானத்தை மீண்டும் மீண்டும் சொல்கின்றேன். 


ஞானத்தை முதலில் தந்துவிட்டால்… 


அவ் ஞானத்தை முதலில் தந்துவிட்டால் அனைத்தும் தெரியும்… 


தெரிய வரும் எவை என்று உண்மை எவை என்று பன்மை எவை என்று கூற 


பின் எது என்று கூற பின் உண்மைக்கும் பன்மைக்கும் அறிதல் பின் கருணைக்கும் எவ்வாறு எடுத்து 


எவை என்று கூற ஆற்றலாகவே விளங்குகின்றது பின் என் தாயும் தந்தையும் அருளும் …..


தாயே !!!!!!! தந்தையே !!!!!  எவை என்று புரிய அருளும்… 


இதை ஈந்து எதை அறிந்தும் எவை என்று கூற பெற்றுக்கொள்ளும்…. 


அறிந்து கூட எதை வாங்கி எதை பெற்றுக்கொண்டு 


எதை வாங்கி எதை தருவது என்பதை எல்லாம்…. 


இவை தன் உணர உணர எவை என்று கூட சக்திக்கும் பின் எவை என்று கூற பின் எது என்று புரிய 


பின் சக்தியை எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட தாயே … தந்தையே…. 


எவை என்று அறிய எவை என்று மோட்சத்திற்கான வழிகள். 


எவ்வாறு ஒரு மோட்சம் பெறுவது என்பதை எல்லாம் அறிந்து கூட அதை கூட தெரியவில்லையே மனிதனுக்கு. 


இவ்வாறாக குழந்தைகளே  எவை என்று கூற பின் குழந்தையே அன்பாக எவை பல குறைகள் எவை என்று கூற அவையெல்லாம் நீக்கி விடுவேன். 


ஆனாலும் எதை என்று புரிய… 


ஆனாலும் பின் அவையெல்லாம் நீக்கிவிட்டாலும் அறிந்து கொண்டு வாழ முடியுமா என்றால்? 


நிச்சயம் முடியாது… 


ஏன் எதற்கு எவை என்று கூற 


நிச்சயம் தன்னில் குறைகளை நீக்க முடிந்தாலும்… 


===========================
#  ஞானம் தெளிவில்லை என்றால் வாழ்க்கையில் குறைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்….
===========================


எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட 


****** ஞானம் அதாவது தெளிவில்லை என்றால் எதை என்று கூற குறைகள் மீண்டும் மீண்டும் வந்து கொண்டே இருக்கும்.  ****** 


எதை என்று கூற 


இதனால்தான் ஞானத்தை எவை என்று கூற பின் என்னிடம் எவை என்று கூற மனிதன் எது என்று கூற. 


===========================
#  இறைவனிடத்தில் எதை கேட்பது?  எதை கேட்க கூடாது? 
===========================


இதனால்தான் அறிந்து கூட பின் இறைவனிடத்தில் எதை கேட்பது எதை கேட்கக்கூடாது என்றெல்லாம் சித்தர்கள் பின் வந்து வந்து எவை என்று செப்பிக் கொண்டிருக்கின்றார்கள்…. 


===========================
#  இறைவனிடத்தில் எப்படி வணங்க ஞானங்கள் கிடைக்கும் ?
===========================


****** அமைதியாக நின்றாலே போதும். ****** 


எவை என்று கூற உனக்கு எவை என்று கூற 


******  ஞானம் இருக்கின்றதா?  ****** 


******  இல்லையா?  ****** 


******  என்பதை எல்லாம் நாங்கள் உணர்வோம். ****** 


******  பின் நிச்சயம் தன்னில் ஞானம் இல்லை என்றால் ஞானம் கொடுப்போம். ****** 


******  ஆனால் சில ஆண்டுகள் ஆகும். ****** 


******  அனைத்தும் பின் நடப்பதற்கு. ****** 


அதற்காக அறிந்தும் எவை என்று புரிந்தும் 


அறியாதவை ஒன்றும் கொடுக்கவில்லை எவை என்று கூற பின் எவை என்று அறிய 


******  பின் நொந்தும் பின் எவை என்று கூற பின் மனது எவை என்று கூற பின் கீழான நிலைகளை பின் ஏற்படுத்தவே.. ****** 


அறிந்தும் எதை  என்று புரிய. 


இவ்வாறெல்லாம் ஏற்படுத்த எதை என்று புரிய 


===========================
#  ஒருவனுக்கு என்ன அவசியம் தேவை? 
===========================


பின் ஞானத்தின் பின் வல்லமைக்கு எதை என்று அறிய.. 


எத்தனை எத்தனையோ எவை என்று கூற அவதாரங்கள்… 


எத்தனை எத்தனையோ எவை என்று திருத்தலங்கள் 


எவை என்று புரிய பின் என்னை நோக்கி நோக்கி வருகின்றார்களே எதற்காக?  எதற்காக எவை என்று புரிய?  


குறைகள் தீர்ப்பதற்காகவா ? அறிந்தும் எதை என்று கூற பின் நிச்சயம் தன்னில் கூட. 


இல்லை. 


அறிந்து கூட பின் எவ்வாறு என்பதெல்லாம் குறைகள் பின் வந்து சொல்லுவோர்களும் எவை என்று புரிய நான் நின்று கொண்டே 


பின் எவை என்று புரிய ஞானத்தை கொடுப்பேன் மீண்டும் மீண்டும் ஞானத்தை பற்றியே சொல்கின்றேன். 


******  ஒருவனுக்கு தேவை ஞானம். ****** 


******  பின் மற்றவையில் எவை என்று ஞானம் இல்லாதவனுக்கு எதை கொடுத்தாலும் வீணே. ****** 


எதை எதை என்று புரிந்து கொண்டேன் 


******  இதனால் அவ் ஞானம் இல்லாதவனுக்கு எதை கொடுத்தாலும் எவை என்று கூட பின் அது என்று கூட பின் எதை ஏது என்று புரிய பின் அனைத்தும் எவை என்று தெளிவில்லாமல் ******  


===========================
#  குறைகள் =  மனதில் குறையே அழுக்குகள்
===========================


இதனால் பின் குறைகளை நிறைவேற்றுகின்றேன் வருங்காலத்தில் அறிந்தும் ஏது என்று புரிய எதை என்று அறிய.. 


பின் குறைகள் நிறைவேற்றுகின்றேன்… 


குறைகள் நிறைவேற்றுகின்றேன்…  


என்பது எல்லாம் எக்குறை ஏது என்று குறை செய்து குறை எவை என்று கூற பின் மனதில் குறையே அழுக்குகள் எவை என்று அறிய 


இவ்வாறாக பின் மனதில் எவையாக எதை என்று ஒரு ஓரத்தில் எவ்வாறு என்பதை எல்லாம் நின்று குனிந்து பார்த்தாலும்… 


பின் மனதில் பின் எவ்வளவு மனிதனுக்கு ஏது என்று புரியவில்லையே 


புரிந்தும் எதை என்று அறிய ஆசிகளோடு… 


===========================
#  நல் சக்தி எது ? 
===========================


ஆசிகளோடு எமையே வணங்கி வணங்கி எவை என்று அறிய மனிதர்கள்… 


அறிந்தும் இவை தன் அறியாத வகையிலும்… 


என்ன ஏது என்று புரிய புரியாத வகையிலும் நின்றாலும்.. 


பின் அனைத்திற்கும் சமமாக விளங்குவது எது?  


எவை என்று புரிய ஞான சக்தி ? 


எவை என்று புரிய  கிரியா சக்தி ? 


எதை என்று புரிய போற்ற சக்தி  ?


எவை என்று புரிய எவை என்று அறிய நிச்சயம் தன்னில் கூட 


பின் எது என்று அறிய நிச்சயம் நல் சக்தி? 


எவை என்று அறிய 


எவை என்று நல் சக்தி என்பவை ஏது என்றெல்லாம் மனிதனுக்கு தெரியவில்லை. 


அறிந்தும்  கூட ஞானம் தான் நல் சக்தி எது என்று அறிய 


===========================
#  தீய சக்தி எது ? 
===========================


நிச்சயம் ஞானம் இல்லோன் பின் தீய சக்தி எதை என்று கூற 


பின் எவை என்று புரிய 


பின் தீய சக்திக்கு எதை கொடுத்தாலும் எவை என்று புரிய பின் அழித்துக்கொள்வான். 


===========================
#  ஞானத்தை பெற்று, முதலில்  எதனை வெற்றி கொள்ள வேண்டும் ? 
===========================


பின் எவை என்று புரிய பின் அதனால்தான் சொல்லிவிட்டேன். 


எதை என்று அறிய 


இன்னும் இன்னும் சித்தர்கள் எவை என்று புரிய புரிய வைத்து அறிந்தும் பல வகையில் கூட பின் ஞானத்தை பெற்று எவை என்று அறிய பின் வலம் வந்து 


****** மனிதனே பின் உன்னை நீ வெல்வாயாக முதலில். ****** 


உன்னை வென்று விட்டால்… 


===========================
#  எப்படி வெற்றி கொள்வது ? 
===========================


எதை என்று உன்னை என்று வென்று எப்படி ஏது என்று அறிய எதை என்று கூற உன்னை எப்படி நீ வெல்வது என்றெல்லாம் ஞானத்தின் எவை என்று கூற 


பின் தற்பொழுது எவை பல பல வழிகளில் கூட ஞானிகள் பின் எழுதும் புத்தகங்களை படித்தாலே…. 


பின் முக்தி நிலை எவை என்று கூற அனைத்தும் தெரியும். 


===========================
#  எச்சரிக்கை :- எப்படி தோல்வி பெறுவதில் இருந்து தப்பிக்கலாம்  ? 
===========================


எவை என்று கூற மனிதன் மனிதருக்குள்ளே பேச்சை கேட்டாலே அப்பொழுதே புத்திகள் பின் அங்கே பின் எவை என்று கூற பின் கீழே போய்விடும்… 


எவை என்று கூற ஞானத்தின் எவை என்று ஞானிகள் எழுதி வைத்த புத்தகங்களை படித்தாலே ஞானம் அதிகமாகும்…. 


இதுதான் அறிந்தும் புரியும்.. 


இதுதான் பின் தொகுப்பு.. 


அனைத்தும் தொகுப்பு.. 


மனிதன் தொகுப்பு எதை என்று பின்னி பிணைந்துள்ளதே எவை அறிய புரிய அறிந்து கூறப்பின்…. 


===========================
#  பந்து போல மனிதனின் வாழ்க்கை. 
===========================


ஒரு பந்தை போலே அறிந்து கூற பின் 


அதாவது காற்று உள்ளே 


எதை என்று கூறப்பின் சிறிதாக 


****** எவை என்று கூறப்பின் என் தந்தையானவர் பின் ஊசியால் குத்துவிட்டாலே முடிந்துவிடும் வாழ்க்கை. ****** 


எவை என்று ஏன் எவை என்று புரிய நிச்சயம் தன்னில் கூட அப்பந்து எங்கெங்கு செல்கின்றது? 


எவை என்று புரிய பின் எவை என்று தேய்ந்து அறிந்தும் கூட எவை என்று கடைசியில் பின் இறைவனை தேடி வருகின்றது. 


முதலிலே எவை என்று கூற 


பின் அறிந்து கூற பின் நல் மனதாக பின் அறிந்தும் 


இவை தன் ஞான உபதேசத்திற்கு பல வகைகளில் கூட பின் சித்தர்கள் பின் இருக்கின்றார்கள். 


அதை மேற்கொண்டு பின் பல வகையில் கூட நன்மைகள் அறிந்தும் எது என்று அறிய …


பின் இதனால்தான் இதிகாசங்கள் பல பல வகைகள் கூட 


பின் எது என்று புரிய பின் இப்படித்தான் வாழ வேண்டும் 


எது என்று ஒவ்வொருவாக பின் அதாவது பின் இந்திர லோகத்திலிருந்து பின் ஒவ்வொருவராக பின் மனிதர் குலத்திற்கு வந்து பின் எடுத்துக்காட்டாக விளங்கினார்களே… 


******  அதையாவது எவை என்று தெரிந்து கொண்டு ****** 


******  அறிந்து கொண்டு ****** 


******  இவ்வாறாக வாழ்ந்தால் மட்டுமே ****** 


******  கலியுகத்தில் வெற்றிக் கொள்ள முடியும் மனிதனே…******  


இல்லை என்றால் அறிந்து கூட 


துன்பத்திற்கு ஆளாகி 


எவை என்று கூற வாழ்க்கையும் கெடுத்து 


எவை என்று கூற அதாவது தன்னையும் கெடுத்து 


எவை என்று கூற எவை என்று மற்றவர்களையும் கெடுத்து கெடுத்து வாழ்வானாகவே… 


இவ்வாறு உண்மைதனை அறிந்தும் இதைத்தன் புரிய பின் எவ்வாறு என்று போற்றி அறிந்து கூட 


===========================
#  முருகப்பெருமான் தாய் , தந்தையை பலமாக அடியவர்கள் அனைவருக்காகவும் உள்ளம் உருகி வேண்டுதல்…
===========================




****** என் தந்தையை !!!!! ****** 


******  தாயே !!!!!! ****** 


எவை என்று கூற  போற்றுகின்றேன்… 


இவர்களுக்காக அறிந்து கூட பின் எவை என்று புரிய 


பின் உள்ளம் உருகி வாருங்கள் 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


எவை என்று கூற சில குறைகளை பின் போக்குவாயாக 


நம்பி வந்துவிட்டார்கள் எனையே எது என்று அறிய 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


பின் உங்கள் அருள் இல்லாமல் பின் யான் வரத்தை கொடுத்தாலும்… 


அதை நிச்சயம் தன்னில் அறிந்தும் எவை என்று புரியாமல் போனதே… 


அதனால் நிச்சயம் தன்னில் கூட வந்து விடுங்கள்… 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


தெரியாமலோ தெரிந்தும் எவை என்று பல தவறுகள் 


எவை என்று கூற பின்  என்றால் பின் மனிதன் என்றால் பின் தவறுகள் ஏதோ ஒரு விதத்தில் செய்கின்றானே…. 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


உம்முடைய அருளாலே எவை என்று அனைத்தும் நடக்கட்டும் இவர்களுக்கு… 


ஏதோ எதோ பிரச்சனைகள் எவை என்று புரிய நிச்சயம் மனிதனுக்கு 


எவை என்று அருள் தா !!!!!!  தா !!!!!! 


எதை என்று கூற பின் எது என்று புரிய பின் அதாவது எவை என்று புரிய 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ******  


பின் உங்களின்றி எதை என்று கூற பின் ஏது என்று புரிய அனுவும் அசையாது என்றெல்லாம் 


பின் ஏற்கனவே ஏனைய சித்தர்கள் சொல்லிவிட்டார்கள் 


இதனால பின் உன்னை பின் எவை என்று புரிய என்னை நம்பி.. நம்பி… இவ் மாதத்தில் வந்து கொண்டே இருக்கின்றார்கள்…. 


எவை சுமந்து சுமந்து? 


பாவத்தை….. 


இதனால் எவை என்று கூற 


அதை தடுத்திட அருள்  தா…. தா ……


எவை என்று புரிய பின்


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


உமையே பணிகின்றேன் 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


 எதை என்று கூற எங்கும் நிறைந்தவளே 


எவை என்று கூற பின் எங்கும் இருப்பவனே 


அறிந்தும் எதை என்று கூற பின் நிறைந்த பின் எவை என்று கூற 


பின் யான் அருள் தந்தாலும் 


ஆனாலும் நீ எவை என்று கூட அதை தன் எவை என்று உருவாக்கி 


பின் அதற்கு நிச்சயம் தன் உயிர் ஊட்டுவனே நீயே 


******  தாயே !!!!!!  ****** 


******  தந்தையே !!!!!! ****** 


நிச்சயம் தன்னில்  அருள் தருகின்றேன். 


உயிர் ஊட்டுவாயாக. 


ஆசிகள். ஆசிகள். 


மீண்டும் உரைக்கின்றேன். 


இன்னும் பல வழிகளில் கூட தாய் தந்தையோடு ஆசிகள்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment