​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 14 September 2026

சித்தன் அருள் - 2313 அன்புடன் அகத்தியர் - காசி வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் 08/09/2026  அன்று காசியில் உரைத்த வாக்கு

===========================
#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின், பொற்  கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, நல் விதமாகவே, அப்பனே, ஆசிகள் அப்பனே. 

மனிதனுக்கு அப்பனே, இன்னும் அப்பனே, கலியுகத்தில் வாழ திறமைகள் இல்லையப்பா. 

===========================
#   வெற்றியின்  ரகசியங்கள் 
===========================

அப்பனே, இத்திறமைகள் வளர்த்துக்கொள்ள, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. மாறுபட்டவன் அல்ல…

***** அப்பனே, எப்பொழுதும், அப்பனே, ஒன்றே. ***** 

*****  இதைத்தன் அறிந்தவன், அப்பனே, கலியுகத்தில் வெற்றி கொள்ளுகின்றான். ***** 

*****  அறியாதவன், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, மனக்குழப்பங்களோடு வாழ்ந்து, அப்பனே, ஏது என்று தெரியாமலே, அப்பனே, சென்று மீண்டும் வந்து கொண்டே இருப்பான் அப்பனே.  ***** 

இதனால் என்ன பயன்? 

அப்பனே அதனால்தான், கலியுகத்தில், அப்பனே, எப்படி எல்லாம் இறைவனை காண்பது? என்பதையெல்லாம், அப்பனே, சித்தர்கள், அப்பனே, பின் வந்து, அப்பனே, மனிதனுக்கு தேவையானதெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே வருகின்றோம். 

இதைத்தன் சரியான, அப்பனே, பின் முறையில் பயன்படுத்தி, அப்பனே, பின் நல் விதமாகவே, அப்பனே, பின் எதை புரிந்தும், அளவிற்கும் கூட, அப்பனே, புண்ணியங்களை…

***** அப்பனே, கலியுகத்தில், பின் மனிதனின் புண்ணிய கணக்கு குறைத்துக் கொண்டே போகின்றது அப்பா, எதை, எதை என்று புரிய, அப்பனே. ***** 

*****  இதனால், சித்தர்கள், யாங்கள், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, புண்ணிய கணக்கை சிறிதளவு கொடுத்து, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, பின் பாவக்கணக்கை உணர்வதற்கான வழிகளையும் செய்து கொண்டிருக்கின்றோம், அப்பனே. ***** 

*****  இவ்வாறாக, உணர்தல், அப்பனே, வெற்றியின் சிறப்பு என்பேன் அப்பனே.  ***** 

===========================
#   அண்ணாமலையில் வாழ்ந்த ஒரு சந்நியாசியின் கதை…..
===========================

இதனால், பல வகையிலும் கூட, அப்பனே, எதை என்று புரியாமலும் கூட, அப்பனே, அண்ணாமலையில், அப்பனே, நிச்சயம் தன்னில், அப்பனே, பின் ஒரு  சந்நியாசி, எது என்று புரியாமலும், எது என்று அறியாமலும்…. 

அதாவது, இது ஒரு 50 வருடங்களுக்கு முன்பு தான் நடந்தது. இதனால், அங்கே அமர்ந்தான். 

எப்பொழுதும், அதாவது, பின் சுற்றித் திரிவது… 

அதாவது, நமச்சிவாய, நமச்சிவாய என்று சொல்வது, மீண்டும் அங்கே அமர்வது..

அதாவது, இந்திரலிங்கத்தின் அருகே அமர்வது. 

===========================
#   சந்நியாசியின் வேண்டுதல்..
===========================

இவ்வாறாகவே, ஆனாலும், பின் யோசித்தான், 

***** அண்ணாமலையாரே !!!!! ***** 

அறிந்தும், இத்தனை நாட்கள் உன்னை நம்பி இங்கே இருந்தேன், பின் ஏதும் செய்யவில்லை, என்ன லாபம் ????? 

இதனால், என் எதை கடை நாள் எப்படித்தான் போகப் போகின்றது ????? என்பதெல்லாம் தெரியவில்லை. 

அதேபோல், நீ மட்டும் தான் துணை. 

யாரும் துணை இல்லை. 

அறிந்தும், எவை என்று புரிய, ஆனாலும், எப்பொழுதும், எங்கெங்கோ சென்று, எதையோ, பின் தர்மமாக, பின். இவைத்தன் அறிய, ஏதாவது கொடுத்துக்கொண்டே இருக்கின்றாய். 

ஆனாலும், எப்படி, இப்படியாக, ஆனால் ஒரு முறை மட்டும் தரிசனத்தை காட்டு என்று…. 

ஆனாலும், இதைத்தன் எவ்வாறு என்பதையெல்லாம் மீண்டும் இவ்வாறாகவே அறிந்து, அறிந்து சுற்றிக் கொண்டே இருந்தான். 

***** அண்ணாமலையாரே !!!!! ஒருமுறையாவது தரிசனம் கொடு.  ***** 

*****  தரிசனம் கொடு  !!!!! ***** 

*****  ஒருமுறையாவது தரிசனம் கொடு !!!!! ***** 

===========================
#   அன்னை பார்வதி தேவியின் உரையாடல் 
===========================

ஆனாலும், இவன் ஏது என்று புரிய, இதனால், நிச்சயம், அதாவது, பார்வதி தேவியும்…. உனக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றான். 

உனையே, அதாவது, எதுவும் தேவையில்லை என்று, அனைத்தும் விட்டுவிட்டு, இங்கே அமர்ந்து, நீதான் வேண்டும் என்றெல்லாம், பின், அதாவது, அறிந்தும், எவை புரிய, இவைத்தன் உணர. 

இதனால், பின் பார்வதி தேவியும்…

===========================
#   தந்தை அண்ணாமலையார் உரையாடல் 
===========================

பின் நிச்சயம், பின் அம்மையே அறிந்தும், இவைத்தன் , பின் தேவியே, நில்லும், 

எவ்வாறு என்பதையெல்லாம் பார்ப்போம். 

இன்னும் என்னதான், பின் செய்கின்றான் என்று பார்ப்போம் என்று. 

பின், ஆனால், அறிந்தும், தேவியே, அதனால், இதைத்தன் உணர்ந்து, இவைத்தன் மேல் லோகத்திலிருந்து.

அதாவது, இப்பொழுது, என் பக்தனுக்காக, அதாவது, என்னையே வாழ்ந்து கொண்டு, என்னையே நினைத்து, வாழ்ந்து கொண்டிருக்கும் என் பக்தனுக்காக, கீழிறங்கி போகின்றேன். 

பார்ப்போம்…

எவ்வளவு, எப்படி, பின் கண்டுபிடிக்கின்றான் என்றெல்லாம். 

===========================
#   தந்தை அண்ணாமலையார் ஒரு சாதுவாக வந்து உரையாடல் 
===========================

இதைத்தன் எவ்வாறு சுலபமாக, அதாவது, மீண்டும், இவனைப் போலே////

ஒரு சாதுவாக வந்தான் ஈசனாரும், இவைத்தன் அறிய.

ஆனாலும், இவைத்தன் மீண்டும், அறிந்தும், இவைத்தன் புரிய.

இந்திரலிங்கத்தின்  அருகில் வந்து, 

***** பின் முதியவனே, என்ன வேண்டும்? *****  

எதை புரிய, யானும் உன்னை பார்த்துக் கொண்டே இருக்கின்றேன். 

ஆனால், ஏதோ, நமச்சிவாய !!!!! என்று சொல்வது…. 

அண்ணாமலையாரே  !!!!!   எனக்கு தரிசனம் கொடு என்று சொல்வது…..

ஏன், பின் அண்ணாமலை உன் தந்தையா என்று?????

ஏது என்று புரிய, முழி முழித்தான். 

அடடா, இப்படி யாரும் கேட்கவில்லையே !!!!! 

இவன் யார் கேட்பது??? 

என்றெல்லாம் மனதில் தோன்றி, அவை எவை என்று கூற….. 

ஆனாலும், இவன் தன் அறிய, அதாவது, பின் மடையனே !!!!! நீ யார் கேட்பதற்கு என்று, அதாவது, இவ் பின் சந்நியாசியும் கூட. 

இவைத்தன் , அதாவது, சிரித்தான். பலமாக.

யானும் ஒரு சந்நியாசிதான். 

இதனால், ஈசன் கிட்டவா போகின்றான்? 

எதை என்று, நமச்சிவாய !!!!! என்று சொல்கின்றாய்…..

தரிசனம் கொடு என்று சொல்கின்றாய்….. எப்படி, எதை அறிய? 

அதாவது, பின் மடையனே !!!!!  அமைதியாக இரு. 

எனக்கும், அதாவது, அண்ணாமலையாருக்கும் இருக்கும் சந்தர்ப்பம், அதாவது, பின் அறிந்தும், இவைத்தன் சொந்தம்… நீ அறிவாயா என்று?

பலமாக சிரித்தான்…. அதாவது, ஈசனார்.

நிச்சயம் அறிந்தும், எவை, அதாவது, பின் இதைத்தன் அறிய, யாங்கள் இருவருமே சொந்தக்காரர்கள். 

அதனால், நீ யார் கேட்பது என்று? 

பலமாக சிரித்தான். 

ஓ !!!!! 

இறைவனே, இதைத்தன் எவ்வாறு உணர்ந்தும், அளவிற்கும் கூட, எதைத்தான் புரியாமல், பின் இருக்கும் வரைக்கும் கூட, அழகாக, பின் இவன் மனது குழம்பி, குழம்பி, குழம்பி, குழம்பி, எதை என்று கூட, 

மடையனே !!!!!

மடையனே  !!!!! 

என்றெல்லாம் திட்டிக் கொண்டிருந்தான் ஈசனை !!!!! 

ஆனாலும், ஈசன் பலமாக சிரித்தான். 

மீண்டும் ஒருமுறை, மடையனே !!!!! 

இவ்வளவு திட்டுகின்றேனே, இவைத்தன் எவ்வாறு என்பதையெல்லாம் உனக்கு கோபமே வரவில்லையா என்றான். 

இவைத்தன் எவ்வாறு?  இதைத்தன் உணர, ஆனாலும், பின் இதைத்தன் அறிய, கோபமும்  வரவில்லை. 

===========================
#   தந்தை அண்ணாமலையாருக்கு எப்போது சந்தோஷம் உண்டாகும்?
===========================

***** அதனால், எனக்கு அன்பானவர்கள், மிகவும் அன்பானவர்கள், பின் என்னை எப்படி, பின் திட்டி தீர்த்தாலும், யான் சிரிப்பேன். ***** 

ஏனென்றால், பக்குவம் வந்துவிட்டது….பக்குவம் வந்துவிட்டது. 

*****  எப்பொழுது என்னை திட்டி தீர்க்கின்றார்களோ, அப்பொழுது எனக்கு, பின் மிகவும், பின் சந்தோஷம். ***** 

*****  ஏனென்றால், பக்குவம் அடைந்து விட்டார்கள் என்றெல்லாம், ***** 

பின் இவைத்தன் நிச்சயம் தன்னில் கூட, 

*****  பக்குவம் அடைந்தவர்கள், மீண்டும், இறைவன் எங்கு இருக்கின்றான்? *****  

*****  எப்படி? ***** 

*****  ஏது? என்றெல்லாம், பின் தேடுவார்கள். ***** 

===========================
#   எப்போது பாவக்கணக்கு கரைகின்றது…..? 
===========================

அதாவது, பக்குவம் உள்ளவர்கள், பின் இறைவன் எதை, இவ்வளவு எதையும் செய்யவில்லையே????

இவ்வளவு ஆகிவிட்டதே??? 

எவ்வளவு எதை என்று பொறுத்து…

இவ்வளவாக, பின் கீழ் தரமான நிலையில் சென்றுவிட்டோமே என்றெல்லாம், 

***** அப்பொழுதுதான், பின் பாவக்கணக்கு, பின் கரைகின்றது என்றே அர்த்தம். *****

 
ஆனாலும், இதைதன் எவ்வாறு மனிதனுக்கு புரிவதே இல்லை. 

===========================
#   திருவிளையாடல் ஆரம்பம்…..
===========================

இதனால்தான், மீண்டும், மடையனே !!!!! என்றான். 

பின் உனக்கு எவ்வளவு சொல்லியும் அறிவில்லை, 

மடையனே  !!!!!  

அதாவது, நீ என்ன செய்கின்றாய் என்று? 

ஈசனாரும் அழகாக, யான் என்ன செய்வது? 

நீயாவது, அதாவது, ஈசன் என் சொந்தக்காரன் என்று சொல்கின்றாய். 

ஆனால் எனக்கு யார் சொந்தம் என்றே தெரியவில்லை. 

மடையனே !!!!! வந்து அமர். 

உனக்கு சில ரகசியங்களை சொல்லித் தருகின்றேன். 

அதை வைத்துக்கொண்டு, பிழைத்துக்கொள் என்று. 

ஆனாலும், ஏதோ எவை என்று புரிய, அமர்ந்தார். 

அமர்ந்தார், ஈசனாரும். 

இவைத்தன் அறிய, அப்பனே, எவ்வாறு இதைத்தன் உணர்ந்து, உணராமைக்கும் காரணங்கள் பலப்பல. 

இதனால், இப்பொழுது, நிச்சயம் தன்னில், அதாவது, பின் யானும் இங்கே அமர்ந்திருக்கின்றேன். 

நமச்சிவாயா  !!!!! 

அண்ணாமலையரே  !!!!!...

காட்சி கொடு என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். 

அதை நீயும் கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றாய். 

ஆனாலும், கண்ணுக்குத் தென்படவில்லை. 

ஆனால் நீயும் யாருமில்லை என்று சொல்லிவிட்டாய். 

யானோ, எப்படியோ, யான் ஏதாவது, பின் உண்ணுவிட்டு, உறங்கி விடுவேன். 

அதாவது, நீ எப்படி இங்கெல்லாம் அலைந்து திரி.

ஏதோ, ஏதோ, உணவு கொடுத்தால், பின் உணவு கொடுத்தால், பின் அறிந்தும், எவை, ஏதோ ஒன்று கொடுத்தால், அதை நிச்சயம், ஏதோ ஒன்று வாங்கிக்கொண்டு, உட்கொண்டு, எங்கேயாவது படுத்து விடு. அதுவே போதும். 

இதனால், எதை அனைவருக்கும், இவனே துணை. 

இதனால் யாரும் இல்லை என்று நினைத்து விடாதே என்றெல்லாம். 

சரி. அதாவது, எனக்கு பசிக்கின்றது என்று, இவைத்தன் , பின், அதாவது, ஈசன் கேட்க, அடடா, எதை, பின் எனக்கும் பசிக்கின்றது போல் இருக்கின்றது. 

ஏனென்றால், இவ்வளவு நேரம் பேசிவிட்டோம், வாக்கு வாதங்களாக. 

இதனால், நாம் இருவரும் சேர்ந்து, அங்கங்கு தரிசனம், இவைத்தன் , பின், அதாவது, செய்வோம் என்றெல்லாம்.

மலையை சுற்றினர். ஆனாலும், யாரும், அதாவது, உணவு கொடுக்க வரவில்லை  அன்று.

இதுவும், ஈசன், அதாவது, லீலையே…..

இவைத்தன் ஆனாலும், இதைத்தன் உணர்ந்து, உணர்ந்து, திரிந்து கொண்டே இருந்தார்கள். 

ஆனாலும், இன்று பட்டினித்தான். அதாவது, சந்நியாசி சொன்னான்.  இன்று பட்டினித்தான். அவ்வளவுதான். 

ஏதோ, அதாவது, பின், இவைத்தன் , இப்படித்தான் இருக்கும் இப்பூமி, 

அதாவது, கிடைக்கும் பொழுது, பின், அதாவது, பிடித்துக் கொள்ள வேண்டும். 

கிடைக்காத போது, அமைதியாக இருக்க வேண்டும். 

இதனால் என்ன, ஏது என்று புரிய. 

இதனால், அழகாக, அறிந்தும், இவைத்தன் , நிறைய மலையை சுற்றிக் கொண்டே, ஒரு இடத்தில் உறங்கி விட்டனர். 

அதுதான், இப்பொழுதும், வாயுலிங்கமாகவே. 

அங்கு உறங்கி, இதைத்தன் அறிய, மீண்டும், பசி, பசி, பசி என்று, ஈசனார், 

இவைத்தன் அட, மடையனே !!!!! இப்படி எல்லாம், பின் இருப்பது, எவை, எது என்று, யாருமில்லை சொல்கின்றாய். 

ஆனால், பசி, பசி என்று சொல்லிக்கொண்டே இருக்கின்றாயே. 

எப்படி, எதை புரிய, இத்தனை நாள், எப்படி வாழ்ந்தாய்? 

சரி வா, காட்டுக்கு செல்வோம், பழங்களை பறிப்போம். எப்படி, எவை என்று புரிந்தும் கூட, இதனால், காட்டுக்கு , அதாவது, உள் சென்றார்கள். இதைத்தன் அறிய, 

ஆனாலும், சில பழங்கள் பறித்து, அது சந்நியாசி, ஈசனுக்கு கொடுத்தார். 

அழகாக, அறிந்தும், நன்றாக இருக்கின்றது, நன்றாக இருக்கின்றது என்றெல்லாம், ஈசனாரும் கூட, 

இவைதான் எவ்வாறு? 

ஆமாம், நன்றாக இருக்கின்றது. ஏதோ, இப்பொழுது பழம் இருக்கின்றது, கொடுத்துவிட்டேன். 

ஆனால், சில சில சில மாதங்களுக்கு, இவைதன் வற்றிவிடும். 

எவ்வாறு? அதாவது, நீரும் வற்றிவிடும்.

அனைத்தும் வற்றிவிடும். எவ்வாறு? மீண்டும், காலங்கள் அறிந்தும் கூட, 

இவ்வாறாகவே, எதை புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் கூட, அதாவது, நீ சென்றுவிடு, எங்கேயாவது, உனக்கு உணவு கிடைக்காது என்றெல்லாம், 

அப்பனே, இதைத்தன் அறிய, அதாவது, அவ் சந்நியாசியும் கூட. 

ஆனாலும், நிச்சயம் யான் இங்குதான் இருப்பேன். இங்குதான் இருப்பேன் என்றெல்லாம், இவைத்தன் அறிய. 

இவ்வாறாக, அழகாக, இதைத்தான்.

===========================
#   கலியுகத்திலும் ஈசனாரின் திருவிளையாடல் நடந்து கொண்டே..
===========================

***** ஆனாலும், இவ்வாறுதான், நிச்சயம் தன்னை கூட, பின், அதாவது, மனிதர்களோடு, தெய்வம், கலியுகத்தில், விளையாடிக் கொண்டே தான் இருக்கின்றது. ***** 

***** ஆனால், மனிதன் தான், அதை எப்பொழுதும் கவனிப்பதே இல்லை. அப்பா, நிச்சயம் தன்னில் கூட, ***** 

*****  உண்மையான ஞானம், அன்பும் இருந்தால், நிச்சயம் இறைவன், பின், உங்களிடத்திலே, விளையாடுவான் என்பேன் அப்பனே, மறைமுகமாக, ***** 

*****  உங்களையே, பின், மறைத்து,  அப்பனே, இவை போலே, எதை என்று, ***** 

===========================
#  ஈசனாரின் திருவிளையாடல் தொடர்கின்றது சந்நியாசியிடம்…
===========================

மீண்டும், ஈசனார், எனக்கு இங்கிருந்து செல்வதற்கு மனமில்லை. இதனால், இங்கேயே தங்கி விடுவோம் என்று.

இதனால், எதை என்று புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில், எவ்வாறு என்பதையெல்லாம், தங்குவதற்கு, இடங்கள் இருக்கின்றதா? எவை தன் இங்கு, மழை வந்தாலும், அவ்வளவுதான். 

திடீரென்று, மழை வரும், என்னென்னவோ வரும், பின், எவை, ஏது என்று புரிய. 

இதனால், அனைத்தும் தாங்கிக் கொள்ள முடியாது. 

அங்கேயே சென்று விடுவோம் என்று. அதாவது, பின், இவ் சந்நியாசியும் கூட, 

அதாவது, ஈசனாரும், எவை என்று புரிய. 

அழகாக, இதைத்தன் அறிய, உண்மைதனை ஏற்று, நிச்சயம் இங்கேதான் நாம் இருக்கப் போகின்றோம் என்றெல்லாம், இதைத்தன் அறிய. 

ஆனாலும், இவைத்தன் மாற்றமடைய, நிச்சயம் நீ கேட்கப் போவதில்லை. 

இதனால், யான் செல்கின்றேன். நீ இங்கே இரு என்று. எவை என்று கூற, இறைந்து, 

மீண்டும், ஈசனார், மடையனே !!!!! என்றான். 

என்னையா  மடையன் என்று சொல்கின்றாய்? 

உன்னை, பின், மடையன்  !!!!!  என்று சொல்கின்றேன். 

சொல்லிச் சொல்லி, நீயும் என்னை, மடையன்  !!!!!  என்று சொல்கின்றாயே என்று, கையை ஓங்கினான். 

===========================
#  மடையனுக்கு கிடைத்த இறைவன் தரிசனம் 
===========================

அறிந்தும், கையை பிடித்தான், ஈசன். 

பின், அணைத்துக் கொண்டான். எதைத்தான் புரிய, 

***** எவ்வாறு என்பதையெல்லாம், பின், தெரிகின்றதா?  மடையனே !!!!! என்றெல்லாம் ***** 

*****  மடையனே  !!!!!  தெரிகின்றது. வந்தது யார் என்று, செல்லமாக, எவை என்று, அழுது புலம்பினான்.***** 

எவை என்று கூட, இத்தனை நாட்கள், எவ்வாறு என்னுடன் இருக்கின்றாயா? உன்னை, மடையன் என்று சொன்னேனே என்றெல்லாம், நிச்சயம் தன்னில்.

===========================
#  அன்பே சிவம்………
===========================

ஈசனாரும், எவை புரிந்துகொள். 

***** அதனால், அன்பின் மூலமாக, என்னை எதைச் சொன்னாலும், யான் நிச்சயம் சந்தோஷப்படுவேன். ***** 

*****  ஏனென்றால், ஒவ்வொரு எதை என்று புரிய, பின், எதை என்றறிய, நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும், இவ்வாறு, பக்திமான் தான் எனக்கு தேவைப்படுகின்றான் என்பவை எல்லாம். ***** 

===========================
#  என் செல்ல மடையனுக்கு என்ன வரம் வேண்டும் ?
===========================

இதனால், உனக்கு என்ன வேண்டும், மடையனே என்று ?????

மடையனே என்று, எவை என்று கூறு இருவரும், பின், அதாவது, தாய், தந்தை, தாயும், அதாவது, தந்தையும், எவை, என்று கூற , மகனும், உறவு போலே, பின், பேசிக் கொண்டிருந்தனர். 

இதனால், அறிந்தும் கூட, அதனால், செல்கின்றேன். 

காட்சி அளித்து விட்டேன் என்று, உன்னுடன் பல நாட்கள் இருந்துவிட்டேன் என்று, 

அடடா, இவைத்தன் அறிய, பின், இப்பொழுதே, எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, எவ்வாறு உண்மைதனை என்பதை எல்லாம், யான் இங்கேயே இருக்க வேண்டும். 

உன்னை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும். 

இதனால், இதைத்தன் அறிய, உன் கூடவே, யானும் வருகின்றேன் என்று. 
பின், இவைத்தன் அறிய. 

வேண்டாம். அதாவது, இவைத்தன் , நீ இங்கேயே, எதை என்று புரிய. 

இதனால், பின், அழுது புலம்பி போதும்…. மனித வாழ்க்கை. 

அதனால், உன்னுடனே, அழுத்து செல், என்னையும் கூட என்று, எவை என்று புரிய. 

இவ்வாறாகவே, அழகாக, இவைத்தன் இங்கே இரு. 

இதனால், மீண்டும் கேட்கின்றேன், உனக்கு என்னதான் தேவை? 

அதாவது, அழைத்துக் கொண்டே இருந்தாய். அழகாக, 

நமச்சிவாயா !!!!!  

அண்ணாமலையரே !!!!! 

என்றெல்லாம்…… 

ஆனாலும், வந்துவிட்டேன்.  பின், காட்சிகளும் கொடுத்துவிட்டேன். 

இன்னும் என்ன தேவை என்று? 

===========================
#  ஈசனாரின் செல்ல மடையன் கேட்ட வரம்
===========================
# இந்திர லிங்கம் ரகசியங்கள் 
===========================

இதைத்தன் அறிய, மீண்டும், எவ்வாறு என்பது, இதனால், என்னை ஒரு கல்லாக்கி…அழகாக, எதைத்தன் அறிய , இந்திரலிங்கத்தில் வை. 

இதனால், நல்மனதோடு, எதையாவது புலம்பிக் கொண்டு வருவோருக்கெல்லாம், எதை என்று கூற  அறிந்தும் கூட, பின், என்னை எவை அறிந்தும் கூட, இறைவன் எவ்வாறு கலியுகத்தில் வருவான் என்பதை எல்லாம், பின், பாவத்தைப் போக்கி… 

நிச்சயம் தன்னில் அறிந்தும், பின், ஏது என்று, உனக்கு, உனக்கு எப்படி, எவ்வாறாக செல்லலாம் என்று, வழிகாட்டினேனே….. 

அதே போலே, அனைவருக்கும் வழிகாட்ட வேண்டும். 

இதனால், எப்பொழுதும், வழிகாட்டியே இருக்க வேண்டும். 

இதனால், என்னை கல்லாக்கு, அங்கே போய் வை என்று.

இதுதான் என்னுடைய கடைசி. எவை என்னுடைய ஆசையும் கூட.

ஆசையும் இல்லை. எப்பொழுதும் நீ இருக்கின்றாய் என்று, 

இவைதான். அதாவது, ஈசனாரும், அழகாக, நிச்சயம் அதேபோல் ஆக்குகின்றேன். 

===========================
# அனுதினமும் இந்திர லிங்கத்தில் -  இரவு 10 முதல் 12 மணி வரை ஈசன் தரிசனம் கிடைக்கும் ரகசியங்கள்
=========================== 

அனுதினமும், உன்னை வந்து பார்க்கின்றேன் இரவு. 

அதாவது, சரியாகவே 10, பின், மணி, எவை அறிந்தும்.  12 மணிக்குள்ளவே, நிச்சயம் பார்ப்பேன் அனுதினமும் என்று, 

ஆனாலும், இவன் கேட்டுக்கொண்டான். 

ஆனாலும், உன்னை பார்க்க, அறிந்தும், எவை புரிய. 

அதாவது, சுற்றினேன். ஆனாலும், என்னை பார்க்க, நீ வரவேண்டும் என்றெல்லாம். 

அதனால், என் பணி தொடங்கிக் கொண்டே இருக்கும் என்று… 

அதேபோல், அழகாக, பின், கல்லை ஆக்கினான்  ஈசனும். 

அழகாக, பின், அதாவது, இந்திரலிங்கத்தின் , எவை என்று அறிய, எவை தன்னை அறிய, போல், நிச்சயம் தன்னில் கூட, அடியில், பின், அழகாக, எடுத்து, பின், கல்லை வைத்தான். 

இதனால்தான், செல்பவர்கள் எல்லாம், அங்கு, பின், மனக்குழப்பங்களோடு, செல்வது, செல்பவர்கள் எல்லாம், எப்படியோ, அமைதியாக இருந்தால், ஈசன் அருளும் கிட்டி, ஈசனும், நிச்சயம், எப்படியோ, வந்து பேசிடுவான். 

அதாவது, எவை என்று கூற , பின், இவைத்தன் அறிய, ஒரு வருடமுமோ,, இரு வருடமோ, மூவ் வருடமோ என்று, தொடர்ந்து, அங்கே, பின், அதாவது, பிதற்றுபவர்கள் எல்லாம், எப்படியோ, ஒரு விதத்தில், ஈசன், இப்பொழுதும், பேசிக்கொண்டே தான் இருக்கின்றான். 

*****  பின், எவை தன் உயர்ந்து கொண்டே தான் இருக்கின்றான். ***** 

***** இதுவும், இன்னும், தொடர் கதையாகவே, இன்னும் தொடரும். ***** 

ஆசிகள், அனைவருக்குமே, காசியில்  இருந்தே. 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment