​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 14 September 2026

சித்தன் அருள் - 2311- அன்புடன் அகத்தியர் - சூரத் வாக்கு!






அன்புடன் அகத்திய மாமுனிவர் 07/09/2026  அன்று அஸ்வினி குமாரர்கள் சந்நிதியில் உரைத்த வாக்கு

கூகுள் மேப் லின்க் :- https://maps.app.goo.gl/ZSBQCMZpYPxsxhwv5 

Temple Address:- Vaidraj Mahadev Temple, haridwar comple, Ashwini Kumar Rd, near shreenath ji bethakji, Dharam Nagar Society, Anand Nagar, Surat, Gujarat 395008, India

===========================
#   அன்புடன் அகத்திய மாமுனிவர்  வாக்கு 
===========================

ஆதி சிவசங்கரியின், பொற்  கமலத்தைப் பணிந்து செப்புகின்றேன், அகத்தியன். 

அப்பனே, பல இடத்தில், அப்பனே, பல ரகசியங்கள் உள்ளது என்பேன் அப்பனே. 

அவ் ரகசியங்கள் எல்லாம், அப்பனே, எப்பொழுது மனிதன் உணர்ந்து, அப்பனே, பின் அதாவது உணர்ந்து கொண்டு செயல்பட்டு, அப்பனே, பின் அதன்படியே நடக்கின்றானோ, அப்பொழுது ஏற்றங்கள் உருவாகும்  அப்பனே. 

அதற்கும் புண்ணியங்கள் தேவை என்பேன் அப்பனே. 

===========================
#   உயர்ந்த ஸ்தானத்தை அடையும் அடியவர்கள்….
===========================

அதனால்தான் சித்தர்கள் அருகே வந்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட ஒவ்வொன்றாக காண்பித்து, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட சில மனதுகளை மாற்றி, அப்பனே, உயர்ந்த ஸ்தானத்தை அடைய வைப்பார்கள். 

அப்பனே, இதுதான், அப்பனே. சித்தர்கள் பல வகையான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட உண்மைகள், அப்பனே, இவ்வுலகத்திற்கு கொண்டு செல்வார்கள் என்பேன். 

அப்பனே, சரியாக பயன்படுத்திக் கொண்டு, அப்பனே, உயர்ந்த இடத்தைப் பிடித்துக்கொண்டு, அப்பனே, மக்களுக்கு வருங்காலத்தை தொண்டாட்டுவார்கள் என்பேன் அப்பனே. நிச்சயம் தன்னில் கூட, 

அப்பனே, ஏதும் தேவையில்லை என்றே, அப்பனே, பின் தொண்டுதான், அப்பனே. ஏனென்றால் கலியுகம், அப்பனே, பின் நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல வகையான, அப்பனே, இன்னல்கள், அப்பனே, மாற்றங்கள், அப்பனே, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட முற்றிக் கொண்டே, அப்பனே, வந்து கொண்டே இருக்கின்றது என்பேன் அப்பனே. 

அழிவுகள் எப்பொழுது வலமாக வருகின்றதோ, அப்பொழுதெல்லாம், அப்பனே, முற்றுக்கான, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட வழி என்பதையெல்லாம், அப்பனே, நிச்சயம் எது என்று புரியும். 

===========================
#   திருந்தாவிட்டால்…..
===========================

அதனால்தான், அப்பனே, பின் வாய்ப்புக்காக சித்தர்கள் அனைவரும் வந்து, அப்பனே, பின் திருந்தங்களடா, திருந்தங்களடா என்றெல்லாம், அப்பனே, சொல்லிக் கொண்டிருக்கின்றார்கள் சித்தர்கள் என்பேன் அப்பனே. 

ஆனாலும், அப்பனே, பின் சிலர் பின் ஏற்கிறார்கள்.
 

சிலர், அப்பனே, பின் ஏதோ எவை என்று விட்டுவிடுகிறார்கள் என்பேன் அப்பனே. 

ஆனால் ஏற்றவரை எல்லாம், அப்பனே, நிச்சயம் எங்கள் அருகில் வரவைத்து, அப்பனே, நிச்சயம் பின் ஏற்காதவரை எல்லாம், நிச்சயம் பின் எதை என்று புரிய, அப்பனே, நிச்சயம் ஏதாவது ரூபத்தில் பின் அடித்தும், அப்பனே, நிச்சயம் திருத்துவோம் அப்பனே. 

ஏனென்றால், அப்பனே, சிலர் எவை என்று கூற  திருந்தாத, அப்பனே, பின் சில சில, அப்பனே, மனிதர்கள், அப்பனே, இருக்கின்றார்கள் என்பேன் அப்பனே. 

அவர்களால், அப்பனே, பின் எதை என்று கூட, பின் இவ்வுலகத்திற்கு, அப்பனே, நிச்சயம் தன் கேடுதான் விளைவிக்கும் என்பேன் அப்பனே. 

இதனால்தான், அப்பனே, பின் இறைவன், அப்பனே, ஏனென்றால் அழகாக இறைவன், பின் அதாவது மனிதனை அழகாக அனுப்புகின்றான் என்பேன் அப்பனே. 

ஆனால் எதையெதையோ கற்றுக்கொண்டு, அப்பனே, பின் உலகத்தை, அப்பனே, அழித்துக் கொண்டிருக்கின்றான் என்பேன் அப்பனே. 


===========================
#   ஒவ்வொரு ஆயிரம் வருடத்திற்கு ஒருமுறை வரும் பல வகையான, மனிதனை  கொல்லும் நோய்கள்….. 
=========================== 

வருங்காலத்தில் அதனால்தான், அப்பனே, நிச்சயம், அப்பனே, நோய்கள், அப்பனே, இன்னும் எது என்று புரிய, அப்பனே. 

இதனால், அப்பனே, ஒவ்வொரு, அப்பனே, ஆயிரம், அப்பனே, வருடங்களுக்கு ஒருமுறை, அப்பனே, நிச்சயம் ஒரு, அப்பனே, பின் பல வகையான, அப்பனே, மனிதனை, அப்பனே, பின் கொல்லும் அப்பா நோய்கள் வந்து, அப்பனே. 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, 


இதனால், அப்பனே, ஒரு ஆயிரம் வருடத்திற்கு, அப்பனே, முன்பே எதை புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் இவ்வாறாக, அப்பனே, பின் ஆயிரம் வருடம், ஆயிரம் வருடம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட. 

இதனால், அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் எதை என்று புரிய, அப்பனே, இறைவன் எதை என்று அறிய, அப்பனே. இதனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பல நோய்கள், அப்பனே, இங்கு பின் தவித்துக் கொண்டிருந்தது பூலோகத்தில், அப்பனே. 

இவ்வாறாக, பின் யார் காப்பாற்றுவார் என்றெல்லாம்? 

மனக்குழப்பங்கள், நோய்கள், இன்னும் தரித்திரங்கள், பின்—அதாவது பூலோகத்தில்—சேர்ந்துவிட்டது. 

===========================
#   ஈசனாரே !!!!! காப்பாற்றுங்கள்….
=========================== 

ஆனாலும், இதைத்தன் எவ்வாறு என்பதையெல்லாம், நிச்சயம் தன்னில் அனைத்தும் எவை என்று அறிய, நிச்சயம் தன்னில் அனைத்தும் தேவாதி தேவர்களும், நிச்சயம் ஈசனை சென்று அடைந்தனர். 

நிச்சயம் எவை என்று புரிய, பின் அதாவது ஈசனாரே !!!!! எவை புரிய. 

இவ்வாறாக, நிச்சயம் பூலோகத்தில் அழிவு வந்து கொண்டே இருக்கின்றது. 

எவ்வாறு நீங்கள் காப்பாற்றுங்கள் !!!!! 

எவ்வாறு பின் நீங்கள் தான் காப்பாற்றினால் தான் மட்டுமே, பின் நிச்சயம் இன்னும் பின் சில ஆண்டுகள், அதாவது பல ஆண்டுகள், பல பின் நூறு ஆண்டுகள் இருக்க முடியும் மனிதனால். 

இதனால், ஏதாவது ஒரு வழியும் செய்யும் என்றெல்லாம் தேவார்களும் இன்னும் எவை அனைத்தும் பின் பல வழிகளில் கூட, பின் அனைவரும் சென்றனர் ஈசனிடத்தில். 

இதனால், எதை ஏது என்று புரிய, ஈசனாரும் நிச்சயம் தன்னில் கூட, இவ்வாறாக, நிச்சயம் சில பல ஆண்டுகளுக்கு ஒருமுறை..

இவ்வாறாக ஏதாவது கொடுத்தால்தான், நிச்சயம் தன்னில் கூட, பின் நல்லோர்களை மனிதன் நினைப்பான். 

இல்லையென்றால், தீவை எல்லாம் எடுத்து வந்து, பூலோகத்தை பின் அழித்து, பின்—அதாவது சுற்றும் பூமியை—நிச்சயம் தன்னில் நிறுத்தி விடுவான் மனிதனே எதை என்று. 

அதனால்தான், நிச்சயம் தன்னில் நல்லோர்களும் எவை புரியும் அளவிற்கும் கூட, பல பல வகையில் கூட. இதனால், அனைவரும் பின் அழுது புலம்பினர். 

இவ்வாறாக, பூலோகம் நிச்சயம் எவ்வாறு பல வழிகளில் கூட, இன்னல்கள் அறிந்தும், அறியாத வகையில் கூட, இவ்வாறாக அனைத்தும் தெரிந்ததே…

***** ஈசனாரே !!!!! ***** 

*****  தாயே !!!!! ***** 

*****  தந்தையே !!!!! ***** 

என்றெல்லாம் மண்டியிட்டு, அனைவரும் ஒன்று கூடினர். 

எவ்வாறெல்லாம் ஒன்று கூடி, நிச்சயம் நீங்கள் பூலோகத்தில் நன்மை செய்தால் மட்டுமே, நாங்கள் அனைத்தும் எதை என்று புரிய. 

பின் அவ்வாறாக செய்யவில்லை என்றால், நிச்சயம் நாங்கள் இங்கேயே மடிந்து விடுவோம் என்றெல்லாம். 

===========================
#   உலகம் அறியாத மௌன விரதம் ரகசியங்கள்.
=========================== 

இதனால், பின் எதை தேவலோகத்தில் கடுமையான, பின் ஈசனிடத்தில் முறையிட்டு, அனைவரும் அமைதியாக காத்து, நிச்சயம் தன் மௌனம்… மௌனத்தை தொடர்ந்தனர். 

மௌன விரதத்தை தொடர்ந்தனர் எதை என்று புரிய. 

அதனால்தான், நிச்சயம் தன்னில் இப்பொழுதும் கூட, எதை என்று அறிய, பின் மௌன விரதமாகவே ஒவ்வொரு எவை என்று கூற  மனிதன் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றான். 

***** ஆனால் எதற்காக என்றால், நிச்சயம் தன்னில் கூட மற்றவர்களுக்காக, நிச்சயம் தன்னில் கூட அனைத்தும் நல்லதாக, பின் நடக்கட்டும். ***** 

*****  தன் உடம்பிற்கும் அனைத்தும் என்று, பின் இருப்பதே மௌன விரதம் அப்பா. ***** 

*****  இதுதான் இதிலிருந்து தான் வந்தத  அப்பா ***** 

ஆனால் மனிதன் என்னவோ, நிச்சயம் தன்னில் தனக்காக எவை என்று கூற மௌன விரதத்தை கடைபிடிக்கின்றான். 

அது மட்டுமில்லாமல், 

****** கார்த்திகை விரதம், அப்பனே, இதற்காகத்தான் வந்தவை என்பேன் அப்பனே. ****** 

இவையெல்லாம், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, ஒவ்வொன்றாக, அப்பனே, ஒவ்வொரு இடத்திலும் ரகசியங்கள்  ஒளிந்துள்ளது என்பேன் அப்பனே. 

அவ் ரகசியங்கள் எல்லாம், அப்பனே, மனிதனுக்கு எடுத்துரைத்தால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நிச்சயம் தன்னில் உள்ள ஆற்றல் அதிகமாகும் என்பேன் அப்பனே. 

ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு என்பேன்  அப்பனே. 

அவ் சிறப்பை எப்பொழுது மனிதன் அறிந்து கொள்கின்றானோ, அப்பொழுது, அப்பனே, அவனுக்கு பலம் ஏற்படும் என்பேன்  அப்பனே. 

அவ் பலத்தின் மூலம், அப்பனே, அனைத்தும் அறிந்து கொள்வான் அப்பனே.

இவ்வாறாக அறிந்து கொண்டு, அப்பனே, நல்விதமாக, அப்பனே, அவனையும், அப்பனே, நிச்சயம் அறிந்து கொண்டு, மற்றவர்களும் அறிய வைப்பான் என்பேன்  அப்பனே. 

===========================
#  சித்தர் குள்ளர்களும் உலகத்தை காக்க வருவார்கள் 
=========================== 

இதனால்தான், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, பின் பலத்த அழிவுகள், அப்பனே, பின் வந்து கொண்டே இருக்கின்றது என்பதையெல்லாம் ஏனைய வாக்குகளில் சொல்லிக் கொண்டே இருக்கின்றேன் அப்பனே. 

சித்தர் குள்ளர்களும் கூட, அப்பனே, நிச்சயம் சித்த குள்ளர்களும் கூட, அப்பனே, வருவார்கள், அப்பனே. 

அவர்கள் வந்தால்தான், அப்பனே, நிச்சயம் இவ்வுலகத்தை காக்கவும் முடியும் என்பேன்  அப்பனே. 

ஏனென்றால், இதனைப் பற்றி இன்னும் ரகசியமாக பல பல வாக்குகளில் தெரிவிக்கின்றேன், அப்பனே. 

நன்முறைகளாகவே, அப்பனே, எதை என்று புரிய. 

===========================
#  மேலோகத்தில் இரு குழந்தைகள்….அஸ்வினி குமாரர்கள்…
=========================== 

இதனால், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட அனைவரும் எதை என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, இதனால், அப்பனே, பின் மேலோகத்தில், அப்பனே, பின் இருவர் எது என்று, அப்பனே, நிச்சயம் எது என்று புரிய. 

அவர்கள் நல்விதமாகவே, அப்பனே, எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, பின் நிச்சயம் பின் இருந்தனர் என்பேன்  அப்பனே. 

அவர்களால் மட்டுமே தேவலோகத்தில், அப்பனே, பின் அனைவருக்கும், அப்பனே, எவை என்று பின், அதாவது இரவும் பகலும் பாராமல், அப்பனே, நிச்சயம் தன்னில் கூட தேவலோகத்திற்கு என்னென்ன தேவையோ, அவையெல்லாம் செய்து கொண்டிருந்தனர் என்பேன்  அப்பனே, எது என்று புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, தேவர்கள் எவை என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, பின் குழந்தைகள், 

அப்பனே, இக் குழந்தைகள், அப்பனே, நிச்சயம் தன்னில் எவ்வாறாக, நிச்சயம் ஈசன் எது என்று புரிய. நிச்சயம் பூலோகத்திற்கு யான் வரப்போவதில்லை. ஏனென்றால், மனிதனின் தரித்திரம் அதிகமாகிவிட்டது. 

பொய் சொல்லுகின்ற, பொய் சொல்லி நடித்து, பின் ஏமாற்று இவையே ஒரு தொழிலாகக் கொண்டிருக்கின்றான். 

அதனால், இக்குழந்தையை எடுத்துச் செல்லுங்கள், நீங்கள் நிச்சயம் தன்னில் கூட பூலோகத்திற்கு அனைத்தும் சரியாகிவிடும் என்று. 

அவர்கள்தான், அப்பா, இரு குழந்தைகள். 


சுவடி ஓதும் மைந்தன் :- அய்யா  புரியுதுங்களா? யார் இந்த குழந்தைகள்? 

அடியவர் :- அஸ்வினி குமாரர்கள்  

சுவடி ஓதும் மைந்தன் :-  அவர்கள்… அவங்கதான் வந்திருக்காங்க. 


குருநாதர்:-  அப்பனே, எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, இதனால், அனைவரும் பின் நாங்கள் ஒத்துக்கொள்ள மாட்டோம். நிச்சயம் இக்குழந்தைகள் எது என்று அறிந்தும் கூட புரியும்படி, நிச்சயம், அப்பனே, எது என்று அறிய, 

நிச்சயம் உண்மைதனை இவர்கள் வந்தால், நிச்சயம் இப்பூலோகத்தில் காக்க முடியுமா என்றெல்லாம், நிச்சயம் எது என்று புரியாமலும் கூட.. 

அப்பனே, பின் நிச்சயம், நிச்சயம் அனைவரும் எது என்று புரிய. 

===========================
#  மனிதனிடத்தில் ஒளிந்திருக்கும் திறமைகள்
=========================== 

ஆனாலும், அப்பனே, அதனால்தான், அப்பனே, மனிதனில் இருக்கும் ஒளிந்திருக்கும், அப்பனே, எதை என்று கூட திறமைகள், அப்பனே, மனிதனுக்கு தெரிவதே இல்லை என்பேன்  அப்பனே. 

அதனால்தான், அப்பனே, சித்தர்கள் வந்து, அப்பனே, மனிதனிடத்தில் எவ்வாறு, அப்பனே, பின் சில திறமைகள் ஒளிந்துள்ளது என்பதையெல்லாம், அப்பனே, எடுத்து வந்து, அப்பனே, பல மாற்றங்களை, அப்பனே, பின் யாங்கள் எப்படியோ, அப்பனே, பின் எது என்று புரிய. அப்பனே, நிச்சயம் தன்னில் கூட… 

அப்பனே, பின் அதாவது வெளியே எடுத்து வந்து கொண்டே இருக்கின்றோம், அப்பனே. 

ஏனென்றால், நன்மைகள் நடக்க வேண்டும், மனிதன் திருந்த வேண்டும். 

திருந்தாவிடில், அப்பனே, பின் அழிவுகள் அதிகம் தான் என்பேன்  அப்பனே. 

பலம் தான் என்பேன்  அப்பனே. 

சொல்லிவிட்டேன், அப்பனே, எது என்று புரிய. 


===========================
#  உண்மைகள், புராணங்கள், இதிகாசங்கள், வாயில்லா ஜீவராசிகள் காக்கப்பட வேண்டும்
===========================  


அப்பனே, இதனால்தான், 

***** அப்பனே, பின் காக்கப்பட வேண்டும். ***** 

***** அப்பனே, உண்மைகள் காக்கப்பட வேண்டும். ***** 

*****  அப்பனே புராணங்கள் காக்கப்பட வேண்டும். ***** 

*****  அப்பனே, இதிகாசங்கள் காக்கப்பட வேண்டும். ***** 

*****  அப்பனே, இன்னும் இன்னும், அப்பனே, எதை என்று, அப்பனே, காக்கப்பட வேண்டும். ***** 

*****   அப்பனே, பின் வாயில்லா ஜீவராசிகள் இன்னும் எதை எதையோ, அப்பனே, *****  

இதனால், மனிதன் ஒழுங்காக இருந்தால் மட்டுமே இவையெல்லாம், அப்பனே, காக்கவும் முடியும். அப்பனே, நிச்சயம் தன்னில் கூட இறைவனுடைய, அப்பனே, பின் எவையும் மனிதன், அப்பனே, பின் இறைவனின் சரணாகதி அடைந்தது, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட 

இவ்வாறாக அறிந்தும் புரிந்தும், அப்பனே, என்னென்ன எதை என்று புரிய, நிச்சயம் தன்னில் கூட. 

===========================
#  ஈசனார் பூலோகத்திற்கு அனுப்பிவைத்த இரு குழந்தைகள் 
===========================  

ஆனாலும், தேவர்களும், அப்பனே, பல, அப்பனே, பின் எவை என்று புரிய, அப்பனே, நிச்சயம் தன்னில் கூட, அப்பனே, நல்விதமாகவே, அப்பனே, பின் இச் சிறுவர்களால் முடியுமா என்றெல்லாம் ?????

நிச்சயம் எது என்று அறிய, பின் ஈசனே, நீங்கள் வந்தால் மட்டுமே பூலோகத்தில் செழிப்பு ஏற்படும் என்று, 

நிச்சயம் தன்னில் யான் வரப்போவதில்லை. 

எவை புரிய பாருங்கள், எது என்று கூட பூலோகத்தில் என்னென்ன தவங்கள் செய்திருக்கின்றார்கள், செய்து கொண்டிருக்கின்றார்கள், காண்பித்தார்கள் தேவர்கள், எது என்று 

உன்னை எவை என்று எப்படி எல்லாம், நிச்சயம் 

நமச்சிவாயா !!!!!  

சங்கரா  !!!!! 

என்றெல்லாம், நிச்சயம் 

தேவாதி தேவனே  !!!!!  

என்றெல்லாம் போற்றி புகழ்ந்து, அங்கெங்கே பின் எவை புரிய, நிச்சயம் உன்னை வாழ்த்தித்தான் பாடிக்கொண்டிருக்கின்றார். 

பாருங்கள் என்றெல்லாம், நிச்சயம் தன்னில் இத் தேவர்கள் ஈசனிடத்தில், 

ஈசனிடத்தில் பாருங்கள், பூலோகத்தில் என்றெல்லாம். 

ஆனாலும், ஈசனோ, பின் அதாவது புரிகின்றது எவை. 

ஆனால் ஒருவன் எதை என்று புரிய, பின் மனதார பாடவில்லையே. 

அவனவனுக்கு விருப்பங்கள் எதை என்று அறிய, 

சுயநலத்திற்காக பாடிக்கொண்டிருக்கின்ற பொழுது, 

அவனவன் தேவைகளுக்காக பாடிக்கொண்டிருக்கும் பொழுது, 

நல்லெண்ணங்கள் இல்லாமல் பாடிக்கொண்டிருக்கும் பொழுது, 

எனக்கு கேட்கவில்லையே !!!!!

கேட்கவில்லையே என்று ஈசனாரும் கூட  !!!!!

எப்படி இது நியாயம் என்று தேவர்களும் சண்டையிட்டனர் ஈசனிடத்தில் புரிந்தும் கூட, 

நிச்சயம் நீங்கள் வரவேண்டும் பூலோகத்திற்கு என்றெல்லாம், 

(ஈசனாரும்) நிச்சயம் என்னால் வர முடியாது. 

எங்கு அமைதி எப்பொழுது காண்கின்றதோ……

எப்பொழுது பின் யான் எதை என்று கூற, பின் மனதார ஈசனாரே நீ மட்டும் போதும் என்று எவை யார் ஒருவன் சொல்கின்றானோ….

அப்பொழுது யான் பூலோகத்தில் வருகின்றேன் என்றெல்லாம். 

இதனால், பின் மீண்டும் தேவர்கள் பின் சென்று எங்கெல்லாம் அறிந்தும் புரிந்தும், எங்கெல்லாம் திருத்தலங்கள் ஈசனுடைய திருத்தலங்கள் இருக்கின்றதோ, 


அங்கெல்லாம் சென்று, 

பின் எதை என்று கூற, பின் எப்படியோ எதை என்று கூற, 

மனித ரூபத்தில் நுழைந்து, நிச்சயம் ஈசனை மனதார எண்ணுங்கள், 

மனதார எண்ணுங்கள், 

எதையும் பின் ஆசைப்படாதீர்கள் என்பதெல்லாம் கேட்டிட்டு, கேட்டிட்டு. 

ஆனாலும், ஒருவனும் எது என்று புரிய, பின் சுயநலத்திற்காக மீண்டும் தலை குனிந்தனர். 

மேலோகத்திற்கு சென்று, ஈசனாரே எது என்று புரிய, பின் ஆனாலும், எவனும் எதையும் எதை மனிதன் கூட எது என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட மனதார வணங்கவில்லையே. 

ஏனெங்கள் நான் யாங்கள் என்னதான் செய்யட்டும் என்று, 

ஆனால் நிச்சயம் தன்னில் கூட உங்கள் விருப்பப்படி ஆகட்டும் என்று, 

ஆனாலும், நிச்சயம் அதிபர்களை ஏதாவது செய்யுங்கள். பூலோகத்தில் 

பின் இன்னும் பின் அப்படி இல்லை என்றால், நோய்கள் மனிதனுக்கு அதிகமாகிவிடும் என்று, 

அதனால் எதை ஏது என்று புரிய, நிச்சயம் தன்னில் இச்சிறுவர்களை அனுப்புகின்றேன். 

அனுப்பித்து எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் அழகாக, நிச்சயம் தன்னில் கூட இச்சிறுவர்கள்  எதை பார்த்தாலே, எதை என்று கூற, பின் அதாவது நிச்சயம் நோய்களை இவர்களை தொட்டாலே, உடனடியாக குணமாகிவிடும். 

இதனால், இச்சிறுவர்களை அனுப்புகின்றேன் நலமாகவே எது என்று புரிய, 

இதனால், நிச்சயம் தன்னில் கூட இச்சிறுவர்களும், நிச்சயம் தன்னில் கூட, பின் புரியும் எதை என்று புரிய. 

===========================
#  தேவர்கள் கேட்ட கேள்வி….அதன் பதிலும்….
===========================  

ஆனாலும், நல்விதமாக, பின் அதாவது நீங்கள் என்ன செய்யப் போகின்றார்கள் என்றெல்லாம், நிச்சயம் தேவர்கள் கேட்டனர். 

சிறுவர்களை பார்த்து, 

சிறுவர்களே, நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? 

உங்களால் தான் முடியுமா? 

ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதை எல்லாம், பின் எதை என்று அறிய.

இதனால், நீங்கள் என்ன செய்யப் போகின்றீர்கள்? 

அவ்வளவு அறிவாளிகளா நீங்கள்? எதை என்று அறிய, சிறுவர்களை பார்த்து..

( இரு கிறுவர்களும் ) ஆனால் நிச்சயம் எங்களுக்கு அறிவு ஈசன் கொடுத்திருக்கின்றான். 

இதனால், நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று, நிச்சயம் பூலோகத்தில் இறங்கி வந்து, ஈசனாக மனதார நினைத்து, இங்கே பின் எதை என்று, ஈசனை பின் எவை என்று கூற, பின் மண்ணால் இக்கரையில் தன்னில் பிடித்து வைத்தால், பின் ஈசன் வரப்போகின்றான். 

அவ்வளவுதான்..

அனைத்தும் செய்யப் போகின்றான். 

அவ்வளவுதான்.

இதை கூட அறியாத தேவர்களா நீங்கள் என்றெல்லாம், அனைவரும் தலை குனிந்தனர். 

இதனால், நல் மெதுவாக வந்து, ஈசனை எதை என்று கூற, மனதார பூஜித்து, எவை என்று கூற, பின் வைத்தனர். எதை என்று கூற, ஒளியை பின் புவி முழுவதும் பரவி வைத்தனர். சிறுவர்கள் எதை என்று கூற, 

இதனால், பின் நோய் நீங்கியது. நல் முறையாக  அன்றிலிருந்து, பின் வாழ்ந்தனர் சிலர். 

===========================
#  மனிதகுலத்திற்கே ஒரு அபாய எச்சரிக்கை….
===========================  

ஆனாலும், அதே கட்டம்  இப்பொழுது வரப்போகின்றது. 

சொல்லிவிட்டேன், எது என்று புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, அதனால்தான் ஒழுங்காக இருங்கள். 

உண்மையை பேசுங்கள். 

நியாயத்தை பின் கடை, பின் எவை என்று தர்மத்தோடு வாழுங்கள் என்றெல்லாம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்கின்றோம். 

ஆனாலும், மனிதன் அதை உணர்வதே இல்லையே. எதை என்று புரிய. 

இதனால், நிச்சயம் தன்னில் கூட, இதனால் வரப்போகிற. 

இதனால், அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, பின் எவை என்று எவ் முறைகள் ஆகுமா என்ன?  

நிச்சயம் ஆகாது. 

இதனால், நிச்சயம் தன்னில் ஏதோ ஒன்று எவை என்று அறிந்து கூட, பின் நோயுடனே வாழ்ந்து வருவான். 

இதனால், அந் நோய் வந்துவிட்டாலே, மனம் குழப்பம் ஆகும். எது என்று கூற, பின் இறைவனையும் கூட கண்டுக்க, பின் கண்டு போவதில்லை. மனிதன் எது என்று, 

இதனால்தான், நிச்சயம் தன்னில் கூட, அதனால் திருந்துங்கள், திருந்துங்கள் என்றெல்லாம், 

நிச்சயம் அதி விரைவிலே, பின் நோய்கள் அதிகமாகின்ற பொழுது, பின் நிச்சயம் அவர்கள் மீண்டும், பின் எவை என்று கூற, பின் நீங்கள் தான் வரவழைக்க வேண்டும். 

இதனால்தான், இத்தனை இத்தனை வாக்குகள் செப்பி செப்பி, மனிதனின் ஆற்றலை, மனிதனை, பின் எவை என்று எப்படிப்பட்டவன் என்பதை எல்லாம், பின் எடுத்துரைத்து, எடுத்துரைத்து, எது என்று புரியாமலும் கூட இருக்கின்றான் மனிதன். 

இதனாலே, நிச்சயம் தன்னில் மீண்டும், பின் எவை என்று புரிய. 

இதனால்தான், அவர்கள் வந்தால் மட்டுமே, இன்னும் பின் செழிப்படையும் பூமி. 

இல்லை என்றால், எதை என்று புரிய. 

இதனால்தான், நிச்சயம் மீண்டும், எவை என்று அறிய, எதை என்று புரிய. 

இதனால்தான், எப்பொழுதும் பஞ்சம் வரக்கூடாது என்று, நிச்சயம் ஈசனை இங்கே, பின் எவை என்று அவைதன் , அதாவது சக்திகள், பின் எவை என்று கூட குறைந்து கொண்டே. 

இதனால், மீண்டும் அவர்கள் வந்தால்தான், எது என்று புரிய சில நோய்களும் காக்க முடியும். பூலோகத்தில் இதனை அறிவித்து.

இதனால்தான், இப்படித்தான், எது என்று புரிய. இதனால், நிச்சயம் தன்னில் கூட, பின் இவ்வாறாக சேர்ந்து, பின் வந்து, எவை என்று கூற இக் குழந்தைகள், நல்விதமாக, அனைவரையும் காப்பாற்றினர். 

நல்விதமாக…

இதனால், பின் பூலோகம் செழித்தது. 

( இவ்விடத்தில் ஆலய மணியோசை ஓங்கி ஒலித்தது) 


எது என்று மீண்டும், எவை என்று கூற, பின் அறிந்தும்  கூற, பின் தேவையானது போல், பின் அதாவது தேவர்கள் அனைவரும், நீங்கள் இங்கே, பின் தங்கிவிட்டால், அனைவருக்கும் அறிவு வளர்ந்து போகும் என்றெல்லாம், நிச்சயம். 

ஆனாலும், ஈசனை கட்டளைப்படி வந்தோம்.. 

சரி செய்துவிட்டோம்.. 

செல்வோம்… 

அங்கு எப்பொழுது ஈசன், பின் தேவலோகத்தில் சொல்கின்றானோ, அப்பொழுது மீண்டும் இங்கு இறங்கி வருவோம். அவ்வளவுதான் என்று 

எதை இறங்கி வரும், பின் நேரம் எது என்று புரிய. நிச்சயம் தன்னில் கூட, மனிதனிடத்தில் தான் இருக்கின்றது. அப்பா, 

சரியாகவே, 

பின் எவை என்று உண்மை, 

எவை என்று நேர்மை, அறிந்து தவறாமல், 

நிச்சயம் தன் நல்விதமான தர்மத்தை காத்திருந்தால், 

மீண்டும் அவர்கள் வந்து செழிப்படைய  செய்வார்கள். 

இல்லையென்றால், அப்பனே, எது என்று அறிய  அப்பனே, படும் பாடு, எவை என்று கூற, 

இன்னும் ரகசியங்கள் உரைக்கின்றேன். 

இப்பொழுது போதும், அப்பா, ஆசிகள், ஆசிகள். 

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

1 comment: