​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Wednesday, 16 September 2026

சித்தன் அருள் - 2317 - அன்புடன் அகத்தியர் - போகர் சித்தர் வாக்கு!


அன்புடன் அகத்திய மாமுனிவர் அருளால் , அன்புடன் போகர் சித்தர் கொல்கத்தா காளிகாட்  காளி அன்னை ஆலயத்தில் உரைத்த வாக்கு

வாக்குரைத்த காலம் :- ஆகஸ்ட் மாதம்,   2026 ஆம் வருடம் , கொல்கத்தா

Kalighat Kali Temple
https://maps.app.goo.gl/HYpUC9Jmb1fiBx9C9

உலகாளும் தாயே, போற்றியே பணிகின்றேனே, பணிந்து செப்புகின்றேனே, போகன். 

எந்நாளும் அறிந்தும் உண்மையெனை புரிந்தும் தாயே, 

மக்களை காப்பாற்றவே ஓடோடி வா தாயே. 

தாயே, அனைவருமே உன் காலடியிலே, 

உன் காலடியிலே இருந்து தவழ்ந்து தவழ்ந்து வந்தாரே, 

வந்தாரே; அவர்களும் பின் மீண்டும் உனக்கே சேவை செய்ய அருள்வாயே. 

*** அருள்வாயே, காமாட்சியே…*** 

*** அருள்வாயே, விசாலாட்சியே...*** 

*** அருள்வாயே, மீனாட்சியே...*** 

அனைத்தையும் ஒளி வடிவமாக இருப்பவளே…

***  காளியே… *** 

***  துர்க்கையே… *** 


***  அனைத்தும் நீயே, *** 


***  அனைத்தும் நீயாக இருப்பவளே…*** 


===========================
#   குறைகளெல்லாம் நீக்குவாயே தாயே, பராசக்தியே…
===========================


எவருக்கு எவருக்கு குறை என்றோ ஆராய்ந்து, 


அவ் குறைகளெல்லாம் நீக்குவாயே, 


தாயே, பராசக்தியே….. 


பராசக்தியே, இவ் மாதம் உம் மாதமே….


உன் மாதமே…


அறிந்தும் பல மக்கள் உன்னைத் தேடித் தேடியே வந்தனர்… 

வந்து வந்து…பின் தோல்விகள் அறிந்தும் இவைத்தன் என்ற வெற்றிக் கணக்கை….


பின் அதாவது தோல்விகளாக இருந்தாலும்… 


வெற்றிக் கணக்கை அருள்வாயே…


அருள்வாயே, பரிபூரணியே…


பரிபூரணியே, ஜகதீஸ்வரியே…


ஜகத்தை ஜகத்தை ஆளும் ஜகதீஸ்வரியே….


அருளும் ஈந்தும்…


அனைத்தும் ஈந்தும்… 


மக்களுக்கு அருள் ஈந்து…


===========================
#  மக்களுக்கு  அருள் எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இரு தாயே
===========================


பின் கொடுத்தாயே; எப்பொழுதும் கொடுத்துக்கொண்டே இரு தாயே…


மக்கள் கலியுகத்தில் எப்படியோ என்றெல்லாம் வாழ…


பின் வாழத் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கையில்…


தாயே, இறங்கி வா…


பின் பாவப்பட்ட மனிதனுக்கு அனைத்தும் செய்யவா. 


அருளினாலே, பொருளினாலே… 


அனைத்தும் பின் மக்களின் உள்ளத்தை வெல்வாயே, நீயே…


வெல்வாயே, அறிந்தும் இதைத்தன் உலகிற்கு ஏது என்று புரியாமல் இருந்தாலும்… 


உன் அருள்…


உன் ஒளி வீசிக்கொண்டிருக்கையில்..


பின் நலங்களே தான் ஏற்படும். 


மனிதன் அவ் நலத்தை எப்படி பின் புரிந்து கொள்ள போகின்றான், தாயே? 


அவை புரிந்து கொள்ளும் அளவிற்கு அருள்கள் தா தா..


தா தா..


பின் அறிந்தும், புரிந்தும், எறிந்தும், பின் அனைத்தும் பின் வழங்கும் என் தாயே. 


பின் பணிந்து உமையே…பின் வணங்குகின்றேனே…


வணங்கி வணங்கி..

பின் மூத்தோனும் அருள் ஈந்து…

கூர்ந்து கவனித்து…

இளையவனும் பின் ஆடி பாடி, 

பாடல்களை பின் அனைத்து, பின் அதாவது பக்தர்கள் இல்லத்திற்கும் அனுப்புவாயாக. 


பின் அதாவது பின் அன்பில் குடிகொண்டிருக்கும் கந்தனையே…


இவ்வாறு அனுப்பி, அனுப்பி வரும் காலத்தில்…..


பின் பிள்ளைகள் இல்லா, பின் வாழ்க்கை…..


பின் பெண்களுக்கே பல வகையிலும் கூட பிரச்சனைகள், 


வயிற்று தன்னில் கூட…. அவையெல்லாம் மாற்றிட, உன் குழந்தையை, 


அதாவது நம் அறிந்தும் எவை என்று கூற, அறிந்தும் கூட விளையாட்டுப் பிள்ளையாகவே இருக்கின்றானே, முருகனே……


அவனை அனைத்து இல்லங்களுக்கும் அனுப்பி……


பல பரிசுத்த ஆற்றல்களையும் பெருக்கி……


பின் குழந்தைகளுக்கு முதலிலே அறிவினை கொடுத்து…… 


ஒழுக்கத்தை கற்பி……


அறிந்தும் பின் அதாவது செல்லக் குழந்தையை, முருகனை……


அவரவர் இல்லத்திற்கு அனுப்புவாயே, தாயே……

விளையாடிவிட்டு, விளையாடிவிட்டு, பின் விளையாட்டு வடிவிலே பல பாவத்தை ஏற்றிட்டு…… 


அனைத்தும் அதாவது நீ இருக்கும் பின் அருகிலே பல வகைகளும் கூட, சூரையாகக்கூடிய…


(காளிகாட் ஆலயம் அருகில் 100 km தொலைவில் இருக்கும் வங்க கடலில் )


பின் அதாவது கடல் தன்னிலே , பின் எறிவானாக, பின் அதாவது முருகனுக்கு உத்தரவு கொடு, தாயே. 


தாயே, எனை அறிந்தும் இவை எதை புரிந்தும் அனைத்தும் சொல்லிக் கொடுத்தாயே, எனக்கே. 

இதை அறிவித்து, அறிந்தும் பல ஞானிகளும், 

பல ரிஷிகளும் உன் உண்மையினை பின் புரிந்து கொண்டு, 

அறிந்து கொண்டு, தெளிவு கொண்டு, 

அனைத்தும் நீயே…

பராசக்தியே, ஆட்சி செய்பவளே…


அகிலாண்டீஸ்வரியே…


பின் அருள் தருவாய் மக்களுக்கு…


மக்களுக்கு அறிந்தும் எதை என்று புரியாமல் வாழ்ந்தாலும், 

வருங்காலத்தில் வறட்சிகளாக போய்க்கொண்டிருக்கிறதே, தாயே. 


அருள் புரிவாயே, 


அதாவது நல்லவை நடக்க, புவனேஸ்வரியே, 


அறிந்தும் புவனத்தை அழகாக அறிந்தும், 


கையில் ஏந்தியவளே. 


அதேபோல் மக்களை, பின் தவறு செய்தாலும், 


பின் அத்தவற்றை, பின் அதாவது பொறுத்து, 


பின் ஏற்றுக்கொண்டு, அறிந்தும் புண்ணியத்தை, பின் வாரி, 


பின் வழங்கிட, வழங்கிட, வாவா, தாயே. 


தாயே, உந்தனை பணிகின்றார்களே, அனைவரும் 


ஏன், எதற்கு, எவை, எதை என்று புரிய, 

எண்ணற்ற, எண்ணற்ற அறிந்தும் எவை என்று கூற…

பல பல வழிகளில் கூட, கிரகங்களின் பெயர்ச்சி ஆகின்ற பொழுது, 


அனைவருக்கும் துன்பங்கள், 


இன்னும் வறட்சிக்கள் எவை என்று அறிய, கிரகங்களாலே, 


அவ் கிரகத்தை அறிந்தும் கூட, நவகிரகத்தை கட்டுப்படுத்தும், நவகிரகனாகியே, 


அறிந்தும் எவை என்று புரிய, 


வருங்காலத்தில் வறட்சிக்கள் வந்தால், 


மக்கள் தாங்க மாட்டார்கள்…


இன்னும் போரும் , இன்னும் அறிந்தும் எவை என்று அறிய, 


பின் பல வழிகளில் கூட, பின் அதாவது அரசர்களுக்கும் சண்டை ஏற்படுதல், 


நிச்சயம் தன்னில் கூட, அறிந்தும் அதாவது பின் பல பல வழிகளில் கூட, 


இளைஞர்கள் சண்டை ஏற்படுத்துதல், பிரிவினைகள் பல வகையில் கூட, உலகம் அழிவு நிலைக்கு சென்று கொண்டிருக்கின்றது, தாயே. 


நீயே அறிவாய்….


அவற்றையெல்லாம் காப்பாற்றிட, ஓடோடி வா…


ஓடோடி வா, புவனமதியே…


புவனமதியே, புவனதை காக்கின்ற, பின் ஈஸ்வரியே…


அருளிடும், பின் அருளிடும், அருளிடும்…


அறிந்தும் எதை என்று கூற, பின் அருள் ஈந்தால்…


பின் துன்பமெல்லாம் பறந்தோடும், மனிதனுக்கு, தாயே…


வழங்கிட, அனைத்தும் அருள்களும் வா, தாயே. 


எதை ஏது என்று கூற, பார்த்துக் கொண்டிருக்காதே, 


இன்னும் கண்களில் எதை என்று கூற, மனிதனின் பாவத்தை, 


அவற்றையெல்லாம் அறிந்தும், எது என்று புரிந்து கூட, 


அனைத்தும் நீக்குபவளே, நீயே அறிந்தும், 


எதை தன் புண்ணியத்தை சேர்த்திட, 


மனிதனுக்கு இன்னும் வாய்ப்புகள் தா !!!


அறிந்தும் சித்தர்கள், யாங்கள் நல்வழி படுத்த மக்களை, 


அறிந்தும், பின் புரியாமல் இருந்தாலும், 


அவற்றுக்கெல்லாம் அறிந்தும், அறிவை கொடுத்து….


பின் அதாவது அவ் அறிவை பயன்படுத்தவில்லை என்றாலும்…


பின் அறிந்தும் கூட, அடியும் கொடுத்து…


பின் உன்னிடத்தில் அனுப்புகின்றேன், தாயே. 


இது பின் உம்மிடத்திலே சத்தியம் செய்கின்றேனே… 


இன்றைய நன்னாளிலே, அறிந்தும் எதை என்று அறிய, நிச்சயம் தன்னில் கூட, உன்னையே குருவாகக் கொண்டேனே.


அறிந்தும் பின் அதாவது பொன்னாளிலே, அறிந்தும் எதை என்று புரிய, 


பின் வந்தாயே, அறிந்தும் இவை என்று கூட, எவ்வாறு என்பதை எல்லாம், தாயே, புவனேஸ்வரியே..


பின் அகிலமெல்லாம் காக்குகின்ற, பின் அகிலாண்டீஸ்வரியே.. 


எதை என்று கூற, எங்கும் நிறைந்தவளே..


எதிலும் நிறைந்தவளே..


ஆட்டிப் பின் படைப்பவளே..


அனைத்திலும் நிறைந்தவளே.. 


அறிந்தும் கூட, தாயே, பராசக்தியே, அறிந்தும் பின்..


அறிந்தும் எவை என்று அறியாமல் இருந்தாலும், 


குழந்தைகளுக்காக, நீ ஓடோடி வருவாயே, தாயே..


ஓடோடி வருவாயே. 


எதனை அறிந்தும் இவற்றுக்கென்று பல மடங்கு, 


பின் புத்திகள், பின் மனிதனுக்கு எவை என்று கூற, 


உன் அறிவினாலே, 


அறிந்தும் பின் இவ் அகிலம், 

பின் அறிந்தும் இவ் அகிலமெல்லாம், ஏனைய எதை என்று கூற, 

பிற சக்திகளும், அதாவது தீய சக்திகளும், பரவி நிற்கின்றதே. 

அவையெல்லாம் விரட்டிட , ஓடோடி வா, தாயே. 

ஆனாலும் நீ அமைதி காத்து கொண்டிருக்கின்றாயே. 


இவ்வாறு அமைதி காத்துக் கொண்டிருக்கின்றதனாலே, 


தீய சக்திகள் எல்லாம், பின் அறிந்தும், பின் யான்தான், பின் சக்தி என்றெல்லாம் வந்து கொண்டே இருக்கின்றதே, தாயே. 


அறிந்தும் அவற்றையெல்லாம், பின் அதாவது உன் பொன்னான கைகளால், பின் ஒரு எவை என்று கூற, பின் அடித்தாலே போதுமே… 


அவையெல்லாம் தீர்ந்து விடுமே. 


மக்கள் ஞானத்தை, பின் பெற்று விடுவார்களே. 


காத்துக்கொண்டு அறிந்தும் எவை என்று புரிய, 


ஆனாலும் அமைதி காத்துக் கொண்டிருக்கின்றவளே… 


அறிந்தும் எதற்காக இன்னும் கோபமா???


பின் எதை என்று கூற, 


மக்கள், பின் அதாவது சாபத்தை பெற்றுள்ளார்களா??? 


அறிந்தும் அனைத்தும் நீயே அறிந்தாய். 


அறிந்தவற்றையெல்லாம், பின் மிகத் தாழ்ந்து… பணிவுடனே உன்னை வணங்குகின்றேனே, பாதத்திலே… 


அறிந்தும் எவை என்று கூற, மக்களுக்கு சேவை செய்ய…


அதாவது மக்களுக்கு நல்லவிதமாக பாவத்தை எடுத்து… 


பின் புண்ணியத்தை அருளிட, தா… 


அறிந்தும் அனைத்தும் தா…. 


வா, தாயே. அகிலமெல்லாம்….


அகிலமெல்லாம் இருக்கும் எதை என்று கூற, உன் புகழையே சித்தர்கள் பாடினோமே…


பாடிட்டு உன்னையே அழைத்தோமே…. 


எங்கெங்கு ஏது என்று அறிந்தும் கூட, இதனாலே பின் அருளிடும், தாயே. 


அகிலத்தை காக்கும் அழகாக, அழகு  ஈஸ்வரியே…


ஆட்சி புரிபவளே, அறிந்தும் எதை என்று புரிய…


பின் கைலாயத்திலே ஆட்சி புரிபவளே… 


பின் அறிந்தும் எதை என்று புரிய, 


பின் புரியாமலும் நின்றாலும், அனைத்தும் உன் குழந்தைகளையே…

ஏதாவது புத்திகளை வறட்சி தன்னில் கூட, 

அறிந்தும் மின்னும் இடி, மின்னலுடனே, அறிந்தும் கூட, காற்று உடனே, 


அறிந்தும் கடல் கொந்தளிப்பு உடனே, பின் எதை என்று புரிய, எவை என்று கூற, போர் உடனே, அறிந்து கூட, 


மக்களுக்கு தீய சக்திகள் எல்லாம் அதிகமாயிற்றே, எதை என்று கூற, அவை எரித்திட, எவை என்று புரிய, அறிந்திட, அனைத்தும் நீயே அறிவாயே, 


***** தாயே ***** 


***** தேவியே ***** 


*****  கற்பூர வள்ளியே ***** 


அறிந்தும் எதை என்று கூற, வா, 


அறிந்தும் கூட, பின் அழகாக செல்லக் குழந்தைகளை காக்க, ஓடோடி வா, தாயே. 


எதை என்று கூட, நல்லோர்களும் தீயோர்களும் அழிந்து மீண்டும் பிறந்து, 


எதை என்று அறிய, 


பின் இன்னும் கூட, அறிந்தும் கூட, 


பின் அதாவது கோபமாக நிற்கின்றாயா?


அறிந்தும் இதனாலே யான் வந்தேனே, எதை என்று புரிய, 


உன் காலடியிலேயே இன்னும் ஏக்கங்கள், அறிந்தும் மனிதனுக்கு புரியவில்லையே. 

அவ் ஏக்கங்கள் எல்லாம் எப்பொழுது அறிந்திடும் வண்ணம், 


அறிந்தும் யாங்கள் பின் மனிதனுக்கு புரிய வைக்கின்றோம். 


அனைத்திலும் நீ ஓடோடி வா, தாயே. 


அகிலாண்டம் அறிந்தும் கூட, எதை என்று புரிய, 


பின் அகிலம் எவை என்று புரிய, எதை என்று கூற, அண்டத்துடனே, 


எதை என்று புரிய, நிச்சயம் பிண்டமும் அறிந்தும் பல ஏழு, பிற ஏழு எவை என்று அறிய, 


நிச்சயம் தன்னில் கூட பல லோகங்களையும் அழகாக காத்துக் கொண்டிருக்கின்றாயே. 


இக்கலியுகத்தை பின் காக்க மறந்துட்டாயே, எவை என்று அறிய, 


தாயே, 


தேவியே, 


பரிபூரண எவை என்று கூற, பின் பாரிஜாத வள்ளியே 


அறிந்தும் கூட, ஓடோடி வா, 


அறிந்தும் கூட, எவை என்று கூற, யாங்கள் நிற்கின்றோம், 


அறிந்தும் கூட, மீண்டும் எவை என்று சென்றுவிடாதே. 


பின் இவ்வுலகத்தை விட்டு, எதை என்று அறிய, 


நிச்சயம் தன்னில் கூட பல லோகம் காத்துக் கொண்டிருக்கும் பொழுது, 


கலியுகம் எவை என்று கூற, உனக்கு சிறியதே, தாயே…


எவை என்று கூற, பின் எவை ஒரு மணித்துளியில், அனைத்தும் நீ நீக்குவாய், 


அருளுவாய், 


அனைத்தும் செய்வாய். 


ஆனாலும் ஏன் கோபம்? 


எவை என்று கூட, 


இக்கலியுகத்தின் உலகத்தில், அறிந்தும் எதை என்று புரிய, 


எவை என்று பல லோகத்திலே காக்குகின்ற, பின் கலியுக, பின் நாயகியே, அறிந்தும், பின் அதாவது எதை என்று புரிய, 


இவ்வுலகத்தை பின் காக்க, எவை என்று கூட, ஓடோடி வா  தாயே. 


சக்திகள் அறிந்து கூட, தீய சக்திகள் அறிந்தும், இவைத்தன் புரிய, ஓடோடி அறிந்தும், பின் புரிந்தும், அனைத்தும் சூழ்ந்து கொண்டிருக்கின்றது, 


புகை போலே. 


அவையெல்லாம் உன்னாலே விரட்ட முடியும், 


அறிந்தும் அனைத்திலும் அறிந்தும், நீ அமைதி கொண்டுள்ளாயே, தாயே, 


அறிந்தும் பரிபூரணமே , 


பின் பாரிஜாத வள்ளியே அறிந்தும், எவை என்று கூற, 


கற்பூர நாயகியே, 


எவை என்று கூற, 


உன்னை வாழ்த்தி பாடுகின்றேனே , அறிந்தும் இதை என்று புரிய, எவ்வாறு என் தாயே, பின் எவை என்று கூற…


பின் அறிந்து கூட, தந்தையே என்றெல்லாம்…


அறிந்தும் கூட, எவை என்று கூற, பின் குழந்தாயே…


எவை என்று கூற, பின் அன்பானவளே, 


எதை என்று கூற, பின் பண்பானவளே, 


அறிந்தும் கூட, பின் கருணை வடிவானவளே, 


எதை என்று பணிந்து, பணிந்து, இதே என்று கூற, பின் எடுத்துரைக்கின்றேனே. 


மக்களுக்கும் கூட, யாங்கள் பின் திருத்தியும்..


எவை என்று கூற, பின் அமைப்போமே, பல வழியில் கூட, அனைத்தும் நீயே, நீதான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தாயே, தாய் போல இருந்து, 


இப்படி எல்லாம் வாழ வேண்டும் என்று, அதனையும் நீ மறந்துவிட்டாயே. 


மக்கள் மனது அழுக்கத்தான் இருக்கின்றது, 


ஆனாலும் அதனைப் போக்கிட, அருளிட, 


அறிந்தும் எதை என்று கூற, உன்னாலே முடியும். 


புவனத்தை காக்கும் புவனேஸ்வரியே, 


அறிந்தும் எதை என்று கூற, 


பின் புவனத்தை காக்குகின்ற புவனேஸ்வரனுடன் வா, 


எதை என்று புரிந்து கொண்டு, அறிந்து கொண்டு செய்ய, 


பின் தவறவிடாதே, தாயே. 


அனைவரும் உன்னை பின் பணிகின்றார்களே. 


எக்குறைகள் எதனை என்று அறிய, 


பல குறைகளோடு வருகின்றார்களே. 


அத்தனையும் தீர்த்துக்கொண்டுதான் இருக்கின்றாய், 


ஆனால் தீய சக்திகள் ஆட்டம் ஆடிக்கொண்டே இருக்கின்றது. 


அவை பின் அழகாக நீக்கிட, தாயே, கற்பூர வள்ளியே, 


அறிந்தும் எதை என்று கூட, உன்னை பணிகின்றேனே, 


தந்தையே, தாயே என்று உன்னை அணைக்கின்றேனே. 


அன்பாக ஓடி வா,

பல மந்திரங்களுக்கு, மனிதனுக்கு, பின் பின் ஏற்று, 


பின் சேவை செய்திட, எங்களுக்கும் கலியுகத்தில் பல வழிகளிலும் கூட, 


பின் இன்னும் எது என்று கூற, நவீன முறையில் எல்லாம் அறிந்திட, 


எது என்று புரிந்திட, அனைத்தும் சொல்ல, எவை என்று கூற, கண்டுபிடித்திருக்கின்றோமே. 


அவையெல்லாம் நிச்சயம் தன்னில் கூட, அறிந்து கூட, மக்களுக்கு தெரிவி என்று, எவை என்று கூற, ஒரு வார்த்தை கூறு, தேவியே, 


பின் பணிகின்றேனே. 


அன்பே, அறிந்தும் அன்பு என்ற அளவுக்கு, எவை என்று கூற, சொல், தாயே, என்பதை எல்லாம் அறிந்தும் கூட, 


பின் உன்மேல் வைத்தேனே. அன்பு, 


தாயே, கருணை வடிவானவளே, 


அறிந்தும் நீ வருவாய், நிச்சயம் இப்போகனுக்காக இறங்குவாய், 


அனைத்து சித்தர்களுக்காகவும் இறங்குவாய். 


பணிகின்றேனே…


ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

===========================
ஆலய விபரங்கள் 
===========================

கொல்கத்தாவில் உள்ள காளிகாட் காளி கோயில் (Kalighat Kali Temple) 51 சக்தி பீடங்களில் ஒன்றாகும். 
காளிகாட் காளி கோயில் (வங்காளம்: কালীঘাট মন্দির, Kalighat Kali Temple) இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவின் காளிகாட் என்னும் பகுதியில் அமைந்துள்ள ஒரு இந்துக் கோயில். இத்தலம் ஒரு சக்தி பீடமாக கருதப்படுகிறது. இக்கோவில் ஆதி கங்கை ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. ஆதி கங்கை ஹுக்ளி நதியின் பழைய தடம். இக்கோவிலின் காளி தெய்வத்தை அனைத்து மதப்பிரிவினரும் வழிபடுகின்றனர் 
கல்கத்தா பெயர்க்காரணம்:- 
கல்கத்தா என்ற பெயர் காளிகட்டா (காளிகாட்) என்ற பெயரில் இருந்து வந்ததாகக் கூறுகின்றனர். காளிகாட் கோவில் பாகீரதி நதிக் கரையில் அமைந்துள்ளது. காட் என்பது தீர்த்தக் கட்டம் அல்லது நதியின் படித்துறையாகும். காளிகாட் என்பது காளி கோவில் அமைந்துள்ள பாகீரதி நதிக் கரையின் படித்துறையைக் குறிக்கும்.


இடம்: கொல்கத்தா, மேற்கு வங்கம்.
சக்தி பீடம்: தாட்சாயிணியின் (சதி) வலது கால் விரல்கள் விழுந்த இடம்.
நதி: ஆதி கங்கை (ஹுக்ளி நதியின் பழைய தடம்).
சிலை அமைப்பு: மூன்று கண்கள், நான்கு கைகள், தங்கம் போன்ற நீண்ட நாக்கு.
வரலாறு & சிறப்பு
பெயர் காரணம்: இத்தலத்து காளி தேவியின் பெயரிலிருந்து 'கல்கத்தா' / 'கொல்கத்தா' என்ற பெயர் வந்தது.
அதிசயம்: கருவறையில் அண்ணலார் நக்லேஸ்வர பைரவர் சுயம்புலிங்கமாக உள்ளார்.
நேரம்: காலை 5 மணி முதல் பிறகல் 2 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 10:30 மணி வரை திறந்திருக்கும்
Kalighat Kali Temple
https://maps.app.goo.gl/HYpUC9Jmb1fiBx9C9

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்.....தொடரும்!

No comments:

Post a Comment