வணக்கம் அகத்தியர் அடியவர்களே,
திருவண்ணாமலையில் ஆதி காமாட்சி ஆலயத்தில் வைத்து குருநாதர் அகத்தியர் அடியவர்களுக்கு.. சில பொதுவான கேள்விகளுக்கு குருநாதர் பதில் வாக்குரைத்தார்.
இவ் வாக்கினில் தீபம் ஏற்றுவது குறித்து ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கு, சித்தன் அருள் வலை தளத்தில் வெளியானது.
இவ்வாக்கு குருநாதர் ஒரு அடியவருக்கு தனிப்பட்ட முறையில் உரைத்த வாக்கு.
சித்தன் அருள் தளத்தில் வரும் வாக்குகள் அதன்படியே எடுத்து வெளியிடுவது அடியவர்கள் பலர் வாக்கு சேவை செய்து வருகின்றனர்.
இந்த தனி வாக்கு, பொது வாக்குடன் வெளி வந்தது. அதனை, அடியவர்கள் எடுத்து அனைவருக்கும் பதிவிட ஆரம்பித்தனர். அனைவரும் நலம் பெறட்டும் என்ற பொதுநல நோக்கில் சித்தன் அருள் பதிவு எண் அதனையும் இணைத்தே வெளியிட்டிருந்தனர்.
குருநாதர் ஏற்ற சொல்லியதாக எங்கும் செய்தி வெளியிடவில்லை.
இவ் நேரத்தில் அது ஒரு அடியவருக்கு உரைத்த வாக்கு என்ற தகவல் சுவடி ஓதும் மைந்தன் மூலம் தெரியவந்தது.
அதே வேளையில், இவ்வாக்கு குருநாதர் உரைத்த வாக்கு என்று சித்தன் அருள் தளத்தில் சென்று பாராமல், இவ்வாக்கு பொது வாக்கு அல்ல என்று பதிவிடுவதற்கு பதிலாக குருநாதர் வாக்கின் மேல் “X” குறியீடு, மற்றும் “FAKE” என்று பதிவிட்டார்.
இணையத்தில் வாக்குகளை பரப்பும் அடியவர்கள் இதனை சற்று கவனமாக கையாண்டிருக்கலாம்.
என் தந்தை, என் தந்தை என்று சொல்லி சொல்லி ….. அன்பு அடியவர்கள் அதன் மேல் இவ்வாறு பதிவிடுவதற்கு பதிலாக “இது குருநாதர் உரைத்த தனி வாக்கு. பொது வாக்கு அல்ல” என்று படத்தின் மேல் பதிவிட்டிருந்தால் பல குழப்பங்கள் தவிர்க்கலாம்.
சித்தன் அருள் வலைத்தளத்தில் “அகத்தியரின் பெயரால் தவறான வழிகாட்டல்” என்று பதிவை கமெண்ட் செய்தும் உள்ளனர்.
இந்த பதிவில் குருநாதர் எங்குமே அனைவரும் செய்க என்று கு சொல்லியதாக பதிவில்லை.
இது போன்று தனிநபர் வாக்குகளில் அன்னைக்கு அதாவது துர்கா தேவிக்கு எலுமிச்சம் பழத்திலும்…. கால பைரவருக்கு வெண் பூசணியிலும்… சிலருக்கு தேங்காயை இரண்டாக உடைத்து அதில் தீபம் ஏற்ற சொல்லியும் குருநாதர் கூறி இருக்கின்றார்….
அரச இலை, வெற்றிலை மேல் தீபங்கள் ஏற்றச் சொல்லியும்….
அதனுடன் பச்சைக் கற்பூரம் ஏலக்காய் கிராம்பு கற்கண்டு இவற்றையும் இதனுடன் அரிசி பொடியையும் வசம்பையும் கலந்து தீபங்கள் ஏற்ற சொன்னதையும்….
அதேபோல் பொது பலனாக உலக பொது நன்மைக்காக..
நவகிரகங்களுக்கு... நவதானிய தீபங்கள் ஏற்றவும் கூறியதையும் நாம் அனைவரும் குருநாதர் வாக்குகளில் இருந்து அறிந்திருக்கின்றோம்.
முன்னோர்களுக்காக விதவிதமான பழங்களில் அதாவது காய்கறிகளில் பழங்களில் பாகற்காய் வாழைக்காய் வெண்பூசணி இவற்றில் எல்லாம் தீபங்கள் ஏற்றச் சொல்லி அதையும் அடியவர்கள் ஏற்றி வந்திருந்தனர்.
***** ஆனால் குருநாதர் ஒரு அடியாருக்கு உரைத்த வாக்கினை தவறான தகவல் ( FAKE, X ) என்று பரப்புவது தான் வருத்தத்திற்குரியது. *****
குருநாதரின் இந்த வாக்கில் பல நோய்களுக்கான மருத்துவ குறிப்புகள் ஆசனங்கள் மந்திர ஜெபங்கள் தியானங்கள் குறித்து உரைத்திருப்பதையும்... தவறாக திசை திருப்புவது போல சிலர்...பதிவிடுகின்றனர்.
இந்த வலைப்பூ என்பது... குருநாதருடைய முழு வாக்கின் ஆவணப் பெட்டகம்.
இதில் வெளிவந்த வாக்குகளில் இருந்து தனியாக எடுத்தாளப்பட்டு பல சமூக வலைத்தளங்களில் அனைவரும் பகிர்ந்து வருகின்றனர்.
ஆனால் ஒரு தவறான முறையில் அவசரப்பட்டு குருநாதர் வாக்குகளை ஒரு வதந்தியைப் போல்... பரப்பும் பொழுது... இதன் பின் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொண்டு செயலாற்ற வேண்டும்.
இப்படி குருநாதர் வாக்குகளை தனியாக எடுத்தாளும் அனைவருக்கும்… பகிர்ந்து கொள்ளும் அனைவருக்கும்… அவரின் வாக்குகளின் நம்பகத்தன்மையை சந்தேகப்படுவது போல்... பொதுமக்களுக்கு இடையே குழப்பங்களை ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
குருநாதர் வாக்குகள் மேலும் பன்மடங்கு மக்களிடம் நம்பிக்கையுடன் பரவட்டும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

No comments:
Post a Comment