வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
"சித்த மார்கத்தில்" நுழைந்து கவனித்த பொழுது, பல நேரங்களில் சித்தர்கள் உதிர்த்த அறிவுரைகள், உங்கள் அனைவருக்காக!
- மௌனம் கடைபிடிக்க, பல கேள்விகளின் பதில் உள்ளேயே கிடைக்கும்.
- எந்த செயலிலும் பாபம் சேரும் வாய்ப்புள்ளதால் தான், பிறவியற்ற நிலையை வேண்டுங்கள் என்கிறோம்.
- மிக மிக இளம் தளிராக இருக்கின்ற, பசுமை மாறாமல் இருக்கின்ற சிறு இலையை கிள்ளினால், 1008 சிசுவை கொன்றதற்கு சமம்.
- ஒரு மலர் மொட்டை கொய்தால், 10008 பிறந்த குழந்தையை கொல்வதற்கு சமம்.
- அறியாமல் செய்த ஹத்திதோஷம் விலக, ஆதரவற்ற குழந்தைகளை ஆதரிக்க வேண்டும், பசுவோடு கன்றுகளை தானம் செய்ய வேண்டும், சிவாலயங்களில் நிறைய நெய் தீபம் ஏற்றவேண்டும், சிவலிங்க பிரதிஷ்டை செய்து தன் காலத்துக்குப் பின்னும் பூஜை செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும், ஆயிரமாயிரம் விருட்சத்தை தானம் செய்வதும் அதை நட்டு நிழல் தரும் மரங்களாக பராமரிப்பதும் ஹத்தி தோஷம் நீங்கி விடும்.
- குரு சாபம், குரு தோஷத்தை, குருவாக இருப்பவருக்கு சேவை செய்தும், குருவாரத்தில் விரதமிருந்து, குரு தொழில் செய்பவருக்கும், கல்வி கற்க முனைவோருக்கும் உதவுவது வழி தீர்த்துக் கொள்ளலாம். (ஜாதகத்தில் குரு பலவீனம் அடைந்தவர்களுக்கு இது சிறந்த பரிகாரம்.)
- விதியை வெல்ல ஆத்ம பலம் வேண்டும். இல்லையேல், ப்ரம்மஹத்தியும், பிதுர்சாபமும் விடாது.
- மயக்கும் பானங்களை எவன் ஒருவன் விற்று, அதில் வரும் செல்வத்தை கொண்டு சுக வாழ்வு வாழ்கிறானோ, அவன் மறு பிறவியில் ஆழ்துயில் (கோமா) நிலையில் இருந்து பிறகு மரிக்க நேரிடும்.
- மருத்துவத்துறையில், பிறருக்கு மருத்துவத்தை சரியாக செய்யாதவன், தன் தவறான அறிவால் பிறருக்கு பங்கம் விளைவிப்பவன், விற்கின்ற அன்னத்தில் தரம் குறைந்த பொருட்களை கலந்து பிறருக்கு விற்பவன், போன்றவர்களும் ஆழ்துயில் நிலையில் இருந்து மரிக்க நேரிடும்.
- ஸ்தல வ்ருக்ஷத்தின் இலை, கனி, வேர், காய் போன்றவற்றை முறையற்று பயன்படுத்தினால் நிச்சயம் தோஷம் வரும்.
- ஒரு பாபம் செய்வது எளிது, ஒரு பாபத்தை கழிப்பது என்பது மிக மிக கடினம்.
- என்ன செய்ய வேண்டும் என்பதை விட என்ன செய்யக்கூடாது என்பதை ஒரு மனிதன் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
- எல்லா மந்திரங்களும் ஒருவனின் 72000 நாடி நரம்புகளை தட்டி எழுப்பி, உடலுள் ரத்த ஓட்டத்தை வலுப்படுத்தும், அவனின் உள்முக சக்தியை தட்டி எழுப்பும்.
- மரங்களை ஓரறிவு என்று கூறினாலும் கூட, தேவர்களும், முனிவர்களும் தவம் செய்வதற்காக மரங்களாக அவதாரம் எடுப்பார்கள்.
- தீபம் ஏற்ற ஏற்ற பாபங்கள் குறையும்.
- தீபத்தில் முகங்களின் எண்ணிக்கை கூட கூட, பூர்வீக தோஷங்கள் குறையும்.
- ஒருவரிடமிருந்து தீபத்தை பெற்றுக் கொள்ளும் பொழுது, பஞ்சாட்சரத்தை ஓதித்தான் வாங்கிக் கொள்ள வேண்டும்.
- வாரம் இரு முறை எண்ணை ஸ்னானம் உடல் ஆரோக்கியம். (ஆண்கள் - புதன், சனி, பெண்கள் - செவ்வாய், வெள்ளி நாட்கள்)
- கெட்டி தயிர், இஞ்சி, நெல்லிக்காய், கீரைவகைகள் வெள்ளி ஞாயிறு நாட்களிலும், அனைத்து நாட்களிலும் இரவு நேரத்திலும் தவிர்ப்பது லட்சுமி கடாக்ஷத்தை தக்க வைக்கும்.
- அனைத்து தாவரங்களும், ஒளஷதிகளும் போகர் சித்தருக்கு உரியது. அவர் அனுமதி வேண்டி, பின்னர் உபயோகித்தாலே, பயன் தரும்.
- அக்னி நட்சத்திர காலத்தில் மரம் செடி கொடிகளை (எந்த காரணத்தினாலும்) வெட்டுவது பல தோஷங்களை உருவாக்கும்.
- கருட தரிசனம், பசுமாட்டு தரிசனம், யானை தரிசனம், பல்லியின் ஒலி, அதை விட (பூஜை யாகங்களின் பொழுது) வானத்திலிருந்து ஒரு மழை துளி விழுந்தால், இறை ஏற்றுக்கொண்டது என பொருளாகும்.
- இன்பமோ, துன்பமோ ஒரு மாயைதான் என்றுணர்ந்து, இறைவன் தரிசனத்தின் பொழுது, "எனக்கு இறைவா, உன்னைத்தவிர வேறெதுவும் தேவையில்லை, நீதான் வேண்டும்" என உளமார வேண்டிவிட்டாலே, அவனை விட்டு வினைகள் ஒவ்வொன்றாக ஓட தொடங்கிவிடும்.
- மங்கள வாரத்தில் ஹஸ்த நட்சத்திரம் வரும் நாளில் தீவிர விரதம் இருந்து முருகனை வழிபட்டால், புத்திர தோஷம் விலகும்.
- குருவை தேடுபவர்கள், குருவருள் வேண்டும் என்பவர்கள், ஒன்பது முக தீபத்தை புனர்பூச நக்ஷத்திர நாளில் ஏற்றி, அவரின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.
- செய்த தவறுகளை உணர்ந்து, இனி செய்வதில்லை என இறையிடம் சென்று மனம் ஒன்றி பிரார்த்தித்தால், விதி திருத்தி எழுதப்படும் கோவிலே "பிழை திருத்திய கிரியாகும்". (இது திருச்சி > திருவெள்ளறையிலிருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் சிறு குன்றின் மேல் அமைந்துள்ளது.)
- ஆலய தரிசனத்துக்குப்பின் தர்மம் செய்ய, அருள் மேலும், மேலும் அதிகரிக்கும்.
- கந்தர் அலங்காரம் தினம் உருப்போட உடல் வசீகரமடையும்.
- புறத்தே ஒன்றை வைத்து, அகத்துள் திசை திருப்பப்பட, செய்த வழிபாட்டு முறை தான் கலச விழா. உள் திரும்பி ஒன்றுபட்டு, சிரசில் சுரக்கும் அமுதத்தை பருகுவது "அக கலச விழா".
- ஒருவன் நல்லவனாக ஒழுக்க சீலனாக நன்மையே செய்பவனாக வாழ்ந்துவிட்டால், நவகிரகங்கள் நன்மைகளையே தரும்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!
சித்தன் அருள்.....தொடரும்!

ஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteOm Sri Lopa Mudra Devi Sametha Sri Agastheeswaraya Namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக 🙏
ReplyDeleteஓம் ஸ்ரீ லோபமுத்திரா அம்மா சமேத
ReplyDeleteஅகத்தீசாய நமஹ